T23
Moderator
அத்தியாயம் 9
“இன்ஸ்பெக்டர் போக சொல்லிட்டாரு சார்.” என்று மட்டும், நெல்சனிடம் கூறிய விக்னேஷ், யாசரையே பதட்டத்துடன் ஏறிட்டவண்ணம் இருந்தான்.
“சரிங்க மிஸ்டர். விக்னேஷ், நீங்க கிளம்பலாம். ஃபார்மாலிட்டீஸ் முடிக்க உங்க கூட கான்ஸ்டபிள் இந்திரன், ஜி.ஹெச் வரைக்கும் வருவாரு."”என்று கூறி, கான்ஸ்டபிள் இந்திரனை விக்னேஷுடன் அனுப்பி வைத்த நெல்சன் நேரே வெற்றியிடம் சென்று யாசர் கூறிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டான்.
“அப்போ யாசர் விக்னேஷுக்கு நல்லவன் சர்ட்டிஃபிகேட் வாசிக்கறான். விக்னேஷும் அந்த பொண்ணு இறந்த சமயம் ஊர்ல இல்ல. பெருசா பழிதீர்க்கவோ, வஞ்சம் வச்சோ கொலை பண்ணப்படலை. அந்த பொண்ணுக்கு தற்கொலை பண்ணிக்க ஏதுவா எந்த ஒரு காரணமும் இல்ல. ஒருவேளை, இது விபத்து தானோ நெல்சன். நாம தான் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கமோ?” என்று நெல்சன் கூறிய விஷயங்களை எல்லாம் மனதினுள் அசை போட்டு ஒரு முடிவை எட்டியிருந்தான் வெற்றி.
“ஆமா சார். எனக்கும் இது வெறும் விபத்தா தான் இருக்குமோன்னு தோணுது.” என்று ஆமோதித்தான் நெல்சன்.
“எப்படியும் இன்வெஸ்டிகேட் பண்ண ஆரம்பிச்சுட்டோம். அந்த ஃப்ளோர்ல இருக்க மத்த வீடுகள்ள ஃபார்மலா ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு கேஸை க்ளோஸ் பண்ணிடலாம் தான். ஆனா, அந்த பொண்ணு கையில இருக்க பஞ்சர் மார்க் என்னன்னு தெரிஞ்சா இன்னும் தெளிவாகிடும்.”
“சார், டாக்டர்கிட்ட இன்வெஸ்டிகேட் பண்ணி ரிப்போர்ட் சப்மிட் பண்ண சொல்லியிருக்கேன் சார். இன்னைக்கு மத்தியானத்துக்குள்ள ரிப்போர்ட் வந்துரும்.”
“குட். ஒண்ணு பண்ணுங்க. ரிப்போர்ட் வந்ததுக்கு அப்பறமா பாடிய ரிலீஸ் பண்ண சொல்லுங்க. அதுக்கு முன்னாடி வேண்டாம்.”
“ஒ.கே சார். காண்ஸ்டபிள் இந்திரன் தான் கூடப் போயிருக்கார் சார். சொல்லிடறேன் சார்.”
“ஒ.கே, ரிப்போர்ட் வந்ததும், அந்த ஃப்ளோர் ஆளுங்களோட ரிப்போர்ட் ஒண்ணு வாங்கிடலாம். அப்பறம் அஃபீஷியலா அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் வந்ததும் இந்த டெத்ல சந்தேகம் இருக்கா இல்லையான்னு கேட்டுட்டு ஒரு வாக்குமூலம் வாங்கிட்டு கேஸை க்ளோஸ் பண்ணிடலாம்.”
“ஒ.கே சார்.”
“சரி, நான் ஜே2 ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்திடறேன். நீங்க பார்த்துக்கோங்க” என்று அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி கட்டளைகள் பிறப்பித்துவிட்டுச் சென்றான் வெற்றிவேல்.
******
யாசரை அழைத்துக் கொண்ட விக்னேஷ் நேரே ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்குச் சென்றான். அவர்களுடன் கான்ஸ்டபிள் இந்திரனும் வந்திருந்தபடியால் அவ்வளவாக விக்னேஷால் யாசரிடம் என்ன ஏதென்று கேட்க இயலவில்லை. ஆனால் அவன் மனமோ, “யாசர் அந்த எச்.ஐ கிட்ட ஏதோ உளறியிருக்கான். அதான் என் முகம் பார்த்தே பேசமாட்டேங்கறான்” என்று சொல்லிக் கொண்டே இருந்தது.
இவர்கள் இருவரையும் மார்ச்சுவரியின் வெளியே நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே சென்றான் கான்ஸ்டபிள் இந்திரன். அவர் தலை மறைந்ததும் காத்திருந்தவன் போல, “யாசர் எஸ்.ஐ என்னடா கேட்டுட்டு இருந்தாரு? நீ எதாவது சொல்லிவச்சியா?” என்று நேரடியாகவே வினவினான். அவன் குரலில் தொனித்த பதட்டம், யாசருக்கு குழப்பத்தையே தோற்றுவித்தது.
“டேய் நான் என்னடா சொல்லப் போறேன். ஃபார்மலா உன்னை எப்படி தெரியும்? எவளோ வருஷ பழக்கம்? நீ ஆபீஸ்ல எப்படி? இதெல்லாம் தான் கேட்டாருடா."”என்று பொறுமையாகவே பதிலளித்தான் யாசர்.
“வேற எதும் கேட்கலையே!”
“வேற ஏதும்னா? புரியலையே!” என்று கண்களைக் குறுக்கிக் கொண்டு வினவினான் யாசர். உண்மையாகவே அவனுக்குக் குழப்பமாக இருந்தது. துக்கத்தில் இருப்பானே உடன் நிற்கலாம் என்று வந்ததற்கு இவன் என்ன என்னிடம் எகிறிக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் ஏற்பட்டது.
யாசரின் குரல் மாற்றத்தைப் புரிந்து கொண்ட விக்னேஷ் தன் வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தான். “டேய் என்னைப் பத்தி என்ன கேட்டாலும் உனக்கு என்ன தெரியுமோ அதை சொல்லு. அதில எந்த பாதகமும் இல்ல. கீர்த்தி பத்தி எதுவும் சொன்னியான்னு கேட்டேன்”
“டேய். உன் மனைவி பத்தி நீ அதிகம் என் கிட்ட எதுவுமே சொன்னது கிடையாது. ஏதோ சமீபமா ரெண்டு பேர்த்துக்கும் நடுவுலயும் கொஞ்சம் பிரச்சனை இருக்கு. அது மட்டும் தான் எனக்கும் தெரியும். மத்தபடி என்ன பிரச்சனைன்னு நானு ரெண்டு மூணு தடவை உன்கிட்ட கேட்டிருக்கேன். நீ சொன்னதில்ல.”
“இதையெல்லாம் போலீஸ்கிட்ட சொன்னியா?” என்று விக்னேஷ் கேட்கவும் யாசர் தலையை கவிழ்த்துக் கொண்டான்.
“டேய் இந்த ஊர் உலகத்தில எந்த புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல சண்டையே இல்லாம இருக்கு சொல்லு? இதைப் போயி போலீஸ்கிட்ட சொல்லுவாங்களா டா?” சடைந்து கொண்டான் விக்னேஷ்.
“சண்டை போடறது சகஜம் தான் டா. நான் உன்னைய மாட்டிவிடற மாதிரி எதும் சொல்லலைடா. எனக்கு தெரிஞ்ச விக்னேஷ் நல்லவன் தான். அதைத் தான் நான் போலீஸ்கிட்ட சொன்னேன். ஆனா, நீ இப்படி துருவித் துருவி என்னைக் கேள்வி கேட்கறதைப் பார்த்தா…” என்று தான் கேட்க வந்த விஷயத்தைக் கூறாமல் இழுவையாக நிறுத்தினான்.
“கேளுடா, கேட்டுரு.. ஏன் நிறுத்திட்ட? “என்று விக்னேஷ் சற்றே ஆத்திரத்துடன் கேட்க, யாசர் சங்கடப்பட்டு தலையைக் கவிந்து கொண்டான்.
“டேய் யாசர், நீயாவது என்னைப் புரிஞ்சவன்னு நினைச்சேன்டா. டேய் கீர்த்திய, என் கீர்த்திய நான் கொன்னிருப்பனாடா? போலீஸ்காரங்க என் மேல சந்தேகப்படலாம், அது அவங்க வேலைடா. ஆனா, நீ கேட்டது….” என்று நிறுத்திய விக்னேஷ், யாசரின் முகம் பார்த்தான். விக்னேஷின் கண்கள் நீர் திரையிட்டுக் கொண்டன. கண்களைத் துடைத்தவன், மர நிழலில் போடப்பட்டிருந்த கல்லின் மீது அமர்ந்தான்.
யாசர் சற்றே தள்ளி நின்று கொள்ள, விக்னேஷின் மனமோ, அவன் கீர்த்திகாவைப் பற்றியும், அவளைச் சந்தித்த முதல் தினம் பற்றியும், அவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்த பொழுதுகள் பற்றியும் எண்ணிக் கொண்டிருந்தது.
விக்னேஷின் பெரும் பகுதி மனதில் கீர்த்தியைப் பற்றிய அழகான நினைவுகள் நிரம்பிப் போயிருக்க, மனதின் மூலையில் ஒரு துருவேறிய அடுக்கில், “உன்னைய கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையே அழிஞ்சு போச்சு. என் தலையெழுத்து! உன் கூடலாம் மனுஷன் வாழுவானா? இந்த நரகத்துல இருக்கறதுக்கு ரெண்டு முழம் கயித்துல தொங்கிறலாம்” என்பன போன்ற வாசகங்கள் விக்னேஷின் மனதில் வந்து போகாமல் இல்லை.
*******
கீர்த்தியின் உடல் பிரேதபரிசோதனை முடித்து பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. ஊரில் இருந்து கீர்த்தியின் பெற்றோர், தம்பி, தங்கையுடன் சில உறவினர்களும், ஊர் பெரியவர்கள் சிலரும் வந்திருந்தனர். அதே போன்று விக்னேஷின் பெற்றோரும் தமக்கையும், அவன் நெருங்கிய உறவினர்கள் சிலரும் மருத்துவமனையில் இருந்தனர்.
கீர்த்தியின் தாய் தன் இளைய மகளிடம் புலம்பியபடிக்கே அமர்ந்திருந்தாள். “இந்த கடங்காரி நம்ம மனசுக்கு பிடிச்சு கல்யாணம் கட்டிக்காட்டியும், எங்கையோ சந்தோஷமா இருக்கான்னு நினைச்சுட்டு இருந்தேனே! இப்படியா அவளை நான் பார்க்கணும்? எல்லாத்துலையும் அவசரப்படுவாளே! சாகறதுக்கும்மா அவசரப்படுவா!” என்று புலம்பிக் கொண்டிருக்க, கீர்த்தியின் தங்கை அழுதபடிக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அங்கே விக்னேஷின் உறவினர்கள், ஒருவரும் வாய் திறக்கவில்லை. அவன் அன்னை மட்டும், “இவளை கல்யாணம் மூய்கறப்போவே சொன்னேன். இவ நம்ம குடும்பத்துக்கு சரிபட்டு வரமாட்டா, வேணாம்டா வேணாம்டான்னு தலைபாடா அடிச்சுகிட்டேன். கேட்டானா இவன். ஊர்ல இல்லாத அழகின்னு, எல்லார் வாய்லையும் விழுந்து எந்திரிச்சுல இவளைக் கட்டுனான்.” என்று அடிக்குரலில் பேசிக் கொண்டிருந்தார்.
“ம்மா, கொஞ்சம் சும்மா இரும்மா. எந்த நேரத்தில என்ன பேசறதுன்னு இல்லாம நீயா எதாச்சும் உளறாத!” என்று விக்னேஷின் அக்கா கூற, அவன் அன்னையின் குரல் சற்றே மட்டுபட்டது.
இரு குடும்பமும் மருத்துவமனையில் குழுமியிருக்க, மாலை ஆறு மணி வாக்கில் வெற்றியின் போலீஸ் ஜீப் அங்கே வந்தடைந்தது. விக்னேஷும் யாசரும் ஜீப்பின் அருகாமையில் சென்றனர்.
“போஸ்ட்மார்டம் முடிஞ்சிருச்சு மிஸ்டர்.விக்னேஷ். சில கையெழுத்து போடணும். டெத் நடந்த ரிப்போர்ட் தருவாங்க. அதை பத்திரமா வச்சுக்கோங்க. அதைக் காட்டினா தான் டெத் சர்டிஃபிகேட் வாங்க முடியும். அப்பறம், உன் வைஃப் வீட்டில இருந்து வந்திருக்காங்களா?” என்று வெற்றி வினவினான்.
“வந்துட்டாங்க சார். “ என்று சற்றே தள்ளி நின்றிருந்த கீர்த்தியின் பெற்றோரைக் காட்டினான் விக்னேஷ்.
“குட். அவங்ககிட்ட இந்த டெத்ல ஏதாவது சந்தேகம் இருக்கான்னு ஃபார்மலா ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கங்க நெல்சன். எல்லாம் முடிச்சுட்டு பாடிய ஒப்படைச்சிடலாம். நான் போய் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
நெல்சன் தன் பணிகளை செவ்வனே செய்யத் துவங்கினான். “கீர்த்திகாவோட பேரண்ட்ஸ் நீங்க தானா?” என்று அவள் தாய் தந்தையை அருகே அழைத்தான். விக்னேஷ் தானாகவே ஒதுங்கி நின்றுகொண்டான்.
“உங்க பொண்ணு டெத்ல உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கா? பயப்படாம உண்மைய மட்டும் சொல்லுங்க” என்று கேட்டான். கீர்த்திகாவின் தந்தை “என்னத்த சொல்லறது சார். யார் மேல சந்தேகப்பட்டு என்னாகப் போகுது சொல்லுங்க? போன என் மவ திரும்பி வரவா போறா?”
“சார், அப்படியில்ல சார். ஒருவேளை உங்க பொண்ணு இயற்கையா சாகாம, யாராவது கொலை பண்ணியிருந்தா அதுக்கான தக்க தண்டனை கிடைக்கணுமா இல்லையா? அதுக்கு தான் கேட்கறோம். யார் மேலையாவது சந்தேகம் இருக்கா உங்களுக்கு?” என்று இம்முறை கீர்த்திகாவின் அன்னையைப் பார்த்து வினவினான் நெல்சன்.
சற்றே தயக்கத்திற்குப் பின் வாய் திறந்த கீர்த்திகாவின் அன்னை, “சந்தேகம்னு சொல்லற அளவுக்கு எதுவும் இருந்ததில்ல சார். கீர்த்தி எங்க கூட அவளோவா ஒட்டாது. அதுக்கு எங்க மேல ரொம்ப வெறுப்பு. அதிகமா இங்க நடக்கற விஷயங்களை சொல்லக் கூட செய்யாது. ஏன், இந்த ரெண்டு வருஷத்தில நாங்க அது வீட்டுக்கு கூட வந்ததில்ல. அதுவும் எங்களை வாங்கன்னு கூப்பிட்டதும் இல்ல.”
“என்ன சொல்லறீங்க! என்ன தான் பிடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டாலும் பொண்ணு எப்படியிருக்குன்னு பார்க்க கூட வரலையா நீங்க?” என்று சற்றே எரிச்சலுடன் தான் வினவினான் நெல்சன்.
“சார், கீர்த்தி அவ தங்கச்சிக்கு வீடியோ கால்ல அடிக்கடி பேசும் சார். அதுல பேசிக்குவோம். நல்லா இருக்கேன், பீச் போனோம், கோவில் போனோம், அது சாப்பிட்டோம், இது சாப்பிட்டோம்னு மட்டும் சொல்லும். நல்ல படியா, சந்தோஷமா தான் பேசும் சார்.” என்றார் கீர்த்தியின் அன்னை.
“உங்க சின்ன பொண்ணை கூப்பிடுங்க” என்று நெல்சன் கூற, கீர்த்திகாவின் தங்கை நெல்சனின் அருகே வந்தாள்.
“என்னம்மா, உன் ஃபோன்ல உங்க அக்கா அடிக்கடி பேசும், நல்லா இருக்கேன்னு தான் சொல்லும்னு சொல்லறாங்க. உண்மையா?” என்று வினவினான் நெல்சன். கீர்த்தியின் தங்கை பெற்றோரை பார்த்துக் கொண்டே நெல்சனின் கேள்விக்கு பதிலளித்தாள்.
“ஆமா சார், ரெண்டு மூணு நாளைக்கு ஒரு தடவை பேசுவா சார். மாமா பீச் கூட்டிட்டு போனாங்க, புது வீட்டுக்கு ஃப்ரிட்ஜ் வாங்கியிருக்கோம், ஏதோ பெரிய கடையில சாப்பிட்டோம், மால் போனோம்னு நல்ல விதமா தான் சொல்லுவா சார்.”
“ம்ம்ம். சரி. கடைசியா எப்போ பேசினாங்க. கால் ஹிஸ்டரி எடு பார்ப்போம்”
“சார், அவ இந்த வாரத்தில பேசவே இல்லை சார்.”
“ஒரு வாரம் முழுக்க பேசலையா? ஏன்? அவங்க கால் பண்ணலைன்னா, நீங்களாவது பேசியிருக்கலாம்ல?” என்று அதிர்ச்சியாக வினவினான்.
“சார், கீர்த்தி ரொம்ப எமோஷனல் டைப் இல்ல சார்.சில தடவை இப்படி தான் பண்ணுவா. அவளுக்கா தோணினா தான் கால் பண்ணுவா. சில தடவை ரெண்டு மூணு வாரம் கூட பேசாம இருப்பா. அப்பறம் திடீர்னு ஒரு நாள் கால் பண்ணி நல்லா பேசுவா.”
“சரிம்மா, அவங்க கால் பண்ணலைன்னா, நீங்களாவது பண்ணியிருக்கலாமே! ஏன் நீங்களும் பண்ணலை?”
“இல்ல, சார், எனக்கு பரிட்சை நடந்துட்டு இருந்துச்சு. எப்பவும் அக்காவே தான் பண்ணுவா, அதனால நானா பேசலை சார்.”
“சரி, கடைசியா எப்போ கால் பண்ணியிருக்காங்க”
“ஒன்னரை வாரத்துக்கு முன்னாடி சார்.” என்று தன் கைப்பேசியைப் பார்த்து பதில் சொன்னாள்.
“ம்ம் அன்னைக்கு பேசினப்போ நார்மலா பேசினாங்களா? கொஞ்சம் நியாபகப் படுத்தி சொல்லுங்க” என்று வினவினான் நெல்சன்.
“நல்லா தான் சார் பேசினா..” என்று கீர்த்தியின் தங்கை சொல்லிக் கொண்டிருக்க, அவள் தாய் இடைமறித்தாள், “கொஞ்சம் என்னமோ மாதிரி மூஞ்சியெல்லாம் வத்திப் போய் இருந்துச்சு சார்.” என்று கூற, தன் கவனத்தை திருப்பினான் நெல்சன்.
“மேல சொல்லுங்கம்மா” என்று கீர்த்தியின் அன்னையைத் தூண்ட,
“அது கீர்த்தி முகம் சோம்பலா இருந்துச்சு சார். நான் கூட கேட்டேனே! ஏண்டி உடம்பு எதுவும் சரியில்லையா, முகம் எப்படியோ இருக்குன்னு கேட்டேன். அதுக்கு, அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா எதாவது சொல்லாதன்னு வெடுக்குனு சொல்லிட்டா”
“வேற எதுவும் சொல்லலையாம்மா?”
“இல்லை சார். எப்பவும் இப்படி வெடுக்கு வெடுக்குன்னு தான் பேசுவா, அதனால அதுக்கு மேல நான் எதுவும் கேட்டுக்கலை.” என்றவரை சற்றே விசித்திரமாகப் பார்த்தான் நெல்சன்.
“ஒரு விஷயம் சொல்லுங்க. கீர்த்திகாவுக்கு அவங்க காதல் கல்யாணத்துக்கு நீங்க சம்மதிக்கலை, கல்யாணத்துக்கு வரலைன்னு கோபமா, அதனால தான் இப்படி உங்க குடும்பத்து கூட ஒட்டுதல் இல்லாம இருக்காங்களா?” என்று வினவினான் நெல்சன்.
“சார், அப்படியெல்லாம் இல்ல சார். அது முன்னாடி இருந்தே அவ அப்படித்தான். அவளுக்கு நானும் எங்க வீட்டுக்காரரும் சொல்லிக்கும் படியா வேலைக்கு போகலை, சொத்து சுகம்னு எதும் சேர்த்தி வைக்கலன்னு ரொம்ப வருத்தம். எல்லார் வீட்டுலையும் பாரு, குழந்தைகளுக்குன்னு பெத்தவங்க எவளோ சேர்த்தி வைக்கறாங்க, நீங்க என்ன செஞ்சீங்க, புள்ள பெத்து போட்டுட்டா மட்டும் போதுமா, அதுகளுக்குத் தேவையானதை செய்ய சம்பாரிக்க வேணாம்னு துடுக்கா தான் பேசும் எப்பவுமே”
“ஓ, அப்ப வசதி இல்லைன்னு ஒரு வருத்தம் உங்க பொண்ணுக்கு எப்போதுமே இருக்கு. அப்படித் தானே!”
“ஆமா சார்.” என்று திட்டமாகவே கூறினார் கீர்த்தியின் அன்னை.
“உங்க மாப்பிள்ளை விக்னேஷ் எப்படி? அவரைப் பத்தி எதாவது குறை சொல்லியிருக்காங்களா? குடிப்பாரு,அடிப்பாரு இப்படியெல்லாம்?”
“சே, சே அப்படியெல்லாம் சொல்லாது சார். அது வீட்டில என்ன நிலைமைன்னே முழுசும் எங்களுக்கு சொல்லாது. நல்லா இருக்கற மாதிரி மட்டும் தான் சொல்லும். அந்த பையனும் சின்ன வயசில இருந்தே எங்களுக்கு பழக்கம் தான் சார். நல்ல பையன். என் பொண்ணை நல்லா தான் கவனிச்சுகிட்டான். குறையா எதுவும் சொல்லாது சார்.” என்றார்.
இதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டே இருந்த நெல்சனின், சிந்தனை இன்ஸ்பெக்டர் வெற்றிவேலின் கைப்பேசி அழைப்பால் தடைபட்டுப் போயிற்று.
நெல்சனை பிணவறையின் வாயிலில் நின்றிருந்த வெற்றி அழைக்க, அவ்விடம் சென்ற நெல்சன், வெற்றியின் முகம் சுணங்கி இருப்பதைக் கண்டு துணுக்குற்றான்.
“சார். அடாப்ஸி ரிப்போர்ட் எதும் காம்பிகேஷனா சார்?” என்று வினவ, குரலை வெகுவாக தணித்துக் கொண்ட வெற்றி,
“ம்ம்ம், அந்த பொண்ணு ப்ரெக்னெண்டா இருந்திருக்கா!”
“என்ன சார் சொல்லறீங்க?”
“ஆமா, அதை விட முக்கியமான விஷயம், அவளுக்கு சமீபமா, ரொம்ப சமீபமா டி.என்.சி பண்ணியிருக்கு” என்று வெற்றி கூற நெல்சன் சற்றே அதிர்ந்து தான் போனான்.