ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரௌத்திரம் கொள் ரதியே - கதை திரி

Status
Not open for further replies.

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 4



அதிதி ஹாஸ்பிடல் விட்டு வெளியே செல்ல

தேவ் அருகில் அமர்ந்த ராம் "என்ன ஆச்சு டா நீ எப்போவும் கவனமாதான டிரைவ் பண்ணுவ இப்போ எப்படி? "என்று அவன் காயத்தை ஆராந்தவாறு கேட்க

அவனை பார்த்து சிரித்தவன் "இப்போ போனாங்க தான அதிதி அவங்க தான் இடிச்சுட்டாங்க "என்று சொல்ல

இப்படிதான் நடந்து இருக்கும் இருக்கும் என்று ராம் ஏற்கனவே யூகித்து இருந்தான்…

"ஆனா இப்படி இடிச்சவங்க கூட சிரிச்சு பேசறது நீயா தான் டா இருப்ப "என்று ராம் கலாய்க்க

அவனை பார்த்து சிரித்தவன் "தெரியாம இடிச்சுட்டாங்க சாரியும் கேட்டுட்டாங்க அதுக்காக ஹாஸ்பிடல்க்கு கூட்டிடும் வந்துட்டாங்க இதுக்கு மேல என்ன டா செய்வாங்க "என்க

அவன் சொல்வதும் நியாயம் தான் என்று உணர்ந்த ராம்

தேவ்க்கு சாப்பிட ஏதாவது வாங்க செல்ல

பின் இருவரும் அதிதியை பற்றி பேசவில்லை…

வீட்டுக்கு சென்ற அதிதிக்கு எல்லாம் புதுசாக இருந்தது…

அவளுக்கு பிடித்தத்துக்கும் விருப்பத்துக்கும் வித்யாசம் தெரியும் என்பதால்

தேவ் மீது பிடித்தம் மட்டுமே என்று உணர்ந்து அதன் பிறகு அவளும் தேவ்வை பற்றி நினைக்க வில்லை…

அப்பாவின் அறைக்கு சென்றவள் அவரின் கை பிடித்து இன்று நடந்ததை பற்றி கூறியவள் "எனக்கு அவங்க கூட பாட்னர்ஷிப் வைச்சுக்க விருப்பம் இல்ல பா "என்று சொல்லியவள் பின் "சீக்கரம் வாங்க பா உங்ககிட்ட நா நிறைய ஷேர் பண்ணனும் "என்று பேசிக் கொண்டு இருக்க

அங்கே வந்தா கமலம் அதிதி பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து "பாப்பா சாப்பிட வாங்க "என்க

அவரின் குரலில் திரும்பி பார்த்தவள் "வரேன் கா "என்றவள்

அப்பாவை சுற்றி ஒரு பார்வை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு சாப்பிட சென்றாள்…


வீட்டில் கட்டிலில் படுத்துக் கொண்டு ரக்ஷிதா சுவரை வெறித்து பார்த்துக் கொண்டு இருக்க

அவளை பார்த்த கவி "என்ன டி ஆச்சு இவளுக்கு?"என்று வெண்பாவிடம் கேட்க

"தெரியல டி வந்ததுல இருந்து இப்படி தான் இருக்க கேட்ட ஒன்னும் சொல்ல மாட்டேங்கறா "என்க

ரக்ஷிதாவின் தோளை பற்றி "அடியே என்ன ஆச்சு?"என்க

ரக்ஷிதாவுக்கு எதுவும் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை…

பொறுத்து பார்த்த கவி பின் அருகில் இருந்த ஜக் தண்ணீரை எடுத்து ரக்ஷிதாவின் மீது கொட்ட

தண்ணீர் மேல் பட்டதில் நிகழ்வுக்கு வந்தவள் "வீட்டுக்குள்ள தண்ணி வந்துருச்சு "என்று பதறிக் கொண்டு எழ

கவியும் வெண்பாவும் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்து பார்க்க

"எதுக்கு டி இப்போ இப்படி முறைக்கறீங்க என்மேல எப்படி தண்ணி கொட்டுச்சு "என்று கேட்டவள்

கவியின் கையில் இருந்தா ஜக்கை பார்த்தவள் அவள் தான் ஊற்றி இருக்கிறாள் என்று யூகித்து

"எதுக்கு டி என்மேல கொட்டுன "என்று கேட்க

இருவரும் எதுவும் சொல்லாமல் அவளை முறைத்து பார்க்க

"எதுக்கு இப்படி பாக்கறிங்க என்ன ஆச்சு? "என்று கேட்க

"அதை தான் நாங்களும் கேட்கறோம் என்ன ஆச்சு? " என்று கோரஸாக கேட்க

"புரியற மாதிரி பேசுங்க டி "என்று கோவமாக கேட்க

"நாங்க தான் கோவப்படனும் வந்துதுல இருந்து சுவரையே பார்த்துகிட்டு இருக்க அவளும் நானும் என்ன ஆச்சு கத்திகிட்டு இருக்கோம் நீ ஏதோ கனவு கண்டுக்கிட்டு இருக்க "என்கவும்

இருவரையும் பார்த்தவள் "ஒன்னும் இல்லையே "என்று சமாளிக்க

அவளை சந்தேகமாக பார்த்த கவி "நம்பற மாதிரி இல்லையே "என்று சந்தேகமாக சொல்ல

அப்போதும் ரக்ஷிதா எதுவும் சொல்லாமல் இருக்கவும்

"விடு டி கத்திரிக்காய் முத்துனா கடை தெருவுக்கு வந்து தான ஆகணும் அப்போ பார்த்துக்கலாம் "என்று வெண்பா சொல்லிவிட்டு போக

கவியும் அவள் பின்னால் சென்றாள்

இருவர் போவதையும் பார்த்தவள் "போங்கடி போங்கடி "என்றவள்

இன்று நடந்ததை நினைத்து பார்த்தாள்….

எப்போதும் போல இன்று அவள் சீனியர் வக்கீல் சுதாகர் உடன் வேலையை பற்றி பேசிக் கொண்டு இருந்தாள்…

அப்போது சுதாகர்க்கு ஏதோ வேலை விஷயமாக போன் வர அதை எடுத்து பேசியவர் பின் "ரக்ஷிதா இன்னைக்கு நடக்குற சின்ன சின்ன கேஸ் பார்த்துக்கோங்க எனக்கு வேலை இருக்கு போயிட்டு வந்தறேன் "என்று சொல்லி விட்டு செல்ல

மதியம் நடக்க போகும் கேஸ் பற்றி தெரிந்தவளுக்கு இதுக்கு எல்லாம் கோர்ட் வருவார்களா என்று சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது…

கேஸ்காக வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தாள்…

கேஸ் இது தான் ஒருவன் பக்கத்து வீட்டில் இருக்கும் நபரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்க

பக்கத்து வீட்டுக்காரர் கணவன் அன்று தான் வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்து இருந்ததால் பக்கத்து வீட்டு சண்டையயை பற்றி தெரியாமல்

பக்கத்து வீட்டுக்காரர் இடத்தில் எச்சில் துப்பி விட அதற்கு போலீஸ் கேஸ் என்று சென்றவர்கள் இப்போது கோர்ட்க்கு வந்து இருக்கிறார்கள்…

அவர்களை பார்த்தவளுக்கு இது எல்லாம் ஒரு கேசு என்று நினைத்தாள் …..

இவள் இதை பற்றி நினைத்துக் கொண்டு இருக்க

அவளின் முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தால்

இவளையே பார்த்துக் கொண்டு ஒருவன் நிற்க

"யாரு இவன்? "என்று எண்ணி

"யார் சார் நீங்க? "என்று கேட்கவும்

"கேஸ் பைல் பண்ணனும் " என்று அவன் சொல்லவும்

"கேஸ் பைல் பண்ணனுமா "என்று நினைத்தவள்

"என்ன கேஸ் சார் "என்று கேட்டு அருகில் இருந்த நோட்ஸ் எடுத்து முன் வைக்க

அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே "என்கிட்ட இருந்த பிரிசியஸ் ஆனா ஒன்னும் திருடிகிட்டு போயிட்டாங்க "எனவும்

அவனை நிமிர்ந்து பார்த்தவள் "enna எதுக்கிட்டு போயிருப்பாங்க "என்று நினைத்தவள்

"என்ன காணாம போச்சு யார் எடுத்துட்டு போன "என்று வக்கீல் மூளையை காட்ட வேண்டும் என்று கேட்க

அவளை ரசித்துக் கொண்டே "ஒரு பொண்ணு திருடிகிட்டு போயிட்டா ஆனா என் பொருள் எனக்கு வேணாம் அதுக்கு பதிலா அவளோடது எனக்கு வேணும் "என்று இழலோற சிரிப்புடன் சொல்ல

அவனை விச்சத்திரமாக பார்த்தவள் "உங்களோடது உங்களுக்கு வேணாமா? "என்றவள்

பின் எதையோ யோசித்து "என்ன காணாம போச்சு "என்று கேட்கவும்

அவளின் கண்களோடு அவன் கண்களை கலக்க விட்டவன் "என்னோட இதயம் "எனவும்

"ஏதே "என்றவள்

அவன் விளையாடுகிறான் என்று உணர்ந்து

"அதுக்கு எதுக்கு இங்க வரிங்க யாருகிட்ட காணாம போச்சோ அவங்ககிட்ட போங்க "என்று சொல்லியவள்

வேறு வேலையை பார்க்க தொடங்க

அவளின் முகம் முன் குனிந்தவன்

"யார்கிட்ட காணாம போச்சோ அவங்க கிட்ட தான் கேட்டுகிட்டு இருக்கேன் "என்று சொல்ல

அவன் சொன்னதை கேட்டவளுக்கு கண் தெறித்து விழும் அவளுக்கு முழிக்க

அவளை ரசனையாக பார்த்தவன் "உன்ன எப்போ பார்த்தேனோ அப்போவே என்னோட இதயம் உங்கிட்ட வந்துருச்சு இப்போ நீ உன்னோட இதயம் என்கிட்ட குடுத்தா போதும் "என்று காதலாக சொல்ல

ரக்ஷிதாவுக்கோ அவன் பேசுவதை கேட்டு "இவன் என்ன ஆபரேஷன் பண்றது போல சொல்றான் "என்று எண்ணியவள்

அவனை சந்தேகமாக பார்த்துக் கொண்டே "என்ன ஆர்கன்ஸ் திருட வந்து இருக்கிங்களா "என்று கேட்கவும்

அவளை முறைத்து பார்த்தவன் "எவ்ளோ லவ் ஆ பேசறேன் இவளை "என்று பார்த்தவன்

"உனக்கு நேர சொன்னதான் புரியும் போல இருக்கு உன்னை எல்லாம் யார் வக்கீலா ஆக சொன்னது "என்று சொல்லவும்

இவன் எப்படி என் வேலையை பற்றி சொல்லலாம் என்று கோவம் கொண்டவள்

"ஹலோ மிஸ்டர் பார்த்து பேசுங்க "என்று கோவமாக சொல்ல

அவனோ அவளை மேல் இருந்து கிழ் ஒரு பார்வை பார்த்தவன்

"பார்த்துகிட்டு தான பேசறேன் "என்று சொல்ல

அவன் குரலில் தெரிந்த வித்யாசத்தில் அவன் ஏதோ வில்லங்கமாக சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டவள்

"என்ன ஈவ்டீசிங் ஆ " எனவும்

"உன்னை எல்லாம் எப்படி தான் ஜூனியர் ஆ சேர்த்தாங்களோ மரமண்டை இதுக்கு மேல இப்படி லவ் ஆ சொல்றது "என்று மனதுக்குள் திட்டிக் கொண்டவன்

"லூசு உன்ன லவ் பண்றேன் "என்று சொல்லவும்

"ஏதே லவ் ஆ "என்று சத்தமாக கதியவள்

பின் பக்கத்தில் இருந்த அனைவரும் இவளையே பார்க்க

அதில் வாய் மேல் கை வைத்தவள் "லவ் ஆ "என்று மெதுவாக கேட்க

அவளை பார்க்க அவனுக்கு பாவமாக இருக்க "ஆமா லவ் தான் நீ யோசி நான் நாளைக்கு வரேன் "என்று சொல்லிவிட்டு நகர

அவன் போவதை பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு

"என்னத்தை யோசிக்க "என்று நினைத்தவள் அன்று முழுக்க அவனை பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தாள்

அது ஏன் என்று தான் அவளுக்கும் தெரியவில்லை

இதுவரை எதையும் நண்பர்களிடம் மறைக்காதவள் இன்று அவனை பற்றி எதுவும் சொல்லவில்லை

அவனை பற்றி நினைத்தவள் "அவன் பேரு கூட தெரியாதே "என்று நினைத்து கண் மூடினாள்….

ரக்ஷிதாவின் நடவடிக்கை பார்த்தா வெண்பா ஏதோ இருக்கு நாளைக்கு கேட்டுக்கலாம் என்று நினைத்து தூங்க சென்றாள்….

இங்கு ரக்ஷிதாவை தூங்க விடாதவன் அங்கு நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தான்…

அடுத்த நாள் யாருக்கும் கத்துக் கொண்டு இருக்காமல் சூரியன் தன் வேலையை தொடங்க

நேரமாக எழுந்த அதிதி குளித்து ரெடி ஆகி தேவ்வை பார்க்க ஹாஸ்பிடல் செல்ல

அங்கு அவன் இருந்த அறை காலியாக இருக்கவும்

அங்கு இருந்தா நர்ஸ்யிடன் "இந்த ரூம்ல இருந்தவங்க எங்க சிஸ்டர் "என கேட்க

அவங்க நைட் டிஸ்சார்ஜ் ஆகி போயிட்டாங்க என்று சொல்லி வேலையை பார்க்க செல்ல

அதிதி ஏதோ வெறுமையாக இருந்தது

காலியான அறையை ஒரு முறை பார்த்துவிட்டு பின் அங்கு இருந்து கிளம்பி சென்றவள்…

வாழ்க்கை என்ன வைத்து இருக்குறது என்று பார்ப்போம்….





வருவாள்…..




ஆரம்பித்த கதையை முடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துட்டேன்…

கண்டிப்பா என்னால முடிந்த அளவுக்கு பெஸ்ட்ஆ குடுப்பேன் பட் நானே மறந்தாலும் டெய்லி யூடி கேட்டுருங்க ப்ளீஸ் அப்போ தான் எனக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும்…

இன்னைக்கு ரொம்ப குட்டி யூடி தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ?
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 5



ரக்ஷிதா அவன் வருவானா என்று நினைத்துக் கொண்டே கோர்ட் சென்றாள்….

அவள் சென்றதும் அவள் முன் வந்த அவளின் சீனியர் " நேத்து கேஸ் எப்படி போச்சு "என்று கேட்ட பின் தான் அவள் நேற்று கேஸ் எடுத்து நடத்தவில்லை என்ற நினைவே வந்தது…

அவரை பார்த்து சிரித்தவள் "சாரி சார் அதெல்லாம் ஒரு கேஸ் ஆ "என்று முகம் சுழிக்க

"என்ன பண்றது இப்படி எல்லாம் கேஸ் எடுத்து ஜெயிச்சா தான் பெரிய பெரிய கேஸ் தேடி வரும் "என்று கனவு கண்டுக் கொண்டே சொல்ல

அவனை பார்த்தவள் "இவன் எல்லாம் ஒரு பெரிய லாயர்னு நினைச்சு இவனுக்கு ஜூனியர்ஆ இருக்கேனே "என்று மனதுக்குள்ளே அவள் தலையில் அடித்துக் கொண்டாள்…

அவள் அவரையே பார்ப்பதை பார்த்தவர் "என்னமா அப்படி பாக்குற நமக்கு பெரிய கேஸ் வரும் "என்க

அவளும் அவரை பார்த்து தலையாட்டிவிட்டு

அவள் இடத்தில் சென்று அமர்த்தவள்

"இவருக்கு எப்போ பெரிய கேஸ் வந்து பாப்புலர் ஆகறது நா எப்போ கேஸ் எடுத்து நடத்தறது "என்று எண்ணியவளுக்கு

நேற்று வந்து பேசியவனின் முகம் நினைவுக்கு வர

"இன்னைக்கு வராதா தான சொன்னான் வரட்டும் அவனுக்கு இருக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே லவ் பண்றேன்னு சொல்லுவான் "என்று திட்டிக் கொண்டு இருக்க

அவளின் மனசாட்சியோ "உனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணாம உன் தெருவுல சுத்துற நாயிக்கா ப்ரொபோஸ் பண்ண முடியும் "என்று கவுண்டர் கொடுக்க

அதை தட்டி உள்ளே அனுப்பியவள் அவன் வருவதற்காக காத்துக் கொண்டு இருக்க

அன்று முழுவதும் அவன் அவள் கண் முன் வராமல் இருக்க

"ஏன் வரல ஒருவேள பிராங் பண்ணி இருப்பானோ அதை உண்மைனு நினைச்சுகிட்டு லூசு மாதிரி ராத்திரி முழுக்க தூங்காம இருந்து இருக்கேன் "என்று தலையில் அடித்துக் கொண்டவள்

வேலையை பார்க்க தொடங்கினாள் ஆனால் அடிக்கடி அவள் கண்கள் அவனை தேடிக் கொண்டு தான் இருந்தது…

அவள் கண்கள் சுற்றி தேடுவதை இருகண்கள் ரசனையுடனும் குறும்புடனும் பார்த்துக் கொண்டு இருந்தது…

கவி அவள் ஸ்டுடென்ட்ஸ் உடன் பேசிக் கொண்டு இருக்க

அப்போது அவள் இருக்கும் கிளாஸ்குள் ஒருவன் வர

அவனை பார்த்தவள் "யார் நீங்க?"என்று கேட்க

அவனோ இவளின் கேள்வியை காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல் உள்ளே வர

"ஹலோ மிஸ்டர் இது என்னோட கிளாஸ் டைம் நீங்க யாரு? நா கேட்டதுக்கு பதில் சொல்லாம நீங்க உள்ள வந்தா என்ன அர்த்தம் "என்று கேட்க

அவனோ இவள் பேசும் சத்தத்தில் கதை குடைய

அதை பார்த்தவளுக்கு அவளின் குடைமிளகாய் போன்ற மூக்கு கோவத்தில் இன்னும் சிவந்து விட

அதை பார்த்தவன் "ரெட் சில்லி " என்று சொல்லிக் கொண்டான்…

அவனின் இதழ் அசைவில் அவன் என்ன சொன்னான் என்று தெரிந்துக் கொள்ள முடியாதவள் "இப்போ என்ன சொன்னிங்க? "என்று கரமாக கேட்க

"ப்பா செம காரம் "என்க

அதை கேட்டவள் இன்னும் கோபத்துடன் "என்ன கிண்டல் பண்றிங்களா? "என்றவள்

"முதல நீங்க யாருனு சொல்லுங்க கிளாஸ் நா நிற்கறத பார்த்தும் பெர்மிஸ்ஸின் கேட்காம நீங்க வந்ததே தப்பு இதுல என்னை கேலி செய்யறீங்களா "என்று பொரிந்து தள்ள

"எதுக்கு இப்போ இவ்ளோ கோவப்படறீங்க கிளாஸ் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கற உங்களுக்கே பொறுமை இல்லனா அப்புறம் உங்ககிட்ட படிக்கற பசங்களுக்கு எப்படி பொறுமை வரும் "என்று கேள்வி கேட்க

அவன் சாதாரணமாக கேட்டது அவளுக்கு அவன் அவளை கேலி செய்வது போல் தோன்ற

எல்லையை கடக்க தொடங்கிய கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவள்

"என் பொறுமையை பத்தி எனக்கு தெரியும் எனக்கு பொறுமையை பத்தி நீங்க கிளாஸ் எடுக்கறதுக்கு வந்து இருந்தா தேங்க்ஸ் இப்போ நீங்க போறிங்களா நா கிளாஸ் எடுக்கணும் "என்று சின்சியர் ஆக சொல்ல

அவள் சொல்வதை கேட்டவனுக்கு சிரிப்பு வந்தது

பின் ஒன்றாம் வகுப்புக்கு பாடம் எடுப்பவள் ஏதோ பத்தாம் கிளாஸ் பிள்ளைகளுக்கு கிளாஸ் எடுப்பது போல் பேசினால் சிரிப்பு வராத

அவன் சிரிப்பதை பார்த்தவள் ஏதோ திட்ட வருவதற்குள்

அவர்கள் இருக்கும் கிளாஸ் முன் பியுன் வந்து நிற்க

அவரை பார்த்தவள் "சொல்லுங்க அண்ணா "என்க

அவளை பார்த்து சிரித்து உளேன் வந்தவர்

"நம்ம ஸ்கூல்க்கு புதுசா பிஸிக்கல் exercise கிளாஸ் எடுக்க ஒரு டீச்சர் வராங்கனு சொல்லிகிட்டு இருந்தேன்ல அவரு வந்துட்டாரு மா "என்க

அவர் சொன்னதை கேட்டவள் "வந்துட்டாரா அண்ணா எங்க?"என்று கேட்க

அவரோ அவளின் முன் நின்றுக் கொண்டு இருந்தவனை காட்டி "இவரு தான் மா புதுசா வந்து இருக்காரு நீதான் பார்க்கணும்னு சொன்னியே அதன் இவர்கிட்ட சொன்னேன் அவரே வந்துட்டாரு "என்று விளக்கம் கொடுக்க

கவிக்கு தான் முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்று தெரியவில்லை

இருந்தாலும் அவளின் மனம் "நான் தான் கேட்டேன்la யாருனு அப்போவே சொல்லி இருக்க வேண்டியது தான "என்று அவனை குறை சொல்லியவள்

அவனை பார்த்து சிரித்து "ஹலோ சார் நா கவிபாரதி சயின்ஸ் டீச்சர் "என்று அவனிடம் தன்னை அறிமுக படுத்திக் கொள்ள

அவளை பார்த்து புன்னகைத்தவன் "கதிரவன் "என்று சொன்னவன்

"எல்லாரையும் போய் பார்க்கணும் சோ அப்புறம் பார்க்கலாம் "என்று சொல்லிவிட்டு நகர

கவிக்கு ஏனோ அவனை பிடிக்கவில்லை முதல் பார்வையிலேயே சண்டை போட்டதால் இருக்கலாம்

அதை பற்றி யோசித்தவள் திரும்பி பார்க்க

அப்போது தான் கவனித்தாள் பாதி பேர் தூங்கி இருக்க பாதி பேர் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்

அவர்களை பார்த்தவள் "போச்சு எல்லாம் இவனால தான் இப்போ இவங்களை எழுப்பி விடணும் இன்னைக்கு கிளாஸ் எடுத்த மாதிரி தான் "என்று நினைத்தவள்

தூங்கிக் கொண்டு இருந்தவர்களை எழுப்ப சென்றாள்….

அவளின் தவிப்பை அந்த வழியாக சென்ற கதிரவன் பார்த்து விட

அவன் இதழ்களோ "ரெட் சில்லி "என்று சொல்லி சென்றது…..

ஒரு வாரம் கடந்த நிலையில்

அன்று ரக்ஷிதாவுக்கு எந்த வேலையும் இல்லாததால் வெண்பா உடன் அவள் ஹாஸ்பிடல்க்கு சென்றாள்…

வெண்பா ஹாஸ்பிடல் முன் வண்டியை நிறுத்த

இடத்தை சுத்தி பார்த்த ரக்ஷிதா "பரவாயில்ல நல்லா தான் இருக்கு "என்க

அவளை முறைத்து பார்த்த வெண்பா "உன்னை யாரும் செர்டிபிகேட் குடுக்க சொல்லல அமைதியா வா "என்று அழைத்து சென்றவள்

ஹாஸ்பிடல் உள் வந்தவுடன் வெண்பா ரக்ஷிதாவின் கை பிடித்து "அடியே இது நா வேலை பார்க்குற இடம் இங்க உன் சேட்டைய காமிச்சராத "என்று கெஞ்சலாக கேட்க

வெண்பாவை பார்த்தவள் "உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு சரி போன போகுது பொழைச்சு போ "என்று பெரிய மனதுடன் சொல்ல

அவளை மேல் இருந்து கிழ் பார்த்த வெண்பா "என் நேரம் டி நீ பேசி நா கேட்கணும்னு "என்று சொல்லி

ரக்ஷிதாவை அவளுடைய இடத்திற்கு அழைத்து சென்றாள் வெண்பா….

வெண்பா அவளின் இடத்தில் அமர்ந்துக் கொள்ள

ரக்ஷிதா அவளுக்கு அருகில் சேர் போட்டு அமர்ந்துக் கொண்டாள்….

தன் முன் இருந்த பேப்பர் பார்த்த வெண்பா

அங்கு இருந்த நர்ஸ்யிடம் "எத்தனை பேர் இருகாங்க? "என்று கேட்க

"இப்போ உங்களை பார்க்க ஐஞ்சு பேர் வெயிட் பன்றாங்க டாக்டர் "என்று அருகில் இருந்த ரக்ஷிதாவை பார்த்துக் கொண்டே நர்ஸ் சொல்ல

அவர் சொன்னதை கேட்ட வெண்பா "சரி வர சொல்லுங்க " என்று சொல்ல

"சரி டாக்டர் "என்று சொல்லி விட்டு அவர் செல்ல

நர்ஸ் வெளியே சென்றதை பார்த்த ரக்ஷிதா "என்ன டி உன்னை பார்க்க ஆயிரம் பேர் வெயிட் பண்ணுவாங்கனு பீலா விடுவா இப்போ அஞ்சு பேர் தான் இருகாங்க "என்று சொல்லி சிரிக்க

அவளை கடுப்புடன் பார்த்த வெண்பா "அடியே என்ன உன்ன மாதிரினு நினைச்சியா ஆள் வராத இடத்திற்கு காபி ஆத்துற மாதிரி உனக்கு தான் ஒரு கேஸ் கூட வராம ஈ ஒட்டிகிட்டு இருக்க "என்று அவளை டேமேஜ் செய்ய

அருகில் இருந்த நோட்டை எடுத்து வெண்பாவின் மீது போட்டவள் "என்ன பத்தி என்ன வேணும்னாலும் பேசு என் வேலைய பத்தி பேசாத "என்று கோவமாக சொல்ல

அவளை பார்த்து சிரித்தவள் "நீ தான் மெச்சிக்கணும் உன் வேலையை "என்று வெண்பா சொல்லவும்

ரக்ஷிதா அவளை அடிக்க

பதிலுக்கு வெண்பாவும் அவளை அடித்துக் கொண்டு இருக்க

அப்போது அடிவாங்கிக் கொண்டே திரும்பிய வெண்பா கதவின் அருகில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை ஒரு வயதானவர் அதிர்ச்சியாக பார்ப்பதை பார்த்தவள்

ரக்ஷிதாயின் கையை தட்டிவிட்டு "வாங்க உள்ள வாங்க "என்று வெண்பா அழைக்கவும்

தயங்கிக் கொண்டே வந்தவர் வெண்பா முன் போட பட்டு இருந்த சேரில் அமர

அவரை பார்த்தவள் "சொல்லுங்க என்ன பண்ணுது "என்று டாக்டர் ஆக கேட்க

அவரோ "நீ நிஜமாவே டாக்டர் தான "என்பது போல இருவரையும் சந்தேகமாக பார்க்க

அவரின் பார்வையை பார்த்தவள் ரக்ஷிதாவை முறைத்துக் கொண்டே "நீ இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா நா டாக்டர்ஆ னு என்னையே கேட்க வைப்ப வெளிய போய் வேடிக்கை பார்த்துக் கிட்டு இரு நா கூப்பிடறேன் "என்று அவள் முன் அமர்ந்து இருந்தவருக்கு கேட்காத குரலில் சொல்ல

அவரோ இருவர் பேசுவதையும் சந்தேகமா பார்க்க

அவர் பார்வையில் வெண்பாவை பார்த்து சிரித்த ரக்ஷிதா

பெரியவரை பார்த்து "பயப்படாதீங்க நிஜமாவே அவ டாக்டர் தான் "என்று உறுதி படுத்திவிட்டு வெளியே செல்ல

அவள் சொல்லி சென்றதை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட வெண்பா

"சொல்லுங்க என்ன பண்ணுது? "என்று தன் வேலையில் கவனமானாள்…..

வெளியே வந்த ரக்ஷிதா ஹாஸ்பிடல் பின் இருந்த இடத்தில் நடந்துக் கொண்டு இருந்தவள்

சட்ரென்று அவளை கடந்து போனவனை பார்த்து

"ஆர்கான்ஸ் திருடன் "என்று சத்தமாக அழைக்க

அருகில் இருந்தகவர்கள் எல்லாம் என்ன திருடனா என்பது போல பார்க்க

அவளின் குரலில் திரும்பியவன் அவள் சொன்னதையும் அருகில் இருப்பவர்கள் பார்ப்பதையும் பார்த்தவன்

"எல்லார் முன்னாடி இப்படி கூப்பிட்ட திருடன்னு நினைச்சு கம்பி எண்ண வைச்சுருவாங்க "என்று சொல்லிக் கொண்டவன்

"சும்மா செல்லமா கூப்பிட்டாங்க "என்று அனைவருக்கும் பொதுவாக சொல்ல

"இப்படி கூடவா செல்லமா கூப்பிடுவாங்க "என்று கேவலமாக இருவரையும் பார்த்து விட்டு பின் அவர் அவர் வேலையை பார்க்க

அவளின் அருகில் வந்தவன் "இப்போ எதுக்கு இப்படி கூப்பிட்ட "என்று ஒருமையில் அழைக்க

அவளின் ஒருமையை கவனிக்காதவள் "சாரி சடன்ஆ பார்க்கவும் எப்படி கூப்பிடறதுனு தெரியமா கூப்பிட்டேன் "என்று மன்னிப்பு கேட்கவும்

அவளின் கெஞ்சலான முகத்தை பார்த்து சிரித்தவன் "பேர் சொல்லி கூப்பிடலாமே "என்று சொல்ல

"அதுக்கு பேர் தெரியணும் "என்று அவனுக்கு கேட்கும் படி முனுமுனுக்க

"எனக்கே கேட்குது நீ முனுமுனுக்கறது "என்று அவன் அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்த படி சொல்ல

"கேட்கணும் தான பேசறது "என்று அவனுக்கு கேட்காத குரலில் சொல்லியவள்

"அன்னைக்கு என்ன பிராங் தான பண்ணிங்க "என்று கேட்க

அவளை புரியாமல் பார்த்தவன் "ஏன் அப்படி கேட்குற? "என்க

"இல்ல அடுத்த நாள் வரேன்னு சொல்லிட்டு வரலையே சோ கேட்டேன் "என்று வாய் விட்டவள் பின் அய்யோ உளறிட்டோமே என்று நாக்கை கடித்துக் கொள்ள

அவளை அகப்பட்ட சிரிப்புடன் பார்த்தவன் "அப்போ என்ன தேடி இருக்க "என்று கேட்க

அவன் கேட்டதிற்கு என்ன சொல்வது என்று யோசித்தவள் "அதெல்லாம் தேடல "என்று சொல்லிக் கொண்டு இருக்க

"டேய் "என்று அருகில் சத்தம் கேட்டவும்

இருவரும் திரும்பி பார்த்தனர்

இருவன் ரக்ஷிதாவின் அருகில் இருந்தவனை தான் அழைத்துக் கொண்டு இருந்தான்…

அவனை பார்த்து வருவதாக கை காட்டியவன்

"சரி ஓகே நா கிளம்பறேன் "என்று ரக்ஷிதாவின் சொல்லி கிளம்ப

சரி என்றவள் பின் அவன் பெயரை கேட்கவே இல்லையே என்று நினைவுக்கு வர

"ஏய் உன் பேர் என்ன? "என்று சத்தமாக கேட்க

அதில் திரும்பி பார்த்தவன் "எதுக்கு கேட்கற "என்று சிரிப்புடம் கேட்க

"சும்மா தான் "என்று சொல்லவும்

அவளை நன்றாக திரும்பி பார்த்தவன் "நீயே கண்டு பிடி "என்று சொல்லி கண்ணடித்து விட்டு செல்ல

அவன் சொன்னதை கேட்டவளுக்கு சட்ரென்று தோன்றியது இந்த பாடல் தான்…..


"உன் பேரே தெரியாத.. உன்னை கூப்பிட முடியாத..

நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..

அந்த பேரை அறியாது.. அட யாரும் இங்கேது..

அதை ஒருமுறை சொன்னாலே.. தூக்கம் வாராது..

அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..

நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்.."



ஆனால் ஒரு சிறு மாற்றம் அந்த பாடலில் கதாநாயகி காதலுடன் அவனுக்கு பேர் வைப்பாள்

ஆனால் ரக்ஷிதாவுக்கு காதல் இருக்கிறதா என்று தெரியாது

ஒரு பெண்ணிடம் ஒருவன் காதலை சொன்னால் அவனை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டுமே அவளிடம்…..



வருவாள்….

 
Status
Not open for further replies.
Top