அத்தியாயம் - 3
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!"
என்ற பாரதியாரின் புதுமை பெண் கவிதை அறையில் பாடிக் கொண்டு இருக்க
அதை கேட்டபடியே ஒர்க்அவுட் முடித்து வெளியே வந்த அதிதி
அங்கு இருந்த டவல் எடுத்து முகத்தையோ துடைத்த படியே கீழே இறங்கி சென்றவள்
சமைத்துக் கொண்டு இருந்த அம்மாவிடம் "உங்களுக்கு மட்டும் பண்ணிக்கோங்க எனக்கு மீட்டிங் இருக்கு சோ ஓட்ஸ் மட்டும் போதும் "என்று சொல்லிவிட்டு மாடி ஏற
அவளை பார்த்த சமையல் அம்மா கமலம் "இந்த பொண்ணு எப்போ தான் அதோட உடம்பை ஒழுங்கா கவனிச்சுக்குமோ தெரியல அய்யா படுத்த படுக்கையா ஆனதுக்கு அப்புறம் நிக்காம ஓடிக் கிட்டே இருக்கு "என்று ஆயாசமாக பேசியவர்
மற்ற வேலைகளை பார்க்க சென்றார்…
மேலே ரெடி ஆகி வந்தவள் அவளின் தந்தை அறைக்கு செல்ல
சுற்றி மருத்துவ கருவிகள் இருக்க கண்மூடி இருந்தார்
யாராவது அவரை பார்த்தால் தூங்கிக் கொண்டு இருப்பதாக தான் நினைத்துக் கொள்வார்கள் ஆனால் இது ஒரு ஆழ்ந்த தூக்கம் என்று தெரியாது…
அவரும் இன்று கண் முழிப்பார் நாளை கண் முழிப்பார் என்ற நம்பிக்கையில் எட்டு வருடங்கள் ஓடிவிட்டது ஆனால் அதிதி இன்னும் நம்பிக்கையை கை விடவில்லை "என்றாவது அவர் கண் முழிப்பார் "என்று தினமும் அவருடன் பேசிக் கொண்டு இருப்பாள்..
அதிதி அறைக்குள் வந்ததும் அவரை கவனித்துக் கொண்டு இருந்த நர்ஸ் வெளியே சென்று விட
அவரின் அருகில் அமர்த்தவள் கையை பிடித்துக் பிடித்துக் கொண்டு "அப்பா சீக்கரம் எழுந்து வாங்க பா உங்ககிட்ட நா நிறைய காட்டணும் நீங்க தொடங்கி வைச்ச தொழிலை நா இவ்ளோ பெருசா கொண்டு போனதை பார்த்து நீங்க ஆச்சரியபடறதை நா பார்க்கணும் "என்று அவரின் கையை கன்னத்தில் அழுத்திக் கொண்டு
நிறைய பேசிக் கொண்டு இருந்தாள் பின் நேரமாவதை உணர்ந்து அவரின் நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்தவள்
அங்கு இருந்த நர்ஸ் பார்த்து "அப்பாவ கவனிச்சுக்கோங்க "என்று சொல்லிவிட்டு புறப்பட போனவளை
கமலம் தான் "பாப்பா நீங்க இன்னும் சாப்பிடலை "என்று நினைவு படுத்த
அவரை பார்த்து சிரித்துவிட்டு அவர் கொடுத்த ஓட்ஸ் சாப்பிட்டு கிளம்பினாள்…..
அவள் வீட்டுக்குள் இருக்கும் போது எப்போதும் இயல்பாக தான் இருப்பாள் ஆனால் வெளியே வந்து விட்டால் இறுக்கம் என்ற முகமூடியை அணிந்துக் கொள்வாள்….
காரில் பாடலை கேட்டு டிரைவ் செய்துக் கொண்டு இருந்தவளை அவளின் பிஏ ரேணுகா கால் செய்ய
காலை அட்டென் செய்தவள் "சொல்லுங்க ரேணுகா "என்று அழுத்தமாக கேட்க
அந்த பக்கம் இருந்து இவளின் அழுத்த குரல் கேட்டவுடன் பயந்துக் கொண்டே "எம் எஸ் வி கம்பெனி எம்டி உங்கள பார்க்கறதுகாக வந்து இருக்காங்க மேம் "என்று மெதுவாக அதே சமயம் புரியும்படி சொன்னாள்
அவள் சொன்னதை கேட்ட அதிதி "வந்து இவ்ளோ நேரம் ஆகுது?"என்று கேட்க
வாட்சை பார்த்த ரேணுகா "டென் மினிட்ஸ் இருக்கும் மேம் "என்றவுடன்
"ஒகே இன்னும் டுவெண்ட்டி மினிட்ஸ்ல வந்துருவேன் வெயிட் பண்ண சொல்லுங்க "என்று சொல்லி மெதுவாக ஓட்டி சென்றாள்…
ஆபீஸ் காம்பௌண்ட் உள்ளே அதிதி வரவும்
அவளின் காரை பார்த்து வாட்ச்மேன் சல்யூட் அடிக்க
அவரை பார்த்து தலையசைத்தவள் வண்டியை கார் பார்க்கிங்யில் விட்டுவெளியே வர
அவளை பார்த்து எல்லாரும் வணக்கம் வைக்க அதற்கு தலையசைப்பை மட்டும் கொடுத்து செல்ல
அவளை கடந்து சென்ற ஆண்கள் "ப்பா இவங்க மட்டும் ஏன் டா இவ்ளோ திமிரா இருகாங்க? கொஞ்சம் கூட யாரையும் மதிக்க மாட்டேங்கறாங்க "என்று சொல்ல
இன்னொருவனோ இளக்காரமாக பார்த்து "எல்லாம் அப்பன் சேர்த்து வைச்ச சொத்து அதுல அந்த ஆணவம் இருக்கும் தான "என்று சொல்ல
அவர்களை கடந்து சென்ற அதிதிக்கு அவர்கள் பேசுவது கேட்டாலும் கண்டுக் கொள்ளாமல் சென்றாள்…
ஆரம்பத்தில் எத்தனை பேரை பார்த்து இருப்பாள் இவள் முகத்துக்கு முன்னால சிரித்து விட்டு முதுகுக்கு பின்னால் இவளை பற்றி பேசியதை…
இந்த நாட்டில் பெண்களின் தன்நம்பிக்கையும் தைரியமும் திமிரு என்று தானே சொல்ல படுகிறது
அதனால் உங்களால் என்ன சொல்ல முடியுமோ சொல்லிக்கோங்க என்பது போல் சென்று விட்டாள்…
அவளின் கம்பெனி ஏவிஈ பல முகங்களை கொண்டது அது கால் பதிகாத இடம் இல்லை
ஷேர்மார்க்கெட், மேக்அப் products, ஜூஸ் பிராண்ட், சூப்பர் மார்க்கெட் என பல சொல்லிக் கொண்டே போகலாம்
ஆரம்பத்தில் தொழிலை அதிதி கையில் எடுக்கும் போது அவளுக்கு கை கொடுத்தவர்களை விட அவளை கீழே தள்ளிவிட முயன்றவர்கள் தான் அதிகம் அதனால் யாரையும் அவ்ளோ சுலபமாக நம்பிவிட மாட்டாள்…
உயர்ந்து நின்ற கட்டிடம் உள்ளே அதிதி செல்லவும்
அவளை பார்த்து அனைவரும் வணக்கம் வைக்க
முதலாளி என்ற தோரணையில் அதை ஏற்றுக் கொண்டவள் லிப்ட் மூலம் அவள் அறைக்கு செல்ல
அவளின் அறையில் முன் போட்டு இருந்த சோபாவில் அமர்ந்து
அங்கு ஆராந்துக் கொண்டு இருந்தவனை பார்த்தும் பார்க்காதது போல் சென்றாள்.
இவள் வருவதை பார்த்து எழுந்து நின்றவன் அவள் கண்டுக் கொள்ளாமல் உள்ளே சென்றதை பார்த்து "எல்லாம் திமிர் "என்று கோவமாக முனுமுனுத்துக் கொண்டான்..
உள்ளே சென்றவள் அவளின் அம்மா புகைப்படம் முன் நின்று வணங்கியவள் பின் அவளின் சேரில் அமரவும்
ரேணுகா கதவை தட்டவும் சரியாக இருந்தது….
அதிதி"கம் இன் "என அவளை உள்ளே அழைக்க
உள்ளே வந்த ரேணுகா "குட் மார்னிங் மேம் "என காலை வணக்கம் சொல்ல
அதை ஏற்றுக் கொண்டவள் "இன்னைக்கு ஸ்செடியூல் என்ன "என்று கேட்டு வேலையை பார்க்க தொடங்க
ரேணுகாவோ கையை பிசைந்துக் கொண்டு அதிதியிடம் எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டே நிற்க
சிறிது நேரம் பின் ரேணுகா அங்கையே நிற்பதை பார்த்து "ஏன் இங்கையே நிற்கறிங்க ஏதாவது சொல்லனுமா "என பைல் பார்த்துக் கொண்டே கேட்க
"மேம் எம் எஸ் வி கம்பெனி எம்டி வெயிட் பன்றாங்க "என்று தயங்கி சொல்ல
அவளை பார்த்தவள் "எனக்கு நியாமக மறதினு உங்க கிட்ட சொல்லி இருக்கேனா?"என கேட்கவும்
பயந்துக் கொண்டே "நோ மேம் "என்கவும்
"எனக்கு யார எப்போ பார்க்கணும்னு தெரியும் அவங்க வெயிட் பண்ணா உங்களுக்கு என்ன உங்க வேலைய போய் பாருங்க "என்று இறுக்கமாக சொல்ல
அதிதியை பற்றி தெரிந்து இப்படி சொன்னதிற்கு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள்
"சாரி மேம் "என்று மெதுவாக சொல்லிவிட்டு வெளியே செல்ல
ரேணுகா வருவதற்காக காத்துக் கொண்டு இருந்தவன் போல "என்ன உள்ள போகலாமா?"என்று கேட்க
"சாரி சார் மேம் பிஸியா இருகாங்க சோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க "என சொல்லி விட்டு அவள் வேலையை பார்க்க செல்ல
என்னமோ இவள் தான் அதிதியை பார்க்க விடாதவள் போல ரேணுகாவை முறைத்துக் கொண்டு இருந்தான்…
கிட்டதட்ட இரண்டு மணிநேரம் கழித்து ரேணுகாவை உள்ளே அழைத்த அதிதி "அவர வர சொல்லுங்க " என்று சொல்லி விட்டு வேலையை தொடர
ரேணுகா சொன்னவுடன் கதவை திறந்துக் கொண்டு வந்தவனை பார்த்து எரிச்சலாக இருந்தது அவளுக்கு…
இருந்தாலும் முகத்தை சிரித்தது போல் வைத்துக் கொண்டு "வெல்கம் மிஸ்டர் மகேஷ் குமார் "என்று அழைத்தவள்
"ப்ளீஸ் சிட் "என்று மரியாதை நிமித்தமாக சொல்ல
அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்தவன் "எப்படி இருக்க அதிதி?"என்று கேட்க
அவன் பார்க்கும் பார்வையில் ஏற்பட்ட எரிச்சலை முகத்தில் காட்டாமல் "பைன் "என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டவள்
"என்ன விஷயமா வந்து இருக்கிங்க "என்று பிசினஸ் பற்றி கேட்க
"இவ எப்போவும் இப்படி தான் எதுக்கும் அசரமாட்ட "என்று உள்ளுக்குள் ஏற்பட்ட புகைச்சலை காட்டாமல்
"அதுதான் நா உங்களுக்கு "என்று ஏதோ சொல்ல வர
அப்போது கதவை தட்டிய ரேணுகா "சாரி டு இன்டர்பேட் மேம் "என்று உள்ளே வந்தவள்
ஒரு பைல்லை அதிதியிடம் காட்ட
இவ்ளோ நேரம் அவன் கண்ணுக்கு தெரியாத ரேணுகாவின் அழகு இப்போது தெரிந்தது