ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'யாவும் நின் யாத்ரனாய்..' - கதைத் திரி

Status
Not open for further replies.
யாவும் நின் யாத்ரனாய்..

Episode 05






யாத்ரன் உட்பட மொத்த ஊர் மக்களும் கோயிலுக்குள் கூடியிருக்க, ராணி ஜோதியை வணங்கி அன்றைய பூஜைக்கான சடங்குகளும் ஆரம்பிக்கப்பட்டன.



ஏனோ வரதனோடு நின்றிருந்த யாத்ரனனோ இனம் புரியாத ஒரு உணர்வை உணர்ந்தான். ஏதோ ஒன்று அவனோடு நெருக்கமாக இருப்பது போலும் அவனோடு பழக்கப்பட்டது போலும் அவனுக்குத் தோன்ற, சுற்றியிருக்கும் அனைத்தும் மங்கலாகத் தெரிவது போலிருந்தது.



தலையை தாங்கிக்கொண்டவன், "எனக்.. எனக்கு என்னாச்சு? ஏன் இப்படிலாம் நடக்குது?" என்று இதயம் படபடக்க தனக்குத்தானே கேட்டு சற்று தடுமாற, பக்கத்திலிருந்த வரதனோ அவனைப் பிடித்துக்கொண்டான்.



"டேய் யாத்ரா, என்னாச்சு? வீட்டுக்கு போலாமா?" என்று அவன் பதற்றமாகக் கேட்க, "நத்திங் நத்திங்.. ஐ அம் ஓகே, இதெல்லா பழக்கம் இல்லல்ல, அதான்..." என்று சொன்னவாறு விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.



சரியாக, ராஜஸ்தானின் கலாச்சார ஆடையில் அலங்காரத்தோடு அத்தனை பேருக்கு நடுவே வந்த பெண்கள் தம் பாரம்பரிய நடனத்தை ஆரம்பிக்க, அந்த கூட்டத்திற்கு நடுவே இருந்தாள் ஜான்சி.



ஹோமகுண்டத்தை சுற்றி உடலை வளைத்து நளினத்தோடு அவள் ஆட, யாத்ரனின் பார்வையும் அவள் மீதுதான் இருந்தது.



"வாவ், ஷீ இஸ் கோர்ஜியஸ்" என்று மெல்லிய குரலில் சொல்லி யாத்ரன் அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, பக்கத்திலிருந்த வரதனின் காதிலும் அந்த வார்த்தைகள் கேட்டது.



'யாரை சொல்றான்...?' என்று யோசித்துக்கொண்டே தோழனின் பார்வை செல்லும் திசையைப் பார்த்தவனுக்கு அடுத்தகணம் தூக்கி வாரிப்போட்டது.



'ஆத்தீ! ஊரை விட்டு உயிரோட டுபாய்க்கு போவோமான்னே சந்தேகமா இருக்கே' என்று வரதன் பீதியோடு நெஞ்சைப் பிடித்துக்கொள்ள, யாத்ரனோ தன்னை மறந்து ஜான்சியின் கைகள் அசைவதையும் அவளுடைய இடை வளைவதையுமே பார்த்துக்கொண்டிருந்தான்.



ஆனால், நடனத்தில் மூழ்கியிருந்த ஜான்சிக்கு அவனுடைய பார்வை எல்லாம் கொஞ்சமும் தெரியவில்லை. அவள் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தவாறு நடனத்தில் இருக்க, இசை முடிந்ததும் தலை வணங்கியவள் சுற்றியிருந்த மக்களோடு சென்று நின்றுக்கொண்டாள்.



"ரொம்ப நல்ல ஆடின ஜானு" என்று அவளின் பக்கத்திலிருந்த பெரியவர் ஒருவர் சொல்ல, புன்னகையோடு தலையசைத்தவளுக்கு மனம் ஒரு திசைக்கு உந்தவும், உடனே திரும்பிப் பார்த்தாள்.



அங்கு தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த யாத்ரனைப் பார்த்ததும் அவனுடைய பார்வையில் அவளுக்கு வெட்கம் பீறிட, முகம் குப்பென்று சிவந்தது.



'இவர் என்ன நம்மள இப்படி பார்த்துக்கிட்டு இருக்காரு, யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள் அவன் பார்வையைத் தவிர்த்து சடங்குகளை கவனிக்க, ஆனால் மனம்தான் அவளின் பேச்சை கேட்பதாய் இல்லை.



தன்னையும் மீறி அவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க, அதைக் கண்டுகொண்டவனின் இதழ்கள் குறும்பாக விரிய, 'நான் உன்கிட்ட பேசணும்' என்றான் சைகையில் வேகமாக.



அதைப் புரிந்துக்கொண்டவளுக்கு விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிய, பதற்றத்தோடு திரும்பிக்கொண்ட ஜான்சி தெரியாமல் கூட அவனின் புறம் திரும்பவே இல்லை.



யாத்ரனும் அவளிடம் பேச பல முறை முயற்சிக்க, பெண்ணவளோ கண்ணாம்பூச்சி ஆட்டம்தான் ஆடிக்கொண்டிருந்தாள்.



எப்படியோ அன்றைய பூஜை முடிய அடுத்தநாளும் வந்தது.



"அடியே ருக்கு, உங்க வீட்டுக்கு வந்திருக்காரே அந்த ஆளு, அவரோட பார்வையே சரியில்லடீ" என்று ஜான்சி உம்மென்ற முகத்தோடு சொல்ல, "உன்ன பார்த்தாரா..." என்று தன் தோழியை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தவள், "நீயா சும்மா கற்பனை பண்ணிக்காத! அதுக்கப்பறம் மோதல் காதலான கதையாகிடும். உனக்கொன்னு தெரியுமா, அவர் நம்மள மாதிரி இல்ல ஜானு, நம்ம ஆளுங்க இல்ல. உனக்கு புரியுதா?" என்று ஹஸ்கி குரலில் சொன்னாள்.



ஜான்சிக்கு அவள் சொல்ல வருவது கொஞ்சமும் புரியவில்லை.



"ஆங்... அப்படின்னா.." என்று அவள் கேட்க வருவதற்குள், "அடியே ருக்மணி உங்கம்மா உன்ன விளக்குமாத்தோட தேடிட்டு இருக்காங்க. அடுப்புல கொழம்ப வச்சிட்டு அப்படியே வந்துட்டியா என்ன?" என தூரத்திலிருந்து கத்தினாள் அவளின் பக்கத்து வீட்டிலுள்ள ஜெயா.



"அடங்கொப்புரானே! அதை மறந்தே போயிட்டேனே... ஜானு உன்ன அப்பறம் பார்க்குறேன்" என்றுவிட்டு அவள் ஓடியிருக்க, "உன் பேரு ஜானுவா?" என்ற கணீர் குரல் பின்னாலிருந்து கேட்டது.



ஜான்சி வேகமாக திரும்பிப் பார்த்தவள், தன்னெதிரே நின்றிருந்த யாத்ரனைப் பார்த்ததும் அங்கிருந்து ஓடப் போக, வேக எட்டுக்களை வைத்து அவளை நெருங்கியவன் அவள் கரத்தைப் பற்றியிழுத்தான்.



இதுவரை ஆண் ஸ்பரிசத்தை உணர்ந்திராத ஜான்சிக்கு அவன் தொட்டதும் உடல் கூசிப்போக, வெடக்கென்று அவள் கரத்தை இழுத்துக்கொண்டதும், அன்று வரதன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தவனாக "ஓ ஷீட்! சாரி..." என்று நெற்றியில் அடித்துக்கொண்டவனுக்கும் இப்போது பதற்றம் தொற்றிக்கொண்டது.



"உங்களுக்கு இப்போ என்ன வேணும், அன்னைக்கு ஃபோட்டோ எடுத்தீங்க, இப்போ கைய பிடிச்சு இழுக்குறீங்க. யாராச்சும்..." என்று அவள் பேசி முடிப்பதற்குள் யாத்ரனோ, "ஹேய் ஹேய் ப்ளீஸ், எனக்கு கல்யாணத்துல எல்லா இன்ட்ரஸ்ட் இல்ல, இத யார்கிட்டயும் சொல்லிராத, அப்பறம் என்னை உனக்கு கட்டி வச்சிருவாங்க, அப்பறம் என் பெச்சிலர் லைஃப் ஓ காட்!" என்று படபடவென பேசிக்கொண்டே போனான்.



அவனின் வார்த்தைகளைக் கேட்டு ஒருசில கணங்கள் வாயைப் பிளந்துக்கொண்டு நின்றிருந்தவள் பின் நடப்புக்கு வந்து வாய்விட்டு சிரிக்க, அவளை புரியாமல் பார்த்தான் ஆடவன்.



"பழைய கிராமத்து படம்லாம் அதிகமா பார்ப்பீங்களோ?" என்று ஜான்சி சிரித்தவாறுக் கேட்க, "அப்போ... அந்த மாதிரிலாம் பண்ண மாட்டாங்களா, தேங்க் காட்" என்று அவன் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், "அப்படிதான் பண்ணுவாங்க, அதை விட மோசமா கூட" என்றாள் சுற்றிமுற்றி பார்த்த வண்ணம்.



யாத்ரனுக்கு பக்கென்று இருந்தது.



அடுத்தநொடி காதில் விழுந்த பேச்சு சத்தத்தில் பதறியவளாக கொஞ்சமும் யோசிக்காமல் அவனின் கரத்தைப் பற்றி அங்கிருந்த சுவற்றுக்கு பின்னே இழுத்துச் சென்றாள் ஜான்சி.



அந்த சுவற்றுக்கு பின்னால் மறைந்து நின்றவாறு அவள் மெல்ல எட்டிப் பார்க்க, அவள் யூகித்தது சரியே..



அவளுடைய தந்தை சுபாஷ்தான் அவருடைய நண்பர்களோடு அந்த வழியாக செல்ல, அவர் அந்த இடத்தை விட்டு நகரும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள் அவர் கண்ணிலிருந்து மறைந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டவளாக விழிகளை மூடி சுவற்றில் சாய்ந்துக்கொண்டாள்.



ஆனால் ஏதோ வித்தியாசமாகத் தோன்ற பட்டென்று விழிகளைத் திறந்தவள் நூலிடைவெளியில் தன்னை நெருங்கியிருந்த யாத்ரனைப் பார்த்ததும் அதிர்ந்து விழிக்க, அவனோ அவளை குறும்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.



"உன் அப்பாக்கு இவ்வளவு பயமா?" என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவன் கேட்டதும், "அப்பான்னா யாருக்குதான் பயம் இருக்காது, நான் உங்க கூட நின்னுட்டு இருக்குறத மட்டும் அவர் பார்த்திருந்தாருன்னா அம்புட்டுதான், என்னை இங்கேயே புதைச்சிருவாரு. தினமும் அடி வாங்குற காரணம் போதாதுன்னு இது வேறயா.." என்றாள் ஜான்சி சலிப்போடு.



"அப்பான்னா அடிப்பாரா, என்ன சொல்ற? என் டாடி என்னை அடிச்சதே இல்ல. ஹீ இஸ் வெர்ரி ஃப்ரென்ட்லி, என்ட் குட் டூ மீ" என்று யாத்ரன் தன் தந்தையைப் பற்றி பெருமையாகச் சொல்ல, அவனை விழி விரித்து பார்த்த வண்ணமாய் நின்றிருந்தவளுக்கு அவன் சொன்னதை விட அவனின் ஆங்கிலத்தில் தான் மயக்கமே வந்துவிட்டது.



"ரொம்ப நல்லாவே இங்லீசு பேசுறீங்க" என்று குறையாத ஆச்சரியத்தோடு அவள் சொல்ல, அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்தவனாக, "ஹேய் ஜானு, நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும். நேத்து... நேத்து நைட் நீ டான்ஸ் பண்ணல்ல! கைய அங்க இங்கன்னு அசைச்சு பம்பரம் மாதிரி சுத்திக்கிட்டு அது ரொம்ப அழகா இருந்துச்சு. ஐ ஹேவ் நெவர் சீன் எனிதிங் லைக் திஸ் பிஃபோர். அது எப்படி பண்ண, எனக்கும் கத்து தரீயா?" என்று ஆர்வத்தோடு கேட்டான் யாத்ரன்.



அவன் கேட்டதை கிரகிக்கவே அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.



"ஆம்பிளைங்க இந்த நாட்டியத்த ஆட போறீங்களா, அது.. அதெப்படி முடியும்?" என்று ஜான்சி அதிர்ந்த குரலில் கேட்க, ஆடவனோ அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான்.



"ஏன் முடியாதா? ஐ அம் அ குவிக் லேனர், உனக்கு கஷ்டமா இருக்காது. எனக்கு எங்க எப்போ கத்து தருவேன்னு மட்டும் சொல்லு.." என்று அவன் தீவிர முகபாவனையோடு கேட்ட விதத்தில், ஜான்சிக்கு இது கனவோ என்று கூடத் தோன்றியது.



"அது.. அது வந்து.." என்று எதேர்ச்சையாகத் திரும்பியவளின் விழிகளில் பராமரிக்கப்படாது விட்டிருந்த ஒரு கோயில் தென்பட, "இது மட்டும் கனவு இல்லன்னா நாளைக்கு அந்த இடத்துல சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு வேகமாக நகரப் போக, அவள் கரத்தைப் பற்றியிழுத்தவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, "கனவு இல்லன்னு இப்போ புரியுதா?" என்று கேட்டு புன்னகையோடு அங்கிருந்து சென்றான்.



ஆனால் பெண்ணவளுக்குதான் பதற்றத்தில் உடல் நடுங்க, அடி வயிற்றிலிருந்து ஏதோ ஒன்று உடல் முழுவதும் பரவுவது போலிருந்தது.



எச்சிலை விழுங்கிக்கொண்ட ஜான்சி தன்னை நிதானப்படுத்தவே படாத பாடுபட, அடுத்தநாளும் வந்தது.



காலை எழுந்ததிலிருந்து யோசனையோடே தன் வேலைகளை முடித்தவள், நேரத்தைப் பார்த்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி அந்த கோயிலை நோக்கித்தான் சென்றாள்.



'என்ன இது ஜான்சி, எல்லாமே உன் கை மீறி நடக்குற மாதிரி இருக்கு. இப்போ எதுக்கு நீ அவனுக்கு கத்து தரேன்னு சொன்ன, அதுவும் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த கோயிலுக்கு அவன வர சொல்லியிருக்க. அவன் கூட இருக்குறத யாராச்சும் பார்த்தாங்கன்னா என்னாகும்? உனக்கென்ன தலையில டப்பா கிப்பா ஏதாச்சும் விழுந்துருச்சா ச்சே!'



என தனக்குள்ளே ஏதேதோ யோசித்துக்கொண்டு அந்த கோயிலுக்குச் சென்றவள் பதற்றத்தோடு கைகளைப் பிசைந்தவாறு சுற்றி முற்றிப் பார்த்தாள்.



ஆனால், அந்த இடத்தில் யாருமே இருப்பதாகத் தெரியவில்லை.



அந்த இடத்தில் தனியே நிற்பதற்கும் அவளுக்கு சற்று பயமாக இருந்தது.



"ஊஃப்ப்... நல்லதா போச்சு" என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடப் போனாள்; அப்போது சரியாக பின்னாலிருந்து கேட்டது அவனின் ஆண்மை நிறைந்த குரல்.



"கத்து தர்ற வேண்டிய குருவே இவ்வளவு லேட்டா வர்றது சரியா என்ன?" என்ற அவனின் கேள்வியில் விருட்டென திரும்பியவளின் முன்னே ஒற்றைக் காலை மடக்கி தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தான் யாத்ரன்.



" ஹிஹிஹி... நீங்க இங்கதான் இருக்கீங்களா, அது வந்து... இந்த நாட்டியத்த எல்லா பசங்க கத்துக்க மாட்டாங்க, வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க. பொண்ணுங்கதான் இதையெல்லா கத்துக்கணும். அத சொல்லிட்டு போகத்தான் வந்தேன்" என்று விட்டு ஜான்சி தப்பிக்கப் பார்க்க, "ஹேய் வெயிட்!" என்று அழைத்து நிறுத்தியவன் அவளெதிரே வேகமாக வந்தான்.



"இட்ஸ் ஓகே, நெஜமாவே இதை சொல்லிட்டு போகத்தான் இவ்வளவு தூரம் வந்தியா! இதை நீ நேத்தே சொல்லியிருக்கலாமே!" என்று கேட்ட யாத்ரன் அப்போதுதான் அந்த கோயிலில் இருந்த சில சிற்பங்களை கவனித்தான்.



"ரொம்ப அழகா செதுக்குயிருக்காங்க, தத்.. தத்... ஆங் தத்ரூபமா இருக்கு" என்று சொல்லிக்கொண்டே தூணில் செதுக்கியிருந்த அந்த சிற்பங்களை அவன் வருட, அவனுடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்த உணர்வு.



விழிகளை அழுந்த மூடிக்கொண்டவனின் மனக்கண் முன் ஏதேதோ விம்பங்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறைய, பட்டென்று விழிகளைத் திறந்த யாத்ரனின் முகம் சிவந்துப் போயிருந்தது.



அவனுடைய இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்திருக்க, உடல் முழுவதும் பயத்தால் வியர்வையில் நனைந்திருந்தது.



அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஜான்சிக்கு ஏதோ ஒன்று சரியில்லை என மட்டும் தோன்ற, புருவ முடிச்சுகளோடு அவனை நெருங்கினாள்.



"என்னாச்சு, நீங்க நல்லாதானே இருக்கீங்க" என்று அவள் புரியாமல் கேட்க, அவள் முகத்தைப் பார்த்தவன், "எனக்கு ஒன்னுமே புரியல, எதுவுமே புரியல..." என்று தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டே அவளை இழுத்து பயத்தில் அணைத்துக்கொண்டான்.



ஆடவனின் அணைப்பு என்னவோ தாயிடம் ஆறுதல் தேடும் குழந்தைப் போலிருக்க, பெண்ணவள்தான் ஆடவனின் ஸ்பரிசத்திலும் நெருக்கத்திலும் இதுவரை அறிந்திராத பல உணர்ச்சிகளை உணர ஆரம்பித்தாள்.


***********

படிச்சுட்டு மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க..


என்ட் என்னோட மூன்று ஆன்டி ஹீரோ கதைகளான


தஷுரி

ரதியின் ரணதீரன்

கனவுகள் கனலாய் மாறுமா


இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..


Here's the link 👇
https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4


என்னோட கதைகள ஆடியோ நாவலா கேக்கணும்னா...

Channel name - kadhaikulla polaama


இப்போ விழி தீயிலொரு தவம் நாவல் ஆடியோ வடிவுல இருக்கு..

Channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y



 
யாவும் நின் யாத்ரனாய்

EPISODE 06









"எனக்கு எதுவுமே புரியல, எனக்கு ஏன் இப்படி ஆகுது?" என மீண்டும் மீண்டும் கேட்ட யாத்ரனின் குரலில் ஏனென்று தெரியாத ஒரு நடுக்கம் வெளிப்பட்டது.



அவனுடைய கரங்கள் ஜான்சியை மேலும் வளைத்து தன்னோடு அணைத்துக்கொள்ள, அவனின் சூடான மூச்சுக்காற்று அவளுடைய கழுத்தில் பட்டு பெண்ணவளை கூசச் செய்தது.



நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்தவொரு ஆண்மகனின் ஸ்பரிசத்தையும் உணர்ந்திராதவளை இவன் இறுக்கி அணைத்திருக்க, பாவம் அவளும் என்னதான் செய்வாள்!



அந்த அணைப்புக்குள் ஜான்சிக்கு மூச்சு முட்டுவது போலிருக்க, அவளுடைய கரங்கள் அவனை அணைக்கச் செல்வதும் பின் தயங்கி நிற்பதுமாக அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது.



யாத்ரனோ அந்த நொடி பயத்தை தவிர வேறு எதையும் உணரவில்லை.



அந்த அணைப்பு என்னவோ சில கணங்கள்தான். ஆனால் ஆயிரமாயிரம் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இருவருக்குள்ளும் சுழல, லேசாக நெளிந்தாள் ஜான்சி.



அவள் நெளிந்ததுமே தான் செய்யும் காரியத்தை உணர்ந்த யாத்ரன் சட்டென தலையைத் தூக்கி அவள் முகத்தைப் பார்த்தான்.



பெண்ணவளின் முகம் செவ்வானமாய் சிவந்திருக்க, அவன் விழிகளைப் பார்க்க தயக்கப்பட்டு குனிந்துக்கொண்டாள் அவள்.



இதுவரை வெட்கத்தில் சிவந்த கன்னங்களை பார்த்திராதவனுக்கு இத்தனை நேரமிருந்த பயம் போய் ரசிக்கத் தூண்ட, ஒரு ஆர்வத்தில் அவள் கன்னத்தை பெருவிரலால் மெல்ல வருடினான்.



"வாவ்.." என்று அவனிதழ்கள் முணுமுணுக்க, ஜான்சிக்கு இது என்ன மாதிரியான உணர்வென்றே சொல்லத் தெரியவில்லை.



உடலுக்குள் புது இரத்தம் பாய்ந்தது போல் அவளுடல் புல்லரித்து போயிருக்க, திடீரென இருவரும் எதிர்பார்க்காதது போல, "ஜான்சி..." என்ற அர்ச்சனாவின் குரல் அதிர்ச்சியும் கோபமும் கலந்து ஒலித்தது.

அந்த இடத்தையே அதிர வைத்த அந்த சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர் இருவரும்.



அங்கு தன் தாயை எதிர்பார்க்காத பெண்ணவளுக்கு சர்வமும் அடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.



"ம்மா அது..." என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, மின்னல் வேகத்தில் மகளை நெருங்கியவர் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்திருக்க, யாத்ரனோ அதிர்ந்துவிட்டான்.



"வாட் த ஹெல்...?" என்று கேட்டுக்கொண்டே அவன் ஒரு அடி முன்னே வைக்க, மறுகணம் அவனை கை நீட்டி தடுத்தார் அர்ச்சனா.



"இப்போ இந்த அறைய நான் கொடுக்கலன்னா இவ அப்பாவும் இந்த ஊர் மக்களும் இவள வார்த்தையாலயே கொன்னுருவாங்க. நீங்க கொஞ்சநாள் இந்த ஊரை சுத்தி பார்த்துட்டு போயிருவீங்க, என் மக இருக்க போறது என்னவோ கொஞ்சநாள்தான், இருக்குற வரைக்கும் நிம்மதியா இருக்கணும் அதை கெடுத்துராதீங்க"



என்று கையெடுத்துக் கும்பிட்டவாறு சொல்லி முடித்தவரின் வார்த்தைகளில் அத்தனை வலி பிரதிபலித்தது.



அதை உணர்ந்ததாலோ என்னவோ யாத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, மகளை இழுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு சென்றார் அர்ச்சனா.



ஆனால், கண்ணிலிருந்து மறையும் வரை இருவரையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்த யாத்ரனுக்கு ஒரு சந்தேகமும் உள்ளுக்குள் எழுந்தது.



'அவ இருக்குற வரைக்கும்னா என்ன அர்த்தம், ஜான்சி எங்க போக போறா?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவனுக்கு பதில்தான் தெரியவில்லை.



ஆனால் அவன் எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகள் அவனுக்காக காத்திருப்பதை யாத்ரன் அப்போது அறிந்திருக்கவில்லை.



மகளை இழுத்துக்கொண்டு விறுவிறுவென்று வீட்டுக்குள் நுழைந்த அர்ச்சனா சுற்றிமுற்றி பார்த்துவிட்டு கதவைத் தாளிட்டார்.



ஜான்சி தாயின் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. விழிகளிலிருந்து கண்ணீர் ஓட, கைகளைப் பிசைந்த வண்ணம் நின்றிருந்தவளின் எதிரே வந்து நின்றவருக்கும் விழிகள் என்னவோ கலங்கித்தான் இருந்தன.



"அந்த பையன் வேணா இந்த ஊருக்கு புதுசா இருக்கலாம், ஆனா நாம என்ன மாதிரியான சூழல்ல இருக்கோம்னு உனக்கு நல்லாவே தெரியும். அதுவும் நீ.. என்ன நடக்க போகுதுன்னு எல்லாமே தெரிஞ்சும் எப்படி அந்த பையன் கூட நெருங்கி பழகுற ஜான்சி? இது மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சா.." என்று அர்ச்சனா அவள் தோளைப் பற்றி உலுக்க, வெடித்து அழுதுவிட்டாள் அவள்.



"ம்மா, தயவு செஞ்சு அப்பாக்கிட்ட எதையும் சொல்லிராதீங்க. எனக்கும் அவருக்கும் இடையில சத்தியமா எதுவும் இல்லம்மா, நம்புங்க! என்னை தயவு செஞ்சு மன்னிச்சிருங்க, மறுபடியும் இந்த மாதிரி நடக்காது"



என்று சிறு குழந்தையாய் விம்மி விம்மி அழுதவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சமையலறை நோக்கி நடந்தவர் சட்டென நின்று மகளை திரும்பிப் பார்த்தார்.



"இன்னைக்கு பௌர்ணமி, என்ன நாள்னு தெரியும்ல" என்று இறுகிய குரலில் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட, வேகமாக சென்று கேலன்டரை பார்த்தவளின் இதழ்கள், "ஷானு..." என்று பரிதாபத்தோடு முணுமுணுத்தன.



நேரம் வேகமாகக் கடந்து சூரிய அஸ்தமனமும் நெருங்க, அந்த ஊரிலுள்ள பெரிய கோயிலில் அலங்காரங்க வேலைப்பாடுகள் வேகமாக நடந்துக்கொண்டிருந்தன.



இரவு நெருங்க நெருங்க வழக்கம் போல் இல்லாமல் மொத்த ஊரும் பரபரப்பாக இருக்க, எதையும் உணராமல் இன்று நடந்ததையே யோசித்தவாறு அமர்ந்திருந்தான் யாத்ரன்.



'ச்சே! இது ஒன்னும் டுபாய் இல்ல யாத்ரா, உன்னால பாவம் அந்த பொண்ணுக்குதான் பிரச்சனை. என்ன அறை!'



என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தவன் வனஜாவும் ருக்மணியும் வரதனோடு குசுகுசுவென்று பேசுவதை விழிகளை கூர்மையாக்கி கவனித்தான்.



"என்னாச்சு?" என்று அவன் புரியாமல் கேட்க, உடனே திரும்பிப் பார்த்த வரதனுக்கு நண்பனை சமாளிப்பதுதான் பெரும்பாடாய் தோன்றியது.



"அது... அது ஒன்னு இல்லடா யாத்ரா, இன்னைக்கு ராத்திரி பூஜை இருக்கு. அதைதான் அம்மாவும் ருக்மணியும் சொல்லிட்டு இருந்தாங்க. வேறொன்னு இல்ல" என்று சமாளிக்க முயற்சித்தான் அவன்.



"ரியலி! இன்னைக்கும் நாம டான்ஸ் பார்க்க போறோமா என்ன?" என்று கேட்ட யாத்ரனின் வார்த்தைகளில் ஆர்வம் உச்சத்திலிருக்க, வனஜாவோ அப்பட்டமாக பதற ஆரம்பித்துவிட்டார்.



"தம்பி.. அது.. அது இல்ல தம்பி.. இது.." என்று திணறிய தாயின் கரத்தைப் பற்றி அழுத்தம் கொடுத்த வரதன், "இந்த பூஜைக்கு ஆம்பிளைங்க போகக் கூடாதுடா, ஒன்லி லேடீஸ். என்ட் நாம மூவிஸ் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல்ல இன்னைக்கு வேணா நல்ல படமா பார்க்கலாம்" என திசைத்திருப்ப முயற்சித்தான்.



ஆனால், யாத்ரனோ இதை விடுவதாக இல்லை.



"அது ஏன் பொண்ணுங்க மட்டும், பசங்க பார்த்தா என்னாகும்?" என்று மீண்டும் அவன் தன் கேள்வியைத் தொடுக்க, மற்றவனுக்கு அய்யோ என்று இருந்தது.



"குறுக்க குறுக்க கேள்வி கேக்குறது ஈஸி, பதில் சொல்றது ரொம்ப கஷ்டம். சும்மா பேசிட்டு இருக்காம சீக்கிரம் வா, சாப்பிட்டு படத்த பார்க்கலாம்" என தப்பித்தால் போதுமென்பது போல கழிவறைக்குள் நுழைந்துக்கொண்டான் வரதன்.



ஆனால், வழக்கத்தை மீறி யாத்ரனின் மனம் ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் அடித்துக் கூறியது.



அதே யோசனையோடு அவன் அறைக்குள் நுழைந்துக்கொள்ள, இருவரும் லேப்டாப்பில் திரைப்படமொன்றை பார்த்துவிட்டு உறங்கவே கிட்டத்தட்ட மணி பன்னிரெண்டை தொட்டு விட்டது.



யாத்ரனும் வரதனும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருக்க, மெல்ல கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்த வனஜாவோ மகளிடம் சைகையால் சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார்.



கோயிலில் ஏற்றியிருந்த தீபங்களின் வெளிச்சம் அந்த இரவின் இருளை கிழித்துக்கொண்டு கிராமத்தை சூழ்ந்திருக்க, எல்லா மக்களும் தத்தமது வீட்டிலிருந்து வெளியேறி கோயிலை நோக்கிச் சென்றனர்.



வழக்கமாக இருக்கும் நிசப்தம் போய் கிசுகிசுக்களும் ஒரு சிலரின் வேதனையுடனான ஓலமும் கேட்க, தாயோடு கோயிலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ஜான்சியின் மனம் கனத்துப் போயிருந்தது.



கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்த கோயிலில் ஏற்றியிருந்த தீபத்தை பார்த்தவளின் கால்கள் ஒருவித பயத்தில் அப்படியே நின்றுவிட, மகள் சட்டென சிலை போல் நின்றதை பார்த்ததும் அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்தார் அர்ச்சனா.



"ஷானு பாவம்ல!" என்றவளின் குரல் தழுதழுக்க, அழுகை தொண்டையை அடைத்தது.



ஆனால் பாவம், பரிதாபப்படுபவர்களே அந்த மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்தால் கடவுளாலுமே தடுக்க முடியாதுதானே!



அதேநேரம் மனம் பிசைய தூக்கம் கலைந்து பட்டென கண்களைத் திறந்தான் யாத்ரன்.



வேகமாக எழுந்தமர்ந்தவன், அலைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்துவிட்டு எரிச்சலாக விழிகளை சுழற்றினான்.



"ஓ ஷீட்! இன்னும் ஒரு மணி கூட ஆகல, அதுக்குள்ள எழுந்துட்டேன்.என்னாச்சு எனக்கு, ஏன் உள்ளுக்குள்ள ஒரு மாதிரியா இருக்கு?"



நெற்றியை நீவி விட்டவாறு யோசித்தவனின் புருவங்கள் கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்ததும் கேள்வியில் முடிச்சிட்டன.



அவனுடைய கால்கள் தானாக நகர்ந்து அந்த ஜன்னலுக்கு அருகே செல்ல, கதவைத் திறந்து வெளியே பார்த்தவனின் விழிகள் இப்போது சந்தேகத்தில் சுருங்கின.



"என்ன நடக்குது இங்க? அதுவும் இந்த நேரத்துல.." புரியாமல் முணுமுணுத்தன அவனுடைய இதழ்கள்.



கோயிலை நோக்கிச் செல்லும் ஊர் மக்களையும் கோயில் இருக்கும் பக்கத்திலிருந்து வரும் தீபங்களின் வெளிச்சத்தையும் மனதில் எழுந்த பல கேள்விகளோடு பார்த்திருந்தவன் பின் ஒரு முடிவோடு வீட்டிலிருந்து வெளியேறினான்.



எல்லா மக்களும் கோயிலுக்குள் நடக்கும் சடங்குகளில் மூழ்கியிருக்க, யார் கண்ணிலும் சிக்காமல் கோயிலுக்கு வெளியே மறைந்திருந்து உள்ளே நடப்பதை பார்க்க முயற்சித்தான் யாத்ரன்.



ஆனால், கூடியிருந்த மக்களால் உள்ளே நடப்பது எதுவும் அவனுக்கு சரியாகத் தெரியவில்லை.



கோபத்தில் காலை தரையில் உதைத்தவன் இடுப்பில் கைக்குற்றி அடுத்து என்ன செய்வதென்ற யோசனையோடு நின்றிருக்க, அவனே எதிர்பார்க்காமல் கோயிலிலிருந்து வெளியே வந்தனர் சிலர்.



அரக்குநிற தாவணியில் முகத்தை மறைத்த வண்ணம் ஒரு பெண் நடுவில் வர அவளுக்கு பின்னால் நான்கைந்து பூசாரிகள் அந்த பெண்ணின் குடும்பம் உறவுகள் என கூட்டமாக ஒரு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.



அந்த கூட்டத்தில் ஜான்சியும் அழுத வண்ணமாய் நடந்துச் செல்ல, விடையறியாத குழப்பத்தோடு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த யாத்ரனும் யார் கண்ணிலும் படாமல் மறைந்தவாறே சென்றான்.



ஒருசில நிமிடங்களில் மொத்த கூட்டமும் அந்த கோயிலுக்கு பக்கத்திலிருந்த பெரிய கிணற்றுக்கு அருகே செல்ல, ஆடவனுக்கோ உள்ளுக்குள் ஆர்வம் எழுந்தது.



அதற்குப் போட்டியாக பல கேள்விகளும் அடுக்கடுக்காய் எழுந்தன.



'வாட் த ஹெல் இஸ் கொன்ன ஹேப்பனிங் ஹியர், அந்த பொண்ண என்ன பண்ண போறாங்க.. அவ.. அவ ஏன் அந்த கிணத்துக்குள்ள இறங்குறா.. ஏன்.. ஏன்..'



அவன் தனக்குத்தானே கேள்விகளை தொடுத்துக்கொண்டிருக்கும் அதேவேளை தொப்பென்று நீருக்குள் ஏதோ விழும் சத்தம்.



அங்கிருந்த ஒரு பெரியவர் தலையில் அடித்துக்கொண்டு கதறியழ, மற்ற பெண்களோ அவரைப் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தனர்.



என்ன நடந்திருக்குமென்று மூளைக்கு உரைத்தாலும் அதை ஏற்க மறுத்தவனுக்கு நடந்ததை புரிந்துக்கொள்ளவே சில நிமிடங்கள் எடுத்தன.



"அந்த.. அந்த பொண்ணு... அவளுக்கு..." என்று திக்கித்திணறி கேட்டவன் அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் விக்கித்துப் போய் நின்றிருந்தான்.



ஆனால் அந்த திகைப்பு என்னவோ ஒருசில கணங்கள்தான்.



அவனுடைய கோபம் தலைக்கேற, நெற்றி நரம்புகள் புடைத்தன.



கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு ஒரு அடி முன்னே வைத்தவனின் வாயை பின்னாலிருந்து பொத்தி இழுத்துக்கொண்டு சென்றது ஒரு அரவம்.



யாத்ரனோ முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த அரவத்தின் பிடியில் திமிற, அதுவோ அவனுக்கு ஈடாக உடும்புப் பிடியாய் பிடித்திருந்தது.



எப்படியோ ஒரு மறைவான இடத்திற்கு வந்ததும் அந்த அரவம் தன் பிடியை தளர்த்த, மறுகணம் திரும்பிப் பார்த்தவனுக்கு விழிகள் பெரிதாய் விரிந்து பின் அனலைக் கக்கின.


*********

என்னோட வேல்விழி மொழிகள் நாவல இப்போ Papr space தளத்துல நீங்க வாசிக்கலாம்..


ஆத்ரேயன் வர்ஷா Pair யாருக்கெல்லை நியாபகம் இருக்கு... பக்கா ஆன்டி ஹீரோ நாவல்..

காதலென்ற போர்வையில் அவளுக்கு துரோகத்தை செய்பவன் பிடிக்காத அவளுடனான திருமணத்தில் மேலும் அவளை காயப்படுத்துகிறான்..

அவளுடைய காதலை உணருவானா அவன்?

காதல், காமம், நகைச்சுவை, துரோகம், வலி, உறவு, பிரிவு என கலந்த நாவலே வேல்விழி மொழிகள்

வேல்விழி மொழிகள்

by Sheha zaki

Read on Papr
https://papr.space/article/699e9023f529ce39d2764e62?ref=social&src=whatsapp


விழி தீயிலொரு தவம் கதை ஆடியோ நாவலா என்னோட யூடியூப் சேனல்ல இருக்கு கேட்டுட்டு மறக்காம கமென்ட் பண்ணுங்க..


Channel name - kadhaikulla polaama

channel link 👇
Https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y


-Sheha zaki
 
Status
Not open for further replies.
Top