ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மா மகன் - கதை திரி

Status
Not open for further replies.

T23

Moderator
அத்தியாயம் 9


கண்விழித்து பார்த்த தாடாளனுக்கு தான் தனது கூடாரத்தில் இருப்பது புரிய மெல்ல எழுந்து அமர்ந்தவனுக்கு தலைவலிப்பது போல் இருந்தது. கண்களை மூடியபடி இரு விரல்களால் முன் நெற்றி பொருத்தை லேசாக அழுத்தியபடி அமர்ந்திருவன் நினைவு நடந்தவற்றை நினைவு கூற முயல அந்த குகையில் இருந்த சித்திரங்கள் அவனுக்கு எதை எதையோ மூளையின் உள் அடுக்கில் இருந்து மறைந்து நிற்கும் வேரை மேலிருந்து அடி ஆழம் வரை பிடுங்கும் போது படும் சிரமம் போல் இருந்தது. ஏனோ முதலில் நெகிழா மண் போல் அவன் மனம் இருக்க விலகி இருந்தவனை இப்போது விதி வேலை எனும் சூழல் நீர் ஊற்றி இளக்கி இருக்க அவன் ஆர்வக் கை கொண்டு பிடிங்கினாலும் மன மண்ணை இறுகப் பற்றியிருக்கும் அவன் மூலத்தின் வேர்கள் எளிதில் வருவதாய் இல்லை. எளிதில் பிடிங்கிவிட அது சல்லி வேர்கள் அன்றே . நேராக அடிவரை இறங்கி கிளைத்து பரவி இறுதி வரை இருக்கும் ஆணி வேர் தொகுதியாகிற்றே.


சிந்தித்த படி இருந்தவன் கை அனிச்சையாக தன் கைகாப்பை மேல் இழுக்க தேடி அந்த இடம் வெறுமையாக இருந்தது. பதறி எழுந்தவன் அதைத் தேட

உள்ளே நுழைந்த நாராயணன் தனது உடை பை என எல்லா இடமும் தேடியவனிடம். வெளியில் எங்காவது விழுந்திருக்குமோ அது அப்படி விழக்கூடிய பொருள் இல்லையே என்ற அவன் எண்ணங்களின் குறுக்கீடாக


"என்ன தாடாளன் எப்படி இருக்கீங்க?"

என்ற கேள்வியில் திரும்பியவன் நாராயணன் வாசலில் நின்றிருப்பதை கண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டான்.


"ஆ இப்ப நல்லா இருக்கேன் " என்றவன் கண்கள் இன்னும் தேட அதை கண்டு கொண்டவர்

"என்ன எதையாவது தேடறீங்களா?"

என்றவருக்கு என்ன சொல்ல என்று தெரியாமல்

" இல்லை"

என்றுவிட்டவன் பிறகு தயக்கமாக ஒரு வேளை அவர் பார்த்திருந்தால் என எண்ணி


"ஆமா என்னோட காப்பு? "


"அது ?" என்று நாராயணன் துவங்க


"என்கிட்ட தான் இருக்கு" என்று வந்து நின்றாள் தன்யா"


"இது யார்?" புருவம் சுருக்கியவன் அந்த அரை நொடியில் அவளையும் அவளது பிண்னியும் நினைவடுக்கில் எடுத்து விட்டான். ஆனாலும் அதை மறைத்து வெளிப்பட்ட அவன் கேள்விக்கு பதில் சொல்ல நாராயணனப் பார்க்க


"இவங்க தன்யா நம்ம ப்ரொஜெட்க்கு லீடர்"

அவனுக்கு அவளின் நோக்கும் நோக்கமும் தெரியும் ஆதலால்

" என்ன இது கவர்மென்ட் புராஜெட் தான? அப்புறம் இவங்க என்ன பண்றாங்க"


"ஆமா தாடா பட் இவங்க பைனான்ஷியலா சப்போர்ட் பண்றாங்க."


"அதுக்காக இப்படியா.?"

என்றான் .அவள் முறையற்று அவன் கூடாரத்திற்குள் நுழைந்தது மட்டும் இல்லாமல் அவன் நினைவில்லாத நிலையில் அனுமதியின்றி காப்பை அவிழ்த்தது மட்டுமல்லாமல் இப்போது நான் தான் எடுத்தேன் என்று வந்து நின்ற அவளில் கோபம் வந்தது.


அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு அதை புரிந்து கொள்ள முடியாதா என்ன? அதில் திரும்பி தன்யாவை பார்த்தார். பிறகு அவர் தான் தன்யாவை இப்போது வர வேண்டாம் என்றாரே தான் மட்டும் போய் பார்த்துவிட்டு வருவதாக கூற அவள் அவர் கூறியதை செவிமடுக்க வேண்டுமே நீ கூறி நான் என்ன கேட்பது என்பதுபோல் அவருக்கு முன் நடக்க அவருக்கு வேறு வழியின்றி அவளுடன் இணைந்து கொள்ள வேண்டியதாயிற்று. இப்போது அவன் கோபத்தில் முறைக்க

என்ன செய்ய போகிறானோ என்று பயம் வேறு ஒருபுறத்தில் என்ன செய்ய ? என்ன செய்ய ? தான் என்று புரியாமல் போக சங்கடமாக சிரித்து வைத்தார். அவனோ எப்படியோ போ என்பதாய்


"வாட் எவர் என்றவன்"


ஒற்றை தோள் குலுக்கலுடன் அவளிடம் தனது காப்பிற்காக கையை நீட்டினான்.அந்த காப்பு இயற்கையாக குளோரைட் எனும் தனிமத்தின் சேர்கையினால் பச்சைநிறத்தில் இருந்த பாறையில் இருந்து எடுக்கப்பட்டு செதுக்கப்பட்டு பளபளப்பாக்கப்பட்டு இருந்தது. இரவின் மெல்லிய ஒளியில் அவள் கையில் அது பளபளத்தது.


" இது ரொம்ப அழகா இருக்கு? எங்க வாங்கினீங்க?"

என்று அவனை கூர்மையாக அளவிட்டபடி அவனிடம் அதை நீட்ட வாங்கிக் கொண்டான். கோபத்தை அடக்கிக் கொண்டு. ஆனால் அவளோ தன் கேள்விக்கு என்ன பதில் வருமோ அதைப் பொறுத்து அவனுடான உரையாடலை வளர்க்க நினைத்தாள். அவளுக்கும் அதற்கும் நெடுந்தொலைவு என்றாலும். அவளது உள்ளுணர்வு அவளை நச்சரித்து கொண்டிருந்தது.அது தான் அவள் இங்கே வரவும் காரணம்.

இன்று நிகழ்ந்தது அவளை இன்னும் உறுதி கொள்ள வைத்தது. அதனாலேயே கொஞ்சம் இறங்கி மீண்டும் முயற்சிக்க எண்ணி தாடாளனை நோக்க ஆனால்


தாடாளன் பார்வையின் இலக்கோ பொருளோ தன்யாவை எட்டவும் இல்லை. அதற்கு அவன் அனுமதிக்வும் இல்லை. அவள் நீட்டியிருந்த காப்பை வெடுக்கென்று பறித்து முன்பின்னும் பார்த்தவன் படார் என்று ஒன்று அவளது கன்னத்தில் ஒரு அறை விட்டான்.


"டோன்ட் டச் மை திங்க்ஸ்"

என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் மீண்டும் தன்கையில் அந்த காப்பை அணிய அது ஒரு முறை ஒளிர்ந்து அடங்கியது.. அங்கிருந்து வெளியே நடந்தவன் நாராயணினிடம் நின்றான் .இதை எதிர்பார்க்கவில்லை தன்யாவும் நாராயணனும். பொறி கலங்கி போயிருந்தாள் தன்யா.


"சர் அந்த கல்யாணத்துக்கு போகனும் சொன்னீங்களே அங்க பாருங்க அவங்க ஆட்கள் உங்கள கூட்டிட்டு போக வந்துருக்காங்க" என்று வெளியே சென்று நின்று அவர்களுடன் பேசியபடி நின்று கொண்டான் அதுவரையில் செயல்பட மறந்த புலன்களுடன் தான் நின்றிருந்தாள்.அவளை இது போல் யாரும் நடத்தியதில்லை. அவள் முன் யாரும் இதுவரை விரல் நீட்டியே பேசியதில்லை எனும் போது கை நீட்டி அடிப்பது என்பது பற்றி கூற என்ன இருக்கிறது? ஆகையால் தான் அவன் செயல் அவளை ஸ்தம்பித்து நிற்க வைத்து விட்டது.


தாடாளன் வெளியே வரவும் தன் நிலை நினைவுக்கு வர

தன்யா நாராயணனை கோபமாக பார்க்க. அவரோ


"இதுக்கு நான் ஒன்னும் சொல்ல முடியாது மேடம். நான் தான் சொன்னேனே பொறுமையா இருங்கன்னு நீங்க தான் நீ சொன்னா நான் கேட்டகனுமான்னு அவன் கையில் இருந்த காப்பை கழட்டினீங்க இப்ப அடிவாங்கினீங்க."


"நாராயணன்.."

"நான் தான் நீங்க ரெஸ்ட் எடுங்க நாங்க கல்யாண வீட்டுக்கு போய்ட்டு வரோம்.நாளைக்கு மறுபடியும் நாம் வொர்க் கண்டஈனஈயஊ பண்ணலாம்.நீங்க காட்டேஜ்க்கு போங்க அங்க தங்கறதுக்கு சாப்பாடு எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு."


என்றாவரது இடைவிடாத பொழிவில் அவள் கிளம்பி இருந்தாள்.வெளியே வந்தவள்

"நல்லா என்ஜாய் பண்ணு.நாளைக்கு நீ இங்க வேலை பார்க்க போற கடைசி நாள்"


என்றவள் தனது நாளை எப்படி இருக்கும் என்பது பற்றி அறியாள்.தாடாளனோ


"சரிங்க ரொம்ப சந்தோஷம் செய்ங்க"

என்று விட்டு சென்று விட்டான்..


******************************************************************************

அன்று….


மெல்ல மெல்ல மேலே ஏறிக் கொண்டு இருந்த ஆதவன் தன் கிரணங்களை அந்த பனிமலைக்கு மகுடமாக சூட்டி இருந்தான். பொன்னன மின்னிய அது கண்களில் ஒரு குளிர்ச்சியையும் உள்ளத்தில் மகிழ்வையும் தர அதை அனுபவித்தபடி மேலும் ஏறினாள்.


அப்போது தான் அந்த மாமூத் வகை யானைக் கூட்டம் விழுந்தது. மாமூத் வகை யானைகள் உடல் முழுவதும் உரோமங்களால் மூடப்பட்டிருந்து நன்றாக வளர்ந்த வளைந்த தந்தங்களுடன் அவை அற்புதமாக இருந்தன. அவை கூட்டமாக நின்று கொண்டு இருப்பதைக் கண்டவள் அங்கேயே நின்று கொண்டாள்.


ஏதேனும் ஒரு யானை ஈனும் நேரத்தில் மற்ற யானைகள் அதற்கு பாதுகாப்பாகவும் உதவியாகவும் நின்று கொண்டு மற்ற விலங்கள் அருகில் வந்தால் துரத்தியடிக்கும். மேலும் அந்நேரத்தில் தாய் யானை இன்னும் ஆக்ரோஷமாக தாக்கும். அதை அவள் ஏற்கனவே பார்த்திருக்கிறாள். எனவே ஒதுங்கி போக முடிவு செய்து சற்று தள்ளி போய்விட எண்ணி இரண்டு மூன்று அடி வைத்தவள் அப்போது தான் கவனித்தாள் அவை அமைதியாக எதைச் சுற்றியோ நிற்பதை கண்டவள் இது வேறு என்று என்ன என்று கூர்ந்து கவனித்தாள். அது ஒரு யானையின் எலும்பு கூடு


மற்ற யானைகள் இறந்த யானையின் எலும்பு கூடைச் சுற்றி அமைதியாக அஞ்சலி செலுத்தும் வகையில் நின்று கொண்டு இருந்தன. சில கண்களில் கண்ணீரோடு சற்று நேரம் அமைதியாக நின்ற அவை பின்னர் மரியாதை செய்யும் விதமாக பிளிறின. பின்னர்

அந்த எலும்புகளை அவை ஒவ்வொன்றும் தும்பிக்கையில் எடுத்துக் கொண்டு அதை பக்கத்திற்கு ஒன்றாக வீசி விட்டு பிறகு அங்கிருந்து முன்னேறின.


அதைப் பார்த்தபடி தன் பயணத்தை தொடர்ந்தாள். கூடவே அவனும் . அவளின் எண்ணங்களின் வேர்கள் தன் சொந்த இடத்தை சுற்றியே நின்றது. இப்போது அவள் அறியாமலே அவள் தாய் தந்தை பற்றி நினைவுகள் சுழல ஆரம்பித்தது.


ஏற்கனவே அவள் தாயை இழந்திருக்க அவள் தந்தை தான் அவளுக்கு எல்லாமும் அவள் தாயின் ஞாபகமாக அவளிடம் அந்த மாலை மட்டுமே . அதை கையில் எடுத்து பார்த்தவள் மீண்டும் ஏறத்துவங்கினாள்.அந்த உற்சாகம் இன்னும் அவளை விரைவு கொள்ள வைத்தது.


எங்கும் பனிபடர்ந்த மரங்களும் புற்கள் என்று வெளி அனைத்தும் பனி மூடி தவம் செய்து கொண்டிருந்தன வசந்தம் வரும் என. இப்போது குளிர் இன்னும் அதிகரித்தது.அவள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்து இருந்தது. மேலும் பனிப்புயல் துவங்கியது இந்த சூழ் நிலையில் இனி நடக்க முடியாது எங்காவது தங்கிக் கொள்ள வேண்டும்.


எங்கு என்று தெரியவில்லை ஏதேனும் குகை போன்ற எதுவும் இருந்தால் இன்னும் நன்றாக பாதுகாப்பாக இருக்கும் என்று தேடியவள் கண்களில் இறந்து போன ஒரு மான் விழ அதில் கவனம் வைத்தவள் காலின் கீழ் உள்ள நிலப்பரப்பில் கவனம் செலுத்த மறந்தாள்.

 

T23

Moderator



அத்தியாயம் 10


இன்று


தாடாளன் வெளியே வரவும் அவனைத் தொடர்ந்து அவளிடம் பேசிவிட்டு நாராயணன் தானும் வெளியே வந்து விட உள்ளே தனித்து நின்று கொண்டிருந்தாள் தன்யா. முழுகொதிநிலையில் நின்று இருந்தாள் ஏதாவது செய்ய வேண்டும் அவனை என்றிருக்க. சூழல் அவனுக்கு சார்பில் இருக்க


"ச்ச இவனை …என எரிய

"இந்த நாராயணன் வேற இடைல அட்வைஸ்."

என்று அவரையும் அரைத்தவள்


"உன்னய…என்ன பண்றேன்னு பாரு…"


என்று கைவிரல்களை அழுந்த மூடி பல்லைக் கடித்து கோபத்தை கட்டுப்படுத்த எண்ணி கண்களை மூடிக் கொண்டாள் அதில் அவள் சினம் கட்டுப்பட்டதோ இல்லையோ . அவன் கைப்படவும் ஒளிர்ந்த அந்த காப்பு கண்முன் வந்துஅவளை இன்னும் அவனிடம் ஈர்த்தது..



"இந்த இடத்துக்கும் இவனுக்கும் ஏதோசம்மந்தம் இருக்கு. என்னனு தெரியாம போய்டுமா என்ன"


என்று முனுமுனுத்தவள் மனதில் பேசாம இவன லவ் பண்ணுவமா ஈஸியா காப்ப பத்தி தெரிஞ்சிரும்? என்று யோசிக்க ஆனா அதுக்கு நிறைய பேசணும் அது இது அப்படி இப்படி இந்த லூசுப் பய ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுவான் அதை வேற கேட்கனும் இல்லை கேட்க மாதிரி நடிக்கனும்.

என்று யோசித்தளுக்கு அதிலேயே


" ச்சை கண்றாவி எவ்வளவு . இவ்வளவும் தாண்டி எப்படித் தான் லவ் பண்றாங்களோ ? யோசிக்கறதுக்குள்ளயே மூச்சு முட்டுது.. நமக்கு செட்டாவது ப்பா அதுவும் இவன்

வேண்டவே வேண்டாம்"


என்று சற்று சத்தமாகவே சொல்லியவள் தண்ணுர்வு பெற்று வெளியே வந்தவள்


" நீங்க போங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு."


என்று விட்டு தன் கூடாரத்திற்குள் செல்லப் போனவள் முன் வந்து நின்ற யாங்கும் அந்த இடத்தை சார்ந்த மக்கள் சிலர்.

"எங்களுக்காக எவ்வளவு உதவி செஞ்சிருக்கீங்க .நீங்க கட்டாயம் வரனும்."

என்று வற்புறுத்த மற்ற இருவரும் பதில் எதுவும் சொல்லாமல்

"நீ யாரோ எவரோ ? "

என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க அவளுக்கு உள்ளே குமைந்தது. இருந்தாலும் தான் நிலை அறிந்து தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவள் ஏதோ ஆலோசித்தவளாய்

"சரி வருகிறேன். "

என்றதும் மகிழ்ந்து போனவர்கள் அவளுக்கு அவர்கள் தங்கள் பாரம்பரிய ஆடைகளை தந்தார்கள்.

" இது என்ன?"

என்பதாய் யாங்கை பார்க்க

" இது எங்கள் பாரம்பரிய ஆடை தங்களுக்காக எங்களின் சிறு பரிசு."

" ஓ தாங்க்யூ" என்று புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள்.


"இதை அணிந்து கொண்டு வருகிறேன்."


என தன் கூடாரத்திற்குள் சென்றவள் அந்த ஆடையை வைத்து விட்டு தனது தொலைபேசியில் இருந்து அழைப்பு விடுக்க அது அலைவரிசை இல்லாததால் போகவில்லை. என்ன செய்ய என்று சில நொடிகள் அங்கும் இங்கும் நடந்தவள் தனது மின் அஞ்சல் மூலம் தகவலை அனுப்பியவள் அவசரமாக அவர்கள் தந்த ஆடைகளை அணிந்து கொண்டு தன்னைப் பார்க்க சற்று வித்தியாசமாக ஏன் கொஞ்சம் சிரிப்பாக கூட இருந்தது என்றாலும் பிடித்திருந்தது. அதன் மீது குளிரை தாங்கும் ஜாக்கெட் ஒன்றை அணிந்து கொண்டவள் வெளியே வர ஊர் மக்கள் சிலர் காத்திருக்க தாடாளன் நாராயணன் இருவரையும் காணவில்லை. அவர்கள் இருவரும் எங்கே என்று தேட அவர்களில் ஒருவன்



"யாங் அவர்களை அழைத்து சென்று விட்டான்.நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்."


என்றதில் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர்களுடன் நடந்தாள்.அவள் கைப்பேசி இப்போது அலைவரிசையை பெற்று மின்னஞ்சலை சேர்ப்பித்து விட்டு அமைதியானது.


மாலையில் மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு செல்வதில் இருந்து திருமண தொடங்கியது.சுற்றியுள்ள அனைவரும் உணவு மற்றும் இனிப்பு வகைகளை தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வர அதை அனைவரும் பகிர்ந்து கூடவே மதுவும் உண்டு ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் என நடந்து கொண்டிருந்தது.


இதைக் கண்ட தாடாளனுக்குள் இது போல் ஒரு பெண்ணுடன் இணைந்து ஆடியது போல நினைவலைகள் அவனை அலைக்கழிக்க அங்கு இருக்க முடியாது எழுந்து வெளியே வரவும் யாங் உள்ளே போவதற்கு எதோ பொருட்களுடன் வர அவனிடம்


"யாங் உங்கள் திருமணச் சடங்குகள் எப்போது முடியும்?"

"இந்த சடங்கு இரவு முழுவதும் நீளும் நாளைக்கு மணப்பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்து செல்லபடுவதுன் முடியும்."

என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளே எட்டிப் பார்க்க

நாராயணன் ஒருபுறம் மது ஆட்டம் என மகிழ்ந்து கொண்டு இருந்தார் என்றால் தன்யா மறுபுறம் தன்னை மறந்து களித்து கொண்டு இருந்தாள்.அவர்களை கலைக்க விருப்பம் இல்லை எனவே

மீண்டும் யாங்கிடம் திரும்பி

"யாங் நான் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் குடிலுக்கு திரும்பி செல்கிறேன். நீ இவர்களை கவனித்துக் கொள்."


என்றவன் அவன் பதிலுக்கு கூட காத்திருக்கவில்லை. குடிலை நோக்கி நடந்தவன் வழியில் அந்த இராணுவ முகாமிற்குள் சென்றான். நாராயணன் அவர்களிடம் தான் ஆராயச்சி பற்றிய தகவல்கள் தருவதும் .


நேராக அவரிடம் வந்தவன் " உங்களுக்கான தகவல்கள் எடுத்து வைத்து விட்டேன் வாங்கிக் கொள்ளுங்கள். "

என அலுவலகத்தில் கொடுப்பதற்காக எனத் தன் வசம் வைத்திருந்த அந்த உறையைக் கொடுக்க


"ஒ தாங்யு மிஸ்டர்.??" அதை வாங்கிய படி அந்த அலுவலர் சிரிக்க.


"தாடாளன்."

"நைஸ் நேம்"

"நீங்க "

"ஆர்கியாலஜிஸிட் நாராயணன் அஸிஸ்டன்ட்"

"எப்பவும் யாங் கொண்டு வந்து கொடுப்பார்.இன்னிக்கு இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தோம் அதான் நானே கொண்டு வந்துட்டேன்."

"ஓ வெரிகுட் எப்படி இருக்கு உங்க வொர்க்"

"என்ன சார் அதைத் தான ரிப்போர்ட்டா.வே தந்து இருக்கேன்."

என்றதில் திகைத்து பின் சிரித்த அந்த அதிகாரி

"ஓ மிஸ்டர் தாடாளன் நான் "

"அன்டர் ஸ்டான்ட் சார் ஜஸ்ட் பார் பன் நல்லா போகுது. இப்ப கொஞ்சம் வேலை இருக்கு. நாம இன்னொரு தடவை நிதானாமா பேசலாம் பிளிஸ் எக்ஸ்கியூஸ் பீ"


என்றவன் அவருக்கு கைகொடுத்து விட்டு எழுந்து கொண்டான். விடைபெறும் விதமாக. பதிலுக்கு கை குலுக்கிய அதிகாரி

"ஒ எஸ் ."

என்று விட்டு மீண்டும் தன் வேலைக்குள் ஆழ்ந்து போனார்.


ஆனால் நள்ளிரவில் அங்கே தன்யாவின் அலை பேசி பல முறை அடித்தும் எடுக்கப்படவில்லை.


அன்று


பனிமலைப் பகுதிகள் கண்களுக்கு எவ்வளவு அழகோ அவ்வளவு ஆபத்தும் நிறைந்தவை. முழுவதும் பனி மூடிக் கொள்வதால் சிறிய மலையிடுக்குகள் எளிதாக உள்ளே மறைந்து விடும். சற்று கவனம்பிசகிடின் அதில் வீழ் வேண்டும். இடுக்குகள் என்பதால் எவ்வளவு ஆழம் என்று தெரியாது அதே போல் அகலமும் குறைவு . அதுவும் மிககுறுகியதாய் இருந்தால் உடல் அசைய முடியாமல் மாட்டிக் கொண்டால் எங்கே வெளிவருவது. பள்ளம் எங்கே மறைக்கப்பட்டிறிக்கிறது என்று அறிய முடியாது அங்கும் அன் அப்படி முதல் நாள் பனிமூடியிருந்தது.


அவளுக்கு குளிர் பழக்கம் தான் என்றாலும் இது இந்த பனி சூழல் புதிது. எனவே மிகக்கவனமாகத் தான்இருந்தாள்.கால்கள் புதைய தனது அடியை பதித்து நடக்கும் போது முதலில் நன்றாகத்தான் இருந்தது ஆனால் உறையவைக்கும் குளிர் தன் வெப்பத்தை உறிஞ்சி மகிழ்விக்கும் மாய உலகம் என்று புரிய ஒரு கம்பு ஒன்றை எடுத்து கொண்டு ஊற்றி அவள் வ நடக்கும் போது மனிதிக்கு தன்னை குளிரில் இருந்து பாதுகாக்க எதாவது வேண்டும் என்று தேடியவளுக்கு அந்த யானையின் தோல் கண்ணில்பட்டது. முழுவதும் உரோமத்துடன் அதை எடுத்து திருப்பி பார்த்தவள் இது எப்படி ? என்ற யோசனையை குளிர் தடுத்து நிறுத்த அதை அணிந்து கொண்டாள்.இப்போது கொஞ்சம் குளிரில் விரைத்த தேகம் தன் நிலைக்கு வந்தாள்.அவளுக்கு அதை அங்கு வைத்து அதை அவள் அணிந்து கொள்ள பார்த்து கொண்டு இருந்தான் அவன்


இதற்கு முன்னான நாட்கள் அவள் தேடாமலே நினைவு வந்தது. அவள் இடத்தில் மிருகங்கள் பறவைகள் பச்சை என எல்லாம் நடக்கிறாள் என்று உணரவிடாது பசியில் வாடவும்விடாது ஆனால் இப்போது எதையாவது செய்து உடல் எனக்கு வெப்பத்தை கொண்டு வா என்றது.பசி வேறு ஒரு புறம் தொடர்ந்து ஓடியது குளிர் பசி என எல்லாம் சேர்ந்து வேண்டும் என்று போரிட அயராத கண்கள் மட்டும் தீவிரமாக தேடியதில் அந்த இறைச்சி கண்ணில் பட்டது.


அவள் இனம் கொஞ்சம் கொஞ்சமாக பயிர்த்தொழிலில் பயிற்சி பெற்றதால் வேட்டையை உணவு கிடைக்காத மிகச் சில நேரங்களில் அல்லது அதை மறந்து விடக்கூடாது என்பதற்காக பொழுதுபோக்காக என்றளவில் வந்து விட்டிருந்தது.ஆனால் மனிதிக்கு வேட்டை பிடித்தமான தொழிலாகவே இருந்தது.மேலும் மீன் பிடித்தல் சங்கு சேகரிப்பு இவர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியான வாழ்க்கை மனிதியினுடையது. இதற்கு மேல் நடக்க முடியாது என்று புரிய தங்க இடம் தேடினாள் அதற்கு முன் உணவும் தேடியாக வேண்டும் என்று எண்ணத்தில் சுழன்றவளின் தென்பட்டது இந்த மான்


அதைக் கண்டதும் ஏற்பட்ட ஆர்வத்தின் பேரில் எதையும் ஆலோசிக்காமல் எட்டுகளை வேகமாக வைத்து விட்டாள். மறுநொடி அந்த பள்ளம் அவளை உள்ளே இழுத்துக் கொண்டது . இவன் பதறி துடித்து விட்டான்.இத்தனை காலமும் மறைந்திருந்த அவன் தன்னை மறந்து .மறைவில் இருந்து வெளியே வந்து மனிதியை உள்ளே எட்டிப் பார்க்க அவள் உள்ளே கிடந்தாள். .

"ஏய்… ஏய்… "

என்ற அவன் குரலுக்கு பதில் இல்லை. அவன் குரல் அந்த இடத்தில் எதிரொலித்து அடங்கும்படி மீண்டும் ஒரு முறை "ஏய்…ஏய்…."

என்று கத்த இப்போதும் அவளிடம் அசைவும் இல்லை பதிலும் இல்லை.அவள் நினைவில் இல்லை என்றுஉணர்ந்து கொண்டவன் தானும் உள்ளே குதித்திருந்தான்.
 

T23

Moderator

அத்தியாயம் 11

இன்று


அலைபேசியின் அழைப்பு தன்யாவை எழுந்து கொள்ள சொல்லியதில் மனம் விழித்தாலும் உடல் இன்னும் கொஞ்சம் என கண்ணை இழுத்துக் கொள்ளப் பார்க்க.மீண்டும்அந்த ஒலி எங்கோ பூமியில் இல்லாத அவளது நினைவுகளில் இரவு முழுவதும் மதுவிருந்து நீண்டதும் அதில் ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் என மூழ்கியிந்தவளுக்கு முழுப்போதையில் மீண்டும் தாடாளன் மீது சினம் பெருகியதில் இன்னும் அதிகம் மதுவை அருந்தியவள்.

"டேய் வாடா என்னைய அடிச்சிட்டல்ல?"

"எவ்வளவு தைரியம் இருந்தா என்மேல் கைவைப்ப?"

"யூ ராஸ்கல் இப்ப வந்து வைச்சு பார்ரா"

என்று அவனை மீண்டும் அறைந்து விட தேட நாராயணன் தான் அவளை பிடித்து நிறுத்தினார்.


"மேடம் என்ன பண்றீங்க"

"அவன் அந்த தாடாளன் என்ன அடிச்சிட்டான். நாராயணன் அவனை பதிலுக்கு ஒரு அறையாவது அவனை அடிக்கனும் அதான்."

"ஏய் இப்ப நீ இருக்கிற நிலையில் வா வீட்டுக்கு போகலாம்."

"வீடு இல்லை மேன் டென்ட் ."

"ரொம்ப முக்கியம் வா போகலாம்."

என்று இழுக்க

"ஏய் ஸ்டாப் ஸ்டாப் நில்லு நில்லு."

என்று தடுமாறி முயன்று நின்றவள்

"என்ன மேன் நீ என்ன மரியாதை இல்லாம நீ வா போன்று பேசற."

"நான் பேசறது மட்டும் கவனிச்சு கேள்வி கேட்க தெரியுது.அவன் கிட்ட பேச முடியாது இப்படி இல்லாத நேரம் தண்ணியடிச்சிட்டு புலம்பத்தான் முடியும் வேற என்ன செய்ய முடியும்.அவன் அடிச்சிட்டு தான் பேசவே செய்யறான். "

என்று அவளைத் தாங்கி அழைத்து வந்தபடி முனுமுனுக்க "என்ன சொல்றீங்க நாராயணன்."

"ஒன்னும் இல்லை தடா இங்க இல்லை அப்பவே போய்ட்டான்."

"யாரு சொன்னா"

"யாங் சொன்னான்"

"நீங்க வாங்க நாம ரெண்டு பேரும் போவோம். " என்றதில் சிறிது தூரம் வந்தவள் நடு ரோட்டில் அமர் கொண்டு

" அவன இப்ப இங்க வரசொல்லுங்க என்ன அடிச்ச அவனை பதிலுக்கு அடிக்கனும் அப்பத்தான் இங்க இருந்து வருவேன் இல்ல வரமாட்டேன்.எவ்வளவுஷதிமிர் இருந்தா இந்த தன்யா மேல கைவைப்பான்."

என்று அவள் நொந்த தன்யாவை புலம்ப இப்போது நாராயணன் வேறு வழியின்றி

"இங்க பார் தன்யா"

என்று ஏதோ கூறும் முன்

"மரியாதை மரியாதை"

"மண்ணாங்கட்டி இப்ப இதுதான் குறைச்சல்."

"வேற எது குறைச்சல்?"

"ச்ச இவ நம்மளயும் குடிக்க வைச்சுருவா போல"

என் இவளுடன் பேசி சோர்வடைந்து போனவர்.

அவன் இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டா உனக்கு தான் அவமானம் இதுக்கு நீங்க நேர்ல போய் பார்த்துக்கலாம்."

என்றவர் இழுத்து வைத்திருக்கும் பொறுமையுடன் "நாளைக்கு காலைல அவன் பார்த்துக்கலாம்.இப்ப வீட்டுக்கு போகலாம் ."என்றதும்

முடியாது இப்பவே அவன் நான் பதிலுக்கு அடிக்கனும் அப்பத்தான் வருவேன்

என்று அங்கேயே உட்கார்ந்து கொண்டவள் இப்போது நிலை மாறி கீழே கிடந்து உருளப் போக அவள் கையை பிடித்து மேலே தூக்கி நிறுத்திய நாராயணன்.

இனி இவளிடம் பேசி பயன்இல்லை என்று புரிந்து கொண்டவராக

"சரி மேடம் தன்யா நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க நான் போய் அவன் கூட்டிட்டு வரேன்"

என.நான்கு அடி வைக்க அதற்குள்

" இரு மேன் நானும் வரேன். "

என்றவள் அவருடன் இணைந்து தள்ளாடிய படி நடக்க துவங்கியது வரை நினைவில் வர

"......"

தன்னை தானே திட்டிக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டவள். எழுந்து கழிவறை சென்று விட்டு வந்தவளுக்கு இன்னும் மயக்கம் மீதம் இருந்தது போல் இருக்க ஒரு தேனீர் ஒன்றை அருந்தினால் சரியாகும் என்று தோன்றியது தேனீரை தயாரிக்க வெந்நீரில் தூளை சேர்த்தவளை அலைபேசி அழைத்தது.


அதன் அழைப்பில் தான்.அவளுக்கு அது நினைவுக்கு வந்தது.

"ஓ காட்"

எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லியிருந்தோம்

என்பதும் புரிய

"எல்லாம் இந்த கல்யாணத்துக்கு போனதால ச்சை அங்க போகாட்டி அவன திருப்பி பார்த்திருக்க மாட்டேன் தேவையில்லாம டிரிங்கஸ் எடுத்து இருக்க மாட்டேன்"

என புலம்பியவள் அலைபேசி வைத்த இடத்தை மறந்து விட்டு இருக்க இப்போது அதன் ஒலியில் கண்டுபிடித்து அதை எடுப்பதற்குள் அது ஓய்ந்திருந்தது.


அதை திறந்து பார்க்க பல அழைப்புகள் அதை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் அலைபேசி அழைக்க ஏற்றவள்

" சொல்லு .சாரு…."

"மேடம் நீங்க அனுப்புன ப்ளட் சாம்பிள் டெஸ்ட் பார்த்தாச்சு."

"ரிசல்ட் "என்ற வார்த்தையை அவள் உச்சரிக்கும் முன்

எதிர் தரப்பில் சொல்லப்பட்ட விஷயத்தில் அதிர்ச்சி கூடவே ஆனந்தம் சேர

"இட்ஸ் அமேசிங்"

"என்ன வந்தது."

என்றவளுக்கு எதிர் தரப்பில் சொல்லப்பட்ட பதிலை கேட்டுக்கொண்டவள்

"ஓ மெயில் நான் செக் பண்ணிக்கறேன்"

என்றவளுக்குள் பரபரப்பு வந்திருந்தது.வேகமாக தனது கணிணியை எடுத்து அதில் அவளுக்கு வந்திருந்த மின்னஞ்சலை திறந்து படிக்கத் துவங்கினாள்.


ஆம் நேற்று அவள் குகைக்குள் நுழையும் போது தாடாளன் கைகாப்பு ஒளிர்ந்ததையும் தாடாளன் தன்னை மறந்து ஒவ்வொரு இடத்திலும் நின்று எதையோ தொட்டு தடவி மகிழ்ந்து கொண்டு இருந்தான். அதை கண்ட நாராயணன் அவனை நிலைப்படுத்த முயல அவருக்கு அது மிகவும் கடினமாக இருந்தது.ஏனெனில் அவரால் அவனை நெருங்கி முடியவில்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு தான் அவனை நெருங்கிக் கொண்டிருந்தார்.அப்போது உள்ளே நுழைந்த தன்யா இதை பார்த்துவிட்டு அவர்களிடம் விரைந்து சென்றாள்.


"என்ன ஆச்சு நாராயணன்?"

என்றதில் தாடாளன் மீது குவிந்து அவர் கவனம் இவள் மீது திரும்பியது. வேறு ஆட்கள் யாரும் இல்லை என்பதால்


"முதலில் இவன முதல்ல வெளியே கொண்டு போகனும்."

என நாராயணன் கூறியதில் சூழல் புரிந்தவளாக

"ஓகே"

என்றவள் அவனின் அருகில் செல்ல முயல அவளாலுமா நெருங்கி வர முடியவில்லை . இந்த தடுப்பு விசைக்கு என்ன காரணம் என்று சுற்றி பார்க்க தாடாளன் கைகாப்பு ஒளிர்ந்ததையும் அது வெளிப்படுத்தும் விசை அவன் மட்டுமல்லாமல் சுற்றியிருப்பவற்றின் மீதும் தனது தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தவள்


"நாராயணன் அவன் கைகாப்ப முதல்ல கவர் பண்ணுங்க அப்புறம் தான் நாம அவன் பக்கத்தில் போகலாம்."

என்றதும் நாராயணன் தன் மேற்சட்டையை கழற்றி அதன் மீது வீச அது அந்த தடுப்பு விசையை தாண்டி போய் அந்த காம்பின் மீது விழுந்த அந்த கணம் இவர்களுக்கு போதுமாயிருக்க அவனை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தவர்கள் அறியவில்லை அவன் மீளாக்கம் துவங்கி விட்டது என்பதையும் இனி யார் தடுத்தும் பயன் இல்லை என்றும் அறியாமல் அவனை இழுத்து வர அவனோ முடியாது என்பதும் திமிறி இவன் கைகாப்பை கழற்றி விட்டாள் தன்யா.

அது அவனிடம் இருந்து கழற்றவும் அதில் ஒளிர்வு நின்றுவிட்டது. ஆனால் தாடாளன் அதில் அதிர்ந்து திமிறத் தொடங்க இப்போது தன்யா தன் கையில் இருந்த மருத்துவ உபகரண பெட்டியை திறந்து அதில் இருந்த ஊசியில் இருந்த மருந்தைஅவனுக்குள் செலுத்த சற்றுக்கெல்லாம் அவன் மயங்கிஅடங்கினான். குகை வாசலில் யாரைத் தேட என்று யோசித்த நாராயணன்.

"இவன் தெளியற வரை இங்கதான் இருக்கனும் போல இவன ரூம்க்கு தூக்கிட்டு போறது எப்படி?"

அதைக் கேட்ட தன்யா

"ஒன் செகன்ட் வெயிட் பண்ணுங்க."

என்று விட்டு வெளியே வந்து சற்று தள்ளி ஒடி வந்து பார்த்தாள் . அவள் வந்த இலங்குஊர்தி (ஹெலிகாப்டர்)

அங்கே நின்று கொண்டு இருந்தது.


அதில் இருந்த அவளது உதவியாளர் இவள் அரக்கபரக்க ஓடிவரக் கண்டதும்.


இயக்க ஆயத்தமான ஓட்டுநரிடம்

"ஸ்டாப் ஸ்டாப்."

என்று விட்டு இறங்கி வந்து

"மேடம் என்றான்."

"கம் வித் மீ "

என்று விட்டு முன்னே செல்ல ஏன் எதற்கு என்று எந்த கேள்வியும் கேட்காமல் என்பதை விட கேட்க முடியாது என்றுவிடல் தான் சரி ஏனெனில் இவன் கேள்வி கேட்டு அதற்கு அவள் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும் முதலில் செவிமடுக்க வேண்டுமே. அதற்கே அவள் அங்கு இல்லை.


அவளைத் பின் தொடர்ந்து வந்த அவள் உதவியாளர் இருவரும் நாராயணன் எல்லாரும் சேர்ந்து தாடாளனை

முகாமிற்கு கொண்டு வந்து சேர்ந்தனர்.


நாராயணன் தனது முகாமிற்கு சென்று விட்டார். அப்போது உதவியாளர்

"மேடம் வீ கேன் லீவ்"

என் தனக்கு அனுமதியை வேண்ட

"ஒன் செகன்ட்"என்றவள்

அவன் இரத்ததை சேகரித்தாள்.தன்யாவிற்கு அவன்நடத்தையில் தெரிந்த மாற்றத்தில் அவள் அவனின் இரத்த மாதிரியை எடுத்தவள்.


தனது உதவியாளனிடம் கொடுத்து

"தேவ் இந்த சாம்பிள நம்ம லேப் டெஸ்ட் பண்ணி எனக்கு உடனே ரிசல்ட் வேணும். ஐம் வெயிட்டிங்."

என்றவள் கூறியவிதத்தில் என்ன சோதனைகள் எங்கே எவ்வளவு துரிதமாக செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டவராக

"ஓகே மேடம்."

அவள் வந்த அந்த ஊர்தியில் கிளம்பி சென்று விட தன்யா தாடாளனையும் தன் கையில் இருந்த அந்த அவனுடைய காம்பையும் யோசனையாக பார்த்தபடி அமர்ந்திருந்தவள்

அசாத்தியமான உயரத்தில் அமைதியாக துயில் கொண்டிருந்த அவன் அருகில் வந்தவள்

"யாரு மேன் நீ என்னோட ஆராய்ச்சியோட ஆன்சர் நீயோன்னு தோனுது பார்க்கலாம் அதுவரைக்கும் இது என் கிட்ட இருக்கட்டும் என்று திரும்ப .

நாராயணன் அவருடைய உடைகளுடன் இங்கு வந்தவர் "நீங்கள் அங்கே தங்கி கொள்ளுங்கள் .நாங்கள் இங்கே இருந்து கொள்கிறோம்."

"ஓ கே"

என ஒற்றை தோள்களின் குலுக்கலுடன் வெளியேறப் போக

"ஒரு நிமிஷம் அந்த காப்பு"

"அது என் கிட்ட இருக்கட்டும் அதான் அவனுக்கு நல்லது."

"இல்லை நீங்க சொல்றது சரிதான் ஆனா அந்த இடத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது."

"ஓ அப்ப அது க்ளோவானது (glowing)?"

"அது ஒரு கோஇன்சிடன்ஸா கூட இருக்கலாம்.இல்ல அந்த இடத்தில் அதுல மட்டும் அதிக ஒளிபட்டு இருக்கலாம். எல்லாத்துக்கும் மேல இது அவனோடது ."

"அதுக்கு "

என்றவள் அறைந்து விட ஆசை வந்தது.இருந்தாலும்

"அடுத்தவங்க பொருள் அவங்க அனுமதி இல்லாமல் எடுக்கறது தவறு."

என்றவரை அலட்சியமாக பார்த்தவள்

"அத என் பிரச்சினை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க. இன்னும் இன்னிக்கு ரிப்போர்ட் வரல கோ அன்ட் ப்ரிபர் இட் "

என்று விட்டு சென்று விட்டாள்.

அதில் வாடிப் போனவர் தனது வேலையை செய்ய போனார்.


பிறகு தான் அவன் கண் விழித்ததது எல்லாம். இப்போது எல்லாம் நினைவுக்கு வந்தது. மின் அஞ்சல் கூறிய செய்தியில் விழுந்தடித்துக் கொண்டு வெளியே வந்து பார்க்க முற்பகல் பொழுது துவங்கியிருந்தது தாடாளன் நாராயணன் இருவரும் அங்கு இல்லை என்பதும் அவர்கள் குகைக்குள் சென்று நேரம் ஆகியிருக்கும் என்று புரிய


குகையை நோக்கி விரைந்தாள்.காலம் கடந்திருந்தது அவளுக்கு.


ஆனால் அங்கு காலம் நிலைத்து விட்டது தாடாளனுக்கு .


தாடாளனுக்கு உறக்கம் வரவில்லை அன்று காலை நடந்த நடந்த நிகழ்ச்சிகள் அவனை கிளர்ச்சி நிலையில் வைத்திருக்க திருமண விருந்தில் இருந்து சீக்கிரமாகவே கிளம்பியவன் வரும் வழியில் தனது தகவலை சேர்ப்பித்துவிட்டு தனது முகாமிற்கு வந்தவன் தனது இடத்தில் படுத்து கொண்டான்.

ஆனால் தூக்கம் தான் வருவதாக இல்லை. சற்று நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதில் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டவன் கதவை திறந்து வெளியே வந்து பார்க்க முழுநிலவு தன் கதிர்களை வீச வீசிய கதிர்களை படிய வைத்தது போல பனி பொழிந்து இருக்க பார்த்துக் கொண்டு இருந்தவன் கண்கள்

தன்யாவின் கூடாரத்தை பார்க்க அந்த முறை தனது படையை அவள் முகாம் வரை நீட்டிப்பு செய்தவன் அவள்

முகாமிற்கு முன் வந்து நின்று ஒரு முறை அவன் விழிகள் சுற்றுப்புறத்தை அலசி விட்டு மீண்டும் அந்த கதவில் வந்து நின்றது.


தன் கையில் இருந்த திறப்பை வைத்து அதை திறந்து உள்ளே நுழைந்தான். இது ஏற்கனவே நாராயணன் உபயோகித்த முகாம் என்பதால் அதன் கிளப்பில் ஒன்று அவன் வசம் இருந்தது.


உள்ளே நுழைந்தவுடன் கதவை பூட்டியவன் அந்த இடத்தை சோதிக்க துவங்கினான். ஆனால் அங்கு அவன கண்களுக்கு எதுவும் வித்தியாசமாக புலப்படவில்லை ஆனால் அவள் அப்படியில்லை என்று அவனுக்கு தெரியுமே இந்த ஆராய்ச்சி அதை அவள் இங்கு நடத்துவது எல்லாம் தெரிந்த ரகசியம் ஆனால் அவளது இன்றைய தீடீர் விஜயம் அது அவனை உத்திரவு அதிலும் இன்றைய அவன் நிலை அவனுக்கும் இதற்கும் ஏதோ என்பதை விட தன் இடம் என்பதாகத்தான் உணர்ந்தான்.அது அவனை இவள


நீண்ட காலம் கழித்து தான் வீட்டிற்கு வந்ததும் வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் நின்று பார்த்துக் அதன் சார் நிகழ்வை நினைவுபடுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்த அவன் கிராம் போனில் வைக்க இசைத் தட்டு போல சுழன்று இசைக்க காத்திருக்க பட் என்று இணைக்கும் முள்ளை உடைத்து தட்டை பிரித்து எடுத்ததுபோல் அவனை பிடுங்கி எறிந்து காப்பை பறித்து அனைத்தையும் கலைத்து விட்டிருந்தனர்.


அத்தனையும் செய்துவிட்டு அவன் காப்பை தேடும் போது அவள் நட்பை நாடியது நினைவில் வர இப்போதும்கூட

ஆத்திரம் வந்தது.அதில்


"ஒன்றுமே அறியாதவள் போல் என் நலம் மட்டும் நாடுபவள் போன்று என்ன ஒரு நடிப்பு.அவளை ஒற்றை அறையுடன் விட்டது தவறு. பெண் …

இல்லை என்றால்…"


என்று தூய தமிழில் பேசியபடி தேடியவனுக்கு அது தெரியவில்லை தனக்குள் நிகழத் தொடங்கியிருந்தது என்னவென்று.அப்போது அவளுடைய அலைபேசியின் ஒளிர்வு அதன் இருப்பை தெரிவிக்க


அதை எடுத்து பார்த்தவன் அதை என்னவென உடனே பார்க்க ஆவல் கொண்டு சில நொடிகளில் அதைச் செய்தும் இருந்தான். அது எப்படி முடியும் என்று ஒருபோதும் அவன் ஆலோசனை செய்தது இல்லை அது அவனுக்கு கைவரப்பெற்ற கலை .மிககடினமான கடவுச்சொல்லாக இருந்தாலும் அதனை மிகவும் எளிதாக உடைத்து உள்ளே தகவல்களை எடுப்பது அதனை உளவு பார்ப்பது அவனுக்கு கடினம் அல்ல ஆனால் இப்போது அதனை மிகச் சில நொடிகளில் செய்ததிருந்தான் அதனை எப்படி என்று கவனிக்கவில்லை.


அதில் இருந்த அவனுடைய இரத்த மாதிரி குறித்த அறிக்கை என்பது புரிய அவள் இரத்தம் எடுத்த அந்த புள்ளியை அழுத்தி கொடுத்தவனுக்கு தன் அனுமதி இன்றி தன் குருதியை எடுத்தவள் மீது இன்னும் சினம் பெருகியது.


ஆனால் இவள் இந்த சோதனையை தன் மீது செய்தது ஏன் இத்தனை அவசரம் மற்றும் அவசியம் ஏன் அதன் முடிவிற்கு என்று எண்ணியவன்.


மேலும் தனது அறிக்கையை படிக்கும் முன் ஏதோ அரவம் கேட்க என்னவென்று இராணுவ வீரர்கள் சிலர் நடமாடுவது

தெரிய

ஒற்றுக்கு ஒற்றுவைத்து உண்மையை அறிந்து கொள்ள முயலும் சிவசங்கரனை நினைத்து சிரிப்பு வந்தது. இருந்தாலும் அந்த அறிக்கையை படித்தவன் அதன் முடிவுகள் கூறுவதை அறிந்து திகைத்து போனான்.


சில நொடிகள் தான் பிறகு அந்த அறிக்கையை தனது சாதனத்திற்கு மாற்றிக் கொண்டவன் அதனை மற்றவர்கள் எளிதில் பார்க்க முடியாது செய்து விட்டு வெளியே வர வீரர்கள் அவனிடம் விசாரிக்க வந்து நின்றனர்.


"நீங்கள்"

"தாடாளன் அஸிஸ்டன்ட் ஆர்கியாலஜிஸ்ட்"

"இது தற்போது தன்யா அவர்கள் இங்கு தங்கி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "

என்றதில் இவர்கள் பாதுகாப்பு கருதி வந்துள்ளனர் என்பது புரிய நின்றவனிடம்

"அவர்கள் அறையில் உங்களுக்கு என்ன வேலை?"

என மேலும் தகவல் கேட்க

"நான் இப்ப தான் கீழ இன்னிக்கு புராஜெக்ட் சயிட் பண்ணிட்டு வந்தேன். அதோட ஒரு காப்பி தன்யாவுக்கு தரனும் அத கொண்டு வந்து வைக்க வந்தேன்.அதுவும் அவங்க அனுமதியோட"

"இது அவங்க ரூம் கீ அவங்க கல்யாண பங்ஷன்ல இருக்காங்க அதனால் தான் என்ன சொன்னாங்க.உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அவங்கள கேளுங்க இல்ல உங்க ஆபீஸ் க்கு போன் பண்ணி கேளுங்க"

என்று அசராமல் கூறியவனிடம் இன்னும் ஏதோ கேட்க வாய் திறக்கும் முன் வழக்கமாக அங்கு காவலுக்கு வரும் ஒருவர் வந்து தாடாளன்ப் பற்றி கூற

"அவனைச் செல்ல அனுமதித்தனர்.


அவர்களிடம் இருந்து தன் அறைக்கு வந்தவன் மீண்டும் மீண்டும் அந்த அறிக்கையை படித்தவன் மனதில் பல்வேறு எண்ணங்கள்

'நான் மனித இனம் இல்லையா எனில் நான் உண்மையில் டென்னிசோவனா?'

'இது உண்மையா இல்லை ஏதேனும் கனவா'

ஆனால் நான் என் உணர்வுகள் எனக்குள் வந்து போன காட்சிள் பொய்யில்லை

என யோசிக்க யோசிக்க பஐத்தஇம் பிடிக்கும் போல இருந்தது இதற்கு விடை அங்கு தான் கிடைக்கும் என்று புரிய பின்னர் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை எழுந்தவன் எதைப் பற்றியும் யோசிக்கலாம் நேராக குகைக்குள் சென்று விட்டான்.


உள்ளே நுழைந்தவுடன் மெல்ல அவனை அவன் திருப்பி மீட்டுக் கொள்ள ஆரம்பித்தான் குகையின் முன் பகுதியை தாண்டி உள்ளே போக போக ஒரு கட்டத்துக்கு மேல் அவன் ஏதோ நினைவுகளினால் இழுத்து செல்லப் பட்டான். குகை அந்த ஒரு பாறை முன் நின்றவன் கையைபபார்க்க அந்த காப்பு ஒளிர்ந்து கொண்டிருந்தது சந்திரனின் ஒளியை ஈர்த்து ஒளிர்ந்த அதனைக் கண்ட தன் கையை அங்கு வெளியே நீட்டிக் கொண்டு இருந்த பாறையின் மீது வைக்க மறுகணம் அந்த பாறை மறைந்து வழியாக சென்றது அவன் ஊடுருவ ஏதுவாக நின்றது.தண்ணீர் திரைப்பட மாறியிருந் பாறை திரையின் உள் நுழையவும் பின் புறம் மீண்டும் பாறையென மாறியிருக்க உள்ளே அவன் முன்னேவேறு உலகம் இருந்தது
 
Status
Not open for further replies.
Top