T23
Moderator
அத்தியாயம் 4
பாலியின் சர்வதேச விமான நிலையத்தில் அமர்ந்திருந்தான் தாடாளன். அவன் மற்றும் அனைவரையும் அழைத்துச் சென்றது போல் மீண்டும் திருப்பி கொண்டு வந்து விட்டிருந்தனர் தன்யாவின் ஆட்கள். ஆனால் அதன் பின்னர் அவன் அங்கு தங்க பிரியம் கொள்ளவில்லை.உடனேயே கிளம்பியிருந்தான்.
விமான நிலையம் வந்திருந்த அவனுக்கு இன்னும் நேரம் இருந்தது விமானத்திற்கு. வயிறு எனக்கும் ஏதாவது ஈயலாம் என்றது எனவே விமான நிலையத்தின் உள்ளேயே சிற்றுண்டி ஒன்றை முடித்தவன் ஒரு கையில் காபி மறு கையில் ஒரு பத்திரிக்கையுடன் அமர்ந்து கொண்டான். அப்போது அவனுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டார் அவர் .
"ஆர் யூ இன்டியன்"
என்றதும் அவன் திரும்பி
'ஆமான்னா என்ன பண்ண போறீங்க இல்லைன்னா என்ன செய்ய போறீங்க?'
என்று மனக் கேள்வியுடன் . ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் தன் பத்திரிக்கையில் மூழ்கி விட்டான்.அவர் தனது தோள்களை குலுக்கி விட்டு எழுந்து சென்று தனக்கு ஒரு காப்பி வாங்கிக் கொண்டு வந்து பார்க்கும்போது
அவன் அருகில் வேறு சிலர் இருக்க தள்ளி அமர்ந்து கொண்டார்.
அது ஒரு கணவன் மனைவி இருவரும் அவரது வயதில் இருக்க அவர்களிடம்
"ஆர் யூ இண்டியன் " (Are you Indian?)
என்ற கேள்விக்கு
"எஸ் ?"
என்றான் கணவன்
"நீங்க தமிழ்நாடா?"
என்று அவர்கள் தோற்றத்தில் அவர்கள் உரையாடலை வைத்தும் அவர் கேட்க
"ஆமா நீங்க ?"
என்று அவர்கள் பதிலுக்கு கேட்க
"நானும் தமிழ் நாடு தான். என் பெயர் சிவசங்கரன் இங்க நிறைய இந்துக் கோயில்கள் இருக்கு அதான் பார்க்கலாம்ன்னு வந்தேன்…."
"ஓ அப்படியா நான் தியாகராஜன் இது என் மனைவி லலிதா
நாங்களும் இந்த கோவில்கள் பத்தி கேள்விபட்டு தான் வந்தோம் என் பையன் போன தடவை இங்க வந்துட்டு எங்க இரண்டு பேருக்கும் டிக்கட் போட்டு அனுப்பி வைச்சான்…."
என்று உரையாடி கொண்டிருந்தனர்.அதில் தாடாளனுக்கு தான் எரிச்சல் . எவ்வளவு நேரம் பேசுவாங்க?. எப்போதடா தனக்கான அறிவிப்பு வரும்? என்று அமர்ந்திருந்தான் மேலும் அவனை அந்த விரல் படம் வேறு ஏதோ ஒரு வகையில் தூண்டிக் அரித்ததுக் கொண்டிருந்து .அதற்காக வேணும் இங்கிருந்து ஓடி விட வேண்டும் என்று தோன்றியது.. விதியே என பத்திரிகையை விரித்தவாறு இருந்தான் . அவர்களுக்கு இதைப் பற்றி என்ன தெரியும் இவனைச் கண்டு கொள்ளவே இல்லை அவர்கள் போக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கான அறிவிப்பு வர முதல் ஆளாக எழுந்து கொண்டவன் தனது பத்திரிக்கையை கோபத்தில் இருக்கையில் விசிறி விட்டு சென்று விட்டான். அந்த தம்பதிகள் பேச்சு சுவராசியம் மற்றும் தங்கள் பொருட்களை சேகரித்த அவர்கள் இதைக் கவனிக்கவில்லை. ஆனால் சிவசங்கரன் அவனைக் கவனித்துக் கொண்டு தானே இருந்தார். அதில் இருந்த அவருக்கான சமிக்ஞையையும். அவனைத் தொடர்ந்து அந்த தம்பதிகள் பிறகு அவரும் தங்களது பொருட்களுடன் உள்ளே செல்ல தொடர்ந்து அவரும் உள்ளே நுழைந்தார் இப்போது அவன் வீசியிருந்த அந்தப் பத்திரிக்கை அங்கு இல்லை அது அவர் கையில் இல்லை பையில் இருந்தது.
…….
" அது அவ்வளவு எளிது கிடையாது நீங்க கொடுத்த அந்த சுண்டு விரல் மாதிரி அதுமனிதனும் டென்னிசோவன் இரண்டும் கலந்த குழந்தை. அதில் இருந்து டென்னிசோவன் ஜீன்ஸ் மட்டும் பிரித்து எடுத்தோம். அது முழுமையாக இல்லை. எனவே மீதியை இங்க உயிரோட இருக்கற மாதிரிகளிடம் இருந்து எடுத்து அதற்கு பொருத்தமா அதே ஜீன் அளவு அதிகம் இருக்க பெண்களா செலக்ட் பண்ணி அவங்க கர்ப்பைல அந்த கருவை செலுத்தி வளர்க்க வேண்டும். "
என்றவள் மேலும்
"அதோட நுண்ணறிவு மனிதனை விட குறைவாக வேண்டும் அதாவது நீங்க சொல்லறத செய்யனும் தவிர யோசிக்க கூடாது ஆனா நல்ல உயரத்தில் எந்த குறைவும் இல்லாமல் வேணும்ன்னு கேட்கிறீங்க. இது சாதாரண ரோபோவோ மிஷின்கன்னோ இல்லை உயிரியல் ஆயுதம். அப்படி கூட இல்லை .ஆயுதப் படை அப்ப கொஞ்சம் பொறுமை முக்கியம். இப்படி அவசரப்படறது.நல்லது இல்லை."
என்றது அவர்களுக்கு எச்சரிக்கை போல் இருந்தது அது அவர்களுக்கு ஒருவித எரிச்சல் தர அமர்ந்திருந்தார்கள்.
ஆனால் அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை ஆகையால் தான் விளக்கிக் கொண்டு இருக்கிறாள் இல்லையெனில் எப்போதோ தூக்கி எறிந்து இருப்பாள்.
"இதோட உயரம் அது மனிதப்பெண்களோட கர்ப்பையை விடமிக அதிகம் அதனால அந்த குழந்தையை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் விட்டுவைக்க முடியாது . அதனால் அது முதிர்ச்சி அடையாத குழந்தையா பிறக்குது. அது மாதிரி ஒரு மனித குழந்தையை உயிரோடு கொண்டு பிழைக்க வைக்கறதே கஷ்டம் அப்படி இருக்குறப்ப இது…"
என்று தன்யா தன் முன் அமர்ந்திருந்த அந்த அயல் தேசத்தின் ராணுவ அதிகாரிகளுக்கு. இறந்து போன அந்த குழந்தைக்கான காரணத்தை அவள் விளக்கிக்கொண்டிருந்தாள். அவர்களோ
"வீ டோன் வான்ட் எக்பிளனேஷன்?"
என்ற அவர்களில் அலட்சியம் தெரிய
"எங்களுக்கு இப்பொழுதே வேண்டும். இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும்"
என அச்சுருத்த
"தென் டு அஸ் யூ விஷ்(Then do as you wish)
என்ற இவளில் கோபம்
"இதற்கான விளைவுகள் மோசமாக இருக்கும்." (you have to face the Consequences)
என்றவர்களின் மிரட்டல் தொனியில்
'அது எப்படி நீ சொல்ல முடியும் நாங்கள் பணம் கொடுத்து இருக்கிறோம் எனும் எச்சரிக்கை '
" இஸ் இட்…."
என்றவள் அமர்ந்த வாக்கில் குனிந்து முகத்தை அவர்கள் முன் கொணர்ந்து
" உன்னால என்ன முயுமோ செய்"(do if you dare?)
என்றவளின் துணிவில் அவர்களுக்கு புரிந்தது இது…. இவள் …இரண்டும் எளிதல்ல என்பது. இப்போது அவர்களுக்கு என்ன செய்ய என்று புரியவில்லை.
அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வர அதில் அவர்கள் எழுந்து நின்றுவிட்டனர் விரைப்புடன் எதிர் முனை என்ன சொன்னதோ அவர்கள் முகம் வெளுத்து போனது. அலைபேசியை அவளிடம் தர அவர்களை மிக அலட்சியமாக பார்த்துவிட்டு வாங்கியவள்.
விளக்கத்தை அளித்தாள். அதைக் கேட்டுக் கொண்ட மறுமுனை மீண்டும் ஏதோ கேட்க தன்யா
"ஐ சேர்ச் பார் தி புல் ஸ்கெலிட்டன் ஆப் தட் கேர்ல்"
என்றதில் எதிர் முனை மீண்டும் ஏதோ கேட்க
"சிக்கிரமே."
என்றவள் அலைபேசியை அவர்களிடம் தர அவர்களிடம் அங்கிருந்து என்ன கூறப்பட்டதோ அதில் இவளை ஒரு பயப் பார்வை பார்த்தவர்கள்
"மன்னித்துக் கொள்ளுங்கள்"(sorry)
என்றதும்
" யாருகிட்ட… தன்யா டா ……வாங்குறவனோட எடுபுடி உனக்கே இவ்வளவு இருக்கும்போது செய்யற எனக்கு எவ்வளவு இருக்கும்."
என்றவளிடம்
"மன்னித்துக் கொள்ளுங்கள் "(our apologies)
என மீண்டும் உரைத்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். சிறு புன்னகையுடன் தனது குளிர் கண்ணாடியை அணிந்தபடி கையில் அலைபேசியுடன் அறையில் இருந்து வெளியேறியவள் நிச்சயம் ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட பொற்பாத்திரத்தில் சேகரிக்கப்பட்ட ஆலகாலம் தான் . தனது வாகனத்தில் ஏறியவள் அதை இயக்கியபடி அலைபேசி வழி யாரையோ அழைத்தாள்.
"வாட் இஸ் கோயிங் ஆன் தேர். எனி இம்ப்ரூவ் மென்ட்ஸ்"
என்றவளுக்கு என்ன பதில் வந்ததோ கேட்டுக் கொண்டவள்
"ஐ வில் பி தேர் சூன் (I will be there Soon )"
என்று விட்டு தனது அலை பேசியை வைத்து விட்டு சாலையில் கவனம் கொண்டாள்.
…… ………. ……….
சிவசங்கரன் தனது கணிணி முன் அமர்ந்து இருந்தார். அதில் விரிந்திருந்த காட்சிகளின் தரவுகள் கூறிய செய்தியில் திகைத்து போய் இருந்தார். தாடாளன் கையில் இருந்த பத்திரிக்கை அந்த மேசையில் கிடந்தது. கூடவே கட்டுப்படுத்தப்பட்ட அமைதியுடன் தாடாளானும் அவர் முன் இருந்தான். அதன் மொழி இருவருக்கும் தெரியும்.
"சார் "
"இத நாம உடனே நிறுத்தனும்."
"எப்படி ?"
"இதோ இந்த ஆதாரம் இருக்கே. அத அந்த நாட்டு எம்பசி ல கொடுத்தா போதும் ல ?"
"ஏன் நாம செய்யனும் ?"
"சார்…"
"அவங்களுக்கு தெரியாதா நாம ஏன் சொல்லனும்.?"
"சார் அப்ப?"
"வேடிக்கை பார்க்கனும் கூப்பிட்டாதான் போகனும் இது அயல் நாட்டு விவகாரம் பல முனை க் கூர் கொண்ட கத்தி எப்படி வேண்டும் என்றாலும் திரும்பும்"
இது போன்ற உரையாடல்கள் நடந்து தான் அது தெரிய வேண்டும் என்று இல்லை . அப்படி நடந்தால் அவர்களில் ஒருவன் புத்திசுவாதீனம் இல்லாதவன் என்று உறுதிப்படுத்தப்பட்டுவிடும். ஒற்றறிதல் அதிகாரத்தை இருவரும் தான் படித்து பயிற்சி பெற்றுள்ளார்களே.
தாடாளனுக்கு தன்னை அசைத்து பார்க்கும் அந்த எண்ணத்த சோதிக்க அவனை திடப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. ஓய்வில்லாத தனது மனம் உடல் தான் காரணம் என்றும் தோன்றி விட இதில் தொடர விரும்பவில்லை. எனவே
"சாரி சர் ஐ வான்ட் ப்ரேக். பீளீஸ் "(Sorry Sir I want break pls)
என்றவனை நிறுத்த வில்லை. ஆனால் தன்யாவை கண்காணிப்பில் வைத்திருந்தவர் நாராயணன் அவளைச் சந்திக்க முயலவுமே இவர் அவரையும் வளையத்தில் கொண்டு வந்து விட்டார். ஆனால் அவள் உடனே ஏற்பாடு செய்யவும் தான் மீண்டும் தாடாளனை உடனே அழைக்க வேண்டியதாயிற்று.