ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாமியார் மருமகள் உறவுமுறை பற்றி உங்கள் கருத்து என்ன?

Vedhasam

Member
ஒரு மாமியார் தனக்கு வரும் மருமகள்ளை மகளே லாஹா பார்க்கவேண்டும். மகள் கிட்ட சண்டை போட்டாலும் அடுத்த நிஷாம் நம்ம பொண்ணு தானே பேசிடுவாங்க பட் மருமகளும் கிட்ட பேச அவங்க மாமியார் பதவி இடம் தருவதில்லை ... எல்லாருக்கும் வீட்டிலும் மாமியார் மாமியார் தான் மருமகள் மருமகள் தான் எத்தனை மாற்றம் வந்தாலும் மாறாத மாமியார்?மருமகள் ?சண்டை ??spelling mistake iruntha மன்னித்துவிடவும் sisters ?
 
R

Rajani novels

Guest
மாமியார் ஒரு ஸ்லோவ் பாய்சன் மாதிரி?.. ஆரம்பத்திலேயே அலர்ட் ஆகலைன்னா என் கணவன்னு சொல்றதுக்கு பதிலா?.. என் மாமியாரின் மகன்னு சொல்ல வேண்டியது வரும்?
 

Rukmani

New member
நானும் ஒரு மாமியார்.எனக்கு ரெண்டு மருமகள் இருக்காங்க.என் மகனுக்கு கல்யாணம் ஆனதும் அப்பாடா பொறுப்பு நீங்கிச்சுன்னு சந்தோஷப்பட்டேன்.அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவது இல்லை.
இப்படி இருந்தால் மருமகள்கள் ஹாப்பியா இருப்பாங்க.இது தான் உண்மை.அதே சமயம் ஒரு சிலர் மாமியார் தோரணை காமிப்பாங்க .அது தவறு தான்.அதற்காக மாமியாரை slow poison அப்படின்னு சொல்லாதீங்க.ஒரு குழந்தையை சுமந்து ,பெற்று.வளர்த்து,அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டி,பிள்ளைக்கு ஏற்ற பெண் பார்த்து திருமணம் செஞ்சு வைக்கிறோம்.கல்யாணம் செஞ்சு வைத்ததும் எங்க பிள்ளை இல்லன்னு ஆகிருமா.நான் வேறொரு தளத்தில் இந்த தலைப்பில் வந்த வாதததில் ,ஒரு மருமகள் பிள்ளையை வளர்ப்பது ஒரு தாயின் கடமை என்று சொன்னதை பார்த்தேன்.அம்மாக்கு கடமை என்று சொல்வது போல் பிள்ளைக்கும் தாயை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது.இதை யாரும் மறுக்க முடியாது.ஒரு அம்மா வெளிநாட்டில் இருக்கும் மகன் வீட்டுக்கு சென்றார்.மகன் கூட காரில் முன் சீட்டில் உட்கார்ந்து விட்டார்.மருமகள் பயங்கரமாக சண்டை போட்டாராம்..தினம் outing போவதில்லை.வாரத்தில் இரண்டு நாள் போகிறீர்கள்.அந்த அம்மா ஆறு மாதம் கழித்து இந்தியா திரும்ப போகிறார்.இருக்கும் கொஞ்ச நாள் விட்டு குடுங்கம்மா.பசங்க பாவம் இருதலைகொள்ளி எறும்பா தவிச்சி போவாங்க.பாவம் பிள்ளைகள்.பெற்றோர்களேவரதட்சணை வாங்காதீர்கள் .உங்கள் பிள்ளையை பண்டமாற்று வியாபாரமாக நினைத்து விற்காதீர்கள்.இதுவே நீங்கள் உங்களுக்கு வைத்து கொள்ளும் மிக.பெரும் ஆப்பு.
மருமகளை மகளாக நடத்தலாம்..அப்போ அந்த மகள் சொல்வதையும் தாங்கி கொள்ளுங்கள்.எப்பவும் மகன் குடும்பத்துடன் ஒரு சில அடிகள் தள்ளியே நில்லுங்கள்.மகனின் நிம்மதிக்கான இதை செய்வதu நல்லது
 

Iniya

Member
Oruku Elam nallathu ninaibanga.... Ana marimaga nu varum pothu.... ??? At the time namma Amma mathiri thanenu nenaibanga ....Ana athe nenaikka mattum than seivanga? Seiyalmurai padutharathu????
 

Shimoni

Well-known member
நான் என்னோட மாமியாரை அம்மான்னு தான் கூப்பிட்டேன் கூப்பிடுறேன் இனியும் கூப்பிடுவேன். என்னோட அம்மா எப்படியோ அப்படிதான் அவங்களையும் நான்ம்பார்க்கிறேன். இதுவரை எங்களுக்குள்ள சண்டையே வந்தது கிடையாது. அதுக்கு காரணமும் தெரியாது. என் கணவர் அவங்களுக்கு ஏதும் செய்யும் போதுகூட நான் கேட்டதில்லை. ஒன்று மட்டும் தான் நினைப்பேன், அவங்களுக்கு அப்புறம் தான் அவர் எனக்கு கண்வன் ஆனார். இன்றைக்கு நாங்க நடக்குறத பார்த்து தான் நாளைக்கு என் பிள்ளைகளும் எங்களுக்கு செய்வாங்க. பிள்ளைகளுக்கு முன்மாதிரியா இருக்குறது எப்பவும் முக்கியம். அதுவும் குடும்ப சுழல் ரொம்ப ரொம்ப முக்கியம்.

மாமியார் மருமகளை மகளாவும். மருமகள் மாமியாரை அம்மாவாவும் பார்த்தாலே போதும் பிரச்சனைக்கு அங்கே எந்த இடமும் இருக்காது. இது என்னோட கருத்து.
 
Top