மழை 25
பரீட்சையை எழுதி விட்டு வெளியே வந்ததுமே அனைவர்க்கும் அப்படி ஒரு குதூகலம்... அதே சமயம் நண்பர்களை விட்டு பிரிய போகும் கஷ்டமும் அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது...
ரியாவோ, "நம்ம இடத்துக்கு வா பாரதி... ஜாலியா பேசிட்டு இருக்கலாம்" என்று சொல்ல, அவளும் மேடிட்ட வயிற்றை தூக்கிக் கொண்டே அவர்களுடன் பேசியபடி நடந்துச் சென்றாள்.
ரியாவும், நிஷாவும்,பாரதியும் அங்கேச் சென்றது தான் தாமதம் வாங்கி வைத்து இருந்த கலர் பவுடரை தூக்கி அவர்கள் மீது வீசி இருந்தார்கள் தினேஷ் மற்றும் ராம்...
"டேய் நில்லுங்கடா" என்று சொல்லிக் கொண்டே நிஷா மற்றும் ரியா அவர்களை துரத்த, "விடாதீங்கடி" என்று சொன்ன பாரதி அவர்களிடம் கலர் பொடிகளை நீட்டி இருக்க, அதனை வாங்கிக் கொண்டே ஓடி திரிந்தார்கள்...
பாரதி மட்டும் கர்ப்பமாக இல்லை என்றால் நடந்து இருப்பதே வேறு...
வேறு வழி இல்லாமல் நடப்பதை கை தட்டி சிரித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தவளின் உடைகள் மற்றும் கைகால்கள் என்று எல்லாமே கலர் தான்...
இதே சமயம், எக்ஸாம் ஹால் வாசலில் பாரதியை தேடிய வசிஷ்டனோ, அவள் வழமையாக இருக்கும் இடத்துக்கு தேடிச் சென்றான்...
அங்கே நடக்கும் கலவரங்களை பார்த்துக் கொண்டே வந்த வசிஷ்டன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி பாரதிக்கு பின்னால் நின்று இருக்க, சிரித்தபடி அப்படியே பின்னால் சென்ற பாரதியோ மோதி நின்றது என்னவோ அவன் மீது தான்...
சட்டென திரும்பி பார்த்தாள்.
அவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்...
அவனைக் கண்டதுமே விளையாடிக் கொண்டு இருந்த அவளது நண்பர்கள் நால்வரும் அப்படியே நின்று விட்டார்கள்...
அனைவரின் முகத்திலும் கலர் பூசப்பட்டு இருக்க, எல்லோரையும் நோட்டமிட்ட அவன் கண்கள் இறுதியாக மீண்டும் பாரதியில் நிலைத்தது...
அவள் முகத்தில் பயம், பதட்டம் எல்லாம் இருக்கவே இல்லை... இயல்பாக நின்று சிரித்தபடி ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினாள்...
அவளை முறைத்துப் பார்த்தவன், "ஸ்கூல் பசங்கன்னு நினைப்பா?" என்று அதட்டலாக கேட்க, அவளோ சட்டென்று கையை நீட்டி அவன் கன்னத்தை தடவி விட, "ஏய்" என்றபடி பின்னால் சென்றவன் கன்னத்தை அழுந்த தேய்த்தான்...
கலர் அப்படியே தான் இருந்தது...
"என்ன பண்ணி இருக்க பாரதி" என்று கடுப்பாக கேட்டான்...
"சஸ்பெண்ட் பண்ண போறீங்களா சார்?" என்று கண் சிமிட்டி கேட்டாள் அவள்...
இருவரையும் வாயில் கையை வைத்தபடி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அவள் நண்பர்கள்...
ரியாவோ, "அவளுக்கு கொஞ்சமும் பயம் இல்ல பார்த்தியா?" என்று கேட்க, தினேஷோ, "புருஷன் தானே டி" என்றான்...
வசிஷ்டனோ அவள் நண்பர்களை பார்த்து விட்டு அவளை பார்த்தவன், "என்னடி லாஸ்ட் டேன்னு அவ்ளோ தைரியமா?" என்று கேட்டான்.
அவளோ, "ம்ம், அப்படியும் வச்சுக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே அவனை நெருங்க, அவன் விழிகள் விரிய அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது...
இங்கு வைத்து ஏதும் செய்து விடுவாளோ என்கின்ற பயம் அவனுக்கு...
செய்ய கூடியவள் தானே அவள்...
சட்டென விலகி பின்னால் சென்றவன், "கம் டு மை ரூம்" என்று சொல்லிக் கொண்டே விறு விறுவென செல்ல, "ஓகே சார்" என்று நமட்டு சிரிப்புடன் சொன்னவள் பின்னால் தனது நண்பர்களிடம் திரும்பி, "உங்க முன்னாடி லைட்டா வெட்கமாம்" என்று சொல்ல, வசிஷ்டனோ அவளை திரும்பி முறைத்து பார்த்து விட்டு விறுவிறுவென சென்று விட்டான்.
அவளும் நண்பர்களை பார்த்து கண்ணடித்து விட்டு பையுடன் அவன் அறைக்குள் செல்ல, அவனோ, "இது காலேஜ் பாரதி... கொஞ்சம் சரியா நடந்துக்கோ" என்றான்...
அவளோ, "ஆனா நீங்க என் புருஷன் தானே" என்றாள்.
அவளை முறைத்துக் கொண்டே, "போனை கொடு" என்றான்...
"ஏன்?" என்று அவள் கேட்க, "கொடுடி" என்றான் அதட்டலாக...
"கொடுப்பேன், ஆனா அப்புறம் நீங்க தான் வருத்தப்படுவீங்க" என்று சொல்லிக் கொண்டே போனை நீட்ட, டிஸ்பிலேயை பார்த்தவனுக்கு மயக்கம் வராத குறை தான்...
அவள் இதழ்களுடன் இதழ்கள் பதித்த புகைப்படம் தான் இருந்தது...
"இத எல்லாமா உன் பிரெண்ட்ஸ் கிட்ட காட்டுன?" என்று சற்று கடுப்பாகவே கேட்டான்...
"நான் ஒண்ணும் காட்டல... போனை பார்க்கணும்னு சொன்னாங்க... கொடுத்தேன்... பார்த்துட்டாங்க" என்றாள் தோள்களை உலுக்கி...
"லூசா நீ? என் மானம் மரியாதை எல்லாமே போச்சு" என்றான்...
"இதுல என்ன மானம் போக இருக்கு... பொண்டாட்டி தானே நான்" என்று கேட்டாள்.
"பேசுவடி பேசுவ... முதல் இங்க இருந்து கிளம்பு... இனி இந்த பக்கம் வந்துடாதே... உனக்கும் உன் பேட்சுக்கும் ஒரு கும்புடு" என்று கையை கூப்பி சொல்ல, அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் முன்னே இருந்த போனை எடுத்தவள், "வீட்டுக்கு கிளம்பும் போது கால் பண்ணுங்க" என்று சொல்லி விட்டு புறப்பட, அவனோ தலையை சலிப்பாக இரு பக்கமும் ஆட்டிக் கொண்டான்.
அன்று மாலை அழுதழுது கண்கள் வீங்கி தான் காரில் ஏறினாள் பாரதி...
அவனுக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது...
"இப்போ எதுக்கு அழுற?" என்று கேட்க, அவளோ, "பிரெண்ட்ஸ் எல்லாரையும் பிரியும் போது அழ மாட்டோமா?" என்று கேட்டாள்.
அவனும், "ம்ம்" என்று ஒரு பெருமூச்சுடன் காரை எடுத்தான்...
அவளோ அழுகையை நிறுத்தவில்லை...
சட்டென ஓரமாக காரை நிறுத்தியவன், அவள் பக்கம் சரிந்து அவளை இறுக அணைத்து விடுவித்தவன், "அழாத" என்றான்...
அவளோ, "ம்ம்" என்று சிணுங்கலாக சொல்லிக் கொண்டே போனை பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.
வீட்டுக்கு வந்ததுமே இருவரும் குளித்து விட்டு தூங்கி இருந்தார்கள்...
அடுத்த நாள் காலையில் எட்டு மணி போல அவளை எழுப்பினான் வசிஷ்டன்...
"எதுக்கு எழுப்புறீங்க?" என்று அவள் சிணுங்க, "சீக்கிரம் ரெடி ஆகு" என்றான்...
"எங்க போக?" என்று அவள் கேட்க, "போகும் போது சொல்றேன்" என்றான் அவன்...
அவளும் தூக்க கலக்கத்தில் ஆயத்தமாகி சாப்பிட்டு அவனுடன் காரில் ஏறி அமர்ந்தவள், "லீவு நாள் ன்னு நிம்மதியா தூங்க கூட முடியல" என்று திட்ட, அவனோ எதற்கும் பதில் அளிக்காமல் காரை கிளப்பினான்...
அவன் கார் இறுதியாக அவள் வீட்டின் முன்னே வந்து நிற்க, அவனை அதிர்ந்து பார்த்தாள் பெண்ணவள்...
அவனோ பெருமூச்சுடன், "இந்த வயசுக்கு பிறகு எங்க அம்மா அப்பாவை மாத்த முடியாது... உனக்கு கல கலன்னு இருக்கணும்னா உன் வீடு தான் சரி... நான் காலேஜ் போகும் போது உன்னை இங்க ட்ராப் பண்ணுறேன்... ஈவினிங் பிக்கப் பண்ணுறேன்... நான் வீட்ல இருக்கும் போது என் கூட தான் இருக்கணும்" என்றான் அழுத்தமாக...
அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம்...
அவனை எட்டி இறுக கட்டிக் கொண்டவளோ அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்துக் கொண்டாள்.
அவனோ, "யாரும் பார்க்க போறாங்கடி" என்று சொல்ல, "பார்த்தா பார்க்கட்டும்... என் புருஷனை நான் கட்டி பிடிக்கிறேன் அதுல என்ன இருக்கு?" என்று கேட்டுக் கொண்டே இறங்கியவள் சந்தோஷமாக வீட்டினுள் நுழைந்தாள்.
அவளுக்கு அங்கே கேட்கவா வேண்டும்?
வசுந்தராவின் குழந்தை வேறு இருக்க, ஒரே கலகலப்பு தான் அவளுக்கு...
அவளவன் அவளுக்காக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்றாலும் அவளுக்கான சந்தோஷத்தை தேடிக் கொடுத்து இருந்தான்...
இப்படியே நாட்கள் கழிய, பாரதிக்கான பிரசவ நாளும் வந்து சேர்ந்தது...
பயத்தில் அவள் போட்ட சத்தத்தில் அந்த ஹாஸ்பிட்டலே இரண்டானது...
"ஒண்ணும் ஆகாதுடி" என்று சொல்லி சொல்லி வசிஷ்டன் தான் சலித்து போனான்...
இறுதியில் அவளும் ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள்...
அவனோ குழந்தையை தூக்கி ஆசையாக பார்த்துக் கொண்டே அவள் மார்பில் படுக்க வைக்க, அவளோ, "அம்மாவை ரொம்ப படுத்திட்ட டா" என்று குழந்தையிடம் குழந்தை போல பேச, வசிஷ்டனுக்கே சிரிப்பு வந்து விட்டது...
சிரித்து விட்டான்... அப்படியே அவனை திரும்பி பார்த்தவள், "இப்போ சிரிச்சீங்களா என்ன?" என்று கேட்க, "ஏன் நான் சிரிக்க கூடாதா?" என்று அவன் கேட்க, அவளோ, "உலக அதிசயம்" என்று சொல்ல, அவனோ அவள் காதை மெதுவாக திருகி இருந்தான்...
அவளோ, "ஆஹ்" என்று வேண்டுமென்று சத்தமாக கத்த, அங்கிருந்த வைத்தியரோ "எனி ப்ராப்ளம்?" என்று கேட்க, வசிஷ்டனோ, "எதுக்குடி இப்படி கத்துற?" என்று அவளுக்கு அதட்ட, அவளோ சிரித்துக் கொண்டே வைத்தியரை பார்த்தவள், "நத்திங்" என்று சொல்லிக் கொண்டே வசிஷ்டனை பார்த்து கண்ணடித்துக் கொண்டாள்.
ஆறு மாதங்கள் கழிய,
கோவில் ஒன்றுக்கு சென்ற பின்னர், மதிய விருந்துக்காக நரேனின் வீட்டுக்கு குடும்பமாக வந்து இருந்தார்கள் வசிஷ்டனும், பாரதியும் அவர்கள் பையனும்...
வசுந்தராவின் குழந்தையும் பாரதியின் குழந்தையும் அருகருகே வசுந்தராவின் அறைக்குள் படுத்துக் கொண்டு இருக்க, வசுந்தராவோ சமையலறைக்குள் நின்று இருந்தாள்.
வசிஷ்டனோ ஹாலில் அமர்ந்து செல்லதுரையுடன் பேசிக் கொண்டே போனை பார்த்தபடி இருக்க, பால்கனியில் நின்று நரேனுடன் பேசிக் கொண்டு இருந்தாள் பாரதி...
நரேனோ, "உன் லைஃப் ஓகே தானே" என்று கேட்க, அவளோ, "வசி கூட ஹாப்பி தான் அண்ணா... அத்தையை பத்தியும் மாமனாரை பத்தியும் உனக்கு தெரியும் தானே... பெருசா யார் கூடவும் மூவ் பண்ண மாட்டாங்க... நானுமே அவங்க இஷ்டப்படி தள்ளி இருந்துடுறது... அவங்கள இதுக்கப்புறம் மாத்த முடியாதுன்னு தெரியும்... ஏன் வசி கூட மாறல... அதே ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் தான்... தப்பு பண்ணுனா திட்டு விழும்... ஆனா சீக்கிரம் ஓகே ஆய்டுவார்... என்னை அவரோட சேர்க்கில் உள்ள இப்போ எடுக்க யோசிக்கிறது இல்லை... அதே போல நானும் அவரை என் சேர்க்கில் உள்ளே எடுக்க நினைக்கல... அக்செப்ட் பண்ணிட்டு புரிஞ்சுட்டு வாழ ஆரம்பிச்சுட்டோம்..." என்று சொல்ல, "கேட்க சந்தோஷமா இருக்கு" என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டான்...
பாரதியோ, "உன் லைஃப் பத்தி கேட்க மாட்டேன்... லவ் பேர்ட்ஸ் ஆச்சே" என்று சொல்ல, அவனோ சத்தமாக சிரித்தவன், "அவ எனக்கு திட்டுவா திட்டு, காது கொடுத்து கேட்க மாட்டேன்" என்றான்...
"பிரசவ நேரம் நர்ஸ் கூட கடலை போட்டு இருக்க... திட்டுறதோட அண்ணி விட்டாங்கன்னு சந்தோஷப்படு" என்று சொல்ல, அவனோ, "அதென்னவோ உண்மை தான்... அவ திட்டுவா ஆனா இதுவரைக்கும் சந்தேகப்பட்டது இல்லை..." என்று சொல்ல, "கொடுத்து வச்சவன்டா நீ..." என்று அவன் தோளில் தட்டிக் கொண்டாள்.
"சரி போர் அடிக்குது... வீடியோ கேம் விளையாடலாம் வர்றியா?" என்று கேட்க, அவளோ, "ம்ம்... ஓகே" என்று சொல்ல, அவளை அழைத்துக் கொண்டே வீடியோ கேம் இருக்கும் அறைக்குள் சென்றான்...
இதே சமயம் தூங்கிக் கொண்டு இருந்த இரு குழந்தைகளும் அழ ஆரம்பித்து விட்டன...
வசுந்தராவோ சமையலறையில் இருந்தபடி, "நரேன்" என்று அழைக்க, அறைக்குள் சத்தமாக வீடியோ கேமை விளையாடிக் கொண்டு இருந்த நரேனுக்கு கேட்கவே இல்லை...
ஹாலில் இருந்த வசிஷ்டனும், "பாரதி" என்று அழைத்து பார்த்தான்...
கேட்டால் தானே...
வசுந்தராவோ கையை கழுவி விட்டு அறைக்குள் நுழைய, வசிஷ்டனும், "எங்க போனா இவ?" என்று புலம்பிக் கொண்டே நுழைந்தவன் அவனது குழந்தையை தூக்கி கொண்டான்.
தனது குழந்தையை தூக்கிய வசுந்தராவோ, "நரேனை பார்த்தியா வசி?" என்று கேட்க, அவனோ, "நீ பாரதியை பார்த்தியா?" என்று மாறி கேட்டான்...
இருவரும் குழந்தைகளுடன் அவர்களை தேடி அறையை திறக்க, பாரதியும், நரேனும், "ஷூட் பண்ணுடா", "நீ ஷூட் பண்ணுடி" என்று சத்தம் போட்டுக் கொண்டே விளையாடிக் கொண்டு இருக்க, "நரேன்" , "பாரதி" என்று அவரவர் இணைகள் சத்தமாக கையில் குழந்தையுடன் அவர்கள் பெயரை அழைத்தார்கள்...
சட்டென அவர்களை திரும்பி பார்த்துக் கொண்டே வீடியோ கேமை ஆப் பண்ணிய நரேனும், பாரதியும் எழுந்து நின்றவர்கள், திரு திருவென விழித்தார்கள்...
"குழந்தை அழுதுட்டு இருக்கு... விளையாடிட்டு இருக்கியா?" என்று வசுந்தராவும், வசிஷ்டனும் நரேனுக்கும், பாரதிக்கும் திட்ட ஆரம்பித்து விட, நரேனோ அருகே நின்ற பாரதியின் கையை சுரண்டி அவள் கைக்குள் பஞ்சை வைத்தான்...
அவளோ அவனை அதிர்ந்து பார்க்க, "சேஃப்டிக்கு பாக்கெட்ல வச்சு இருப்பேன்... உனக்கு ரெண்டு பஞ்சு... எனக்கு ரெண்டு பஞ்சு" என்று சொல்ல, அவளுக்கோ பக்கென்று சிரிப்பு வர, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டே வசிஷ்டனை பார்க்க, அதே போல தான் நரேனும் வசுந்தராவை பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்...
அவர்களுக்கு திட்டி விட்டு குழந்தையையும் அவர்கள் கையில் திணித்து விட்டு வசுந்தராவும், வசிஷ்டனும் புறப்பட்டு விட, நரேனும், பாரதியும் குழந்தைகளை தூக்கிக் கொண்டே சத்தமாக சிரித்தபடியே ஒருவரை ஒருவர் பார்க்க, நரேனின் குழந்தை மட்டும் சிரித்தது...
பாரதியின் குழந்தை உர்ரென்று இருக்க, நரேனோ, "அடியேய் இது குட்டி வசிஷ்டன்டி" என்று சத்தமாக சிரித்தபடி சொல்லிக் கொண்டான்...
பாரதியும் சிரித்துக் கொண்டே, "ஹ்ம்ம்... அது எனக்கு எப்போவோ தெரியும்... அதான் பெரிய வசி மேல இருக்கிற லவ் போல இந்த குட்டி வசி மேலயும் அவ்ளோ லவ்..." என்று சொன்னபடி குழந்தையின் கன்னத்தில் முத்தம் பதித்தாள்...
Mr.Perfect <3 Mrs. Naughty and Mr.Naughty <3 Mrs.Perfect
முற்றும்