ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 21

pommu

Administrator
Staff member
மழை 21

அவனையே அவள் விழி விரித்து பார்த்துக் கொண்டு நின்று இருக்க, அவனுக்கோ அப்படி ஒரு சங்கடம். மாணவர்களை பற்றி அவனுக்கு நன்கு தெரியும் அல்லவா?

கான்டீனில் அமர்ந்து வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட தான் நினைத்தான்...

ஆனால் இப்போது சாப்பிட முடியாது என்று அவனுக்கு தெளிவாக தெரிந்தது...

பேனரை பார்த்து விட்டு, கான்டீனில் அமராமல், அப்படியே அடுத்த வாசலினால் வெளியேற போன வசிஷ்டனின் கண்கள் அங்கே அவனையே பார்த்துக் கொண்டு நின்ற பாரதியின் மீது அழுத்தமாக படிந்து மீண்டது...

சரியாக அவன் பாரதியை கடந்து போன நேரம், அவனை மறித்தபடி நின்று இருந்தாள் ஒரு மாணவி...

அவனோ அவளை புருவம் சுருக்கி பார்க்க, சட்டென கையில் இருந்த ஸ்வீட் பாக்ஸை நீட்டியவள், "எங்க பிரென்ட் பாரதி ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கா சார்" என்றாள் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே...

"அட கிராதகி" என்று பாரதி வாய்க்குள் அவளுக்கு திட்ட, அவனோ, "நோ தேங்க்ஸ்" என்று மறுக்க, அங்கே கூட்டத்தில் நின்ற ஒரு பையனோ, "அவளை ப்ரெக்னன்ட்ன்னு ஆக்கின அவருக்கு தெரியாதா?" என்று கேட்க, இன்னொருவனோ, "ட்ரீட் கொடுக்க வேண்டியதே அவர் தான்" என்று சொல்லி விட்டு கூட்டத்தில் மறைந்துக் கொள்ள, வசிஷ்டனோ சட்டென திரும்பி கூட்டத்தினரை முறைத்துப் பார்த்தான்...

பாரதிக்கு சொன்னவர்கள் யார் என்று தெரிந்தாலும் காட்டிக் கொடுக்க அவள் விரும்பவில்லை...

ஆனாலும் அவர்கள் பேசியது அவளுக்கே சற்று அதிகப்படியாக தோன்றியது...

இதனை வசிஷ்டன் நினைத்தால் பெரிய விஷயமாக்க முடியும்...

ஆனால் இதனை பெரிய விஷயமாக்கினால் தனது அந்தரங்கம் தான் மாணவர்கள் வாயிலெல்லாம் பேசும் பொருளாகி விடும் என்று அறிந்தவன் அங்கே நின்ற பாரதியை நோக்கி அதே அனல் தெறிக்கும் பார்வையை வீச, அவளோ இப்போது பார்வையை எங்கோ திருப்பிக் கொண்டாள்.

வசிஷ்டனோ ஒரு உஷ்ண பெருமூச்சுடன் வெளியேறி விட, பாரதியோ, "மனுஷனாடா நீங்க?" என்று நண்பர்களுக்கு திட்டிக் கொண்டே அவர்களுடன் அமர்ந்துக் கொண்டாள்.

தனது அறைக்குள் வந்த வசிஷ்டனுக்கு சங்கடமாக இருந்தது...

கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டே சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்தவன், "அன்னைக்கு கை காலை வச்சிட்டு சும்மா இருந்து இருக்கலாம்" என்று தனக்கு தானே திட்டிக் கொண்டான்...

அவள் படித்து முடிக்கும் வரை காத்து இருந்து இருக்கலாம் என்பது அவனுடைய எண்ணம்...

சில மாணவிகள் படிக்கும் காலத்தில் கர்ப்பமாக கல்லூரிக்கு வருவார்கள்...

அவர்களிடம் அவன் கேட்கவில்லை என்றாலும், 'இப்போ என்ன அவசரம் இவங்களுக்கு?' என்று நினைத்துக் கொள்வான்...

இப்போது அப்படி நினைக்கும் தகுதி கூட அவனுக்கு இல்லை என்பது தான் நிதர்சனம்.

அன்று வீட்டுக்கு வரும் போது கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை...

ஆனால் அவன் முகம் கோபத்தை அப்பட்டமாக காட்டியது...

அவளிடம் கோபப்பட முடியாது என்று அவனுக்கு நன்கு தெரியும்...

காலையில் அவளை கடுப்பில் முறைத்தாலும் நிதானமாக யோசித்தவனோ, 'வயிறு பெருசா இருக்கும் போது அவ எப்படி மறைப்பா?' என்று அவள் பக்கம் இருந்து யோசித்தான்...

ஆம் அதிசயமாக அவள் பக்கம் எல்லாம் இருந்து யோசித்தான்...

இப்போது அவன் மீதே அவனுக்கு கோபம்...

அன்று நடந்த அவர்கள் தாம்பத்தியம் தான் அவர்கள் மனதால் பிரிந்து இருப்பதற்கும் கூட காரணம்...

அன்று மட்டும் அவன் உணர்வுகளை கட்டுப்படுத்தி இருந்தால் எத்தனையோ பிரச்சனைகளை தவிர்த்து இருக்கலாம்...

இனி யோசித்து பயன் இல்லை என்று காரை ஓட்டியபடி நினைத்தாலும், அவனை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிய இரு மாணவர்கள் பற்றி அவனுக்கு அறிய வேண்டி இருந்தது...

பாரதிக்கு நன்கு தெரியும் என்று அவன் அறிவான்...

ஆனால் பேசுவது இல்லை அல்லவா?

வீட்டுக்கு வந்ததுமே குளித்து விட்டு இருவரும் சாப்பிட்டார்கள்...

பாரதி அறைக்குள் நுழைந்து விட்டாள்.

ஹாலில் இருந்த வசிஷ்டனோ, "வேலம்மா" என்று வேலை செய்யும் பெண்ணை அழைத்தான்...

அந்த பெண்ணும் அவன் முன்னே வந்து நிற்க, "அந்த ரெண்டு பேர் யாருன்னு பாரதி கிட்ட கேட்டு வா" என்றான்...

அவளும் அறைக்குள் சென்றவள் பாரதி முன்னே வந்து நின்றாள்.

அவள் கையில் போன் இருக்க, அதில் கொரியன் ட்ராமா பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"அந்த ரெண்டு பேர் யாருன்னு ஐயா கேட்டார்" என்றாள் வேலம்மா...

அவளோ கையில் இருந்த போனை ஒரு கணம் பார்த்து விட்டு, "லீ மின் ஹோ, கூ ஹை சுன்" என்று தான் பார்த்துக் கொண்டு இருந்த கொரியன் ட்ராமாவில் வரும் நடிகன் நடிகையின் பெயரை சொன்னாள்.

வேலம்மாவோ திரு திருவென முழித்தவள், "கெட்ட வார்த்தைல திட்றீங்களா?" என்று கேட்டாள்.

சத்தமாக சிரித்த பாரதியோ, "இது தான் உங்க ஐயா கேட்ட ரெண்டு பேர்" என்றாள்.

"திரும்ப ஒரு தடவை சொல்றீங்களா?" என்று வேலம்மா கேட்டாள்.

"லீ மின் ஹோ, கூ ஹை சுன்" என்றாள் பாரதி...

பாடமாக்கிக் கொண்டே வந்த வேலம்மா வாசலை தாண்டி வசிஷ்டன் அருகே சென்றதுமே மறந்து விட்டாள்.

அவனோ, "என்ன சொன்னா?" என்று கேட்க, அவளோ, "ஏதோ லீ, சு ன்னு சொன்னாங்க" என்றாள் தலையை சொறிந்துக் கொண்டே...

அவனோ விழிகளை விரித்தவன், "வாட்?" என்று கேட்க, அவளும், "பெரிய பேர் சொன்னாங்க ஐயா... இருங்க கேட்டு வாரேன்" என்றபடி உள்ளே ஓடிச் சென்றாள்.

வசிஷ்டனோ தலையை சலிப்பாக இரு பக்கமும் ஆட்டிக் கொண்டே போனை பார்க்க, உள்ளே வந்த வேலம்மாவோ, "மறந்து போவுது... எழுதி கொடுங்க" என்று கையை நீட்டினாள்...

பாரதியும் அருகே இருந்த பேப்பர் ஒன்றில் பெயரை எழுதி நீட்ட, அதனை கொண்டு வந்து வசிஷ்டனிடம் கொடுத்தாள் வேலம்மா...

அதனை பார்த்து அவனுக்கு சுர்ரென்று கடுப்பேற, "இத கேக்கலைன்னு சொல்லு" என்று கையில் இருந்த பேப்பரை கசக்கி எறிந்தான்...

வேலம்மாவோ கீழே இருந்த பேப்பரை தூக்கிக் கொண்டே உள்ளே ஓடியவள், "இத ஐயா கேக்கலையாம்" என்று கையில் இருந்த பேப்பரை நீட்டினாள்.

"அப்போ எத கேட்டாராம்?" என்று பாரதி கேட்க, வசிஷ்டனும் உள்ளே வந்தவன், "இன்னைக்கு கான்டீன்ல பேசுன பசங்க பெயரை கேளு வேலம்மா" என்று சொன்னான்...

வேலம்மாவோ, 'இதுக்கு நேரடியா கேட்டு இருக்கலாமே, நான் எதுக்கு?' என்று நினைத்தாலும் கேட்காமல் மௌனமாக நிற்க, "அவனுங்க என்ன தப்பா சொல்லிட்டானுங்க? சரியா தானே சொல்லி இருக்கானுங்கன்னு சொல்லு வேலம்மா" என்றாள் பாரதி போனை பார்த்துக் கொண்டே.

வசிஷ்டன் அவளை முறைத்து பார்த்து விட்டு, "வேலம்மா நீ போ" என்றவன் லேப்டாப்பில் அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

பாரதியோ அடக்கப்பட்ட சிரிப்புடன் தான் அமர்ந்து இருந்தாள். அந்த சிரிப்பு அவன் கண்ணில் இருந்து தப்பவில்லை...

வாய்க்குள் திட்டிக் கொண்டான்...

இப்படியே நாட்கள் நகர, பாரதிக்கு அசைன்மென்ட் ஒன்று முடிக்க வேண்டி இருந்தது...

லேப்டாப்பின் முன்னே நகத்தை கடித்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள் பாரதி...

அசைமென்ட் ஒன்றை செய்துக் கொண்டு இருந்தவளுக்கு அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாது... க்ளாசில் கவனித்தால் தானே...

நண்பர்களிடம் கேட்டால், "நீ தான் உன் புருஷன் கிட்ட கேட்டு சொல்லி கொடுக்கணும்" என்று கையை விரித்து விட்டார்கள்...

கேட்கவும் அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை... அவன் அவளது வகுப்புக்கு எந்த பாடமும் எடுப்பது இல்லை.. ஆனால் எல்லா படத்திலும் கைதேர்ந்தவன் தான்.

கேட்ட கேள்விக்கு தனக்கு தெரிந்த பதிலை எழுதி இருந்தாள்... ஆனால் அது அப்பட்டமான பிழை என்று அவளுக்கே தெரியும்...

இதே சமயம் குளியலறைக்குள் இருந்த வசிஷ்டனோ அவளையே பார்த்துக் கொண்டு வந்து அவள் பின்னால் நின்றபடி அவளது லேப்டாப்பில் அவள் எழுதி இருந்த பதிலை பார்த்தான்.

சட்டென்று திரும்பி பார்த்தவளோ கைகளால் திரையை மூட அவனோ தோள்களை உலுக்கி விட்டு நகர்ந்து விட்டான்.

அவளோ லேப்டாப்பை பார்த்தபடியே நாற்காலிக்குள் தூங்கி விட்டாள்... அவள் தூங்கியதை கவனித்துக் கொண்டே வந்தவன் அவளது லேப்டாப்பை ஒற்றைக்கையால் திருப்பிக் கொண்டே அவள் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான்...

"ப்பா... என்ன எல்லாம் எழுதி இருக்கா... க்ளாஸ் ல கவனிக்காம என்ன தான் பண்ணிட்டு இருக்காளோ" என்று திட்டியவன் நினைத்து இருந்தால் விடையை எழுதி கொடுத்து இருக்கலாம்...

ஆனால் அவன் அப்படிப்பட்டவன் இல்லையே...

அவளுக்கு புரிய வேண்டும் என்று நினைத்தவனுக்கு அவளுக்கு எப்படி சொல்லி கொடுப்பது என்று தயக்கம்...

அவளும் அவனும் பேசியே மாதங்கள் கடந்து இருந்தன...

நாடியை நீவிக் கொண்டே வசிஷ்டன் யோசித்த நேரம் சட்டென கண்களை திறந்தாள் பாரதி...

"என்னோட லேப்டாப்... என்னோட லேப்டாப்" என்று மேசையில் தட்டி தட்டி பதறினாள்...

ஆம் தூக்க கலக்கத்தில் உளறியபடி இருந்தாள் அவள்...

"ஹெலோ" என்றான் வசிஷ்டன்...

அவளுக்கு அது கேட்கவே இல்லை...

"என் லேப்டாப்பை யாரோ திருடிட்டாங்க" என்று புலம்பினாள்...

வசிஷ்டனோ மீண்டும், "ஹெலோ" என்றான் மேசையில் பேனையால் தட்டியபடி...

"யார் டா நீ??" என்றாள்...

அதிர்ந்து விட்டான்...

"டா வா??" என்று யோசித்தபடி அவள் முகத்தை நெருங்கி உற்று பார்த்தான்...

அவளோ கண்களை மூடி இருந்தாள்....

அவனோ, 'ஓஹ் தூக்கத்துல புலம்புறாளா??' என்று நினைத்து முடிக்கவில்லை...

"டேய் திருடா" என்று சொன்னபடி கையை நீட்டி அருகே வந்த வசிஷ்டனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை...

அவன் எதிர்பார்க்கவே இல்லை...

கன்னத்தை பொத்தியபடி சட்டென்று விலகிக் கொண்டான். அவளோ மீண்டும் நாற்காலியில் படுத்து தூங்கி விட்டாள்...

'இவளுக்கு தூக்கத்தில உளர்ற பழக்கம் எல்லாம் வேற இருக்கா?? என்னையே அறைஞ்சுட்டா' என்று நினைத்துக் கொண்டே எழுந்தவன், தலையை உலுக்கியபடி வெளியேற ஒற்றைக் கண்ணை திறந்து அவன் முதுகை பார்த்த பாரதிக்கு சிரிப்பை தான் அடக்க முடியவே இல்லை...

அவன் வெளியேறிய பின்னர் லேப்டாப்பை பார்த்தாள்...

"சரியான விடை எழுதி இருக்க வேண்டியது தானே... சரியான கஞ்சூஸ்" என்று திட்டிக் கொண்டே மீண்டும் நகத்தை கடித்தபடி அமர்ந்து விட்டாள்.

அவன் திரும்ப வரும் போது அவளோ எழுந்து லேப்டாப்பை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

'தூக்க கலக்கத்துல லேப்டாப் பார்க்கிறாளா? இல்லை நிஜமாவே பார்க்கிறாளான்னு தெரியலையே' என்று நினைத்துக் கொண்டே அவள் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்...

அவளோ மனதுக்குள், 'அவரை பார்த்தா சிரிச்சிடுவ பாரதி... கன்ட்ரோல்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

வசிஷ்டனோ அருகே இருந்த பேப்பரை எடுத்து அதில் அவள் கேள்விக்கு பதிலை விளக்கமாக எழுதினான்...

பாரதி திரும்பி பார்க்காமல் லேப்டாப்பையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

'நம்ம கிட்ட அடி வாங்கியும் நமக்கு சொல்லி கொடுக்குது... பாவம் யார் பெத்த புள்ளையோ' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

வசிஷ்டனும் விடையை எழுதி விட்டு பேனையை மூடி பேப்பரின் மீது வைத்தபடி பேப்பரை அவளை நோக்கி திருப்பியவன், எழுந்து பால்கனிக்கு சென்று விட்டான்...

அவன் அங்கே இருந்து நகர்ந்ததுமே அவளுக்கு மூச்சு வந்தது...

'அப்பாடா, நாம நிதானத்துல அறைஞ்சதை கண்டு பிடிக்கல' என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே நினைத்தவள் அவன் எழுதி கொடுத்ததை வாசித்து விளங்க ஆரம்பித்து விட்டாள்.

இப்படியே நாட்கள் நகர, ஒரு நாள் பாரதிக்கு மூன்று மணியுடன் வகுப்புகள் முடிந்து இருந்தன... ஆனால் வசிஷ்டனுக்கு ஐந்து மணிக்கு தான் முடியும்...

வழமையாக லைப்ரரியில் இருப்பவளுக்கு இன்று அலுப்பாக இருந்தது...

காலேஜ் வாசலில் இருந்த மர நிழலில் இருக்கும் ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்துக் கொண்டே அவள் அழைத்தது என்னவோ நரேனுக்கு தான்...

அவனோ ஒரு க்ளையண்ட்டை பார்த்து விட்டு வெளியே வந்தவன் போனை காதில் எடுத்து வைக்க, "அடேய் அண்ணா என்னடா பண்ணுற? ஒரே போர் ஆ இருக்கு" என்றாள் செல்ல குரலில் பாரதி...

"நான் ஒரு க்ளையண்ட்டை பார்த்துட்டு வந்தேன் பாரு... நீ என்ன பண்ணுற? எங்க நிக்குற?" என்று கேட்க, "காலேஜ்ல தான் நிக்குறேன்... அவருக்கு அஞ்சு மணிக்கு தான் க்ளாஸ் முடியும்..." என்றாள்.

"காலேஜ் ல தானா? நான் பக்கத்துல தான் நிக்குறேன்... வரேன்" என்று சொல்லிக் கொண்டே அடுத்த பத்து நிமிடத்தில் காலேஜின் முன்னால் நின்றான் நரேன்...

மேடிட்ட வயிற்றுடன் நின்ற பாரதியை பார்க்க அவனுக்கு சிரிப்பு தான் வந்தது...

அவனை பொறுத்தவரை அவள் குழந்தை...

'குழந்தைக்கு ஒரு குழந்தை' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்...

அவளை இத்தனை நாட்கள் அவன் பார்க்க நினைத்தது இல்லை...

பாரக்க ஆசைப்பட்டாலும் வசிஷ்டனுக்காக தவிர்த்து வந்தான்...

பாரதியின் தாய், தந்தை மட்டும் அடிக்கடி சென்று பார்த்து விட்டு வருவார்கள்...

வசுந்தராவும் அடிக்கடி சென்று வருவாள்...

பாரதியுடன் போனில் பேசுவான்...

ஆனால் நேரில் இன்று தான் பார்க்கின்றான்...

அதுவும் வசிஷ்டன் க்ளாஸ் எடுத்துக் கொண்டு இருக்கின்றான் என்ற தைரியத்தில் தான் வந்தான்.

அவன் காரை கண்டதுமே சிரித்துக் கொண்டே வந்து காரில் ஏறியே விட்டாள் பாரதி...

"என்னடி காரிலேயே ஏறிட்ட?" என்று நரேன் கேட்க, "ஒரு அண்ணான்னு இருக்க தங்கச்சியை பார்க்க வந்தியா?" என்று அவள் திட்ட, அவனோ, "உன் புருஷன் தாம் தூம்னு குதிக்கவா? நீயாச்சும் வந்து இருக்கலாம்ல, வசுந்தரா அங்கே வர்ற போல" என்று அவன் மாறி எகிற, இருவரும் இறுதியில் சமாதானம் ஆகி விட்டார்கள்...

"உன்னை பார்க்க பார்க்க சிரிப்பா இருக்கு" என்றான் அவள் மேடிட்ட வயிற்றை பார்த்துக் கொண்டே...

"இருக்கும் இருக்கும்" என்று அவன் கையில் அடித்தவள், "எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடணும் போல இருக்கு" என்றாள்.

அவனோ, "நான் அழைச்சிட்டு போவேன்... ஆனா உன் ஆத்துக்கார்" என்று இழுக்க, "அஞ்சு மணிக்கு முதல் வந்துடலாம்டா, அழைச்சிட்டு போடா" என்றாள் கெஞ்சுதலாக...

அவனுக்கும் மறுக்க மனம் கேட்கவே இல்லை...

வீட்டு விஷயங்களை பற்றி பேசிக் கொண்டே அவளை ஐஸ்க்ரீம் கடைக்கு அழைத்து வந்து விட்டான்...

அருகே கார்னிவேல் ஒன்று நடந்துக் கொண்டு இருக்க, "இங்க போய்ட்டு போவோம் ப்ளீஸ்" என்று அவள் கெஞ்ச, அங்கே வண்டியை விட்டான்...

நேரம் மின்னல் வேகத்தில் நகர்ந்தது...

இருவரின் கையிலும் கடிகாரம் இருக்கவில்லை...

பாரதியின் போனோ சைலென்டில் இருந்தது...

நரேனோ வசுந்தராவுக்கு அழைத்தவன், "இங்க கார்னிவேல் நடக்குது வசு, பாரதி கூட வந்தேன்... நைட் ரெடியா இரு... நாம போகலாம்" என்று சொல்ல, "ம்ம் ம்ம்" என்று அவனை கலாய்த்தாள் அருகே இருந்த பாரதி...

வசுந்தராவுக்கும் அது கேட்க, "ஓகே நரேன்" என்று சிரித்தபடி சொன்னவள் போனை வைத்து விட்டாள்.

நரேனும், "சும்மா இருடி" என்று பாரதியின் தலையில் தட்டியவன், அவளுடன் சுற்றி விட்டு ஐஸ்க்ரீம் கடைக்குள் நுழையும் போதே நேரம் ஐந்து மணியை கடந்து இருக்க, வசிஷ்டனோ லெக்ஷர்ஸ் முடிந்து பாரதியை லைப்ரரியில் தேடிக் கொண்டு இருந்த சமயம் அது...

அவளை காணவில்லை...

அவள் நம்பருக்கு அழைப்பு மேல் அழைப்பை எடுக்கிறான்...

பதிலே இல்லை...

அவள் போன் தான் சைலென்டில் இருக்கின்றது அல்லவா?

அங்கே இருந்த செக்கியூரிட்டியிடம் கேட்டான்...

அவரோ அந்த நேரம் வெளியேச் சென்று இருப்பார் போலும்...

"பாரதியை காணவே இல்லை" என்று சொல்லி விட்டார்...

வீட்டுக்கு அழைத்து வேலம்மாவிடம் விசாரித்தான்...

ஏமாற்றம் தான் பதிலாக கிடைத்தது...

முதல் முறை பயந்து போனான்...

அவன் இதயம் வேகமாக துடித்தது...

பதட்டம் உண்டாக, "பாரதி பாரதி" என்று காலேஜ் முழுக்க தேடினான்...

அவள் நம்பருக்கு ஆயிரத்தெட்டு மெசேஜ் வேறு அனுப்பினான்...

எதற்கும் பதில் இல்லை...

இறுதியாக அவன் அழைத்தது என்னவோ வசுந்தராவுக்கு தான்...

அவள் வீட்டுக்கு போய் இருப்பாளோ என்கின்ற சந்தேகத்தில் அவளுக்கும் பலமுறை அழைத்தான்...

அவளும் போனை எடுக்கவில்லை... குளித்துக் கொண்டு இருந்தாள்...

வசுந்தராவை தவிர அவனுக்கு அவர்கள் வீட்டில் யாரின் நம்பரும் தெரியவே இல்லை...

ஆறு மணியை தாண்டி காலேஜ் முழுக்க தேடினான்...

இருளவும் ஆரம்பித்து இருந்தது...

காரில் ஏறியவனுக்கு கைகள் நடுங்கின...

முதல் முறை நடுங்கின...

ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனோ, "போனை எடுடி" என்று திட்டிக் கொண்டே பாரதிக்கு அழைத்தான்...

பதில் இல்லை...

ஸ்டீரிங் வீலில் கையால் ஓங்கி அடித்தான்... "எங்கடி போய் தொலைஞ்ச" என்று திட்டியவனுக்கு பெண்கள் கடத்தப்படும் செய்திகளும் கற்பழிக்கப்படும் செய்திகளும் கண் முன்னே வந்து போனது...

காரில் இருந்த ஏசியை மீறி வியர்த்தது அவனுக்கு...

காரை ஸ்டார்ட் செய்தான்...

ஸ்டீரிங் வீலை பற்றி பிடிக்க முடியாதளவு கைகள் நடுங்கியது...

அப்போது தான் அவன் போன் அலற, பதறி போனை எடுத்தான்...

மறுமுனையில் வசுந்தரா தான் இருந்தாள்.


 

pommu

Administrator
Staff member
"போன் எடுத்தா எடுக்க மாட்டியா?" என்று அவளுக்கும் திட்டினான்...

"குளிச்சிட்டு இருந்தேன் வசி, என்னாச்சு?" என்று கேட்டாள்.

ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டே, "பாரதி அங்கே வந்தாளா?" என்று கேட்க, அவளோ, "நரேன் கூட கார்னிவேல் போய் இருக்கா... உன் கிட்ட சொல்லலையா?" என்று கேட்டாள். அப்போது தான் அவனுக்கு மூச்சே வந்தது...

"ஆஹ் சொன்னா மறந்துட்டேன்" என்றபடி போனை வைத்து விட்டான்...

சற்று முன் இருந்த பயம், பதட்டம் எல்லாம் இப்போது கோபமாக மாறி இருந்தது...

இதே சமயம் பாரதியோ, "எத்தனை மணி?" என்று கேட்டபடி போனை எடுத்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

"ஐயையோ ஆறு மணி தாண்டிடுச்சா? இங்க இருந்தா இருட்டுனது கூட தெரியலையே" என்று நரேனிடம் சொல்ல, "ஆமா இதுக்குள்ள இருந்தா தெரியாது" என்றான்...

அவளுக்கு போனில் இருந்த வசிஷ்டனின் அழைப்பை பார்த்ததுமே அதிர்ச்சி தான்...

'முப்பது கால் ஆஹ்?' என்று நினைத்தபடி மெசேஜை பார்க்க, "வேர் ஆர் யூ?" என்று பத்துக்கும் மேற்பட்ட மெசேஜ் வேறு...

"ஆத்தி" என்று நெஞ்சில் கையை வைக்க, "என்னாச்சு?" என்று கேட்டபடி பில்லுக்கு பணம் கொடுத்தான் நரேன்...

"ஒண்ணும் இல்லை... கால் பண்ணி இருக்கார் அவர்" என்றாள்.

"ஓஹ் ஷீட்... அத மறந்துட்டேன்ல, இப்போ உன்ன காலேஜ்ல விடணுமா? இல்லை வீட்லயா?" என்று கேட்க, "வீட்டுக்கு போய் இருப்பாருன்னு நினைக்கிறன்... வீட்ல விடு" என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறியவள் வசிஷ்டனுக்கு போன் மேல் போன் பண்ணினாள்.

அவன் முறை இப்போது... எடுக்கவே இல்லை...

குளித்து விட்டு வந்தவன் அடித்துக் கொண்டு இருந்த போனை வெறித்துப் பார்த்தான்...

அவனுக்கு அடக்க முடியாதளவு கோபம்...

கட்டுப்படுத்த நினைக்கின்றான்...

முடியவில்லை...

இதே சமயம் வீட்டுக்கு வந்து சேர்ந்த பாரதியோ நரேனை அனுப்பி விட்டு அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்...

அங்கிருந்த சோபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்துக் கொண்டே நாடியை நீவிக் கொண்டு இருந்தவன் கதவு தாழிடும் சத்தத்தில் மெதுவாக கண்களை விரித்தான்...

அவளோ, "முறைச்சு முறைச்சு பார்க்க போறார் பாரதி... அப்படியே பார்க்காம குளிக்க போயிடு" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு பையையும், போனையும் மேசையில் வைத்தாள்.

அப்படியே சென்று டவலை எடுத்து இருப்பாள்...

அறையே அதிரும் வண்ணம் ஒரு சத்தம்... திரும்பி பார்த்தால் நரேன் வாங்கி கொடுத்த அவளது புது போன் டிஸ்பிளே நொறுங்கி இருந்தது...

இல்லை வசிஷ்டன் நொறுக்கி இருந்தான்...

அதிர்ந்து போய் அவனை திரும்பி பார்க்க, "போன் அடிச்சு எடுக்கலன்னா இந்த போன் எதுக்குடி" என்று அவன் சீற, "அதுக்கு என் போனை உடைப்பீங்களா?" என்று பதிலுக்கு அவள் எகிறியபடி அவன் அருகே வந்தாள்.

மாதங்கள் கடந்து பேசி இருந்தார்கள்...

காதலாக இல்லை... கோபமாகவும், சண்டையாகவும்…
 
ஆனா பாரதி உனக்கு செம்ம தில் தான் வசியவே adichutiye🤣
டேய் வசி அவ தூக்கத்துல தான் இருக்காளா இல்ல தூங்கிட்டு இருக்காளானு தெரியல போடா லூசு மடையா 🤣🤣
 
Top