மழை 20
அவனை பார்த்து அதிர்ந்து விழிகளை விரித்தபடி அவள் நின்று இருக்க, அவனோ முட்டியில் கையை ஊன்றி எழுந்தவன் அவளை நோக்கி வந்தான்.
அவள் தோளில் இருந்த பையை வேகமாக உருவி எடுத்தான்... தடுக்கும் மனநிலையில் இல்லை அவள்...
அதனை திறந்து கண நேரத்தில் மெடிக்கல் பைலை வெளியே எடுக்க, அவளுக்கோ நெஞ்சில் நீர் வற்றி போனது...
சொல்லவில்லை என்று கோபப்படுவானோ என்கின்ற பயம் தான் அவளுக்கு...
ஆனால் இன்னுமே அவன் மேல் கோபம் இருக்கும் போது அவளால் எப்படி சொல்ல முடியும்?
பைலில் அவளது பெயரை ஆழ்ந்து பார்த்தான்...
மிஸிஸ். பாரதி வசிஷ்டன் என்று தான் இருந்தது... அப்போது கர்ப்பமாக இருப்பது அவள் தான் என்று உறுதி செய்துக் கொண்டான்.
அதில் இருந்த குழந்தையின் ஸ்கேன் எல்லாம் பார்த்தவன் ஒன்றுமே பேசாமல் விறு விறுவென பைலை எடுத்துக் கொண்டே உள்ளேச் செல்ல, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
அவனை பின் தொடர்ந்து அவள் உள்ளே நுழைந்த சமயம், "டாக்டர் ஐ ஆம் வசிஷ்டன், பாரதியுடைய ஹஸ்பண்ட்" என்றபடி வைத்தியர் முன்னே அமர்ந்து இருந்தான் அவன்...
வைத்தியரோ, "ஹாய் வசிஷ்டன்... உங்கள தான் பாரதி கிட்ட கேப்பேன்..." என்று சொல்லிக் கொண்டே வாசலில் நின்ற பாரதியை பார்த்தவர், "கம் பாரதி, சிட்" என்றார்.
அவளும் தயங்கி தயங்கி வசிஷ்டனுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
வைத்தியரிடம் அவள் உடல் நிலை பற்றி கேள்விகளை கேட்டான் வசிஷ்டன்...
நிறையவே கேட்டான்...
பதில் சொல்லி வைத்தியரே களைத்து போனார்...
அனைத்தையும் கேட்டு அறிந்தவன், "இனி எப்போ அழைச்சிட்டு வரணும்?" என்று கேட்க, "அடுத்த மாசம்... டேட் உங்க பைல்ல இருக்கு" என்று அவரும் பதிலளிக்க, அவனோ அந்த பைலில் இருந்த திகதியை பார்த்து விட்டு அதனை அவள் பையினுள் வைத்தவன், அந்த பையை தூக்கிக் கொண்டே வெளியேறினான்...
பாரதியும், "வரேன் டாக்டர்" என்று சொல்லிக் கொண்டே அவனை பின் தொடர்ந்துச் சென்றாள்.
அவளின் பை அவனிடம்...
பையினுள் தான் பணம் எல்லாம் இருந்தது...
வசிஷ்டனிடம் அவள் பணம் கேட்பது இல்லை...
நரேன் கொடுத்த பணம் அவளிடம் இன்னும் இருந்தது...
பணம் இல்லாமல் பஸ்ஸிலும் ஏற முடியாது... ஆட்டோவிலும் போக முடியாது...
வசிஷ்டனோ பையை தூக்கிக் கொண்டே காரில் ஏற அவளுக்கோ என்ன செய்வது என்று தெரியவே இல்லை...
அவனுடன் போகவும் விருப்பம் இல்லை...
பையை கொடுக்க சொல்லி சண்டை போட போனாலும் அவனுடன் பேச வேண்டி இருக்கும்...
கையை பிசைந்துக் கொண்டு அப்படியே நின்றாள்.
அவனோ தனது இருக்கையில் இருந்து எட்டி காரின் அடுத்த கதவை திறந்து விட்டான்...
அவனும் பேசவில்லை...
அப்படியே இருந்தான்...
அவள் சொல்லாமல் மறைத்த கோபம் அவனுக்கு...
இருவரும் பேசாமல் இருக்க, ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் பாரதி அவன் காரில் ஏறிக் கொள்ள, காரும் புறப்பட்டு இருந்தது...
வீட்டுக்கு வந்தவன் குளித்து விட்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அவளும் குளித்து விட்டு களைப்பில் படுத்துக் கொண்டாள்.
சாப்பிடும் நேரம் வந்ததுமே இருவரும் சாப்பிட வந்து அமர்ந்து இருக்க, வசிஷ்டனோ, "பாரதி ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கா... இனி அதுக்கேத்த போல சாப்பாடு ப்ரிபெயார் பண்ணனும்" என்றான் சாப்பிட்டுக் கொண்டே...
ராஜசேகரனும், கோமளாவும், "கங்கிராட்ஸ்" என்ற வார்த்தையுடன் முடித்துக் கொண்டார்கள்...
பாரதிக்கு புரியவே இல்லை...
கர்ப்பமாக இருப்பதற்கு இப்படி கேவலமான ரியாக்ஷன் அவள் எந்த குடும்பத்திலும் பார்த்தது இல்லை... விஷயம் வெளியே தெரிந்து விடும் என்று அவள் யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவில்லை...
அன்று சாப்பிட்டு முடிய வீட்டினருக்கு அழைத்து விடயத்தை சொன்னாள்.
அப்படி ஒரு பூரிப்பு அங்கிருந்து...
அந்த சந்தோஷமான குரல்களே அவளுக்கு அப்படி ஒரு உற்சாகத்தை கொடுத்தது...
ஆனால் இங்கோ கடமைக்கு கூட யாரும் சிரிக்கவில்லை...
எரிச்சலாக இருந்தது, ஆனாலும் அவள் காட்டிக் கொள்ளாமல் தூங்கி விட்டாள்...
அடுத்த நாள் காலையில் ஆயத்தமாகி சாப்பிட்டு முடிய காலேஜுக்கு போக பையை தேடினாள் காணவில்லை...
வாசலில் வசிஷ்டனின் காரின் ஹார்ன் சத்தம் கேட்டது... வெளியே எட்டி பார்க்க, அவனோ பையை தூக்கி காட்டினான்...
அவனுடன் வர சொல்கின்றான் என்று புரிந்தது...
பிடிக்கவில்லை தான்...
ஆனாலும் குழந்தைக்காக கவனமாக இருக்க நினைத்தாள்...
அவனை மீறி ஏதும் ஆகி விட்டால் அவன் ருத்திர தாண்டவம் ஆடுவான் என்று அவன் நடவடிக்கையிலேயே புரிந்தது...
மௌனமாக ஏறிக் கொண்டாள்.
அவனுடனேயே காலேஜுக்கு மறுபடி போய் வர ஆரம்பித்து இருந்தாள்.
இப்படியே நாட்கள் நகர, அன்று விடுமுறை நாள்... அறைக்குள் இருந்து இருந்தே சலித்து விட்டது பாரதிக்கு...
சாப்பிட்டு விட்டு டி.வி முன்னே சென்று அமர்ந்தாள்...
வசிஷ்டனும் அவ்விடத்தில் தான் அமர்ந்து இருந்தான்.
ஹாலில் இருந்து டி.வி பார்த்துக் கொண்டு இருந்த பாரதிக்கு அந்த நியூஸை கேட்டு கேட்டு சலித்து விட்டது. ஒரே நியூஸை விதம் விதமாக சொல்லிக் கொண்டு இருந்தார்கள்...
சுற்றி பார்த்தாள் யாரும் இல்லை வசிஷ்டனை தவிர... அவனோ அவள் இருந்த சோபாவின் அடுத்த முனையில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இருவரும் தான் பேசுவது இல்லையே... அதனால் ஒன்றும் சொல்ல மாட்டான் என்கின்ற நம்பிக்கையில் சேனலை மாற்றினாள்...
அவள் எதிர்பார்த்த போலவே அவன் எதுவும் சொல்லவில்லை. நிமிர்ந்து சேனலை பார்த்து விட்டு மீண்டும் குனிந்துக் கொண்டான்...
ஆனால் கோமளாவோ பாட்டு சத்தம் கேட்டு அடுத்த கணமே அறைக்குள் இருந்து மின்னல் வேகத்தில் வெளியே வந்தார்.
'போச்சு போ' என்று அவரைக் கண்டு பாரதி நினைத்துக் கொள்ள,
"எத்தன தடவை சொல்லி இருக்கேன் இந்த வீட்ல நியூஸ் தவிர எதுவும் போட கூடாதுன்னு... ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா??" என்று திட்ட ஆரம்பித்து விட்டார்.
அவளோ எரிச்சலுடன் பதில் எதுவும் பேசாமல் மீண்டும் சேனலை மாற்றி விட்டு ரிமோட்டை தூக்கி சோபாவில் போட்டாள்...
வசிஷ்டன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
கோமளா அவளை முறைத்து விட்டு அறைக்குள் நுழைய போன அடுத்த கணமே மீண்டும் பாடல் ஒலித்தது.
மறுபடியும் கோபமாக திரும்பி விறு விறுவென வந்த கோமளாவோ, "எவ்ளோ எகத்தாளம் இருந்தா இப்படி பண்ணுவ? உனக்கு சென்ஸ் இல்லையா?" என்று சீற அவரை விழி விரித்து பார்த்தப்படி இரு கைகளையும் தூக்கி காட்டியவள், "நான் பண்ணல" என்றாள்...
"ஐ டிட் திஸ்" என்றபடி போனை பார்த்துக் கொண்டே ரிமோட்டை தூக்கி காட்டினான் வசிஷ்டன்.
கோமளா அதிர்ச்சியுடன் வாயில் கையை வைத்துக் கொண்டார்.
"நீங்க நியூஸ் பார்க்கணும்னா இங்க இருந்து பாருங்க... இல்லன்னா இருக்கிறவங்கள பார்க்க விடுங்க" என்றான் நறுக்கென்று...
வசிஷ்டன் இப்படி பட்டவன் இல்லையே...
அநாவசியமாக பேச கூட மாட்டான்...
இவ்வளவு பேசுகின்றான் என்கின்ற அதிர்ச்சி அவருக்கு...
அதிர்ந்து நின்றவரிடம், "நியூஸ் பார்க்க போறீங்களா?" என்று மறுபடி கேட்டான்...
இல்லை என்று தலையாட்டியவர் அதே அதிர்ச்சியுடன் அறைக்குள் நுழைய, பாரதிக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டே எழுந்தவள், விறு விறுவென தனது அறைக்குள் நுழைந்தாள்...
"அவளுக்காக சேனல் ஐ மாத்துனா அவ கிளம்பிட்டா" என்று வாய்க்குள் முணுமுணுத்தவன், டி.வி யை அணைத்து விட்டு போனுடன் அறைக்குள் நுழைய போனான்...
இதே சமயம், அறைக்குள் வந்த பாரதியோ தன்னை கண்ணாடியில் பார்த்தாள்...
ஒட்டி இருக்கும் கன்னங்கள் மெலிதாக உப்பி இருந்தது...
வயிறு நன்றாகவே தெரிய ஆரம்பித்து விட்டது...
இன்னும் யாரும் கல்லூரியில் கண்டு பிடிக்கவில்லை...
ஆனால் இதற்கு அப்புறம் மறைக்க முடியாது என்று புரிந்தது...
பைஜாமாவும் டீ ஷேர்ட்டும் போட்டு இருந்தாள்.
டீ ஷேர்ட்டுக்கு வயிறு அப்பட்டமாகவே தெரிந்தது...
பக்கவாட்டாக திரும்பிக் கொண்டே, ஒரு கையை அடி வயிற்றில் வைத்து அடுத்த கையால் குட்டியான மேடிட்ட வயிற்றை வருடிக் கொண்டு இருந்த சமயம் வசிஷ்டனோ கதவை திறந்துக் கொண்டே சட்டென உள்ளே நுழைந்தான்...
அவளுக்கு சங்கடமாகி விட்டது...
கையை கீழே இறக்கியபடி ட்ரெஸ்ஸிங் டேபிளில் எதையோ தேடுவது போல பாவனை செய்தாள்.
அவளை கடைக்கண்ணால் பார்த்து விட்டு கையில் போனுடன் பால்கனிக்கு சென்றவனது இதழ்கள் மெலிதாக விரிந்துக் கொண்டன...
சிரிக்கின்றான்... அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது...
அவள் செயல்களை ரசிக்க ஆரம்பித்து விட்டான் என்று உணர்ந்துக் கொண்டான்...
அப்படியே பால்கனியில் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டே அவளை கண்ணாடியூடு கடைக்கண்ணால் பார்த்தான்...
போனுடன் படுத்து இருந்தாள். அவள் ஒற்றை கை மேடிட்ட வயிற்றை வருடியடிபடி இருந்தது...
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே மீண்டும் போனை பார்க்க தொடங்கி விட்டான்.
அடுத்த நாள் காலேஜுக்கு போன பாரதிக்கு லெக்ஷர்ஸ் முடிந்து அடுத்த பாடம் ப்ரீயாக இருந்தது...
நண்பிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டு தான் இருந்தாள் அவள்...
தினேஷோ சிகரெட்டை வாயில் வைக்க, சட்டென அதனை பறித்து கையில் திணித்தவள், "என் கிட்ட இருந்து சிகரெட் பிடிக்காதே" என்றாள்.
"ஏன் டி?" என்று அவன் கேட்க, "ஆஆ அது" என்று தடுமாறிக் கொண்டே, "கொஞ்சம் பிரீதிங் ப்ரப்ளம்" என்றாள்...
அவனும் சிகரெட்டை பாக்கெட்டில் வைத்து விட்டான்...
ரியாவோ, "நம்ம காலேஜ் இவ்வின்ட் வருது பாரதி... போன முறை போல ஒரு குத்து டான்ஸ் ஒண்ணு போடலாம்" என்றாள்.
ராமோ, "ஆமா போன முறை செமயா ஹிட் ஆச்சுல்ல நம்ம டான்ஸ்" என்றான்...
உடனே பாரதி யோசித்து விட்டு, "நீங்க நாலு பேரும் ஆடுங்க... நான் இந்த முறை வரல" என்றாள்.
"என்ன விளையாடுறியா? நீ தான் ஸ்டெப்ஸ் அழகா ஆடுவ... நீ இல்லன்னா எங்க டான்ஸ் மொக்கையா இருக்கும்" என்றான்.
நிஷாவோ, "வசி சார் ஏதும் சொல்வாரா?" என்று கேட்க, பாரதியோ, "ஒண்ணும் சொல்ல மாட்டார்... ஆனா நான் வரல" என்றாள் தயக்கமாக...
ரியாவோ, "சரி அத நாம நாளைக்கு டிஸ்கஷன்ல பார்த்துக்கலாம்" என்று சொல்ல, தினேஷும், ராமும் அங்கே இருந்து கிளம்பி விட்டார்கள்...
மூன்று பேரும் அடுத்த லெக்ஷார்ஸ்காக நடந்துச் சென்ற சமயம், நிஷா ஆராய்ச்சியாக பாரதியை பார்த்தாள்.
பாரதியோ, "என்னடி?" என்று கேட்க, அவளோ, "அது சரி, வர வர நீ என்னடி கொஞ்சம் புஷ்டி ஆன போலவே பீல் ஆகுது..." என்றாள்.
ரியாவோ, "தொந்தி வேற லைட்டா வச்சு இருக்கு" என்றாள்.
பாரதி சற்று தடுமாறி போனாள்.
"ஆஹ்" என்று தடுமாற, ரியாவோ, "மாமனார் வீட்ல சாப்பாடு ஹெவியோ?" என்றாள்.
பாரதியும், "ம்ம், அப்படி தான்" என்று சமாளிக்க முயல, நிஷாவோ, "எனக்கென்னவோ உனக்கு விசேஷம்னு தோணுது" என்க, பாரதிக்கோ தூக்கி வாரிப் போட்டது...
"நீ வேற ஏன் டி அவளை வெறுப்பேத்திட்டு இருக்க? கிஸ்ஸுக்கே வழி இல்லன்னு அவ புலம்புனதை மறந்துட்டியா?" என்றாள்.
பாரதி இப்போது தனக்கு தானே மானசீகமாக திட்டிக் கொண்டாள்.
அந்தரங்கத்தை எல்லாம் சொன்னது தவறென்று இப்போது புரிந்தது...
இனி கவலை பட்டும் பயன் இல்லை என்று நினைத்துக் கொண்டாள்.
நிஷாவோ, "அது ஒன்றரை வருஷத்துக்கு முதல் ரியா... இப்போ தான் மறுபடி ஜாயின் அடிச்சு இருக்காங்களே" என்றாள்.
ரியாவோ, "ஆமால, சொல்லு பாரதி ஏதும் விசேஷமா?" என்று அவள் வயிற்றில் கையை வைக்க போக, சட்டென்று கையை பிடித்துக் கொண்ட பாரதியோ, "சும்மா இருடி" என்றாள்.
நிஷாவோ, "எனக்கு சந்தேகமா இருக்கு ரியா... சிகரெட் பிடிக்க வேணாம்னு தினேஷுக்கு திட்டுனா... டான்ஸ் ஆட மாட்டேன்னு சொன்னா. இப்போ வயித்தை டச் பண்ண விடுறா இல்லை... தொந்தி வச்ச போலவும் இருக்கு" என்று அனைத்தையும் சரியாக கோர்க்க, "சொல்லுடி" என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இருவரும்...
பாரதியோ வழி இல்லாமல், "ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கேன்டி, ஆனா யார் கிட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்... அப்புறம் கலாய்ப்பானுங்க" என்று சொல்ல, ரியாவோ, "வாவ், அப்போ கிஸ் எல்லாம் கிடைச்சுதா?" என்று கேட்டாள்.
அவளை பாரதி முறைத்துப் பார்க்க, நிஷாவோ, "கங்கிராட்ஸ் டி" என்று வாழ்த்து சொல்ல, அவளும் நன்றி சொன்னவள், "ப்ளீஸ் டி யாருக்கும் சொல்லிடாதீங்க" என்று ஒரு பத்து தடவையாவது சொல்லி இருப்பாள்.
ஆனால் விஷயம் எப்படியோ காட்டு தீ போல பரவியது... அது பாரதிக்கும் தெரியவே இல்லை...
அன்று மதியம் கேன்டீனுக்கு வீட்டில் கட்டிக் கொண்டு வந்த உணவை எடுத்துக் கொண்டு ரியா மற்றும் நிஷாவுடன் நுழைந்த பாரதிக்கு தூக்கி வாரிப் போட்டது...
"அம்மாவாக போகும் மிஸிஸ் பாரதி வசிஷ்டனுக்கு வாழ்த்துக்கள்" என்று பேனரே அடித்து விட்டார்கள் அவள் நண்பர்கள்...
உள்ளே நுழைந்ததுமே, "பாரதி ட்ரீட்" என்று ஆளாளுக்கு கேட்க, அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டன...
சட்டென திரும்பி ரியா மற்றும் நிஷாவை பார்க்க, இருவரும் அங்கே இருந்து மின்னலென மறைந்து இருக்க, 'அடிப்பாவிகளா? இப்போ அந்த ஹிட்லர் இத பார்த்தா என்ன வச்சு செய்வானே' என்று நினைத்தபடி நிமிர்ந்தவள் கண்ணில், பேனரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கேன்டீனுக்குள் நுழைந்த வசிஷ்டன் தான் தென்பட்டான். அவனைக் கண்டவளுக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது...