ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ப்ரவினிகாவின் "என் காதலே உன் காலடியில்" கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அடி - 6


நவநீதன் தூங்கி கொண்டிருந்தான். அவன் மருத்துவ அறிக்கையை பார்த்து கொண்டிருந்தாள் தாரணி. மெதுவாக கண்விழித்து பார்த்தான். எதிரில் தாரணியை கண்டவுடன் அவன் கண்களில் ஒளி வந்து பிரகாசமாக மின்னின. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்..


அவள் முடியை தூக்கி கொண்டை போட்டிருந்தாள் அதனால் அவள் பின் கழுத்தில் உள்ள மச்சம் தெள்ள தெளிவாக தெரிந்தது. அவளின் சங்கு கழுத்தில் முடிக்கு கொஞ்சம் கீழே காதுக்கு கொஞ்சம் பக்கத்தில் மிளகு அளவு இருந்தது. அதை பார்த்ததும் அவனுக்கு உள்ளுக்குள் என்னென்னவோ செய்தது. அதையே ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் காதில் சின்னதாக போட்டிருந்த கம்மல் அவள் காதுக்கு தனி அழகை கொடுத்தது போல் இருந்தது.


அவளிடம் ஏனோ அவனுக்கு ஒரு வித ஈர்ப்பு ஒரு பரவசம் இருந்து கொண்டுதானிருக்கிறது. அவனும் அதை துடைத்தெறிய பார்க்கிறான். முடியாமல் அவனுள்ளேயே இன்னும் இன்னும் ஆழமாக தான் பதிந்து தொலைக்கிறது. அதனால் அவன் தரணியை பழி வாங்குவதற்கு பதிலாக எங்கு தடம் மாறிவிடுவோமோ என்று அவனுக்கே வேதனையாக இருக்கிறது.


அவள் திரும்பிய உடனே தன்னுடைய முகபாவனைகளை எளிதில் மாற்றிவிட்டு "எப்படி இருக்கீங்க தரு" என்று கேட்டான். அவனுடைய வார்த்தையில் என்ன முயன்றும் கடுமை வரவில்லை பதிலாக குழைவாகவே வந்தது.


"நல்லா இருக்கேன். நீங்க சாப்பிட்டீங்களா நவநீத்" என்றாள்.


அவன் கண்களில் ஒரு ஒளி மின்னல் போல் தோன்றியது. இதென்ன இப்படி ஒரு பார்வை பார்க்கிறான் என்று அவளுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. "ஏன் ஏதாவது தப்பா கேட்டுட்டானா" என்றாள்.


அவன் வெறும் தலையை மட்டுமே இடம் வலமாக அசைத்து 'இல்லை' என்றான்.


"சரி சொல்லுங்க. நீங்க சாப்டுட்டேன் சொன்னீங்கன்னா மாத்திரை குடுப்பேன்" என்று மறுபடியும் கேட்டாள்.


"சாப்பிடல" என்று ஒற்றையாக பதில் வந்தது.


"ஏன் பசிக்கலயா இல்லை ஏதாவது வலி இருக்கா" என்று பக்கத்தில் வந்து அவன் தலையை தொட்டு பார்த்து கேட்டாள்.


அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். ஏதோ சொல்ல முடியாத ஒன்று அவன் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து கொண்டது.


அவள் கண்களை பார்த்துக்கொண்டே "எனக்கு சாப்பாடு குடுக்க யாரும் இல்லை" என்றான்.


அவன் ஆளை ஊடுருவும் பார்வையே அவளை ஏதோ செய்தது. அதிலும் அவன் சாப்பாடு குடுக்க யாரும் இல்லை என்று சொன்ன உடனே அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.


"ஏன் உங்க அட்டெண்டர் வெளிய போயிருக்காங்களா" என்றாள்.


"எனக்கு என்று யாரும் இல்லை" என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னான். அந்த சமயத்தில் அவனுடைய குரலில் கிஞ்சித்தும் மென்மையில்லை அவ்வளவு ஒரு கடுமை அந்த குரலில்.


உடனே அவனுடைய குரலின் மாறுபாட்டை கவனிக்காமல் அவனுடைய வார்த்தை மட்டும் தந்த அர்த்தத்தில் அவளின் ஆழ் மனதில் உள்ள தாய்மனம் அவனுக்காக வருந்தியது. நவநீதன் அவளுடைய முக பாவனைகளை கவனித்துக்கொண்டே தான் இருந்தான்.


அதை கேட்டதும் அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. " மன்னிச்சுடுங்க உங்கள கஷ்ட படுத்தி இருந்தால் என்னோட சாப்பாடு இருக்கு சாப்பிடறீங்களா" என்று சற்றும் யோசிக்காமல் அவனை மட்டுமே மனதில் இருத்தி கேட்டாள்.


மீண்டும் அவன் கண்களில் ஒளி தோன்றியது. "உங்களுக்கு வேண்டாமா தரு" என்று தன்மையாக கேட்டான்.


"நான் இன்னைக்கு கேன்டீன்ல சாப்பிட்டுகிறேன். நீங்க என்னோடது சாப்பிடுங்க" என்று சொல்லிக்கொண்டே வெளியே போனாள். வரும்போது ஒரு டிபன் பாக்ஸ்சுடன் வந்தாள்.


"இந்தாங்க இதை சாப்பிடுங்க" என்று அவன் கையில் கொடுத்தாள்.


அதை வாங்க கை நீட்டியவன் "ஸ்ஸ்ஸ்…" என்று முனகினான்.


அவள் பதட்டத்தில் "என்னாச்சு நவா. எங்க வலிக்குது. கை ரொம்ப வலிக்குதா. இருங்க நானே டிபன் பாக்ஸ் திறந்து கொடுக்கிறேன் " என்று படபடவென்று அவளே பேசினாள்.. பதட்டத்தில் தாரணி 'நவா' என்று அழைத்ததை உணரவில்லை ஆனால் நவநீதன் அதை கண்டுகொண்டான்.


டிபன் பாக்ஸை திறந்து அவன் மடியில் வைத்தாள். அவன் ஒன்றும் பேசவில்லை அவளை பார்த்துக்கொண்டே சாப்பாட்டில் கை வைக்க போனான். "ஸ்ஸ்ஸ்ஸ்…" என்று வலியில் மீண்டும் ஒரு முனகல்.


அதை பார்த்தவள் ஒன்றும் பேசாமல் அங்கிருக்கும் வாஷ் பேசினில் கை கழுவிட்டு அவனிடம் உள்ள டிபன் பாக்ஸை கையில் எடுத்துக்கொண்டு ஒர் வாய் உணவை அள்ளி அவன் வாய்யிடம் கொண்டு சென்றாள்.


அவன் வலியில் முனகியவுடன் அவள் செய்கைகளை பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் உணவை அள்ளி அவன் வாய்யிடம் கொண்டு வந்தவுடன் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனாலேயே சொல்ல முடியவில்லை. கண்களில் கண்ணீர் வர பார்த்தது. உடனே அதை அடக்கிக்கொண்டு அவள் கண்களை பார்த்துக்கொண்டே உணவை வாங்கி கொண்டான். சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவள் கண்களையே பார்த்துக்கொண்டு கொண்டு தான் உணவருந்தினான்.


ஒரு பத்து நிமிடம் கழித்து "மாத்திரை சாப்பிடுங்க" என்று அவனிடம் கொடுத்தாள்.


அவன் சாப்பிட்டவுடன் வெளியே செல்ல எத்தனித்தாள். அவள் வெளியே கிளம்பியதை பார்த்தவுடன் "தரு எங்க போற" என்றான்.


"ஏன் ஏதாவது வேண்டுமா உங்களுக்கு" என்றாள்.


"இல்லை உன்கூட கொஞ்சம் நேரம் பேசலாம்னு. தனியா இருக்க போர் அடிக்குது" என்று அமைதியாக ஆனால் ஆளை அசரடிக்கும் அடிக்கும் பார்வையுடன் குரலில் அத்தனை மென்மையை கலந்து சொன்னான்.


அவன் பார்வையை அவளால் பார்க்க முடியவில்லை உடனே பார்வையை தாழ்த்தி கொண்டு "நான் இன்னும் சாப்பிடல கேன்டீன்ல சாப்பிட்டு வரேன்" என்று தலையை குனிந்தவாறே சொன்னாள்.


"ஸ்ஸ்ஸ்.." என்று தன் தலையில் தானே தட்டி கொண்டு "சாரி நான் மறந்துட்டேன் நீ போய்ட்டு உடனே வா தரு" என்றான்.


அவன் தலையில் அவனே தட்டியதை பார்த்தவுடன் அவள் இதழில் மெல்லிய குறுநகை ஒன்று வந்தது.


"சாப்பிட்டு இன்னொரு நோயாளியையும் பார்க்கணும். பார்த்துட்டு வர கொஞ்சம் நேரம் ஆகும்" என்றாள்.


"ஏன் நீ நான் இருக்கும் போது என்னை மட்டும் தான் பார்க்கணும். நீ ஏன் இன்னொருத்தர பார்க்கணும்" என்றான்.


"எனக்கு 2 நோயாளியையும் பார்க்கணும் சொல்லிருக்காங்க. நான் பார்த்துட்டு முடிஞ்ச அளவு சீக்கிரம் வர பார்க்குறேன்" என்றாள்.


அவன் மனமே இல்லாமல் "சரி" என்றான். அதற்கு தாரணி தலையை மட்டும் மெல்லமாக 'சரி' என்னும் விதமாக ஆட்டினாள்.


அவள் கதவு முடுவது முடியும் தருவாயில் "தரு" என்று ஆழ்ந்த குரலில் மென்மையாக கூப்பிட்டான்.


உடனே அவள் கதவை திறந்து அவனை "என்ன" என்று வார்த்தையிலும் பார்வையாலும் கேட்டாள். பார்வையில் கேட்டது புருவத்தை மட்டும் மெலிதாக உயர்த்தி கேட்டாள்.


அந்த புருவ அசைவிலே ஒரு நொடி உலகத்தையே மறந்து அவளையே கண் இமைக்கவும் மறந்து பார்த்தான். அவனின் அந்த ஒரு பார்வையே அவளை இடத்தை விட்டு அசையாமல் அதே இடத்திலேயே கால்கள் வேரூன்றியது போல் அவனையே பார்த்தவாறு நிற்க வைத்தது. அவனின் ஆளையே உருவி எடுக்கும் பார்வையில் அவள் அசையவும் மறந்து சுற்றி இருப்போரை மறந்து இந்த உலகத்தை மறந்து அவளை எங்கோ அழைத்து சென்றது. தாரணி தன்னையே மறந்தாள்.


அங்கு எதேர்சையாக வந்த தேவானந் 'என்ன இந்த பொண்ணு வாசலிலேயே அசையாம அப்படி என்னத்த பாக்குது' என்று சற்று உள்ளே எட்டி பார்த்தான். அடப்பாவி இவன் ஏன் இப்படி பார்க்குறான் இந்த பொண்ண. இதுவும் அப்படியே நிக்குது'


லேசாக தொண்டையை செருமி "ஹஹ்ம்ம்ம் ஹ்ஹ்ம்…" என்று இருமி அவன் இங்கு இருப்பதை அவனுக்கு தெரிவிக்க பார்த்தான் "


ஆனால் அவர்கள் இரண்டு பேரும் இந்த உலகத்திலேயே இல்லாதது போல் இருந்தது. 'என்னடா இது எனக்கு வந்த சோதனை' என்று இம்முறை சற்று அழுத்தமாக "தாரணி கொஞ்சம் வழியை விடுறிங்களா" என்று கேட்டான்.


அப்பொழுது தான் இருவருமே இந்த உலகத்திற்கு வந்தனர் "சா.. சா.. சாரி டாக்டர்" என்று நகர்ந்து உள்ளே சென்று நின்றாள்.


உள்ளே வந்து நவநீதனையே ஒருமுறை நன்றாக மேலிருந்து கீழ் வரை நன்றாக பார்த்துவிட்டு "எப்படி இருக்கடா. டேப்லெட்லாம் ஒழுங்கா போடுறியா வலி ஏதாவது இருக்கா" என்றான்.


நவநீதன் அவளை பார்த்துக்கொண்டே "ஆமா உடம்பு முழுக்க வலியா இருக்கு. என்னால தனியா எழுந்துக்க முடில சாப்பிட முடில ரொம்ப வலியா இருக்கு. எனக்கு இன்னொரு நர்ஸ் போடு" என்றான்.


"ஏன் டா மிஸ்.தாரணி தான் இருக்காங்களே. அவங்க ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க. வேலையில் ரொம்ப டெடிகேட்ட் ஆனவங்க டா" என்றான் தேவானந்.


"அவங்க நல்லா தான் பார்த்துகிறாங்க. ஆனால் அவங்களுக்கு இன்னோரு நோயாளியும் பார்த்துக்கணுமாம். அதனால் அவங்களால சரியா இங்க இருக்க முடியல. அந்த டைம் எனக்கு வேற நர்ஸ் போடு. நானே தனியா ஏதாவது பண்ண போய் அது வேற ஏதாவது வலிய கொண்டுவந்துச்சுனா என்னால சீக்கிரம் ஆபீஸ்க்கு போக முடியாம போய்டும். எனக்கு தான் நிறைய லாஸ் வரும். அதனால இன்னோரு நர்ஸ் போடு" என்று ஓர கண்ணில் அவளை பார்த்துக்கொண்டே சொன்னான்.


"இல்லை டா அது எல்லாம் வேண்டாம்" என்று நவநீதனிடம் சொல்லிவிட்டு தாரணி பக்கம் திரும்பி "நீங்க இனிமேட்டு காலை 9 ல இருந்து நைட் 9 வரைக்கும் நீங்க இவங்களையே பார்த்துக்கோங்க மிஸ் தாரணி. இவன் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான நண்பன். அதனால இவங்கள பார்த்துகிற முழு பொறுப்பும் உங்களுக்கு தான். நைட்க்கு நான் வேற நர்ஸ் ஏற்பாடு பண்றேன்" என்று சொல்லிவிட்டு நவநீதனிடம் ஒரு தலையசைப்போடு கிளம்பிவிட்டான்.


தேவானந் சென்ற பிறகு நவநீதனிடம் "சரிங்க சார் இப்ப நான் சாப்பிட்டு வரலாமா" என்றாள்.


அவளை பார்த்து வாய்க்குள்ளேயே சிரித்துவிட்டு "சரிங்க தாரணி நீங்க போய்ட்டு வாங்க" என்றான். அவள் கோபத்தில் 'சார்' என்று அழைத்ததை நினைத்து உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.


நவநீதன் சொன்ன உடனேயே அவள் அவனை திரும்பியும் பாராமல் கிளம்பிவிட்டாள்.


அவன் எப்படி அவளை இந்த அளவு மனதில் நினைக்க இடம் கொடுத்தான் என்றே புரியவில்லை. அவளை பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அணுகியவனால் தாரணியை பார்த்ததும் அந்த எண்ணம் போய் அவள் மட்டுமே அவன் கண்ணுக்கு தெரிகிறாள். அவனின் பழிவாங்கும் உணர்ச்சி பின்னுக்கு போய்விடுகிறது. அவன் எண்ணவோட்டத்தை எண்ணி எண்ணி அவனுக்கு தலைவலி வந்தது மிச்சம்.


ஆனால் அவன் 'தரு' என்று அத்தனை மென்மையாக கூப்பிட்டான். அந்த அழைப்பிற்கு பக்கத்தில் இருந்தாலே காது கேட்பது கஷ்டம் ஆனால் தாரணி வெளியே இருந்து நான் கூப்பிட்டது உணர்ந்து அவள் வந்ததை நினைத்தால் இப்பொழுது கூட நவநீதனுக்கு உடம்பு சிலிர்த்தது.


அவளுக்கும் அவன் மேல் விருப்பம் இருப்பதை நினைத்தால் அப்படியே வானத்தில் சிறகடித்து பறப்பது போன்று இருந்தது. தாரணியை பற்றி அவன் கேள்வி பட்டிருக்கிறான். யாருடனும் சரியாக பேச மாட்டாள். யாராக இருந்தாலும் பேச்சிலும் பார்வையிலும் ஒரு அடி தொலைவிலேயே நிறுத்துவாள் என்பது அவன் கேட்டறிந்த விஷயங்கள். அப்படிபட்டவள் மனதில் அவன் இடம் பிடித்திருப்பதை நினைத்தால் சில்லென்ற காற்று உடலை தழுவுவது போல் இருந்தது.


அதே சமயம் அவன் மேலேயே அவனுக்கு அதிகம் கோபம் தான் வந்தது. அவன் பட்ட வேதனைக்கும், இழப்புகளுக்கும் அவர்களை கொன்று போடும் ஆத்திரம் தலைக்கு மேல் ஏறியது. அதிலும் அவளை தான் அவன் அணுஅணுவாக சாகடிக்க வேண்டும் என்ற தீ மனதில் கொலுவிட்டு எரிகிறது. ஆனால் அவளை பார்த்தால் அவள் கண்களை பார்த்தால் மட்டும் பழி உணர்ச்சி எங்கோ பறந்து போய் விடுகிறது. தன்னை நினைத்து அவனுக்கே வெறுப்பும் கோபமும் ஒருங்கே தோன்றி அவனை உயிரோடு வதைத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இரு கைகளாலும் தலையை தாங்கி கொண்டு அமர்ந்து விட்டான்.


------------------------------


"டேய் என்ன டா பண்றிங்க எங்க இருக்கீங்க எல்லாரும்" என்று அந்த பெண்மணியின் கர்ண கொடூரமான குரலில் பேசியதும் நான்கு ஐந்து வாட்டசாட்டமான தடியன்கள் ஓடி வந்தனர்.


எல்லாரும் ஒன்றாக "என்ன அக்கா கூப்பிட்டீங்களா" என்று கேட்டனர்.


"அந்த அரசியல்வாதி நாகலிங்கம் கூப்பிட்டான் டா. ஒரு வாரம் வெளியூர் போய் ரெஸ்ட் எடுக்க போறானாம். அதனால எல்லாரையும் அவன் இடத்துக்கு வர சொல்றான் டா. எல்லாரையும் அந்த வேன்ல ஏத்து" என்றாள் சொர்ணவள்ளி.


இங்கு பல வழி முறைகளில் கொண்டு வரப்படும் பெண்களை வைத்து ***யல் தொழில் செய்யுவது தான் அவள் தொழில். அவளுக்கு தெரியாத ஆட்களே கிடையாது. அரசியல்வாதியில் இருந்து பெரும் புள்ளிகள் எல்லாரும் அவள் கையில். அவர்களின் ஒவொருவரின் எண்ணத்திற்கு ஏற்ற மாதிரி வித விதமாக பெண்களை வைத்திருப்பாள். அவர்கள் மனதிற்கு ஏற்றது போல் பெண்கள் அங்கு இருப்பதால் சொர்ணவள்ளிக்கு வருமானம் கோடிகளில் தான் புரளும்.


"இல்ல அக்கா. இது என்ன புதுசா அந்த ஆள் கிட்ட யாரு வேணுமோ வந்து பார்த்து இருக்க சொல்லு இல்லை கூட்டிட்டு போக சொல்லு. அத விட்டுட்டு எல்லாரையும் ஒட்டு மொத்தமா எப்படி கூட்டினு போறது. மொதல்ல அதுக்கு வேன் வேற பத்தாதே" என்றான் ஒரு அல்லக்கை.


"பேசி பார்த்துட்டேன் டா ஒத்துக்க மாட்டேன்றான். அவனுக்கு புடிச்ச பொண்ண கூட்டிட்டு அப்படியே வெளியூர் போய்டுவானாம்" என்றாள்.


"சரிக்கா எப்ப எல்லாரையும் அனுப்பனுமா கேட்டியா" என்றான் மற்றொருவன்.


"இப்ப உடனே அனுப்ப சொன்னான்" என்றாள்.


"சரிக்கா" என்று எல்லாரும் களைந்து சென்றனர்.


"டேய் ஒரு நிமிஷம்"


"என்ன அக்கா" என்று எல்லாரும் நின்றனர்.


"கூட அந்த அழகு பைத்தியத்தையும் கூட்டிட்டு போங்க டா" என்றாள் சொர்ணம்.


"அக்கா அவளையா. அவ வெளி இடத்துக்குலாம் சரி பட்டு வர மாட்டாளே அக்கா. இங்கேயே முரண்டு புடிக்குறவ அவளை பத்தி நல்லா தெரிஞ்சதுனால ஏதேதோ சொல்லி அடி பணிய வைக்குறோம். இதுல வெளி இடம்னா அந்த அழக நம்ப முடியாதே. ஏமாத்திட்டு ஓடிட்டான்னா என்ன பண்றது" என்றான் ஒருவன்.


"நான் அந்த ஆளு கிட்ட சொல்லி பாத்துட்டேன் டா. போன இரண்டு தடவை வந்த அப்பவே அவ கிட்ட தான் போனான். இப்பயும் அவளையும் கூட அனுப்புனு சொல்றான். நான் கூட எவ்வளவோ புதுசு இருக்குனு சொன்னா கூட கேக்க மாற்றான். வேற என்ன பண்றது. நீ அவளை கண்காணிக்க இன்னும் ஆளுங்க கூட போங்க. அந்த ஆளு அவளை கூட கூட்டிட்டு போனான்னா நீங்களும் கூட அவளை கண்காணிக்கறத்துக்கு போங்க. எனக்கு என்னவோ அவளை தான் கூட்டிட்டு போவான்னு தோணுது" என்றாள் சொர்ணவள்ளி.


"நீ அவளுக்கு உடம்பு சரி இல்லன்னு சொல்ல வேண்டியதுதானே அக்கா"


"டேய் நம்ப அந்த மாதிரி செஞ்சோம்னா நம்பள நம்ப மாட்டானுங்க அதுக்கப்பறம் அடுத்தவாட்டி இங்க வராம வேற இடத்துக்கு போய்டுவானுங்க. இப்ப நம்ப கையில புழங்குற பணம் இருக்காது. வேற கைக்கு மாறி போய்டும். அதனால யோசிச்சு தான் செய்யணும்" என்றாள்.


"நீ நான் சொன்னத செய்ங்கடா. கூட இன்னும் ஆளுங்கள கூட கூப்டுக்கோ" என்றாள்.


"சரிங்க அக்கா நீ சொல்றமாதிரியே செய்றோம்" என்று கிளம்ப தயாரானான்.


அந்த 'அழகு பைத்தியம்' தான் இந்த சாக்கடையில் இருந்து பெண்களுக்கு விடுதலையும் மறுவாழ்வும் கிடைக்காத என்றாவது ஒரு நாள் வெளியுலகத்துக்கு வந்து சுதந்திர காற்றை சுவாசித்து சுதந்திர பறவையாக பறக்க மாட்டோமா. தனக்காக வாழும் நாள் எந்நாளோ என்று ஏங்கும் 'தாருண்ய லக்ஷ்மி'.


பெயருக்கேற்றார் போல் அவள் முகத்தில் லக்ஷ்மி தேவியே இந்த மானிட உலகில் பிறப்பெடுத்தது போல் இருக்கும்.


ஆனால் அவள் தான் அவர்கள் ஒவ்வொருவறையும் காளி அவதாரம் எடுத்து வந்தது போல் அந்த கயவர்களை விரட்டி விரட்டி சூறையாடுவாள் என்பது ஏனோ அவர்களுக்கு தெரியவில்லை.


அந்த லக்ஷ்மி தேவி அந்த ஈவு இரக்கமில்லாத கயவர்களை காவு வாங்கி இந்த அகிலத்தை காப்பாளா? அந்த பெண்களின் வாழ்வுக்கு விடுதலை அளித்து உணர்வுள்ள ஒரு மானிட பிறவியாக மறுவாழ்வு வாழ வழி செய்வாளா? அண்டத்தில் உள்ள பெண்களுக்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் அந்த அரக்கர்களின் உயிரை குடித்து அவர்களை காத்தருள்வாளா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடரும்.

------------------------------

ஹாய் நண்பர்களே,


"என் காதலே உன் காலடியில்" அத்தியாயம் - 6 பதிந்துவிட்டேன்.

படிச்சுட்டு எப்படி இருக்குன்னு இந்த வளரும் எழுத்தாளருக்கு ஒரு வரி கமெண்ட் சொல்லிட்டு போன கொஞ்சம் என்னை மெருகேற்ற உதவும் தோழமைகளே.


உங்கள் தோழி,

ப்ரவினிகா.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாய் மக்களே,
கொஞ்சம் தனிப்பட்ட வேலைகள் இருப்பதால் இக்கதை அடுத்தவாரம் பதிவிடப்படும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
ப்ரவினிகா
 
Status
Not open for further replies.
Top