ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ப்ரவினிகாவின் "என் காதலே உன் காலடியில்" கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
என் காதலே உன் காலடியில்


அடி - 1

"மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே"

என்று எப்பொழுதும் போல அன்றும் தன் விடியற்காலை பொழுதில் விநாயகர் துதியை பாடி ஆரம்பித்தார் அந்த வீட்டின் குடும்ப தலைவி ராணியம்மாள். அதிகாலையில் எழுந்து காலை உணவு மற்றும் மதிய உணவும் சமைத்து வைத்து விட்டு தன் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார். அப்பொழுது தான் தூங்கி எழுந்து வெளியே வந்த தன் மகன் சிவராமகிருஷ்ணனை பார்த்தார். "கிருஷ்ணா நான் சாப்பாடு செஞ்சி வச்சுட்டேன் பா. நீ சாப்டு வேலைக்கு போ பா. இன்னிக்கு என்ன சீக்கிரம் வர சொன்னாங்க. டைரக்டர் 8 மணிக்குலாம் வந்துருவாராம் பா. நான் 7 மணிக்குலாம் அங்க இருக்கனும்" கிரிஷ்ணனோ "சரி மா நீங்க பார்த்து போய்ட்டு வாங்க".

ராணியம்மாள் தரமணியில் இருக்கும் எம் ஜி ஆர் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பெருக்கும் வேலை பார்க்கிறார். நாம் துடைப்பத்தை எடுத்து தொடர்ந்து அரை மணி நேரம் பெருக்கினாலே கை விரல், முட்டி, இடுப்பு எல்லாம் வலி எடுத்துவிடும் ஆனால் இங்கு வேலை செய்பவர்கள் அவர்கள் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். அதுவும் பட பிடிப்பு முடிந்து அவர்கள் கிளம்பி விட்ட பிறகு பார்த்தால் அந்த இடம் ஒரு போர்க்களம் போல் காட்சி தரும். அது எல்லாவற்றையும் சுத்த படுத்தி விட்டு கழிவறை போய் பார்த்தால் அது ஒரு முக சுளிப்பு ஏற்படும் அளவிற்கு இருக்கும். பெரும்பாலானோர் அவர்கள் விட்டு கழிவறை சுத்த படுத்துவதர்கே யோசிப்பவர்கள் ஆனால் இங்கு எல்லா விதமான மனிதர்களும் வருவார்கள் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறையை சுத்த படுத்தி விட்டு சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிடவே தோணாது இது போல அவர்கள் சாப்பிடாமல் இருந்த நாட்கள் அதிகம். இங்கு ஒரு வசதி பட பிடிப்பு இருக்கும் நாட்களில் சாப்பாடு எடுத்துக்கொண்டு வர வேண்டியதில்லை. ஷூட்டிங் சாப்பாடே இருக்கும். இல்லாத நேரங்களில் வீட்டில் இருந்து எடுத்து வர வேண்டும். இன்றும் அது போல் எடுத்துகொண்டு போக வேண்டாம்.

கிருஷ்ணன் எழுந்தும் எதையோ எண்ணிக்கொண்டே படுத்து இருந்தான். 'இன்னைக்கு எந்தந்த கம்பெனிக்கு செல்வது என்று எண்ணிக்கொண்டு எழுந்து இன்று வந்த பேப்பரை பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு இரண்டு கம்பெனி பார்த்து குறித்து கொண்டு இன்றைக்கு இங்கு செல்லலாம்' என்று எழுந்து கிளம்ப ஆரம்பித்தான்.

கிருஷ்ணன் தன் அம்மாவை போன்று கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பான். அவன் சிரித்தாள் அழகாக இருக்கும். குள்ளமாகவும் இல்லாமல் உயரமாகவும் இல்லாமல் நடுவில் இருப்பான். இப்பொழுது வேலை தேடிக் கொண்டு இருக்கிறான். படித்தது டிப்ளமோ தன் அம்மா படும் கஷ்ட்டம் பார்த்து சீக்கிரம் வேளைக்கு போக வேண்டும் என்று எதை படித்தால் உடனடியாக வேலைக்கு போகலாம் என்று அவனாகவே யோசித்து 10த் படித்ததும் டிப்ளமோ சேர்ந்து விட்டு அதை முடித்ததும் வேளைக்கு போக ஆரம்பித்து விட்டான். கடந்த 4 வருடத்தில் ஏதேதோ காரணத்தினால் 2 கம்பெனி மாறிவிட்டான். இப்பொழுது 3 மாதங்களாக வேலை தேடி கொண்டிருக்கிறான். இந்த 3 மாதங்களும் வேலை கிடைக்கவில்லையே என்று மிகவும் நொந்து விட்டான். இன்று எப்படியாவது வேலை கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு கிளம்பினான்.

அந்த கம்பெனியின் வாயிலிலேயே பெயர் மற்றும் அடையாள அட்டையை காட்டி விட்டு உள்ளே சென்றான். அது கொஞ்சம் பெரிய கம்பெனியாக இருந்தது. இது வரை அவன் சென்று வந்தது சிறிய கம்பெனி அளவில் தான் இன்று இந்த கம்பெனியை பார்த்ததும் பயம் வந்து விட்டது. என்னென்ன கேட்பார்களோ என்று சற்று பயத்துடனே உட்கார்ந்து இருந்தான். முதல் இரண்டு சுற்றில் தேர்வாகி இருந்தான். . அந்த இரண்டு சுற்றும் ஒரு கம்ப்யூட்டர் லெவல் டெஸ்ட் அதனால் அந்த அளவிற்கு பயம் இல்லாமல் அந்த சுற்றில் தேர்வாகி இருந்தான். அடுத்து மேனேஜர் லெவல் இன்டெர்வியூவிற்காக காத்து கொண்டிருந்தான். அவன் என்ன ஓட்டத்தைக் கலைப்பது போலவே சிவராமகிருஷ்ணன் என்று பெயரை கூப்பிட்டார்கள். இன்டெர்வியூ அறையில் நவநீதம் அமர்ந்து இருந்தார். அவன் ஒரு வித நடுக்கத்துடனேயே உள்ளே சென்றான்.

"சொல்லுங்க சிவராமகிருஷ்ணன் என்ன பண்றீங்க"

"எ…. எ.. என்.. பெயர் சி.. சிவராமகிருஷ்ணன் சார். டிப்ளமோ ப…... ப.. படிச்சுட்டு 4 வருடம் ஒ…. ஒ… ஒ………. ஒரு கம்பெனில……"

"நீங்க கடைசியா என்ன படம் பார்த்திங்க கிருஷ்ணன்"

"சார் புரியல. என்ன படம்….னா.. "

"இல்ல கிருஷ்ணன் எனக்கு பார்த்தீங்கன்னா இப்ப ப்ரிண்ட்ஸ் கூட படம் பார்க்கறது அப்பறம் அவங்க கூட லாங் டிரைவ் போகறது இந்த மாதிரி பிடிக்கும். ஒரு டைம் நாங்க ஒகேனக்கல் போனோம். அப்ப ஒரு பொண்ணு பார்த்தேன். செம அழகு அவளோ க்யூட். அந்த மாதிரி ஏதாவது உங்களுக்கு ஏதாவது என்டேர்டைன்மெண்ட் இருக்குமான்னு கேக்குறேன்"

"அது அந்த மாதிரி நான் எங்கயும் போனது இல்லை sir. 3 வருடத்துக்கு முன்னாடி என் ப்ரிண்ட் கல்யாணத்துக்கு ராமநாதபுரம் போனோம் அப்ப எங்க கூட பொண்ணுங்க 2 பேரும் வந்தாங்க. அப்ப ஆன்லைன் டிக்கெட் தான் எடுத்தோம் சார். ஆனா திரும்ப வரும்போது நைட் டிக்கெட் செக்கிங் வந்துருந்தாங்க எங்க டிக்கெட் செக் பண்ணிட்டு உங்க அடையாள அட்டை குடுங்கன்னு கேட்டாங்க sir. நாங்க 8 பேர் ஆனா 4 பேர் தான் அடையாள அட்டை வச்சுருந்தோம். முக்கியமா பொண்ணுங்க 2 பேர்கிட்டையும் இல்ல. உடனே இல்லாதவங்க அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிடுங்கனு சொன்னாங்க சார். வெளிய நல்லா மழை வேற சார் என்ன பண்றதுனு தெரில நாங்க அவர்கிட்டயே கேட்டோம் சார் எங்களுக்கு தெரியாது இந்த ஒரு தடவை எங்கள விட்டுருங்க அடுத்த தடவை இப்படி பண்ண மாட்டோம்னு எவ்வளவோ கெஞ்சுனாம். ஆனால் அவரு விடவே இல்ல நீங்க இறங்கி தான் ஆகணும்னு பணம் தரோம்னு சொன்னோம் ஆனா அப்ப கூட அவரு கேக்கல.

நாங்க கல்யாணதுக்கு போன பிரின்ட்டோட அண்ணன் அவங்க ஊரு MP. அவர் கிட்ட போன் பண்ணி சொன்னோம். அவரும் அவரு தெரிஞ்சவங்க கிட்ட பேசி அவர் கிட்ட பேசுனா அப்ப கூட இவரு ஒதுக்கல சார். நீங்க இறங்கி தான் ஆகணும்னு நிக்கறாரு. ரொம்ப டென்ஷன் சார் எங்களுக்கு என்னடா இது வந்த இடத்துல இப்படி பிரச்னை ஆயிடுச்சேனு எங்களுக்கு ஒரே கஷ்டமா ஆகிடுச்சு. போற அப்போ இருந்த சந்தோஷம் வரும்போது சுத்தமா போய்டுச்சு sir. கடைசியா MP என்ன பிரச்சனை அவர் கிட்டனு கண்டு பிடிச்சு அத சரி அந்த ட்ரெயின்லேயே நீங்க போங்க உங்கள யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு சொன்னாரு.

அப்பறம் நாங்க வீட்டுக்கு போய்ட்ட பிறகு அவர்கிட்ட கேட்டா யாரோ பணக்கார பசங்க 5 பேர் குடிச்சுட்டு டிக்கெட்டும் உறுதி ஆகாம இருந்துற்கு அதனால அவங்க கிட்ட நான் உங்களுக்கு டிக்கெட் உறுதி செஞ்சு தரேன் என்ன தருவீங்கன்னு பேரம் பேசி இருக்காரு. அதனால எங்கள இறக்கி விடுறதுலயே குறியா இருந்தாரு. கடைசியா என் பிரின்ட் அண்ணா அத விட அதிகமா பணம் தரேன்னு சொன்ன உடனே தான் எங்கள விட்டிருக்காரு சார்.

ச்ச என்ன மனுஷன் இவங்கல்லாம்னு தான் தோணுச்சு சார். "

"ஹ்ம்ம் இப்ப வெளி ஊருக்கு பயணம் பண்ணும்போது எல்லா எடுத்துட்டு போறிங்களா கிருஷ்ணன்"

"அட நீங்க வேற சார் அதுல இருந்து நான் எனக்கு மட்டும் இல்ல என் பிரிண்ட்ஸ்க்கும் எங்க போரதா இருந்தாலும் அவங்களையும் எல்லா எடுத்து வச்சுட்டீங்களானு விசாரிச்சுட்டு தான் போக சொல்றதே. இது என் பிரிண்ட்ஸ்க்கு மட்டும் இல்ல எனக்கு தெரிஞ்சவங்களுக்கு கூட சொல்லி வச்சுருக்கேன் sir"

"ஹ்ம்ம் இப்ப எப்படி இருக்கு கிருஷ்ணன். பீலிங் குட். இப்ப நம்ப இன்டெர்வியூக்கு போகலாமா "

"சார் அப்ப இதல்லாம் எனக்கு கம்போரட்டப்பிலா இருக்கணும்னு தான் கேட்டிங்களா "

"ஆமா கிருஷ்ணன் சொல்லுங்க இப்போ போலாமா. "

தொடரும்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அடி - 2

"அம்மா…… ராணியம்மா… எங்க இருக்கீங்க சீக்கிரம் வாங்க. உங்க பையன் பண்ண வேலையால நான் இன்னைக்கு கிளாஸ்ல அசிங்க பட்டு வந்துருக்கேன். என் மானமே போச்சு இன்னைக்கு ரொம்ப அசிங்க பட்டு, துன்ப பட்டு, துயர பட்டு, காரி துப்ப பட்டு வந்துருக்கேன்." 'என்ன நம்ப காட்டு கத்தலா கத்துறோம் வரங்களா பாரு'. என்று கத்தி கொண்டிருந்தாள் சிவதாரிணி. 'நம்பல என்ன எங்கயுமே மதிக்க மாற்றாங்க. வர வர நமக்கு மரியாதை கொறைஞ்சுகிட்டே போகுதே என்ன பண்றது. சரி முதல் இந்த பிரச்சனைய பார்ப்போம்.'


'இவங்க எங்க போய்ட்டாங்க இவளோ நேரம் ஒருத்தி புலம்பிகிட்டு இருக்கேன் வாரங்களா பாரு' என்று தன்னக்குள்ளயே புலம்பியவள். அன்னையை தேடி போனாள்.


உள்ளிருந்து வந்த அன்னையை கண்டவள் "மா இங்க ஒருத்தி காட்டு கத்தலா கத்திக்கிட்டு இருக்கேன் வந்ததுல இருந்து நீ பாட்டு சாவகாசமா எழுந்திருச்சு வர. என்ன கண்டா உனக்கு பயமே இல்லாம போச்சு போல. ஒருநாள் நீ என்ன நினச்சு பயந்து நடுங்கிற மாதிரி செய்யுறேன் இரு. (அப்படி ஒரு நாள் கூடிய சீக்கிரமே வர போவது தெரியாமல் அவளே அவள் வாயால் விளையாட்டு போல கூறிவிட்டாள். அது எவ்வளவு நிஜம் என்பது நடக்கும்போது புரியும்) தெனாவட்டாவ வர. பொண்ணு காலேஜ்ல இருந்து வருதே அவள வாசல்லேயே ரிசீவ் பண்ணுவோம்னு இல்லாம என்ன இது ராணு. "


"அட நீ வேற ஏண்டி கடுப்ப கிளப்புற இன்னைக்கு எனக்கு மனசே சரி இல்லமா. ரொம்ப வேதனையா இருக்கு என்னடா இது பெண் ஜென்மம்னு தோணுது. "


"ஒய் ராணு வாட் ஹாப்பேன். எவன் உன்ன என்ன சொன்னது சொல்லு அவனை பாம் வச்சு தகர்த்திடலாம். அவனை நசுக்கு நசுக்குனு நசுக்கி தூக்கி எறிஞ்சுடலாம். நான் இருக்கும் போது நீ ஏன்டா கவலை பட்ற செல்லம். எனக்குனு ஒரு நண்பர்கள் கூட்டம் இருக்கானுங்க நான் ஹ்ம்ம்ம் னு ஒரு வார்த்தை சொன்னா போதும் உனக்கு பிரச்சனை குடுக்கிறவங்கள கட்டம் கட்டி தூக்கி போட்டு தொம்சம் பண்ணிடுவாங்க அப்படி ஒரு உயிர் நண்பர்கள். நீ பார்த்தது இல்லையே."


(மை மைண்ட் வாய்ஸ் - " இன்னைக்கு ஒருத்தன் எனக்கு லவ் லெட்டர் குடுத்தான்டா"னு சொன்னதுக்கு நம்ப கேடி கூட்டம் மொத்தமா திரும்பி ஒரு பார்வை பார்த்துட்டு " அவனுக்கு கண்ணு சரியா தெரிஞ்சிருக்காது அதனால பீல் பண்ணாதனு சொல்றாங்க. அப்படியும் அவன் நாளைக்கு வந்தா ஒன்னும் இல்லமா ஒரு 2 மணி நேரம் அவனை கூட்டிட்டு வெளிய சுத்துமா அவனே நீ போடுற ரம்பத்துக்கும் நீ திங்குற தீனி பண்டத்துக்கும் இனி இந்த தீனி பண்டாரம்பம் நமக்கு வேண்டாம்னு அவனே ஆட்டோமேட்டிக் ஓடி போயிருவான்மா நீ கவலை படாத சரியா"னு கேட்ட கூட்டம் நம்ப கூட்டம். "நாங்களே உன்ன நண்பியா போய்டியேனு வச்சுருக்கோம் ஒழுங்கா ஓடி போயிரு"னு சொன்னானுங்க. 'உண்மையிலேயே நான் பிரச்சனைனு போனா திரும்பி கூட பாக்க மாட்டாங்க. இப்படி நம்மளே நாம எல்லாசைடும் கெத்து கட்டிக்கிட்டா தான் உண்டு ஹ்ம்ம் நம்ப தலையெழுத்து அப்படி என்ன பண்றது'.) "நல்ல வேலை நீ பார்க்கல. பார்த்த… " 'காரித்துப்பிடுவ என் மூஞ்சில. கடவுள் இருக்கான்டா குமாரு நம்ப மானத்த காப்பாத்த.'


"என்ன இந்த ராணு மா சீரியஸ் திங்கிங்ல இருக்கு பிரச்சனை பெருசோ இவங்க பிரச்சனை என்னனு கேட்டு அதையும் நம்ப சரி பண்ணுவோம். ஒரு நாளைக்கு எத்தனை பஞ்சாயத்து தான் பண்றது". என்று மெல்ல முணுமுணுத்து விட்டு அவர் பக்கம் திரும்பினாள்.


"ராணு மா என்ன ஆச்சு சொல்லு. "


"நான் நேத்து ஒரு பொண்ணு சொன்னல பாப்பா. பேரு மகிழினினு "


"ஆமா நேத்து சொன்ன அந்த குட்டியா க்யூட்டா என்ன மாதிரியே அழகா இருக்கானு சொன்ன அதுக்கு என்ன இப்ப. நேத்து நான் பாதி வழில வரும்போது நீ அந்த பொண்ணு கூட பேசிட்டு வந்த நான் கூட உன்ன ஏத்தி கிட்டு வரும்போது என்ன மாதிரியே செம்ம க்யூட்னு சொன்னன். நீ கூட அப்ப மொறைச்சியே இப்ப எதுக்கு அந்த பொண்ண பத்தி பேசுற சொல்லு "


"அந்த பொண்ணு இன்னைக்கு செ செ செத்து போச்சு பாப்பா. "


"என்னமா என்ன சொல்ற பொய் சொல்லத" என்று அதிர்ச்சி தாங்காமல் எழுந்து நின்று கத்திவிட்டாள்.


"இல்லாம உண்மைய தான் சொல்றேன். நேத்து அந்த பொண்ணு இங்க ஷூட்டிங்க்கு வந்துச்சு. என்கிட்ட இங்க ஏதாவது ஒரு மாசத்துக்கு தங்க வாடகைக்கு ஏதாவது வீடு கிடைக்குமான்னு கேட்டுச்சு. நம்ப ஏரியால தான் ஒரு மாசத்துக்குளாம் குடுக்க மாட்டாங்களே அதான் இல்லனு சொல்லிட்டேன். அந்த பொண்ணு நேத்து எங்க போச்சோனு தெரிலமா. நேத்தே எல்லாரும் அப்படி பார்த்தாங்க அந்த பொண்ண அப்பயே எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. யாரு எந்த படுபாவி என்ன பண்ணனோ தெரில இப்படி பண்ணிட்டானுங்க. அவ்ளோ அழகா இருந்த பொண்ணுமா. மனசே ஆர மாட்டுது ".


"என்னால இத ஏதுக்கவே முடில ம்மா. நேத்து பார்த்த பொண்ணு இன்னைக்கு இல்லனா என்ன சொல்றதுனு ஒன்னும் புரில ம்மா. எனக்கு பட படனு பயமா இருக்கு. "


" ஆமா பாப்பா இன்னைக்கு காலைல வேலைக்கு போனதும் அங்க போலீஸ் இருந்துச்சு என்னனு விசாரிச்ச அப்பறம் தான் சொன்னாங்க. அந்த பொண்ணு என்கிட்ட தான் கடைசியா பேசுச்சுனு என்கிட்ட வந்து விசாரிச்சாங்க. நான் அந்த பொண்ணு வீடு வாடகைக்கு கேட்டுதுனு சொன்னேன். அப்பறம் போய்ட்டானுங்க. ஏதாவது விசாரிகரத்துக்கு வந்து கூப்டாங்கன்னா அப்ப வர சொன்னாங்கடா. இனிமேட்டு நீ அங்க வேலை செய்யுற இடதுக்குல்லாம் வராத பாப்பா. நானே வந்துருவேன் நீ நேரா வீட்டுக்கே வந்துரு சரியா."


"அம்மா எனக்கு என்னமோ பயமா இருக்கு. என்னனு சொல்ல தெரில. நீ வேளைக்கு போய்த்தான் ஆகணுமா. பேசாம வேலைய விட்டு நின்னுடு ம்மா. "


"இல்ல பாப்பா நான் இப்ப நின்னா என்மேல தேவ இல்லத சந்தேகம் வரும் அப்பறம் வேணும்னே நான் தானு கதை கட்டி விட்டாலும் விடுவாங்க. தப்பே செய்யாம நாம ஏன் பயப்படணும் சொல்லுமா. அதனால நீ மட்டும் அங்க வராத அண்ணனையும் இனிமேட்டு அங்க வர வேண்டாம்னு சொல்லணும். " என்று யோசனையுடனே உள்ளே சென்றார்.


"ஹ்ம்ம் சரி மா. " இருந்தாலும் ஒரு வித கலக்கத்துடனே உள்ளே சென்றால் தாரிணி.


ராணியம்மாள் கல்யாணம் ஆன உடனேயே கணவரை பற்றி தெரிந்து கொண்டு கூலி வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு இந்த சினிமா துறையில் பெருக்குற வேலை கிடைத்தது. அவர் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார். சிரித்தாள் அதை விட அழகு.


அவரை அங்கு வேலை செய்பவர்கள் அவரின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி "உன் புருஷன் குடிகாரனாமே அவனால உனக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல போல இருக்கு நான் உன்னை உன் பெயர் போல ராணி மாதிரி வச்சுக்கிறேன் வா" என்று பலவித பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தது. அதன் பின் அவர் சிரிப்பது என்ன பேசுவது கூட நிறுத்தி விட்டார். தேவைக்கேற்ப பேசுவது, பார்ப்பவர்களை பார்வையிலேயே தள்ளி நிறுத்துவது, அவர் பார்க்கும் பார்வையே நெருப்பு போன்று இருக்கும் அதிலே நிறைய பேர் அவர் பக்கம் கூட வர மாட்டார்கள். என்ன பேசுவது இருந்தாலும் ஒரு அடி தள்ளி நின்றே பேசுவார்.


அப்படியும் ஒரு சில ஒநாய்க்கள் அவரிடம் அத்து மீற முயற்சி செய்யும். அவரிடம் எப்பொழுதும் ஒரு சிறிய கத்தி ஒன்றை இடுப்பிலேயே சொருகி வைத்து இருப்பார். அது தான் இன்றைய வரை அவரை காப்பாற்றி வருகிறது. இது மாதிரி கஷ்டங்கள் நிறைய வந்தாலும் அதை தன் பசங்களிடம் ஏதும் தெரியாமல் பார்த்து கொள்வார்.


கிருஷ்ணன் அதை ஒரு நாள் எப்படியோ கண்டு பிடித்து விட்டான். அதில் இருந்து நம்ப அம்மாவை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் சீக்கிரம் படிப்பு முடித்து வேலைக்கு போக வேண்டும் என்று மனதில் உறுதியே எடுத்து கொண்டான். இத்தனைக்கும் அவன் நன்றாக படிக்கும் பிள்ளை 10த் மார்க் 450 க்கு மேல் எடுத்தும் (யாரோ அவனிடம் 10த் முடித்து உடனே டிப்ளமோ படித்தால் வேலை கிடைத்துவிடும் என்று சொன்னதை மனதில் வைத்து கொண்டான்) டிப்ளமோ தான் படிப்பேன் என்று படித்து வேலைக்கு போக ஆரம்பித்தான்.


இது எல்லாத்தையும் தங்குன இரும்பு மனுஷி இன்று கொஞ்சம் கலங்கி தான் போனார். இருந்தாலும் பிள்ளைகளிடம் அதை கட்ட விரும்பவில்லை. இன்று தன் பெண்ணிடம் சொன்னது கூட மகளின் பாதுகாப்பின் பொறுத்து தான் இதை கூறினார்.


……………


"சொல்லுங்க mr. சிவராமகிருஷ்ணன் எல்லா சுற்றும் தாண்டி வேலை கிடைச்சாச்சு இனி உங்க லைப் பத்தி என்ன பிளான் வச்சுருக்கீங்க "

இந்த இன்டெர்வியூவின் கடைசியில் இருவரும் கொஞ்சம் நல்லா பேசிக் கொள்கிற அளவிற்கு வந்து விட்டார்கள். அதனால் இப்பொழுது பேசிகொண்டே வீட்டிற்கு கிளம்பினார்கள்.

"எனக்கு எங்க அம்மாக்குனு ஒரு நல்ல வீடா கட்டி குடுக்கணும் சார். அவங்க கல்யாண ஆன நாள்ல இருந்து வேளைக்கு போய் எங்கள கஷ்ட்ட பட்டு படிக்க வச்சாங்க. அவங்கள நல்லா பாத்துக்கணும் சார். இதுவரைக்கும் அவங்களுக்குனு எந்த சந்தோஷமும் அனுபவிச்சது இல்ல."


"இதுக்கு அப்பறம் அவங்க பேருக்கேத்த ராணி மாதிரி அவங்கள நான் வச்சு பார்த்துக்கணும் சார். அதுக்கு பிறகு என் தங்கச்சிக்கு நல்லா இடத்துல கட்டி குடுக்கணும். எங்க அப்பா மாதிரி அவ நல்ல கலரா அழகா இருப்பா அவளுக்கேத்த மாதிரி நல்ல பையனா பாக்கணும். அப்பறமேட்டு தான் நான் என்ன பத்தி யோசிப்பேன் சார்".


"எங்க அப்பா சரியான குடிகாரர் சார் அவர நம்பினா நாங்க இவளோ தூரம் வந்துருக்க முடியாது சார். எங்க அம்மா ஆணி வேர் மாதிரி எங்க குடும்பத்தை தாங்குறாங்க இதுக்கு அப்பறம் அவங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கணும் சார். "


"ஹ்ம்ம் ரொம்ப பொறுப்பா இருக்கீங்க mr. கிருஷ்ணன் குட். உங்க தங்கச்சி என்ன பண்றாங்க."


" அவ இப்ப தான் காலேஜ் 2 இயர் நர்சிங் படிக்கிறா. அவ அழகுக்கு ஏத்த மாதிரி நல்லா பையனா பாக்கணும் சார். அவ எங்க அப்பா மாதிரி நல்லா கலர் அழகா இருப்பா சார். அவளுக்கு நல்லா வாழ்க்கைய அமைச்சு குடுத்துட்டு அதுக்கு அப்பறம் தான் நான் என்ன பத்தி யோசிக்க முடியும் சார். "


"ஹ்ம்ம் ஓ கே கிருஷ்ணன் நான் கிளம்புறேன். நீங்க நாளைல இருந்து ஆபீஸ்க்கு வந்துருங்க. நாளைக்கு பாக்கலாம் பாய். " போகும் போது ஒரு விஷம சிரிப்பொன்றை கிருஷ்ணனை பார்த்து சிந்திவிட்டு போனான் நவநீத கிருஷ்ணன்.


"ஓ கே சார் பாய். "


இது எதுவும் தெரியாமல் வருங்காலத்திற்கான கனவை இப்பொழுதே கனவு காண ஆரம்பித்து விட்டான். ஆனால் கிருஷ்ணனின் கனவு கோட்டை மிகக் கொடுமையாக இடிந்து விழ போகிறது என்று தெரியாமலே வீட்டிற்கு வேலை கிடைத்த சந்தோஷத்தை சொல்ல வேண்டும் என்று முகத்தில் சிரிப்புடனேயே கிளம்பி போனான். அதில் ஒன்று கூட நிறைவேறாது என்று தெரிந்திருந்தால் அவன் சிரிப்பும் அவன் நிலையும் என்ன ஆகுமோ.


எல்லாரிடமும் எல்லாவற்றயும் சொல்ல கூடாது என்பது பாவம் வெள்ளை மனதுடைய அப்பாவி சிவராமக்கிருஷ்ணனிற்கு தெரியவில்லை.


அதனால் ஏற்பட கூடிய மிகக் கொடிய பின் விளைவுகள் பற்றி அறிந்து இருந்தால் அவன் தன் கனவை பற்றியும் என்ன இந்த நிறுவனத்திற்கு வருவது பற்றி கூட அவன் நினைத்திருக்க மாட்டான். எல்லாம் விதிப்படி தான் நடக்கும்.

தொடரும்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அடி - 3


2 வருடங்களுக்கு பிறகு

"தாருமா நான் அம்மாவ பார்க்கறதுக்கு மனு குடுத்துருந்தேன். இன்னைக்கு பார்க்க போகணும். நீயும் வரியாமா அங்க போய்ட்டு அப்படியே ஹாஸ்பிடல் போய்டுவ. "


"இல்ல அண்ணா எனக்கு இன்னைக்கு ஒரு சீக்கிரம் வர சொன்னாங்க. கிளாஸ் இருக்கு அதை அட்டென்ட் பண்ணிட்டு அப்படியே வார்டுக்கு போய்டுவேன்."


"சரி மா நீ பார்த்து போ. இன்னைக்கு ஆபீஸ்ல 2 மணி நேரம் அனுமதி வாங்கிருக்கேன். அதனால நான் அம்மாவ பார்த்துட்டு அப்படியே வேலைக்கு போறேன் தாருமா. நீ விட்ட பூட்டிட்டு பார்த்து கிளம்பி போய்ட்டு வா மா."


"சரி அண்ணா."


'அவனுக்கு தெரியும் எப்படியும் தாரிணி வர மாட்டாள் என்று தெரியும். எதுக்கும் கேட்டு பார்க்கலாம்ணு அவன் கேட்டது இந்த பதில் தான் வரும்னு தெரிஞ்சு தான் கேட்டது அதனால் அவன் அதிர்ச்சி அடையவில்லை'.


தாரிணிக்கு தன் அம்மாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவள் பார்க்க விரும்பவில்லை. தாரிணிக்கு அவளுடைய அம்மாவை ரொம்ப பிடிக்கும். அவர்களுடைய தைரியம், யார் எது சொன்னாலும் காதில் வாங்காமல் செல்வது, மனிதர்களை கணிப்பது, இந்த குடும்பத்தை தனி ஒரு ஆளாக வீட்டையும் பொருளாதாரத்தையும் கவனித்தது என்று தன் அம்மா மேல் அவளுக்கு பாசம், மதிப்பும், மரியாதை இருக்கிறது. இது எல்லாத்தையும் விட அவர் பிள்ளைகளுக்கு தன் ஆதிக்கத்தை அவர்கள் மேல் திணிக்க மாட்டார். பிள்ளைகளின் மனதை புரிந்து செயல்படுவதில் வல்லவர்.


அவளுடைய நண்பர்களுக்கு கூட அவளுடைய அம்மாவை பிடிக்கும். அவர்களின் அம்மா இவர் போல் தோழமையாக இருக்க மாட்டார்கள். ராணி முக்கியமாக பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடந்து கொள்வார். அவர் பிள்ளைகளிடம் ஒரு நண்பனை போல் பழகுவார். அதனாலேயே அவளுக்கு அம்மா என்றால் தனி பிரியம் உண்டு. அதற்கு அடுத்து தான் அண்ணன். அண்ணனும் அம்மாவை போல் தான் இருந்தாலும் அவளுக்கு எப்பொழுதும் அம்மா தான் முதலில் பிடிக்கும்.


அப்பா எப்பொழுதும் வீட்டை கவனிக்கமாட்டார் பொண்டாட்டி பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கூட கவனிக்க மாட்டார். அவர் உலகமே தனி காசுக்கு மட்டும் வீட்டில் கேட்டு வாங்கி போய் நன்றாக குடித்து விட்டு வந்து வீட்டில் வந்து ஒரு ஓரமாக முடங்கி விடுவார். காசு குடுக்கவில்லை என்றால் கடன் வாங்கி குடிப்பார். அந்த ஒரு காரணத்திற்காகவே அவர் காசு கேட்டால் குடுத்து விடுவார் ராணியம்மாள். என்ன ஒன்று அவர் உலகம் தனியாக இருந்தாலும் வீட்டில் எந்த பிரச்னையும் வைத்து கொள்ள மாட்டார்.


இப்பொழுது அவர் செய்யாத குற்றத்திற்காக அவர் மேல் வீண் பழி போட்டு அவர் ஜெயிலில் இருக்கிறார். மகிழினி இறந்ததற்கு காரணம் இவர் தான் கொலை செய்து விட்டார் என்று அவரை கைது செய்து ஒன்றரை வருடமாக ஜெயிலில் இருக்கிறார்.


கிருஷ்ணன் அன்று வேலை கிடைத்த விஷயத்தை வீட்டில் வந்து சொன்ன அன்று அவ்வளவு மகிழ்ச்சி. அந்த கண்ணீர்சந்தோஷமான மனநிலை கலைய வேண்டாம் என்று அன்னைக்கு எதுவும் சொல்லவில்லை ராணி. அடுத்த நாள் வேலைக்கு போய்விட்டு வீடு வந்த பிறகு தான் கிருஷ்ணனிடம் இந்த விஷயத்தை சொல்லி நான் வேலை செய்யும் இடத்திற்கு வர வேண்டாம் என்று சொன்னார். அவனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


அதன் பிறகு ஆறு மாதம் எந்த பிரச்னையும் இல்லை. இதற்கு நடுவில் விசாரணை என்றால் மட்டும் போய் வருவார். ஆறு மாதம் கடந்த நிலையில் தான் ஒரு நாள் அந்த கொலைக்கு காரணம் இவர் தான் என்றும் இவர் தான் அந்த பெண்ணிடம் இருக்கும் நகைக்காக அவரை கொலை செய்தார் என்றும் 7 வருடம் ஜெயில் கடுங்காவல் தண்டனை என்றும் தீர்ப்பானது.


கிருஷ்ணன் எவ்வளவோ முயன்றும் அவர் நிரபராதி என்பது நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. ஆண் பிள்ளை என்பதால் தன் வருத்தத்தை வெளியில் காட்ட முடியாமல் தனுக்குள் இறுகி போய்விட்டான். வீட்டில் யாரும் யாருடனும் பேசுவது இல்லை.


தாரிணி தான் முடிவு தெரிந்த அன்று அழுத அழுகை பார்ப்போரின் மனதையும் உருக்கும். அதன் பிறகு மனதளவில் மிகவும் இறுகி ஒரு விதமான வெறுமை சூழ்ந்துவிட்டது. அன்றில் இருந்து அந்த வீட்டின் உயிர்ப்பு போய்விட்டது. அந்த வெறுமையை தொலைக்க படிப்பில் ஆழ்ந்துவிட்டாள். அவள் நண்பர்களும் தாரிணியின் மனநிலையின் பொருட்டு அவளை தனியாக விடாமல் கல்லூரியில் எப்பொழுதும் கூடவே இருப்பார்கள். வெளிய எங்கு சென்றாலும் இவர்களும் கூட போவார்கள். இப்பொழுது படிப்பை முடித்து விட்டு ஒரு பெரிய மருத்துவமனையில் வேலை செய்கிறாள். இந்த நிலைமையில் அவரை அங்கு பார்க்கும் சக்தி இல்லை. அதனால் கிருஷ்ணன் அம்மாவை பார்க்க போகும்போது கூப்பிட்டாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி அங்கு போகமாட்டாள்.


ராணியம்மாளும் பெண் பிள்ளை என்பதால் அந்த மாதிரி இடத்திற்கு அவளை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.


கிருஷ்ணனும் ராணியம்மாளை பார்க்க ஜெயில் வாசலில் காத்து கொண்டிருந்தான். அவன் முறை வரவும் உள்ளே சென்றான். ராணியம்மாள் இப்பொழுது பார்ப்பதற்கு சற்று இளைத்து இருந்தாலும் இன்னும் அதே கம்பிரத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருந்தார். உடளவில் மாற்றம் ஏற்பட்டாலும் மனதளவில் இன்னும் உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் இருந்தார்.


"அ….அ… அம்மா எப்படி இருக்கீங்க. சாப்பிட்டீங்களா."


"சாப்பிட்டேன்பா. நீ எப்படி இருக்க. நீங்க சாப்பிட்டீங்களா. பா…பா… பாப்பா எப்படி இருக்கபா. அவ என்னைக்குமே தனியா இருந்தது இல்லடா. சாய்ங்காலம் சீக்கிரம் வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு போய் பார்த்துக்கபா. அவளை வர கூடாதுனு நான் தான் சொன்னேன் ஆனா என் கண்ணுக்குள்ளயே இருக்காபா. உங்கள நம்பி தான் நான் இங்க இருக்கேன் தம்பி. என்னோட நம்பிக்கை நீங்க தான் உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்."


"அம்மா நீங்க எதுக்கும் கவலை படாதீங்க. தருமா நான் பார்த்துகிறேன். நீங்க வெளிய வரதுக்கு என்ன பண்ணணுமோ அத நான் பண்ணிகிட்ருக்கேன். மேல் முறையீட்டுக்கு விண்ணப்பித்துருக்கிறேன். அதுக்கு என்னென்ன செய்யணுமோ அதை தான் செய்கிறேன். நீங்க கவலைபடாதீங்க உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்."


"ஹ்ம்ம்ம்… உங்க அப்பா எப்படி இருக்கிறார்பா…. அ…. அவரை பார்த்துக்கோங்க."


"அவரு இப்ப ரொம்ப மாறிட்டார். அவர் தான் சமைச்சு வச்சுட்டு வீட்ட பார்த்துக்கறது. அவரு உங்களை ரொம்ப நினைக்கிறார்மா. ஆனால் வெளிய ஏதும் காட்டிக்க மாற்றார்."


"ஹ.. ஹ்ம்ம்.. " ஒரு கசந்த சிரிப்பொன்றை சிந்தினார். "சரி தம்பி நீங்க போங்க வேலைக்கு நேரமாகுது. "


அவர் சிரிப்பதற்கான அர்த்தத்தை உணர்ந்து " ச.. சரிமா நான் கிளம்புறேன் உங்களை பார்த்துக்கோங்க. " என்று கிருஷ்ணன் கிளம்பிவிட்டான்.


கிருஷ்ணன் கிளம்பியதும் போகும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தார் ராணி. இவன் வயசுக்கு இது வரைக்கும் எந்த ஒரு சந்தோஷமும் அனுபவிச்சது இல்லை. இப்ப நல்ல வேலை கிடைத்தும் கொஞ்சம் கூட சந்தோசம் என்பது இல்லாமல் இப்போ தன்னால் அவன் இப்படி அலைந்து கொண்டிருக்கிறான். அதுவே அவருக்கு மனதை பிசைந்தது. இப்பொழுது மாறி கணவர் அப்பொழுதே ஒழுங்காக இருந்திருந்தால் தங்களுக்கு இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது' என்று நினைத்து மனத்துக்குள்ளயே கண்ணீர் வடித்தார்.


அந்த ஆறு அடுக்கு மாடி கட்டிடத்துக்குள் நுழைந்தான் நவநீதன். அவர்கள் அலுவலகம் 3வது மாடியில் இருக்கிறது. அங்கு எதிர்பட்டவர்களில் காலை வணக்கம் சொன்னவர்களுக்கு இவனும் பதிலளித்து விட்டு சென்றுவிட்டான்.


தன் அறை உள்ளே நுழைந்ததும் அவனுடைய பி ஏ வை கூப்பிட்டு அலுவல் வேலைகளை பட்டியலிட்டு முடித்து, மீட்டிங் பற்றிய நேரத்தை முடிவு செய்துவிட்டு கடைசியாக " ராஜ் எனக்கு மதியம் சாப்பிட போறதுக்குள்ள எல்லா வேலையும் பாக்காவ முடிஞ்சுருக்கணும். I dont have any excuses. After that get ready for the meeting."


'நான் என்ன மந்திரவாதியாடா பார்த்த உடனே எல்லா வேலையும் நடக்கறதுக்கு மனுஷன்டா நீங்க குடுக்கிற இத்துணுண்டு சம்பளத்துக்கு காலைல இருந்து நைட் வரைக்கும் உன்கூடையே சுத்தணும். இதுல அதிகாரம் வேற' எல்லாம் மனதிற்குள் தான் வெளிய சொன்னா அதுக்கும் சேர்த்து இன்னும் அதிகமான வேலை குடுப்பான் அதனால் எல்லா கவுண்டரும் மனதுக்குள்ளயே கொடுத்துக்கொண்டான். வெளியில் பவ்யமாக "Everything will be finished before the meeting sir"


"சரி கிளம்புங்க. ஹ.. சிவராமகிருஷ்ணன் வந்தா என்ன வந்து பார்க்க சொல்லுங்க."


"சரிங்க சார்." என்று வெளியில் வந்து ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்டான்.


கிருஷ்ணன் அப்பொழுது தான் உள்ளே வந்து தன் இடத்தில் உட்கார்ந்து கணினியை உயிர்பித்தான். ராஜ் அங்கு வந்து "கிருஷ் உன்ன நம்ப பாஸ் கூப்பிடறாரு. போய் என்னனு கேளு."


"சரி டா நீ போ நான் பின்னாடியே வரேன்" அவனை அனுப்பிவிட்டு யோசிக்க ஆரம்பித்தான். பின் எழுந்து சென்று மேனேஜர் அறையை தட்டிவிட்டு உள்ளே போனான்.


"வா கிருஷ்ணா என்ன ஆச்சு இன்னைக்கு அம்மாவ பார்த்தியா என்ன சொன்னாங்க. எப்படி இருக்காங்க."


"ஹ்ம்ம் பார்த்தேன் நவநீத். முன்ன பார்த்தத விட இன்னும் கொஞ்சம் டல்லா தெரியறாங்க. ஆனால் முன்ன விட இன்னும் தன்னம்பிக்கையோட இருக்காங்க. என்னால தான் அவங்க இப்படி உள்ளே இருக்கறத பார்க்க முடில."


கிருஷ்ணன் சொல்ல சொல்ல நவநீதனின் முகத்தில் சந்தோசம் சிரிப்பொன்று வந்தது. ஆனால் உடனே அவன் முகம் மாறிவிட்டது. 'என்ன இன்னும் அந்த கிழவியோட திமிர் குறையல போலயே அப்ப இன்னும் பெருசா செய்யணுமோ' என்று யோசித்து "ஹ்ம்ம்ம்… நீ என்ன சொன்ன கிருஷ்ணா"


"நான் மேல் முறையீட்டுக்கு விண்ணப்பித்து இருக்கேனு சொன்னேன்."



"ஏன்டா என்ன ஆச்சு. திடிர்னு அப்ளை பண்ணிருக்க." என்று ஷாக் ஆகிவிட்டான்.


"ஆமாடா எனக்கு என்னமோ தோணுச்சு மேல் முறையிடு போடணும்னு."


"சரிடா ஏதாவது விசாரிக்க போற அப்ப என்ன கூப்பிடு வரேன். நீயா தனியா எங்கயும் போகாத"


"சரிடா நான் கண்டிப்பா சொல்றேன். நான் இப்ப போய் வேலைய பார்க்கறேன்" என்று கிளம்பிவிட்டான்.


'நம்மளே பிரச்சனை பண்ணது போதும்னு நினைச்சாலும் இவன் விட மாட்டான் போல இருக்கே. இன்னும் நிறைய பிரச்சனை வேணும் போல இருக்கு இவனுக்கு. வரேன்டா நீ நினைக்க முடியாத பிரச்சனையா கொண்டுவரேன்'


கிருஷ்ணன் அவனுடைய சீட்டில் வந்து உட்கார்ந்தான். உடனே அவனிடம் வந்து சந்தேகம் கேட்டாள் சக்திபிரியா.


கிருஷ்ணன் "ப்ளீஸ் பிரியா நான் இப்ப தான் சீட்டுக்கே வந்து உட்காரறேன். என்ன விடு வேற யார்கிட்டயாவது போய் டவுட் கேளு. கொஞ்சம் ஆச்சும் வேலைய ஆரம்பிக்கறேன். லஞ்ச் டைம் வேற வர போகுது. நான் சீக்கிரம் வேலைய முடிச்சா தான் சாய்ங்காலம் சீக்கிரம் வீட்டுக்கு போக முடியும். தயவுசெய்து போ இங்கஇருந்து"


"அச்ச்சோ ரொம்ப பண்ணாதிங்க. எனக்கு என்ன ஆசையா உங்க கிட்ட உட்கார்ந்து இப்படி இப்படி டவுட் கேக்கணும்னு. என்ன பண்றது எனக்கு உங்கள தான் மெண்டாரா போட்ருக்காங்க. அதனால தான் இப்படி வந்து உங்க கிட்ட இப்படி உட்க்காருறேன். புரிஞ்சுதா mr. ஷிவா."

ஒரு ஒரு இப்படிக்கும் அவனை உராசி உராசி உட்கார்ந்தா அது தான் இன்னும் அவனுக்கு காண்டாகியது.


"ஏய் உனக்கு ஒரு வாட்டி சொன்ன புரியாதாடி கிருஷ்ணன் இல்ல கிருஷ்ணா கூப்பிடு. இந்த ஷிவா னு கூப்பிட்ற வேலை எல்லாம் வச்சுகிட்ட மனுஷனா இருக்க மாட்டேன் பார்த்துக்க"


"ஹ்ம்ம் இப்ப மட்டும் சார் எப்படி இருக்கீங்க மனுஷன் போலாய இருக்கீங்க. சரியான ஜடம். ஒருத்தி லவ் சொல்லி ஒரு மாசம் ஆச்சே அந்த பொண்ணுக்கு சரினு ஒரு வார்த்தை சொல்லுவோன்னு இல்லாம ஏதோ சரியான தசா மாதிரி இருக்க வேண்டியது"


"நிறுத்து அது என்ன தசா"


"ஹ்ம்ம் அது எதுக்கு உங்களுக்கு எனக்கு எப்ப சரினு சொல்லுவீங்க. அத முதல்ல சொல்லுங்க"


"நீ இந்த ஆபீஸ் சேர்ந்து எத்தனை மாசம் ஆச்சு"


"ஹ்ம்ம்ம் அது ஆச்சு ஒரு மாசம் இப்ப எதுக்கு கேக்குறீங்க. இத நம்ப வெளிய போய் கொண்டாடலாம்னு சொல்றிங்களா "


"ஏண்டி சேர்ந்தே ஒரு மாசம் தான் ஆகுது. வந்த முதல் நாளே இவர் தான் உன் மெண்டோர் இவர் கிட்ட தான் நீங்க கத்துக்கணும்னு சொன்னாங்க. ஆனால் நீ அந்த நாள் முடிய கூட இல்ல உடனே உங்கள லவ் பண்றனு அதுவும் என் கைய புடிச்சு சொல்ற. என் மானமே போச்சு எல்லா பசங்க முன்னாடியும். நீ வர வரைக்கும் என் மேல ஒரு நல்ல அபிப்ராயம் இருந்துச்சு. நீ எப்ப என் பக்கத்துல வந்து உட்கார்ந்தியோ அப்பயே எல்லாம் போச்சு"


"என்ன எல்லாம் போச்சு உன் கற்பு உங்கிட்ட தான இருக்கு அப்பறம் எப்படி எல்லாம் போச்சுன்னு நீங்க சொல்லலாம்.


"அடிப்பாவி நீ ரொம்ப பேட் கேர்ளா பேசுற. உன்ன போய் என் பக்கத்துல உட்கார வச்சுருக்காங்க பாரு. நீ என்னவோ பேசு நான் என் வேலைய பார்க்கிறேன்"



"டேய் இதுக்கே நான் பேட் கேர்ளா. சரி தான் போங்க. ஆமா அது என்ன இன்னொரு பொண்ண பக்கத்துல உட்கார வைக்கணுமா உன்ன பிச்சு போற்றுவேன் பார்த்துக்க. அதுக்குலாம் நீ தேர மாட்டானு தெரியும். வர பொண்ண நம்ப முடியாது. அப்பறம் நான் லவ் வந்து அந்த நாள் முடியும் போது சொன்னனு சொன்னல. சொல்ல போனா பார்த்த 1 மணி நேரத்துல சொல்லி இருப்பேன் சரி உன்ன பார்த்தா பாவமா இருந்துச்சு அதான் அந்த நாள் முடியும் போது சொன்னேன்"


அவன் உள்ளுக்குள் சிரித்தாலும் வெளிய காட்டிக்கொள்ளவில்லை. கொஞ்சம் கட்டினால் கூட இந்த ராட்சசி இன்னும் வந்து உரசுவாள். ஒன்னும் தெரியாத மாதிரி வேலைய பார்க்க ஆரம்பிச்சான்.


கிருஷ்ணன் 'இங்கு வந்த பொழுது இருந்த மனநிலைக்கும் இப்பொழுது இருக்கும் மனநிலைக்கும் நிறைய வித்தியாசம். இவ எப்படி என்ன உடனே என்ன மனநிலைய மாத்திட்டா ராட்சசி'.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அடி - 4


அன்று மாலை 7 மணி அளவில் மழை நன்றாக பெய்ய தொடங்கியது. தாரிணி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தாள். அப்பொழுது நவநீதன் எதிரில் வந்து கொண்டிருந்தான். ஏற்கனவே ஓரிரு முறை அவனை தலைமை மருத்துவரின் நண்பன் என்ற முறையில் அவனை இந்த மருத்துவமனையில் பார்த்திருக்கிறாள். நவநீதனும் தாரிணியை அப்போது தான் பார்த்தான்.


"என்ன டாக்டர் வீட்டுக்கு கிளம்புரிங்க போல இருக்கு நல்ல மழை வேற பெய்து கொண்டிருக்கிறது. நான் வேணா உங்கள டிராப் பண்ணட்டுமா". அவனை இரண்டு முறை பார்த்திருந்தாலும் ஓரிரு வார்த்தைகளே அவள் பேசி இருக்கிறாள். இப்பொழுது அவன் ஏதோ உரிமையுள்ளவளை கூப்பிடுவது போல் கூப்பிடுகிறானே என்று வெறுப்பு வந்தது தாரிணிக்கு. அதை முகத்தில் காட்டாமல் " ஏன் mr. எனக்கு கால் இல்லையா இல்லை வீட்டிற்கு தான் போக தெரியாதா? உண்மையாகவே உங்களுக்கு உதவும் குணம் இருந்தால் இங்கு வேலை செய்யும் ஆயாம்மாவும் இப்பொழுது தான் கிளம்புகிறார்கள் அவர்களை கூப்பிட்டு கொண்டுபோங்கள்." உடனே விடாமல் "ஆயாம்மா அவர் ஏதோ உங்களிடம் பேசணுமாம்." என்று கூறிவிட்டு "வரேன் ஆயாம்மா " என்று நிக்காமல் கிளம்பிவிட்டாள். அந்த ஆயாம்மா அவனை ஊடுருவும் பார்வை பார்த்து "என்ன தம்பி ஏதாவது வேணுங்களா" என்று கேட்டாள்.


ஏனெனில் அவருக்கு தாரணியின் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. எப்பொழுதும் யாராவது அவளிடம் அநாவசிய பேச்சுக்கள் பேசுபொழுதோ இல்லையெனில் பேச்சு போகும் பாதை வேறு மாதிரி இருந்தாலோ உடனே அந்த ஆயாம்மாவை தான் துணைக்கு கூப்பிடுவார். அவர் அவர்களை பேச்சிலேயே உண்டு இல்லையென்று பண்ணிவிடுவார். அதனால் யாரும் அவளிடம் நெருங்க மாட்டார்கள். சுருங்க சொல்லணும் என்றால் தாரணியை பாதுகாப்பவர் அவர் தான்.

"ஒன்னுமில்லமா டாக்டர் தேவானந் எங்கே என்று தான் கேட்டேன் "


"ஓ…. அவர் உள்ளே இருக்காரு நீங்க போங்க. "


"ஓகே ஆயாம்மா நீங்க கிளம்புங்க"


"சரிங்க தம்பி நான் கிளம்புறேன்" என்று அவனை அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு கிளம்பி விட்டாள்.


தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் அதற்காக யார் என்ன நினைத்தாலும் கவலை இல்லை என்று எண்ணிக்கொண்டு சென்று விட்டான்.


கிருஷ்ணன் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்தான். "என்னப்பா தாரணி இன்னும் வரலையா. மழை வேற செமயா பெய்யுது."


"ஆமா தம்பி நீ போய் ஒரு எட்டு பாப்பாவை பார்த்துட்டு வந்துருபா." என்று அடுப்பில் வேலை பார்த்துகொண்டே சொன்னார்.


"சரிப்பா" என்று வாசலுக்கு போகும் நேரம் தாராணியே வந்து விட்டாள்.


"என்னமா மழைல எப்படி வந்த எனக்கு ஒரு போன் பண்ணி இருந்தா வேலையில இருந்து அப்படியே உன்ன கூப்பிட வந்துர்ப்பேனே. நீ எப்பயும் சீக்கிரம் வந்துருவனு தான் உனக்கு போன் பண்ணலமா. "


"இல்லண்ணா கடைசி நிமிஷத்துல ஒரு பேஷண்ட் வந்துட்டாங்க. அதான் லேட் அப்பறம் கிளம்பும் போது மழை வந்துருச்சுனா இன்னைக்கு குடை வேற எடுத்துட்டு போகல அதனால மழை நிக்கற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு வரேன்."


"சரிமா நீ போய் டிரஸ் மாத்திட்டு சாப்பிட வா மா. "


சங்கரலிங்கம் அவள் தன்னை சுத்த படுத்திகொண்டு வந்த உடனே அவள் தட்டில் சூடாக தோசை வைத்தார்.


ஒன்றும் பேசாமல் அவர் வைத்த தோசை, வெங்காய சட்டினியை சாப்பிட ஆரம்பித்தாள். அவள் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் நின்றது. அதை அவர்களுக்கு காட்டாமல் மறைத்துவிட்டார்.


ஆனால் சங்கரலிங்கம் அதை பார்த்தும் பார்க்காதது போல் இருந்துவிட்டார்.


சாப்பிட்டு முடித்த உடனே "அண்ணா நான் படுக்கிறேன் ரொம்ப அசதியா இருக்கு"


"சரிம்மா நீ போய் படு " என்று கூறினான் கிருஷ்ணன்.


ரூம் உள்ளே போய் கதவை அடைத்தவுடன் கண்ணீர் நிற்காமல் வந்தது. கட்டில் மீது அமர்ந்த படியே 'எனக்கு அப்பா பாசம் இல்லையானு எவ்வளவு ஏங்குனேன் தெரியுமாபா. ஸ்கூல் படிக்கும் போது ஸ்கூல் விட்ட உடனே எல்லா பசங்களோட அப்பாவும் வந்து அவங்கவங்க பசங்கள சைக்கிள்லயோ இல்ல பைக்லயோ கூட்டிட்டு போவாங்க ஆனால் எனக்கு அந்த மாதிரி யாருமே வரமாட்டாங்க நானும் அண்ணாவும் மட்டும் தனியா வருவோம். ஒரு பேரெண்ட்ஸ் மீட்டிங்னா கூட அம்மா தான் வருவாங்க. நான் எத்தனை பள்ளி போட்டில ஜெயிச்சுருக்கேன் அத பாராட்ட கூட நீங்க என் பக்கத்துல இல்லையேபா பள்ளி ஆண்டு விழா கூட பேரெண்ட்ஸ் வரணும்னா கூட நீ வர மாட்ட குடிச்சுட்டு படுத்து கிடப்ப. நான் எத்தனை வேதனை பட்ருக்கேன் எல்லார் அப்பா மாதிரியும் நம்ப அப்பா இல்லையேன்னு நான் உள்ளுக்குள்ள கலங்காத நாளே இல்லபா. நீ மட்டும் ஒழுங்கா இருந்துருந்தா அம்மாக்கு இந்த நிலைமை வந்துருக்குமா. ஆனால் ஒரே ஒரு சந்தோஷம்பா இப்பயாச்சும் நீ மாறுணியேனு. ஆனால் என்னால உங்கிட்ட பேச முடில. அம்மா உங்களால பட்ட கஷ்டம் தான் எனக்கு நியாபகம் வருது.' என்று மனசுக்குள்ளேயே வைத்து அழுதுகொண்டு அப்படியே தூங்கிப் போனாள்.


காலையில் சூரிய கதிர்கள் தன் மேல் பட்டவுடன் தான் கண்விழித்தாள் தாரிணி. மணியை பார்த்தால் அது ஏழு என்றது. 'அச்சோ இவளோ நேரமா தூங்கிட்டோமே' என்று பரபரப்பாக எழுந்தாள். முடிந்த அளவு காலை உணவை அவள் செய்து விடுவாள். குளியலறை போய் சுத்த படுத்திகொண்டு வந்தாள்.


சமையலறையில் அப்பா காலை உணவை முடித்துவிட்டு மதிய உணவை தயாரிக்க ஆரம்பித்து இருந்தார். மகளை பார்த்ததும் அவளுக்கு ஒரு காபி கலக்கி தந்தார். எதுவும் பேசாமல் வாங்கி கொண்டாள்.


காபியை மெதுவாக ரசித்து குடித்துவிட்டு "சாரிபா கொஞ்சம் தூங்கிட்டேன். நீங்க கொஞ்சம் தள்ளுங்க மதிய சமையலை நான் பார்த்துகிறேன்."


"இல்லமா நீ போய் வேலைக்கு கிளம்புமா ஏற்கனவே நேரமா ஆயிடுச்சு. நான் பார்த்துகிறேன்மா. "


"ஹ்ம்ம் " என்று மட்டும் சொன்னாள். வேறு எதுவும் அவளுக்கு பேச தோணவில்லை. இத்தனை நாள் எப்படி பேருக்கு பேசுவாலோ அதே போல் இப்பொழுதும் வந்தது. அறைக்கு திரும்பி போய்விட்டாள்.


போகும் தாரணியையே பார்த்து கொண்டிருந்தார். அவருக்கு புரிந்தது அவளுடைய மனநிலைமை. இதுவரை யாரையும் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு இப்பொழுது நான் மாறிவிட்டு எல்லாவற்றையும் செய்தால் எல்லாம் மாறாது என்று புரிந்து கொண்டார். உடனே யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.


இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அவருக்கு மகள் என்றால் கொள்ளை உயிர் ஆனால் அதை வெளியில் இதுவரை காண்பித்து கொண்டதில்லை. அவர் குடித்தாலும் குடிக்காவிட்டாலும் மகள் என்ன செய்கிறாள் என்று பார்த்து கொண்டே இருப்பார். அவள் சாப்பிடும் நேரத்தை பார்த்து வைத்துகொள்வார் காலையிலும் இரவிலும் வீட்டில் சாப்பிடும் நேரங்களில் அவள் சாப்பிட்ட பின்பு தான் அவர் சாப்பிடுவார். இதுவரை அதை யாரும் கண்டு பிடித்ததில்லை. அவர் எப்பொழுது போதையில் இருப்பார் என்று யாராலும் கணிக்க முடியாது. அவருக்கு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது சாப்பிட்டு கொள்வார். அதனால் அதை யாரும் பெரிதாக எடுத்து கொண்டதில்லை. அவர் அப்பா என்ற கடமையை சரிவர செய்திருந்தால் அவர் மேல் பாசம் இருந்திருக்குமோ என்னவோ. அதனால் அவரை பிள்ளைகள் கண்டு கொண்டதில்லை. ராணியம்மாள் தான் குடித்தாலும் குடும்ப தலைவர் என்ற பொறுப்பை கவனிக்காமலிருந்தாலும் அவர் மேல் அதிகம் பாசம் கொண்டுள்ளவர். அவர் அவருக்கு தேவையான உணவு மற்றும் உடை விஷயங்களையும் அவரையும் பார்த்துகொள்வார்.


நவநீதன் மருத்துவமனையில் அவளுக்காக காத்துகொண்டிருந்தான். தலையில் கட்டு கையில் சதை லேசாக கிழித்து கொண்டிருந்தது. காலில் எலும்பு முறிவு அதனால் அவன் நண்பனின் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தான்.


காலையில் வேலைக்கு கிளம்பி காரை அதிவேகமாக ஓட்டிக்கொண்டிருக்கும் போது எதிரே வந்த நாயை கவனித்து காரை ஒடித்து திருப்பும்போது பக்கத்தில் தார் போடுவதற்காக வைத்திருந்த வண்டியில் மோதி தலையிலும் கையிலும் பலத்த அடி காலில் எலும்பு முறிவு வேறு. அப்படியயே அவனை தூக்கி கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அது அவன் நண்பனின் மருத்துமனையாக இருந்தது அவனுக்கு வசதியாயிற்று.


இப்பொழுது அவனுக்கு மருத்துவம் பார்த்து அங்கேயே அட்மிட் செய்திருந்தனர். அவனுக்கு என்று யாரும் இல்லத காரணத்தால் வீட்டுக்கு அவன் நண்பன் அனுப்பவில்லை.


"நீ இங்கேயே ஒரு வாரம் இருந்து உடம்பு கொஞ்சம் தேறுனதுக்கு அப்பறம் உன் வீட்டுக்கு போடா. அதுவரைக்கும் நீ இங்கேயே இருந்து உடம்பு கொஞ்சம் சரி பண்ணிட்டு போடா."


"ஏன் டா உனக்கு காசு வரணும்ங்கிறதுக்காக என்னை இங்கேயே தங்க சொல்றியா. என் சம்பளம் முழுக்க உங்கிட்ட குடுத்துட்டா நான் என்னடா பன்றது"


"ஏன் டா உனக்கா பணத்துக்கு பஞ்சம் நீ எவ்வ்வ்வ்ளோ பெரிய ஆளு. நீ பணத்துக்கு கணக்கு பாக்குற எல்லாம் நேரம் டா"


"டேய் என் வருமானத்துக்குள்ள செலவு செய்யணுனு நினைக்கிறேன் அதுல என்ன தப்பு"


"சரி டா யப்பா. உன் பில்ல நீ கட்ட தேவை இல்ல என் பேர்ல எழுதிகிறேன் விடு டா போதுமா. ஆனால் நீ இங்கேயே இரு"


"ஹ்ம்ம்.. ஆனால் மருத்துவ செலவை என்னிடம் கொடுத்துவிடு அதன் பிறகு நீயாக என்னை இங்கு தங்க வைப்பது எல்லாம் உன் செலவு. "


"சரிடா. நான் நர்ஸ் அனுப்பறேன் உனக்கு வேண்டியது செய்வாங்க. "


"எனக்கு தாரிணியை அனுப்புடா "


"டேய் இது ஹாஸ்பிடல் வேற மாதிரியான இடம் இல்ல இது. "


"அந்த ஈன வெங்காயம் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு அவகிட்ட ஒரு கணக்கு இருக்கு அத எனக்கு ஏத்த கணக்கா மாத்தணும். அதனால அவளை அனுப்பு."


"அவ 8 மணிக்கு தான் வருவா அனுப்பி வைக்கிறேன். என்னவோ இந்த ஹாஸ்பிடல் பேரை கெடுக்காம இருந்தா சரி"


அவளுக்காக வாசலையே பார்த்து கொண்டிருந்தான் நவநீதன்.


அவள் மருத்துவமனை உள்ளே வந்த போது அவளுக்கு தலைமை மருத்துவரான தேவானந் அவளிடம் "உனக்கு ஸ்பெஷல் வார்டுல டூட்டி இருக்குமா அங்க போ. "


"ஓகே டாக்டர் " என்று மட்டும் கூறினாள்.


வார்டு ரூம் உள்ளே நுழைந்த போதே " குட் மார்னிங் தானு " என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றான்.


அவன் குரலை கேட்டதும் உடனே திரும்பி பார்த்தாள். நவநீதனை பார்த்ததும் சிறு முகச்சுளிப்பு உடனே அதை மாற்றி கொண்டு "குட் மோர்னிங் mr.நவநீதன். என் பெயர் தாரணி சார்."


"இருக்கட்டுமே தானு எனக்கு இது தான் பிடிச்சிருக்கு. எனக்கு எது வசதியோ அப்படிதானே நான் கூப்பிட முடியும்."


"ஆனால் எனக்கு பிடிக்காதே சார். So call me tharani. Dont call me thanu. I dont like it."


"But am not comfortable with that. So தானு எனக்கு உன்ன்ன்னன... அப்படி தான் கூப்பிட பிடிச்சுருக்கு. And moreover இந்த ஹாஸ்பிடல்ல patient friendly சொன்னாங்க. Patient comfort zone இங்க ரொம்ப முக்கியம்னு கேள்வி பட்டேன். "


அது உண்மை தான் இந்த மருத்துமனையில் இங்கு நோயாளிகளின் விருப்பத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். நோயாளியின் மனது அமைதியாக இருந்தால் அவர்களின் நோய் சீக்கிரம் சரி ஆகிவிடும் என்று எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். இங்கு தங்கி சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு அவர்களின் நோய்க்கு ஏற்ப மருந்து கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களின் மன அமைதிக்கு யோகா, தியானம் சொல்லிகொடுப்பார்கள். அது எல்லாம் இங்கு தங்கும் நோயாளிகளுக்கு மட்டும் இலவசம். நோயாளிகளின் நலனில் அக்கறை கொண்டு இது போன்றவற்றை நடத்துகிறார் இதன் உரிமையாளர் சிவப்பிரகாசம். இங்கு மருத்துவத்துக்கான பணமும் அதிக அளவில் இருக்காது. அதை வைத்து அவளை மடக்கிவிட்டான்.


சற்று நேரம் யோசித்துவிட்டு அவனுடைய மெடிக்கல் சார்ட்டை பார்த்துவிட்டு "இப்ப உங்களுக்கு வலி அதிகமாக இருக்கா சார். நீங்க சொன்னிங்கன்னா அதுக்கேத்த மாதிரி நாங்க உங்களுக்கு மாத்திரை கொடுப்போம்."


"இப்ப பரவால்ல தானுமா. "


அவன் தூங்க ஊசி போட்டுவிட்டு "இப்படி கொஞ்ச நேரம் தூங்குங்க சார். நான் வரேன்" என்று அவனுடைய பதிலை எதிர்பாராமல் கிளம்பி விட்டாள்.



அந்த ரூம் ஓரத்தில் வெறித்த பார்வையுடன் எந்த உணர்வுகளுமின்றி அமர்ந்து இருந்தாள். அந்த உணர்வுகளும் அவளிடம் உயிரோடு இருந்ததா இல்லை மரணித்து இருந்ததா என்பது அவள் மட்டுமே அறிந்த இரகசியம்.


அவள் உண்பதும், உறங்குவதும், உயிர் வாழ்வதும் என்பது ஏதோ கடமைக்காக. சாப்பிடவில்லை என்றால் அடிவிழுகும் அவர்கள் சொல்வது போல் நடக்கவில்லை என்றால் நரகத்தை காண்பிப்பார்கள். அதிலும் அவள் நினைத்து கொள்வதுண்டு நரகத்தில் தான் அவள் வாழ்க்கை என்பதாகிவிட்டது. இன்னும் என்ன இருக்கிறது நரகத்தை புதிதாக பார்க்க என்று தோன்றி ஒரு மரக்கட்டை போல் இருந்தாலும் அதற்கும் விட மாட்டார்கள். மற்ற பெண்களை காட்டி நீ சொல்வது போல் கேட்கவில்லை என்றால் இவர்களுக்கு நரகத்தை காண்பிப்போம் என்று இவள் முன்னாலேயே அந்த பெண்ணின் உடம்பில் சூடு போட கொண்டு போவார்கள். அதை பார்த்ததும் என்னை தான் ஒவொரு நிமிடமும் மனதை புண்ணாக்கி உடம்பை புண்ணாக்கி மரணத்தை கட்டினார்கள் என்றால் இந்த பெண்களையுமா என்று தோன்றும். அதனாலே அவர்கள் சொல்வதை இவள் செய்வாள். அந்த நேரத்தில் அவர்கள் சொல்லும் இடத்தில் இவள் மரக்கட்டை போல் இருந்தாள் அவள் கூட படுக்கும் ஆண்களுக்கு கோபம் வந்து விடும். இவர்களிடம் சொன்னால் அதற்கு வேறு விதமான நரகத்தை காண்பிப்பார்கள். அதனாலேயே உணர்வுகள் வந்தது போல் அவர்களுடன் இருக்கும் நிமிடம் நடிப்பாள். இந்த மாதிரி நேரத்தில் அவள் இப்பொழுது எல்லாம் கை தேர்ந்த நடிகையாகி விட்டாள். தப்பிப்பதற்கும், தற்கொலை முயற்சியும் செய்து பார்த்து விட்டாள் அதற்கு அவள் அனுபவித்த நரகம் அன்று அவலுடன் அந்த ரூமில் இருப்பவர்களின் எண்ணிக்கை பத்தாகி விடும்.


"ஆஆ… அண்ணா விடுங்க அண்ணா நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது என்ன தயவு செஞ்சு விட்ருங்கனா" என்று கெஞ்சினாள் ஒருத்தி.


"உன்ன விட்றதுக்காம நாங்க கண்டம்விட்டு கண்டம் தூக்கிட்டு வந்துருக்கோம். இங்க வந்தால் வெளியவே போக முடியாதுடா செல்ல குட்டி இது ஒரு வழி பாதைடா" என்று ஈஈஈ…. என்று இளித்துவிட்டு ஒரு ரூம் உள்ளே தள்ளி பூட்டிவிட்டு போனது இவளுக்கு கேட்டது.


அந்த பெண் உள்ளிருந்த படியே கத்திக்கொண்டிருந்தது இவளுக்கு கேட்டது. அந்த குரல் அந்த தவிப்பு எல்லாம் இவளை இங்கு அழைத்து வந்த பொழுது கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணது நினைவில் வந்தது அவளுக்கு. இதுவரை அந்த மாதிரி பெண்களை இவள் காப்பத்த போராடி அவர்களிடம் மாட்டிக்கொண்டு அதற்கு தனியாக நரகத்தை அனுபவித்தது தனி கதை.


'இன்று எப்படியாவது இந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.' முடிவு மட்டுமே ஆனால் அதை அவர்கள் அறிந்தால் அதான் பிறகு இன்னும் அவளுக்கு நரகமே…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அடி - 5


கிருஷ்ணன் அன்று தாமதமக எழுந்தான். உடம்பு வேற கொஞ்சம் சூடாக இருந்ததால் தலையில் யாரோ மத்தளம் அடிப்பது போல் இருந்தது. காலையில் எழும்போதே தலைவலி அதிகமாக இருந்ததால் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தான் இருந்தான்.


"அப்பா கொஞ்சம் காபி போட்டு தாங்கப்பா. தலை பயங்கரமா வலிக்குது தாங்க முடில. "


"அச்ச்சோ… இருப்பா இதோ வரேன்." காபி போட்டுக்கொண்டே "ஏன் ராத்திரி ஒழுங்கா தூங்கலயாப்பா. "


"கொஞ்சம் லேட்டா தூங்குனேன். வேற ஒண்ணுமில்ல."


"சரிப்பா இந்தா காபி" என்று அவர் தந்த காபியை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.


என்ன தான் அவன் மறைச்சாலும் அவருக்கு தெரியாமலா போய்விடும். அவன் மேற்முறையீடுக்கு விண்ணப்பித்து இருக்கிறான் அதற்காக அவன் அலைந்து கொண்டு இருக்கிறான் என்று நேற்று அவன் செல்பேசியில் பேசும்போது தற்செயலாக அந்த பக்கம் வந்தவர் அதை கேட்டு விட்டார். ஒரு அப்பனாக அவரால் எதற்கும் உதவ முடிவதில்லையே என்று நினைத்து கவலைகொண்டார். பசங்க இருவரும் அவரிடம் மனதை திறந்து பேசுவதற்கு கூட தான் உபயோகமில்லை எனும்போது அவர் மனதை வாள்கொண்டு அறுத்தது. நடந்ததை பற்றி சிந்திக்காமல் இதற்கு பிறகு 'அப்பா' என்ற ஸ்தானத்திலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டார்.


"சரிப்பா நான் வேலைக்கு போய்ட்டு வரேன். டிபன், சாப்பாடு இரண்டையுமே செஞ்சுட்டேன். நீ சாப்டு ரெஸ்ட் எடுப்பா. நான் போய்ட்டு வரேன்." என்று கிளம்பிவிட்டார்.


"ஹ்ம்ம்.." என்று மட்டும் சொன்னான்.


அவர் இப்பொழுது கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவரை போக வேண்டாம் என்று தான் சொன்னான். வீட்டில் தனியாக இருக்க ஒரு மாதிரி இருக்கு என்று வேலை தேடி கிளம்பிவிட்டார்.. இவ்வாறு சொல்பவரிடம் இன்னும் என்ன பேசுவது என்று தெரியாமல் தனியாக இருந்தால் முன்புபோல் ஏதாவது குடித்து விடுவாரோ என்று பயந்து அவனும் சரி என்று விட்டான்..


அதற்கு அடுத்த இரண்டு நாளும் அவனுக்கு காய்ச்சல் அதிகமாக வந்து விட அவன் வேலைக்கு போகவில்லை.


அவன் வேலைக்கு வரவில்லை என்றதும் பக்கத்தில் இருப்பவர்களை கேட்டு தெரிந்து கொண்டாள். அடுத்த நாள் வருவான் என்று எதிர்பார்த்து அலுவலகத்தில் நுழைந்ததிலிருந்தே அவனுக்காக காத்துகொண்டிருக்க அவன் அந்த நாளும் விடுப்பில் இருப்பது தேரியவர அவளுக்கு மனதை போட்டு பிசைய ஆரம்பித்தது. கிருஷ்ணனுக்கு உடம்பு ரொம்ப முடியவில்லையோ என்று அவளுக்கு மனதை பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது.


என்ன தான் வெளியில் விளையாட்டுதனமாக காண்பித்து கொண்டாலும் அவன் பக்கத்தில் இல்லாமல் இருப்பது அவளுக்கு பெரும் வேதனையை அளித்தது.


அனாதை ஆசிரமத்தில் பிறந்து வளர்ந்த அவளுக்கு தனக்கு என்று ஒரு குடும்பமோ சொந்தமோ இல்லயே என்று நிறைய முறை ஏங்கி இருக்கிறாள். தனக்கு வர போகும் கணவனை உயிருக்கு உயிராக நேசிக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தையும் நேசித்து தானும் ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்று ஒரு வைராக்யமே வைத்திருந்தாள்.


என்று கிருஷ்ணனை பார்த்தாலோ அந்த நொடியில் இருந்தே அவனை தன் கணவனாக ஏற்றுக் கொண்டாள். அதுவும் அவன் ரொம்ப சாதுவாக குடும்பத்தின் மீது பாசமாக இருப்பதை பார்த்து தானும் அந்த குடும்பத்தில் ஒருத்தியாக வேண்டும் தனக்கும் அந்த பாசம் கிடைக்க வேண்டும் என்று ஏங்க ஆரம்பித்து விட்டாள்.


நேற்று அவன் வருவான் என்று காத்திருக்க அவன் வரவில்லை என்று நினைத்தவுடன் அங்கு வேலை செய்யவே மனது ஒப்பவில்லை. இன்றும் விசாரித்தால் வர மாட்டான் என்று தகவல் வரவே அவன்மேல் காதல் கொண்ட நெஞ்சம் கலங்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு மேல் அங்கு அமரவே அவளுக்கு பிடிக்கவில்லை..


மேனேஜரிடம் சென்று தனக்கு உடம்பு சரி இல்லை நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்று கிளம்பிவிட்டாள்.

ஏற்கனவே ஒரு தடவை ஆஃபிஸில் ஏதோ போர்ம் எழுதி தர சொல்லும்போது அவன் தன்னுடைய வீட்டு அட்ரஸ் எழுதும்போது பிற்காலத்தில் உதவும் என்று பார்த்துவைத்து கொண்டாள். இப்பொழுது அந்த முகவரியை வைத்து கொண்டு அவனை பார்க்க கிளம்பி விட்டாள்.



இவன் இங்கு காய்ச்சல் அதிகமானதால் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்கும் தந்தையிடமும் சொல்லவில்லை. சொல்லவில்லை என்பதை விட சொல்ல பிடிக்கவில்லை. இத்தனை நாள் இவரா எங்களை பார்த்துக்கொண்டார் என்ற எண்ணம் வேறு சேர்ந்து கொண்டது. தங்கையிடம் சொல்லலாம் என்று இருந்தவனிடம் தங்கை ஏதோ முக்கியமான கேஸ் பார்க்க வேண்டி இருப்பதால் வீட்டுக்கு வர முடியாது என்று போன் சொல்லிவிட்டால் அதனால் அவளிடம் சொல்லி அவளுக்கு தொந்தரவு தரக்கூடாது என்று சொல்லாமலே விட்டு விட்டான்.


காய்ச்சல் சரி ஆகிவிடும் என்று நினைத்திருந்தவன் இரண்டு நாள் ஆகியும் சரி ஆகாமல் அதிகமாகி அவனை நிலைகுலையவைத்து விட்டது. இன்று காலை அவன் அப்பா வேலைக்கு கிளம்பி சென்றவுடன் கதவை மட்டும் சாத்திவிட்டு வந்து படுத்துகொண்டான்.


பிரியா முகவரியை தேடி கண்டு பிடித்து விட்டாள். தனி வீடாக இருக்க அவளும் ரொம்ப அலையவேண்டியது இல்லாமல் இருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் வீட்டிற்கு அவனை தேடி வந்து விட்டாலும் அங்கு போக தயக்கமாக இருந்தது. வீட்டில் யாராவது இருந்து 'யார் நீ' என்ற கேள்வி கேட்டாள் என்ன செய்வது காதலை அவன் உறுதி செய்யாத பொழுது என்னவென்று கூறுவது எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தயங்கி தயங்கி அங்கேயே நின்று கொண்டு இருந்தால் போவோர் வருவோர் வேறு அவளை பார்க்க ஆரம்பிக்கவும் எதுவாக இருந்தாலும் சமாளிப்போம் என்று முடிவெடுத்துக்கொண்டு கேட்டை தாண்டி உள்ளே சென்றாள்.


வீட்டிற்கு முன் நின்று கதவை இரண்டு முறை தட்டினால் உள்ளிருந்து முனகும் சத்தம் கேட்க நன்றாக தட்டினாள். அடுத்து ஏதோ விழுகும் சத்தம் கேட்க அடுத்த தட்டு தட்டவும் கதவு திறந்து கொண்டது. அங்கு தான் கீழயே விழுந்து கிடந்தான் கிருஷ்ணன்.


அவனை அப்படியே தலையை தூக்கி அங்கிருந்த தண்ணீர் எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள்.



"கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ் இங்க பாருங்க." என்று ஒரு வித பதட்டத்துடனேயே அவனை கன்னத்தில் தட்டினாள்.


அவன் உடம்பு தொடும்போதே அனலாக கொதித்தது. அவனை மாடியில் வைத்து கொண்டே "கிருஷ் கிருஷ் இங்க பாருங்க நான் பேசறது கேக்குதா நான் பிரியா வந்துருக்கேன் இங்க பாருங்க" என்று மீண்டும் கன்னத்தை தட்டினாள்.


முனகலாக "ஆ..ஆ… ஆஆ.. தி… தி.. த்தியா என்னால.. முடிலடி. த..த.. தலையெல்லாம் ரொம்ப வலிக்குது." என்றான்.


அவனை அப்படி பார்க்கும்போதே உயிரே போய் விட்டது அவளுக்கு அவன் மேல் உயிரையே வைத்திருப்பவளுக்கு அவனுக்கு ஒன்று என்றால் அவளால் சும்மா இருக்க முடியுமா.


"கிருஷ் கொஞ்சம் என்ன பிடிச்சுகிட்டே எழுந்திரிங்க. பெட்டில் வந்து படுத்துகோங்க." என்றாள்.


மெல்ல அவள் தோளை பிடித்துகொண்டே எழுந்தான். "பார்த்து கிருஷ் மெதுவா வாங்க" அப்படியே அவனை பெட்டில் படுக்கவைத்து விட்டு அவனுக்கு சூடு தண்ணி ஒரு அடுப்பிலும் கஞ்சி ஒரு அடுப்பிலும் போட்டு தயார் செய்ய ஆரம்பித்தாள்.


அவள் ஆசிரமத்தில் இருந்தாலும் அங்கு பெரும்பாலும் மருத்துவமனைக்கு செல்ல மாட்டார்கள் அவர்களே கை வைத்தியம் பார்த்து கொள்வார்கள். ரொம்ப முடியாத பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்வார்கள். அங்கு சமையல் வேலை செய்யும்போது இவள் கூட இருந்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாள் அதனால் சமையலும் கை வைத்தியமும் அவளுக்கு தெரியும். அது இப்பொழுது அவளுக்கு கை கொடுத்தது.


சுடுதண்ணி ஓரளவு மிதமான சூட்டில் தயாரான உடனே அதை எடுத்துக்கொண்டு அவன் ரூமில் வைத்து விட்டு காட்டன் டவல் கொண்டு அவன் ஆடைகளை அகற்றி குழந்தைக்கு செய்வது போல் உடம்பு முழுக்க துடைத்து விட்டு அவள் எப்பொழுதும் கைப்பையில் வைத்திருக்கும் கோவில் பிரசாதமான சாய் பாபா கோவில் திருநீற்றை கடவுளை மனதில் வேண்டிக்கொண்டே "சாய் ராம் எப்படியாவது ஏன் கிருஷை குணப்படுத்தி கொடுங்க. எனக்கு என் கிருஷ் வேண்டும் அவருடன் நீண்ட காலம் வாழ வேண்டும்" என்று வேண்டிக்கொண்டே வைத்து விட்டாள்.


பின் அவனுக்கு காய்ச்சலுக்கான கஷாயம் வைத்து அவனை எழுப்பி மெல்ல மெல்ல புகட்டிவிட்டு சிறிது நேரம் கழித்து கஞ்சியை தயார் செய்து அதை ஆற வைத்து எடுத்து கொண்டு அவனை எழுப்பி தன் மேல் சாய வைத்து அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கஞ்சியை புகட்டினாள். அவன் குடித்தவுடன். அவனை படுக்க வைத்து நன்றாக போர்த்திவிட்டு வந்தாள்.


வீட்டை ஒழுங்குபடுத்தி துணிகளை அள்ளி வாஷிங்மெஷினில் போட்டுவிட்டு வந்து அவனை தொட்டு பார்த்தாள்.


சூடு தண்ணீரில் துடைக்கும்போதே கொஞ்சம் காய்ச்சல் மெல்ல கம்மியானது. இப்பொழுது நன்றாக வேர்வை விட்டு காய்ச்சல் நன்றாக குறைந்திருந்தது. அசதியில் இன்னும் உறக்கத்தின் பிடியிலேயே இருந்தான்.


மதியத்துக்கு சாப்பாடு செய்து ரசம் தயார் செய்தாள். அவனை எழுப்பி அதை ஊட்டி முடித்தவுடன் இவள் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு அங்கேயே அவனையே பார்த்துகொண்டும் அவ்வப்பொழுது அவன் தலையில் கை வைத்து பார்த்துக்கொண்டும் உட்கார்ந்து கொண்டாள். இவை அனைத்தும் அவள் மனதில் அவனை கணவனாக எண்ணியே அனைத்தையும் செய்தாள்.


மாலை மணி ஐந்தை நெருங்கும்போது அவனுக்கு லேசாக விழிப்பு வந்தது. மெல்ல கண்ணை திறந்து பார்த்தான். அவன் பார்க்கும்போது பிரியா ஒரு புக்கை வைத்து படித்துக்கொண்டிருந்தாள்.


ஏதோ உள்ளுணர்வு உந்த அவனை திரும்பி பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.


அவளே எழுந்து அவனை தொட்டு பார்த்து "இப்ப எப்படி இருக்கு கிருஷ். உடம்பு இன்னும் டயர்டா இருக்கா" என்று அவன் முகத்தையே பார்த்தாள்.


அவன் சிறிது நேரம் அவளை பார்த்துவிட்டு "இப்ப… கொஞ்சம் ஓகே வா இருக்கு. நீ எப்ப வந்த.." என்று அவளையே பார்த்தான்.


"கலையிலேயே வந்துட்டேன். உங்களுக்கு ரொம்ப முடியாம இருந்திங்க அதான் கூட துணைக்கு இருந்தேன்"என்றாள்.


இவன் ஒன்றும் பேசவில்லை அவளையே சிறிது நேரம் பார்த்தான்.


அவளால் அவன் பார்வையை எதிர்கொண்டு பார்க்க முடியவில்லை. கிழே குனிந்து கொண்டாள். அவன் என்ன நினைக்கிறான் என்று அவளால் கணிக்க முடியவில்லை.


அவன் ஒன்றும் பேசாமல் "சரி நீ கிளம்பு மணியாயிடுச்சு" என்றான்.


"இல்ல உங்களுக்கு உடம்பு முடில கொஞ்சம் நேரம் கழிச்சு யாராவது வந்த உடனே கிளம்புறேன். உங்களால தனியா சமாளிக்க முடியாது." என்றாள்.


"ஹுஹ்ம்ம்ம்.. எனக்கு இப்ப கொஞ்சம் பரவாலனு சொல்றன்ல. நீ இப்ப போ நான் நாளைக்கு ஆபீஸ் வரேன் நீ இப்ப வீட்டுக்கு கிளம்பு" என்று பேசவதற்கு தெம்பு இல்லாமல் முடிந்த அளவு அழுத்தமாக சொன்னான்.


அவளுக்கு புரிந்தது அவனால் பேச முடியாத நிலையிலும் தனக்காக அவன் யோசிக்கிறான் என்று புரிந்தது. இருந்தாலும் என்று அவன் உடல் நிலையை கருத்தில் கொண்டு "இல்ல கொஞ்ச நேரம்ம்ம்.." என்று இழுத்தாள்.


அவன் முறைத்து பார்த்த பார்வையிலேயே வாயை இறுக மூடிக்கொண்டாள்.


"சரி நான் கிளப்புறேன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்."


அதற்குள் அவன் எழுந்து தன்னை சுத்த படுத்திகொண்டு சட்டை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான்.


"வா போகலாம்" என்று கூட நடந்தான்.


"இல்ல நானே போய்க்கிறேன். நீங்க தான் என்ன கிளம்ப சொல்லிட்டீங்கள்ல. இப்ப எங்க சட்டையை போட்டுட்டு என்கூட வரீங்க." என்று குரலை உயர்த்தி கேட்டாள்.


"சும்மா இம்சை பண்ணாத நான் உன்ன இப்ப விட்டுட்டு வந்து படுத்து ரெஸ்ட் எடுத்துகிறேன் வாடி"


"இம்சையா… நான் உங்களுக்கு இம்சையா.." என்று கோபமாக ஆரம்பித்து முடிவில் கண் கலங்கியது. நான் அவனுக்கு இம்சை என்று கூறிவிட்டானே. தலையை குனிந்து கொண்டு வெளியே வந்த கண்ணீரை அவன் பார்க்க கூடாது என்று தெரியாமல் துடைக்க போனாள்.


அந்த கையை தடுத்து விட்டு அவள் இடுப்பை வளைத்து நாடியை தொட்டு தூக்கி அந்த கண்ணீரை அவன் துடைத்துவிட்டான்.


அவன் இதுவரை தொட்டது கிடையாது. முதல் முறையாக அவன் தொட்டவுடன் உடலில் ஒரு அதிர்வு அவளுக்கு உண்டாகியது. அவனும் அதை உணர்ந்தான்.


அவள் கண் கலங்கியவுடன் பொறுக்க முடியாமல் "தியா இங்க பாருடி.." என்று குனிந்திருந்த அவள் தலையை தூக்கி முன்னுச்சியில் விழுந்திருந்த முடியை ஒதுக்கியவாரே "உன்ன தனியா அனுப்பிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாதுடி. அதுவும் எனக்கே எனக்காகனு என் வீட்டுக்கு வந்துருக்கப்ப என்னால நீ எப்படி போகுறியோ என்னமோன்னு பயந்துட்டடே இருக்கனும். எங்க அம்மாக்கு அப்பறம் என்ன பாத்துக்கிட்டது நீ தான். எங்க வீட்டுக்கு வர போற மகாலஷ்மியை பத்திரமா பார்த்துக்கவேண்டியது இப்ப இருந்தே என் பொறுப்பு. எனக்கு இப்ப உடம்பு கொஞ்சம் பெட்டரா பீல் பண்றேண்டி. அதனால நீ கவலை படாத வா போகலாம்."


"ஹ்ம்ம்.. எ.. என்…. என்ன ஏத்துக்கிட்டீங்களா" என்று ஒருவித ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் அவன் கண்ணை பார்த்து கேட்டாள். அவன் அவளை இடுப்பை லேசாக பிடித்திருந்ததால் வாயிலிருந்து வார்த்தை சத்தம் இல்லாமல் மெதுவாக தான் வார்த்தை வந்தது.


"உன்ன பிடிக்காம தான் உன்ன ஏத்துக்காமத்தான் உங்கிட்ட இப்படி நின்னு பேசிக்கிட்ருக்கேனா." என்று அவர்களின் இடைவெளியை கண்களால் காண்பித்தான். அவளுக்கு வெட்கத்தில் கன்னம் சிவந்து விட்டது.


அந்த கன்ன சிவப்பை ரசித்தவாரே "நீ இங்க வந்து என்ன கிருஷ்னு கூப்டு என் தலையை தூக்கி உன் மடில வச்சியே அப்பயே எனக்கு லைட்டா உணர்வு வர ஆரம்பிச்சுடுச்சு. நீ என்ன துணி கொண்டு தொடைக்கும்போது அத தடுக்க கண்ணை துறக்கிற சக்தியோ வாய திறந்து பேசுற சக்தியோ எனக்கு அப்ப இல்ல ஆனால் என்கிட்ட நீ சொல்லலானாலும் நீ வந்ததுல இருந்து என்னென்ன பண்ணன்னு என்னால உணர முடிஞ்சுது. அதனால என்ன முழுசா பார்த்ததுனால நீ தான் எனக்கு பொண்ண்ண்டாட்டி ஓகே வாடி" என்று கடைசியில் கேலியாக பேசினான்.


உடனே அவளுக்கு வெட்கம் வந்து "ச்ச்சீ போடா" என்று அவனை தள்ளி விட்டாள்.


இவள் தள்ளி அவன் விழுகுற மாதிரி போன உடனேயே அவள் அவனை பிடித்து "சாரி சாரி" என்று கேட்டாள்.


"என்னமா ஆரம்பரத்துலயே புருஷன கீழ தள்ளுற"


"அதான் சாரி சொல்லிட்டேன்ல வாங்க போகலாம். வந்த பிறகு கொஞ்சம் தூங்கி எழுந்திரிங்க. நைட்க்கு கஷாயம் கொஞ்சம் வச்சுருக்கேன் அத சூடு பண்ணி குடிச்சுட்டு இட்லி ஊத்தி வச்சுருக்கேன் அத சாப்டு படுத்துகோங்க. சரியா" என்று கேட்டாள்.


அவனும் இடைவரை குனிந்து "உத்தரவு மகாராணி என் வீட்டு இல்லாள் பேச்சுக்கு மறுப்பேது. தாங்கள் சொல்படியே நடப்பேன் துணைவியாரே" என்றான்.


அவள் வாய்விட்டு சிரித்து "போதும் வாங்க போகலாம்" என்று கூறிவிட்டு இருவரும் சிரிப்புடனே கிளம்பி சென்றனர்.


அவர்கள் சென்றவுடன் கதவின் மறைவிலிருந்து வெளிவந்தார் அவன் அப்பா.


கண் கலங்கியது அவருக்கு 'என் மகனுக்கு ஏத்த மனைவி வர போறான்னு அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அவன் அம்மா சிறை சென்றதிலிருந்து அவன் சிரித்து அவர் பார்த்ததே இல்லை இன்னைக்கு அவன் சிரித்து பேசியது அவருக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. கூடிய சீக்கிரம் இந்தவீட்டில் பழைய சந்தோஷம் திரும்பி வர வேண்டும்' என்று கடவுளிடம் அவசர வேண்டுகோள் ஒன்று விடுத்தார்.




"அண்ணா… ப்ளீஸ் என்ன விட்ருங்கன்னா என்னால முடிலன்னா ஐயோ வலிக்கிது. அம்மா என்னால முடிலயே என்ன காப்பாத்துங்கம்மா. யாராவது வந்து என்ன காப்பாத்த கூடாத கடவுளே….." என்று அவள் கத்தியதை அந்த அறையின் வெளியிலிருப்பவர்கள் கேட்டும் கேட்காதது போல் சென்றனர்.


ஆனால் அவளால் கேட்டும் கேட்காதது போல் இருக்க முடியாமல் அனலில்லிட்ட புழு போல் அவள் அறையில் துடித்துகொண்டிருந்தாள். அவளாலும் எதுவும் செய்ய முடியவில்லை. முதலில் அவளை எதற்கும் வெளியே அனுமதிப்பதில்லை. இவள் எல்லாவற்றிக்கும் பிரச்சனை கொடுப்பாள் என்று தெரிந்ததினால் எப்பொழுதும் அவர்கள் அவளை மற்ற பெண்கள் போல் வெளியே விடுவதில்லை எப்பொழுதும் அறையினுள்ளேயே வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இவளை மாதிரி தொந்தரவு கொடுப்பவர்களை அவர்கள் விட்டு வைத்ததில்லை உடனே வேறு எங்காவது அனுப்பிவிடுவார்கள் அல்லது கதையையே முடித்துவிடுவார்கள்.


ஆனால் இவள் விஷயத்தில் அப்படி செய்யாதிருக்க காரணம் இவளின் அழகு இன்றும் அவள் அழகு துளியும் குறையாமல் சிலை போல் இருப்பதற்காக அவளை விட்டு வைத்திருக்கிறார்கள். அந்த அழகு ஒரு சிலருக்கு கடவுள் கொடுத்த வரம் என்றால் இவளுக்கு அது சாபமாக மாறியதோ. அந்த அழகை நினைத்து பலமுறை வெறுத்திருக்கிறாள்.


மற்ற பெண்கள் செயற்கையாக அழகாக இருந்தாள் இவள் இயற்கையாக அழகுடன் இருப்பாள். அதனால் யார் வந்தாலும் அவளை தான் கை காண்பிப்பார்கள் அவளால் அவர்களுக்கு லட்சத்துக்கும் மேல் வருமானம். அதனால் அவள் என்ன செய்தாலும் அவளை ஏதோ ஒரு வழியில் அவளை அடக்கி வைத்துருக்கிறார்கள். அவளுக்கு இறக்க குணம் அதிகம் அதை வைத்து பெரும்பாலும் அவளை அவர்கள் அடக்கி விடுவது.


அவளே இந்த அழகு இருப்பதனால் தானே இவ்வளவு பிரச்னையும் என்று கத்தி எடுத்து தன் முகத்தையும் தன்னையும் சேதப்படுத்தலாம் என்று நினைக்கும் போது கரெக்ட்டாக யாராவது வந்து அதை தடுத்து விடுவர். இவள் கூட யோசிப்பாள் நம் செய்யலை எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்று கேமரா ஏதாவது வைத்திருக்கிறார்களா என்று தேடிகூட பார்த்திருக்கிறாள் ஆனால் ஒன்றும் இதுவரை கிடைத்தது இல்லை.


உண்மையில் அங்கு கேமரா தான் வைத்திருக்கின்றனர் அவளுக்கு அது தெரியாது. அவளின் செய்யலை கண்காணிக்கவே ஒரு ஆள் இருக்கின்றார்.


இங்கு வரும் பெண்கள் முதலில் அடம் பிடித்தாலும் பின்பு இது தான் வாழ்க்கை என்று பழகி விட்டனர். ஆனால் இவள் மட்டும் எல்லாவற்றிலும் முற்றிலும் மாறாக இருப்பதனால் அவளுக்கு அங்கு "சைக்கோ" "பைத்தியம்" என்று பெயர் வைத்தியிருக்கிறார்கள்.


பெரும்பாலும் நம் நாட்டில் நியாயமாக நடந்து கொள்பவர்களுக்கு எப்பொழுதும் நம் மக்கள் சூட்டும் பெயர் தான் இதெல்லாம் என்றாலும் அங்கு அனைத்தையும் இழந்தாலும் என்றாவது இதற்கு ஒரு விடிவு வராதா இந்த கொடுமைகள் ஒழியாதா என்று தினந்தோறும் ஏங்கும் பெண் தான் அவள். என்றவாது ஒரு விடியல் இந்த பெண் குலத்துக்கும் எனக்கும் விடியாத என்று ஏங்கும் வழியறியா பேதை அவள்.
 
Status
Not open for further replies.
Top