ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பெண்ணியம் பற்றி உங்கள் கருத்து என்ன??

Vijayasanthi

New member
ஒரு பெண் தன்னுடைய கடமையை சரியாக செய்து கொண்டு தனக்கான அடையாளத்தோடும் சுயமரியாதையோடும் இருப்பதே பெண்ணியம் ஆகும்?????
 

Art pearl

Member
பெண்ணியம் பத்தி ஏதேதோ சொல்லுவாங்க. சில பேருக்கு ஆண்கள் பண்ற எல்லாம் பெண்களாலும் பண்ண முடியும்னு காட்டுறது பெண்ணியம். இன்னும் சிலருக்கு அவங்க இஷ்டபடி வாழுறது. இதெல்லாம் பெண்ணியம்னு நினைக்கிறாங்க.

என்ன பொறுத்தவரைக்கும் நாம என்ன எதிர் பாக்குறோமோ அதே மாதிரி அவங்களுக்கும் எதிர் பார்ப்பு இருக்கும்.

ரெண்டு பேரும் அவங்க அவங்க விருப்பத்தை அடுத்தவங்க மேல திணிக்காம நம்ம கோட்பாடுல வாழுறது தான்.


யாரும் யாருக்கும் அடிமை இல்லை ஆணும் பெண்ணும் சமம் சொல்றதெல்லாம் படிக்க ஈஸியா இருக்கலாம் நெறய இடத்தில நடக்கலாம் ஆனா இன்னும் ஒவ்வொரு விஷயத்துக்கும் வீட்டு ஆண்களை சார்ந்து இருக்குற பெண்கள் இருக்காங்க.


அவங்க கிட்ட பெண்ணியம் பத்தி கேட்டா அவங்க பதில் வேற மாதிரி இருக்கும்.


அங்க அவங்க எதிர் பாக்குறது அவங்களுக்கான மரியாதை மட்டும் தான்.

பெண்ணுக்கான மரியாதை தான் பெண்ணியம்
 
Top