ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிழை திருத்தம்

Naga Novels

Active member
Wonderland writer
பிழை திருத்தம் 💙 10

கண்கள் கலங்கி நின்ற லக்ஷனா வை பார்த்து அமிர்தமும், யோகதிற்க்கும் கண்ணீர் வழிந்தது.


லக்ஷனாக்கு ஐந்து வயது , தீபாவளி பண்டிகையை தன் பிறந்த வீட்டில் கொண்டாட,லட்சுமியும்,தனராஜ்ம் பெரியவீட்டிற்க்கு வந்தனர்.


வீட்டில் விஷசமாக இருந்தாலும் பண்டிகை நாட்களாக இருந்தாலும், லட்சுமி தன் கணவன் குழநாதையுடன் தன் பிறந்த வீட்டில் வந்துதான் கொண்டாடுவார்கள்.


தன்ராஜ்ம் சொந்த தாய்மாமன் வீடு தானே என்று உரிமையுடன் வந்துவிடுவார்.


தீபாவளி பண்டிகையை மொத்த குடும்பமும் ,குழந்தைகளுடன் சந்தோஷமாக கொண்டினர், அந்த குடுமமே சந்தோஷ கடலில் மூழ்கி இருந்தது, அது நடக்கும் வரை....


தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் தன்ராஜ்க்கு அவசர வேலை ஒன்று வந்து அவர் தனது ஊருக்கு கிளம்ப ரெடியாகினர்.


குடும்பம் எவ்வளவு சொல்லியும் அவர் கிளம்ப வேண்டியதாய் இருந்தது.


"லட்சுமி மருமகன் போகட்டும் , நீயாவது இண்டு நாள் இருந்துட்டு போமா" என லட்சுமி அன்னை கூறவும்.


"இல்லமா அவர் இல்லாமல் நான் மட்டும் எப்படிமா இருக்கிறது, நானும் போயிட்டு வர்றேன்" என்றாள் லட்சுமி.


இதை பார்த்த தன்ராஜ் "லட்சுமி நீ வேணும்னா இரண்டு நாள் இருந்துட்டு வா, நான் பார்த்துகிறேன்"என்க


"வேண்டாங்க நான் வர்றேன்" என்றவளிடம் மேற்கொண்டு எதும் பேசமால் கிளம்ப தயாராகினர்.


"லக்ஷனா, ஏய் லக்ஷனாஇங்க வா வீட்டிற்க்கு போவோம்" என பூபதி ,சபா கூட விளையாடிட்டு இருந்த குழந்தையை கூப்பிட,அவளோ


"ம்ம் நான் வரமாட்டேன் இங்க தான் இருப்பேன்" என்று குழந்தை பூ, சபா வை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டது.


அதை பார்த்த பசுபதி "அம்மாடி, லட்சுமி நீயும் மாப்பிள்ளையும் போங்கமா என் மருமக ஒரு இரண்டு நாள் இங்க இருக்கட்டும் அப்புறம் நான் கொண்டு வந்து விடுறேன்" என கூறவும் லட்சுமியும் ,தன்ராஜ்யும் கிளம்பி விட்டனர்.


வாசலில் அனைவரும் நின்று வழியனுப்ப , லக்ஷனா வோ பூபதி கையில் இருந்தாள்.


அனைவரும் டாட்டா சொல்லி விட்டு வண்டி கிளம்பியது ,லட்சுமியோ வீட்டை தாண்டும் வரை லக்ஷனாவையே திரும்பி பார்த்து கொண்டிருந்தார்.


பாவம் ,இரண்டு நாள் இருக்கட்டும் என்ற பசுபதிக்கு அவள் காலம் முழுவதும் இங்கே தான் இருக்க போகிறாள் என்றும், குழந்தையை பார்த்து கொண்டே சென்ற லட்சுமிக்கு இது தான் அவள் கடைசியாக பார்ப்பது என்றும் தெரியாமல் போய்விட்டது .


அவர்கள் இருவரும் கிளம்பி சென்ற ஒரு மணிநேரம் கழித்து வீட்டிற்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.


"ஐய்யோ லட்சுமி போய்டியா " என்ற பெரியவர்களின் அலறல் சத்தம் மட்டுமே அந்த வீடு எங்கும் ஒலித்தது.


ஆம் இருவரும் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி ,இருவரும் அந்த இடத்திலே உயிர் துறந்த செய்திதான் வந்திருந்தது .


எவ்வளவு அழ முடியுமோ குடும்பம் அழுது விட்டது.,எவ்வளவு கவலை பட வேண்டுமோ பட்டுவிட்டார்கள்.


இதற்கிடையில் பெரியவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கை முடிந்து தெய்வமாகிவிட்டனர்.


பத்து வருடம் கடந்து விட்டது, இந்த பத்து வருடத்தில் இந்த பெரிய வீட்டில் நடக்கின்ற முதல் நல்ல விஷேசம் இது.


அனைத்தும் இன்று நினைவாகி கண்களை ஈரமாக்கியது.


"அம்மாடிகளா சபைக்கு சடங்கு பொண்ண கூட்டிவாங்க" என முக்கு வீட்டு கிழவி கூறவும் இரு அத்தை மார்களும் லக்ஷனாவை சபைக்கு கூட்டி வந்தார்கள்.


மாம்பழநிற மஞ்சள் புடவையில் மெரூன் கலர் பார்டர் வைத்து நகைகள் பூட்டி அலகாரம் செய்து மதுரை மீனாட்சி போல் காட்சி அளித்தாள் லக்ஷனா.


அவள் வந்து அமரவும் ,மூத்த மனுஷியான் அந்த முக்கு வீட்டு கிழவி சந்தனம் எடுத்து, லக்ஷனாவின் இரு கன்னங்களிலும் தடவி விட்டு, "அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்க தாயி எவனுக்கு கொடுத்து வச்சுருக்கோ , இந்த அழக எவன் கொத்திட்டு போகப்போறானோ" என அவள் முகத்தை தடவி விரலில் நெட்டி முறித்தார் .


தலைகுனிந்து இருந்த லக்ஷனாவிற்கு ஏனோ இனம் புரியாத வெட்கம் நிறைந்த இதழ் புன்னகை வந்து சென்றது.


"அம்மாடி எல்லாருக்கும் வணக்கம் சொல்லுமா" என அமிர்தம் கூறவும் , நிமிர்ந்து வணக்கம் சொன்னவள் கண்களில் அவளது மாமன் மகன்கள் தான் விழுந்தனர்.


மாம்பழ மஞ்சள் சட்டையும் ,அதே கலர் கரை போட்ட வேட்டியும் ,முறுக்கிவிட்ட மீசையுமாக பக்கா கிராமத்தனாக பூபதியும்,


மெரூன் கலர் சட்டையில் , சந்தனநிற பேண்டில் , அலையாயும் கேசமும், டிரிம் பண்ண தாடி மீசையுடன் மார்டனாக சபாவும்,நின்று கொண்டிருந்தனர்.


இருவரையும் பார்த்தவுடன் சட்டென்று தாமரை மலர் தலை கவிழ்ந்தது போல் தலை கவிழ்ந்தாள் லக்ஷனா வெட்கத்தில்.


அந்த பருவம் அதற்கான வேலையை காட்ட துவங்கி விட்டது.


அடுத்தடுத்து , சம்பிரதாயங்கள் நடக்க ஆரம்பித்தது.


பசுபதியும், ரகுபதியும் மாலை போட்டபின், "ஏப்பா ,வேற மாமன் முறையில் யாரும் இருக்கிகளாபா முறை செய்ய,புள்ளைக்கு ஆழம் சுத்தப்போறோம், அப்புறம் வந்து நாங்க முறை செய்யலைன்னு வம்பு பண்ண கூடாது" என ஒரு பெருசுகூற ..


"அதெப்படி ஆழம் சுத்துவீக , நாங்க இருக்கோம்ல மறந்துபுட்டிகளா இல்லை அப்படியே ஒதுக்கி விடலாம்னு நினைச்சீகளா" என்ற குரலில் அனைவரும் வாசல் திரும்ப,


அங்கு ஓரு ஊரே சீர்வரிசை தட்டை தூக்கி கொண்டு நின்றது.


அங்கு ஆரஞ்சு நிற சட்டையில் கையில் கழுத்தில் என பொம்பளைகளுக்கு போட்டியா நகை போட்டு கொண்டு நின்று கொண்டிருந்தான் மருதுபாண்டி .


மருதுபாண்டி தன்ராஜின் சித்தி மகள் பிள்ளை ,அதாவது தன்ராஜ்க்கு தங்கச்சி மகன், லக்ஷனாவிற்க்கு அத்தை மகன் உறவு.


(இதென்னடா புது டிவிஸ்ட், ஏற்கனவே போட்டியில இரண்டு பேரு இருக்காங்கடா , நீயாரு டா கோமாளி வாலண்டியரா ரவுடினு வண்டில ஏறுத🙄🙄)


அடுத்த எபில தெரியும், மருது பாண்டி பத்தி 😄😄😄
😄😄
நட்புடன்
💙 நாகா 💙
 

Naga Novels

Active member
Wonderland writer
பிழை திருத்தம் 💙 11

மருது பாண்டி பேரு கேற்றார் போல் கம்பீரமானவன் , பக்கா கிராமத்தான், சுற்றுபட்டு கிராமத்து தெரிந்த மைனர் அவன்.

பெண்கள் விஷயத்தில் தாராளம்! பணமோ ஏராளம்!

தாய் மரித்திருக்க, தந்தையோ படுக்கையில்.

மருது பாண்டியின் தந்தை குலசேகரன் தான் லக்ஷனாக்கு அத்தை வழி மாமா .

லக்ஷனாக்கு தந்தை வழி உறவு என்று இருப்பது இவர்கள் மட்டுமே, தன் தந்தை செய்யவேண்டிய மாமன் முறைக்கு தான் இன்று மருது பாண்டி ஊரையே கூட்டி வந்திருக்கிறான்.

மருதுபாண்டிக்கு தந்தை குலசேகரன்க்கு, பசுபதி, ரகுபதி ஆகாது , ஏனென்றால் குலசேகரன் அப்போதைய நாளில் ஒரு வளர்ந்து வந்த அரசியல்வாதி இன்றோ எல்லாம் முழுதாய் முடிவடையாமல் படுக்கையில், அதுவே இப்போது வரை பகையில்.

அதெல்லாம் பழைய தூசு துப்பட்டு, அதை நேரம் வரும் போது துடைத்து கொள்வோம்.

பெரியவர்கள் ஆரம்பித்த பகை சிறியவர்கள் வரை தொடர்ந்து கொண்டது.

சபாவிற்க்கும், மருதுக்கும் பெரிதாய் முட்டி கொள்வதில்லை, சபா பெரும்பாலும் சென்னையில் இருப்பதால் என்னவோ.

ஆனால் பூபதிக்கும் மருதுக்கும் அடிக்கடி முட்டி கொண்டே இருக்கும், பூபதி எங்க பஞ்சாயத்து அடிதடின்னு செல்கிறானோ அங்கு எல்லாம் மருதுவின் ஆட்களின் கைபக்குவம் கண்டிப்பாக இருக்கும்.

"ஏண்ணே!, என்ன புதுசா மருது வந்து நிற்கிறான்" என ரகுபதி தன் அண்ணன் பசுபதியிடம் கேட்டார்.

"அமைதியா இரு, நல்ல காரியம் நடக்குற இடம், அதுமட்டுமல்ல, ஊர் மொத்தமும் கூடி இருக்கு" என பசுபதி தன் தம்பி ரகுபதியை அடக்கி வைக்க, சபாவோ நடப்பதை பொறுமையாக, அமைதியாக கவனித்தான்.

மருதுவை கண்ட நொடி , பூபதி கண்கள் இரத்த சிவப்பாகியது, கைகள் முறுக்கேற மீசை துடித்து அடங்கியது தன் தந்தை பார்த்த பார்வையில்.

மருதுவை பார்த்த அடுத்த நொடி, பசுபதி பார்ததென்னவோ தன் மகன் பூபதியைதான்.

வாசலிலே தடக்க போனவனைத்தான் கட்டி போட்டது அவரின் கண் அசைவு.

சபாவிற்க்கோ அனைத்தும் தெரிந்தாலும் அவன் ஆத்திரகாரன் அல்லவே சண்டித்தனம் பண்ண அதனால் பொறுமை காத்தான் பொறுப்புடன்.

மருதுவின் சீர்வரிசையில் ஊர்சனம் மலைத்து
நின்றது .

"வாப்பா மருது , மாமன் முறை செய்ய வர்ற நேரமா இது கடைசியா வர்ற" என ஊர் பெருசு ஒண்ணு கூறவும்.

ஆமா மா முதல்ல வந்தாப்புல இவங்க என்ன சீர் செய்ய விட்டுருவாங்களோ , போ பெருசு , எப்போ எத செய்யனும்னு தெரியாத முட்டாள் இல்லை நான்" என்ற வார்த்தைகளில், முட்டாள் , என்ற வார்த்தை மட்டும் பூபதி மேல் அழுத்தமாக படிந்தது.

கைகள் முறுக்கி கொண்டு சீற இருந்தவன் தோள்களை அமுக்கி பிடித்து என்னவோ பச்சைகிளி தான்.

"மாப்பிள்ளை வேண்டாம், ஊர்சனம் மொத்தமும் கூடி இருக்கு அமைதியா இரு" என பச்சைகிளி பூபதி காதில் கூற தன் கோபத்தை அடக்கி கொண்டான் பூபதி.

"சரி சரி வா நேரம் ஆகிட்டு ,வந்து முறை செய் புள்ளைக்கு ஆழம் சுத்தி பந்தி பரிமாறனும்" என்று அதே ஊர் பெருசு கூறவும்.

"மாமே எனக்கு என்னமோ அந்த கிழவனே இந்த மருது நாயே செட் பண்ணி அனுப்பி இருக்குமோ, அவசரப்படுத்துது" என வாய்க்குள் கூறவும்.

"அட ஏண்டா அவன் என்னமும் செஞ்சிட்டு போறான் நீ முடிகிட்டு இருந்தா போதும் " என பச்சைகிளி கூறினான்.

இதையெல்லாம் ஏதோ டிவி சீரியல் பார்ப்பது போல் பார்த்து கொண்டிருந்தாள் லக்ஷனா.

மருதுவின் கம்பீரத்தையும் அவள் விழி விரித்து ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள், ஏனென்றால் அவளுக்கு மருது என்ற கேரக்டரையே இப்போது தான் தெரியும் அவனை பற்றி இனி தான் தெரிந்து கொள்வாள் .

இப்போது தானே பருவ வயதில் வந்து நிற்கிறாள் இனிதான் அனைத்தும் வந்து போகும்

(அடச்சண்டாளி மருதுவையும் சைட் அடிக்கா, சரி வயசு அப்படி சில ஈர்ப்புகள் வந்து தானே போகும்)

நேராக மேடைக்கு வந்தவன், லக்ஷனா கன்னத்தில் சந்தனம் தடவி, பின் மாலை போட போக .

"இங்கு பசுபதிக்கு பற்றி கொண்டு வந்துவிட்டது , என்ன மாமே மாலை போட போறான், என வேட்டியை மடித்துகட்ட"

"டேய் , இவன் வேற இருடா என்ன நடக்குன்னு பார்ப்போம்" என கிளி கூற

" எது மாலை போட்டு முடிஞ்சவுடனா " என சபாவும் கேட்டான் அவனுக்கும் சில விஷயங்கள் தெரியும் என்பதால்.

"அட நீயுமா இருங்கடா அதெல்லாம் போட முடியாது " என தன் இரு மருமகன்களையும் சமாதானப்படுத்தினார் பச்சை.

"ஏப்பா என்ன மாலைய தூக்குற" என முக்குட்டு கிழவி கூறவும்.

"ஏன் கிழவி என்அய்யன் வந்தா போடுவார்ல அவர் பதில் தான் நான் போடுறேன்" என்க

சரி தான் மருது ,முறையே ஆனாலும் கல்யாணம் முடியாத பையன் சடங்கு பொண்ணு கழுத்துல மாலை போட கூடாது உன் வலசல் பெரிய மனுசிய போட சொல்லு, என முக்கு வீட்டு கிழவி ஆணிதரமாக சொல்லவும் , வேற வழி இல்லாமல் அங்கு ஒரு பெரிய மனுசி மாலையைப் போட்டாள்.

பின் தட்டில் உள்ள நகை பெட்டியில் இருந்து 10 பவுன் தங்க மாலையை எடுக்க ,ஊர்சனம் அனைத்தும் வாயில் கை வைத்தது.

"ஆத்தாடி, எத்தா தடி நகை பாருடி ,லக்ஷனா அதிர்ஷ்டத்த " என அங்கு சில பெண்கள் பேசியது மற்றவர்கள் காதிலும் விழுந்தது.

"ஏய் கிழவி இந்த தங்க சங்கிலி ஆவது நான் போட்டு விடலாமா இல்லை..." என இழுவையாக கேட்க.

இதையும் தடுக்க முடியாது என்பதால், அவர் அமைதி காக்க ,நகையை லக்ஷனா கழுதாதில் மாட்ட கையை கொண்டு போனான் , அவன் மாட்டும் போது அவன் கண்கள் பூபதி மேல் இருந்தது.

அவனை பார்த்து கொண்டே என்னமோ தாலி கட்டுவது போல் நகையை மாட்டி விட்டவனை, கொன்று புதைக்கும் வெறியோடு தன் கீழ் உதட்டின் கிழ் உள்ள முடியை கடித்து விட்டு தன் கைகள் முறுக்கி கோபத்தை வெளிபடுத்தினான் பூபதி.

சபாவின் கண்களோ சலனமின்றி தீர்க்கமாக இருந்ததது.

இது என்னடா புயலுக்கு பின் அமைதியா முன் அமைதியா, தெரியலையே பங்கு
அடுத்த எபில பார்ப்போம் 🙄🙄🙄
 

Naga Novels

Active member
Wonderland writer
பிழை திருத்தம் 💙 12

நகையை அணிவித்து விட்ட மருது, லக்ஷனாவை பார்த்து புன்னகைத்து விட்டு, அவள் காதுபட "அடியே பெரிய மனுஷி அவனுங்க மட்டும் உனக்கு முறை மாமனுங்க இல்லை , நானுந்தேன் , இனி இந்த மருது மாமனையும் நினப்புல வச்சிக்கோ என்னடி, இனி அடிக்கடி நீ மாமன பார்ப்ப, பார்க்கும் போதெல்லாம் சிரிக்கனும் சரியா ", என மருது அழுத்தமாக கூறவும் , லக்ஷனாவோ அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

மேடையில் இருந்து கீழ் இறங்கிய மருது தன் சொந்த பந்தத்தை அழைத்து கொண்டு வெளியேற விளைந்தவனை.

அப்போது அங்கிருந்த பெருசு ," ஏப்பா மருது முறை செஞ்சிட்டு கை நினைக்காம போற, இதென்ன பழக்கம் " என கூறவும், அந்த பெருசை திரும்பி பார்த்தவன்.

"யோவ் பெருசு, இதே பங்சன என் மாமன் உயிரோடு இருந்து நடத்தி இருந்து, நான் முறை செஞ்சிட்டு சாப்பிடாம போவேனா, இது என் பங்காளிகள் வீட்டு பங்சன் அவுகலே ஒரு வார்த்தை சாப்பிட சொல்லல , சொல்லாத இடத்தில ஓசி சோறு திங்கிறதுக்கு நானும் என்சொந்தங்களும் ஒண்ணும் சோத்துக்கு வக்கத்த மானங்கெட்டவுக இல்லை , என் வீட்டில என் சனங்களுக்கு 10 ஆடு அறுத்து சாப்பாடு ரெடி பண்ணிருக்கேன் ,நீங்க எல்லாரும் அங்க வாங்க நல்லா இளம்ஆட்டு கறி சவச்சி சாப்பிட பூ வா இருக்கும் , என்ன பெருசு வர்ட்டா " என கெத்தாக ரவுசு பண்ணிகொண்டே கிளம்பி விட்டான் மருது.

"பாத்தீங்களா அண்ணேன் சிறு வண்டெல்லாம் என்ன சொல்லிட்டு போதுனு" ரகுபதி ,தன் அண்ணன் பசுபதி காதை கடிக்க,

"சின்னவனே , நாம சாப்பிட சொல்லி இருந்தாலும் அவன் சாப்பிட்டு இருக்க மாட்டான், நாம சொல்லி அவன் மறுத்ததா இருக்க கூடாது , அதான் , நான் சாப்பிட சொல்லல,இல்லைனா இந்த வீட்டு வாசலை மிதிச்சவங்க யாரும் வெறும் வயித்தோட போக விட்டது இல்லை அதான் நம்ம பரம்பரை " என்றார் பசுபதி .

"மாமே பார்த்தியா அவன் எகத்தாலத்த, ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் நொங்கு சீவுற மாதிரி அவன சீவத்தான் போறேன் " என தன் தங்க காப்பு போட்ட வலது கையை இடது கை வைத்து முறுக்கிவிட்டவனை சமாதானப்படுத்தினான் பச்சை கிளி.

பூபதி பேச்சை கேட்டு மேலும் கீழுமாக அவனை நக்கலாக பார்த்த சபா, சிரித்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்று சென்றான்.

"இவன" என சபாவை பார்த்து பல்லை கடித்த பூபதி, "உன்னையும் ஒரு பிளான் போட்டு தூக்குறேன்டா ஒரு நாள் " என மனதில் நினைத்து கொண்டான்.

அடுத்து என்னப்பா,பந்திய போட்டுட வேண்டியது தானே என கூட்டத்தில் குரல் கேட்கவும் அனைவரும் பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

(வாங்க பந்திக்கு போவோம் அதான் நமக்கு முக்கியம்😀😀)

மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி , மட்டன் சுக்கா,பொரிச்ச கறி அவிச்ச முட்ட பீட்ருட் அல்வா, ஐஸ்கீரிம் என பந்தி கலைகட்டியது.

வேட்டியை மடித்து கட்டி கொண்டு பந்தி பரிமாறி கொண்டிருந்தான் பூபதி ,சபாவோ மொய் எழுதும் இடத்தில் மொய் பணம் வாங்கி கொண்டிருந்தான்.

"யோவ் , சண்டியரே " என பந்தியில் குரல் கேட்கவும்.

"எவடி அவ , எம்புட்டு தைரியம் இருந்தால் சண்டியர்னு கூப்பிடுறவா" என பூபதி வேட்டியை மடித்து கட்டி கொண்டே பந்தி நடக்கும் இடத்தை சுற்றி முற்றி பார்த்தான்.

"யோவ் இங்க வாரும்ய்யா" என பந்தி வரிசையில் வெள்ளை வெளிர்ன்னு ஒரு வளையல் கை உயர்ந்து பசுபதியை வரச்சொல்லி அசைந்தது.

"அடியே என்னடி பண்ற, சாப்பிடனும் தானே சொன்னே அதான நாங்க கூட்டி வந்தோம், பாரு உன் ஆளுக எல்லாரும் வேற போயிட்டாக , நீ இப்போ போய் அந்த சண்டியர்ட்ட வம்பிழுக்க" என அருகில் இருந்த உள்ளூர் தோழி ஓருத்தி, கூப்பிட்டவள் தொடையை கிள்ளி வைக்க,

"நீ அமைதியா இரு நான் பாத்துகிடுறேன், என அந்த பெண் மீண்டும், "யோவ் சண்டியரே என்ன இங்கன வர இன்னுமா உமருக்கு பஸ் கிடைக்கல" என பூபதியிடம் உரண்டை இழுத்தாள்.

அதில் கடுப்பான பூபதி "உங்கொப்பத்தா இருடி வாறேன் " என தான் பரிமாறிக்கொண்டிருந்த கரிக்குழம்பு வாளியை வேறு ஒருவனிடம் கொடுத்து விட்டு, தன் வேட்டியை மடித்து கெட்டி கொண்டே சத்தம் கேட்ட இடத்திற்கு வந்தான்.

"அடியே வர்றான்டி "என ஓருவள் கூற

"வரட்டும் வரட்டும் அதுக்குதானே கூப்பிட்டது"என அவள் கூற,

"ஏய் உனக்கு சண்டியர பத்தி சரியா தெரியல பொட்டபுள்ளனு கூட பாக்கமாட்டான் அப்பிடுவான் அப்பி" என மற்றொருவள் எச்சரிக்கை செய்தாள்.

அதே நேரத்தில் பூபதியும் அவர்கள் முன் வந்து நின்றான்.அங்கு ஐந்து குமரிகள் வண்ண வண்ண பாவாடை தாவனியில் சாப்பிட அமர்ந்து இருந்தனர்.

"எவடி அவா என்ன சண்டியர்னு கூப்பிட்டது ,இப்ப கூப்பிடுடி பார்ப்போம்" என தன் தங்க காப்பை முறிக்கிகொண்டே கேட்கவும் .

"நான் தேன் கூப்பிட்டேன் " என சூரி போல வாலை இலையை தன் வலது கை கொண்டு நடு காம்பை அடித்து சீராக்கி கொண்டே நிமிர்ந்தாள் , அவள் தான் திமிருக்கு சொந்தகாரி பெயர் வைதேகி.

நீரோடை போல் தெளிந்த முகம்,நிலவு போல் பிரகாசம் , கூர் நாசி, அவள் பார்வையில் ஒரு திமிர், அவள் வார்தைகளில் ஒரு தெனாவெட்டு என ஒரு அழகான குட்டி சொர்ணாக்கா .

அந்த குரலில் பூபதி அவள் புறம் பார்க்க ,

அவனை நேர்கொண்டு எந்த பயமும் இன்றி திமிராக பார்த்து வைத்தாள் வைதேகி....

ஆஹா ஆஹா ,ஏற்கனவே கடுப்புல இருக்குற சிங்கத்துக்கு சிக்கெடுக்காளே , என்ன நடக்க போதோ , அவன் பொட்ட புள்ளனு பாக்க மாட்டானே ராங்கா பேசுனா ஓங்கி ஒண்ணு விட்டுருவானே , பார்ப்போம் என்னா நடக்குதுனு அடுத்த எபில 😁😁😁😁😁😁

சும்மா கொளுத்தி போடுவோம் 😀😀😀😀
 
Top