ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

#நெருப்பாகும்_உன்_தீண்டல்கள்
#yagnithaavideoediting
#yagnithaareview
மதிவதனா 😍 சங்கமேஸ்வரன்

மதிவதனா தன் சிறுவயது காதலை பலரின் சதியால் இறக்க நேரிடுகிறது.. மூன்று வருட வனவாசம் முடிந்து வருகையில் கையில் மூன்று வயது குழந்தையுடன் வருகிறாள்.. அந்தக் குழந்தைகும் வதனாவுக்கும் உள்ள சம்மந்தம் என்னவோ.. அதிரடியான கதையின் போக்கில் ஆசிரியர் கூறிய விதம் சுவாரசியமாக உள்ளது.... குடும்பம், நட்பு, பிரிவு,காதல் கொண்டு கதை நகர்கிறது..

சங்கர் குடும்பத்திற்காக பார்த்து தன் வாழ்க்கையை பணயம் வைக்கிறான்.. "சரி" என்ற ஒற்றை வார்த்தையில்... அதன் விளைவு 🤧

தங்கள் சுயநலத்துக்காக சங்கருடன் ஒட்டி உறவாடும் உறவுகள்... அம்மா தங்கை பாட்டி 🤐🤐🤐 அவன் ஒன்னும் பணம் சம்பாரித்து போடுற மிஷின் இல்ல 😤😤😤

சுதா இவ எல்லாம் என்ன பொண்ணு சாரி சாரி இவ எல்லாம் பொண்ணே இல்ல ரத்தம் குடிக்கிற காட்டேரி 🤬🤬🤬 உனக்கு கொஞ்சம்கூட உடம்பு கூச வில்லையா ச்சி....

மீனுக்குட்டி இதுல ஒரே உருப்படியான கேரக்டர் நீ மட்டும் தான்.. வேணும்ன்ன உன் புருஷனை யும் வச்சுக்கலாம் நீங்க ரெண்டு பேருமே சாக்கடையில் முளைத்த செந்தாமரை...

அமுதா உனக்கு இதெல்லாம் பத்தாது மா நீ பண்ண வேலைக்கு 🤬 பெத்த பையன்னு கூட பாக்காம சுயநலம்..

சண்முகம் & ஆறுமுகம் நட்பு உண்மையிலேயே அருமை....

சண்முகம் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு முடிவு எடுத்து இருக்கலாம், அவருடைய அவசரம் மதி வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிட்டது🤧... யாரோ ஒருத்தரு ஒரு இடத்தில தாழ்ந்து போய் தான் ஆகணும்... கொஞ்சம் பிரச்சனையே ஆறவிட்டு இருந்தால் இவ்வளவு தூரம் வந்து இருக்காது 🤧 சண்முகத்துக்கு அந்த நேரம் பொண்ணு மேல இருந்த பாசம், பயம் அவரால யோசிக்க முடியல, இவங்க மேலயும் முழு தப்பு சொல்ல முடியாது...

அணுகுண்டு வாத்துக்குஞ்சு 🤣🤣 மறக்கவே முடியாது இந்தக் கதை இல்ல என்ன ரொம்ப இழுத்த விஷயம் இது 😍😍😍😍

எனக்கு மதி மேல கொஞ்சம் கோபம் தான் யோசிக்காம முடிவு எடுத்துட்டா... அட்லீஸ்ட் அவன் காருக்கு பின்னால் ஓடி வர அப்ப யாவது என்னன்னு பேசி இருக்கலாம் 😔 உன்னுடைய ஈஸ்த்தான நீ தவிக்கவிட்டு இருக்கக்கூடாது.....

கதை நல்ல விறுவிறுப்பா போச்சு, அங்கங்க சிறிய எழுத்துப் பிழை மட்டும் 😍.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍😍

T22 _ N0 _ 9_ #நெருப்பாகும்_உன்_தீண்டல்கள்
கதை திரி https://pommutamilnovels.com/index.php?threads/நெருப்பாகும்-உன்-தீண்டல்கள்-கதை-திரி.936/post-22153
Lots of love for you 💕💕💕💕
 
Top