ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீதான் என் மன்னவா!!!! - கதை திரி

Status
Not open for further replies.

Kavi nila

New member
Wonderland writer
அத்தியாயம் 4

ஒரு வாரம் கடந்த நிலையில் , மருத்துவமனையில் மதிய உணவை விவான் ஹர்ஷிக்கு ஊட்டிக் கொண்டு இருக்க, சித்ரா மற்றும் ஜோதி இருவரும் இந்த ஒரு வாரம் ஹர்ஷியின் பொருட்களை பேக் செய்து கொண்டு இருந்தனர். நாளை காலை ஒரு முறை ஹர்ஷியின் உடல்நிலையை பரிசோதித்து விட்டு டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று டாக்டர் சொல்லி விட்டார்.

ஜோதி "என்ன சித்ரா அதிசயமா இருக்கு இன்னும் காலையில் இருந்து கொழுந்தனை ஆளையும் காணும் போனையும் காணோம். நேற்றில் இருந்து நீ இங்க இருக்க... அப்படி பார்த்தா காலையே ஆஜராகி இருக்கனுமே" என

"அட நீங்க வேற ஏன் அக்கா.... கொஞ்சம் நேரம் நானே அந்த மனிசன் தொல்லை இல்லாமல் நிம்மதியா இருக்கேன்" என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொல்ல,

விவான் "நீங்க இரண்டு பேரும் லவ் மேரேஜ் ஹா!!! இவ்வளவு அண்டர்ஸ்டார்ன்டிங் கப்பிலா இருக்கீங்க" என

ஹர்ஷி "லவ் மேரேஜ் பண்ணவங்களையே என் சித்தப்பா சித்தி வோவர்டேக் பண்ணிடுவாங்க" என்று சிரிக்க, சரியாக உள்ளே நுழைந்து அருளின் காதில் இவ்வார்த்தை கேட்டு,

"யாரு அதை நான் இல்லாத நேரத்தில் என் பொண்டாட்டியை கேலி பண்றது" என்று வந்ததும் மருந்துகள் மற்றும் ஒரு வாரம் மேல் இங்கவே தங்கியதால் தங்கள் பொருள் என அனைத்தையும் பையில் அடுக்கி கொண்டு இருக்கும் மனைவியை நெருங்கி அவளது வேலை தமதாக்கிக் கொண்டு சித்ராவை அமர வைத்தார்.


"நாங்க எதுவும் சொல்லலை தம்பி... உங்க சரிபாதி தான் நீங்க இல்லாமல் இந்த ஒரு வாரம்.. " என்று ஜோதி பேசும் போதே குறுக்கிட்டு "நானும் நானும் மிஸ் பண்ணேன்" என்று அருள் வேகமாக சொல்ல,

ஹர்ஷி "ரொம்ப சந்தோஷமா இருந்தாங்களாம்" என்று நக்கலாக சொல்ல, "என்ன!!!" என்று அதிர்ந்து தன் மனைவியை பார்க்க,

"ஹர்ஷி!!!" என்று சிணுங்களாக சித்ரா முணுங்கி விட்டு "அவ கிடக்கிற அருள்... சைதன்யா போன் பண்ணானா" என்று


"ம்ம்... பண்ணான் பண்ணான் பத்து நாளில் வாரானாம். வொர்க் ப்ரம் ஹாம் கேட்டு இருக்கான். இப்ப இருக்கிற ப்ராஜெக்ட்டை முடிச்சிட்டு போக சொல்லி இருக்காங்க. என் பையன் தான் இருந்தாலும் சொல்றேன் மா ரொம்ப திமிரு.... அக்கா பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கலையேனு கேட்டால் 'அதான் நீங்கள் எல்லாம் இருக்கீங்க... பத்தாததுக்கு அவளுக்கு பிடிச்சவங்க தான் அவ பக்கத்திலே இருக்காங்களே நான் வேற எதற்கு அங்க' என்றதை சொல்ல,

விவான் " நான் இருக்கிறது பிடிக்கலையா" என்று வருத்தமாக கேட்க, மற்றவர்கள் என்ன சொல்வது என்று புரியாமல் முழிக்க,

ஹர்ஷி "அவனுக்கு என் மேல தான் கோபம். என் கிட்ட இன்னும் பேசவே இல்லை. நான் தான் தப்பு பண்ணிட்டேன்" என்று குற்றவுணர்ச்சியில் சொல்ல,

அருள் "அட நீங்க இரண்டு பேரும் சும்மா இருங்க... இங்க இருந்தா நிறைய வேலை செய்ற மாதிரி இருக்குன்னு அந்த நாய் அங்க போய் உட்கார்ந்துட்டு இருக்கு... நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு எல்லாம் இங்க சீனே இல்லை" என

"இவருக்கு என் புள்ளை கரிச்சு கொட்டலைனா அந்த நாளே முடியாதே. என் பையன் வரட்டும் அப்புறம் தெரியும் இந்த சித்ரா பற்றி" என்று கோபமாக சொல்ல,

இவர்களின் செல்ல சண்டையை புரியாமல் பார்த்த விவான் "அச்சோ!! கோபப்படாதீங்க சின்ன அத்தை.... மாமா எதோ தெரியாமல் சொல்லிட்டார்" என்று இன்னும் வாக்கப்படாத குடும்பத்திற்காக கெஞ்ச,


'ஐயோ பாவம்' என்று ஹர்ஷி விவானை பார்க்க, ஜோதி "தம்பி குடிகாரன் பேச்சு விடிச்சா தான் போச்சு.... ஆனா இவங்க இரண்டு பேரோட பேச்சும் சொன்ன அடுத்த நிமிசமே போச்சு.... மேடம்முடைய அதிகப்படியாக கோபம் என்ன தெரியுமா" என

விவான் ஆர்வமாக பார்க்க, ஜோதியே "ஒரு இரண்டு இல்ல மூன்று மணி நேரம் பேசாமல் இருப்பா. அதுக்கு அப்புறம் அவளே மறந்துட்டு பேசிடுவா. நானும் இவங்க கல்யாணம் பண்ணி வந்த நாளில் இருந்து ஆர்வமா இவங்க எப்ப சண்டை போடுவாங்கனு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போய்ட்டேன்"


"இது இப்ப முக்கியமா... தம்பி அப்பா எப்ப வராங்க" என்று அருள் விவானிடம் கேட்க,


"அபி அங்க தனியா விட்டு வர முடியவில்லை. அதான் கொஞ்சம் லேட் ஆகுது. நாளையோட அபிக்கு அவ கிளாஸ் முடித்து விடும். இரண்டு நாளில் வந்திடுவாங்க மாமா" என்றதும் "சரிப்பா" என்று அடுத்த வேலையை பார்க்க சென்றனர்.

****

டெல்லி, ஜவகர் "ஹேய் நாட்டி... முகத்தில் சந்தோச கலை தாண்டவம் ஆடுது" என்று கேட்க, மிஷ்காவோ ஒன்றரை மாதம் விடுமுறையை தன் குடும்பத்தாருடன் இருக்க போவதை நினைத்து மேகத்தில் மிதந்து கொண்டிருக்க,

ஜவகர் "மனிசனை மதிக்க தெரியாத ஜீவன்" என்று சலித்து கொள்ள, உடனே மிஸ்கா "மதிக்க இல்லை மிதிக்க தெரியும்... கொஞ்ச நேரம் சும்மா தான் இருடா. முழுசா முன்று வருசம் கழித்து நான் என் ஃபேமிலியை பார்க்க போறேன். எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா.... எங்க ஊரில் லா காலேஜ்லே இல்லாத மாதிரி என்னை இவ்வளவு தூரத்தில் சேர்த்து கொடுமை படுத்துறாங்க" என்று வாய் பேசிக்கொண்டு இருந்தாலும் பெட்டியில் தன் உடமைகளை அடுக்கி கொண்டு இருந்தாள்.

ஜவகர் "ஏன் நீயும் உன் ட்வின் சிஸ்டர் மாதிரி ஹாம் சிக்ல ஒரே வருசத்தில் போய் இருக்க கூடாது. நானாவது நிம்மதியா இருந்து இருப்பேன்" என

"அவ ஒரு நாள் கூட அம்மாவை விட்டு இருக்க மாட்டாள். அவளை போய் புனே மெடிக்கல் காலேஜில் சேர்த்து விட்டா பாவம் அவ என்ன செய்வா... ஒரு வருசம் அவ தாக்கு பிடிச்சதே பெருசு இப்ப கூட ஹாஸ்டல் தான். ஆனா பாதி நாள் வீட்டில் தான்.... சரிடா எனக்கு டிரைன் டைம் ஆகுது. சீ யூ லேட்டர்" என்று இரண்டு பெட்டியை வேகமாக இழுத்து கொண்டு ஒடினாள்.

அவளது நல்ல நேரம் பாதி வழியில் பயங்கர டிராபிக் ஜாம். 'ஐயோ... கொஞ்ச நேரம் தான் இருக்கே டிரைனை மிஸ் பண்ணிட்டா என்ன பண்றது' என்று யோசனையுடன் டாக்சி டிரைவரிடம் "பாய்சாப்... இங்க இருந்து ஸ்டேஷன் எவ்வளவு தூரம்" என அவரும் இவளின் அவசரத்தை புரிந்து கொண்டு "இதோ தெரியுதே குட்டி தெரு அதுல இறங்கி வேகமா போனா பத்து நிமிடத்தில் ஸ்டேஷன் வந்திடும்" என அவரிடம் காசை கொடுத்து விட்டு வேகமாக அவர் காட்டிய எதிர் பக்கம் உள்ள தெருவிற்கு செல்ல சாலையை வேகமாக தனது இரு பெட்டிகளையும் இழுத்து கொண்டு ஒட, எதிரே வந்த நபரின் மேல் மோதி கீழே விழுந்தனர் இருவரும். அதில் அந்த மனிதன் கையில் இருந்த ஐபோன் மற்றும் லேப்டாப் சிதறி போனது.

மிஷ்கா "ஹரே!!!! பாகல்.... கண்ணு தெரியலைனா எதற்கு ரோட்டில் நடந்து வர, ஆள் வரது தெரியலை.... உன்னை எல்லாம் போலீஸ்ல பிடிச்சு கொடுக்கனும். பொண்ணுங்க எதிரே வந்தா போதுமே தெரியாத மாதிரியே இடிக்க வேண்டியது" இன்னும் சில பல நல்ல வார்த்தைகளை கொட்டி விட்டு சென்றுவிட்டாள்.


ஆனால் அவள் அறியாதது தன்னை எதிர்த்து பேசும் ஆண்ணையே ஒழித்துக் கட்டி விட்டு தான் அடுத்த வேலையை பார்க்கும் மனிதனை தாம் சீண்டி விட்டு செல்கிறோம் என்று. திரும்பி வரும் போது இது பகையாக மாறி பழி வாங்குமா???



நிலா!!!
 
Status
Not open for further replies.
Top