ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீதான் என் மன்னவா!!!! - கதை திரி

Status
Not open for further replies.

Kavi nila

New member
Wonderland writer
வணக்கம் நண்பர்களே ❤❤

நான் நிலா. தளத்தின் புதிய எழுத்தாளர். என் கதை "நீதான் என் மன்னவா!!! உடன் உங்கள் அனைவருடன் பயணம் செய்யும் வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி சிஸ்டர்.

கதைக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கும் நான் ❤
 

Kavi nila

New member
Wonderland writer
நீதான் என் மன்னவா!!!! முன்னோட்டம்

அன்பும் பாசமும் நிறைந்த குடும்பத்தில் காதல் வந்தால், அந்த காதலால் பலர் பலவிதமான மன கஷ்டங்களை சந்திக்க நேர்ந்தால், புரிதல் இருந்தும் பிரியும் காதல், புரிதலே இல்லாமல் சேரும் காதல், காதலில் தொடங்கி மோதலில் முடியும் காதல், மோதலில் தொடங்கி காதலில் முடியும் காதல், வருடம் பல கடந்தும் நிலைத்து நிற்கும் காதல் என காதலுக்கு பல பரிமாணங்கள் உள்ளன.

ஆனால் நம்பிக்கை இல்லா காதல்!!! முடிவு முறிவே!!! இக்கதையில் காதலும் அதன் நம்பிக்கையையும் காணலாம்.




சீக்கிரமே கதையோடு சந்திக்கலாம்!!!

நிலா!!!

 

Kavi nila

New member
Wonderland writer
அத்தியாயம் 1

கோபிசெட்டிபாளையம், ஈரோட்டில் இருந்து முப்பத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரம்மியமான நகரம். சின்ன கோடம்பாக்கம், மினி கோலிவுட் என்ற அடைமொழிக்கு சொந்தமான ஊர்.


மார்கழி மாதம் அதிகாலை வேளையில் அந்த தெருவில் வசிக்கும் இல்லத்தரசிகள் தன் வீட்டுக்கு முன் தங்களால் முடிந்தவரை பெரிய கோலத்தை போட்டுக்கொண்டு கதையளந்து கொண்டு இருக்க,

அனைத்து வீட்டிலும் பெண்கள் மட்டுமே இருக்க, ஒரு வீட்டின் முன்பு மட்டும் தன் ஆசை மனைவிக்கு துணையாக தூக்கத்தை தியாகம் செய்து விட்டு மனைவி கோலம் போடும் ஆழகை ரசித்து கொண்டு இருந்தார். அவர் தான் அருள்மொழி.

"என்ன கொழுந்தனாரே.... நாங்க தான் வாசல் தெளிச்சு கோலம் போட இவ்வளவு சீக்கிரம் எழுந்து இருக்கோம், நீங்க எதுக்கு குளிரில் வெள்ளத்தை வர வைச்சிட்டு இருக்கிங்க.....விட்டா நீங்களே கோலம் போடுவீங்க போல" என்று எதிர் வீட்டில் இருக்கும் அண்ணன் மனைவி ஜோதி கேலி செய்ய,

"கோலம் போட நான் ரெடியா தான் இருக்கேன் அண்ணியாரே!! என் பொண்டாட்டி ஓகே சொன்னால் என் கை வண்ணத்தை காட்டலாம்" என்ற கணவனை முறைத்த சித்ரா,

"உள்ள போங்க.... அக்கா கேலி பண்றாங்க.... உங்களுக்கு என்ன சின்ன பையன்னு நினைப்பா..... இப்ப நீங்க உள்ள போகல இரண்டு வாரம் உங்க கிட்ட பேச மாட்டேன்" என்றதும் உடனே உள்ளே சென்றுவிட்டார் மனிதர்.

இதை பார்த்து சிரிக்கும் ஜோதியை சமாளிக்கும் விதமாக இளித்து வைத்தார் சித்ரா.

ஒரே மாதிரி எதிர் எதிர் இருக்கும் வீட்டு தான் இந்த தெருவின் அடையாளம். பிரகாசம் மற்றும் அருள்மொழி இருவரையும் அறியாதவர்கள் யாரும் அங்கே இருக்க முடியாது.
இருவரின் இளம்வயதிலேயே தந்தை மறைந்து விட தந்தையின் தொழிலை கவனித்து கொண்டு தன்னை விட ஆறு வயது குறைவான தம்பியை படிக்க வைத்தார் பிரகாசம்.

பிரகாசத்துடன் திருமணம் முடிந்து இந்த வீட்டில் அடியடுத்து வைத்தார் ஜோதி. இவரோ அருள்மொழியை விட இரு வயதே பெரியவர். இவர்களுக்கு மூன்று பெண் செல்வங்கள். பல வருடம் காத்திருப்புக்கு பின் பிறந்தவள் ஹர்ஷிகா, 29. தன் சித்தப்பா பள்ளியில் அறிவியல் டீச்சர். அடுத்து இரட்டையர்கள் ஜீவிகா, மிஷ்கா, 20. ஜீவிகா மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி. மிஷ்கா வீட்டில் யாருக்கும் அடங்காத வாலில்லாத குரங்கு. தான் லாயர் தான் ஆக வேண்டும் என்று குறிக்கோள் கொண்ட பெண்.



அருள்மொழி, நாற்பத்து நான்கு வயதானாலும்லமனதளவில் இன்றும் இருபதில் வாழும் இளைஞர். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஊரின் பெண்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா, நாற்பத்து ஒன்று இவரின் மொத்த உலகம். கல்யாணம் நடக்கும் போது இருவருக்கும் சிறுவயது. சித்ராவிற்கு பதினாறு இவருக்கோ பத்தொன்பது. அன்றில் இருந்து இந்த இருபத்து ஐந்து வருடங்களில் அவர் காதல் பல மடங்கு கூடியதே தவிர துளியும் குறையவில்லை.

இவர்களின் ஒரே புதல்வன் சைதன்யா. சென்னையில் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் சமீபத்தில் தான் பணியமர்த்தப்பட்டான். இருபத்தி மூன்று வயதின் கலகலப்பான குணமும் குடும்பத்தின் மீது பாசத்தை பொழியும் இளம் தலைமுறை.


வெண்மதி, அருள்மொழி மற்றும் பிரகாசத்தின் தாய் தனக்கு எங்கே இருக்க தோன்றுகிறதோ அங்கே இருப்பார். முக்கால்வாசி நேரம் பெரிய மகன் வீட்டில் தான் பகல் நேரத்தை கடத்துவார். அங்கே தானே பேத்தி இருப்பாள். இரவில் சின்ன மகன் வீட்டுக்கு வந்து விடுவார்.



பிரகாசம் "ஒரு வரன் வந்திருக்கு புள்ள, பெரியவளுக்கு பொருத்தமா இருக்கும். அடுத்த வாரம் ஒரு நல்ல நாளா பார்த்து வை. நம்ம இரண்டு பேர் மட்டும் முதல போய் பார்த்துட்டு வந்திடலாம். மனசுக்கு ஒப்புச்சுனா மேல பேசலாம்" என்று காலை சாப்பிட அனைவரும் இருக்கும் போது சொல்ல,

ஜோதியும் "சரிங்க" என்று பள்ளிக்கு கிளம்பும் ஹர்ஷிகாவிற்கு சாப்பாடு எடுத்து வைக்க, கேட்ட செய்தியில் சாப்பாடு இறங்க மறுத்தது ஹர்ஷிக்கு. வேகமாக இரண்டு இட்லியை வாயில் அடைத்து வயிற்றை பாதி நிரப்பி விட்டு தன் வண்டியில் கிளம்பி விட்டாள்.

வழியில் கொண்டத்துக்காளியம்மன் கோவில் வண்டியை நிறுத்தி விட்டு சென்னையில் இருக்கும் தன் தம்பிக்கு அழைப்பு விடுத்து காத்திருந்தாள்.


சென்னையில், அடுக்கு மாடி குடியிருப்பு மூன்றாம் தளத்தில் இருக்கும் கடைசி வீட்டில் சமையல் அறையில் குக்கர் விசிலை விட சத்தமாக ஒருவன் புலம்பிக் கொண்டு இருந்தான்.


"எங்க வீட்டுல நான் தான் ராஜா கணக்கா எல்லாரையும் வேலை வாங்கிட்டு இருப்பேன். எப்ப சென்னைக்கு வந்து இவன் கூட ப்ரெண்ட் ஆனேனோ அப்ப போச்சு என் நிம்மதி...." என்று குக்கரை இறக்கி வைத்து விட்டு, தேசை வார்க்க தவாவை அடுப்பில் வைத்து விட்டு, கையில் பால் கிளாஸ்வுடன் ஒரு அறைக்கு சென்று, "அடேய் எழுந்துக்கோ டா. மணி எட்டு ஆகுது. எருமை மாடு கணக்கா இருக்காத...." என்று அவனை எழுப்பி பாலை தந்துவிட்டு,

"நேற்றே சென்னேன் தானே.... இன்றைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு காலையில் எனக்கு கொஞ்சம் உதவி பண்ண சொல்லி... தலையை தலையை ஆட்டி விட்டு தோற்க போறோம்னு தெரிஞ்சும் அந்த வினாபோன ஃபுட்பால் மேட்ச்யை நைட் முழுக்க பார்க்க வேண்டியது" என்று காதில் கேட்க முடியாத பல நல்ல வார்த்தையில் அவனை திட்ட,

"போதும் டா.... என்ன காலையில் உன் சுப்ரபாதம் கேட்கனும் என்றது என் தலைவிதி... பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு" என்று தன்னை திட்டும் நன்பனான கிஷோரை கேலி செய்து கொண்டே எழுந்தான் சைதன்யா.

கிஷோர் "உனக்கு ஏன்டா அந்த ஃபுட்பால் மேல அவ்வளவு கிரேஸ்.... அதுவும் வுமன் ஃபுட்பால் மேட்ச்யை தோற்க போறாங்கனு தெரிஞ்சும் எதுக்கு நைட் கண்ணு முழிச்சு பார்த்த...." என்றதும்,

"விளையாட்டில் என்ன ஆண், பெண் எல்லாம்.... நம்ம நாட்டில் கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டு போல மற்ற விளையாட்ட எல்லாம் மதிக்க கூட மாட்டீங்களே.... நம்மை விட நில அளவிலும் சரி மக்கள் தொகையில் சரி பல மடங்கு குறைவான நாடுகள் எல்லாம் ஃபுட்பாலில் வேல்ட் கப்பை ஜெயிக்கும் போது நாம மட்டும் அதுக்கு தகுதி பேறவே போராடிட்டு இருக்கோம். பல கோடி மக்கள் தொகை கொண்ட நம்ம நாட்டில் 11 திறமையான ஃபுட்பால் பிளேயர் இல்லையா......

நீ கேட்டியே தோற்கிற மேட்ச்யை எதுக்கு பார்க்கிறனு.... அந்த டீம்யை பற்றி என்ன தெரியும் உனக்கு... இரண்டு வருடம் முன்ன நம்ம ஹண்டர் 20 வூமன் டீமை பார்த்து உலக்கத்தில் இருந்த நம்பர் ஒன் டீம் கூட பயந்துச்சு.... அடுத்த வருசம் நடக்கப்போகிற வோல்ட் கப் நமக்கு தான்னு இருந்த டைம்ல நம்பர் ஒன் பிளேயர் மற்றும் நம்ம டீம் கேப்டன் ஜிஷ்யா பிரேக் எடுத்துக்கிட்டாங்க.... ஒரு வருசம் ஆச்சு அவங்களை பற்றி ஒரு நியூஸ் கூட தெரியலை. அசாம் மாநிலத்தில் இருக்காங்க அவ்வளவு தான் அவங்க பற்றிய விவரம்.

அவங்க மட்டும் இப்ப டீமில் இருந்தா நம்ம டீம் கண்டிப்பாக கப் அடிப்பாங்க டா" என்று கவலையோடு சைதன்யா சொல்ல,

"எப்பா சாமி தெரியாமல் சொல்லிட்டேன் டா.... காலையே ஆரம்பிக்காத சீக்கிரம் ரெடியாகிட்டு வா.. நம்ம கிளம்பனும் நேரம் ஆகுது பார்" என்று கிஷோர் சென்று விட,

அவன் குளிக்க செல்லும் போது அவனது போன் அலறியது. தன் அக்கா தான் அழைப்பது என்று அறிந்து உடனடியாக எடுத்து "ஹாய் ஹர்ஷி... என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்க" என

"தனு.... உன் கிட்ட ஒரு உதவி வேண்டுமே" என்று இழுக்க,

"சொல்லுக்கா... யாராவது பிரச்சினை பண்றாங்களா" என்று கேட்க, "அது எல்லாம் இல்லடா... வந்து... காலையில் வீட்டில் அப்பா... வந்து" என்று தடுமாறி கொண்டு இருக்க,

"நீீ எப்ப சொல்லி நான் அதை எப்ப கேட்கிறது... சீக்கிரம் சொல்லுக்கா" என்றதும் "அப்பா எதோ மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க டா... எனக்கு..... நான்... " எனும் போதே

"ஹர்ஷி.... யாரையாவது லவ் பண்றியா... வீட்டில் சொல்ல பயமா இருக்கா.... நான் சண்டே அங்க வரேன் நீயும் லவ் பண்றவங்களை வீட்டுக்கு வர சொல்லு பேசிக்கலாம்" என

"தனு அது இல்லைடா...." என்றதும் "அப்ப நீ லவ் பண்ணலையா" என்று சைதன்யா கேட்க,

"என்னை முதலில் பேச விடுடா... நான் லவ் பண்றேன் தான்.... அவங்களும் அப்ப லவ் பண்ணாங்க தான்" என

"லவ் பண்ணாங்களா.... அக்கானு கூட பார்க்க மாட்டேன் அசிங்கமா திட்டிட போறேன். முதலில் இருந்து ஒழுங்கா சொல்லு" என்று சற்று அழுத்தமான குரலில் கேட்க,

"எட்டு வருசம் முன்ன நான் ஒரு போட்டிக்காக என் காலேஜ் சார்பாக பெங்களூரு போனேன்ல... அப்ப அவங்களும் அந்த போட்டிக்கு வந்தாங்க.... நான் கோயம்புத்தூர் காலேஜ் சார்பா வந்தேன் அவங்க சென்னை சார்பில் வந்தாங்க. எல்லாரும் யூ ஜி. பட் அவங்க மட்டும் பிஜி.

இரண்டு நாள் போட்டி முடிஞ்சு நைட் கிளம்ப நாங்க ரெடி ஆகிட்டு இருக்கும் போது சீனியர் வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டாங்க.

நான் திட்டிட்டு வந்துட்டேன். பட் கொஞ்ச நாளிலே அவங்களை மிஸ் பண்ற மாதிரி இருந்துச்சு.... அவங்களை பற்றி நினைக்க கூடாது என்று நினைச்சு நினைச்சு இப்ப என் மனசு முழுக்க அவங்க தான் இருக்காங்க டா. எனக்கு என்ன பண்றதே தெரியலை டா" என்று வேதனை தொண்டையை அடைக்க சொல்லி முடிக்க,


"உன்னையும் பெண்னா மதிச்சு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டா... அப்ப அவரை திட்டி விட்டு இப்ப இப்படி சொன்னா நான் என்ன பண்றது. சரி அவங்க பெயர் என்ன" என்றதுக்கு,

"தெரியாதே...." என்றதும் வாயில் கண்டமேனிக்கு வரும் வார்த்தையை வாயோடு அடக்கி கொண்ட சைதன்யா "நீ நல்லா தானே இருக்க... இல்ல படிச்சு படிச்சு பைத்தியம் ஆகிட்டியா... லவ் பண்றாலாம் ஆனால் பெயர் கூட தெரியாதாம். எட்டு வருசம் முழுசா எட்டு வருசம் நீ வேண்டாம்னு சொன்னதால் இன்னும் உனக்காக அவங்க என்ன காத்திருப்பாங்களா.... இல்ல அவங்களுக்கு என்ன தலையெழுத்தா உன்னையே நினைச்சுட்டு வாழ, இதனால் தான் இத்தனை நாளா வீட்டில் பார்த்த எந்த மாப்பிள்ளையும் பிடிக்கலைனு சொன்னியா இதை எல்லாம் மறந்திட்டு வீட்டில் சொல்றவங்களை கட்டிக்கிட்டு வாழ்ற வழியை பாரு... என்ன சொல்றது புரிஞ்சுதா" என்று காட்டமாக கேட்க,


சுரத்தே இல்லாமல் "ம்ம்ம்" என திரும்ப அவனே "அக்கா... ஸாரி கோபத்தில் கத்திட்டேன். நீயும் கொஞ்சம் ப்ராட்டிகலா யோசித்து பாரு... இப்ப அவங்களுக்கு கல்யாணம் கூட ஆகிட்டு இருக்கும். இதை எல்லாம் மறந்திடு அக்கா.... எனக்கு ரொம்ப நேரம் ஆச்சு ஒரு முக்கியமான மீட்டிங் வேற இருக்கு.. நைட் பேசறேன்" என்று அவளது பதில் மொழி கேட்க கூட இவனுக்கு நேரம் இல்லை. அவசரமாக தயார் ஆகி கிஷோருடன் சென்று விட்டான். இருவரும் ஒரே கம்பெனியில் தான் வேலை செய்கிறார்கள்.


இங்கு ஹர்ஷிகா நிலையோ மோசமாக இருந்தது. சைதன்யா அவருக்கு கல்யாணம் கூட ஆகிட்டு இருக்கும் என்றதிலே இவளது உலகம் இருண்டு விட்டது. "அவருக்கு கல்யாணம்.... நான்... என்ன பண்ணுவேன்.... எனக்கு அவர் இல்லைனா அந்த விசயத்தை அப்பவே மறக்க வைத்து இருக்கலாமே... கிருஷ்ணா!!!! தினமும் அவரையே நினைக்க வைத்து அவருக்காக தானே இத்தனை வருசமா காத்திருக்கிறேன். என் காதல் வாழ்றத்துக்கு முன்னாடியே செத்து போச்சே.... நானே கொன்றுட்டேனே. அவங்க இடத்தில் வேற ஒருத்தரை நினைக்க கூட முடியலையே. இப்ப நான் என்ன பண்ணுவேன்" என்று வண்டியை எடுத்து பள்ளிக்கு செல்ல, மூளையும் மனமும் அதையே யோசித்து கொண்டு இருக்க கைகளோ வண்டியை ஒன் வேவ்வில் வேகமாக இயக்கி கொண்டு இருந்தது. ஏதிரே அதிவேகத்தில் லாரி வருவது கூட இவளது கவனத்தில் பதிய வில்லை. அந்த லாரி வந்த வேகத்தில் இவளது வண்டியை இடித்து விட்டு நிற்காமல் சென்று விட, இடித்த வேகத்தில் தூக்கி எறியப்பட்டாள் ஹர்ஷிகா.


அதே நேரத்தில் மங்களூரில் இருக்கும் ஒருவனது இதயம் பதட்டமாக வேகமாக துடித்து கொண்டு இருந்தது.

நிலா!!!

கீழே👇 கிளிக் செய்து உங்கள் கருத்துகளை கூறுங்கள் நண்பர்களே❤

நீதான் என் மன்னவா!!! - கருத்துத்திரி
 

Kavi nila

New member
Wonderland writer
அத்தியாயம் 2

மங்களூர், கர்நாடக மாநிலத்தின் அழகான கடற்கரை நகரம். நாட்டின் மிக முக்கியமான வர்த்தக தளம்.


இரண்டு அடுக்கு சின்ன பங்களாவில் மட்டும் இடத்திற்கு சம்மந்தமே இல்லா வகையில் தமிழ் கடவுள் முருகன் பாட்டு வீடு முழுக்க ஒலித்து கொண்டு இருந்தது. வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்வது வெற்றிவேல், வீட்டின் தலைவர் ஐம்பதுகளின் தொடக்கம் வயது. ஆனால் மிக சுறுசுறுப்பாக இருப்பார்.

விவான் "ஓ... டேடி சொல்றதை ஏன் தான் நீங்க கேட்கவே மாட்டன்றீங்களோ!! உங்க வயசுக்கு நல்லா ரெஸ்ட் தான் எடுக்கனும். இப்படி எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்ய கூடாது" என

"அதுக்கு நீயே ஒரு முடிவு கட்டலாம். கல்யாணம் பண்ணிக்கிட்டா வர மருமகள் வீட்டை பார்த்துக்க போகிறா. கல்யாண வயசு வந்து தாண்டிடும் போல" என்ற தந்தையை கவலையுடன் பார்த்து கொண்டு "அம்மாக்கு அப்புறம் நீங்க ஏன் யாரையும் கல்யாணம் கட்டிக்கலை" என்று கேட்க,

"அவ இன்னும் இங்க தான் டா இருக்கா" என்று தன் இதயத்தை தொட்டு காட்டி விட்டு பின், "ஏன்டா சம்மந்தமே இல்லாததை எல்லாம் கேட்கிற" என்றதும்

"நான் உங்க பையன்ப்பா" என்று மேலே எதுவும் பேசாமல் வெளியேறி விட்டான். அவன் சொன்னது புரியாமல் வெற்றி சிறிது நேரம் முழித்து விட்டு பின் தன் செல்ல மகளை காண சென்றுவிட்டார்.

வெளியே வந்தவனது இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை இவ்வளவு நேரம் நன்றாக இருந்த அவனது உடல்நிலை இப்போது அவனின் பேச்சை கேட்கவில்லை. நெற்றியில் வழியும் வேர்வையை துடைத்து கொண்டு, அருகில் இருக்கும் மங்களாதேவி கோவிலுக்கு சென்றான்.

"எனக்கு வேண்டிய யாருக்கோ ஆபத்துனு என் உள்மனசு சொல்லுது.... யாருக்கும் எதுவும் ஆக கூடாது. என்னோட ஏஞ்சல் எங்க இருந்தாலும் நல்லா, சந்தோசமா இருக்கனும்" என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தான்.


"யாராவது ஆம்புலன்ஸிற்கு கால் பண்ணுங்க" என்று அந்த பெண் கூடி இருக்கும் மக்களிடம் சொல்லிவிட்டு "மேடம்!!! மேடம்!!! என்னை பாருங்க உங்களுக்கு ஒன்றும் இல்லை இப்ப நாம ஹாஸ்பிடல் போய்டலாம். எல்லாம் சரியாகிடும்னு நம்புங்க" என்று அவளின் கன்னத்தை தட்டிக் கொண்டே சொல்லும் நேரம் ஆம்புலன்ஸ் வந்து விட, இவளை ஏற்றி கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்றது.

அவள் பையில் இருந்து அவளின் போனை தேட போன் கிடைக்கவில்லை. ஆனால் அவளது அடையாள அட்டை இருந்தது. அதில் இருந்த நம்பருக்கு கால் செய்ய,

"ஹலோ... யாருங்க" என்றதும்,

"சார்... நீங்க ஹர்ஷிகா சொந்தமா.... அவங்களுக்கு இங்க கோவில் பக்கத்தில் ஆக்ஸிடன்ட் கொஞ்சம் அடிப்பட்டு இருக்கு நாங்க பக்கத்தில் இருக்கிற @@@ ஹாஸ்பிடலுக்கு கொண்டு போறோம். கொஞ்சம் அவங்க வீட்டில் சொல்லிடுங்க" என்று மறுமொழி கேட்கும் பொறுமை இல்லாமல் மயக்கத்தில் இருக்கும் ஹர்ஷியை எழுப்பி கொண்டு இருக்க,

இந்த பக்கம் செய்தி கேட்ட பிரகாசம் அதிர்ந்து நின்றுவிட்டார். கணவரின் அதிர்ந்த தோற்றம் பயத்தை ஏற்படுத்த ஜோதி அவரிடம் "ஏங்க.... யாரு போனில் என்ன சொன்னாங்க..." என்ன பதட்டமாக கேட்க,

"நம்ம ஹர்ஷிக்கு ஆக்ஸிடன்ட்..... ஹாஸ்பிடலுக்கு...." என்று மேலே பேச முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்ட, "ஐய்யோ!!! என்னங்க சொல்றீங்க.... காலையில் தானே அவளுக்கு நல்லதை பற்றி பேசனோம்... இருங்க சின்னவர் வீட்டில் இருக்காரானு பார்க்கிறேன்" என்று வேகமாக எதிர் வீட்டுக்கு ஓடினார்.


சித்ரா மதிய உணவை தயார் செய்து கொண்டு இருக்க, பக்கத்தில் இருக்கும் திண்டில் அமர்ந்து கொண்டு பம்பரமாக வேலை செய்யும் மனைவியின் அழகை ரசித்து கொண்டு இருந்தார் அருள்.

கணவனின் பார்வையை உணர்ந்து "இப்ப எதுக்கு புது பொண்டாட்டியை பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க. வெட்டியா உட்காரமல் எதாவது உருப்படியான வேலையை செய்ங்க" என்றதும்,

"உருப்படியான வேலை தானே செஞ்சிட்டா போச்சு" என்று சித்ராவை நெருங்கி போக, கையை அவர் மார்பில் வைத்து தடுத்து "உங்க உருப்படியான வேலை என்னனு எனக்கு நல்லா தெரியும்... பையனுக்கே கல்யாணம் பண்ற வயசு வந்துடுச்சு இன்னும் நீங்க புது மாப்பிள்ளை கணக்கா நடக்கிறதை யாராவது பார்த்தா மானமே போகும்" என்று நெளிந்து கொண்டே சொல்ல,

அவளை இழுத்து பக்கத்தில் இருக்கும் சுவற்றில் சாய்த்து "அவன் வளர்ந்தா நான் என் பொண்டாட்டியை லவ் பண்ன கூடாதா... என் வீட்டில் யாரு வந்து பார்க்க போற... இப்ப ஒரே ஒரு கிஸ் கொடுப்பியாம் நானும் நல்ல பையனா போய்டுவேன்" என்று சிவந்து நிற்கும் மனைவியின் அழகை ரசித்து கொண்டே சொல்ல,

"நீங்க எவ்வளவு நல்ல பையனு எனக்கு தெரியும்... ஆளை விடுங்க முதலில் நகருங்க" என்றதும் அவளை மேலும் நெருங்கி வர, "ஐயோ அந்த பக்கம் நகர சொன்னேன்" என

"எனக்கு வேண்டியது கிடைச்சா நகருவேன் இல்ல எவ்வளவு நேரம் ஆனாலும் நகரும் ஐடியா எனக்கு இல்லை" என்று முறைப்பாக சொல்ல,

"சரியான தலைவலியா இருக்கீங்க... சரி கண்ணை மூடுங்க" என்றதும் அவனது கண்கள் மூடிக்கொள்ள, கன்னத்தில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தை வைக்க,

"என்னடீ இது... இதுக்கு நான் சும்மாவே இருக்கலாம்" என்றதும் சித்ரா சிரித்து விட்டார். "சரி உனக்கு தெரிஞ்சா மாதிரி நீ கொடுத்த இப்ப எனக்கு தெரிஞ்சா மாதிரி ஒன்னு" என்று அவரின் இதழை நெருங்கும் நேரம்,

"சித்ரா!!! சின்னவர் எங்கமா" என்று பதட்டத்தில் வேகமாக சமையலறைக்குள் வந்தவர் இருவரும் இருக்கும் நிலை பார்த்து சங்கடத்துடன் வெளியே நின்றுவிட்டார்.

"அய்யோ... அக்கா பார்த்துட்டாங்க.... என் மானமே போச்சே.... இனி என்னை வெச்சி கலாய்த்து தள்ளுவாங்க... போச்சே போச்சே" என்று புலம்பும் மனைவின் கன்னத்தில் முத்தத்தை வைத்து "அண்ணி எதோ பதட்டமா வந்தா மாதிரி இருக்கு... நீ இப்படி புலம்பறதை விட்டு நாம அவங்களை போய் கவனிக்கலாம் வா" என்றதும் இருவரும் கூடத்திற்கு வர,


ஜோதி தயங்கி கொண்டு "சாரி மா உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்" என்றதும் அருள் "அட அதை விடுங்க அண்ணி என்ன ஆச்சு ஏன் பதட்டமா வந்திங்க" என்றதும்,


"நம்ம ஹர்ஷிக்கு ஆக்ஸிடன்ட் பா" என்றதும் நிலைமையை சடுதியில் புரிந்து கொண்டு மற்றவர்களை அழைத்து கொண்டு அவர்கள் சொன்ன மருத்துவமனைக்கு வந்தனர்.


முதலில் சைதன்யாவிற்கு அழைக்க அவனது போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. அடுத்து கோயம்புத்தூரில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் ஜீவிகாவிற்கு அழைக்க, அவள் எடுத்ததும் விசயத்தை கூற அவள் உடனடியாக வருவதாக கூறினாள். டெல்லியில் படிக்கும் மிஷ்காவிற்கும் விசயம் பகிரப்பட்டது. அவள் இருப்பதோ டெல்லியில். உடனடியாக வர முடியாமல் தன் அக்காவிற்காக எல்லா கடவுளிடம் பிராத்தனை செய்தவள் சொந்த ஊர் செல்ல எதாவது வழி உள்ளதா என்று விசாரிக்க சென்றார்.

மதியம் வரை ஆப்ரேஷன் நடந்து கொண்டு இருந்தது. தான் ஒரு மருத்துவ மாணவி என்பதை மறந்து அக்காவிற்காக அழுது கொண்டே சில மணி நேரம் முன் டாக்டர் கூறிய விடயத்தை நினைத்து பார்த்தாள்.

"டாக்டர் அக்கா கண்டிஷன் எப்படி இருக்கு" என்றதும், "இப்போது எதுமே சொல்ல முடியாது. கையில் சின்ன சிராய்ப்பு தான். வலது காலில் எலும்பு முறிவு. அதற்கு ஆப்ரேஷன் பண்ணிடலாம். பட் தலையில் கொஞ்சம் பலமான அடி ஸ்கேன் பண்ணா தான் எந்த அளவுக்கு காயம் இருக்குனு சொல்ல முடியும். ஹோப் பார் தி பெஸ்ட்" என்று சென்றுவிட்டார்.

" அப்பாடா ஒரு வழியா மீட்டிங் முடிஞ்சிது. இதுக்கு போய் நம்மை ஒரு வாரமா படுத்தி எடுத்தாங்க. என்னடா நான் பேசிட்டே இருக்கேன் நீ என்ன யோசிச்சிட்டு இருக்க" என்ற கிஷோரிடம்,

"வீட்டில் இருந்து நிறைய கால் வந்து இருக்குடா. இரு நான் அம்மாக்கு கால் பண்ணிட்டு வரேன்" என்று தனது அன்னைக்கு அழைக்க,

"கண்ணா... எங்க இருக்கடா காலையில் இருந்து எத்தனை முறை கால் பண்றது. இங்க ஹர்ஷிக்கு ஆக்ஸிடன்ட் டா. கொஞ்சம் வரியா" என்றதும்

"ம்மா.... எப்ப நான் உடனே வரேன்" என்று அப்போது இருந்த சென்னை டூ கோயம்புத்தூர் விமானத்தை பிடித்தவன் மாலையில் மருத்துவமனையில் இருந்தான்.

சைதன்யாவை பார்த்ததும் பெற்றோர்களுக்கு சற்று தெம்பு வந்தது. பெற்றவர்கள் கவலையில் இருக்கும் போது பிள்ளைகளின் ஆறுதல் வார்த்தை தான் மலையளவு நம்பிக்கை தரும்.


ஐசியுவில் இருக்கும் அக்காவை பார்க்க காலையில் தான் பேசியதின் விளைவு என்று நன்றாக தெரிந்தது. அதை உறுதி செய்யும் விதமாக விசாரணைக்கு வந்த காவலர் "எதாவது பிரச்சினை என்றால் என்னவென்று அவங்க கிட்ட கேட்கிறது தானே. அவங்க வந்தது ராங் சைட் லாரி டிரைவர் மேல தப்பு சொல்ல முடியாது பா. வண்டியை நிற்காமல் போனது வேணா தப்பு" என்றதும்,

தன்னை சுற்றி பார்த்தான் தன் வீ்ட்டார் யாரும் அருகில் இல்லாததை உணர்ந்து "சரிங்க சார் நான் பார்த்துக்கிறேன். கேஸ் எதுவும் போட வேண்டாம். அப்பறம் வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம்" என்றதும் அந்த காவலரும் நிலைமையை புரிந்து கொண்டு சென்றுவிட்டார்.

ஹர்ஷிகாவிற்கு ஆப்ரேஷன் நடந்த பின்னும் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதை பற்றி டாக்டரிடம் கேட்க "எங்களால முடிச்சதை பண்ணிட்டோம். பட் அவங்க மனசும் உடம்பும் அதுக்கு ஒத்துழைப்பு கொடுக்கனும். உயிர் வாழனும்னு அவங்களுக்கு ஆசையே இல்லை போல எதுக்கும் அவங்க உடம்பு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன்து. இன்னும் 48 மணி நேரத்தில் அவங்க கண் விழிக்கவில்லைனா காப்பாற்றது ரொம்ப கஷ்டம். நீங்கள் எல்லாரும் அவங்க கிட்ட பேசுங்க" என்றதும் எல்லாரும் பேசி பார்த்தார்கள். எதுக்கும் அவளிடம் எந்த அசைவும் இல்லை. கடைசியாக சைதன்யா "அக்கா.... ப்ளீஸ் எழுந்து வா. என் கிட்ட கேட்டதை நான் எப்படியாவது கொடுக்கிறேன் வாக்கா.... வரேன் கா நீ கேட்டதோட வரேன்" என்று வெளியே வந்தவன் என்ன செய்யலாம் என்ற யோசனையே பெரியதாக இருந்தது.

"அம்மா வீட்டு சாவி தாங்க. நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன்" என்று வீட்டிற்கு வந்தான்.

முதலில் அவன் அழைத்தது பெங்களூருவில் எட்டு ஆண்டுகள் முன்பு அந்த போட்டியை நடத்திய நிறுவனத்திற்கு அழைக்க, அவர்களிடம் போராடி அந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவரது விவரத்தை கேட்க, அவர்கள் கலந்துகொண்ட கல்லூரி பெயர் மற்றும் கலந்து கொண்ட மாணவர் பட்டியல் மட்டுமே கொடுக்க,

கிஷோர்க்கு அழைத்து "கிஷோர் ஒரு உதவிடா ஐஐடி போய் ஒருத்தர் போன் நம்பர் இல்ல வீட்டு அட்ரஸ் எதாவது கிடைக்குமானு பார்க்கறியா" என

"சரிடா எந்த இயர் என்ன டிபார்ட்மென்ட் பெயர் சொல்லு" என

"எல்லாரும் இருக்கிற பெயர் லிஸ்ட் இருக்குடா. எட்டு வருசம் முன் பெங்களூருவில் நடந்த ஒரு போட்டியில் கலந்துக்கிட்டாங்க. பிஜி டா பட் அந்த டைம்ல முதலாம் ஆண்டா இல்ல கடைசி ஆண்டானு தெரியலை டா. ப்ளீஸ் டா என் அக்கா எனக்கு உயிரோட வேண்டும். அதுக்கு இங்க அவங்க வரனும்டா" என்று கலங்கிய குரலில் சொல்ல,

"கண்டிப்பாக டா. கவலைப்படாத அக்காக்கு ஒன்றும் ஆகாது" என்று வைத்தான். நாளை வரை காத்திருக்க வேண்டும். இந்த இரவில் கிஷோரும் தான் என்ன செய்வான்.

காலையே தன் அணைத்து வேலையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் நண்பன் சொன்னதை பார்க்க சென்றான் கிஷோர். கடைசியாக தேடியது கிடைக்க, கிடைத்த நொடியே நண்பனுக்கு பகிர்ந்து விட்டான்.


ஜோதி "ஏங்க புள்ள இன்னும் கண் விழிக்காமல் இருக்கா டாக்டர் 48 மணி நேரம் சொன்னார். ஒரு நாள் கண்ணு முடி திறக்குள்ள முடிஞ்சிப்போச்சு. இன்றைக்கு அவ கண்ணை திறக்கனும்.... இல்லைனா நான் என்ன பண்றது ரொம்ப பயமா இருக்கு" என


சித்ரா "அக்கா... நம்ம யாருக்கும் தீங்கு நினைச்சது இல்லை. ஹர்ஷி நம்ம வீட்டு மகாலட்சுமி அக்கா. அவளுக்கு எதுவும் ஆகாது" என்று சமாதானம் சொன்னாள்.


நேரங்கள் கடந்ததே தவிர எந்த மாற்றமும் இல்லாததால் பெரும் கவலையுடன் அசைவின்றி இருக்கும் ஹர்ஷியை சுற்றி குடும்பத்தார் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தனர்.

ஜீவிகா "அக்கா எழுந்து வா நம்ம இந்த லீவில் நீ எப்பவும் கேட்பியே கேரளா போகணும்னு இந்த முறை கண்டிப்பாக போகலாம் வாக்கா" என

ஜோதி "எனக்கு கல்யாணம் ஆகி சில வருடத்திற்குள்ளே பிள்ளை இல்லைனு என்னை மலடினு இந்த ஊரே தூற்றும் போது நான் இருக்கேன்மானு எனக்குள்ள உதித்த தேவதைடா நீ.... நீ இல்லைனா அம்மாவால் மட்டும் நிம்மதியா இருக்க முடியுமா" என்று கண்ணீருடன் சொல்ல,


சித்ரா "குட்டி நீதானே என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்..... எனக்கு இருக்கிற ஒரே ப்ரெண்ட் நீ தான்டா திரும்ப என் கிட்ட வந்திடுமா" என

தந்தைமார்கள் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் கண்ணீரில் கரைந்தனர்.

டாக்டர் "இப்ப வரை இவங்க எதுமே ரியாக்ட் பண்ணலை. இவங்களுக்கு பிடிச்சவங்க யாரையாவது வர சொல்லி பேச சொல்லுங்க. நமக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு" என்று சென்று விட,

ஜீவிகா "ப்ரோ எங்க.... அவங்களை பேச சொல்லுங்க" என்றதும் தான் காலையில் இருந்து சைதன்யாவை யாரும் பார்க்கவில்லை என்பதை உணர்ந்தனர்.

அருள் "இந்த பையன் இந்த மாதிரி நேரத்தில் நம்ம கூட ஹர்ஷி கூட இல்லாமல் எங்க போனான். பொறுப்பே இல்லை வயசு ஏற ஏற பொறுப்பு வரும்னு பார்த்தா இருக்கிறதும் போகுது" என்று தீட்டும் நேரம் யாருடனோ உள்ளே நுழைந்தான்.

வீட்டினர் கேள்வியுடன் அவனை நோக்க அதை உணராமல் கூட வந்தவரின் கையை பற்றி தன் அக்கா முன்பு நிற்க வைத்தவன் "அக்கா!!! நீ என் கிட்ட கேட்டியே இதோ கொடுத்துட்டேன். கண்ணை திறந்து பாருக்கா" என்று பக்கத்தில் இருந்தவரை பார்த்து "ப்ளீஸ்ங்க நீங்க கொஞ்சம் பேசுங்க" என்றதும்,

அவள் படுத்திருக்கும் மெத்தையை நெருங்கியவன் தளர்ந்து தரையில் முட்டியிட்டு அமர்ந்து "ஹரி!!!!" என்று அவளின் கைகளை பற்றி கொண்டு "நா... நான் விவான் மா. கண்ணை திறந்து பாரு எனக்காக எட்டு வருசமா வெய்ட் பண்றியாமே.... ஸாரிமா இந்த மரமண்டைக்கு தெரியவில்லை. இப்ப என்னை விட்டு போய் என்னை தனிமரமா மாற்றிடாதே" என்றவனது கண்ணீர் அவள் கையில் விழ, சலனமற்று கிடக்கும் அவளை காண முடியாமல் எழுந்து வெளியே செல்ல திரும்பும் போது அதிர்ந்து சிலையானான்.


நிலா!!!
 
Last edited:

Kavi nila

New member
Wonderland writer
அத்தியாயம் 3

கிஷோரின் விடியலே ஐஐடியில் தான். இப்பொழுது எங்கும் கணினி மயம் தானே. சில நொடிகளில் எட்டு வருடம் முன்பு பயின்ற மாணவனின் விவரத்தை அறிந்து கொண்டு அவர்கள் கொடுத்த தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள, எடுத்ததோ வேறு நபர்.

உடனே தனது நண்பனுக்கு அழைத்தான்.


சைதன்யா "என்னாடா எதாவது தெரிந்ததா" என்றதும், "அவங்க நெம் விவான் டா. நம்பர் கூடுதாங்க பட் வேற நம்பர் மாத்திடாங்க போல டா. அட்ரஸ் இருக்கு டா" என

"சொல்லு கிஷோர் எங்க இருந்தாலும் பரவாயில்லை டா" என்றதும் கிஷோர் கூறிய முகவரியை குறித்து கொண்டு கிளம்பிவிட்டான்.

கிட்டத்தட்ட ஐநூறு கிலோமீட்டர் தூரத்தை எட்டு மணி நேரத்தில் அடைந்தான். மங்களூரின் அழகையும் சூழலையும் ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.

நேராக நண்பன் கொடுத்த முகவரிக்கு செல்ல, அந்த வெள்ளை நிற பங்களா அவனை வரவேற்றது.


உள்ளே சென்றவன் மெதுவாக "சார்.... ஹலோ!!" என, குரல் கேட்டு வெளியே வந்த வெற்றி "யாருப்பா... யாரை பார்க்கனும்" என்க,

"விவான்" என்று தயக்கமாக சொல்ல, "இதோ வர நேரம் தான். உள்ள வாங்க" என்ற சிறிது நேரத்திலே விவான் வர,

புதிதாக அமர்ந்து இருக்கும் நபரை கேள்வியாக பார்க்க, அவனது தந்தையோ "வாடா.. உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கார். சாப்பிட கொடுத்தாலும் வேண்டாம் சொல்லிட்டார்" என்று உள்ளே செல்ல,

"சரிப்பா நான் பார்த்துக்கிறேன்.... அபி எங்க" என்றதுக்கு "வெளியே போனா வருவாடா" என்று தன் வேலை பார்க்க சென்றுவிட்டார்.


"ஹாய் நீங்க" என்று எதிரே இருப்பவன் யாரு என்று தெரியாததால் விவான் கேட்க,


"சார்... நா நான் சைதன்யா. என் கூட வாங்க ப்ளீஸ் நீங்க வந்தா தான் என் அக்கா எங்களுக்கு கிடைப்பா.... உங்க மேல உயிரே வைத்து இருக்கா" என

"ஹாலோ நீங்க யாருனே தெரியாது இதில் உங்க அக்காவை மட்டும் எனக்கு தெரியுமா... நீங்க வேற யாரோனு நினைச்சி என் கிட்ட பேசறீங்க" என்று பொறுமையாக சொல்ல,

"இல்ல சார். நீங்க விவான் தானே. நீங்க மறந்து இருக்கலாம் ஆனா என் அக்கா உங்க நினைப்பில் தான் வாழறா. நீங்க ஒரே ஒரு முறை வந்தா மட்டும் போது அதுக்கு அப்புறமா நாங்க யாரும் தொல்லை பண்ண மாட்டோம். அவ அங்க உயிருக்கு போராடிட்டு இருக்கா" என்று சைதன்யா கெஞ்ச,

"முதலில் வெளியே போங்க யாருனே தெரியாமல்" என்று விவான் கோபமாக உள்ளேயே போகும் முன், வெற்றி "தம்பி அந்த பையன் சொல்றதை கொஞ்சம் கேட்கலாம்ல. உயிர் சம்மந்தப்பட்ட விசயம்" என்றதும்,

"அப்பா முதலில் அவங்களை வெளியே போக சொல்லுங்க" என்று உள்ளே சென்றவன் மேல் கோபம் கொண்ட சைதன்யா "ச்சை.... நீங்க எல்லாம் என்ன மனிசன். எப்படி உங்க கிட்ட என்ன நல்லதை பார்த்தானு தெரியலை என் அக்கா பைத்தியம் மாதிரி எட்டு வருசமா காத்திட்டு இருக்கா" என்று கத்த,

எட்டு வருடம் என்றதும் விவானின் கால்கள் நின்றுவிட்டது. தான் கேட்டது உண்மையா... நாம் நினைப்பவர் தானா என்று உறுதியாக தெரியாததால் வேகமாக சைதன்யாவை நெருங்கி,


"யாரு.... யாரு எட்டு வருசமா காத்திருக்கிறா... எனக்கா... எட்டு வருசமாவா" என்று எதோ கண்ணில் தவிப்போடு கேட்க,

அவன் கண்ணில் எதை கண்டானோ உடனே "ஆமாம் சார் உங்களுக்காக தான் என் அக்கா ஹர்ஷிகா எட்டு வருசமா காத்திருக்கா" என்றதும் தான் கேட்டதை நம்ப முடியாமல் கண்ணில் கண்ணீரோடு தொப் என்று சோபாவில் அமர்ந்தான்.

எதோ புரிவது போல் இருந்தது வெற்றிவேலுக்கு. சிறிது நேரத்தில் விவான் "ஹரி... நல்லா இருக்காலா உங்க கூட வந்து இருக்காலா நான் பார்க்கலாமா" என்று ஏக்கமாக கேட்க,

" நீங்க வந்தா தான் அவளை உயிரோடவே பார்க்க முடியும் " என்று கண்ணீரோடு சொல்ல,

"என்ன" என்று புரியாமல் விழித்தவனிடம் நேற்று நடந்தது தான் தன் தமக்கையுடன் பேசியது அவளின் விபத்து, தற்போதைய நிலை என்று விளக்க, விவான் கேட்டதும் உறைந்துவிட்டான்.


நிலைமையை புரிந்து கொண்ட வெற்றி "டேய் நீ முதலில் கிளம்பு நான் அபி வந்ததும் வரேன்" என இருவரும் சைதன்யா வந்த காரில் கிளம்பினர்.


வழியில் தன் மனதில் உறுத்திய கேள்வியை கேட்டான் சைதன்யா. "நான் கேட்கறேனு தப்பா நினைக்காதீங்க.. அபி யாரு என்றதும் " என் தங்கை" என்ற பின் தான் சைதன்யாவிற்கு நிம்மதியானது. இவரது வாழ்வில் வேறு பெண் இருந்தால் தன் அக்கா உடைவது உறுதி.

தற்போது மருத்துவமனையில், அவளின் நிலையை காண முடியாமல் வெளியே செல்ல நினைத்த விவான் அதிர்ந்து திரும்பினான். காரணம் அவனது கையை மெதுவாக பற்றி இருந்தாள் அவனது தேவதை.


"திரும்ப.... விட்டு போறீங்களா" என்று பேச முடியாமல் கஷ்டப்பட்டு பேச, அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து கையை பற்றி "இனி உன்னை பார்க்கவே முடியாதுனு நினைச்சேன்.... ஆனால் இது மாதிரி ஒரு சூழலில் பார்ப்பேனு நினைச்சு கூட பார்க்கலை.... எட்டு வருசம் முன்ன சொன்னது தான் இருந்தாலும் திரும்ப சொல்றேன் லவ் யூ!!!! வாழ்க்க முழுக்க நீ என் கூட இருக்கனும்" என

" எட்டு வருசமா நானும் சொல்லனும்னு நினைச்சதை இப்ப சொல்றேன்..... ஐ லவ் யூ!!! நீங்க அப்ப லவ் சொல்லும் போது தெரியலை என் வாழ்க்கையில் முக்கியமான நபராக நீங்க இருப்பீங்கனு.... ஆனால் இப்ப என் வாழ்க்கையில் நீங்க ரொம்ப முக்கியமான இடத்தில் இருக்கீங்க " என்னும் போது மருத்துவர் உள்ளே வர விவான் எழுந்து கொண்டான்.

வெளியே இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் முழிக்கும் குடும்பத்தாருக்கு நடந்ததை சைதன்யா விளக்கி கொண்டு இருந்தான். மருத்துவர் வந்ததும் வெளியே வந்த விவான் ஹர்ஷி குடும்பத்தை பார்த்து சிறிதாக சிரித்து வைத்தான்.

வெளியே வந்த மருத்துவர் "பயப்படும் படி எதுவும் இல்லை. ஆனால் தலையில் கொஞ்சம் பலத்த அடி தான். ரொம்ப யோசிக்காமல் பார்த்துக்கோங்க. காலில் இருக்கிற எலும்பு முறிவு மட்டும் மூன்று இல்ல நான்கு மாதங்கள் ஆகும் கட்டு பிரிக்க, முன்ன மாதிரி நடக்க கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகலாம். இந்த விக் ஹாஸ்பிடலில் இருக்கட்டும் அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் பற்றி யோசிக்காமல்" என்று சென்றதும் தான் அனைவருக்கும் உயிரே வந்தது.

உடனே ஜீவிகா "நான் மில்கிவே கிட்ட சொல்லிட்டு வரேன். அவ வேற கவலையில் இருப்பா" என்று கையில் அலைபேசியை எடுத்துக்கிட்டு ஒட,


பிரகாசம் ஒரமாக நிற்கும் விவானிடம் "தம்பி இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் சந்திக்கிறது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு. ஒரு நல்ல நாள் பார்த்து பெரியவங்க கிட்ட மேற்கொண்டு பேசலாம். எனக்கு என் பொண்ணு சந்தோசம் தான் முக்கியம். இந்த விசயத்தை முன்னாடியே சொல்லி இருந்தா இவ்வளவு கஷ்டத்தை நீங்க இரண்டு பேரும் மனதோடு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம்" என

"எனக்கு தெரியாதே சார். அவங்க கிட்ட என் விருப்பத்தை சொன்ன போது 'எனக்கு விருப்பம் இல்லை இனி என்னை தொந்தரவு செய்யாதீங்கனு' சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறமா நான் எப்படி அவங்களை டிஸ்டர்ப் பண்ணுவேன். வாழ்க்கை முழுக்க என் மனசுல இருக்கிற காதல் போதும் என்று நினைச்சிட்டேன். திரும்ப அவங்களை தேட சொல்லி மனசு அடிச்சிக்கும் ஆனால் ஒரு வேலை அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தா கண்டிப்பா அதை நேரில் பார்க்கிற சக்தி எனக்கு இல்லை" என்னும் போதே வெளியே வந்த நர்ஸ் "பெசன்டை டிஸ்டர்ப் பண்ணாமல் பார்த்துட்டு சீக்கிரமா வாங்க நாளைக்கு அவங்களை ரூமிற்கு மாற்றிடுவாங்க" என்ற அடுத்த நொடி மொத்த கூட்டமும் உள்ளே சென்றது.


"என்ன புள்ள சத்த நேரத்தில் இப்படி அலற விட்டுட்ட.... சின்ன பிள்ளையில் இருந்து உன் விருப்பத்திற்கு மாற எதாவது வீட்டில் நடந்து இருக்கா... இப்ப மட்டும் எப்படி புள்ள உனக்கு பிடிக்காததை நாங்க பண்ணுவோம்" என்று ஜோதி கலங்க, "அக்கா விடுங்க நம்ம கிட்ட சொல்ல முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டாளோ... இருந்தாலும் என் கிட்ட கூட சொல்லலை பார்த்தியா... நான் என்ன உனக்கு சித்தி மட்டுமா. போடி ஒரு நிமிசம் உசுரே போய்டுச்சு" என்று சித்ராவும்,

"நான் தான் முட்டாள் தனமான உன் கிட்ட கேட்காமல் முடிவு எடுத்துட்டேன் என்னை மன்னித்து விடுமா" என்று தந்தையும், "குட்டி கழுதைக்கு திமிரு அதிகமாகிடுச்சு. அதான் நம்முடைய நினைப்பே இல்லாமல் சாக துணிச்சிட்டா" என்று அருளும்,


"அக்கா!!! மாமா சூப்பர் ரொம்ப அமைதி போல மிஸ்கா கிட்ட சொன்னால் நம்பவே இல்லை" என்று ஜீவிகா என அனைவரும் ஒரே மூச்சாக பேச ஆனால் அதை எல்லாம் சற்று தள்ளி வேடிக்கை பார்க்கும் தன் தம்பியிடம் பார்வையை செலுத்தினால். ஆனால் அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்று ஒதுங்கியே இருந்தது ஹர்ஷியை காயப்படுத்தியது.

அனைவரும் இதை கண்டாலும் எதுவும் கேட்கவில்லை.


இரவு ஒருவரே இங்கே தங்க வேண்டும் என்பதால், சித்ரா "நான் இருக்கேன் நீங்க எல்லாம் வீட்டிற்கு போங்க" என

விவான் "நான் இருக்கலாமா??" என்று தயக்கமாக கேட்க,

சைதன்யா "பரவாயில்லை நீங்க வீட்டிற்கு வாங்க.. ரொம்ப தூரம் வந்த களைப்பு இருக்கும்ல. என் அம்மா இங்க இருக்க போறாங்கனாலே என் டேட் இங்க தான் இருப்பார். அவங்க பார்த்துப்பாங்க" என்றதும்

விவான் பாவமாக ஹர்ஷி இருக்கும் அறையை பார்க்க, அதை கண்ட அருள் "டேய் மாப்பிள்ளையும் இருக்கட்டும் டா. அங்க போனாலும் அவருக்கு ஹர்ஷி நினைப்பு தான் மனச அழுத்தும். அதுக்கு இங்கவே இருக்கலாம்" என

"அப்ப நீங்க வரீங்கலா" என்று தந்தையை அறிந்தே கேட்க, "இதோட... சீதை இருக்கிற இடம் தான் ராமனுக்கு அயோத்தி... அவன் அவனுக்கு காதல் வந்தா தான் தெரியும்" முதலில் சுத்தமாகவும் பின் பாதியை முணுமுணுப்பாக கூற அது அங்க இருந்த எல்லாருக்குமே கேட்டு அனைவர் முகத்திலும் புன்னகையை வர வைத்தது.


நிலா!!
 
Status
Not open for further replies.
Top