ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நின்னை சரணடைந்தேன் மன்னவா - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 3

அனைவரும் விமான நிலையத்தை விட்டு வெளியே வர...உதய் தன் தங்கையிடம் மட்டும் தலையசைத்து விட்டு தன் காரை நோக்கி செல்ல...மற்றவர்கள் அனைவரும் சங்கரலிங்கத்தின் காரில் ஏறினர்.

சென்னையின் முக்கியமான பகுதியாக, அதிக பணக்காரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் என பெரும்பாலும் வசதி மிக்கவர்கள் வசிக்கும் இடமாக திகழும் திருவான்மியூர் நோக்கி சென்றது கார்.

கார் மெல்ல திருவான்மியூர் சாலையில் ஊர்ந்து அந்த பிரம்மாண்டமான கேட்டினுள் நுழைந்தது.

"இது என்ன வீடா" என வியக்க வைக்கும் வண்ணம் பெரிய மாளிகை போல் காட்சியளித்தது மிருணாவின் இல்லம். வீட்டிற்கும் கேட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியே ஐம்பது மீட்டர் தொலைவு இருக்கும். வாகன ஓடுப்பாதைக்கு இருபுறமும் ஒரு பூங்காவை போல் எங்கும் செடிகளும் பூக்களும் பூத்து குலுங்கின…

அந்த வீட்டினுள் நுழைந்தது முதல் விழிகள் இரண்டும் அகலவிரிய.. பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் சாருலதா.

"செல்லகுட்டி நான் ஒன்னு கேட்பேன் உண்மையை சொல்லனும்" என பார்வையை வெளியே பதித்துக் கொண்டே யாருக்கும் கேட்க்காத குரலில் தோழியின் புறம் குனிந்து கிசுகிசுக்க...அவளோ " ம்ம் " சொல்லுடி என்ன ? என கேட்க… "உங்க அப்பா நிறைய லஞ்சம் வாங்குவாரோ..? வீடு கட்ட சொன்ன மாளிகையை கட்டி வைச்சுருக்கார் " என்றவளை திரும்பி முறைத்த மிருணா "எங்க அப்பா ரொம்ப நல்லவர்.இதுவரைக்கும் லஞ்சம் எல்லாம் வாங்கியது இல்லை.இந்த வீடு கூட அவர் எம்.பி ஆவதற்கு முன்னால் கட்டியது தான் " என தன் தந்தைக்கு பரிந்து கொண்டு வந்தாள்.

சாருவோ கொஞ்சமும் அடங்காமல் "அப்போ எம்.பி ஆவதற்கு முன்னாடியே நிறைய வாங்கியிருப்பார் போல" என்க..அவளோ "இன்னொரு வாட்டி எங்க அப்பாவை பத்தி இப்படி பேசினா அவ்ளோதான்" என நறுக்கென்று சாருவின் தொடையில் கில்ல…"அய்யோ அம்மா...மா" என சத்தமாக அலறினாள் சாரு.

காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சங்கரலிங்கம் திரும்பி "என்னம்மா என்ன ஆச்சு..? " என்றவரை பார்த்து தனது முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி சிரித்தவாறே " ஒன்னும் இல்ல அங்கிள்..வீடு ரொம்ப அழகா இருக்கு. அதை தான் சொல்ல வந்தேன்" என வலியை பொறுத்துக் கொண்டு சமாளித்தவள் உன்னை அப்பறம் கவனிச்சிகிறேன் என மிருனாவை முறைத்தாள்.

காரைவிட்டு அனைவரும் இறங்க... ஏர்போர்ட்டில் இருந்து வீடு வரையுள்ள நாற்பது நிமிட பயணம் முழுவதும் சூரிய பிரகாஷை சுற்றியே தன் பார்வையை பதித்திருந்த மிருணாளினி. அனைவரும் இறங்கியதை கூட கருத்தில் கொள்ளாமல் காரை விட்டு இறங்கும் எண்ணம் சிறிதும் இன்றி அமர்ந்திருந்தாள்.

அனைவரும் இறங்கிவிட இவளும் இறங்குவாள் என அதுவரை காத்திருந்தவன், அவளிடம் அசைவில்லாமல் போக கண்ணாடி வழியே பின்னால் பார்த்தவனின் பார்வை இடுங்கியது அவளின் இமைக்காத பார்வையில்…

இதுவரை எத்தனையோ முறை அவளை பார்த்திருக்கிறான்.ஏன் அவள் சென்னையில் மருத்துவம் படிக்கும் போது பலமுறை காரில் சென்று கல்லூரியில் இருந்து அழைத்தும் வந்திருக்கிறான். ஆனால் அப்போது எல்லாம் தன்னை நிமிர்ந்து கூட பார்த்ததாக அவனுக்கு நினைவில்லை.யாரிடமும் அளவுக்கு அதிகமாக பேசியதை கூட பார்த்ததில்லை...அதுவே அவள் மேல் ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியிருந்தது அவனுக்கு.

ஆனால் இன்று தன்னை இமைக்காமல் பார்க்கும் அவளின் விழிகள் உணர்த்தும் செய்தி அவனுக்குமே அதிர்ச்சி தான்.மொத்த நேசத்தையும் வெளிப்படுத்தும் ஒருவித ஏக்கமான பார்வை அது. இப்படிப்பட்ட பார்வையை அவளிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்காதவன், இதற்கு என்ன எதிர்வினை செய்வது என்று கூட தெரியாமல் அமர்ந்திருந்தான். ஏனென்றால் அவனும் இதுவரை இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை.

இதுவரை அனைவரும் அவனிடமிருந்து ஒரு அடி தள்ளியே நிற்பார்கள் பயத்தில். ஆண்களே அப்படி என்றால், பெண்கள் சொல்லவா வேண்டும். அவன் வாழ்க்கையில் பெண்கள் என்ற சொல்லிற்கு இடம் இல்லை என்பதை விட யாரும் இல்லை என்பது தான் பொருந்தும். அம்மா,அப்பா ,தம்பி தங்கை என யாரும் இல்லாமல் சிறு வயது முதலே தனித்து இருந்தவனுக்கு யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை.அதனாலேயே தன்னை சுற்றி ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு அதற்குள் யாரையும் நெருங்காமல் பார்த்துக் கொண்டான்.

"அவனுக்கு இதுவரை யார் மீதும் காதல் வந்ததும் இல்லை. இனி வர போவதும் இல்லை" என்பது மட்டும் உறுதியாக தெரியும். அப்படியிருக்க தேவையில்லாமல் அவள் மனதில் இத்தகைய ஆசையை வளர்க்க விரும்பாதவன் சட்டென்று காரில் இருந்து இறங்கினான்.இனி இவள் பார்வையில் கூட விழ கூடாது என்ற முடிவோடு….

அதுவரை வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டிருந்த சாரு இன்னும் காரில் அமர்ந்திருக்கும் தோழியை நோக்கி காரினுள் பார்வை செலுத்த...உள்ளே இருந்தவளோ 'அவளுக்கு புறமுதுகு காட்டி நிற்கும் தன் தலைவனின் வரிவடிவத்தையே பார்த்து மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்துக் கொண்டிருந்தாள்'.


"இது வேலைக்கு ஆகாது"… இது என்ன சங்க கால காதலா பார்வையில் காதலை புரிந்துகொள்ள.."காதலை சொல்ல தைரியம் இல்லாதவள் எதுக்கு காதலிக்கணும்" என மனதுக்குள் தன் தோழியை திட்டியவள்...அவள் தவத்தை கலைக்கும் பொருட்டு அவள் தோளை தொட்டு உலுக்கினாள்.

ஏதோ தூக்கத்தில் இருந்து முழித்தது போல் திறுதிறுத்தவளை கண்டு தன் தலையிலேயே அடித்துக் கொண்டவள்…"அடியே கனவு கண்டது போதும், உங்க அப்பா உள்ள போய் ரொம்ப நேரம் ஆகுது. எங்க நம்ம பொண்ணு வாசல் வரை வந்துட்டு திரும்பவும் லண்டன் போய்டுச்சோன்னு நினைச்சு தேடி வர வைக்காதே..கீழே இறங்கு... மகாராணிக்கு காரில் இருந்து இறங்க கூட முடியலை போல" என கைப்பற்றி வெளியே இழுத்தாள்.

வேலையாட்கள் பெட்டியை எடுத்துக்கொண்டு செல்ல...இவளும் அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி வீட்டை நோக்கி சென்றாள்.

அதற்கு மேல் அங்கே இருக்க விரும்பாதவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அந்த வீட்டில் பணிபுரியும் மூத்த பெண்மணி மரகதம் ஆரத்தி கரைத்து இருவரையும் உள்ளே அழைத்து வந்தார்.

அம்மாடி எப்படி இருக்க ? பார்த்து மூணு வருஷம் ஆகுது என வாஞ்சையோடு கன்னம் தாங்கி வினவ...மிருணா சட்டென்று அவரின் காலில் விழுந்தாள்.அவரோ ஒரு அடி தள்ளி நின்று "அய்யய்யோ என்னமா என் காலில் போய் நீங்க என தடுமாறி.. "ஐயா பார்த்து விட்டாரா" என பயத்துடன் பார்வையை சுழற்றினார்.

அவளோ "அப்பா எதுவும் சொல்ல மாட்டார்.என்ன சின்ன வயசில் இருந்து நீங்க தான் வளர்த்தீங்க… நான் எப்பவும் உங்களை என் அம்மா மாதிரி தான் பார்க்கிறேன் என்றவளை அவரும் அணைத்துக் கொண்டார்.

சின்ன குழந்தையில் தாய்க்காக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் மிருவை இவரை தவிர யாராலும் சமாளிக்க முடியாது.சங்கரலிங்கம் கூட இந்த விஷயத்தில் தோற்று விடுவார்.ஆனால் மரகதத்தின் ஒரு வார்த்தையிலும் அணைப்பிலும் சமாதானம் ஆகும் மிருணாவை நினைத்தால் அவருக்கே ஆச்சர்யமாக இருக்கும். இன்றும் தன்மேல் அதே பாசத்துடன் இருக்கும் அவளின் குணத்தை எண்ணி ஒரு வளர்த்த தாயாக அகமகிழ்ந்து போனார் மரகதம்.

அதன் பின் சாருவை அழைத்துக் கொண்டு மாடியில் உள்ள அறையை நோக்கி சென்றாள் மிருணா.

முதலில் தனது அறைக்கு அழைத்து சென்றவள்...நீ இங்கேயே என்னோடு சேர்ந்து தாங்குவதாக இருந்தாலும் சரி, இல்லை பக்கத்து அறையில் தங்குவதாக இருந்தாலும் சரி.உனக்கு எது வசதின்னு சொல்லு ரூமை ரெடி பண்ண சொல்றேன்" என்றவளை பார்த்து கையை தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டவள்.."அய்யயோ ! நான் தனி ரூம்லயே தங்கிக்கிறேன் சாமி' திரும்பவும் என்னால என் தூக்கத்தை இழக்க முடியாது." உன் அலாரத்தில் இருந்து எனக்கு விடுதலை கிடைச்சாலே போதும். மீ வெரி ஹேப்பி" என்றவளை முறைக்க முயன்று தோற்றாள் மிருணாளினி.

அவள் அறைக்கு அடுத்த அறையே விருந்தினர் அறை தான் என்பதால் அதனையே சாரு தங்க ஏற்பாடு செய்தாள். சற்று நேரத்தில் ரூம் ரெடி ஆகிவிட இருவரும் தத்தம் அறைகளுக்குள் நுழைந்து ஓய்வெடுக்க தொடங்கினர்.

அன்றைய பகல் பொழுது முழுவதும் சாப்பிட்டு பயண களைப்பு போக தூங்கி எழுந்தனர் தோழிகள் இருவரும்.

மாலை சிற்றுண்டியை முடித்துவிட்டு பெட்டியில் இருந்த துணியை எல்லாம் எடுத்து வார்ட்ரோபில் அடுக்கி வைத்து கொண்டிருந்தவள் அறையினுள் நுழைந்தாள் சாரு.

"ஆரம்பிச்சுட்டா வேலையை..ஏண்டி உனக்கெல்லாம் உடம்பு டயர்டே ஆகாத...அதுவும் இல்லாம டைம் சென்ஜ் வேற, எனக்கு இன்னும் தூக்கம் வந்துட்டே இருக்கு"...என சோம்பல் முறிக்க..அவளோ "எனக்கு தூக்கம் வரலையே" என சொன்னவாறு வேலையை தொடர்ந்தாள்.

தந்தைக்கும் அண்ணனுக்கும் வாங்கி வந்ததை மட்டும் வெளியே எடுத்து வைத்துவிட்டு அனைத்தையும் உள்ளே வைக்க சென்றவளின் கையில் இருந்த ஒரு பார்சலை பறித்தவள் "அப்போ இது யாருக்கு"..? என கேட்டவளை அதிர்ந்து பார்த்தவள் "இது என்னோடது தான்.எனக்கு தான் வாங்கினேன்" என சொன்னவளை "என்கிட்டயே மறைக்க பாக்குறியா என தீ பார்வை பார்த்தவாறே "நீ எப்போ இருந்து ஜென்ஸ் ஷர்ட் போட ஆரம்பிச்ச" என கேள்வி கேட்க…

அய்யோ ! என இருந்தது மிருணாவிற்கு அவளுக்கு சாதாரணமாகவே போய் சொல்ல வராது..அதுவும் சாரு அவள் முகத்தை வைத்தே மனதை படிப்பவளிடம் இனியும் மறைத்து பயனில்லை என எண்ணியவாறே தயக்கமாக அவளை ஏறிட்டாள்.

அப்போ வேற யாருக்காக இருக்கும் என விரலை தாடையில் தட்டி யோசித்தவாறே.. "ஒருவேளை அந்த தோட்டக்காரனுக்கா இருக்குமோ... இல்ல வாட்ச்மென்க்கா என கேட்டவளை பார்த்து "உலறாதடி இது அவருக்கு" என முகம் சிவக்க சொன்னபடி தலையை குனிந்து கொண்டாள்.

ஒற்றை விரலால் தாடையை பற்றி நிமிர்த்தியவள் "அந்த அவரு யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா" என்றவளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பரிதவிப்போடு அவள் முகம் பார்க்க…"சரி நீ ரொம்ப தயங்குவதால் நானே சொல்றேன்.. சூரிய பிரகாஷ் " என நிறுத்தி நிதானமாக சொல்ல...

அவனிடம் கூட இன்னும் வெளிப்படுத்திடாத காதல் இவளுக்கு எப்படி தெரியும் என அதிர்ந்து பார்த்தவள் "உனக்கு எப்படி தெரியும்..? என திக்கி திணற...இது என்ன பெரிய விஷயமா ? அது தான் உன் முகத்திலேயே தெரியுதே..காலையில் மெய்மறந்து சைட் அடிச்சிட்டு இருந்தீயே அப்பவே கண்டு பிடிச்சிட்டேன். "ஆனா இப்படி ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி இருந்துட்டு, இவ்ளோ கேடியா இருப்பான்னு நினைச்சே பார்க்கலை" என கிண்டலில் இறங்க...அதுவரை தயக்கத்தில் இருந்த மிருணாவின் முகம் இப்போது வெளிப்படையாக வெட்கத்தை வெளிப்படுத்தியது.

"ஆனா இன்னும் உன் காதலை சொல்லலைன்னு நினைக்கிறேன்" அப்படிதானே என சரியாக யூகித்து கேட்க...அவளும் எப்படி தான் சொல்வாள் அவன் அவளை நிமிர்ந்து கூட பார்த்ததில்லை என்று.

"எனக்கு அவரை பார்த்தாலே பயம் தான் வருது என்ன பண்றது. அதுவும் இல்லாம அவரை பார்ப்பதே அரிதாக தான். அவர் எங்க வீட்டு உள்ள கூட வர மாட்டார். அண்ணாவுக்கு அவரை பார்த்தாலே பிடிக்காது. அப்பாவை அழைத்து போக வருவதோடு சரி...மத்த நேரத்தில் பார்க்க கூட முடியாது.அப்படி இருக்கும் போது நான் என்ன தாண்டி பண்ண சொல்ற..?

" ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல நான் அவரை அஞ்சு வருஷமா காதலிக்கிறேன். என்னைக்கு அவரை முதல்முறை பார்த்தேனோ அப்போ இருந்து நான் நானா இல்லை". எத்தனையோ தடவை என் காதலை சொல்லனும்னு நினைச்சேன். ஆனா நான் சொல்லி அவர் அதை ஏத்துக்கலை என்றால் அதை என்னால சத்தியமா தாங்கிக்க முடியாது. அதான் எல்லாத்தையும் என் மனசுக்குள்ளே வச்சு புதைச்சிக்கிட்டேன் என விழிகளில் கண்ணீர் வடிய சொன்னவளை இடையோடு அணைத்துக் கொண்டாள் சாரு.

"சரி அழாத டா செல்ல குட்டி"...இப்போ என்ன உன் காதலை அவர்கிட்ட சொல்லனும், உன் ஆளை தினமும் பார்க்கணும்,உன் அண்ணனுக்கு அவரை பிடிக்கணும்,இந்த வீட்டுக்குள்ள அவர் வரணும் அவ்வளவு தானே அதை நான் பார்த்துக்கிறேன் என நடக்கவே முடியாது என நினைக்கும் அனைத்தையும் அசால்ட்டாக செய்து முடிப்பதாக சொன்னவளின் முகத்தை பார்க்க.. அதில் மருந்துக்கும் விளையாட்டு தனமோ தன்னை சமாதானப்படுத்த சொன்ன வார்த்தைகளாகவோ தெரியவில்லை.அதில் அத்தனை தீவிரம் இருந்தது.

ஏய் என்னடி சொல்ற..? உன்னால் முடியுமா? என நம்பாமல் கேட்கும் தோழியை பார்த்து "எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா" என தளபதி ஸ்டைலில் காலரை தூக்கி விட்டு சொன்னவள்...ஆனா அதுக்கு உன்னோட ஹெல்ப் வேணும்.பெருசா ஒன்னும் இல்ல இனிமே நான் சொல்ல போற எல்லா பொய்க்கும் தலையை மட்டும் ஆட்டு அதுபோதும்.ஏதாவது பேசி காரியத்தை கெடுக்க கூடாது என ஏதோ பெரிய திட்டத்தோடு பேச….இவளுக்கு உள்ளுர பயம் இருந்தாலும் தோழி மேல் உள்ள நம்பிக்கையில் சரி என தலையாட்டினாள்.( அப்படி என்ன திட்டமா இருக்கும்.கண்டிப்பா மொக்கையா தான் ஏதாவது இருக்கும்.அது எதுவா இருந்தாலும் மாட்டாமல் இருந்தால் சரி )

பின்னர் இரவு உணவுக்காக கீழே செல்ல.. இருவருக்காக சங்கரலிங்கம் காத்திருக்க இன்னும் உதய் வந்திருக்கவில்லை. இருவரும் உணவை உண்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் தத்தம் அறைகளுக்கு தூங்க சென்றுவிட்டனர்.

பகல் முழுவதையும் தூக்கத்தில் கழித்த சாருக்கு மணி பண்ணிரெண்டை கடந்தும் தூக்கம் வந்த பாடில்லை. அதனால் பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து மொபைலை நோண்டிக் கொண்டிருந்த நேரம்… அதிவேகத்தில் வீட்டினுள் நுழைந்த கார் சடன் ப்ரேக் போட்டு நின்றது…

"யாரது இந்த நேரத்தில்" என எட்டிப் பார்க்க அதிலிருந்து போதையில் சற்று தள்ளாடியபடி இறங்கினான் உதய்.

ஒரு கையில் மதுக்கோப்பையை ஏந்திக் கொண்டு.. "காலையில் சிறு கசங்கள் கூட இல்லாமல் நீட்டாகா ஐயர்ன் செய்த பார்மல் ஷர்ட்டில் ஒரு ஹீரோ போல் இருந்தவனா இவன்" என என்னும் அளவிற்கு சட்டை கசங்கி மேலே உள்ள இரண்டு பட்டன்கள் அவிழ்ந்து, தலைமுடி எல்லாம் கலைந்து பார்க்கவே பக்கா லோக்கல் லுக்கில் இருந்தான் உதய்.

"காலையில அவ்ளோ சீன் போட்டான்...என்னவோ பெரிய இவன் மாதிரி" குடிகாரா இப்போ உன்னை என்ன பண்றேன் பார்" என எண்ணியபடி அவளும் அறையை விட்டு வெளியே வந்தாள்.

தள்ளாடியபடி படிகளில் நடந்து வந்து கொண்டிருந்தவன் எதிரில் வந்து நின்றாள் சாரு.

வீடே இருளில் மூழ்கியிருக்க...கண்ணாடி ஜன்னல் வழியே கசியும் நிலவொளியை தவிர எந்த வெளிச்சமும் இல்லை ஹாலில்.

படியேறி வந்தவன் தன் எதிரில் ஏதோ தடங்களாக இருப்பதை தன் மங்கலான கண்களில் பார்த்தவாறே…"இந்த இடத்துல யாரு சுவரை கட்டியது" என கொஞ்சம் நகர்ந்து நடக்க தொடங்க.. அங்கேயும் குறுக்கே வந்து நின்றாள் சாரு.

"என்னடா இது" என குழம்பியவன் கண்களை நன்றாக கசக்கி தலையை வேகமாக உலுக்கியவன் கண்ணிற்கு அப்போது தான் தெரிந்தது தன் எதிரில் இருப்பது சுவர் அல்ல ஒரு பெண் என்பது.

"ஏய் யாரு நீ..? இந்த நேரத்துல இங்க என்ன பண்ற..? ஓ..ஓ.. நீ திருடியா ?" என அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க…

காலையில் தன்னை இன்சல்ட் பண்ணியவனை இப்போது பதிலுக்கு பதில் ஏதாவது சொல்லி வெறுப்பெற்ற எண்ணி வந்தவளுக்கு அவனின் கேள்வி கொஞ்சம் அதிர்ச்சியை தான் தந்தது.

"என்னது நான் யாரா..? ஹலோ என்ன யாருன்னு கூட உங்களுக்கு நியாபகம் இல்லையா ..?காலையில் என்னை பார்க்கவில்லையா" என கேட்டவளை புருவம் சுருக்கி பார்த்தவன் இல்லை என்பதாய் தலையாட்டி உதட்டை பிதுக்க ..அவளுக்கோ அது இன்னமும் ஆத்திரத்தை கிளப்பியது.

அவன் போதையில் இல்லாமல் தெளிவாக இருக்கும் போது கேட்டிருந்தால் கூட இவளை தெரியாது என்று தான் சொல்லியிருப்பான். ஏனென்றால் அவன்தான் அவளை பார்க்கவே இல்லையே.காலையில் கூட தங்கையை தவிர யாரையும் அவன் கண்கள் நோக்கவில்லை. அப்படியிருக்க அவனுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கு.(அய்யோ பாவம் சாரு)

அவளும் எதுவும் பேசாமல் முறைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து…"ஏய் யாரை ஏமாத்தப் பாக்குற? என் வீட்டிலேயே திருட வந்துட்டு பொய் சொல்லி தப்பிக்கலாம்னு பார்க்கிறியா"..? நான் யார் தெரியுமா ? உன்னை என்ன பண்றேன்னு பாரு" என்றவன் அவள் இரு தோள்களையும் இறுக்கமாக பற்றி கொண்டு திருடன் திருடன் என கத்த வாய்த்திறந்தவன் வாயை தன் கையால் அடைத்தவள்…"டேய் லூசு நா ஒன்னும் திருடி இல்ல' மரியாதையா கையை எடு, நான் தூங்க போறேன்" என அவனிடம் இருந்து விடுபட போராட …


அந்த போதையிலும் அவள் தன்னை லூசு என சொல்லியது கோபத்தை கிளப்ப…"யாரை பார்த்துடி லூசு சொன்ன" என அவளை அடிக்க பாய...தடுமாறி அவள் மேலேயே விழுந்தான்.

விழுந்த அதிர்வில் அவன் இதழ்கள் அழுத்தமாக அவள் இதழ்களில் பதிந்து மீள... ஒருநொடி உலகமே நின்று விட்டது போல் உணர்ந்தாள் சாரு .இப்படி நடக்கும் என அவள் நிச்சயம் நினைக்கவில்லை.

அவள் வாழ்வில் ஒரு ஆண் மகனிடம் இருந்து பெறும் முதல் முத்தம். அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் இரு உடல்களும் மொத்தமாக உரசிக்கொள்ள...அவளுக்கு அந்த அதிர்ச்சியிலும் அழுகை வரும்போல் இருந்தது தன் நிலையை எண்ணி...

மெல்ல அந்த அதிர்வில் இருந்து வெளியே வந்தவளுக்கு அவன்மேல் கட்டுக் கடங்காமல் கோபம் பெறுக..அவனை தன்னில் இருந்து தள்ளிவிட முயன்று தோற்றாள்.

"அய்யோ எருமை கணம் இருப்பான் போலவே" என வாய்விட்டு புலம்பியவள்…"டேய் தடிமாடு எழுந்திரிடா மூச்சு முட்டுது" என சத்தம் போட...அவனோ அது எதையும் காதில் வாங்காமல் அவளையே இமைக்காமல் பார்த்தான்.

அந்த நிலவொளியில் பெண்ணவள் முகம் தங்கமாய் ஜொலிக்க...அதுவும் அவள் பேசும் போதும் அசையும் ரோஸ் நிற பளபளக்கும் உதடுகள் அவனை ஊமத்தம் கொள்ள செய்தது….அதிலும் தன்னை திட்டும் போது சிவக்கும் மூக்கு அவனை மேலும் ஏதேதோ செய்ய சொல்லி மயக்கியது.

அவளையே பார்த்திருந்தவன் அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவள் இதழ்களை சிறைப்பிடித்திருந்தான்.


 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 4

அதிர்ச்சியில் விழிகள் இரண்டும் அகல விரிய அவனை தன்னில் இருந்து பிரிக்க முயற்சித்தாள் சாரு. ஆனால் அவனின் உடும்பு பிடியில் இருந்து அவளால் அசைய கூட முடியவில்லை.

தன்னால் முடியும் மட்டும் அவனை தாக்கியவள், தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவன் மார்பில் கை வைத்து தள்ள...அதில் தடுமாறி விலகி சென்றவன் என்ன என உணரும் முன்பு அவன் கன்னத்தில் பளார் என அறைந்திருந்தாள் சாரு.

"பொறுக்கி... பொறுக்கி.. எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ" என அவனை சரமாரியாக அடிக்க தொடங்க... அவளின் ஒவ்வொரு அடியும் ஏதோ மசாஜ் செய்தது போல் தான் இருந்தது உதய்க்கு. அவன் முகத்தில் வலியின் சாயலோ,இல்லை இப்படி பண்ணிவிட்டோமே என்ற வருத்தம் எதுவும் இல்லாமல் கண்மூடி அவள் அடியை சுகமாக வாங்கிக் கொண்டிருந்தான்.

அவளுக்கே அவனை அடித்து அடித்து ஒரு நிலையில் கைகள் வலியெடுக்க தொடங்க…. "ச்சீ" என அவனை தள்ளிவிட்டு எழுந்து தன் அறையை நோக்கி சென்றாள்.
அவள் முதல் அடியை எடுத்து வைக்கும் போதே எட்டி அவள் கையை பிடித்தவன் "ஏய் திருடி எங்க என்னை அடிச்சிட்டு தப்பிக்க பாக்குறியா..? அந்த கதையெல்லாம் என்கிட்ட நடக்காது" என்றபடி அவள் கையை பிடித்துக்கொண்டே எழுந்து நிற்க முயல,அவனின் பாரத்தை தாங்கும் அளவுக்கு தெம்பில்லை என்றாலும் எங்கே மீண்டும் அவன் மீதே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் கால்களை தரையில் அழுத்தமாக தாங்கி நின்றிருந்தாள்.


அவனோ அது எதையும் மனதில் கொள்ளாமல் எழுந்து நின்றவன் அவள் முகம் பார்த்து புன்னகைக்க...அவளுக்கோ அது இன்னும் ஆத்திரத்தை கிளப்பியது. ஆல்ரெடி நடந்த சம்பவத்தால் விழிகள் வேறு எப்போது வேண்டுமானாலும் கண்ணீரை வெளியே விட தயாராக இருக்க..அவன்முன் அழ கூடாது என்பதில் உறுதியாக நின்றவள், அவன் பிடித்திருந்த கையை உத்தரவிட்டு அறைக்குள் நுழைந்தாள். ஏனோ அவன்மேல் மலையளவு கோபம் இருந்தாலும் இப்போது அவனை எதிர்கொள்ள மனதில் தெம்பில்லை.இப்போது அவளுக்கு வேண்டியது தனிமை மட்டுமே அதான் அவன் முகத்தில் அறைந்தது போல் கதவை சாத்தியவள் அதன் மேல் சாய்ந்து நின்று தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.


கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. அவனை மட்டும் குறை சொல்லி எந்த பயனுமில்லை... தப்பு அவள் மேலும் இருக்கிறதே...அவன் ஒன்றும் சும்மா இருந்த பெண்ணின் கையை பிடித்து இதுமாதிரி செய்யவில்லையே. அவன் பாட்டிற்கு அவன் அறைக்கு சென்று இருப்பான்.தேவையில்லாமல் அவனை வெறுப்பேற்ற நினைத்து கடைசியில் அது தனக்கே ஆபத்தாக முடிந்ததை எண்ணி தன்னையே நொந்து கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தாள். தூக்கம் தொலைதூரம் சென்றிருக்க விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

உதய்யோ சாத்தப்பட்ட கதவை வெகுநேரம் தட்டியவன் அது திறக்கப்படாமல் போக தட்டுத்தடுமாறி தன் அறைக்குள் நுழைந்தவன் மெத்தையில் விழுந்து அப்படியே தூங்கிப் போனான்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்த மிருணா குளித்து முடித்துவிட்டு வெளியே வர...திறந்திருந்த சாருவின் அறையை பார்த்து கண்களை கசக்கியவாறு நான் கனவு ஏதாவது காண்றனா..? என தன்னையே கிள்ளி பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.

மெத்தை காலியாக இருக்க... 'எங்க போனா' என எண்ணியபடி நடையை தொடர...அங்கு பால்கனி கம்பியில் சாய்ந்து எதையோ பறிக்கொடுத்தவள் போல் நின்றிருந்தாள் சாரு.

இப்படிப்பட்ட சாருவை அவள் இதுவரை பார்த்ததே இல்லை. "சாரு" என அழைத்தபடி அவள் தோள் மேல் கை வைக்க...திரும்பி பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அவளை அணைத்துக் கொண்டாள்.ஏதோ இரவு முழுவதும் இருந்த மன அழுத்தம் மொத்தமும் குறைவது போல் இருந்தது மிருணாவின் அண்மையில்.

சற்று நேரத்தில் அவளிடமிருந்து பிரிந்தவள் "மிரு... நான் ஊருக்கு போலாம்னு இருக்கேன். என்னவோ தெரியல அப்பா அம்மா ஞாபகமாக இருக்கு" என அவள் முகம் பார்க்காமல் உரைத்தாள்.

மிருவும் வந்ததில் இருந்து அவள் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பா அம்மா நினைவு வந்தாள் எப்படி இருப்பாள் என மூன்று வருடம் உடன் இருந்தவளுக்கு தெரியாதா என்ன..? வேறு என்னவோ காரணம் இருக்கு என சரியாக யுகித்தவள் "இந்த வீட்ல யாராவது உன்னை ஏதாவது சொன்னாங்களா"..? கண்டிப்பா அப்பா ஏதும் சொல்லிருக்க மாட்டாங்க..? அப்பாவை பத்தி எனக்கு நல்லா தெரியும்.அவரும் இல்லனா அண்ணா தான் ஏதாவது சொல்லிருக்கணும்.

அவன் கோபத்துல எதாவது சொல்வானே தவிர மனசுல எதையும் வச்சிக்க மாட்டான். ரொம்ப நல்லவன்.இப்போ கொஞ்ச நாளாதான் இப்படி குடிச்சிட்டு இருக்கான்.என்ன காரணம்னு தெரியலை...நிறைய தடவை கேட்டு பார்த்துட்டேன் ஆனா ஒரு வார்த்தையை கூட என்னால வரவைக்க முடியலை என எங்கே தன் அண்ணனை அவள் தவறாக நினைத்துக் கொள்வாள்ளோ என்று அவனை பற்றி அவள் அறியாத பல விஷயங்களை தன் தோழியிடம் சொன்னவள்

"ஆனா அவன் இன்னும் எழவே இல்லையே ஒருவேளை நைட் குடிச்சிட்டு உன்கிட்ட கலாட்டா பண்ணானா" என கேட்க,சாருவின் அமைதியே அதுதான் என எடுத்துரைக்க அவள் கையை தன் கையோடு கோர்த்து... "அவனுக்கு பதில் நான் உன்கிட்ட மனிப்பு கேட்கிறேன் சாரி டி" என சொல்ல வந்தவளை கைநீட்டி தடுத்தவள் "லூசு நீ எதுக்கு இப்போ என்கிட்ட மன்னிப்பு கேக்குற"..?

"மன்னிப்பு கேட்க வேண்டியது உன் அண்ணன்".இனிமே அவன் முகத்துல முழிக்கவே கூடாதுன்னு தான் ஊருக்கு போறேன்னு சொன்னேன். "ஆனா ! நீ உன் அண்ணனை பத்தி சொன்னதை கேட்டதும் கொஞ்சம் கோபம் குறைத்து இருக்கு. "அவன் என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா..? பில்டப் எல்லாம் ஓவரா இருக்கு.."இதுக்காகவே உங்க அண்ணனை என் காலில் விழ வைக்கலை, நான் சத்தியநாதன் மீனாட்சி பொண்ணு இல்லை" என சிலிர்த்து கொண்டவள்.."இன்னைக்கு உன் அண்ணனுக்கு இருக்குடி" என பழைய சாருவாக அவன் அறையை நோக்கி செல்ல துணிய... "ஏய் சாரு நில்லுடி, எங்க போற அவன் கோபத்துல அடிச்சாலும் அடிச்சிடுவான்" என்றபடி அவளை தடுக்க முயல..அவளோ கண்டுகொள்ளாமல் நடையை தொடர்ந்தாள்.

"சொன்ன கேளுடி இல்லனா பின்னாடி ரொம்ப ஃபீல் பண்ணுவ என்றவளை திரும்பி பார்த்து முறைத்தவள் "என்ன நீ... என்னை டி போட்டு கூப்பிடுற..? இனிமேல் நான் உனக்கு அண்ணி அதுக்கு உண்டான மரியாதையோடு நடந்துக்கோ" என்றவள் அவன் அறையை நோக்கி சென்றாள்.

அவள் அண்ணி என்று சொன்னதிலேயே அதிர்ந்து நின்றவள் "அடிப்பாவி" என வாயில் வைத்து போகும் அவளின் முதுகை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவ்வளவு நேரமாக சோகமே உருவாக இருந்தவளா இவள் என நினைக்க தோன்றும் அளவுக்கு முகத்தில் புன்னகையுடன் சென்றாள்.அப்படியென்ன அவனை பத்தி பெருசா சொல்லிட்டேன், நடந்ததை தானே சொன்னேன் என அவளுக்கே குழப்பமாக இருந்தது.

அவளுக்கும் அவன் இப்படியிருக்க காரணம் உறுதியாக தெரியாத போதிலும்...அவனின் மாற்றங்கள் அனைத்தும் அன்று நடந்த சம்பவத்திற்கு பின்பு தான் என்பது மட்டுமே அவளுக்கு தெரியும். அதுகூட ஒரு வியுகம் தான் உறுதியாக தெரியாது...அது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இதுக்காக எல்லாம் அண்ணி என சொல்லும் அளவுக்கு மாறிவிட்டாள் என அவளுக்கே சந்தேகமாக இருந்தது.ஆனால் அவள் விளையாட்டுக்கு சொல்வது போலவும் தெரியவில்லை. இவ போகிற வேகத்ததை பார்த்தா இன்னைக்கு எங்க அண்ணன் என்ன ஆக போறானோ..? என நினைத்தபடி அவள் பின்னால் செல்ல…

கதவு வரை சென்ற சாரு பின்னால் வரும் மிருணாவை பார்த்து "நீ எங்க வர, இது எனக்கும் உன் அண்ணனுக்கும் இருக்குற பெர்சனல் சோ நீ உன் வேலையை பார்" என்க...அவளோ "சும்மா விளையாடாத சாரு பீ சீரியஸ்".

"இது ஒன்னும் எடுத்தோம் கவுத்தாம்னு பண்ற விஷயம் இல்ல இது உன் வாழ்க்கை. அவனை பத்தி நான் சொன்னது என்னோட கணிப்பு தான், அதுதான் உண்மையா இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை". இதையெல்லாம் வச்சு உன் வாழ்க்கையை டிசைட் பண்ணாதா என அவளுக்கு நடைமுறையை எடுத்து சொல்ல...அதை கேட்க தான் அவள் தயாராக இல்லை.

காலை வரை அவனை ஒரு பொறுக்கி ரேன்ஞ்க்கு நினைத்திருக்க … மிருவின் மூலம் அவனின் மறுபுறம் தெரிய வந்ததும் அவனிடம் கோபத்திற்கு பதில் காதலே தோன்றியது.

ஆல்ரெடி ஏர்போர்ட்டிலேயே அவனின் "ஹேன்ட் சம் லுக்கில்" மயங்கி சைட் அடித்து கொண்டு நின்றிருந்தாள் சாரு.அதனால்தான் தானே சென்று அவனிடம் பேச முயற்சித்தாள். ஆனால் அவனோ அவளுக்கு பெரிய பல்பை தந்துவிட்டு சென்றுவிட்டான். அந்த கடுப்பிலேயே சுற்றிக் கொண்டு இருந்தவள் அவனை பார்த்தவுடன் அவன் குடித்திருப்பதையும் கண்டுக் கொள்ளாமல் அவனிடம் வம்பு வளர்க்க அது விபரீதமாக முடிந்துவிட்டது.

எல்லாத்தையும் மனதுக்குள் நினைத்தவள் மிருணாவை தீர்க்கமாக பார்த்தவாறே "என்னை பார்த்தா விளையாடு மாதிரியா இருக்கு. ஐயம் சீரியஸ் இனி உன் அண்ணனே நினைச்சாலும் நான் அவன் பொண்டாட்டி ஆவதை தடுக்க முடியாது" என கண்ணடித்து சொன்னவள்… "நான் போய் உன் அண்ணனை எழுப்புறேன் நீ போய் எங்களுக்கு காபி மட்டும் போட்டு எடுத்துட்டு வா செல்லகுட்டி" என்றபடி உள்ளே நுழைந்தாள்.

உள்ளே நேற்று இரவு குடிபோதையில் கட்டிலுக்கு குறுக்காக விழுந்து உறங்கியன் இப்போதும் அதே நிலையில் இருக்க…அவன் அருகில் சென்று அவனின் முகம் பார்த்தவளுக்கு நேற்று அவனிடம் கண்ட திமிர்த்தனமோ உதாசினமோ சிறிதும் இன்றி சிறுபிள்ளை போல் தலையணையை அணைத்துக் கொண்டு உறங்குபவனை பார்க்க பார்க்க தெவிட்டவே இல்லை அவளுக்கு.

" நேற்று இவனா அப்படி நடந்துக்கொண்டான்…. இல்லை நாம தான் ஏதாவது கனவு கண்டோமா" என மனம் அவனுக்கு சார்பாக பரிந்து கொண்டு வர...அவளுக்கோ தன்னை நினைத்தே சிரிப்பாக இருந்தது.

அவனையே மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தவள் அவனிடம் சிறிது அசைவு தெரியவும் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டாள்.

தூக்கம் கலைந்த உதய் மெதுவாக கண்விழிக்க...எதிரில் இருந்த உருவம் மங்கலாக தெரிய..மீண்டும் அழுத்தமாக விழி மூடி திறந்தவன் முன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் சாரு.


உதய் 'யாரிது என்னோட ரூமில்' என புரியாமல் பார்த்தவன் அவளை நோக்கி "யார் நீ இங்க என்ன பண்ற..? என எரிச்சலாக குரலை உயர்த்த...அவளோ அவனை அழுத்தமாக பார்த்தவாறு "யாருன்னு தெரியாம தான் நேத்து எனக்கு முத்தம் கொடுத்தீங்களா"..? என்க.,.

"என்ன உளறல் இது" இதுக்கு முன் உன்னை பார்த்ததே இல்லை.அப்பறம் எப்படி நீ சொல்ற மாதிரி நடந்துக்க முடியும்.லூசு மாதிரி உலறாம முதல்ல என் ரூமை விட்டு வெளியே போ"...என கத்த தொடங்கினான். ஆல்ரெடி தலை வேறு வின்வின் என வலியேடுக்க, உடல் முழுவதும் யாரோ அடித்துப் போட்டது போல் வலித்தது.போதாதற்கு கன்னம் வேறு எறிந்தது...அந்த மொத்த எரிச்சலும் இப்போது எதிரில் இருப்பவள் மீது திரும்பியது.

"உன்னை வெளிய போக சொன்னேன். நீ சொல்லும் கேவலமான பொய்யை நம்ம நான் தயாரா இல்லை"முதல்ல நீ யாரு..? எப்படி இந்த வீட்டுக்குள் வந்த என குடிபோதையில் சொன்ன திருடி என்ற கண்ணோட்டத்தோடு பார்க்க…

அதில் கடுப்பானவள் "நான் யாருன்னு உங்களுக்கு தெரியணும் என்றால் போய் கண்ணாடியில் உங்க முகத்தை பாருங்க..? உங்க கன்னத்துல இருக்குற கைத்தடம் சொல்லும் நான் சொல்றது உண்மையா பொய்யா என்று..? என அவளும் திமிராகவே பதில் சொன்னாள்.


உதய் அவசரமாக எழுந்து கண்ணாடியில் பார்க்க...வலது கன்னம் இன்னும் அவளின் கைதடத்தை தாங்கியிருந்தது. அதில் ஆத்திரம் அதிகரிக்க அவளை நோக்கி திரும்பியவனை பார்த்து… "உடமெல்லாம் கூட வலிக்குமே, என்னா நான் அடிச்ச அடி அப்படி. ஸ்கூல் படிக்கும் போதே கராத்தே பிளாக் பெல்ட்" என பெருமையாக இல்லாத காலரை தூக்கிவிட…

அவனோ வேகமாக அவளை நெறுங்கியவன் அவளின் கழுத்தை பிடித்து நெறித்தான். "என்னடி திமிரா ! எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே அடிச்சிருப்ப" உன்னை என்ன பண்றேன் பாரு! என சொன்னவாறே அவளை சுவரோடு சுவராக சாய்த்தவன் கழுத்தில் இன்னும் அழுத்தத்தை கூட்ட..அவளோ மூச்சுவிட சிரமப்பட்டு இரும தொடங்கினாள்.

அவளின் சிரமத்தை கண்டும் அவன் கையையும் எடுக்கவில்லை அழுத்தத்தையும் குறைக்கவில்லை. அவனிடம் போராடி தோற்றவள் அவ்ளோதான் நம்மளை கொள்ளாம விடமாட்டான் போல என நினைக்கும் போதே வெளியே கதவை தட்டும் சத்தம் கேட்டது.

அதன்பின் மெல்ல தன் கைகளை தளர்த்தியவன்…"இன்னொரு வாட்டி என் முன்னாடி வந்துடாதே அதான் உனக்கு கடைசி நாளா இருக்கும்" என்றவன் விழியின் அசைவிலேயே வெளியே போ என சொல்ல ...அவளும் விட்டால் போதும் என எண்ணியபடி வாசல்வரை சென்றவள் திரும்பி "நான் சொன்னது எல்லாமே உண்மை தான். நீங்க என்கிட்ட தப்பா நடந்தாதால தான் உங்களை அடிச்சேன்.இல்லனா உங்களை அடிக்க எனக்கென்ன வேண்டுதலா..? என உதடு சுழித்தவள் அவனை பார்த்து கண்ணடித்து விட்டு வெளியே சென்றாள்.

அவனுக்கு இன்னுமே அவள் யார் என்று தெரியவில்லை.அவள் சொன்னவற்றை நினைத்து பார்த்தவனுக்கு ஏதோ நிழல் போல் நடந்த அனைத்தும் நினைவிற்கு வந்தது. ஏனோ அவளை முத்தமிட்டது நினைவு வரும் போது இப்போது உதடு இனிப்பது போல் இருந்தது.

"ச்ச" என்னடா இப்படி பண்ணிட்ட..? புது பிராண்ட் சரக்கு அடிக்கும் போதே பசங்க சொன்னாங்க இது ஓவர் பவர்ன்னு, சொல்ல சொல்ல கேட்க்காமா குடிச்சிட்டு... இப்படி போதையில் ஒரு பொண்ணுக்கு என கண்ணாடியில் தன்னை பார்த்தே திட்டிக் கொண்டு இருந்தான்.

வெளியே...அறைக்குள் சென்றவள் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் அவளுக்கு என்ன ஆனதோ என்றெண்ணி மிருணா தான் கதவை தட்டினாள். நல்லவேளை போனவள் சிரித்துக் கொண்டே வந்ததை பார்த்துதான் அவளுக்கு உயிரே வந்தது.

"என்னடி சிரிச்சிட்டே வர...அண்ணா எதுவும் சொல்லலையா" என்றவளை பார்த்து அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது.ஒழுங்கா அண்ணின்னு கூப்பிடு அப்போ தான் உன் ரூட் க்ளியர் ஆகும் என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றுவிட்டாள்.

காலை உணவுக்காக அனைவரும் டின்னிங் டேபிளில் அமர்ந்திருக்க…என்னமா சாரு வீடெல்லாம் பிடிச்சிருக்கா என சங்கரலிங்கம் கேட்க ...அப்போது தான் வெளியே போக கிளம்பியபடி வந்த உதய் சாப்பிட அமர்ந்தான்.

அவனை பார்த்துக்கொண்டே இன்னைக்கு காலைவரை கொஞ்சம் பிடிக்காம தான் இருந்தது அங்கிள்...ஆனா இப்போ ரொம்ப பிடிச்சிருக்கு சொல்ல...அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தவன் குனிந்து உணவை அளந்தான்.

டிவி யில் அன்றைய செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருக்க...அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரம் ...இன்றைய முக்கிய செய்திகள் "முன்னால் மத்திய அமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான வீரபாண்டியன் அவர்களின் மகன் மர்மமான முறையில் கொலை" என்ற செய்தியை கேட்டவுடன் சாப்பிட்டு கொண்டிருந்த சங்கரலிங்கம் கைகள் அதிர்ச்சியில் அப்படியே அந்தரத்தில் நின்றது. ஒரு நொடி உதய் கூட சாப்பிடாமல் தொலைக்காட்சியை தான் பார்த்திருந்தான்.

ஆஹா ! "உங்களை எதிர்கிறவங்க யாரா இருந்தாலும் கொல்லாம விடமாட்டீங்க இல்ல"...பாவம் அரசியலுக்கு வரணும்னு நினைச்சதை தவிர அவன் வேற என்ன பண்ணான் உங்களுக்கு என ஆதங்கமாக கேட்க….அவரோ என்ன பேச்சு இது என்பது போல் பார்த்தார்.அதுவும் மகள் முன்பு அவன் இப்படி பேசுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர்கள் புறம் திரும்பியவர் நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க என மிருணா சாரு இருவரையும் அனுப்பி வைத்தவர்... மகனின் புறம் திரும்பியவர்.

"உனக்கென்ன பைத்தியமா..? நான் ஏன் அவனை கொல்லனும்".இன்னும் சொல்ல போனா அவனை மாதிரி நூறு பேர் வந்தாலும் நான் தான் ஜெயிப்பேன். அந்தளவுக்கு மக்கள் என் மேல் நம்பிக்கை வெச்சிருக்காங்க ! அப்படியிருக்கும் போது அவனை கொல்ல வேண்டிய அவசியம் எனகென்ன வந்தது என எகிற….அப்போது வீட்டுக்கு வெளியே சங்கரலிங்கத்தை அழைக்க காரில் இருந்து இறங்கினான் சூரிய பிரகாஷ்.

"அதோ வந்துட்டான் பாருங்க உங்க அடியாள்" என்றவன் இல்ல இல்ல.. என அவசரமாக தலையாட்டி மறுத்தவன் "உங்க கூலிப்படை". அவனுகளாவது காசுக்கு தான் கொலை பண்ணுவானுங்க, ஆனா இவன் உங்களுக்காகவே பண்ணுவானே. கொலை பண்றது என்ன அவனுக்கு புதுசா" என எள்ளல் நிறைந்த குரலில் சொல்ல …. நீ தேவையில்லாம இதில் தலையிடாத உதய். இவனை நான் எதும் பண்ணலை அதுதான் உண்மை என்றவர் சாப்பிடாமல் தட்டிலேயே கையை கழுவி விட்டு சென்றுவிட்டார்.

"உண்மையை சொன்னா கோபம் வர தானே செய்யும்". பார்க்கலாம் இன்னும் எத்தனை நாள் நீங்க ரெண்டு பேரும் தப்பிக்க போறீங்கன்னு..? என நினைத்தவன் தன் தட்டில் உள்ள உணவை மிச்சம் வைக்காமல் உண்டு முடித்துவிட்டே எழுந்து சென்றான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 5

காரில் தங்கள் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த சங்கரலிங்கத்தின் மனம் முழுவதும் யார் அவனை கொன்றிருப்பார்கள் என்ற சிந்தனையே…

இப்போது இருக்கும் சூழ்நிலையில் அதுவும் இன்னும் சிறிது நாட்களில் தேர்தல் அறிவிப்பு நிகழ இருக்கும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தால் அனைவரும் தன்னையே சந்தேகப்பட கூடும் என்பது அவருக்கு நன்றாகவே புரிந்தது.

ஆனால் அது கண்டிப்பாக நான் இல்லை என்று அடித்து சொன்னாலும் அனைவரும் நம்புவார்களா என்பது சந்தேகம் தான்.இது எவ்வளவு பெரிய பிரச்சனையை கொண்டு வர போகிறதோ என எண்ணியபடி வந்தவர் நிமிர்ந்து தன் அருகில் அமைதியாக அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டு வரும் சூரிய பிரகாஷை பார்த்து "யார் என்ன என எதாவது தகவல் கிடைச்சுதா..? அந்த கொலையை யார் பண்ணியதுனு தெரிஞ்சா மட்டும் தான் நம்மளால நிம்மதியா இருக்க முடியும்.இல்லனா அந்த பழி நம்ம மேல தான் விழும். கொஞ்சம் அதை என்னன்னு பார்" என பொறுப்பை அவனிடம் கொடுத்தவர் தலையை தாங்கியவாறு சாய்ந்தமர்ந்தார்.

அவருக்கு தெரியும் அவனிடம் ஒன்றை கொடுத்தால் கண்டிப்பாக முடிக்காமல் விடமாட்டான் என்பது...உதய் சொல்வது போல் சூர்யா இந்த கொலையை செய்ய வாய்ப்பே இல்லை.தன் சொல்லை மீறி இதுவரை எதையும் செய்யாதவன் இதையும் செய்திருக்க மாட்டான் என்பதில் உறுதியாக இருந்தார்.

அவனோ வெளிவர துடித்த நக்கல் சிரிப்பை மறைத்துக் கொண்டு அவர் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டு வந்தானே தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை.என்ன நடந்தது என்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும்.

கார் அலுவலகத்தில் நிற்க... கீழே இறங்கியவர் முன்பு செய்தியாளர்கள் பத்திரிக்கை நிபுணர்களும் கையில் மைக் கேமராவோடு நிற்க,இதை எதிர்பார்த்தே வந்தவர் அவர்களை எதிர்கொள்ள தயாராகவே இருந்தார்.

சார்.. "இந்த கொலைக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்குனு சொல்றாங்களே அதை பத்தி என்ன நினைக்கிறீங்க"..? வர தேர்தலில் உங்களுக்கு எதிராக நிற்க இருந்ததால் தான் நீங்களே கொலை செய்ததாக சொல்லப்படுது அது உண்மையா..? என அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க... அவரோ மனம் படபடத்தாலும் நிதானமாகவே தனது பேச்சை தொடங்கினார்.

"முதல்ல வீர பாண்டியனுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.என்னதான் வீர பாண்டியன் என்னோட எதிர்கட்சியாக இருந்தாலும் ஒரு காலத்தில் இருவரும் நண்பர்கள்.ஜெகன் அவனுக்கு மட்டுமில்லை எனக்கும் மகன் மாதிரி தான்.அப்படி இருக்கும் போது அவனுடைய இழப்பு எனக்கும் பெரிய வலியை தருகிறது என்றவர்...தொடர்ந்து எங்களுக்குள்ள கட்சியின் அடிப்படையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் தனிப்பட்ட எந்த பிரச்சனையும் இல்லை.அதனால் அவனை கொலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

"காவல்துறைக்கு என்னுடைய வேண்டுகோள் அந்த கொலையை யார் பண்ணியது என கண்டுபிடித்து அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி தரவேண்டும்" என மேடையில் பேசுவது போல் பேசி முடித்தவர் அலுவலகத்தினுள் நுழைந்தார்.

அவருக்கு இப்போதே தலை வலிப்பது போல் இருந்தது. இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்வரை இது போன்ற கேள்விகள் தொடரும் என அறிந்தவர் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கினார்.

அங்கே வீட்டில்…"ஆமா மிரு நியூஸ்ல சொன்ன விஷயத்துக்கு எதுக்கு உங்க அண்ணன் அவ்ளோ ரியாக்ஷன் கொடுத்தார்.அதுவும் உங்க அப்பாவை கொலைகாரன் ரெஞ்ச்க்கு வேற பேசினான்" என்க….அது அப்பாவோட எதிர்கட்சி தலைவர் பையன். அண்ணாக்கு அரசியல் சுத்தமா பிடிக்காது..எப்போ அப்பா அரசியலுக்கு போனாரோ அப்போதிருந்து அண்ணா அப்பாகிட்ட ஒழுங்கா பேசுறதயே நிறுத்திட்டான்.

"அதான் எது நடந்தாலும் அப்பாவை தான் அதுக்கு காரணம்னு சொல்லுவான்.ஆனா அப்பா கொலை பண்ற அளவுக்கு எல்லாம் கண்டிப்பா போயிருக்க மாட்டார்.அண்ணா தான் புரிஞ்சிக்காம பேசுறான்" என தந்தை மகனுக்கு நடுவில் உள்ள விலகளுக்கான காரணத்தை சொல்ல சாருவும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

"அதுசரி இப்போ உங்க அப்பா இந்த கொலையை பண்ணலைனாலும் உங்க அப்பா மேல தானே சந்தேகம் வரும்" என கேட்க...இவ எதுக்கு இப்படி கேட்கிறாள் என தெரியாத போதும் "ஆமா" என சோகமாக தலையசைத்தாள் மிரு.

அதன் பிறகும் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த சாருவை கலைத்த மிருணா "என்னடி யோசிக்கிற கிளம்பு, எங்கேயாவது வெளியே போகலாம். வீட்டுக்குள்ளேயே இருக்கவா இங்க வந்த..? என அவளை வெளியே செல்ல கிளப்பினாள்.

உதய் படித்து முடித்துவிட்டு வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊர் சுற்றும் வாலிபன்.இன்றும் தன் நண்பர்களோடு அதே வேலையை தொடர்ந்து கொண்டிருக்க...ஆனால் அவர்களோடு முழுமையாக பங்கேற்க முடியாமல் சிந்தை முழுவதும் ஜெகனின் மரணத்தை பற்றியே நினைப்பே ஆக்கிரமித்து இருந்தது.

அதற்கு மேலும் நண்பர்களோடு இருக்க முடியாமல் அவர்களிடம் இருந்து விடைபெற்று காரில் ஏறினான். ஏனோ கோபம் மொத்தமும் தனது தந்தை மீதும் சூரியாவின் மீதும் அதிகரிப்பதை அவனால் தடுக்கமுடியவில்லை.

அவர்கள் மீது உள்ள கோபத்தை காரில் காட்ட...கார் அசுர வேகத்தில் பறந்தது. அது இறுதியில் சென்று நின்றது என்னவோ ஃபாரில் தான்.எப்போதும் இரவில் மட்டுமே குடிப்பவன் இன்று பகலிலேயே தொடங்கிவிட்டான்.காலையில் இருந்து நடந்த சம்பவம் அவனை அவ்வாறு செய்ய தூண்டியது என்றால் அது மிகையில்லை.

குடிப்பவர்களையும் குடியையும் ஒரு காலத்தில் வெறுத்து முகம் சுழிக்கும் அவனையே அது இல்லாமல் இருக்கமுடியாது என்ற நிலைக்கு தள்ளிய பெருமை மொத்தமும் அவர் தந்தையையே சாரும்.


மிருணா சாரு இருவரும் தங்கள் ஷாப்பிங்கை முடித்தவர்கள் லன்ச்க்காக அந்த பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

இருவரும் உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க….அப்போது அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான் உதய். அந்த ஹோட்டலில் ஃபார் இருக்கும் இடத்தை நோக்கி நடையை தொடர்ந்தவனை முதலில் பார்த்தது என்னவோ சாரு தான்.

இவ்வளவு வேகமாக எங்கே செல்கிறான் என அவன் செல்லும் திசையில் பார்வையை செலுத்த...அங்கே ஃபார் என்ற பெயர் பலகையை கண்டு தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

"அடியேய் ! உன் அண்ணன் அப்படி இப்படின்னு அவ்ளோ பில்டப் கொடுத்த...நான் கூட நீ சொன்ன காரணத்தை கேட்டு ஓவர் ரியாக்ஷன் கொடுத்துட்டேன் போல...அங்க பாரு உன் உடன்பிறப்ப..பட்ட பகலில் பார்க்கு போறான்.சரியான மொட்ட குடிகாரனா இருப்பான் போல என அவனை கிழித்து தோரணம் கட்ட... மிருனாவிற்கு முதன் முறை அண்ணன் மேல் கோபம் எழுந்தது.

தனது மொபைலை எடுத்து அவனுக்கு அழைக்க...தன் மொபைல் சத்தத்தில் நடையின் வேகத்தை குறைத்து,யாரென்று பார்க்க திரையில் தங்கையின் பெயரை கண்டவன் உடனடியாக அதனை ஏற்றான்.

"ஹலோ...மிரு சொல்லுடா" என மென்மையான குரலில் கேட்க...அவனால் இப்படி கூட பேசமுடியுமா என்றே தோன்றியது சாருக்கு. அவன் முகத்தில் வந்து போன உணர்வுகளே சொன்னது அவனின் உண்மையான குணத்தையும் தங்கை மேல் கொண்ட பாசத்தையும். ஆனால் ஏன் அதனை மறைத்து இந்த கோப முகமூடியை அணிந்து இருக்கிறான் என்று தான் தெரியவில்லை.

"அண்ணா எங்க இருக்க"..? என்ற மிருனாவின் கேள்வியில் சட்டென்று திரும்பி அந்த இடத்தை பார்வையால் அலசினான் உதய். அவனுக்கு தெரியும் தேவையில்லாமல் தனக்கு அதுவும் இந்த நேரத்தில் அழைக்க மாட்டாள் என்று… அவள் இங்கு எங்கோ தான் இருக்கிறாள் என பார்வையை சுழற்ற.. அவளை கண்டுக்கொண்டவனின் பார்வை ஒரு நொடி தடுமாறியது. பின் தன்னை நிலைப்படுத்தியவன் தங்கையை நோக்கி சென்றான்.

சாருவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது...அவனின் பலகீனம் மிருணா தான் என்பது...

தங்கையை மட்டுமே பார்த்தபடி வந்தவனின் பார்வை அப்போதே அருகில் அமர்ந்திருந்த சாருவின் மேல் பட்டது. "இவளா" என மனதுக்குள் அதிர்ந்தவனின் கரம் அவனையும் அறியாமல் தன் கன்னத்தை தடவியது. அவன் செய்கையை பார்த்த சாறுவிற்கு கட்டுப்படுத்த முயன்ற சிரிப்பு அவளையும் மீறி வெளிவந்து விட்டது.

"ஹா ஹா" என கையால் வாயை மூடிக்கொண்டு சிரிக்க…. மிருணாவிற்கு அவள் ஏன் சிரிக்கிறாள் என்று தெரியாததால் கேள்வியாக பார்க்க...அதற்கு காரணம் அறிந்தவன் அவளை எரித்துவிடுவது போல் பார்த்தான்.

அவன் பார்வையில் உள்ள அனலில் தனது சிரிப்பை கட்டுப்படுத்தியவள்,அவன் பார்வையை தவிர்த்து வேறு புறம் பார்க்க தொடங்கினாள்.

அவனும் அவளை முறைத்துக் கொண்டே அவளுக்கு எதிரிலிருந்த இருக்கையில் தன் தங்கைக்கு அருகில் அமர்ந்தான்.

"என்னமா சாப்பிடச்சா இல்லை இனிமேல் தான"..?என்றவன் பின்னர் தயக்கத்துடன் எதுக்கு என்ன கூப்பிட்ட என்றான்.அவனுக்கு தெரியும் ஏன் என்று, ஆனால் எதையாவது பேசவேண்டும் என்பதற்காகவே கேட்டான்.

அவளோ அவனையே அழுத்தமாக பார்த்தாள்.தங்கையின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தவனின் தலையை நிமிர்த்தியவள் "இப்போ நீ இங்க எதுக்கு வந்த சாப்பிடவா..? எனக்கு உண்மையான பதில் வேண்டும் என்பது போல் அவள் பார்க்க...அவனோ இல்லையென தலையாட்டி "மனசு சரியில்லை அதான் கொஞ்சம்" என சொன்னவனுக்கு அதற்குமேல் சொல்ல முடியவில்லை.

அவளும் மேலும் எதையும் கேட்டு அவனை நோகடிக்க விரும்பாதவள் "இன்னைக்கு எங்களோடு தான் சாப்பிடுற" என அவன் தடுக்கும் முன்பே அவனுக்கும் சேர்த்து ஆர்டர் கொடுத்தாள்.

உணவும் வந்துவிட மூவரும் உண்ண தொடங்கினர். அவனுக்கு இப்போது இருக்கும் மனநிலையில் உணவு இறங்கவில்லை.ஆனாலும் தங்கைக்காக உணவை அளந்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

சாரு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர எதையும் பேசவில்லை. அவனோ அதன் பின் அப்படி ஒரு ஜீவன் அங்கு இருப்பதையே கண்டுகொள்ளாமல் இருந்தான்.

சற்று நேரத்தில் உதய் குடிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தங்கையிடம் விடைபெற்று கிளம்பிவிட… அதன்பின் சாரு மிருணா இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.

வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் சட்டென்று நின்றுவிட...டிரைவர் இறங்கி என்னவென்று பார்த்தவர், என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என கைகளை விரிக்க...வெளியே பார்த்த மிருணா அப்போது தான் அது எந்த இடம் என்பதை கண்டுகொண்டாள்.

"சாரு இதுதான் அப்பாவோட கட்சி ஆஃபிஸ்" என எதிரில் உள்ள கட்டடத்தை கைகாட்டி சொல்ல...அவளோ "அப்பறம் எதுக்கு உள்ளேயே உட்கார்ந்து இருக்கணும். கார் சரியாகிற வரை உள்ள வெயிட் பண்ணலாம்" என காரைவிட்டு இறங்க இருந்தவளின் கையை பிடித்தவள்….இல்லடி அப்பாக்கு இங்க எல்லாம் வருவது பிடிக்காது.நாம இங்கேயே வெயிட் பண்ணலாம் என்றவளின் பேச்சை கண்டு கொள்ளாமல் அவள் பாட்டிற்கு நடக்க தொடங்க, வேறு வழியில்லாமல் மிருணாவும் அவளை பின் தொடர்ந்தாள்.

சங்கரலிங்கம் உள்ளே கட்சி தொண்டர்களுடன் மீட்டிங்கில் இருக்க...வெளியே அவரின் அறையில் உள்ள ஜன்னல் அருகே நின்றபடி புகைப்பிடித்துக் கொண்டிருந்தான் சூர்யா பிரகாஷ்.

அறையினுள் நுழைந்த மிருணாவின் கண்கள் முதலில் கண்டது என்னவோ வானை வெறித்தபடி புகைப்பிடித்து கொண்டிருந்த சூர்யாவை தான். அவனுக்கு இந்த பழக்கம் இருப்பதே அவளுக்கு இப்போது தான் தெரிந்தது.

விழிகள் விரிய அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மிருணாவின் தோளை தொட்டு நடப்புக்கு கொண்டுவந்த சாரு…"அங்க என்ன கண்காட்சியா நடக்குது பெவென பார்த்துட்டு இருக்க..? போய் பளார்ன்னு கன்னத்தில் ரெண்டு போட்டு தூக்கி போடுறதை விட்டுட்டு கல்சிலை மாதிரி நிற்கிற" என தோழியை திட்டியவள்...அவள் அப்போதும் தயங்கியபடியே நிற்பதை பார்த்து இது வேலைக்கு ஆகாது என்றுணர்ந்து….சூர்யாவை நோக்கி முன்னேறினான் சாரு.

தன் அருகே அவள் நிற்பதை கூட அறியாமல் ஏதோ சிந்தனையில் இருந்தவனின் கையில் இருந்த சிகரெட்டை பறித்து எரிய….அவனோ கோபமாக "ஏய்" என்றவாறே அடிக்க கையை ஓங்கியவனின் கை அப்படியே அந்தரத்தில் நின்றது, அங்கு கண்களை சுருக்கி அடிக்கு பயந்து நின்ற சாருவை பார்த்து…

நொடியில் தன்னை மீட்டுக் கொண்டவன் அதே கோபத்தை முகத்தில் ஏந்தியவாறு "ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க"..? உங்களுக்கு இங்க என்ன வேலை ? என கேட்க...அதுவரை எங்கு அடித்துவிடுவானோ என பயத்தில் இருந்தவள் அவன் அடிக்காமல் அமைதியாக இருப்பதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார்.

அது ஒன்னும் இல்ல அண்ணா...கார் தீடீர்ன்னு பிராப்ளம் ஆகிடுச்சு அதான் அது சரியாக வரைக்கும் இங்க வெயிட் பண்ணாலம்னு என இழுத்தவளை கை நீட்டி தடுத்தவன் "நான் யாருக்கும் அண்ணன் கிடையாது.அப்படியிருக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் திரும்பவும் என்னை அப்படி கூப்பிடாதே என்றவன்...மொபைலை எடுத்து டிரைவருக்கு அழைத்தான்.

"உங்களால் என்னை தங்கையா ஏத்துக்க முடியாமல் இருக்கலாம் ஆனா எனக்கு நீங்க அண்ணன் தான். என்னால முறையை எல்லாம் மாற்ற முடியாது" என்றவளை பார்த்து…

என்ன சொல்றா இவள் என்பது போல் புரியாமல் பார்த்தவனை கண்டு அவளுக்கு சிரிப்பு தான் வந்தது."ரெண்டுமே இந்த விஷயத்தில் டியூப் லைட்டா தான் இருக்கும் போல... ரொம்ப கஷ்டம்" என முனகியபடியே அவனுக்கு எதிரில் நின்றாள்.

சிறிது நேரத்தில் டிரைவர் வந்துவிட...அவனிடம் ஒரு சாவியை கொடுத்து "இந்த காரை எடுத்துட்டு போய் இரண்டு பேரையும் வீட்டில் கொண்டு விடு" என்றவன் திரும்பவும் திரும்பி நின்றுக்கொண்டான்.

ஆனால் சாரு டிரைவரை பார்த்து .."அண்ணா நீங்க போங்க, நாங்க அங்கிளை பார்த்திட்டு தான் போவோம்.அதனால எங்களுக்கு குடிக்க மட்டும் கொஞ்சம் எதாவது வாங்கிட்டு வாங்க என்றவள் அங்குள்ள சோஃபாவில் அமர்ந்தாள்.

"ஏய் சாரு விளையாடாத டி, அவங்களுக்கு நம்ம இங்க இருக்கிறது பிடிக்கலை போல.. நாம வீட்டுக்கு போகலாம்.அவங்க டென்ஷன் ஆக போறாங்க"..? என தன்னவனுக்கு பிடிக்காத செயலை செய்ய பிடிக்காமல் தன் தோழியை அங்கிருந்து கிளப்ப முயற்சிக்க…. சாருவோ "நீ உன் வேலையை பாருடி..அதான் அவரை கண்ணாளனேன்னு கண்ணாலேயே காதல் பண்ணுவியே அதை கண்டீண்யூ பண்ணு. வந்துட்டா பெரிய இவளாட்டம்.. என்கிட்ட மட்டும் வாய்கிழிய பேச வேண்டியது... இதை பண்ணாத அதை பண்ணாத அப்படி இப்படின்னு ஆனா, எங்க பேசனுமோ அங்கே வாயை திறக்கிறது இல்லை.நமக்குன்னு வந்து அமையுது பார்" என தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

இதயம் முரளி கூட இவளோ அமைதியை கடைபிடித்து திருக்கமாட்டார் போல… அவரை பார்த்தாலே ஏதோ சிங்கத்தை பார்த்துவிட்டது போல் பத்தடி தள்ளி நிற்கிறா.

"இதுல இவ எப்போ அவளோட லவ்வை இவர்கிட்ட சொல்றது,அது எப்போ அவருக்கு புரியரது இதெல்லாம் நடக்கிற காரியமா"..?

இப்படியே போன இது கன்னி தீவு மாதிரி இழுத்துட்டே போகும். அதனால் இனி நாம தான் நம்ம வேலையை காட்டணும். இல்லனா கடைசிவரை ஊமைப்படம் தான் பார்க்க வேண்டியதா இருக்கும் என தனக்குள்ளேயே முணகியவாறு அமர்ந்திருந்தாள்.

மிருணாவோ அவன் முகத்தையே ஓரக்கண்ணால் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சாரு வேண்டுமென்றே… "அண்ணா..ஆ"…என சத்தமாக அழைத்து மீட்டிங் எப்போ முடியும் என கேட்க...திரும்பி அவளை ஒரு முறை முறைத்தவன் அறையை விட்டு வெளியே சென்று நின்றுக் கொண்டான்.

இதுவரை தனக்கு சொந்தம் என்று யாரும் இல்லை என தனித்து வாழந்தவனுக்கு "அண்ணா" என்ற ஒற்றை சொல் .மனதில் உறங்கிக் கொண்டிருந்த மொத்தத்தையும் கிளறி விட்டது போல் இருந்தது.

ஏனோ தீடீரென்று அண்ணா என உறவு கொள்ளும் சாருவை அவனால் தடுக்க முயன்றாலும் ஒரெடியாக தவிர்க்க முடியவில்லை. வெகுநாட்கள் ஏங்கிய ஒன்று கிடைத்தது போல் உணர்ந்தான்.ஆனால் இதுவும் தனக்கு நிலைக்க போவது இல்லை எண்ணும் போது எதற்கு இந்த ஏக்கம்.

ஏனோ மனம் தன் பழைய வாழ்க்கையும் இழந்த சந்தோஷத்தையும் மீண்டும் எதிர்ப்பார்த்து ஏங்கியது.

அது இனி ஒரு போதும் கிடைக்காது என்று தெரிந்த பின்பும் இந்த மனம் அதை மட்டுமே எதிர்பார்க்கிறது. ஏனோ மனம் வெகுநாட்கள் கழித்து மிகவும் பாரமாக உணர்ந்தது.

முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவன் மீண்டும் முகத்தில் பழைய கம்பீரத்தை கொண்டுவந்தான்.ஆனால் மீண்டும் அவர்கள் முன்பு செல்லவில்லை.

அதன்பின் சிறிது நேரத்தில் சங்கரலிங்கம் வந்துவிட… இருவரையும் பார்த்து புருவம் சுழித்தாலும் புன்னகையுடனே வரவேற்றவர், அவர்களுடன் இணைந்தே வீடுவந்து சேர்ந்தார்.

அன்றைய நாள் அவ்வாறே கழிய... மறுநாள் காலை யாருக்கும் காத்திருக்காமல் விடிந்தது.

காலையில் மிருணா அறைக்குள் நுழைந்த சாரு...அவளை பின்னால் இருந்து அணைத்தபடி "இன்னைக்கு லவ்வர்ஸ் டேயாம் செல்லகுட்டி ஐ லவ் யூ" என்க...அவளோ "அதை ஏண்டி என்கிட்ட சொல்ற என்றவளை முறைத்து பார்த்தவள் "பசங்க கிட்ட மட்டும் தான் லவ்வை சொல்லனும்னு அவசியமில்லை.நமக்கு ரொம்ப பிடிச்சவங்க யாரா இருந்தாலும் சொல்லலாம்".அதான் உன்கிட்ட முதலில் சொன்னேன்,இனிமேல் தான் உன் அண்ணன் கிட்ட சொல்லனும் என்றாள் அசால்ட்டாக.

"ஏய் நீ என்னமோ விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைத்தேன், ஆனா நீ பேசுறதை பார்த்தா அப்படி தெரியலையே"...அவன் ரொம்ப கோபக்காரன்,அவனுக்கு பிடிக்காத விஷயத்தை யாரு பண்ணாலும் அவ்ளோதான் அவங்க என அவனின் முரட்டு தனத்தை சொல்ல… அதுயெல்லாம் அவளுக்கு பெரிதாக படவில்லை.

"சரி சரி ரொம்ப பில்டப் கொடுக்காத உங்க அண்ணனுக்கு அவ்ளோ சீன் எல்லாம் இல்ல..சரியான டம்மி பீஸ்" என்றபடி அவனின் அறையை நோக்கி சென்றாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 6

அப்போதுதான் குளியலறையில் இருந்து இடுப்பில் ஒரு பூந்துவாலை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்த உதய் கண்ணாடி முன்பு நின்றபடி தலையை சிலுப்பி கொண்டிருக்க….அப்போது படார் என்று திறக்கப்பட்டது அவன் அறை கதவு.

யாரது கேட்க்காமல் இப்படி பண்ணியது என திரும்பி பார்க்க,அப்போதுதான் உள்ளே நுழைந்த சாரு அவனை பார்த்தாள்.

"அய்யய்யோ ! கடவுளே கடவுளே" என சொல்லியபடி சட்டென்று திரும்பி நின்று "சாரி…. சாரி நீங்க இப்படி ஒரு கோலத்தில் இருப்பீங்கன்னு நான் நினைக்கலை,நான் அப்பறம் வரேன்" என்றாள்.

அவனும் திட்ட நினைத்து வாய்த்திறக்க அதற்கு முன்பே அவள் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவனும் சற்று அமைதிக்காத்தான்.

திரும்பி கதவு வரை சென்றவள்,மீண்டும் அவனை நோக்கி நடையை தொடர...அவனோ கேள்வியாக அவனை பார்த்தவன் முறைக்க தொடங்கினான்.

"ஏய் மரியாதையா வெளியே போ, கொஞ்சம் கூட பேசிக் மனேர்ஸ் இல்லாம இப்படிதான் உள்ள வருவியா..? என கத்தியவன் அவசரமாக மெத்தையில் இருந்த பனியனை எடுத்து அணிந்திருந்தான்.அவனுக்கு அவள் முன் இந்த கோலத்தில் நிற்பதே ஒருவித சங்கடத்தை கொடுத்தது ஆனால் அவளோ அது எதையும் கண்டுகொள்ளாமல் அவனை நெருங்கினாள்.

"இல்ல வந்தது தான் வந்துட்டேன் அப்படியே உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிட்டு போகலாம்னு நினைச்சேன்" என்றவள் "ஆனா அதை எப்படி சொல்றதுன்னு தான் தெரியல"… என்க, அவளின் செயல் அவனுக்கு கோபத்தை அதிகப்படுத்த முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தான்.

"இன்னைக்கு லவ்வர்ஸ் டேயாம் அதான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணலாம்னு வந்தேன்'. ஆனா எனக்கு எப்படி ப்ரொபோஸ் பண்றதுன்னு தெரியலையே" என தீவிரமாக யோசித்தவள் முகத்தில் சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற முகம் தௌசன் வாட்ஸ் பல்பு போல் பிரகாசிக்க..அவனை நிமிர்ந்து பார்த்தாள்….

"என்ன உளறல் இது... மரியாதையா வெளியே போ இல்லனா பின்னாடி ரொம்ப ஃபீல் பண்ணுவ" என்றவனின் வார்த்தைக்கு கொஞ்சமும் அடங்காமல் அவனை நெருங்கியவள் "இங்க பாருங்க மிஸ்டர் உதய் ரொம்ப சீன் போடாதீங்க... ஏதோ பார்க்க கொஞ்சம் சுமாரா இருகீங்கன்னு ப்ரோபோஸ் பண்ண வந்தா ரொம்பதான் பண்றீங்க" என்றவள்..

"உதய் நான் உங்களை விரும்பலை,உன் மேல ஆசைப்படலை, நீங்க அழகா இருக்கீங்கன்னு நினைக்கலை, ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு" என அலைபாயுதே மாதவன் ஸ்டைலில் சொல்லி அவனை பார்த்து கண்ணடித்து.

நான் கூட நீ எனக்கு கொடுத்ததை திருப்பி கொடுத்து தான் ப்ரோபோஸ்
பண்ணலாம்னு இருந்தேன் பட் கொஞ்சம் டைமிங் மிஸ் ஆகிடுச்சு என்க…அவனோ அவள் கழுத்தை பிடித்து நெறித்திருந்தான்.

!என்னடி கொஞ்சம் விட்டா ரொம்பதான் பண்ற...பார்த்து முழுசா இரண்டு நாள் கூட இருக்காது அதுக்குள்ள
காதலா..? நீயெல்லாம் உண்மையிலேயே நல்ல குடும்பத்து பொண்ணு தானா" என கேட்க….அவளுக்கு மூச்சு விட முடியாமல் தொண்டை அடைத்தது.அதையும் மீறி அவனின் வார்த்தை அவளை பலமாக தாக்க…

தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவனின் கையை அகற்றியவள்... இரும்பியவாறே "அது எப்படி பசங்க நீங்க மட்டும் ஒரு பொண்ணை பார்த்தவுடன் லவ் பண்ணலாம் அவங்களுக்கு ப்ரோபோஸ் பண்ணலாம் ஆனா அதையே பொண்ணுங்க நாங்க பண்ணா அவங்க தப்பான பொண்ணுங்க,நல்ல குடும்பத்து பொண்ணுங்க இல்லை அப்படிதானே….அது எப்படி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இப்படி பேசமுடியுது உங்களால்".

"ஒரு பொண்ணை பார்த்த அன்னைக்கே நீங்க கிஸ் பண்ணலாம் அது தப்பில்லை...நான் லவ் பண்ணது மட்டும் தப்பு அப்படிதானே" என அடுக்கடுக்காய் கேள்வி மேல் கேள்வி கெட்டவள்…..

இன்னும் அவனை நெருங்கி இப்படியெல்லாம் நடந்து கொண்டதால் நான் தப்பானவள் என்றால் நான் அப்படியே இருந்துட்டு போறேன்.நீங்க ரொம்ப நலவராகவே இருங்க மிஸ்டர் உதய் என்றவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

ஏனோ அவனுக்கே தான் பேசியது கொஞ்சம் அதிகப்படி என்றே தோன்றியது.இருந்தாலும் தன் தவறை எண்ணி அவளிடம் மன்னிப்பு கேட்க அவனின் திமிரும் கர்வமும் ஒத்துக்கொள்ளவில்லை.அவள் மேலும் தவறு இருக்கே நான் மட்டும் எதுக்கு இறங்கி போகணும் என்ற எண்ணம்.

அதன்பின் காலை உணவிற்கு அழைக்க வந்த மிருணா...சாரு அமர்ந்திருக்கும் நிலையை கண்டு பதறி அவளை நெருங்கி தோளில் கை வைக்க…."என்னாச்சு டி அண்ணா ரொம்ப திட்டிட்டானா" என்றவளை பார்த்து "ஆமா அவனெல்லாம் ஒரு ஆளு, அதுக்கு நாங்க சோகமா வேற இருக்கேன் ச்சீ போ" உன் அண்ணனெல்லாம் சாமியாரா போக தான் இலாய்க்கு" என்றவள் எழுந்து கொள்ள….

"அப்போ எதுக்கு தலையில் வச்சுட்டு உட்கார்ந்து இருந்த" என்றவளின் கேள்விக்கு…இவ ஒருத்தி பதில் சொல்லாம விடமாட்டா என எண்ணியபடி "அது உங்க அண்ணனை எப்படி மடக்குறதுன்னு பிளான் போட்டுட்டு இருந்தேன்" என அசராமல் குண்டை போட்டாள்.

"அடிப்பாவி நான் கூட நீ சீரியஸா ஏதோ சொல்ல போறேன்னு நினைச்சேன்.உன்னை பத்தி தெரிஞ்சும் இப்படி கேட்டதுக்கு என்னையே நானே அடிச்சிக்கனும்" என்றவள்…

சரி அதைவிடு...காலையில் இருந்து ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட கேட்கணும்னு இருந்தேன், நைட் என்ன தாண்டி ஆச்சு..? எனக்கு ஒண்ணுமே புரியலை.ஏதோ த்ரில்லர் மூவி பார்த்த ஃபீலிங்கில் இருக்கேன்,கொஞ்சம் விளக்கமா சொல்லு என்றவளின் கை பிடித்து "வா சாப்பிட போகலாம் ரொம்ப பசிக்குது" என்றபடி சாரு முன்னே செல்ல…

"ஏய் நான் கேட்டுட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்" என்றவளை கண்டுகொள்ளாமல் "நீ கேட்கிற கேள்விக்கு பதில் கீழே வந்தால் உனக்கே தெரியும் வா" என்று முன்னே சென்றுவிட்டாள்.

மிருணாவும் வேறு வழியில்லாமல் அவளை பின்தொடர்ந்தாள்.

இருவரும் சென்று டைனிங் டேபிளில் அமர...சங்கரலிங்கமும் உதய்யும் வந்து அமர்ந்தனர்.

முதலில் சாருவே பேச்சை தொடங்கினாள் "அங்கிள் நான் இன்னைக்கு ஊருக்கு போலாம்னு இருக்கேன்" என்க... "ஏம்மா ஒரு மாசம் இருக்கேன்னு சொல்லிட்டு இப்போ தீடீன்னு உடனேயே கிளம்பினா என்னமா அர்த்தம்" என்றவரை பார்த்து…."எனக்கு பயமா இருக்கு அங்கிள். நேத்து நைட்டெல்லாம் சுத்தமா தூக்கமே இல்லை என சொல்லிக் கொண்டு இருக்க…

அப்போது உள்ளே நுழைந்தான் சூர்யா பிரகாஷ். எப்போதும் வாசல் வரை மட்டுமே வருபவன் இன்று வீட்டுக்குள் நுழைந்த திருந்தான்.

அவன் வருவதையே அதிசயமாக மிருணா பார்த்திருக்க...கண்களில் கணலோடு உதய் பார்த்திருந்தான் என்றால் சாருவோ நினைத்ததை சாதித்த சந்தோஷத்தில் இருந்தாள். 'ஹப்பா இவரை வரவைக்க எவ்ளோ வேலை பார்க்க வேண்டி இருக்கு' என நினைத்தபடி நடப்பதை வேடிக்கை பார்த்தாள்.

சங்கரலிங்கம் உள்ளே நுழைந்தவனை பார்த்து "வா சூர்யா ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசனும்.சாப்டுட்டு பேசலாம் வந்து நீயும் சாப்பிடு என்க...வேண்டாம் என தலையாட்டி வெளியே செல்ல முயல….அதற்குள் முந்திக்கொண்டு "அண்ணா அதுக்கு எதுக்கு வெளிய போகணும், நீங்க ஹாலில் உட்காருங்க அங்கிள் சாப்பிட்டு வருவாங்க என்றாள்.

அவனும் அனைவர் முன்பும் எதுவும் சொல்லாமல் சென்று அமர்ந்தான்…. அடுத்த நொடி சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை தள்ளிவிட்டு எழுந்து சென்றான் உதய்.

அவனுக்கு இப்போது சூர்யாவை விட சாரு மேல் தான் கோபம் அதிகரித்தது. "இவளுக்கு எவ்ளோ திமிர்… வெளிய போக இருந்தவனை தடுத்ததும் இல்லாமல் என்னவோ இவ வீடு மாதிரி அவனை உட்கார சொல்றா" என கோபத்தில் பல்லை கடித்தான்.

முதல்ல உன்னை இந்த வீட்டில் இருந்து துறத்துறேன் அப்புறம் அவனை பார்த்துக்கிறேன் என வன்மமாக நினைத்துக் கொண்டான்.

சூர்யாவின் அருகே அமர்ந்த சங்கரலிங்கம்…"நான் சொன்னதை பத்தி என்ன முடிவுக்கு வந்திருக்க சூர்யா" என்க...அவனோ "அதெல்லாம் சரியா வராது சார்.நான் இப்போ எப்படி இருக்கேனா அப்படியே இருக்கேன் அதுதான் எல்லாத்துக்கும் நல்லது" என்றான்.

அவனுக்கு அவர் சொல்வது போல் செய்வதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை.ஆனால் அவர் அதை புரிந்துக் கொள்ளாமல் அவனை வற்புறுத்த தொடங்கினர்.

உனக்கு இங்க எங்களோடு ஒரே வீட்டில் தங்குறது தான் பிரச்சனை என்றால் நம்ம கெஸ்ட் ஹவுஸில் தங்கிக்கோ...ஆனா நீ இப்போ இங்க இருக்கிறது தான் நல்லதுன்னு படுது என்று...முந்தைய இரவு நடந்த சம்பவத்தை எடுத்துச்சொல்ல அவன் யோசனையாக அவரை ஏற்றிட்டான்.

அவர் முழுவதையும் சொல்லி முடித்ததும் அவனின் பார்வை சட்டென்று டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த சாருவின் மேல் தான் பதிந்தது.

அவள் முகத்தை பார்த்ததும் கண்டுகொண்டான் அவள் சொன்னது அனைத்தும் பொய் என்று..? ஏன் இந்த பொய் என்று நினைத்தவனுக்கு கூட அது தன்னை இங்கு வர வைக்க செய்த திட்டம் என்பது தெரியாமல் தான் போனது.

பின்னர் சிறிது நேரம் யோசித்தவன் சரி என்ற பதிலை கொடுக்க...அவன் என்ன சொல்லுவான் என காதை கூர்மையாக வைத்து காத்திருந்த சாருவின் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தது.

"சக்ஸஸ் சக்ஸஸ்...ஆபரேஷனை கையில் எடுத்து வெறும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் வெற்றி" என இல்லாத காலரை தூக்கி கொள்ள…."என்னடி லூசு மாதிரி தனியா பேசுற" என்ற மிருணாவை பார்த்து "ஏண்டி சொல்லமாட்ட உனக்காக எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்து உன் ஆளை வீட்டுக்குள்ள வர வைத்திருக்கேன்.அதுவும் இல்லாம இனிமேல் உன் ஆளு இங்க தான் தங்க போறார்.

அதை பாராட்டி கிஃப்ட் கொடுக்கலனாலும் பரவாயில்ல...ஆனா இப்படி லூசுன்னு சொல்றதை தான் என்னால தாங்க முடியலை" என்றாள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.

சாரு என்னடி சொல்ற...நீ சொல்றதெல்லாம் உண்மையா இனிமேல் அவர் இங்கதான் இருக்க போராறா என மகிழ்ச்சியில் கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் துளிர்க்க….'ஏய் லூசு என்ன லூசுன்னு சொல்லிட்டு நீயேன் இப்போ லூசு மாதிரி அழற...சந்தோஷமா சிரி செல்லகுட்டி என தோழியின் கன்னம் கிள்ள...அவளும் தன் முத்துபற்க்கள் தெரிய மெல்ல புன்னகைத்தாள்.

இதுவரை தன் காதல் நிறைவேறாத தூரத்தில் இருப்பது போல் உணர்ந்தவள்,இனி அது தன் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் துள்ளியது அவளின் மனம். ஆனால் அவனின் மனமோ அதற்கு எதிர்மாறாக நினைத்துக் கொண்டிருந்தது.
 
Status
Not open for further replies.
Top