ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நின்னை சரணடைந்தேன் மன்னவா - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
நின்னை சரணடைந்தேன் மன்னவா


அத்தியாயம் - 1

தன் எதிரில் தலைகுனிந்து கைகளை பிசைந்து கொண்டு நின்றிருக்கும் தன் ஆட்களை திட்டி தீர்த்து கொண்டிருந்தார் எதிர்க்கட்சி தலைவர் வீர பாண்டியன்.

"நீங்க எல்லாம் எதுக்குடா மாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்க..? சொன்ன காரியத்தை ஒழுங்காக முடிக்க முடியலை வந்துட்டானுங்க.., அவனவன் தலைமுடியை எடுத்து வர சொன்னால் தலையையே வெட்டி எடுத்திட்டு வரானுங்க ? ஆனா நீங்க தலைமுடியை தொட கூட முடியாமல் வந்து நிற்குறீங்க..? "எல்லாம் என்னை சொல்லனும்' உங்களை எல்லாம் வைத்து கொண்டு அரசியல் செய்கிறேன் இல்ல..அதான் இந்த நிலைமையில் இருக்கேன்" என தன்னையே நொந்து கொண்டு அமர்ந்திருந்தார்.

அது எப்படிடா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் "அவனை தாண்டி எதுவும் செய்ய முடியலை" என்று சொல்வீங்க..? "அவனும் உங்களை மாதிரி தானே, அவனுடைய ஒரு பார்வைக்கே அலறி அடித்து ஒடிவரீங்க..அவனை பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று"..? என அவனை பற்றி பெருமையாக சொன்னாலும், அவனை பற்றி நினைக்க நினைக்க மனம் கோபத்தில் கொதித்தது.

இருக்காதா பின்ன...எம்.பி யாக இருந்த அவரை, முன்னாள் எம். பி யாக மாற்றிய மொத்த பெருமையும் அவனை தானே சாரும்.எப்போது அவன் அந்த சங்கரலிங்கத்துடன் இணைந்தானோ அப்போதிருந்து அவர்களுக்கு ஏறுமுகம் இவருக்கு இறங்குமுகம் அல்லவா ! எப்படி அவரால் கோபப்படாமல் இருக்க முடியும்.

அதுவும் அவ்வளவு மக்கள் செல்வாக்கோடு இருந்த அவரை ஒரே நாளில் அனைத்தையும் தலைகீழாக மாற்றி...அதுவரை மக்கள் எதிர்த்து கொண்டிருந்த சங்கரலிங்கத்தை ஒரேநாளில் ஹீரோ போல சித்தரித்தவன் ஆயிற்றே ! அவனை மீறி எதுவும் செய்ய முடியாத இயலாமையில் கைகளை கட்டி கொண்டு இருக்கும் நிலைமையை அறவே வெறுத்தார்.

வீர பாண்டியனுக்கு அவனை எப்படியாவது தன் கட்சியோடு இணைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது..ஆனால் "அதனை செயல்படுத்த'.. ஏன் அவர் சொல்வதை கேட்க கூட அவன் முன் வரவில்லை" என்பது இன்னும் அவரின் கோபத்தை அதிகரித்தது. எத்தனையோ முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்த போதிலும் அவன் அதனை கொஞ்சமும் சட்டை செய்யாது தவிர்த்து விட்டான்.

அனைத்தையும் நினைத்துக்கொண்டு அமர்ந்திருக்க ...அப்போது அலுவலகத்தில் நுழைந்தான் அவரின் மகன் ஜெகன்நாதன். கட்சியின் அடுத்த தலைமுறை தலைவன், அவரின் அரசியல் வாரிசு.எப்படியாவது வர இருக்கும் தேர்தலில் அவனை போட்டியிட வைத்து, ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதே அவரின் ஒரே கனவு. இழந்த அனைத்து மரியாதையையும் மகன் மூலமாக பெற்றுவிடலாம் என கனவுகளை வளர்த்து கொண்டிருந்தார்.

அதற்கு பெரும் தடையாய் இருப்பது அவன் ஒருவனே ( பில்ட்டப் எல்லாம் ஓவரா இருக்கே...யாரு அவன் )

"அப்பா தேவையில்லாமல் கவலை படுறீங்க,அவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும் கேட்ட மாட்டேன் என்கிறீர்கள்" என கோபமாக இரைந்தான் ஜெகன்.

டேய் ! அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதே..இப்போ அனைவரின் பார்வையும் உன்மேல் தான் இருக்கும். இப்போ உன்னால் ஏதாவது சிறு தவறோ,பாதிப்போ ஏற்ப்பட்டால் அது உன் அரசியல் வாழ்க்கையே கேள்வி குறி ஆக்கிவிடும். அதனால் கொஞ்சம் அமைதியாக இரு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என மகனை சமாதான படுத்தியவர், அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கினார்.

அதேநேரம் இங்கே சங்கரலிங்கத்தின் அலுவலகத்தில் அன்றைய நாளுக்கான அலுவல்களையும் முக்கியமான கூட்டங்களை பற்றியும் தங்கள் கட்சி தொண்டர்களுடன் விவாதித்து கொண்டிருந்தார் சங்கரலிங்கம்.

அவருமே தொண்டர்களின் முகத்தையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவனின் வருகையை எதிர்பார்த்து…

அவன் தான் இவரின் வலது கை, இடது கை, பி.ஏ , அரசியல் ஆலோசகர், அடியாள்,பாடி கார்ட் என எல்லாமே...அவனில்லாமல் ஒரு அணுவும் அசையாது அவருக்கு. தன் குடும்பத்தினர்க்கு அடுத்து அவரை நெருங்க கூடிய ஒரே நபர் அவன் மட்டுமே…

இப்படி அனைவரின் சிந்தையிலும் ஓடிக்கொண்டிருக்கும் அவன்…

தன் எதிரில் கோபத்தில் தன்னை எரித்துவிடுவது போல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவரை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்... அசால்ட்டாக கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு விழிகளாலேயே அவர் முன்பிருந்த காகிதத்தை சுட்டிக் காட்டினான்.

அவரோ மீண்டும் தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு "இங்க பார் தம்பி, இது எனக்கு இருக்கிற ஒரே சொத்து...இதை வைத்துதான் என் பொண்ணு கல்யாணத்தை நடத்தனும்.இதுவும் இல்லையென்றால் நாங்க குடும்பத்தோடு சாக வேண்டியது தான்" என அப்போதாவது மனதை மாற்றிக் கொள்ள மாட்டானா ? என்ற நற்பாசையில் கெஞ்ச தொடங்க...அவனோ கொஞ்சமும் இரக்கம் என்பது இல்லாமல், தன் நிலையில் இருந்து கொஞ்சமும் இறங்காமல் பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளை நுழைத்துக் கொண்டு...அங்கு மாட்டப்பட்ட அவரின் குடும்ப படத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் நின்றுக் கொண்டிருந்த நிலையே அவன் தன் முடிவில் இருந்து மாற மாட்டான் என்பதை அவருக்கு எடுத்துரைக்க...மீண்டும் ஆத்திரமாக "இந்த பாவம் எல்லாம் உன்னை சும்மா விடாது டா'..நான் வயிறேரிந்து சாபம் விடுறேன், நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டாய், நாசமாக தான் போவாய்" என கத்த...அவனோ கையெழுத்து போட்டதுக்கு அப்பறம் சாபத்தை கண்டினியூ பண்ணலாம்.இப்போ முதலில் சைனை போடு. எனக்கு நிறைய வேலை இருக்கு என எதுவும் நடவாதது போல் சொல்ல,அப்போதும் அவர் அமைதியாக இருந்தார். தன் மகளின் எதிர்காலம் அதில் இருக்கிறது அல்லவா ! அதனால் அவரால் இவனின் மிரட்டலுக்கு உடனடியாக பணிந்து போக முடியவில்லை.

இவனுக்கோ அவரின் உறுதி இன்னும் கோபத்தை கிளப்ப..தன் அருகில் நின்றிருந்தவனை ஓங்கி அறைந்திருந்தான்."ஏண்டா இதுக்கெல்லாம் என்னை எதுக்கு கூப்டீங்க ?" முடியாதுன்னு சொன்னால் குடும்பத்தை தூக்க வேண்டியது தானே ...அதைவிட்டுட்டு கெஞ்சிட்டு என்னையும் கூப்பிட்டு பஞ்சாயத்து வேற" என எரிச்சலாக மொழிந்தவன் அவர் புறம் திரும்ப... "குடும்பத்தை தூக்குவேன்" என்ற சொல்லிலேயே அதிர்ந்து விழித்தவர், வேறு வழியில்லாமல் கையெழுத்து போட்டார்.

வந்த வேலை முடிந்தவுடன் அந்த காகித கோப்புகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவன் ஒரு நிமிடம் திரும்பி பார்த்து…"இப்போ உங்க சாபத்தை கண்டின்யூ பண்ணுங்க, நான் தடுக்க மாட்டேன்" ஏனென்றால் "எனக்கும் இந்த பூமியில் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை, அட்லீஸ்ட் உங்க வார்த்தையாவது பலிக்கட்டும்" என சொன்னவன் தன் காரில் ஏறி அலுவலகம் நோக்கி சென்றான்.

அவரோ ' இவன் எல்லாம் மனிதன் தானா ' என்பது போல் வெறுப்பான பார்வையை அவன் போகும் திசையில் செலுத்தியவர்க்கு அடுத்து என்ன செய்வது என்பது சுத்தமாக தெரியவில்லை. அவர்களை இவரால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதும் நன்றாக தெரியும்...நிச்சயம் முடிந்த நிலையில் கல்யாணத்தை எப்படி நிறுத்தமுடியும் அதுவும் பணத்தை காரணம் காட்டி...கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய நிலைத்தை இப்படி மிரட்டி வாங்கி செல்வார்கள் என்று கனவா கண்டார்.

"விழலுக்கு இறைத்த நீர் போல" தன் உழைப்பு வேறு எவனோ ஒருவனுக்கு பயன்படுவதை யாரால் ஏற்க முடியும். இழப்பவனுக்கு மட்டுமே அந்த இழப்பின் வலி தெரியும்.வலி மனம் முழுவதும் வலி மட்டுமே...இனி என்ன செய்வது என புரியாமல் விழி பிதுங்கி நின்றார் அந்த நடுத்தர குடும்பத்தின் தலைவர்.

காரில் தன் கன்னத்தை பிடித்துக்கொண்டு எதற்கு இந்த பிரச்சனையில் என்னை அடித்தான்.இவனும் என்னை மாதிரி சம்பளம் வாங்கும் வேலைக்காரன் தானே, எல்லாம் நம்ம தலைவர் கொடுக்கும் இடம் என மனதுக்குள்ளேயே திட்டி கொண்டிருந்தான் அந்த அடிவாங்கிய அல்லக்கை. அவனால் அதனை வெளியே சொல்லிவிட முடியாது,அப்படியே சொன்னால் அடுத்த நிமிடம் உயிரோடு இருப்பதே கேள்விக்குறி தான் என்பது நன்றாகவே தெரிந்திருந்தால் அமைதியாக பல்லை கடித்து கொண்டு இருந்தான்.

இப்போது கூட அசால்ட்டாக ஒரு கொலையை செய்து முடித்துவிட்டு வந்தவனை தான், வரவழைத்து இருந்தனர் இந்த பிரச்சனைக்காக...அப்படி பட்டவனை எதிர்ப்பது என்பது முட்டாள்தனமான செயல் அல்லவா..? அதனால் வேறுவழி இல்லாமல் 'வெளியே சொல்ல நினைத்ததை மனதுக்குள் சொல்லியபடி' அவனை தாளித்துக் கொண்டிருந்தான் அந்த அடியாள்.

அடித்தவனோ ரிவர் வியூ கண்ணாடி வழியாக கன்னத்தில் கை தாங்கி அமர்ந்திருந்தவனை பார்த்தவாறே "மனசுக்குள்ள திட்டினது போதும்,நானும் வேலைக்காரன் தான். நான் ஒன்றும் முதலாளி என்று சொல்லவில்லை…அந்த வேலையை நீயே முடித்திருந்தால், ஏன் என்னிடம் அடி வாங்க போகிறாய் ? உன்னால் எனக்கு எத்தனை வேலை தாமதமாகி இருக்கு தெரியுமா..? என்றவன் "இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு இறங்குடா" இருக்குற கோபத்தில் இந்த கன்னத்திலும் அடிவாங்காதே என்றபடி கீழே இறங்கினான் சூரிய பிரகாஷ்.

இவனை பக்கத்தில் வைத்துக் கொண்டு மனதில் கூட எதையும் நினைக்க முடியவில்லை கடவுளே என திரும்பவும் மைண்ட் வாய்சில் நினைக்க… அவன் திரும்பி பார்த்த பார்வையில் ஒரு நொடி அரண்டு விழித்தவன்,அங்கேயே நின்றால் மீண்டும் அடிக்கவும் தயங்க மாட்டான் என கருதி, அவனை முந்திக்கொண்டு அலுவலகத்தினுள் நுழைந்தான்.

சூரிய பிரகாஷ்.. நிற பாண்ட் மற்றும் வெள்ளை நிற முழுக்கை சட்டையை லேசாக மடித்து விட்டபடி... ஆறடிக்கு மேலான உயரம் அதற்கேற்ற முறுக்கேறிய தேகம், தீட்சண்யமான விழிகள். பெயருக்கேற்றார் போல் அந்த சூரியனின் உக்கிரம் நிறைந்த அனல் தெறிக்கும் பார்வை, எதிரில் இருப்பவரை நிச்சயம் ஒரு நிமிடம் பயம் கொள்ள வைக்கும்.

எனக்கு சிரிக்கவே தெரியாது என சொல்ல துடிக்கும் அழுத்தமான இதழ்கள். அவன் சிரித்து யாருமே இதுவரை பார்த்ததில்லை.கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் வரும். அதுவும் சங்கரலிங்கம் தவிர வேற யாருக்கும் அதுவும் கிடையாது.அவனிடம் கனிவையோ இரக்கத்தையோ எதிர்ப்பார்க்க முடியாத இரும்பு மனிதன். கட்சியின் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தொண்டன் என்பதை விட கட்சியின் அசைக்க முடியாத தூண்.அவனில்லையேன்றால் இந்த கட்சி இந்நேரம் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

உள்ளே நுழைந்தவனை பார்த்த பின்பு தான் சங்கரலிங்கத்திற்கு உயிரே வந்தது. அவன் முகத்தில் இருந்த அமைதியே போன காரியம் வெற்றியடைந்ததை உணர்த்த, அதுவரை மனதின் ஓரத்தில் இருந்த படப்படப்பு அடங்கி.. தான் ஒரு எம்.பி என்பதையும் மறந்து தனது இருக்கையில் இருந்து எழுந்து அவனை அணைத்துக் கொண்டார். அவனோ எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அமைதியாக தனது தலையாசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான்.

"உன்கிட்ட ஒரு காரியத்தை கொடுத்தால் அதை முடிக்காமல் விடமாட்டாய் என்பது எனக்கு தெரியும்".ஆனால் "அதையும் மீறி இந்த விஷயத்தில் சின்ன பயம் இருந்துட்டே இருந்தது, அதையும் நீ ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டாய்" என ஒரேடியாக புகழ்ந்து தள்ள...சுற்றி இருந்த அனைவருக்கும் காதில் புகை வந்தது.அதுவும் கட்சியில் பெரிய பதவியில் இருக்கும் அனைவருக்கும் அவன்மேல் தானாக ஒரு வெறுப்பும் முளைத்தது.

தன் கையில் உள்ள நில ஆக்கிரமிப்பு பத்திரத்தையும் அவரிடம் நீட்ட… "இதையும் நீ தான் செய்தாயா" என்பது போல் பார்த்துவிட்டு, திரும்பி தனது ஆட்களை இளக்காரமாக பார்த்தார். "உங்ககிட்ட கொடுத்த ஒரு வேளையாவது உருப்படியா முடிச்சிருக்கீங்களா..? உங்களுக்கு எல்லாம் எதுக்கு வெட்டிய சம்பளம் கொடுக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை" என கத்த தொடங்கினார்.அவர்களுக்கு தங்களை திட்டியதை காட்டிலும் சூரிய பிரகாஷை பராட்டியதை தான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

" என்னமோ இந்தியாக்காக கோல்டு மெடல் வாங்கிட்டு வந்தது போல் இவனுக்கெல்லம் பாராட்டு ஒன்று தான் கேடு… பண்ணியது கொலை,அதற்கான குற்ற உணர்ச்சியோ, பயமோ எதுவும் இல்லாமல் திமிராக வேறு நடந்து கொள்கிறான்" என அடிவாங்கியவன் முதல் அங்கு அலுவலக அறையில் உள்ள மூத்த தொண்டர்கள் வரை..அது ஒன்றையே மனதில் நினைத்துக்கொண்டு வெளியே சொல்லாமல் நின்றிருந்தனர்.

பின்னர் சற்று நேரத்தில் அன்றைய முக்கியமான சட்டமன்ற கூட்டத்திற்கு அவனுடன் கிளம்பி சென்றுவிட்டார். கட்சி சம்பந்தமாக எங்கே சென்றாலும் அவன் இல்லாமல் செல்ல மாட்டார்.

கூட்டம் நடைபெறும் இடத்திற்க்கு சென்று இறங்க..அதேநேரம் வீர பாண்டியனும் தன் மகனுடன் வந்து இறங்கினார்.

அவர்களை பார்த்து நக்கலாக சிரித்த சங்கரலிங்கம் "இதுக்கு பேர் தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என பெரியவர்கள் சொல்லி இருக்காங்க" இனி மேலாவது என் வழியில் தலையிடாமல் இருப்பீங்க என்று நினைக்கிறேன்."அதையும் மீறி ஏதாவது முயற்சி செய்தால் சேதாரம் உங்களுக்கு தான் எனக்கில்லை" என்றவர் படிகளில் ஏறியபடி அரங்கம் நோக்கி சென்றார்.

வீர பாண்டியனும் தன்னை தானே நொந்து கொண்டு கூட்டம் நடக்கும் இடத்திற்க்கு நடையை செலுத்தினார்.

அதன்பின் அங்கே தனித்து விட பட்டது என்னவோ ஜெகனும் சூரியாவும் தான்.

ஜெகனுக்கோ அவனை பார்க்க பார்க்க கொல்லும் வெறியே எழுந்தாலும்..அதனை முகத்திலோ செயலிலோ காட்டாமல் அமைதியாகவே இருந்தான். பதவி கிடைக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு. அதுவும் இன்று எல்லை மீறி கொலை செய்யும் அளவுக்கு துணிந்தவனை நெருங்க பயமும் தடுத்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

பதவி கைக்கு வந்த பிறகு " முதல் வேலையே அவனை தீர்த்துக் கட்டுவது தான்" என்ற உறுதியுடன் அவன் பார்வைக்கு எதிர்ப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகன். சூரியாவோ "அவனை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் இளக்காரமான பார்வையை மட்டுமே செலுத்தினான்.அதில் கொஞ்சமும் கோபமோ பழி உணர்ச்சியோ இல்லை". ஆனால் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற உறுதி மட்டும் இருந்தது.

மாலை அனைத்து அலுவல்களையும் முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.அப்போது தான் தனது காரில் இருந்து இறங்கிய மகனை சலிப்பாக பார்த்த சங்கரலிங்கம்.

ஏண்டா ! "கொஞ்சம் கூட ஒரு பொறுப்பே இல்லாமல் இருக்க, எனக்கு அப்பறம் நீதாண்டா இந்த கட்சிக்கு தலைவர்". நமக்கு செல்வாக்கு இருக்கும் போதே அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இப்போதே நீ எலக்ஷனில் நின்றால் யாராலும் உன்னை ஜெயிக்க முடியாது. நாளைக்கு நிலைமை எப்படி இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. அதனால், நான் உயிரோடு இருக்கும் போதே உன்னை பதவியில் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார் .

அவனோ ' தன் தந்தை சொல்வதை கொஞ்சமும் காதில் வாங்காமல் தன் கேர்ள் பிரெண்டோடு வீடியோ சாட்டிங்கில் இருந்தவன் "பாய் பேபி சீ யூ லேட்டர்" இங்க ஒரே டிஸ்டர்பன்ஸ் என சொன்னவன்.... அவர் பேசி முடித்தவுடன் நிமிர்ந்து பார்த்தான்.

"என்னை என் இஷ்டத்திற்கு கொஞ்சம் ஜாலியாக இருக்க விடுங்கள் ' என்னால் உங்களை போல் எல்லாம் அரசியல், கட்சி என்று வெட்டியாக நேரத்தை கடக்க முடியாது.அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் "முதலில் எனக்கு அறிவுரை சொல்வதை நிறுத்துங்கள் நான் ஒன்றும் இன்னும் சின்ன பிள்ளையில்லை".

"கண்டவேலைக்காரன் முன்னாடி என்னை திட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" . அதையும் மீறி இன்னொரு முறை இப்படி நடந்துகொண்டால் "உங்களை அப்பா என்று கூட பார்க்க மாட்டேன்". உங்க மரியாதையை நீங்க காப்பாற்றி கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் என கொஞ்சமும் மரியாதை என்பதே இல்லாமல் சொன்னவன்...

"அதேபோல் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமும் எனக்கில்லை. இங்க சில பேருடைய ஹீரோயிசத்தை பார்த்து நிறைய பேர் மிரண்டு இருக்கலாம். ஆனால்,நான் அதற்கெல்லாம் மிரளும் ரகம் இல்லை என்பதையும் சேர்த்து மறக்காமல் சொல்லிடுங்க" என அழுத்தமாக அங்கே நின்று கொண்டிருந்த சூரிய பிரகாஷை பார்த்து கூறினான்.

சூரிய பிரகாஷோ அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல்,காதில் சுட்டு விரலை நுழைத்து ஆட்டியவாரே அவனை பார்த்து நக்கலாக உதட்டை சுழிக்க..அதில் இன்னும் ஆத்திரம் அடைந்தவன் கை முஷ்டிகள் இறுக்கி காற்றில் ஓங்கி குத்திவிட்டு வேகமாக வீட்டினுள் நுழைந்திருந்தான் உதய் கிருஷ்ணன் . சங்கரலிங்கத்தின் மூத்த மகன்.

அதன்பின் சங்கரலிங்கம் " அவன் பேசுவதை எதையும் கண்டுகொள்ளாதே' ஏதோ தெரியாமல் உலறுகிறான்" என வருத்தம் தெரிவிக்க...அவனும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அவரிடம் விடைப்பெற்று தன் வீட்டை நோக்கி சென்றான் சூரிய பிரகாஷ்.
 

Anjali

Well-known member
Wonderland writer
சூரிய பிரகாஷ் முப்பது வயது நிரம்பிய வாலிபன்..சொந்தம் என சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. வளர்ந்தது எல்லாம் அனாதை ஆஸ்ரமத்தில் தான். தனது இருபத்தி நான்காவது வயதில் அரசியல் மேல் கொண்டுள்ள ஈரப்பினால் சங்கரலிங்கத்திடம் வந்து சேர்ந்தான். அதன் பின்னர் அவனின் ஆலோசனைகளின் படி கட்சி முன்னேற ..சங்கரலிங்கம் வெற்றியும் அடைந்தார்.அதன்பின் அவனின் குரலே ஓங்கி ஒலித்தது அவரின் ஆட்சியில்.

தன் வீட்டின் உள்ளே நுழைந்த சூர்யாவை வெறுமையான வீடே வரவேற்றது. ஆனால் அதுயெல்லாம் அவனை சற்றும் வருத்தவில்லை.

சிறு வயதிலிருந்தே தனிமையில் இருந்ததால் அவனுக்கு
இந்த தனிமை பிடித்த ஒன்றாய்,அவனுக்கு துணையான நண்பனாய் மாறிவிட்டது.

அவனுக்கு எல்லாரையும் போல் இயல்பான ஒரு வாழ்க்கை வாழ முடியுமா ! என்பதே கேள்விக்குறி தான்.அப்படிப்பட்ட அதிசய பிறவி.

நேரம் கடக்க, இரவு உணவை கூட உண்ண பிடிக்காமல் மெத்தையில் விழுந்தவனின் விழிகளில் தூக்கம் தான் வந்த பாடில்லை.அப்படியே விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவன் விழிகள் ஒரு கட்டத்திற்கு மேல் தானாக மூடிக்கொண்டது. இதுதான் தினசரி நடப்பதும் கூட..இமைகள் சோர்வுரும் வரை எதையாவது வெறித்துக்கொண்டே படுத்திருந்துவிட்டு எப்போது உறங்கினோம் என்பதே தெரியாமல் உறங்கி... ஒவ்வொரு விடியலும் விடிகிறது இவனுக்கு மட்டும்.

இங்கே சங்கரலிங்கம் இரவு உணவு உண்ண சாப்பாடு மேஜைக்கு வந்தவர் தன் மகனுக்காக காத்திருக்க...அவனோ அறையில் இருந்து கையில் மது பாட்டிலோடு வந்தவன்,தன் தந்தைக்கு எதிரில் அமர்ந்தான்.

வந்தவன் அவரை நிமிர்ந்து பார்க்காமல் கொஞ்சமாக உணவை கொறித்துவிட்டு...தண்ணீருக்கு பதில் மதுவையே வாயில் கவிழ்த்தவன், சிறிய தல்லாட்டலோடு அவனின் அறைக்குள் நுழைந்திருந்தான்.

இதனை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சங்கரலிங்கத்தின் மனம் வலித்தது.தன்னை ஒரு சக மனிதனாக கூட கண்டுகொள்ளாமல் இருக்கும் மகனிடம் பாசத்தை எதிர்ப்பார்த்து தினம் தினம் தோற்பதே இவரின் வழக்கம் ஆகிவிட்டது.வாழ்க்கையில் பல தோல்விகளை கடந்து வந்தவரால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் பதிவிக்காக எத்தனையோ பாதகமான காரியங்களை செய்திருந்தாலும் அவரின் பிள்ளைகள் மீது உயிரையே வைத்திருந்தார்.ஆனால் அதனை அவன் புரிந்துக் கொள்ளாமல் நடந்து கொள்வது அவருக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது.

அவனின் எதிர்காலத்தை நினைத்து வருந்த மட்டுமே அவரால் இப்போது முடிந்தது. அரசியலில் நுழைந்த பின் தாயில்லா பிள்ளைகளை ஒழுங்காக கவனிக்க முடியாமல் போனதால் வந்த வினை என்றே நினைத்தார்.

ஆனால் அதுமட்டுமில்லாமல் வேறு ஒரு காரணமும் இருப்பது அவருக்கு தெரியவில்லை பாவம்.தெரிய வரும் போது….?
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 2

காலைநேரம் ஒன்பது மணியை கடந்திருக்க...கண்ணாடி ஜன்னல் வழியே வெயில் சுள்ளென்று முகத்தில் விழுவதை கூட கண்டுகொள்ளாமல் தனது தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள் சாருலதா.

"சாரு எழுந்திரு….மணி ஒன்பது ஆகிடுச்சு ' இன்னும் என்ன தூக்கம்... நிறைய வேலை இருக்கு டா'... எழுந்திரு பிளீஸ்" என கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவளின் தோழி மிருணாளினி.

தன் தூக்கம் பறிப்போவதை எண்ணி கடுப்பானவள்.. மிரு..ரு "வந்தனா உன்னை அப்படியே கொலை பண்ணிடுவேன். அதான் தியரி, பிரக்டிகல் வைவா என எல்லா எக்ஸாமும் முடிஞ்சிடுச்சே... இன்னும் ஏண்டி இவ்ளோ சீக்கிரம் எழுப்புற..? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க விடுடி" என நழுவி இருந்த போர்வையை இழுத்து தன்னை முழுமையாக வெயிலில் இருந்து மறைத்துக் கொண்டு, "அப்படியே போகும் போது அந்த ஜன்னல் ஸ்கிரீனை இழுத்துவிட்டுட்டு போ" என்று சொல்லிக்கொண்டே விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள் சாரு.

இவளோடு மல்லுக்கட்ட முடியாமல்…"இவளை எழுப்பி எழுப்பியே நான் டயர்ட் ஆகிடுவேன் போல, சரியான கும்பகரணி" என தோழியை செல்லமாக கோபித்து கொண்டவள்...காய வைத்த துணிகளை எல்லாம் மடித்து வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

காலை உணவுக்கு சிம்பிளாக தோசையும் கார சட்னியும் செய்யலாம் என முடிவு செய்து ஃப்ரிட்ஜில் இருந்து மாவை வெளியே எடுத்து வைத்தவள், சட்னியை தயார் செய்தாள். அதுவும் சாருலாதவிற்கு பிடித்த முறையில்...அவளுக்கு அவளின் அம்மா செய்வது போல் காய்ந்த மிளகாய்,பூண்டு,தக்காளி என அனைத்தையும் எண்ணெயில் வதக்கி அதன் பின் அரைத்து தாளிக்கும் சட்னி என்றால் உயிரையே கொடுப்பாள். அப்படி செய்யும் நாட்களில் நான்கு ஐந்து தோசைகள் வாய்க்குள் போகும்.இன்னும் இரண்டு நாட்களில் பிரிந்து செல்ல இருப்பதால் அவளுக்கு பிடித்ததை பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள் மிருணாளினி.

சாருவிற்கு ஏதோ சாபிட்டோம் போனோம் என்றெல்லாம் இருக்க கூடாது.ஒவ்வொரு வாய் உணவையும் ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும். சாப்பிடுவதில் மட்டும் இல்லை... வாழ்க்கையையும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கும் ரகம். தான் செய்யும் அனைத்து செயல்களிலும் ஒரு த்ரில் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கும் நவநாகரீக யுவதி.

அதற்கு அப்படியே எதிர்மறை நம்ம மிருணாளினி.அவளுக்கு தன்னை காட்டிலும் தன்னை சார்ந்தவர்களின் மகிழ்ச்சியே பெரியது. அனைத்திற்கும் தன் குடும்பத்தாரை எதிர்ப்பார்க்கும்,அவர்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சராசரி பெண்.எப்போதும் எதிலும் ஒரு அமைதியும் தெளிவும்,நேர்த்தியும் இருக்கும்.

"அவள் ஊமையில்லை நன்றாக பேச முடியும்" என்பதை அறியவே சாருவிற்கு சிறிது காலம் தேவைப்பட்டது என்றால் பாருங்கள்….அந்தளவுக்கு அமைதி, யாரோடும் வெகு சீக்கிரத்தில் பேசவோ பழகவோ மாட்டாள். ஆனால் வாய்வழி வார்த்தைகளாய் வெளிப்படுத்தாத அனைத்தையும் அவள் கண்கள் காட்டி கொடுத்துவிடும்.அவளின் அனைத்து உணர்வுகளையும் படம் பிடித்து காட்டும் அழகான காந்த விழிகள்.அவள் முகத்திற்கு மேலும் அழகை கூட்டக் காட்டியது.

அதன் பின் தன் தோழியின் அலப்பறைகளை எண்ணி சிரித்தபடி வேலையை முடித்தவள் சாப்பிடும் போது சூடாக தோசை வார்த்து கொள்ளலாம் என எண்ணி மீண்டும் அவளை எழுப்பும் சவாலான வேலைக்கு சென்றாள்.

இப்போதும் அவள் சென்ற போது இருந்த நிலையில் இருந்து கொஞ்சமும் மாறாமல் உறங்கிக் கொண்டிருப்பவள் அருகே சென்று அமர்ந்தாள் மிருணா.

"சாரு எழுத்துரு டா...இன்னும் இரண்டு நாளில் கிளம்பனும் இன்னும் பேக்கிங் தொடங்கவே இல்லை, நிறைய வாங்க வேண்டியது இருக்கு... இன்னைக்கே ஷாப்பிங் போனால் தான் நாளைக்கு பேக்கிங் பண்ண சரியாக இருக்கும்" என குழந்தைக்கு சொல்வது போல் சொல்லிக் கொண்டே எழுப்ப...அவளும் பாவம் பார்த்து எழுந்து அமர்ந்தாள்.

கைகளை தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்தவள்…"உன்னை கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்,என்ன பாவம் பண்ணானோ ! நிம்மதியா தூங்க கூட விடமாட்டாரா ராட்சசி" என்றபடி தலையணையை தூக்கி எறிந்தாள்.

அவளோ சிரித்தபடி அதனை பிடித்தவள்,காலையிலேயே உன் அரட்டையை ஆரம்பிக்காதே,போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா என்க...அவளோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு "கண்டிப்பா குளிக்கணுமா" என குளிக்க அடம்பிடிக்கும் சிறுபிள்ளை போல் கேட்க…"கண்டிப்பா குளித்தால் தான் காலையில் சாப்பாடு" இல்லைன்னா பட்னி தான். இன்னைக்கு தோசையும் கார சட்னியும் தான் மார்னிங் டிஃபன். நீயே முடிவு பண்ணிக்கோ வேணுமா வேண்டாமா ? என சொல்லிவிட்டு ஹாலில் டிவியை போட்டுவிட்டு அமர்ந்து கொண்டாள்.

சாருவும் வேறு வழியில்லாமல் குளிக்க சென்றாள்.நமக்கு எல்லாத்தையும் விட சாப்பாடு தான் முக்கியம் என எண்ணியவாறு…

அவளும் அதன்பின் அனைத்து காலை கடன்களையும் துரிதமாக முடித்துவிட்டு ஹாலுக்கு வர...அவள் முன் காஃபி கப்பை நீட்டினாள் மிருணா.காபியை வாங்கி ஒவ்வொரு சிப் க்கும்.. ம்ம்... ஆஹா... என ரசித்து குடிப்பவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவள்..அவளை கோபப்படுத்த விரும்பாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். "ஒரு காஃபிக்கே இவளோ ரியாக்ஷனா"...என்ற தோழியை முறைத்தவள் "என்ன பத்தி என்ன வேணா சொல்லு... என் காஃபியை பத்தி ஏதாவது சொன்ன அவ்வளவுதான். உனக்கென்ன தெரியும் காஃபியோட அருமையை பத்தி...போய் கேட்டு பாரு காஃபி பிரியர்கள்கிட்ட கதை கதையாய் சொல்வாங்க..? என தன் சண்டையை தொடங்க...

எப்படியோ சற்று நேரத்தில் சண்டையை முடித்துக்கொண்டு ... மிருணா தோசை சுட,அங்குள்ள சமையல் மேடையில் அமர்ந்துகொண்டு சாப்பிட்டு கொண்டே அவளுக்கும் ஊட்டி கொண்டிருந்தாள் சாரு.

மிரு "உனக்கு அப்படியே எங்க அம்மாவோட கைப்பக்குவம்"... "அதுவும் இந்த லண்டன் மாநகரத்தில் இவளோ டேஸ்டா, தினமும் நம்ம ஊர் சாப்பாடு சாப்பிடும் ஒரே ஜீவன் நான் தான்". அதுக்கு மொத்த காரணமும் என் செல்ல குட்டி தான் என அவளின் கண்ணம் கில்லி முத்தம் கொடுக்க...

ஏய் வாலு ! இங்க பாரு சாப்பிட்டு இருந்த கையோடு என்ன வேலை பார்த்து இருக்க என கன்னத்தை காட்ட...அப்போது தான் ஆர்வ கோளாறில் சாப்பிட்டு இருந்த கையோடு அவள் கன்னம் கில்லியது புரித்தது.

செல்ல குட்டி ! "வெட்கப்பட்டால் தானே கன்னம் சிவக்கும்' உனக்கு மட்டும் எப்படி பேசும்போதே சிவந்திருக்கு..யாரை நினைச்சு கன்னம் சிவக்குது" என்றவளை பார்த்து "ஏண்டி பண்றதையும் பண்ணிட்டு இப்போ கலாய்கிறியா"..? என தோசை கரண்டியோடு துரத்த தொடங்கினாள்.

ஒருவாறு தங்களின் சண்டையை முடித்து கொண்டு சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் கிளம்பி சென்றார்கள்.

மிருணாளினி சாருலதா இருவரும் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு தங்களின் மேற்படிப்பிற்காக லண்டன் வந்தவர்கள்.

முதல் நாள் வகுப்பிலேயே சாருவிற்கு மிருணாவை மிகவும் பிடித்துவிட...அதுவும் இருவரும் தமிழ் , முன்பின் அறியாத ஊரில் அது ஒன்றே போதுமானதாக இருந்தது பழகிக் கொள்ள….

அப்படி ஆரம்பித்தது தான் இந்த நட்பு..கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆக...அமைதியாக இருக்கும் நிருவுக்கு கூட சாருவின் அடாவடிகள் ரொம்ப பிடிக்க தொடங்கியது.

அதுவரை இருவரும் தனியாக பிளாட் ரென்ட்க்கு எடுத்து தங்கியிருக்க,முதலில் சாரு தான் தன் பிளாட்டை காலி செய்துவிட்டு நிருவுடன் வந்து தங்கிவிட்டாள்.

அன்று ஆரம்பித்த இவர்களின் நட்பிற்கு இன்றோடு மூன்று வயது முடிந்துவிட்டது.
இதுவரை சின்ன சின்ன செல்ல சண்டைகளை தவிர இருவருக்கும் பெரிதாக சண்டை என்ற ஒன்று வந்ததே இல்லை. அந்த அளவிற்கு இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து வைத்து கொண்டுள்ளனர்.

யார் சொன்னது ஆண்களின் நட்பு தான் உயர்ந்தது நீடித்து நிற்க கூடியது ...பெண்களின் நட்பு கல்யாணத்திற்கு பின்பு கண்ணுக்கு தெரியாத தூரத்திற்கு சென்று விடும் என்று..?

சொல்ல போனால் பெண்களின் நட்பு ஆண்களை காட்டிலும் மிகவும் உணர்வு பூர்வமானது . "நட்பு நிலைக்க இருவரும் பேசிக் கொள்ளவோ பார்த்துக் கொள்ளவோ தேவையில்லை' மனதால் நினைத்தால் போதும்".

அப்படி பார்த்து கொண்டால், பேசிக் கொண்டால் மட்டும் தான் நட்பு நீடிக்கும் என்றால் அது நட்பே இல்லை. அப்படி பார்த்தால் ஆண்களின் நட்பை விட பெண்களின் நட்பு ஒன்றும் குறைந்தது கிடையாது.

என்றைக்காவது தீடீரென்று எதிர்பாராமல் பார்த்துக்கொள்ளும் போது...நீ... என சரியாக தன் தோழமையை அடையாளம் காணும் போது வெளிப்படும் அன்பிற்கு ஈடு இணையே இல்லை.

அனைத்து பெண்களும் கல்யாணத்திற்கு பின் நிகழும் அனைத்து சம்பவங்களிலும் தன் நட்பை நினைவு கூறுவார்ள்...ஏனென்றால் அப்பா அம்மாவிடம் கூட தங்களின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதவர்கள்..தன் நண்பர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள்.

தங்களுக்குள் தோன்றும் முதல் காதலில் தொடங்கி எப்படிப்பட்ட வாழ்க்கை துணை வேண்டும் என்பதை கூட முதலில் தங்கள் தோழிகளுடன் தான் பகிர்ந்துக் கொள்வார்கள்.

பம்பரம்போல் சுழன்று கொண்டிருக்கும் வேலைக்கு நடுவிலும் "இப்போ அவ எங்க இருப்பா..? என்ன பண்ணிட்டு இருப்பா..? என நினைத்துக் கொண்டிருக்கும் நட்பிற்கு முன் எதுவும் நிற்க முடியாது.

அப்படிப்பட்ட நட்பு தான் இந்த இருவரிடமும்...ஒருவருக்கொருவர் உயிரை கேட்டாலும் தர கூடிய அளவுக்கு உணதமானது.

அனைத்து பொருட்களையும் வாங்கி முடித்தவர்கள் கடைசியாக ஒரு துணி கைக்குள் நுழைந்தனர்.வீட்டில் உள்ளவர்களுக்கு வாங்க..? "இங்க நான் வாங்கினா மட்டும் என் வீட்டில் போட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க..? "அடிபோடி ! எங்க கிராமத்தில் பொம்பளை பிள்ளைங்க ஜீன்ஸ் போட கூடாதுன்னு எழுதப்படாத சட்டம்".அதை பண்ணாதே இதை பண்ணாதே என ஆயிரத்தெட்டு ருல்ஸ் அதுவும் எல்லாமே பெண்களுக்கு தான்.

அப்படிபட்ட ஊரை சாமளிச்சு நான் லண்டன் வந்ததே பெரிய விஷயம்.அதனால நீ உன் அப்பாக்கும் அண்ணாவுக்கும் எடு. நான் எங்க ஊரில் அவங்களை கடைக்கு அழைச்சிட்டு போய் வாங்கி தந்துக்குறேன்".அப்போ தான் அவங்களும் சந்தோஷபடுவாங்க என தன் குடும்பத்தை பற்றி அறிந்தவளாக மிருவுக்கு மட்டும் செலக்ட் பண்ண உதவினாள்.

அண்ணனுக்கு அப்பாவிற்கு என்று எடுத்து முடித்தவள் மீண்டும் யாருக்கோ ஷர்ட் எடுத்து கொண்டிருக்க...அதுவும் அண்ணனுக்கும் அப்பாவிற்கு கூட அதிக நேரம் யோசிக்காமல் உடனேயே எடுத்தவள்...இப்போது எதை எடுப்பது என தெரியாமல் திணறி கொண்டிருந்தாள்.

ஒரு சட்டையை எடுப்பதும்,தனக்கு தானே தலையை ஆட்டி மறுப்பதும் என ஒரு மணி நேரத்தை வெட்டியாக கடத்தியிருந்தாள்.இதுவரை அவளை அப்படி ஒரு குழப்பத்தோடு பார்த்தே இல்லை.

என்னவாக இருக்கும் என்ற கேள்வியுடன் அவள் அருகில் சென்றவள் "ஏய் யாருக்கு டி இவ்வளவு நேரமா செலக்ட் பண்ணிட்டு இருக்க" என்க...அவளோ முதல் முறை என்ன பதில் சொல்வது என தெரியாமல் தன் தோழியின் முகம் பார்ப்பதை தவிர்த்து…"யாருக்கும் இல்லையே" என சமாளிக்க முயன்றாள்.

இல்லையே உன் கண்ணுல்ல கள்ளத்தனம் தெரியுதே...மரியாதையா சொல்ல போறியா இல்லையா..? என்கிட்ட எதையோ மறைக்கிற என கோபம் கொள்ள..அவளோ "சச்ச... அப்படில்லாம் இல்லடி, அது நான் அப்பறம் சொல்றேன் வா டைம் ஆகிடுச்சு" என அப்போதைக்கு சமாளித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள். அதன்பின் சாருவும் அதைபற்றி கேட்க மறந்தே போனாள்

ஆல்ரெடி வெளியே உணவை முடித்துவிட்டு வந்ததால் இருவரும் ஒரு குட்டி தூக்கம் தூங்கி எழுந்து தன் பேக்கிங் வேலையை தொடங்கினர்.

இரவு சமையல் மிரு செய்ய... சாரு உதவி செய்து கொண்டிருந்தாள். நீ எப்போதான் சமையல் கத்துப்ப… கல்யாணத்திற்கு அப்பறம் வாழ போற வீட்டில் என்ன காரணம் சொல்வ..? என அக்கறையோடு கேட்டவளை பார்த்து.." நான் ஏன் சமையல் கத்துக்கணும்.நானெல்லாம் நல்ல சமையல் தெரிஞ்ச பையனை தான் கட்டிப்பேன். அதனால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என கூலாக சொல்ல…

"இதெல்லாம் கேட்க நல்லா தான் இருக்கும் ஆனா நடைமுறைக்கு சாத்தியமே இல்லை" அதனால ஒழுங்கா ஊர்க்கு போனவுடன் அம்மாவோடு சேர்ந்து சமையல் கத்துக்கோ" என அறிவுரையை எடுத்துவிட...அவளோ காதை மூடிக்கொண்டு "போதும்டி யம்மா... காதுல இருந்து இரத்தம் தான் வரல அதையும் வர வைத்திடாதே..? என கிண்டல் செய்தாள்.

" ஒருவேளை போன ஜென்மத்தில் எனக்கு மாமியாரா இருந்திருப்பன்னு நினைக்கிறேன். "நாண் ஸ்டாப் அட்வைஸ் கொடுத்து கொல்ற"... என்றவளை முறைத்துக் விட்டு "நான் இனிமே எதுவும் சொல்லலை போ'... ரொம்ப தான் கிண்டல் பண்ற" என முகம் தூக்க…" செல்ல குட்டி உனக்கு கோபமெல்லம் வருமா சொல்லவே இல்ல" என மீண்டும் கலாய்க்க...தானாக முகம் சிரிப்பை தத்தெடுத்தது மிருணாளினிக்கு. "உன்னை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா..? என தெரியலை. சரியான அராத்து என மனம் விட்டு சிரித்தாள்.

அன்றைய நாள்
செல்ல சண்டையில் தொடங்கி செல்ல சண்டையில் முடிவடைந்தது.

மறுநாள் காலையிலும் அதுவே தொடர்கதை ஆக...மதியம் உணவை முடித்துவிட்டு சோஃபாவில் அமர்ந்திருந்த மிருணாவின் மடியில் தலையை வைத்து படுத்துக் கொண்டாள் சாரு.

"ஏய் என்னம்மா...என்னாச்சு..? தலை வலிக்குதா"..? என மென்மையாக மடியில் இருந்த அவளின் நெற்றியை பிடித்துவிட...அவள் கையை பிடித்து தடுத்தவள், "இதுதான் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்க போற கடைசி நாள் இல்ல" என இதுவரை சிரிப்பை தவிர எதையும் பார்த்திராத முகத்தில் முதன்முறை கண்ணீரை பார்த்து மிருவுக்கும் கண்கள் கலங்கியது.

"ஏய் லூசு மாதிரி அழுவாதே"...இப்போ என்ன நடந்துடுச்சு..நான் என்ன வேற்று கிரகத்திற்க்கா போறேன்.நைட் கிளம்பினா காலையில் பார்க்க போறோம்.அதுவுமில்லாமல் "நம்மகிட்ட ஃபோன் இருக்கு அதுல தான் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என நிறைய இருக்கே... எல்லாமே நமக்காக உருவாக்கியது தான்.. அதில் தினமும் சாட் பண்ணலாம், வீடியோ கால் பேசலாம்" என சமாதானம் படுத்த… அவளோ "ஃபோன்ல இப்படி உன் மடியில் படுத்து டிவி பார்க்க முடியுமா..? இல்ல உன் கையால் சமைத்து தான் தர முடியுமா..? முடியாது தானே, அப்பறம் என்ன..? என எந்த பதிலுக்கும் பிடி கொடுக்காமல் மௌனமாக விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

இவளுக்கும் அதே நினைவு தான் மனதை வருத்தி கொண்டிருந்தது . எல்லாருமே முதன் முறை படிப்பிற்காக குடும்பத்தை பிரிந்து வரும்போது அழுவதை விட... கல்லூரி முடிந்து செல்லும் போது அழுவதே அதிகம்.அதுதான் நட்புக்கான பவர்.

இருவருமே தங்களின் பிரிவை எண்ணி கவலையில் மூழ்கி இருக்க..முதலில் தந்நிலைக்கு வந்த சாரு... "ஹேய் ! என கூச்சலிட்டு எழுந்து அமர்ந்தவள்.. ஒரு சூப்பர் ஐடியா" என்க மிருணாவும் ஆர்வமாக "என்னடி என்ன ஐடியா..? என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

அது ! "நான் இப்படியே உங்க வீட்டுக்கு வரேன்... உன் கூட கொஞ்ச நாள் இருந்து சென்னையை சுற்றி பார்த்திட்டு...அப்பறம் எங்க ஊருக்கு போலாம். நீயும் என் கூட என் ஊருக்கு வரணும் என்க...இவளோ "போடி லூசு, நான் கூட வேற எதுவோ சொல்ல போற என நினைச்சேன்" என வருத்தம் தெரிவிக்க…

என் ஐடியாக்கு என்ன குறை ? "அங்க போனவுடன் வேலைக்கு போற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை, அட்லீஸ்ட் ஒரு ரெண்டு மாதமாவது வீட்டில் ரெஸ்ட் எடுத்துட்டு தான் அடுத்த வேலை" .அதான் சொல்றேன் அட்லீஸ்ட் இன்னும் ரெண்டு மாசம் சேர்ந்து இருக்கலாமே…"செல்லகுட்டி ஓகே சொல்லுடி" என கெஞ்ச தொடங்க...அவளோ அப்பா கிட்ட கேட்கணுமே.? என இழுக்க..நான் என்ன எங்க அப்பாகிட்ட கேட்டா சொன்னேன்.இப்போ என்ன உங்க அப்பா பெர்மிஷன் வேணும் அதுதானே... அதை நான் பார்த்துக்கிறேன். அங்கிள் கிட்ட நான் பெர்மிஷன் கேக்குறேன். டீலா நோ டீலா என கைநீட்டி கேட்க...இவளும் சிரித்துக் கொண்டே டீல் என அவள் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டாள்.

தற்காலிகமாக அவர்களின் பிரிவு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் அதுவரை இருந்த கலக்கம் விலகி பழையபடி மகிழ்ச்சியாக இருந்தனர் இருவரும்.
 

Anjali

Well-known member
Wonderland writer
மறுநாள் என்றும் இல்லாமல் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் சங்கரலிங்கம். படிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்ற அவரின் மகள் இன்று படிப்பை முடித்துக்கொண்டு திரும்பி வருகிறாள்.

விமானநிலையம் செல்ல தயாராகி வெளியே வந்தவர் முன்... எங்கோ வெளியே செல்ல கார் சாவியோடு செல்லும் மகனை தடுத்து நிறுத்தினார் சங்கரலிங்கம்.

உதயா "இன்னைக்கு எங்கேயும் போக வேண்டாம்'.. எந்த வேலையா இருந்தாலும் அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு ஏர்போர்ட் வா " இன்னைக்கு பாப்பா லண்டனில் இருந்து வரா அது தெரியுமா தெரியாதா..? என கேட்க...அப்போது வாசலில் காரோடு வந்து நின்றான் சூரிய பிரகாஷ்.

"நீங்க சொல்லி தான் எனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நானும் இப்போ ஏர்போர்ட் தான் போறேன்" என்றவன் முன்னேறி செல்ல...ஒரே இடத்திற்கு எதுக்கு ரெண்டு கார் நீயும் இதே காரில் வா... நாம சேர்ந்தே போகலாம் என அழைத்தார்.

திரும்பி இருவரையும் தீப்பார்வை பார்த்தவன், பதில் எதுவும் சொல்லாமல் தனது காரில் ஏறினான். அவரும் ஒரு பெருமூச்சை எடுத்துவிட்டவர் காரில் ஏறினார்.

இருவரின் காரும் விமானநிலையம் நோக்கி பறந்துக் கொண்டிருந்தது. சூரிய பிரகாஷ் காரை பார்க் பண்ண சென்றுவிட… விமான நிலையத்தினுள் நுழைந்தார் சங்கரலிங்கம் .

இன்னும் விமானம் தரையிறங்க வில்லை என்ற அறிவிப்பினால் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து காத்திருந்தார். இதுவரை எத்தனையோ பேர் சாதாரண மக்களில் தொடங்கி பெரிய தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் என அனைவரும் அவருக்காக காத்திருக்க கண்டவர், இன்று தன் மகளுக்காக காத்திருப்பதில் ஒரு சுகத்தை உணர்ந்தார். அதுவும் தன் மகளை பார்த்தே மூன்று ஆண்டுகள் கடந்திருக்க ஒருவித ஆர்வத்தோடு அமர்ந்திருந்தார்.

உதயாவோ சற்று தள்ளி ஒரு இருக்கையில் அமர்ந்து மொபைல் ஃபோனை நோண்டி கொண்டிருந்தான்.

சூரியா "கடமையே கண்ணாக சுற்றியும் தன் பார்வையை செலுத்தியபடி, எம் பி யின் பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு செயல்ப்பட்டான்.

சற்று நேரத்தில் விமானம் தரையிறங்க அனைத்து பார்மாலிட்டிசும் முடித்துவிட்டு தங்களின் பயண பொதிகளை தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர் மிருணாளினி, சாருலதா இருவரும்.

தன் மகளை பார்த்தவுடன் கண்கள் தானாக கலங்க...அவளும் ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டார். " ஐ மிஸ் யூ சோ மச் ப்பா...மிஸ் யூ சோ மச்" எப்படி இருக்கீங்க ? உடம்பெல்லாம் நால்லா இருக்கா..? மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுறீங்களா..? என கேள்வியாய் கேட்டு அவரை பதில் சொல்ல விடாமல் திணறடித்தாள் அவரின் செல்ல மகள்.

ஒவ்வொரு கேள்வியாக கேளுடா..? என் பொண்ணுக்கு இப்படி படபடன்னு பேச தெரியுமா என எனக்கே சந்தேகமா இருக்கு என்றவர்...அவள் தலை வருடி அப்பா நல்லா இருக்கேண்டா ! நீ தான் ரொம்ப இளைத்தமாதிரி இருக்க என அக்கறையாக கேட்க அவளும் தந்தைக்கு பதில் சொல்லியப்படி தன் தோழியை தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

இப்போவாது நான் உன் கண்ணுக்கு தெரிந்தேனே...அப்பாவை பார்த்தவுடன் என்னை கழட்டி விட்டுட்ட இல்ல உன்னை அப்பறம் கவனிச்சிக்கிறேன்" என்றவள்….சங்கரலிங்கத்திடம் திரும்பி தனது பேச்சை தொடங்கினாள்.

அதுவரை தள்ளி நின்று அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த உதயா, மிருணா அருகில் வர...அண்ணா இவ்வளவு நேரம் நீ இருப்பதையே பார்க்கலையே…நீ வரலைன்னு நினைத்தேன் என தன் அண்ணனிடம் ஒட்டிக்கொண்டாள். அவளுக்கு அண்ணன் என்றால் உயிர்...அவனுக்கும் இந்த உலகத்தில் பிடித்த ஒரே நபர் யார் என்றால் அது அவன் தங்கை மிருணாளினி தான்.

மணி ஆகிடுச்சு...மற்றதை எல்லாம் வீட்டில் போய் பேசிக்கலாம் வாங்க போகலாம் என அவர் முன்னே செல்ல….மற்ற அனைவரும் பின்னால் சென்றனர்.

தந்தை முன்னே சென்றவுடன் மிருணாவின் பார்வை கள்ளத்தனமாக சூரியாவை நோட்டம் விட...பேசிக்கொண்டு வந்தவள் திடீரென்று அமைதியாகி விட்டதால் நிமிர்ந்து பார்த்த சாரு.. "யாரை இப்படி பார்க்கிறாள்" என அவள் பார்வை சென்ற திசையை பார்க்க...அங்கு யாரையும் கண்டுகொள்ளாமல் சங்கரலிங்கத்தின் பின் செல்லும் சூரியாவே தெரிந்தான்.

இந்த பார்வையை இதுக்கு முன்னாடி இவகிட்ட பார்த்திருக்கேனே..எங்கே எப்போது என யோசித்தவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது துணிக்கடையில் நடந்த சம்பவம். "அவள் எடுத்த ஷர்ட் இவனுக்கு பொருந்துமா என மனக்கண்ணில் நினைத்து பார்க்க...கச்சிதமாக பொருந்தியது. அப்போ இவர் தான் நம்ம செல்ல குட்டியோட ஆளு என கண்டுக் கொண்டவள்...அவனிடம் பேச்சுக் கொடுத்து பார்ப்போம் என எண்ணி...நடையை எட்டி போட்டு அவனை நெருங்கியவள்…"ஹாய் பாஸ்" எப்படி இருக்கீங்க ? என்க, ஒரு நொடி திரும்பி அவளை அழுத்தமாக பார்த்தவன் எதுவும் சொல்லாமல் தனது நடையை தொடர்ந்தான்.

"அய்யோட ! ரொம்ப தான் சரியான சீன் பார்ட்டியா இருக்கும் போல" என எண்ணிக்கொண்டு தோழியின் புறம் திரும்ப...அவளோ பதட்டத்தோடு "என்னடி கேட்ட.. கோபமா முறைச்சிட்டு போறார்" என கேட்டவளை பார்த்து.. "ஆங் சொரைக்காய்க்கு உப்பு இருக்கா என்று கேட்டேன்" என கடுப்புடன் சொல்லியவள், மறுபக்கம் திரும்ப அங்கே ரோபோ போல் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தான் உதயா.

"ஹைட்டை பார்.. பனைமரத்தில் பாதி இருக்கும் போல... வளர்ந்து கெட்டவன். சிரிச்சா வாயிலிருந்து முத்து கொட்டிடும் போல" என நினைத்தவாறு சம்பிரதாயத்திற்காக ஒரு ஹாய் சொல்ல….முன்பு சென்றவனாவது திரும்பி பார்த்தான் இவனோ அதை கூட செய்யாமல் நடையை தொடர்ந்தான்.

"செம்ம நோஸ் கட் சாருவிற்கு" …"இருடா என்னையா கண்டுக்காமல் போற.. உன்னை கதறவிடலை என் பேரு சாருலதா இல்லை" என சபதம் எடுத்தவள் முறைப்போடு அவர்களைப் பின் தொடர்ந்தாள்.
 
Status
Not open for further replies.
Top