Twist 21 போட்டி
கதை விமர்சனம்
கதை எண்: 19 - நிந்தன் காதல் தித்திக்குதே
நாயகன் - அர்ஜூன்
நாயகி - தாரா
அர்ஜூன் - அழகன். மருத்தவ துறையில் இருப்பவன். ஆனால் குணமோ சிறிது அழுத்தம் நிறைந்தது. எண்ணங்களுக்கு ஏற்ப சிறிது மனநிலையில் இருப்பவன். கோபம் - அன்பு - உரிமை - பொறாமை என மாறி மாறி வலம் வருபவன். உடையவளுக்கு அழகான காதல் கணவன்.
தாரா - அழகிய மனம் படைத்தவள். சுட்டித்தனம் நிறைந்தவள். தோழனுக்கு ஏற்ற தோழியாவாள்.உடையவனுக்கு அழகிய காதல் மனைவி.
அழகான காதல் கதை. ?
யதார்த்தமான வாழ்வில் சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் திருமண பந்தம்…?
வாழ்வெங்கும் வர கூடிய இனிய உறவின் அழகிய பந்தம்…?
இரு வேறு குணங்கள் படைத்த இருவர் தங்கள் வாழ்வில் இணைகிறார்கள்..?
இணைந்தவர்கள் தங்கள் மனதின் உணர்வுகளை வெளிகாட்டது
எளிமையாய் வாழ…?
நாட்கள் செல்ல,
நட்பை பார்த்து உறவின் உரிமை உணர்வு வெளி வர…
அவ்உரிமை உணர்வோ சில நேரங்களில் பொறாமை கொள்ள செய்ய…?
பொறாமையும் அழகு தான் போல…
அப்பொறாமை மனதை திறக்க செய்ய…?
திறந்த மனம் பல இனிய உணர்வுகளை பரிசளிக்க…?
அழகிய காதல் கலாட்டாக்கள் அரங்கேற..
சுவாரஸ்ய அன்பில் பல சுவாரஸ்யங்கள் ஒன்று சேர…?
எல்லா இனிமை நேரத்தில் சோதனை என்று வருமே அதே போல் இங்கும் வந்தது…?
வந்த சோதனையில் யார் வென்றனர் யார் தோற்றனர் என்பது கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…?
குடும்பத்தின் அன்பு, காதல், பாசம், விட்டு கொடுத்தல், கேலி, கிண்டல்கள், நகைச்சுவை என இருக்கும் அழகிய காதல் கதை.??
அழகிய கதையை தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.??
நிந்தன் காதல் தித்திக்குதே…
நித்தமும் நம் கனவுகளில் நாம் இருக்க…
நிஜத்திலும் நாமே இருக்க…
நமது அன்பின் உறவால் நித்தமும் நம் காதல் நம்மை தித்திக்கே செய்து நம்மை மகிழ்வில் ஆழ்த்துகிறதே எனது நாயக(கி)னே(யே)...❣❣
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்…??
அன்புடன்
ஸ்ரீராஜ்