ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூது செல்லாயோ தூவானமே கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
eiRVBMH89176.jpg
அறிமுகம்


வானம் கருத்து இருந்தது, இடியும், மின்னலும் நீயா ,நானா என போட்டி போட்டுக் கொண்டிருந்தது. உங்களுக்கு நான் என்ன சலைத்தவனா என்று காற்றின் நடனமும் அங்கு அரங்கேறியது.

இவை அனைத்தையும் சமாதானப்படுத்த மழையானது பொழிந்து மண்ணை குளிர்வித்துக் கொண்டிருந்த தருணம்.

மழையின் சத்தத்துடனே"ஆ !அம்மா!ஆ!
வலிக்குதே!ஆ! "என்ற கர்பிணி பெண்ணின் அலறல் சத்தம் விண்ணை கிழித்தது.

"இருமா , கொஞ்சம் பொறுமா, இதோ ஹாஸ்பிட்டல், வந்துட்டோம், இதோ இப்போ கொழந்த பொறந்திடும் என் ராசாத்தி " என மயிலம்மா அமைதி படுத்திக் கொண்டிருந்தாள்.

"அம்மா !முடியல மா! " என கர்பிணி மறுபடியும் வலியில் துடித்தாள்.

"ஆங், பேஷன்ட் பேரு என்னமா" நர்ஸ் மேரி அவசரப்படுத்த,

" அது ..... அது வந்து டாக்டர் ரேவதி அம்மாவோட......" என மயிலம்மா வார்த்தைகளை தேடினார்.

" ஓ ! மேடம் ரேவதியோட பேஷன்ட் ஆ.... சரி சரி" என அந்த நர்ஸ் அந்த பெண்ணை பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றாள் .

மருத்துவர் ரேவதிக்கும் தகவல் தந்து ,அவரும் வந்துவிட்டார்.

மீண்டும், மீண்டும் அந்த பெண் பிரசவ வழியில் துடிக்க, மருத்துவரும் மருத்துவம் பார்க்க.

வீல் ....... என்ற அலறல் உடன் குழந்தை பிறந்தது. மருத்துவர் மகிழ்ச்சி யுடன் அதை மயிலம்மாவிடம் தெரிவிக்க.
மயிலம்மாவோ "டாக்டர் அம்மா என் பொண்ணு எப்படி இருக்கு" என்ற மயிலம்மா வார்த்தையில் ஒரு வித பதட்டம் தெரிந்தது .

"ஆங், அவங்க நல்லா இருக்காங்க...என்ன மயிலம்மா ,பொண்ணு மேல ரொம்ப பாசம் போல என பேசிக்கொண்டிருக்கும்போதே நர்ஸ் வெளியே வர "நீங்க போய் அவங்கள பார்க்கலாம் " என மருத்துவர் அவ்விடம் இருந்து சென்றுவிட்டார்.

நாட்கள் மூன்றாக ஓடியது , அந்த பெண் பிறந்த அந்த பிஞ்சுவின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு "அம்மாவிற்கு வேற வழி தெரியலடா ,அம்மா வை மன்னிச்சிருடா என கண்களில் கண்ணீர் படற ,யாருக்கும் தெரியாமல் குழந்தையை விட்டு விட்டு மருத்துவமனையில் இருந்து கிளம்பினாள்.

"மலேசியா செல்லும் விமானம்,ஒரு சிறிய
வானிலை பிரச்சனையின் காரணமாக அரைமணி நேரம் தாமதமாக கிளம்பும்" என்ற ஏர்போர்ட்டின் அறிவிப்பில் யாரும் தன்னை கண்டுபிடித்து விடுவார்களோ என அச்சத்தில் அமர்ந்து இருந்தாள், அந்த பெண்.

நிலைமை சரியாகி, விமானத்திற்கு அனைவரும் கிளம்பினர்.

விமானத்தின் ஜன்னல் வழியாக அந்த டெல்லியை பார்க்கிறாள்.

விமானம் சிறு அறிவிப்புகளுடன் கிளம்பியது.

"இனி யாராலும், என்னை கண்டுபிடிக்க முடியாது" என தனக்குள்ளே சொல்லி கொண்டாள்.

"உங்க பெயர் என்ன?" என்று விமானப்பணிப்பெண் அழைக்கவும் , தன்னிலை வந்தவள்.

"மிதிலா"

என் பெயர் "மிதிலா". என்றதுடன் விமானம் வானில் பறந்து, அவ்விடம் விட்டு மறைந்தது.

யார் இந்த மிதிலா?

உலகம் அறியா அந்த சிறு ஜீவனை விட்டு எதற்கு பிரிந்தாள்?

யார் அவளை தேடுகிறார்கள்"

அதனை இந்த தூது செல்லாயோ தூவானம்
உங்கள்களுக்கு தூது சொல்லும்.
 
Last edited:

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம்🌧 -1

"கடவுள் உள்ளமே கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன்
அருளை பாருங்கள்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமின்றி யாரும் இல்லை " என்ற பாடலுடன் ஆரம்பிக்கிறது அன்றைய நாள் அந்த கருணை இல்லத்தில்.
பல நூறு கணக்கான குழந்தைகள், சிறுசும், பெருசுமாக இருந்தனர் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில்.
சில குழந்தைகள் பெரியவர்களாகி ,தன் வாழ்க்கை யை பார்க்க சென்று விட்டனர்.
ஆம் இங்கு 18 வயது பூர்த்தியாகி விட்டாள், தங்கள் வாழ்க்கையை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும்.

ஒரு நாள், அந்த நாள் ஒரு 8 வயது ஆண் குழந்தை , காவல்துறையினரால் ஆதரவற்ற இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டது.
வேதவல்லி காப்பகத்தின் பொறுப்பாளர் , அங்கு இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், காப்பகத்தில் இருந்து வெளியே சென்றவர்களுக்கும் வளர்ப்புத் தாய்.

"மேடம், உள்ளே வரலாமா"

"ஆங் வாங்க" -வேதவல்லி

"மேடம் என்பெயர் எஸ் ஐ ராமசாமி, இந்தாங்க மேடம் கோர்ட் ஆர்டர்" என ஒரு கடிதத்தை அந்த அம்மாவின் முன் நீட்டினார்.

அமைதியாக கடிதத்தை வாசித்து கொண்டிருந்தார் வேதவல்லி.

"மேடம் இந்த குழந்தை " என ராமசாமி பேச்சை எடுக்கும் முன்.அந்த குழந்தையையே உற்று பார்த்து கொண்டிருந்தார் அம்மா வேதவல்லி.
பால் போன்ற முகத்தில் அங்கங்கே சிறிது காயங்கள் இருந்தது, அவன் முகத்தில் சிரிப்பு என்பதை அறியா வெற்றிடம் போல் இருந்தது.
தனது கைகளை மெல்ல அசைத்து அவனை அழைத்தார். அவனும் மெல்ல வேதவல்லியிடம் செல்ல

"உன் பெயர் என்னடா செல்லம்" என கேட்க, அவனோ சிறிது பயம்கலந்த குரலோடு "விக்ரம் ஆன்டி" என கூற அப்படி ஒரு மழலை குரல்.

"சரி, நீங்க இனி இங்கு தான் இருக்கப்போறீங்க , நீங்க என் கூட இருக்கீங்களா உங்களுக்கு சம்மதமா" என வேதவல்லி அந்த பிஞ்சு முகத்தை பார்த்து அவன் தலை வருடியபடி கேட்க.

"ஓகே ஆன்டி, ஜட்ஜ் அங்கில் ஏற்கனவே சொன்னாங்க,என் மம்மியும் டேடியும் சாமிகிட்ட போயிட்டாங்க அதனால நான் இங்கு தான் இருக்கும்னு . அதனால் எனக்கு நோ பிராபளம், ஆனா என் வீட்டில் இருந்து என்னோட டாய்ஸ் மட்டும் எடுத்து கொடுக்க சொல்லிருக்கேன் வந்தவுடன் அத மட்டும் எனக்கு கொடுத்துடுங்க ப்ளீஸ் ஆண்டி" என மிக தெளிவாகவும், இனிமையாகவும் பேசும் அவனையே கண்கொட்டாமல் கண்ணில் ஈரத்துடன் பார்த்தார் விதியை எண்ணி.

"மேடம்..... என மறுபடியும் ராமசாமி பேச்சை ஆரம்பிக்க.
"கொஞ்சம் பொறுங்க சார் " என அவரை தடுத்து நிறுத்தி, "மலர் கொடி இங்கே வா" என தனது உதவியாளரை அழைத்து விக்ரமை கூட்டி செல்லச்சொன்னார்.

"ஆங், இப்போ சொல்லுங்க சார், எந்த தலை போற விஷயம் ஆனாலும் நான் குழந்தைங்க முன்னாடி எதுவும் பேசமாட்டேன். அவங்க மனதளவில் பாதிக்கப்படுவதும், குழம்புவதையும் ,நான் விரும்பல , இப்போ சொல்லுங்க சார்" என வேதவல்லி கூற

"அது வந்து மேடம், இந்த பையன் வசதியான வீட்டு பையன் , இரண்டு நாள் முன் தான் இவனது பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்ததாக தகவல் வந்தது. அந்த விபத்து இயற்கையாக நடந்ததா? இல்லை சொத்திற்காக செயற்கையாக நடத்தப்பட்டதா என நாங்க விசாரிச்சுட்டு இருக்கோம், இவனை தேடி ஒரு கூட்டமே வந்தது, ஆனா கேஸ் முடியுற வரை இவனை இந்த காப்பத்தில் ஒப்படைக்க சொல்லி கோர்ட் ஆர்டர் கொடுத்து இருக்கு மேடம், இந்த கேஸ் முடியுற வரை இந்த பையன தேடி யார் வந்தாலும் இவனை பார்க்க அனுமதிக்க கூடாது என உங்க கிட்ட தனிப்பட்டு கமிஷனர் சொல்லசொன்னார் மேடம் மத்த டீடெயில் எல்லாம் அந்த கடிதத்தில் இருக்கு மேடம் "என்றார் ராமசாமி .

"சரிங்க பையன் இனி என் பொறுப்பு, நீங்க போயிட்டு வாங்க" என கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பி வைத்தார் , வேதவல்லி.

விக்ரம் , மிகவும் குறும்பு தனமான பையன், அவன் பேசும் போது யாருக்கும் ஒரு குழந்தை பேசுவதுபோல் தெரியாது.ஏதோ ஒரு பெரியமனிதன் போல் பேசுவான், இந்த சிறு வயதிலேயே ஆங்கிலம் மிக சரளமாக பேசுவான். அவன் தோற்றம், அவனது நடைவுடை அனைத்தும் மற்ற காப்பக குழந்தைகளிலிருந்து அவனை வேறுபடுத்தியே காட்டும்.
வேதவல்லிக்கு காப்பகத்தில் உள்ள அனைத்தும் தனது குழந்தை தான், அதிலும் இந்த விக்ரம் அவன் துடுக்குதனத்தில் அவரிடம் மிக அதிகமாக நெருங்கி விட்டான்.
இப்படியே ஒரு மாதம் சென்றது.
-----------------------------------------
அழகான குட்டி ஏஞ்சல் போல் வெள்ளை நிற ஆடை அணிந்து பூ போல் , தன் அன்னையின் மடியில் அமர்ந்து வேலாங்கண்ணி ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தனர் தீக்ஷா யுவாஞ்சலின் .
கணவன் ,மனைவி , ஒரு பெண் குழந்தை என அழகாய் போய் கொண்டிருந்த வாழ்க்கையில் தான் அந்த எதிர் பாரா சம்பவம் அப்பிஞ்சு குழந்தையின் கண் முன்னே அரங்கேறியது,
யாரும் எதிர்பார்க்காத அந்த நாள் அந்த நேரம்...

தூவானம் தொடரும்.........
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம்🌧- 2

ஒரு சின்ன தேவதை, அம்மா, அப்பா என குருவி கூடு போன்ற அழகிய குடும்பம்,தீஷா பிலோமினா மிகவும் சுட்டி, அவளிடம் வாய் கொடுத்து யாரும் வென்றது இல்லை,தீஷா அப்பாவின் மகள், தன் கண் பார்வையிலும், தன் விரல் அசைவிலும் தன் தந்தையை இந்த பூமிப்பந்தாக மாற்றுபவள்.
இன்று அவர்கள் வாழ்வில் ஒரு நன்னாள் ஆம் இன்று தீஷாவின் 7வது பிறந்தநாள், அதற்காக தான் அவர்கள் இன்று ஆலயம் வந்திருக்கிறார்கள்.
நல்லபடியாக பிராத்தனை முடிந்து மூவரும் தங்கள் காருக்கு வந்தனர், தீஷா வை முதலில் காருக்குள் அமர வைத்துவிட்டு இவர்கள் ஏறும் சமயத்தில்........ ஓ வென சத்ததுடன் திரளான மக்கள் தங்கள் பின்னும் , தங்களை தாண்டியும் ஓடுவந்ததை மட்டும் தான் பார்த்தாள் சிறுமி தீஷா, அனைத்தும் நடந்து முடிந்தது, கண்விழிக்கும் போது மருத்துவ மனையில், அருகில், தேடுகிறாள் தன் தாய் தந்தையை, அவர்கள் இல்லை ,என்ன என்னமோ நடக்கிறது ஒன்றும் விளங்கவில்லை சிறுமிக்கு......மருத்துவமனையிலும், அங்கு ஒரு காப்பகத்திலும் அவளுக்கும் ஒருமாதம் கழிகிறது.
------------------------------------------
இங்கு விக்ரம் ஒரு வழியாக்கி கொண்டிருந்தான் காப்பகத்தை, அம்மா வேதவல்லி யும் அவனுடன் சேர்ந்து சிறுபிள்ளை என மாறிவிட்டார் என கூறலாம்...
அப்பொழுது........
"அம்மா, அம்மா உங்களை பார்க்க ஒரு தம்பதி வந்திருக்கின்றனர்." என பியூன் சொல்ல, "அவர்களை உட்கார வை இதோ வருகிறேன்"
வேதவல்லி அலுவலகத்தில் நுழையும் போதே , உட்கார்ந்து இருக்கும் இருவர் யார் என்று அவரால் ஓரளவு யூகிக்க முடிந்தது.
"ஆங் சொல்லுங்க , நான் தான் வேதவல்லி "
"அம்மா என் பேரு ரகுராம், இவ பேரு அகிலா என் மனைவி தான், நான் இங்கு இருக்கிற விக்ரம் ஓட மாமா ,அத்தை, நாங்க விக்ரம பாக்கலாமா," என ரகுராம் பேச்சை முடித்தார்
"விக்ரம் ஓட மாமான்னு சொல்லுரீங்க விக்ரம் இங்க வந்து ஒரு மாததிற்க்கு மேல ஆகுது நீங்க இதுவரை வந்ததே இல்லை யே" எனறால் வேதவல்லி சந்தேகமாக .
"அது அது அது வந்து அம்மா நாங்க வெளிநாட்ல இருந்தோம், அது மட்டும் இல்லாம எங்களுக்கு தகவல் கொஞ்சம் தாமதமாக தான் வந்தது". அதான் என்றார் ரகுராம்.
"சரி இப்போ எதுக்கு இங்கு வந்தீங்க"
"அதுவந்து என் மருமகனை பார்த்திட்டு ,அப்படியே அவனை எங்க கூட அழைச்சுட்டு போக வந்திருக்கோம்." ரகுராம்.
" சரி , கோர்ட் ஆர்டர் இருக்கா" வேதவல்லி.
"எதுக்கு கோர்ட் ஆர்டர்" ரகுராம்.
"அது வந்து இது விபத்தா, இல்லை கொலையான்னு போலீஸ் விசாரிச்சுட்டு இருக்காங்க," என்று சொல்லும் போதே ரகுராம் முகத்தில் சிறிய மாற்றத்தை கண்டார் வேதவல்லி,." அதனால யாரையும் அவன பாக்கவோ, பேச கூடாது என்பது எனக்கு வந்த ஆர்டர். அதனால நீங்க இப்போ கிளம்பளாம் என்று தனது கையை கதவு நோக்கி காண்பித்தார்.
அவர்கள் சென்றவுடன், போலீசிடம் அனைத்து தகவல்களையும் தெரிவித்து விட்டார்.
------------------------------------------
இங்கு, மருத்துவ மனையில் கண் விழித்த தீஷா விடம், போலீஸ் விசாரணை மேற் கொள்ள வந்தது .
"பாப்பா , உன் பேரு என்னமா,உங்க அப்பா, அம்மா பேரு என்ன" என்று விசாரிக்கவும் பாவம் அந்த சிறு மலர் தன் விழிகளை விரித்து, அந்த கண்களில் ஒரு தேடலும் பயமும் தெரிந்தது.
"பயப்படாதமா, அங்கிள் கேட்கிறதுக்கு பதில் சொல்லு" என அருகில் இருந்த செவிலியர் கூறவும் சிறிது அமைதியுடன் இருந்தவள் பேச முனைந்தாள்.
"அ.....அ..... அ....." என அவளது வாய் மேலிலுத்து செல்ல கண்கள் மூடி முடி திறக்க, மறுபடியும் அதே அ.....அ.....அ..... என்றே அவளை பேசவிடாது மூளை அழுத்தம் கொடுத்து.
நீண்ட முயற்சி க்கு பின்
" அ...... அ...அம்...ம்...மா..".. என திக்கி திக்கி அந்த அம்மா என்ற வார்த்தையை கூறிமுடித்தாள்..
அங்கிருந்த காவலர் "என்ன மேடம் , குழந்தை இப்படி பேசுது , இப்படி தான் பேசுவாளா"
என்று அவளின் பொறுப்பு செவிலியரிடம் கேட்க..
" சார் , கிட்டத்தட்ட இந்த பொண்ணு வந்து ஒரு மாதம் ஆகியிருக்குது, தலையில அடி பட்டதால பாதி நாள் சுயநினைவின்றி தான் இருந்தாள், இப்போ நினைவு வந்ததில் இருந்து இன்று தான் பேச முயற்சி செய்திருக்கிறாள் , இனி தான் மருத்துவரிடம்
கூறி ஆய்வு செய்யனும் சார், நீங்கள் இப்போது அவளுக்கு அழுத்தம் கொடுக்காதீங்க நான் மருத்துவர கூட்டிட்டு வர்றேன்" என்று செவிலியர் ஓட்டமும் நடையுமாக மருத்துவரை அழைக்க சென்றாள்.
காவலர் நாற்காலி யில் அமர, குழந்தை கண்கள் , மேல்நேக்கி பார்த்தது அதில் இருந்து கண்ணீர் முத்துக்கள் வெளியேற, அந்த தளிர், கடைசியாக தன் கண்களில் பதிந்த தனது பெற்றோர்களின் நிலை நிழல் ஆட உறைவில் படுத்திருந்தாள்.......
------------------------------------------
"என்னங்க என்ன இந்த அம்மா இப்படி சொல்லுது, அப்போ நம்ம விக்ரம பார்க்க முடியாதா? " என அகிலா கண்ணீர் சிந்த ரகுராம் அப்படி யே மரத்து போய் நின்றார்.
"ஏங்க ஏன் இப்படி இருக்கீங்க, நீங்க கவலை படாதீங்க நீங்க உங்க தங்கச்சி மேல எவ்வளவு பாசம் வச்சு இருந்தீங்கன்னு எனக்கு தெரியும், நீங்க அவள ஒரு சித்தி பொண்ணா வா பார்த்தீங்க கூட பொறந்த தங்கச்சி மாதிரி தானே பார்த்தீங்க, நியாயம் ஜெயிக்கும்ங்க, நாம விக்ரம் ஓட தான் திரும்பி மலேசியா போறோம் " என ஆறுதல் கூறி
அவரை அழைத்து சென்றாள்.......
நியாயம் கண்டிப்பாக நிருபிக்க படும் தான் ஆனால் சூழ்நிலை சந்தர்ப்பம் அதற்கு ஏற்றார் போல் அமைந்தால் மட்டும்.........
தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 3
" அந்த எல்லா சீசிடிவி பதிவுகளை பார்த்தீங்களா ராமசாமி " என சிபிஐ கார்த்திகேயன் கேட்க.
"சார், அந்த கார் வேகமா போனது மட்டும் தான் இருக்கு , ரிப்போர்ட்ல கூட பிரேக் பெய்லியர் என்று தான் இருக்கு சார் " என முடித்தார் ராமசாமி.

"அப்படியா சொல்லுறீங்க" என அந்த விபத்து நடந்த இடத்தில் உள்ள ரீப்போர்ட்டையே உற்று பார்த்தார் கார்திக்கேயன்.

"ஏன் மிஸ்டர் ராமசாமி, இந்த பிரேக் பெய்லியர் என்பது வேண்டும் என்றே யாராவது ஏற்படுத்தி இருந்திருந்தா" என சந்தேகமாக கேட்க.

" ம் ம் இருக்க கூட வாய்ப்பிருக்குது சார் .- ராமசாமி

" சரி , ராமசாமி இந்த கேஸ் ஓட அடுத்த கட்டமாக, இறந்த தொழில்அதிபர் குமரன் மற்றும் லெட்சுமி அவர்களோட , சொந்தங்கள், நண்பர்கள், தொழில் நண்பர்கள், தொழில் விரோதிகள், என அனைவரின் தகவல்களும் என் டேபிளுக்கு வந்தாகனும்."என தனது பிஸ்டலை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கார்த்திகேயன் மிடுக்குடன் கிளம்ப எத்தனிக்க. "சார்" என்ற அழைப்பில் திரும்பினார்.

"என்ன, ராமசாமி சொல்லுங்க" என இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு கேட்டவரிடம்.

" சார் , இன்னிக்கு காலையில ஆசிரமத்தில் இருந்து போன் வந்தது, மேடம் வேதவல்லி ஒரு தகவல் சொன்னாங்க" என காலையில் காப்பக பொறுப்பாளர் வேதவல்லி அம்மா உடன் நடந்த தொலைப்பேசி அழைப்பையும், அவர் தந்த தகவல்களையும், கூறி முடித்தார் எஸ்.ஐ ராமசாமி.

"கிரேட், நல்ல ஒரு தகவல் ராமசாமி, இமிடியட் ஆ அந்த ரகுராம் பற்றியும் அவருடைய பின்புலத்தையும் விசாரிங்க சரியா" என கூறிவிட்டு வேகமாக கிளம்பி சென்றுவிட்டார்.
-----------------------------------------
" குட்டிமா, கண்ண திறங்க, இங்க பாருங்கள் மருத்துவர் வந்துருக்காங்க " என அந்த பூந் தளிரை எழுப்ப. கண் திறந்தாள் தீஷா யூவாஞ்சலின்.

"உன் பெயர் என்னமா, இப்போ தலை வலிக்குதா , நீங்க எப்படி இருக்கீங்க" என மருத்துவர் கேட்க. மீண்டும் வாயிலுத்து கண்களை மெல்ல மூடி திறந்து சிரமப்பட்டு ,
அ....... அ......அம்.....அம்மா.. என கூறியவளை கண்ட மருத்துவர் ,செவிலியரை அழைத்து

"உடனடியாக ,இந்த பொண்ணுக்கு தலையில் எக்ஸ்ரே எடுக்கனும், அப்படியே நீயூரோ மருத்துவர்க்கு தொடர்புகொண்டு வரச்சொல்லுங்க" என கூறிவிட்டு அங்கிருந்த காவலரை அழைத்துகொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.
குழந்தை தீஷா விற்கு, தேவையான அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டு ,தகவல்கள் மருத்துவரின் மேஜைக்கு சென்றது.
---------------------------------------
ரகுராம் யோசனையிலும், அதிர்ச்சியிலும் அமர்ந்திருக்க, அகிலா எவ்வளவு சொல்லியும்
அவர் அந்த யோசனையை கைவிட வில்லை.

"அப்பா" என தூள்ளிக் கொண்டு முகிலன் ஓடி வந்தான்.

"வாடா வாடா " என் செல்லம் என கார்த்திக்கேயன் தன் மகனை தூக்கிக் கொண்டார்.

" என்னங்க , இன்னிக்கு முகில் ஓட பிறந்த நாள், இன்னிக்கும் ஓரே கேஸ் , போலீஸ் ஸ்டேஷன்னு கட்டிக்கிட்டு அலையுறீங்க என சுமதி குற்றம் சாட்டினார் அந்த சிபியை ஆபிசர் கார்த்திகேயன் மீது.
ஆம் கார்த்திக்கேயன்க்கு, ஒர் அழகான மனைவி மற்றும் ஒரு மகனுடன் கூடிய ஒரு சிறிய குடும்பத்தில், கடமை தவறாது வாழ்ந்து வந்தார். கார்த்திக்கேயன் அப்பா, தாத்தா எல்லாரும் ரானுவத்தில் பணிபுரிந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள், கார்த்திகேயனும் அவரது பெற்றோர்க்கு ஒரே மகன். தன் தந்தையை, தாத்தாவை பார்த்து வளர்ந்தவன். தான் ஒரு சிபியை அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

"ஏப்பா,உன் அப்பா, தாத்தா எல்லாரும் வழி வழியா ராணுவத்தில சேர்ந்து நாட்டுக்காக வாழ்ந்தாங்க , நீ மட்டும் சிபியை ஆகப்போறன்னு சொல்லுற " என அவர் அன்னை கேட்க.

" அம்மா, நாட்டிற்கு வெளியே உள்ள எதிரிய விட , நாட்டிற்குள்ள மக்களோட மக்களா இருக்குற குற்றவாளிகள் தான் மிகவும் கேடானவங்க இந்த நாட்டிற்கு,
அதனால நான் நாட்டிற்குள் உள்ள எதிரிகளை கண்டுபிடித்து அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்போறேன்" என்றார் அச்சிறுவயதிலும், அப்பேர் பட்ட கடமை தவறா அதிகாரி, அதாலாலேயே பல இடங்கள் மாற்றப்பட்டு இப்போது சென்னைக்கு வந்திருக்கிறார்,கார்த்திகேயனும் அவரது குடும்பமும்.
-----------------------------------------
நீயூரோ நிபுணர் குழந்தையின் ஆய்வு அறிக்கையை, வாசித்து விட்டு,
" தலையில் அடிபட்டதால சில நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கிறது, அதனாலயே குழந்தை
உணர்ச்சி வசப்பட்டோ ,பயத்திலோ, அல்லது அதிர்ச்சியிலோ பேச முற்படும் போது மூளையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அவளது பேச்சுக்கள் தீக்கி திணற வாய்ப்பிருக்கிறது." என கூறினார்.
"அதுக்கு இப்ப வேற எதுவும் பண்ண முடியாதா சார்" என காவலர் கேட்க.
"முதல்ல அந்த குழந்தை முழுவதும் குணமடைந்தவுடன், நாம அவளுக்கு ஸ்பீச் தெரபி எனப்படும் பேச்சு வருவதற்கான பயிற்சி கொடுத்து பார்ப்போம் எல்லாம் இறைவன் கையில் " என மருத்துவர் மேலே பார்த்து கூறி முடித்தார்..
"சரிங்க, சார் அப்போ நீங்க அந்த குழந்தை யோட ஆய்வு அறிக்கை மற்றும் மருத்துவ அறிக்கையை எனக்கு தந்திடுங்க, நான் மேற்கொண்டு அவளை எந்த காப்பகத்திற்க்கு அனுப்ப வேண்டும் என நான் என் மூத்த அதிகாரியுடன் பேசிவிட்டு வருகிறேன். என அந்த காவலர் விடைபெற்றுக்கொண்டார்.

தூவானம் தொடரும்
 
Status
Not open for further replies.
Top