ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தீம் தரிகிட பாரதி மகள்கள் - கதைத்திரி

Status
Not open for further replies.
பாரதி மகள்கள் -06
கண்ணப்பனின் அடியாட்களில் உண்ட மயக்கத்தில் மயங்கி கிடந்த ஒருவன், மதியை கொண்டு வந்து போட்ட இடத்திற்கு எதார்த்தமாக வந்து பார்க்க, அவ்வுருவம் அங்கிருந்த துணிகளை கொண்டு மூட்டையுள் மதி இருப்பது போல் செட் செய்திருந்த ஏற்பாட்டை பார்த்து திருப்தியாக மூச்சை இழுத்து விட்டவன் அடுத்த நொடி மூச்சை இழந்தான்.

அவனின் பின்புறம் இருந்து அவனின் வாய் பொத்தி கூறிய ப்ளேடினால் கழுத்து நரம்பை அறுத்து இருந்தது அவ்வுருவம். அதனுடன் அவனது மணிக்கட்டு நரம்பிலும் கூறு போட அவன் சிறிது சிறிதாக அடங்கி கொண்டிருந்தான்.

அவனை சத்தம் இல்லாமல் தரையில் சாய்த்து விட்டு மீதம் உள்ள அடியாட்களை கவனித்தது அவ்வுருவம். அனைவரும் போதையில் உளறி கொண்டிருக்க, மெது மெதுவாக மதியை தூக்கி கொண்டு அவ்வுருவம் வெளியேறியது.

பாதி தூரம் கடந்து இருக்கையில் அவ்வுருவத்தின் எதிரே பேய் போல வந்து நின்றான் கண்ணப்பன். கண்ணப்பனை கண்டு சிறிதும் அதிர்ச்சி அடையாமல் கண்ணப்பனை ஒதுக்கி கொண்டு முன்னேற முயன்றது அவ்வுருவம்.

தன்னைக் கண்டு பயப்படாமல் தனது இடத்திற்கே வந்து தைரியமாக வெளியேறும் அவ்வுருவத்தின் மீது கடுங்கோவம் கொண்டான் கண்ணப்பன்.

அவ்வுருவத்தின் தோளில் கிடக்கும் மதியை பார்த்து விட்டு, "டேய்... அது என்னோட சரக்கு. ஒழுங்கா தந்துட்டு உயிர் பொழச்சு ஓடிப்போயிரு.." என கண்ணப்பன் ஆக்ரோஷமாய் மிரட்ட, அவ்வுருவம் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து முன்னேற தொடங்கியது.

அதில் உக்கிரம் அடைந்த கண்ணப்பன், தன் கையில் இருந்த கத்தியால் அவ்வுருவத்தை குத்த வர அதை அசால்ட்டாக ஒரு கையால் தடுத்து கண்ணப்பனின் மணிக்கட்டை ஒரு முறுக்கு முறுக்க வலி தாங்காமல் கத்தியை கீழே விட்டான் கண்ணப்பன்.

கண்ணப்பனை அவ்வுருவம் எட்டி ஒரு உதை உதைக்க, ரெண்டு அடி பின்னால் தள்ளிப் போனான் கண்ணப்பன்.
"என்னையவே அடிக்கிறியா நீ?" என ஆக்ரோஷமாய் அவ்வுருவத்தை அடிக்க முன்னே வர தன் கையை கத்தி போல கண்ணப்பனின் கழுத்தில் வர்ம கலையால் ஒரு வெட்டு வெட்ட அடுத்த நொடி கண்ணப்பன் மயங்கி சரிந்தான்.

மீதி அடியாட்கள் போதையில் மயங்கி கிடக்க எவ்வித தடையும் இன்றி அவ்வுருவம் மதியை தூக்கி கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறியது.

ஆள் நடமாட்டம் இல்லாத இருள் சூழ்ந்த அவ்விடத்தில் தன் ராயல் என்ஃபீல்டில் ஸ்டைலாக சாய்ந்து கொண்டு அவ்வுருவத்தை எதிர் பார்த்து காத்து நின்றிருந்தாள் ஆர்ணவி.

ஆர்ணவியிடம் கொண்டு வந்து மதியை சேர்ப்பித்தது அவ்வுருவம்.

"மதியை பத்ரமா வீட்ல விட்டுரு ஆரு." என ஆர்ணவியிடம் கூறியது அவ்வுருவம்.

"அத நான் பாத்துக்கிறேன். உன் கை என்ன ரத்தமா இருக்கு? அங்க என்ன பண்ணுன? உன்னைய எதுவும் பண்ண கூடாது னு தான சொன்னேன்?" என அவ்வுருத்தைப் பார்த்து கேட்டாள் ஆர்ணவி.

"நான் ஒன்னுமே பண்ணல. ஒருத்தன கொன்னுட்டேன். கண்ணப்பன லேசா ரெண்டு தட்டு தட்டுனேன். அவ்ளோ தான் ஆரு. மீ பாவம். மிரட்டாத..." என குரலில் நகை இழையோட கூறியது அவ்வுருவம்.

"உன்னைய கொல்ல போறேன் பாரு. ரெண்டு வருஷமா தேடி இப்ப தான் நாம அந்த செழியன் இடத்த கண்டு புடிச்சு இருக்கோம். இன்னும் அவன பத்துன எந்த ஆதாரமும் முழுசா நமக்கு கிடைக்கல. இதுல கண்ணப்பன சொறிஞ்சு விட்டு வந்து இருக்க. உன்னய..." என அவ்வுருவத்தை அடிக்க கை ஓங்கினாள் ஆர்ணவி.

"நான் ஒன்னும் பண்ணல ஆரு." என மீண்டும் சிரித்த குரலில் கூறியது அவ்வுருவம்.

"ஒன்னும் பண்ணலயா?ஆளப் பாரு ஆள. நாம இத்தன வருஷமா இதுக்காக எவ்ளோ ரிஸ்க் எடுத்து இருக்கோம்? சரி விடு. உன்னைய யாரும் பாக்கல ல?உன்னைய அவனுக பாத்தானுக நம்ம மொத்த ப்ளானும் ஸ்வாகா தான்..." ஆர்ணவி.

"அதெல்லாம் என்னைய எவனும் பாக்கல. செழியன் பொண்ணுங்கள கடத்தி விக்கிறான் னு மட்டும் தான நமக்கு தெரியும்?ஆனா அவன் இன்னும் ஏதோ பெருசா பண்றான் ஆரு. எனக்கென்னமோ அவன் மேல டவுட்டா இருக்கு. ஹெட் அவன் இல்ல னு நினைக்கிறேன்..." என ஆழ்ந்த யோசனையுடன் கூறியது அவ்வுருவம்.

"என்ன சொல்லுற? ஹெட் அவன் இல்லயா?" ஆர்ணவி.

"ஆமா. ஹெட் வேற எவனோ னு எனக்கு தோனுது. அங்க நான் பாத்தத வச்சு சொல்லுறேன். புலி னு நினைச்சு நாம இத்தனை வருஷமா எலி பின்னாடி சுத்திட்டு இருக்கோம்..." என்றது அவ்வுருவம்.

"சரி பாத்துக்கலாம். எவ்வளவோ பாத்துட்டோம். இத பாக்க மாட்டோமா? இனி நாம கொஞ்சம் பாஸ்ட்டா மூவ் பண்ணனும். பொண்ணுங்கள வச்சு அவன் என்ன பண்றான் னு கண்டுபிடிக்கனும் பர்ஸ்ட். சரி நீ கிளம்பு. நாம ரெண்டு பேரும் ஒன்னா நின்னு பேசுறது ஆபத்து. கிளம்பு நீ.." ஆர்ணவி.

"ஆமா... சீக்கிரமே கண்டுபிடிக்கனும். இன்னக்கித்தான் மதியால அவனோட இடத்த கண்டுபிடிச்சு இருக்கோம். இனி அதிரடி தான். கண்ணப்பன தூக்கிரு ஆரு..." என நகைத்தது அவ்வுருவம்.

"ஹா ஹா ஹா... தூக்கிருவோம். அதுக்குத்தானே இந்த ஆர்ணவி காத்துட்டு இருக்கேன். சரி நீ கிளம்பு." என அவ்வுருவத்திற்கு இணையாக சிரித்தாள் ஆர்ணவி.

"பாத்து ஆரு... மதி பத்திரம்..." எனக் கூறிக் கொண்டே அவ்வுருவம் அங்கிருந்து கிளம்ப தொடங்கியது.

"பேபி... நீ ஓகே தான?" என ஆர்ணவி அவ்வுருவத்திடம் கேட்க, சென்ற அவ்வுருவம் நின்று திரும்பி, "நான் ஓகே தான் ஆரு..." எனக் கூறிக் கொண்டே தன் முகத்தில் இருந்த துணியை எடுத்தாள் ஆதவி.

🔥🔥🔥🔥🔥🔥🔥

அதே நேரத்தில்...

தன் கல்லூரியில் சிசிடிவி புட்டேஜ்ஜை பார்த்துவிட்டு உபயோகமாக எதுவும் கிடைக்காததால் செல்வம் கோமளம் செந்திலிடம் கண்டுபிடிச்சுறலாம் என ஆறுதல் கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு இன்ஸ்பெக்டர் கிளம்ப, எதுவும் கிடைக்காததால் செழியன் வெறி கொண்டு காரை எடுத்துக் கொண்டு தனது பிரத்யேகமான இடத்திற்கு விரைந்தான் மதியை பார்க்க.

தனது இடத்திற்குள் உள்ளே நுழைந்ததும் செழியன் கண்டது மயங்கி கிடந்த கண்ணப்பனை தான்.

மயங்கி கிடந்த கண்ணப்பனைக் கண்டதும் இன்னும் வெறி ஆகி மதியை பார்க்க உள்ளே சென்றான். அங்கு மதி இல்லாமல் தனது ஆள் ஒருவன் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டதும் கோபத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் சுவற்றில்.

"என் இடத்துக்கே வந்து என் ப்ராப்பர்டி ய தூக்கிட்டு என் ஆள கொன்னுட்டு போயிருக்க. என் இரை ஆதவியையும் தூக்கி இருக்க.உன்னைய கொல்லாம விட மாட்டேன் டா. யாருடா நீ? உன்னைய தேடி வர்றேன் டா." என அவ்விடம் அதிர கத்தினான் செழியன்.
 
பாரதி மகள்கள் -07
"பேபி... நீ ஓகே தான?" என ஆர்ணவி அவ்வுருவத்திடம் கேட்க சென்ற அவ்வுருவம் நின்று திரும்பி, "நான் ஓகே தான் ஆரு... " எனக் கூறிக் கொண்டே தன் முகத்தில் இருந்த துணியை எடுத்தாள் ஆதவி.

"கவனம் ஆது... எட்டு வருஷமா நாம மறைஞ்சு இருந்து வேலை பாக்குறோம். இதுவரைக்கும் நிறைய வேலை பாத்துட்டோம். இந்த ரெண்டு வருஷமா தான் செழியன பாலோ பண்றோம். இவன் கொஞ்சம் டேன்ஞசரா இருக்கான். எல்லாத்துலயும் நாம கவனமா இருக்கனும் ஆது..." ஆர்ணவி.

"புரியுது ஆரு. அவனுக்காக தான அவன் காலேஜ்லயே போய் சேந்தேன். யாருக்கும் நம்பள பத்தி தெரிய வராது ஆரு. தெரிய கூடாது னு தான வெளில நாம ரெண்டு பேரும் முன்ன பின்ன தெரியாதவங்க மாதிரி மீட் பண்றோம்." ஆதவி.

"சரி சரி... நான் போய் மதிய வீட்ல விட்டுர்றேன். நீ என்ன பண்ண போற? அங்க உன்னையும் காணோம் னு தேடிட்டு இருக்காங்க." ஆர்ணவி.

"நான் பாத்துக்கிறேன். நான் நம்ம இடத்துக்கு போய்ட்டு காலையில வீட்டுக்கு வந்துருவேன். நீ மதிய கூட்டிட்டு கிளம்பு ஆரு..." ஆதவி.

"டேக் கேர் ஆது மா..." என ஆர்ணவி ஆதவியை அணைக்க இருவரும் கட்டியணைத்து விட்டு, ஆதவி ஆர்ணவியை பிரிந்து சென்றாள்.

ஆதவி மறையும் வரை பார்த்து விட்டு மதியை தூக்கி அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தாள் ஆர்ணவி. சிறிது மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்த்ததும் மிரண்டு அழ ஆரம்பித்தாள் மதி.

"ஹே... பாப்பா... ஒன்னும் இல்லை. நீ பத்ரமா இருக்க. ஆமா நீ எப்பிடி இந்த மூட்டைக்குள்ள வந்த? உன் பேரு என்ன பாப்பா?" என ஏற்கனவே தான் வைத்திருந்த கோணி பையை காட்டி எதுவும் தெரியாதது போல் விசாரித்தாள் ஆர்ணவி.

"எனக்கு எதுவும் தெரியாது க்கா. ஸ்கூல் முடிச்சுட்டு வர்றப்ப ஒரு காருக்குள்ள என்னைய தூக்கி போட்டு என் மூக்குல எதையோ வச்சு அழுத்துனாங்க. அவ்ளோ தான் க்கா தெரியும்." எனக் கூறிக் கொண்டே அழுதாள் மதி.

"சரி டா... சரி டா... உன் பேரு என்ன? உன் வீடு எங்க இருக்கு? உன்னைய காணோம் னு உங்க வீட்ல உன்னைய தேடிட்டு இருக்க போறாங்க." ஆர்ணவி.

"ஆமா க்கா. என் அம்மா அழுது ஊர கூட்டி இருக்கும் க்கா..." என்று தன் வீட்டு முகவரியை கூறினாள் மதி.

"நீ இப்ப ஓகே தான பாப்பா? உன்னால பைக்ல வர முடியும் தான?" ஆர்ணவி.

"எனக்கு ஒன்னும் இல்லக்கா. நான் பின்னாடி உக்காந்து வந்துருவேன் க்கா..." மதி.

மதியை தனது பைக்கில் பின்னாடி தன் மீது சாய்ந்து உக்கார வைத்து மெதுவாக மதியினை வீட்டிற்கு அழைத்து சென்றாள் ஆர்ணவி.

இருவரும் சென்று மதியின் வீட்டின் கதவை தட்ட, இந்த நேரத்தில் யார் என அழுது வீங்கிய முகத்துடன் கோமளம் வந்து கதவை திறந்தாள். வெளியில் ஒரு பெண்ணுடன் மதியை கண்டதும், "மதீஇஇ..." என கதறி கொண்டு மதியை கட்டி அணைத்து அழுதாள் கோமளம்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த செல்வம், மதியை கண்டதும் "மதி மா.. என்ன டா ஆச்சு?" என கண் கலங்கினார் செல்வம்.

முதலில் தன்னை தேற்றி கொண்ட செல்வம், "கோமளம்... உள்ள கூட்டி வா முதல்ல..." என அதட்டினார்.

கண்ணீரை தன் முந்தானையில் துடைத்துக் கொண்டு, "உள்ள வா மதி. நீயும் வாமா உள்ள..." என ஆர்ணவியை உள்ளே வரவேற்றார் கோமளம்.

"எங்க மதிய நீ எங்க மா பாத்த? யாரோ ஸ்கூல் வாசல்ல வச்சு கடத்திட்டு போனாங்க னு செந்தில் சொன்னானே..." என செல்வம் கேட்க, கோமளம் அதையெல்லாம் யோசிக்கவில்லை. மகளை கண்ட சந்தோஷத்தில் மதிக்கு உணவூட்டிக் கொண்டிருந்தாள்.

"ஸார்... எனக்கு நைட் டைம் ல ரைட் போறது ரொம்ப பிடிக்கும். அப்பிடி ரோட்ல போறப்ப ஒரு மூட்டை வித்தியாசமா கிடக்குறத பாத்தேன். என்ன னு தொறந்து பாத்தா உள்ள உங்க பொண்ணு ஸார். அப்புறம் அவங்க மயக்கத்தை தெளிய வச்சு கூட்டி வந்தேன் ஸார்." என தன் இஷ்டத்துக்கு பொய்யை அவிழ்த்து விட்டாள் ஆர்ணவி.

"ரொம்ப நன்றி மா. எங்களுக்கு இருக்குறது ஒரே பொண்ணு. அவள காப்பாத்தி கொண்டு வந்து இருக்க. ரொம்ப ரொம்ப நன்றி மா..." என செல்வம் கூற, அதை கேட்டிருந்த மதி, "ப்பா... ஒரே பொண்ணா? பொய் சொல்லாதீங்க. அக்கா எங்க ப்பா?ஆளயே காணோம்?" என ஆதவியை கேட்டாள் மதி.

"அட அத ஏன்மா கேக்குற? உன்னைய யாரோ கடத்திட்டு போய்ட்டாங்க னு செந்திலு வந்து அழுததும் ஆதவி க்கு ஃபோன் பண்ணுனா.. ஃபோன் சுவிட்ச் ஆப். நம்ம ஸ்வேதா க்கு ஃபோன் பண்ணி கேட்டா, அவ சீக்கிரமே காலேஜ் அ விட்டு கிளம்பிட்டா னு சொல்லுறா. நாங்க என்ன பண்ணுறது? உங்க ரெண்டு பேரையும் காணோம் னு போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ளைண்ட் குடுத்துட்டோம்." என தன் மகளிற்கு உணவூட்டிக் கொண்டே மதியிடம் கூறினார் கோமளம்.

"அய்யோ... என்ன ம்மா சொல்லுற?அக்காவ காணோமா?" என அழ தயாரானாள் மதி.

"அட அழுகாத மதி. இரு மீதிய சொல்லுறேன். போலீஸ் ஸ்டேஷன் ல தான் ஆதவியோட காலேஜ் ஓனர் செழியன் ஸார பாத்தோம்.." கோமளம்.

செழியன் என்றதும் ஆர்ணவி உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள். அந்த நேரத்தில் ஆதவி, "I am safe" என மெஸேஜ் அனுப்ப... அதை பார்த்து விட்டு கோமளம் கூறுவதை கவனிக்கும் ஆர்வத்தில் தன் பாக்கெட்டில் இருந்து வெளியில் விழுந்த ஒன்றை கவனிக்க மறந்தாள் ஆர்ணவி.

"செழியன் ஸார் தான் ஆதவி காலேஜ் ஓனர் னு எங்களுக்கு தெரியாது. அப்புறம் அவர கூட்டிட்டு போய் காலேஜ் ல சிசிடிவி கேமரா வ செக் பண்ணுனா அதுல ஆதவி எங்க போனா னே தெரியல. அப்புறம் வீட்டுக்கு வந்தா,இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஆதவி ஃபோன் பண்ணி சொன்னா..." கோமளம்.

"அக்கா ஃபோன் பண்ணுச்சா? எங்க இருக்காளாம்? நல்லா இருக்கா தான ம்மா?" மதி.

"மெதுவா... மெதுவா கேளுடி. அவ ஏதோ படிப்பு விசயமா வெளில போன இடத்துல அவ ப்ரண்ட் அவங்க வீட்ல தங்க சொல்லி கம்பல் பண்ணுனதால அங்கயே தங்கிட்டாளாம். ஃபோன் எப்பிடியோ கீழ விழுந்து உடைஞ்சுருச்சாம். இப்ப தான் அவ ப்ரண்ட் ஃபோன் ல இருந்து ஃபோன் பண்ணி சொன்னா..." கோமளம்.

"சரி சரி ம்மா. அக்காவும் எங்கயும் வெளில போக மாட்டா. இப்பிடியாச்சும் அவ வெளில போய்ட்டு வரட்டும்..." மதி.

"அதுக்காக... சொல்லிட்டு போய் இருக்கலாம் ல? உன்னையவும் யாரோ கடத்திட்டு போய்ட்டாங்க. அவளையும் காணோம். நான் வேற என்ன நினைக்கிறது? போலீஸ் ஸ்டேஷன் போய் அந்த செழியன் ஸாரயும் நல்லா பயமுருத்திட்டோம். அவரும் எங்க கூட சேந்து உங்கள தேட கஷ்ட்டப்பட்டாரு. நல்ல வேளை நீ இந்த பொண்ணு புண்ணியத்துல நல்லபடியா திரும்ப வந்துட்ட..." கோமளம்.

"ஆமா ம்மா... உங்க பேரு என்ன க்கா?" என ஆர்ணவியிடம் கேட்டாள் மதி.

"அந்த செழியன் எதுக்கு உங்களுக்கு அப்பிடி ஹெல்ப் பண்ணுனான் னு எனக்கு தான தெரியும்." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, "என் பேரு ஆர்ணவி டா பாப்பா..." என்றாள் ஆர்ணவி.

"அய்... ஆர்ணவி, ஆதவி. ரெண்டு அக்கா பேரும் சூப்பரா இருக்கு. ரொம்ப லேட் நைட் ஆகிருச்சு க்கா. இங்கயே இருங்க க்கா. எங்க ஆதவி அக்கா காலையில வந்துருவாங்க. அவங்க உங்கள பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க." மதி.

"அய்யோ... இதுக்கு மேல இங்க இருந்தா நாம ஏதாவது உளறிருவோம். நாம கிளம்பிருவோம்." என நினைத்துக் கொண்டு, "இல்ல டா பாப்பா... எனக்கு லேட் ஆகிருச்சு. என்னோட ஹாஸ்ட்டல்ல தினமும் நைட் வந்துறனும். இல்ல ன்னா ஹாஸ்ட்டல விட்டு அனுப்பிருவாங்க. நான் இன்னொரு நாள் உங்கள பாக்க வர்றேன்..." எனக் கூறியபடி அங்கிருந்து கிளம்பினாள் ஆர்ணவி.

"கண்டிப்பா வரனும் க்கா..." மதி.

"கண்டிப்பா வர்றேன் டா பாப்பா..." என மதியிடம் கூறி விட்டு செல்வத்திடமும் கோமளத்திடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியில் சென்றாள் ஆர்ணவி.

அப்பொழுது ஆர்ணவியின் ஃபோனுக்கு மெஸேஜ் வந்த சத்தம் கேட்க, ஆதவியா இருக்குமோ என நினைத்துக்கொண்டு அந்த மெஸேஜை எடுத்து பார்த்தாள் ஆர்ணவி. அதில் வந்த மெஸேஜை பார்த்து விட்டு ஆர்ணவியின் நெற்றி யோசனையாக சுருக்கத்திற்கு உட்பட்டது. அவள் முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சி யின் ரேகை தெரிந்தது.

அந்த நேரம், "ஆர்ணவி அக்கா... உங்க பாக்கெட் ல இருந்து இது கீழ விழுந்துருச்சு. இந்தாங்க க்கா. இதான் உங்க ஐடி கார்ட்டா க்கா?" எனக் கேட்டுக் கொண்டே ஆர்ணவியின் உத்யோக அடையாள அட்டையை கொண்டு வந்து குடுத்தாள் மதி.

அதை பரபரப்பாக வாங்கி உள்ளே வைத்துக்கொண்டு, "நன்றி டா பாப்பா... இதை வெளில யார் கிட்டையும் சொல்லாத." என்றாள் ஆர்ணவி.

மெதுவாக ஆர்ணவியின் காதுக்குள் வந்து, "அக்கா... நீங்க போலீஸா? நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். பிங்கி ப்ராமிஸ்." என குழந்தை தனமாக சிரித்தாள் மதி.

அப்படியே ஆது பேபியோட சிரிப்பு என நினைத்து அதில் மயங்கினாலும் ஆர்ணவியின் நினைவு தனக்கு வந்த மெஸேஜ் லயே நிலைத்து இருந்தது.

திரும்ப அதை நினைவு கூர்ந்தாள் ஆர்ணவி.

"Congratulations, The great crime branch special officer mrs.Aarnavi madam. I'm coming for you... Be ready to face... "

"யார்ரா நீ?" என தனக்குள் கூறிக் கொண்டாள் ஆர்ணவி.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

"என் இடத்துக்கே வந்து என் ப்ராப்பர்டி ய தூக்கிட்டு என் ஆள கொன்னுட்டு போயிருக்க. என் இரை ஆதவியையும் தூக்கி இருக்க.உன்னைய கொல்லாம விட மாட்டேன் டா. யாருடா நீ? உன்னைய தேடி வர்றேன் டா." என அவ்விடம் அதிர கத்தினான் செழியன்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த கண்ணப்பன், செழியனிடம் எழுந்து வந்தான்.

"ஸார். ஸாரி ஸார்..." கண்ணப்பன்.

"யாரு அது?" எனக் கோபத்தில் கண்கள் சிவக்க கேட்டான் செழியன்.

"யாருனு தெரியல ஸார். முகம் எல்லாம் மறைச்சு இருந்தது." என தலை குனிந்து சொன்னான் கண்ணப்பன்.

"என்ன? தெரியலயா? நீங்கலாம் எதுக்கும் லாயக்கு இல்ல. இங்க பாரு எப்பிடி குடிச்சுட்டு கிடக்குறானுக னு... கைக்கு கிடைச்சத விட்டுட்டு நிக்கிறியே வெக்கமா இல்ல? என் கண்ணு முன்னாடி நிக்காத...போ..." எனக் கத்தினான் செழியன்.

மெதுவாக தலை குனிந்து திரும்பி சென்றவன் நின்று, "ஆனா... ஸார்... அது ஒரு பொண்ணு..." என்றான் கண்ணப்பன்.

"பொண்ணா? உளறாத? ஒரு பொட்ட கழுதைக்கு எப்பிடி இவ்ளோ தைரியம் இருக்கும்?" என அதிர்ந்தான் செழியன்.

"அது ஒரு பொண்ணு தான் ஸார். நான் அந்த உருவத்தோட நெஞ்சுல அடிச்சேன். அதுக்கு தான் என்னைய உதைச்சு கழுத்துல வெட்டு வெட்டி மயக்கம் போட வச்சுட்டு போய் இருக்கு அந்த உருவம்.." கண்ணப்பன்.

அதைக் கேட்ட செழியன், யோசனையாக தாடையை தடவிக் கொண்டு, "சரி நீ போ... அப்பிடியே இந்த பாடி ய அழிச்சுரு.." என செத்த தனது அடியாளை காலால் உதைத்து கண்ணப்பனுக்கு ஆணையிட்டான்.

"சரி ஸார்..." எனக் கூறி கொண்டு அந்த சடலத்தை தூக்கி கொண்டு வெளியில் சென்றான் கண்ணப்பன்.

அதே நேரம் சரியாக செழியனின் ஃபோன் அடிக்க அதை எடுத்து பவ்வியமாக காதில் வைத்தான் செழியன்.

"என்ன நடக்குது அங்க?" என ஃபோனில் ஒரு குரல் செழியனை மிரட்ட, "ஸார்... இப்ப தான் தெரிய வந்துருக்கு. அது ஒரு பொட்ட கழுதை ஸார். நீங்க ப்ரீயா விடுங்க சார்... நான் பாத்துக்கிறேன்..." என்றான் செழியன்.

"கிழிச்ச... நீ பாத்துக்கிற லட்சணம் தான் தெரியுதே. நீ ஒழுங்கா நம்ம பிஸினஸ கவனி. நான் அவள பாத்துக்கிறேன்..." என செழியனுக்கு ஆணையிட்டுவிட்டு ஃபோனை கட் பண்ணியது அந்த குரல்.
 
பாரதி மகள்கள் -08
"என்ன நடக்குது அங்க?" என ஃபோனில் ஒரு குரல் செழியனை மிரட்ட, "ஸார்... இப்ப தான் தெரிய வந்துருக்கு. அது ஒரு பொட்ட கழுதை ஸார். நீங்க ப்ரீயா விடுங்க சார். நான் பாத்துக்கிறேன்..." என்றான் செழியன்.

"கிழிச்ச... நீ பாத்துக்கிற லட்சணம் தான் தெரியுதே. நீ ஒழுங்கா நம்ம பிஸினஸ கவனி. நான் அவள பாத்துக்கிறேன்..." என செழியனுக்கு ஆணையிட்டுவிட்டு ஃபோனை கட் பண்ணியது அந்த குரல்.

"என்னது? இவரு பாத்துக்கிறாரா? அப்போ இவருக்கு அவள தெரியுமோ? சரி நாம பிஸினஸ பாப்போம்..." என நினைத்துக் கொண்டு செழியன் அடுத்த வேலையை கவனிக்க சென்றான்.

ஆதவி வேணும் எனக் கூறி ஃபோட்டோ குடுத்து சென்றவன் செழியனிடம் ஃபோன் செய்து, "வேலையெல்லாம் எப்பிடி போகுது? சரியா போகுதா?" என விசாரிக்க ஆதவியை கடத்துவதற்கு முழு மூச்சாக வேலையில் இறங்கினான் செழியன்.

ஆதவி தனது காலேஜ் ல் தான் படிக்கிறாள் என்பது அப்பொழுது தான் அவனது மூளைக்கு எட்டியது. பார்க்க அப்பாவியாகவும் பயந்த சுபாவம் கொண்டவளாகவும் தெரிவதால் ஆதவியை எளிதாக கடத்தி விடலாம் என நினைத்துக் கொண்டு கண்ணப்பனை அழைத்தான் செழியன்.

"கண்ணப்பா... நம்ம மத்த வேலைய கொஞ்சம் நிறுத்தி வச்சுட்டு ஆதவிய இன்னும் ரெண்டு நாளைக்குள்ள தூக்கனும்..." செழியன்.

"ஸார் அந்த பொண்ண ஈஸியா தூக்கலாம் ஸார். அதுக்கு ஏன் நாம நம்ம மத்த வேலைய நிறுத்தி வைக்கனும் ஸார்?" கண்ணப்பன்.

"முட்டாள்... முட்டாள் மாதிரி பேசாத. ஒரு பொட்டக்கழுதை நம்ம இடத்த கண்டுபிடிச்சு வந்து நம்ம ஆளு ஒருத்தன கொன்னுட்டு போய் இருக்கா. அவ யாரு? எப்பிடி அவளுக்கு தெரிஞ்சதுனு தெரியல. அவள கண்டுபிடிக்கிற வரைக்கும் நாம கொஞ்சம் அமைதியா தான் இருந்து ஆகனும்..." செழியன்.

"சரி ஸார்... நாம வேணுனா நம்ம இடத்த மாத்திரலாமா ஸார்?" கண்ணப்பன்.

"இல்ல வேண்டாம். இந்த இடத்த அவ்ளோ ஈஸியா யாரலையும் கண்டுபிடிக்க முடியாது. அப்பிடியே கண்டுபிடிச்சாலும் உள்ள நுழையிறது அத விட கஷ்டம். ஒரு பொட்டக்கழுதை எப்பிடி உள்ள நுழைஞ்சா? அதான் எனக்கு யோசனையா இருக்கு..." செழியன்.

"சரியான சாகசக்காரியா இருப்பா போல ஸார். இன்னும் என் கழுத்து நரம்பு வலிக்குது ஸார்..." கண்ணப்பன்.

"அட ச்சை... இப்பிடி சொல்ல உனக்கு வெக்கமா இல்ல?" செழியன் .

"நீ ஒரு தடவ அவக்கிட்ட அடி வாங்கி பாருடா அப்ப தெரியும்..." என மனதுக்குள் நினைத்துக்கொண்டு, "ஸாரி ஸார்..." என்றான் கண்ணப்பன்.

"சரி... இன்னும் ரெண்டு நாளுல ஆதவிய தூக்கி ஆகனும்." செழியன்.

"ஸார்... அந்த பொண்ண தான் காணோம் னு நீங்க சொன்னீங்களே... அப்புறம் எப்படி?" கண்ணப்பன்.

"அவ ஏதோ ப்ரண்ட் வீட்டுல தான் இருக்காளாம்.இப்பத்தான் அவ வீட்ட வேவு பார்க்க நிக்க வச்சு இருந்த நம்ம ஆளு தகவல் சொன்னான். நம்ம வலையில சிக்குன மீனும் வீட்டுக்கு போயிருச்சு. அத ஒரு பொண்ணு தான் கொண்டு போய் சேத்து இருக்கா. தலைவர் நம்மள பிஸினஸ் ல ஃபோகஸ் பண்ண சொல்லிட்டாரு. ஸோ... நம்ம கவனம் ஃபுல்லா இப்ப ஆதவி தான்..." செழியன்.

"சரிங்க ஸார்... அப்ப நாம நாளைக்கே அந்த பொண்ண தூக்கிருவோம். காலேஜ் முடிச்சு வர்றப்ப தனியா தான் ஸார் வரும். கொத்தா தூக்கிறலாம் ஸார்..." கண்ணப்பன்.

"இல்ல... அதுல ஒரு பிரச்சினை இருக்கு. அவ பின்னாடியே இன்னொருத்தி சுத்துறா. அவ யாரு னு தெரியல. அவ ரொம்ப டேன்ஜர். அவள எப்பிடியாச்சும் டைவர்ட் பண்ணனும். இல்ல... அவள கொன்னுறனும்." செழியன்.

"ஸார்... அப்ப ஒருவேளை... அவ தான் அவளா இருப்பாளோ?" என்று கண்ணப்பன் கேட்க அவனை ஒரு முறை முறைத்தான் செழியன்.

"அது இல்ல ஸார்... அந்த பின்னாடியே சுத்துற கழுதை தான் நம்ம இடத்துக்கு வந்த பொட்டக்கழுதையா இருக்குமோ?" கண்ணப்பன்.

"அப்பிடி ஒரு வேளை அவளா இருந்தா? அவ இன்னும் ரெண்டு நாளைக்குள்ள உயிரோட இருக்க மாட்டா. தலைவர் கண்ணுல பட்டுட்டா யாரும் தப்பிக்க முடியாது..." எனக் கூறி கொண்டு பேய் சிரிப்பு சிரித்தான் செழியன்.

"சரிங்க ஸார். நாளைக்கே ஆதவிய தூக்குறோம். குறுக்க அந்த பொட்டக்கழுதை வந்தா அவள கோழி அறுக்குற மாதிரி அறுத்துற வேண்டியது தான்.." என கூறி கண்ணப்பனும் அறை அதிர சிரித்தான்.

"ரொம்ப நிதானமா தூக்கனும். ஆதவி ஒன்னும் பிரச்சினை இல்ல. அவ பின்னாடி சுத்துற கழுதை தான் கண்டிப்பா பிரச்சினை பண்ணும். ஒருவேளை நிலைமை கைமீறுனுச்சுனா ரெண்டு பேரையும் கொன்னுருங்க." செழியன்.

"சரிங்க ஸார்." என அடுத்த நாள் வேலைக்காக ஆதவியை கடத்தியே ஆகனும் என்ற வெறியோடு ஆட்களை ரெடி பண்ண சென்றான் கண்ணப்பன்.

விடிய விடிய செழியனும் கண்ணப்பனும் ஆதவியை கடத்துவதற்கு ப்ளான் பண்ண... அங்கு அவளோ ஆர்ணவியை கட்டிக்கொண்டு குழந்தையாய் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள்.

விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ?
 
பாரதி மகள்கள் -09
விடிய விடிய செழியனும் கண்ணப்பனும் ஆதவியை கடத்துவதற்கு ப்ளான் பண்ண... அங்கு அவளோ ஆர்ணவியை கட்டிக்கொண்டு குழந்தையாய் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள்.

பல திருப்பங்களை வைத்துக்கொண்டு அடுத்த நாளும் அழகாய் புலர்ந்தது. பறவைகளின் இன்னிசை கூக்குரலில் ஆர்ணவி மெதுவாக கண் திறந்து மணியை பார்க்க கடிகாரம் 4 எனக் காட்டியது. ஆர்ணவி எழுந்து தனது அன்றாட பணிகளை முடித்துக்கொண்டு ஆதவியை எழுப்பினாள்.

"ஆது... பேபி... எந்திரி. நீ உன் வீட்டுக்கு போக லேட் ஆகிருச்சு. கமான் கெட் அப் பேபி..." ஆர்ணவி.

ஆர்ணவியின் வார்த்தையிலும் ஆர்ணவி போட்டு வைத்து இருந்த காபி யின் மணத்திலும் அசைந்து அசைந்து மெதுவாக கண் திறந்தாள் ஆதவி.

"குட் மார்னிங் ஆரு. டைம் ஆகிருச்சா டா?" என குழந்தையாக புன்னகைத்தாள் ஆதவி.

எப்பொழுதும் போல் அந்த குழந்தை புன்னகையில் மயங்கி, ஆதவியின் நெற்றியில் ஒரு முத்தமிட்டு, "குட் மார்னிங் ஆது மா. ஆமா பேபி. எழுந்திரி. டைம் ஆச்சு... ப்ரஷ் பண்ணிட்டு காபி சாப்பிட்டு கிளம்பு. இன்னக்கி நெறைய வேலை இருக்கு." என்றாள் ஆர்ணவி.

ஆதவியும் சிரித்துக்கொண்டே, எழுந்து காபி சாப்பிட்டு அவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

"ஆது... ஒரு நிமிஷம்..." ஆர்ணவி.

"என்னடா?"ஆதவி.

"இல்ல... இன்னக்கி என்னமோ பதட்டமா இருக்கு. கவனம் ஆது..." ஆர்ணவி.

"ஏன் இவ்ளோ பயப்படுற? ஏதோ ஒரு மெஸேஜ் வந்து இருக்கு. அவ்ளோ தான். அதுக்கு ஏன் இப்படி பயப்படுற?" ஆதவி.

அந்த நள்ளிரவில் ஆதவியின் வீட்டில் மெஸேஜ் வந்ததும் அதை அப்படியே ஆதவிக்கும் ஃபார்வேர்ட் பண்ணி இருந்தாள் ஆர்ணவி.

"அது இல்ல ஆது... நான் என்ன வேலை பாக்குறேன் னு இது வரைக்கும் வெளில தெரியாது. நமக்கு எத்தனையோ எதிரி... நாம இதுவரைக்கும் எத்தனையோ பேர அடிச்சு இருக்கோம். தண்டிச்சு இருக்கோம். ஆனா நான் பாக்குற வேலை அவனுகளுக்கு சாகுறதுக்கு முன்னாடி தான் தெரியும். இப்ப ஒருத்தன் இப்பிடி தைரியமா அனுப்பி இருக்கான்னா, அவனுக்கு என்னய பத்தி தெரிஞ்சு இருக்கு னு தான அர்த்தம்? ஒரு வேளை செழியனா இருப்பானோ?" ஆர்ணவி.

"ஹா ஹா ஹா... தி க்ரேட் க்ரைம் ப்ரான்ஞ் ஆஃபீசர்... ரௌடிகளின் சிம்ம சொப்பனம்... ஆர்ணவி மேடம் பயப்படுறீங்களா?" ஆதவி.

"ப்ச்... கிண்டல் பண்ணாத ஆது. நான் பயப்படல. நாம கொஞ்சம் எச்சரிக்கையா இருக்குறது நல்லது தான? அவனுக்கு என்னய பத்தி தான் தெரியுமா? இல்ல... உன்னையவும் தெரியுமா னு தெரியலயே..." ஆர்ணவி.

"கமான்... கூல் டவுன் ஆரு... கண்டிப்பா அவனுக்கு என்னைய பத்தி தெரிஞ்சு இருக்காது. அத்தோட அது செழியனா இருக்க வாய்ப்பு இல்லை. செழியனா இருந்தா இப்பிடி ஃபோன் ல விளையாடிட்டு இருக்க மாட்டான். அவனோட முகம் நமக்கு தெரிய கூடாது னு நினைக்கிறான். அப்பிடி இல்லாட்டி இந்நேரம் நம்மள தூக்கி இருப்பாங்க. அவன் மெதுவா காய் நகர்த்தனும் னு நினைக்கிறான். இதுல இருந்து செழியனுக்கு ஒரு ஹெட் இருக்கு னு நமக்கு கன்பார்ம் ஆகிருச்சு..." ஆதவி.

"ஹே... செம செம பேபி... நான் இத யோசிக்க மறந்துட்டேன் பாரு. டக்கு டக்கு னு அடிக்கத்தான் தெரியுது எனக்கு. இப்பிடி நிதானமா யோசிக்க தெரியல பாரேன். நீ ஒரு கலிகால சகுனி ஆது. புள்ள பூச்சி மாதிரி மூஞ்ச வச்சுக்கிட்டு எவ்ளோ யோசிக்கிற?" ஆர்ணவி.

"அதுக்கு உன் மாடில சரக்கு இருக்கனும் செல்லம்." என ஆர்ணவியின் தலையை தொட்டு காட்டி சிரித்தாள் ஆதவி.

"ஹா ஹா... சரி விடு. நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரு..." ஆர்ணவி.

"சரி... நீ அந்த கண்ணப்பன கொஞ்சம் கவனி. நமக்கு அவன் கிட்ட இருந்து நிறைய தகவல் வேணும். சரி ஆரு, டைம் ஆகிருச்சு. நான் கிளம்புறேன்." என ஆர்ணவியிடம் இருந்து விடைபெற்றாள் ஆதவி.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

சூரியன் மெதுவாக தனது கதிர்களை பூமியில் பரப்பிக்கொண்டு தனது கடமையை ஆற்ற கிளம்பி கொண்டிருந்தான். சுற்றியுள்ள வீடுகளில் வாசல் தெளித்து கோலம் போடும் பெண்களும், அவர்களின் வளையல் சத்தமும்... காலை வேளை பறவைகளின் இன்னிசை குரலும் அந்த அழகிய காலைப் பொழுதிற்கு மேலும் அழகு சேர்க்க... இதையெல்லாம் ரசித்துக் கொண்டே கடந்து வந்து தனது வீட்டின் காலிங் பெல் ஐ அழுத்தினாள் ஆதவி.

தூக்க கலக்கத்தோடு கோமளம் வந்து கதவை திறந்தாள்.

"போன வேலையெல்லாம் ஒழுங்கா முடிஞ்சதா டி?"என ஆதவியின் தீஸீஸ் வேலையை மனதில் வைத்துக் கொண்டு கேட்டாள் கோமளம்.

"ஆங்... அதெல்லாம் நல்லா முடிஞ்சுருச்சு சித்தி..." என தான் நைட் செய்த அடிதடியை நினைத்துக் கொண்டு கூறினாள் ஆதவி.

"இனி போறப்ப ஒரு வார்த்தை சொல்லிட்டு போ. அப்பன் ஆத்தா இல்லாதவள நாங்க தான் வளக்குறோம். அப்புறம் ஏதாவது ஒன்னுனா எங்களுக்குத் தான் கெட்ட பேரு..." கோமளம்.

"சரி சித்தி. இனிமே இது மாதிரி நடக்காம பாத்துக்கிறேன்." ஆதவி.

"சரி சரி... மசமச னு நிக்காம போய் வேலைய பாரு. போலீஸ் ஸ்டேஷன் ல குடுத்த கம்ளைண்ட்ட வேற வாபஸ் வாங்கனும். அப்பிடியே உன் சித்தப்பன எழுப்பி விட்டுட்டு போய் வேலைய பாரு." கோமளம்.

தனது சித்தி கூறியதற்கு சரி என தலையாட்டிக்கொண்டு, தனது வழக்கமான வேலையை தொடர்ந்தாள் ஆதவி. வேலை செய்து கொண்டிருக்கையில் திடீரென, "அக்கா..." என சந்தோஷ கூக்குரலிட்டு பின்னாடி இருந்து ஆதவியை கட்டியணைத்துக் கொண்டாள் மதி.

"ஹே... மதிக்குட்டி...நேத்து என்ன ஆச்சு டா?" என தனது தங்கையை பாசமாக முத்தமிட்டுக்கொண்டு கேட்டாள் ஆதவி.

"அதுவா க்கா?" என நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தாள் மதி. பிறகு ரகசியமாக, "அந்த ஆர்ணவி அக்கா போலீஸ் தெரியுமா? அவங்க யார் கிட்டையும் இத சொல்ல கூடாது னு சொன்னாங்க. நான்தான் உன் கிட்ட எதையும் மறைக்க மாட்டேனே... நீ அம்மா அப்பா கிட்ட லாம் சொல்லிறாத.... சரியா?" என ஆதவியின் காதுகளில் ரகசியம் ஓதினாள் மதி.

ஆதவியும் சிரித்துக்கொண்டே, "சரி டா பாப்பா. நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். பிங்கி ப்ராமிஸ்..." எனக் கூறி இருவரும் இணைந்து சிரித்தார்கள்.

அதைப் பார்த்த கோமளம், "அடியேய்... உனக்கு காலேஜ் க்கு நேரம் ஆகலயா? அப்பிடி என்னத்த தான் அக்காளும் தங்கச்சியும் குசு குசு னு பேசுவாளுகளோ... போய் ஒழுங்கா ஸ்கூல் காலேஜ்க்கு கிளம்புற வேலைய பாருங்க... ஓடுங்கடி..."என அதட்டினாள் கோமளம்.

ஆதவியும் தனது வேலைகளை முடித்து விட்டு வழக்கம் போல் கல்லூரிக்கு கிளம்பினாள்.

🔥🔥🔥🔥🔥🔥🔥

"டேய்... அவ வர்றாளா டா?"

"இல்ல தல... இன்னும் வரல..."

"இன்னக்கி சாய்ந்திரம் அவ இதே வழியா தான்டா வீட்டுக்கு போவா. அப்ப கழுகாட்டம் கொத்தி தூக்கிறனும் டா..."

"ஏன் தல.. இப்பவே தூக்குனா என்ன?"

"மரமண்டை... இப்ப வேலை, ஸ்கூல், காலேஜ் னு நிறைய பேர் இந்த சந்துக்குள்ள வந்துட்டும் போய்ட்டும் இருப்பாங்க. நமக்குத்தான் ரிஸ்க். அத்தோட இன்னொரு கழுதையையும் நாம கொல்ல வேண்டி வரும். பொருள் எல்லாம் ரெடியா வச்சுக்கங்க டா..."

"சரி தல... யாரு குறுக்க வந்தாலும் கொத்திறலாம் தல..."

"இப்ப அவள நல்லா அடையாளம் பாத்துக்கங்க... அவ பின்னாடியே பைக்ல இன்னொருத்தியும் வருவா. அந்த பைக்காரிய எப்பிடியாச்சும் டைவர்ட் பண்ணனும். இல்ல... அவள கொன்னுறனும். சரியா? டேய் அவ வர்றாளா னு பாரு..."

"தல... அவ வர்றா தல..."

"ஹே... அவ தான் டா. அவளே தான். இவள தான் நாம தூக்கனும். பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல இவ பின்னாடியே அந்த பைக்காரியும் வருவா. ஆம்பள மாதிரியே சட்டை போட்டுக்கும் திமிரா புல்லட் ல வருவா பாரு."

"எங்க தல அந்த பைக் காரிய காணோம்..."

"சரி.. அவ வரலனா விடுங்க டா... நமக்கு இவ தான் முக்கியம்." என கண்ணப்பனும் அவனது அடியாட்களும் ஆதவி பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் வழியில் உள்ள ஒரு சந்தில் தங்களது காரை நிறுத்தி விட்டு ஆதவியை கடத்த உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தனர்.

இதை ஏதும் அறியாத ஆதவி, மெதுவாக கல்லூரிக்கு செல்ல பஸ் ஸ்டாண்ட் ஐ நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

இவை அனைத்தையும் தூரத்தில் தனது காரில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்ணவி.

ஆதவி, கண்ணப்பனின் காரை கடந்து சென்றதும் வேகமாக தனது காரை கண்ணப்பனின் வாகனத்தை நோக்கி செலுத்தினாள் ஆர்ணவி.
 
பாரதி மகள்கள் -10
ஆதவி, கண்ணப்பனின் காரை கடந்து சென்றதும் வேகமாக தனது காரை கண்ணப்பனின் வாகனத்தை நோக்கி செலுத்தினாள் ஆர்ணவி.

அதே நேரம் ஆர்ணவி ஏற்பாடு செய்து இருந்த கொசு மருந்து அடிக்கும் வண்டி சரியாக அந்த குறுகிய சந்தில் கொசு மருந்து அடித்துக் கொண்டு வர... வேகமாக காரை செலுத்தி வந்த ஆர்ணவி, கண்ணப்பனின் வாகனத்தின் அருகினில் நிறுத்தி விட்டு தனது கூலிங் கிளாஸ் மற்றும் மாஸ்க்கை போட்டுக் கொண்டு இறங்கினாள்.

கொசு மருந்து வண்டியின் உபயோகத்தில் எதிரில் இருப்பவரின் முகம் கூட சரியாக தெரியாததால் கண்ணப்பனும் அவனது அடியாட்களும் சற்று திணறி போயினர்.

இதை பயன்படுத்திக் கொண்ட ஆர்ணவி, கண்ணப்பனின் காரை திறந்து மயக்க மருந்து ஸ்ப்ரே யை அடிக்க திடீரென நடந்த தாக்குதலால் அனைவரும் மயங்கி காருக்குள்ளேயே விழுந்தனர். அதில் கண்ணப்பனை மட்டும் அலேக்காக தூக்கி தனது காரினுள் போட்டு கொண்டு தனது காரினில் அந்த இடத்தை விட்டு அகன்றாள் ஆர்ணவி.

காலம் தாழ்த்தாது கண்ணப்பனை தங்களது இருப்பிடத்திற்கு கொண்டு வந்து கை கால் வாயை கட்டிப்போட்டாள் ஆர்ணவி. இதை ஏதும் அறியாத ஆதவி எப்பொழுதும் போல கல்லூரி சென்று தனது வேலையை தொடர்ந்தாள்.

🔥🔥🔥🔥🔥🔥🔥

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த கண்ணப்பனின் அடியாட்கள், கண்ணப்பனை காணவில்லை என செழியனிடம் சென்று கூறினர்.

"என்னடா சொல்றீங்க?" எனக் காட்டு கத்தலாக கத்தினான் செழியன்.

"எங்களுக்கு எப்பிடி நடந்துச்சு னு தெரியல ஸார். திடீருனு கொசு மருந்து அடிக்கிற வண்டி வந்துச்சு. அப்போ யாரோ ஒருத்தன் உள்ள வந்து என்னத்தையோ அடிச்சான். அவ்ளோ தான் ங்க ஸார் எங்களுக்கு தெரியும். மயக்கம் தெளிஞ்சு பாத்தா தல ய காணோம் ஸார்."அடியாள்.

"ஒன்னத்துக்கும் உதவாத நாய்களா... அத்தனையும் உதவாக்கரைங்க. என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க. கெட் லாஸ்ட்..." என கோவத்தில் கண்கள் சிவக்க கத்தினான் செழியன்.

செழியன் தனது ஃபோனை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்தான்.

"ஹலோ ஸார்... நான் செழியன்." செழியன்.

"தெரியுது... சொல்லு.." என மிரட்டியது ஒரு குரல்.

"ஸார்... இங்க ஒரு பிரச்சினை..." செழியன் .

"என்ன? கண்ணப்பனை யாரோ கடத்திட்டாங்க... அதான?"

"ஸார்... உங்களுக்கு எப்பிடி?" செழியன்.

"ஹா ஹா ஹா... இனி கண்ணப்பன் நமக்கு உபயோகப்பட மாட்டான். அவன தேடி கொன்னுரு. உன் இடத்த மாத்திரு..."

"என்ன ஸார்... இப்பிடி சொல்லுறீங்க?" செழியன்.

"அவளோட அடுத்த டார்கெட் நீயா தான் இருப்ப... எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு."

"அவளா? யாரு ஸார்? அப்ப உங்களுக்கு அவ யாரு னு தெரியுமா?" செழியன்.

"நல்லா தெரியும். அவள ஒரு காரணத்துக்காக விட்டு வச்சு இருக்கேன். கண்ணப்பனும் ஒரு கிரிமினல் தான? அவன் உன்னோட வேலைக்காரன கொன்னுட்டான் னு போலீஸ் ல கம்ளைண்ட் குடு. கண்ணப்பன போலீஸே பாத்துக்கும்..."

"ஸார்... என் வீட்டு வேலைக்காரன் எவனும் சாகலயே ஸார்." செழியன்.

"ஹா ஹா ஹா... எவ்ளோ வருஷமா தொழில் பண்ற? உனக்கு இதெல்லாம் சொல்லியா புரிய வைக்கனும்?"

"ஹி ஹி ஹி... புரிஞ்சது ஸார். நானே ஒருத்தன கொன்னுட்டு அத கண்ணப்பன கொலை பண்ணுன மாதிரி செட் பண்ணிட்டு போலீஸ் ல கம்ளைண்ட் குடுக்கனும்.அதான ஸார்?" செழியன்.

"அதே தான். நீ ஒரு மூணு நாளைக்கி கொஞ்சம் அமைதியா இரு. அவ இவ்ளோ தைரியமா பட்டப்பகல்லயே கண்ணப்பன தூக்குவான்னு நினைக்கல..."

"ஸார்... யாரு ஸார் அவ?" செழியன்.

"ஹா ஹா.... ஆர்ணவி. தி க்ரேட் க்ரைம் ப்ரான்ஞ் ஸ்பெஷல் ஆஃபிஸர். அன்டர் க்ரௌண்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கா. நீ தான் அவளோட டார்க்கெட். அவளுக்கு நான் ஒருத்தன் உனக்கும் மேல இருக்கேன் னு அவளுக்கு இன்னும் தெரியல. நான் யாரு னு தெரிஞ்சுக்க தான் அவ கண்ணப்பன கடத்தி இருக்கா."

"அன்டர் க்ரௌண்ட் வொர்க்கா? அப்ப அன்னக்கி என் இடத்துக்கு வந்ததும் அவ தானா ஸார்?" செழியன்.

"அவளே தான் செழியா... நான் சொன்னத லேட் பண்ணாம சீக்கிரம் செஞ்சு முடி. அப்பத்தான் நீ ஸேப்."

"சரிங்க ஸார். நான் எதுக்கும் அவளோட ஆத்தா, அப்பன், அவ குடும்பத்த பத்தி விசாரிச்சு வைக்கிறேன். அவள மிரட்டத்துக்க உதவும்." செழியன்.

"அது வேஸ்ட் செழியா. அவ ஒரு அநாதை கழுதை. சொந்த பந்தம் னு யாரும் இல்லை. நீ, நான் சொன்னத செய். ரெண்டு நாளுல எனக்கு வேண்டியத அவக்கிட்ட இருந்து தெரிஞ்சுக்கிட்டு அவள நான் கொன்னுர்றேன்."

"சரிங்க ஸார்." என்று ஃபோனை வைத்து விட்டு தனது வேலைக்காரன் ஒருவனை கொலை செய்ய புறப்பட்டான் செழியன்.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எப்பொழுதும் போல் கல்லூரியில் தனது வேலையை முடித்து விட்டு நிம்மதியாக வீட்டிற்கு வந்து படுத்துறங்கினாள் ஆதவி.

மறுநாள் காலை யாருக்கும் காத்திராமல் அழகாக விடிந்தது. தூங்கி கொண்டிருந்த ஆதவியை நான்கு கரங்கள் மெதுவாக ரகசியமாக எழுப்பியது.

தூக்கக் கலக்கத்தில் மெல்ல கண்ணை சிமிட்டி சிமிட்டி திறந்த ஆதவி, எதிரே மதியையும் செந்திலயும் பார்த்து விட்டு, "என்னடா? பாடத்துல ஏதாவது டவுட்டா? இவ்ளோ சீக்கிரமா எந்திரிச்சு படிக்க ஆரம்பிச்சுட்டீங்க. பரவாயில்லையே... நல்ல முன்னேற்றம் டா பட்டூஸ்." எனக் கூறி தனது வழக்கமான குழந்தை புன்னகையை உதிர்த்தாள்.

"அய்யோ... அக்கா. கொல்லாத... உனக்கு தூக்கத்துலயும் படிப்பு படிப்பு தானா? உன்னையலாம் கட்டிக்க போற புண்ணியவான் ரொம்ப பாவம் க்கா..." என்று சிணுங்கினாள் மதி.

"ஹா ஹா ஹா.... அவன் பாவம் தான். இந்நேரம் எந்த ரோட்டுல எப்பிடி பிச்சை எடுத்துட்டு இருப்பானோ? யாருக்கு தெரியும்?" எனக் கூறி கலகலவென நகைத்தாள் ஆதவி.

"தப்பா சொல்லாத க்கா. இப்பலாம் அத்தான் நல்லா தான் இருப்பாங்க. உன்னைய கட்டிக்கிட்டதுக்கு அப்புறம் தான் அவரு நடு ரோட்டுல பிச்சை எடுக்க போவாரு." என்று ஆதவியை கலாய்த்து விட்டு அங்கிருந்து பறந்தான் செந்தில். கூடவே சிரித்துக்கொண்டு மதியும் ஓடினாள் வெளியே.

"எதேய்... நல்லா தூங்கிட்டு இருந்த புள்ளைய எழுப்பி காலங்காத்தல கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க. அடேய் நில்லுங்கடா ரெண்டு பேரும்." என அவர்களை துரத்திக் கொண்டு வெளியே வந்தாள் ஆதவி.

வெளியே வந்ததும் ஹாலில் இருந்தவற்றை பார்த்து விட்டு ஆஆஆ என வாய் பிளந்து நின்றாள் ஆதவி.

நடு ஹாலில் ஒரு குட்டி மேஜையில் ஒரு பன் னும் அதன் மேல் ஒரு குட்டி மெழுகுவர்த்தியும் பக்கத்தில் குட்டி குட்டி நிறைய மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டு இருந்தது.

"ஹே... என்ன பட்டூஸ் இதெல்லாம்?" ஆதவி.

"ஹாப்பி பர்த்டே ஆது அக்கா ஆஆஆ..." என மதியும் செந்திலும் சேர்ந்து கோரஸ் பாடினார்கள்.

"ஹே... என்ன டா இதெல்லாம்?" என சந்தோஷத்தில் திகைத்து நின்றாள் ஆதவி.

"ஆது அக்கா. வீ லவ் யூ க்கா..." எனக் கத்திக்கொண்டு செந்திலும் மதியும் ஓடி வந்து ஆதவியைக் கட்டிக்கொண்டனர்.

"ஏன்டா... ஏன் பட்டூஸ் இவ்ளோ செலவு பண்ணி இருக்கீங்க? இப்ப இதெல்லாம் தேவையா?" என்றவாரே இருவரையும் அணைத்துக்கொண்டாள் ஆதவி.

அதனைக் கேட்டதும் செந்தில் விருட்டென்று அணைப்பில் இருந்து விலகி, "யக்கோவ்... நீ ஒரு உத்தம கணக்குப்பிள்ளை என நொடிக்கு ஒரு முறை நிருபித்து கொண்டே இருக்கிறீர்..." என்றான்.

"ஆமாம்... ஆமாம்... இதை நான் ஆமோதிக்கிறேன்."என தலையாட்டினாள் மதி.

"நான் இப்ப என்ன சொல்லிட்டேன் னு ரெண்டு பேரும் ஓவரா நடிக்கிறீங்க?"ஆதவி.

"இந்த குட்டி குட்டி மெழுகுவர்த்தியும் இந்த பன் னும் என்ன கோடி ரூபாயா? இதுக்கு போய் இவ்ளோ ஸீன் போடுற. போ க்கா... உனக்காக நாங்க ரெண்டு பேரும் ஆசை ஆசையா செஞ்சோம். நீ என்னடா னா கணக்கு பாக்குற? பாசத்துல யாராச்சும் கணக்கு பாப்பாங்களா?" செந்தில்.

"பார்ரா... செந்திலு பெரிய மனுஷன் ஆகிட்டான். தத்துவம் லாம் பேசுற..." என கல கல வென சிரித்தாள் ஆதவி.

"ப்ச்... அவன விடு க்கா. அவன் கிடக்கான் அரைக்காவெட்டி. நீ வா... வந்து கேக், இல்ல இல்ல... பன்ன வெட்டு... வா வா..." மதி.

"முட்டைக்கண்ணி... உன்னைய அப்புறம் கவனிச்சுக்கிறேன்." என்று மதியை முறைத்து விட்டு, "நீ வா க்கா... நாம பர்த் டே செலிப்ரேஷன பாப்போம்..." செந்தில்.

"ஹா ஹா ஹா... சரி சரி. ரெண்டு பேரும் அடிச்சுக்காதீங்க. வாங்க வாங்க... நாம பன் ன வெட்டலாம்..." என்று மெதுவாக மெழுகுவரத்தியை ஊதி அணைத்து ஒரு குட்டி ப்ளாஸ்டிக் கத்தியை கொண்டு அந்த குட்டி பன் னை வெட்டி மதிக்கும் செந்திலுக்கும் ஊட்டினாள் ஆதவி.

மூவரும் போட்ட சந்தோஷ கூச்சலில் கோமளம் வெளியே வந்து சத்தம் போட... அடித்து பிடித்து ஆளுக்கொரு திசையில் ஓடி மறைந்தனர்.

வழக்கம் போல வீட்டு வேலையை முடித்து விட்டு கல்லூரிக்கு கிளம்பி சென்றாள் ஆதவி.

அன்று மாலை கல்லூரி முடிந்து வந்ததும் தனது வீட்டிற்கு அருகில் உள்ள தனது குட்டி ஆஃபீஸில் அமர்ந்து சில பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தாள் ஆதவி.

அப்பொழுது ஆர்ணவி அந்த ஆஃபீஸ் க்குள் நுழைந்தாள். டியூஷன் எடுத்துக் கொண்டிருந்த ஆதவி, நிமிர்ந்து ஆர்ணவியை பார்த்து விட்டு, "வாங்க மிஸ் ஆர்ணவி. ஒரு வழியா கன்சல்டேஷன் க்கு வந்துட்டீங்க போல..." என முன் பின் தெரியாதவர்கள் போல பேசினாள்.

"இன்னக்கித்தான் கன்ஷல்டேஷனுக்கு சரியான நேரம் கிடைச்சு இருக்கு மிஸ் ஆதவி..." ஆர்ணவி.

ஆர்ணவி உள்ளே வருவதை பார்த்த மதி, "அய்... ஆர்ணவி அக்கா... உங்களுக்கு ஏற்கனவே என் அக்காவ தெரியுமா? ஆது அக்கா... ஆர்ணவி அக்கா யாருனு தெரியுமா? இவங்க தான் என்னைய காப்பாத்தி வீட்டுக்கு கூட்டி வந்தாங்க. அப்புறம் நான் சொன்னேன் ல... ஒரு ரகசியம்... இவங்க தான் அவங்க..." என ஆர்ணவியிடம் ஆரம்பித்து ஆதவியிடம் முடித்தாள்.

"ஓஓ.... அவங்க தான் இவங்களா? ரொம்ப தாங்க்ஸ் மிஸ் ஆர்ணவி. என்னோட செல்லத்த காப்பாத்தி கூட்டி வந்து இருக்கீங்க..." ஆதவி.

"அக்கா... ஆர்ணவி அக்காக்கு தேங்க்ஸ் சொன்னா மட்டும் போதாது. அவங்க என்ன கன்ஷல்டேஷனுக்கு வந்து இருந்தாலும் அவங்களுக்கு நீ ஃப்ரீ யா பண்ணி குடுக்குற... சரியா?" மதி.

"ஹா ஹா ஹா... சரிங்க மகாராணி. தங்கள் சித்தம் என் பாக்கியம்." என்று புன்னகைத்தாள் ஆதவி.

"ஹி ஹி ஹி... அந்த பயம் இருக்கட்டும் சேடிப் பெண்ணே..." என்று அழகாக முறுவலித்தாள் மதி.

"ஹே... ப்யூட்டி ஃபுல்... நீங்க ரெண்டு பேரும் இப்பிடி தான் பேசிப்பீங்களா?" ஆர்ணவி.

"ஹா ஹா... அவங்க எப்போதும் அப்பிடித்தான் க்கா. ஆனா... எங்க ஆதவி அக்கா, கணக்கு னு வந்தா மட்டும் செம ஸ்ட்ரிக்ட். என் ஏழாம் அறிவு என்ன சொல்லுது னா, ஆதவி அக்காவ பொண்ணு பாக்க வர்ற மாப்பிள்ளை கிட்ட... அக்கா, ( a+b)^2 பார்முலா கேக்க போகுது. அவரு பின்னங்கால் பிடறி ல பட ஓடப் போறாரு." என்று இடையில் புகுந்து சிரித்துக்கொண்டே கூறினான் செந்தில்.

"டேய் டேய்... காலையில இருந்து உன் அலம்பல் தாங்கல. ஒழுங்கா ரெண்டு பேரும் வெளில போய் அங்க உள்ள பசங்களோட உக்காந்து நான் சொன்ன கணக்க செஞ்சு முடிங்க. எனக்கு வேலை இருக்கு. வெளில போங்க ரெண்டு பேரும்..." என சிரித்துக்கொண்டே மதியையும் செந்திலயும் வெளியில் துரத்தினாள் ஆதவி.

"போறோம் போறோம்... உண்மைய சொன்னா கசக்குது. நான் சொன்னது நடக்குதா இல்லையா னு பாரு நீ." என புலம்பிக்கொண்டே நோட்டு புத்தகத்தை தூக்கி கொண்டு வெளியில் சென்றான் செந்தில்.

"ஆர்ணவி அக்கா... இன்னக்கி ஆது அக்கா க்கு பர்த்டே. நாங்க இன்னக்கி கேக்.. சே... பன் வெட்டுனோமே. நீங்களும் விஷ் பண்ணிருங்க.." என ஆர்ணவியிடம் உரைத்து விட்டு வெளியே ஓடி மற்ற பசங்களுடன் ஐக்கியமானாள் மதி.

செந்திலும் மதியும் வெளியே சென்றதும் கதவை இழுத்து மூடி விட்டு, "உள்ள வா ஆரு." என ஆர்ணவியை உள்ளே அழைத்துச் சென்றாள் ஆதவி.

"ஹே... ஆது பேபி. ஹேப்பி பர்த்டே... லவ் யூ சோ மச் பேபி.." என ஆதவியை கட்டிக்கொண்டாள் ஆர்ணவி.

"ஹா ஹா ஹா... அது இருக்கட்டும். என்ன ஆச்சு? நான் சொன்னத செஞ்சியா?"ஆதவி.

"ஹே... ஆது மா. எப்ப பாரு வேலை வேலை தான். இரு... நான் உன் பர்த்டே க்கு ஒரு கிப்ட் கொண்டு வந்து இருக்கேன்..." என ஒரு சிறிய உள்ளங்கை அளவு உள்ள பெட்டியை ஆதவியிடம் நீட்டினாள் ஆர்ணவி.

"லூசா நீ? நாம இப்ப லாஸ்ட் மினிட் ல இருக்கோம். இப்ப இந்த கிப்ட்... பர்த்டே லாம் முக்கியமே இல்ல. நான் சொன்னத செஞ்சியா இல்லையா நீ?" ஆதவி.

"கூல் டவுன் ஆது மா. நீ கேக்குற கேள்விக்கு பதில் இந்த கிப்ட் பாக்ஸ் ல தான் இருக்கு. வாங்கி பாரு." ஆர்ணவி.

எதுவும் பேசாமல் ஆர்ணவியிடம் இருந்து அந்த சிறிய பெட்டியை வாங்கி திறந்தாள் ஆதவி. அதில் "dad of eye is waiting for you..." என அழகாக மடித்து வைக்கப்படிருந்த பேப்பரில் எழுதி இருந்தது.

"ஹே... நிஜமாவா ஆரு?" ஆதவி.

"ஆமா பேபி... உனக்கு என்னோட பர்த்டே கிப்ட். நைட் ரெடியா இரு. இப்ப நான் கிளம்புறேன். பை ஆது."என ஆதவியிடம் விடைபெற்றுவிட்டு வெளியே வந்து மதியிடமும் செந்திலிடமும் விடைபெற்றாள் ஆர்ணவி.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

அன்று நள்ளிரவு.... ஆர்ணவியின் இல்லத்தில்... ஒரு நாற்காலியில் கை கால் வாய் கட்டப்பட்ட நிலையில் கண்ணப்பன் உட்க்கார வைக்கப்பட்டு இருந்தான். அவன் எதிரே ஆர்ணவியும் ஆதவியும் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்ந்து இருந்தனர்.

"இங்க பாரு... நீ யாரு என்ன னு உன்னைய பத்துன எல்லா டீட்டைல்ஸூம் எங்களுக்கு தெரியும். நீயும் செழியனும் பொண்ணுங்கள கடத்தி என்ன பண்றீங்க னு எங்களுக்கு தெரிஞ்சு ஆகனும்..." என கண்ணப்பனை மிரட்டினாள் ஆதவி.

பேசும் அவளையே திமிராக அரை மயக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணப்பன்.

"என்ன திமிரா பாக்குற? நீ இப்பிடிலாம் கேட்டாலாம் சொல்ல மாட்ட னு எங்களுக்கு தெரியும். அதுக்குத்தான் நாங்க இத வச்சு இருக்கோம்." என கண்ணப்பனின் முன் ஒரு டூல் பாக்ஸை எடுத்து வைத்தாள் ஆர்ணவி.

"ப்பா... இப்ப உன் கண்ணுல லைட்டா பயம் தெரியுதே... இது என்ன னு தான பாக்குற? துப்பாக்கி படம் பாத்து இருக்கியா? அதுல விஜய் ஸார் யூஸ் பண்ணுன பெட்டி தான் இது. ஆனா நாங்க இத வச்சு அவரு பண்ணுன மாதிரி லாம் பண்ண மாட்டோம். எங்க ஸ்டைலே வேற..." என கூறி கொண்டே பெட்டியை திறந்து ஒரு கட்டிங் பிளேடை எடுத்தாள் ஆதவி.

அதைப் பார்த்து பயத்தில் மிரண்டு விழித்தான் கண்ணப்பன்.

"துப்பாக்கில விஜய் ஸார் விரல கட் பண்ணுவாரு. ஆனா நாங்க..." எனக் கூறி கொண்டே கண்ணப்பனின் கை கட்டைவிரலின் நகத்தை பிய்த்து எறிந்தாள் ஆதவி.

வலி தாங்க முடியாமல் கத்தவும் முடியாமல் கண்களில் நீர் வழிய துடித்தான் கண்ணப்பன்.

"பாரேன்... கண்ணப்பன் கண்ணுல இருந்தும் கண்ணீர் வருது. எத்தனை பொண்ணுங்கள கடத்தி நாசம் பண்ணி இருப்ப? உனக்கு இதெல்லாம் பத்தாது. ஆது.. இங்க குடு. மொத்த நகத்தையும் பிச்சு வீச..." என்றாள் ஆர்ணவி .

அதைக் கேட்ட கண்ணப்பன், "வேண்டாம் வேண்டாம் "என மண்டை ஆட்டிக் கொண்டு நான் சொல்லுறேன் என்பது போல் கண்ணை அசைத்தான்.

உடனே ஆர்ணவி, கண்ணப்பனின் வாய் கட்டை கழட்டி விட்டு அவன் குடிக்க தண்ணீர் குடுத்தாள்.

ஆர்ணவி குடுத்த தண்ணீரை குடுத்து விட்டு, கண்ணப்பன் தாங்கள் செய்யும் தொழிலைப் பற்றி விரிவாக கூற கூற ஆர்ணவி அதிர்ச்சி ஆகி சிலையென தொப்பென்று அமர்ந்தாள்.

கண்ணப்பன் கூறுவதை கேட்டதும், "ஏன்டா *****நாய்களா... பொண்ணுங்க கற்ப விலை பேசுனீங்க... உடல் உறுப்ப வித்து வியாபாரம் பாத்தீங்க... இப்ப... இதையும் விட்டு வைக்கலயாடா *****பயலுகளா? பொண்ணுங்கள பொருளா பாக்காம எப்பத் தான் டா நீங்களாம் உயிருள்ள மனிஷியா பாக்க போறீங்க?" என ஆக்ரோஷமாய் கேட்டுக்கொண்டே கண்ணப்பனை இழுத்து ஒரு அறை விட்டாள் ஆதவி.

ஆதவி விட்ட ஒற்றை அறையில் நாற்காலியோடு தரையில் சரிந்தான் கண்ணப்பன். அவனுக்கு முன்னே அவனது நான்கு பற்கள் தெறித்து விழுந்தது தரையில்...
 
Status
Not open for further replies.
Top