ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தீம் தரிகிட பாரதி மகள்கள் - கதைத்திரி

Status
Not open for further replies.
பாரதி மகள்கள் -06
கண்ணப்பனின் அடியாட்களில் உண்ட மயக்கத்தில் மயங்கி கிடந்த ஒருவன், மதியை கொண்டு வந்து போட்ட இடத்திற்கு எதார்த்தமாக வந்து பார்க்க, அவ்வுருவம் அங்கிருந்த துணிகளை கொண்டு மூட்டையுள் மதி இருப்பது போல் செட் செய்திருந்த ஏற்பாட்டை பார்த்து திருப்தியாக மூச்சை இழுத்து விட்டவன் அடுத்த நொடி மூச்சை இழந்தான்.

அவனின் பின்புறம் இருந்து அவனின் வாய் பொத்தி கூறிய ப்ளேடினால் கழுத்து நரம்பை அறுத்து இருந்தது அவ்வுருவம். அதனுடன் அவனது மணிக்கட்டு நரம்பிலும் கூறு போட அவன் சிறிது சிறிதாக அடங்கி கொண்டிருந்தான்.

அவனை சத்தம் இல்லாமல் தரையில் சாய்த்து விட்டு மீதம் உள்ள அடியாட்களை கவனித்தது அவ்வுருவம். அனைவரும் போதையில் உளறி கொண்டிருக்க, மெது மெதுவாக மதியை தூக்கி கொண்டு அவ்வுருவம் வெளியேறியது.

பாதி தூரம் கடந்து இருக்கையில் அவ்வுருவத்தின் எதிரே பேய் போல வந்து நின்றான் கண்ணப்பன். கண்ணப்பனை கண்டு சிறிதும் அதிர்ச்சி அடையாமல் கண்ணப்பனை ஒதுக்கி கொண்டு முன்னேற முயன்றது அவ்வுருவம்.

தன்னைக் கண்டு பயப்படாமல் தனது இடத்திற்கே வந்து தைரியமாக வெளியேறும் அவ்வுருவத்தின் மீது கடுங்கோவம் கொண்டான் கண்ணப்பன்.

அவ்வுருவத்தின் தோளில் கிடக்கும் மதியை பார்த்து விட்டு, "டேய்... அது என்னோட சரக்கு. ஒழுங்கா தந்துட்டு உயிர் பொழச்சு ஓடிப்போயிரு.." என கண்ணப்பன் ஆக்ரோஷமாய் மிரட்ட, அவ்வுருவம் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து முன்னேற தொடங்கியது.

அதில் உக்கிரம் அடைந்த கண்ணப்பன், தன் கையில் இருந்த கத்தியால் அவ்வுருவத்தை குத்த வர அதை அசால்ட்டாக ஒரு கையால் தடுத்து கண்ணப்பனின் மணிக்கட்டை ஒரு முறுக்கு முறுக்க வலி தாங்காமல் கத்தியை கீழே விட்டான் கண்ணப்பன்.

கண்ணப்பனை அவ்வுருவம் எட்டி ஒரு உதை உதைக்க, ரெண்டு அடி பின்னால் தள்ளிப் போனான் கண்ணப்பன்.
"என்னையவே அடிக்கிறியா நீ?" என ஆக்ரோஷமாய் அவ்வுருவத்தை அடிக்க முன்னே வர தன் கையை கத்தி போல கண்ணப்பனின் கழுத்தில் வர்ம கலையால் ஒரு வெட்டு வெட்ட அடுத்த நொடி கண்ணப்பன் மயங்கி சரிந்தான்.

மீதி அடியாட்கள் போதையில் மயங்கி கிடக்க எவ்வித தடையும் இன்றி அவ்வுருவம் மதியை தூக்கி கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறியது.

ஆள் நடமாட்டம் இல்லாத இருள் சூழ்ந்த அவ்விடத்தில் தன் ராயல் என்ஃபீல்டில் ஸ்டைலாக சாய்ந்து கொண்டு அவ்வுருவத்தை எதிர் பார்த்து காத்து நின்றிருந்தாள் ஆர்ணவி.

ஆர்ணவியிடம் கொண்டு வந்து மதியை சேர்ப்பித்தது அவ்வுருவம்.

"மதியை பத்ரமா வீட்ல விட்டுரு ஆரு." என ஆர்ணவியிடம் கூறியது அவ்வுருவம்.

"அத நான் பாத்துக்கிறேன். உன் கை என்ன ரத்தமா இருக்கு? அங்க என்ன பண்ணுன? உன்னைய எதுவும் பண்ண கூடாது னு தான சொன்னேன்?" என அவ்வுருத்தைப் பார்த்து கேட்டாள் ஆர்ணவி.

"நான் ஒன்னுமே பண்ணல. ஒருத்தன கொன்னுட்டேன். கண்ணப்பன லேசா ரெண்டு தட்டு தட்டுனேன். அவ்ளோ தான் ஆரு. மீ பாவம். மிரட்டாத..." என குரலில் நகை இழையோட கூறியது அவ்வுருவம்.

"உன்னைய கொல்ல போறேன் பாரு. ரெண்டு வருஷமா தேடி இப்ப தான் நாம அந்த செழியன் இடத்த கண்டு புடிச்சு இருக்கோம். இன்னும் அவன பத்துன எந்த ஆதாரமும் முழுசா நமக்கு கிடைக்கல. இதுல கண்ணப்பன சொறிஞ்சு விட்டு வந்து இருக்க. உன்னய..." என அவ்வுருவத்தை அடிக்க கை ஓங்கினாள் ஆர்ணவி.

"நான் ஒன்னும் பண்ணல ஆரு." என மீண்டும் சிரித்த குரலில் கூறியது அவ்வுருவம்.

"ஒன்னும் பண்ணலயா?ஆளப் பாரு ஆள. நாம இத்தன வருஷமா இதுக்காக எவ்ளோ ரிஸ்க் எடுத்து இருக்கோம்? சரி விடு. உன்னைய யாரும் பாக்கல ல?உன்னைய அவனுக பாத்தானுக நம்ம மொத்த ப்ளானும் ஸ்வாகா தான்..." ஆர்ணவி.

"அதெல்லாம் என்னைய எவனும் பாக்கல. செழியன் பொண்ணுங்கள கடத்தி விக்கிறான் னு மட்டும் தான நமக்கு தெரியும்?ஆனா அவன் இன்னும் ஏதோ பெருசா பண்றான் ஆரு. எனக்கென்னமோ அவன் மேல டவுட்டா இருக்கு. ஹெட் அவன் இல்ல னு நினைக்கிறேன்..." என ஆழ்ந்த யோசனையுடன் கூறியது அவ்வுருவம்.

"என்ன சொல்லுற? ஹெட் அவன் இல்லயா?" ஆர்ணவி.

"ஆமா. ஹெட் வேற எவனோ னு எனக்கு தோனுது. அங்க நான் பாத்தத வச்சு சொல்லுறேன். புலி னு நினைச்சு நாம இத்தனை வருஷமா எலி பின்னாடி சுத்திட்டு இருக்கோம்..." என்றது அவ்வுருவம்.

"சரி பாத்துக்கலாம். எவ்வளவோ பாத்துட்டோம். இத பாக்க மாட்டோமா? இனி நாம கொஞ்சம் பாஸ்ட்டா மூவ் பண்ணனும். பொண்ணுங்கள வச்சு அவன் என்ன பண்றான் னு கண்டுபிடிக்கனும் பர்ஸ்ட். சரி நீ கிளம்பு. நாம ரெண்டு பேரும் ஒன்னா நின்னு பேசுறது ஆபத்து. கிளம்பு நீ.." ஆர்ணவி.

"ஆமா... சீக்கிரமே கண்டுபிடிக்கனும். இன்னக்கித்தான் மதியால அவனோட இடத்த கண்டுபிடிச்சு இருக்கோம். இனி அதிரடி தான். கண்ணப்பன தூக்கிரு ஆரு..." என நகைத்தது அவ்வுருவம்.

"ஹா ஹா ஹா... தூக்கிருவோம். அதுக்குத்தானே இந்த ஆர்ணவி காத்துட்டு இருக்கேன். சரி நீ கிளம்பு." என அவ்வுருவத்திற்கு இணையாக சிரித்தாள் ஆர்ணவி.

"பாத்து ஆரு... மதி பத்திரம்..." எனக் கூறிக் கொண்டே அவ்வுருவம் அங்கிருந்து கிளம்ப தொடங்கியது.

"பேபி... நீ ஓகே தான?" என ஆர்ணவி அவ்வுருவத்திடம் கேட்க, சென்ற அவ்வுருவம் நின்று திரும்பி, "நான் ஓகே தான் ஆரு..." எனக் கூறிக் கொண்டே தன் முகத்தில் இருந்த துணியை எடுத்தாள் ஆதவி.

🔥🔥🔥🔥🔥🔥🔥

அதே நேரத்தில்...

தன் கல்லூரியில் சிசிடிவி புட்டேஜ்ஜை பார்த்துவிட்டு உபயோகமாக எதுவும் கிடைக்காததால் செல்வம் கோமளம் செந்திலிடம் கண்டுபிடிச்சுறலாம் என ஆறுதல் கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு இன்ஸ்பெக்டர் கிளம்ப, எதுவும் கிடைக்காததால் செழியன் வெறி கொண்டு காரை எடுத்துக் கொண்டு தனது பிரத்யேகமான இடத்திற்கு விரைந்தான் மதியை பார்க்க.

தனது இடத்திற்குள் உள்ளே நுழைந்ததும் செழியன் கண்டது மயங்கி கிடந்த கண்ணப்பனை தான்.

மயங்கி கிடந்த கண்ணப்பனைக் கண்டதும் இன்னும் வெறி ஆகி மதியை பார்க்க உள்ளே சென்றான். அங்கு மதி இல்லாமல் தனது ஆள் ஒருவன் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டதும் கோபத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் சுவற்றில்.

"என் இடத்துக்கே வந்து என் ப்ராப்பர்டி ய தூக்கிட்டு என் ஆள கொன்னுட்டு போயிருக்க. என் இரை ஆதவியையும் தூக்கி இருக்க.உன்னைய கொல்லாம விட மாட்டேன் டா. யாருடா நீ? உன்னைய தேடி வர்றேன் டா." என அவ்விடம் அதிர கத்தினான் செழியன்.
 
Status
Not open for further replies.
Top