முதலில் late review கு மன்னிக்கவும்.. ??????
என்னோட favourite genre crime thriller.. ராஜேஷ் குமார் சாருடைய தீவிர விசிறி.. பெண்களில் யாரும் அப்படி எழுதணும்னு நான் அடிக்கடி சொல்லுவேன்.. நிறைய ஆசிரியர்களிடம் கூட கூறி இருக்கிறேன் இப்படி எழுதுங்களேன் னு..
அதற்கு தீனி போடும் விதமாக அமைந்த இந்த தந்த்ரா கன்னி கூட்டு முயற்சிக்கு இதை எழுதிய அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.. ???
முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் கதை பல புதிர்களை எம்மத்தியில் விட்டுச்செல்கிறது... இதன் பின்னாலிருப்பது விஞ்ஞானமா ஆன்மீகமா இல்லை சதியா என்று எம் மூளையை குடைய வைக்கிறது... அதற்கெல்லாம் விடையாக சில ட்விஸ்ட்களை வைத்து இரண்டாம் பாகம் அமைகிறது... epi by epi யாக படிக்கும் பொழுது ஒவ்வொரு எபியிலுமே ஆசிரியர்களின் உழைப்பு தெரிகிறது.. அருமை.. ??????
ஆனால் over all ஆக பார்க்கும்போது ஆங்காங்கே loop holes தெரிகிறது.. அவை என்னென்னவென்று முதலில் விமர்சனம் செய்தவர்கள் கூறிவிட்டார்கள்.. அதனால் அவற்றை நான் திரும்ப குறிப்பிடவில்லை (ஆனானப்பட்ட ozone layers லேயே ஓட்டைகள் இருக்குங்க.. ??)
முதல் முயற்சி என்பதால் அடுத்தடுத்து எழுதும் போது இவைகளை கவனத்திற்கொண்டு செயற்படுவார்கள் என்று நம்புகிறேன்..
Congratulations to the whole team
?????