ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
ரொம்பவே அருமையா கதையை முடித்து விட்டீங்க.. சூப்பர்...

எனக்கு ரொம்பவே பிடித்தது ஆத்மா.. அவனுக்கு ஜோடி வந்தாச்சு சூப்பர்... என்ன ஒரு நட்பு அவனது... அருமை... பொறாமை வேற wow... Lovely moment...

தே ஜு ஆளை பாரு அவனை கத்தியுள் குத்திட்டு ஒருவாரமாக பார்க்க வரலை என்று என்ன ஃபீலிங்... அவனுக்கு என்ன ஆனது என்று கொஞ்சமாவது ஃபீல் பண்ணியா.. உனக்கு நடந்தது கஷ்டமான விஷயம் தான் ஆனால் உன்னை காப்பாத்தி இருக்கான் அதை நினைச்சு சந்தோஷa படு... Atlast சூப்பர் சேர்ந்தாச்சு...

கௌதம் ஸ்டில் இவன் பண்ணிய சில விசயங்கள் என்னால் accept செய்ய முடியலை.. சோ அவ்வளவு நல்லவன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்... கொஞ்சம் கூட சுய சிந்தனை இல்லாது அஷ்வி அடிசசது செம்ம கோபம்... அல்லி க்கூட அதை வேடிக்கை பார்க்கிறா...

எனக்கு மர கதம் அண்ட் அல்லி மேல கோபம்... இவங்க வாழ்வை காப்பாற்றி கொடுக்கு தீரன் தேவை, வந்ததை சொல்லாமல் கூட அப்படி என்ன சுயநலம் போல... செம்ம irritating....

விருதன் தா வீரு aah... சூப்பர்... அவர் மேல் நான் தப்பு சொல்லவே மாட்டேன்...

ராதிகா இவள் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் சாக விட்டு இருக்க கூடாது... பொட்டுனு போயிட்டா.. அவ புருஷன் எல்லாம் பண்ணிட்டு செத்து போயாச்சு... நரகத்துக்கு போக கடவது!

தீரன் சூப்பர் டா நீ... கடைசி வரை அவங்களை காப்பாத்தி விட்டுட்ட... உன் மனசு சூப்பர்... எனக்கு ரொம்ப பிடிச்சது இவனை...

Twist intha வார்த்தைக்கு பொருத்தமான கதை நகர்வு, அண்ட் காட்சி அமைப்பு...

Congrats sis... வெற்றி பெற வாழ்த்துகள்
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் ??? மரகதம், அல்லி.அமைதியா இருந்தது தப்பு தான்... ஆனால் தனக்கென வரும் போது அங்கு சுயநலமே மிகும்...
 
ஹாய் twist thunder??. கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா தலைப்பு மிகவும் அருமை. ரொம்ப வித்தியாசமான கதை ❤❤.மணமேடையில் அஸ்வினியை கடத்திய தீரனை கெட்டவன் என்றே நினைத்து குழம்பி அப்புறம் தீரன் கெட்டவன் இல்லை அவன் தான் ஹீரோ என்று தெளிந்தேன்.அஸ்வினி இவள் பாவப்பட்ட பெண்ணே தான் ??ஏன் என்றால் கல்யாணம் பண்ணிக்கிட்டவன் யாருனு தெரியாம கட்டுனவனையே கொலை செஞ்சு உண்மை தெரிஞ்சு வருத்தபடறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ???. பரமன் துரியோதனனுக்கு கர்ணன் எப்படி சிறந்த தோழனோ அதே போல் தீரனுக்கு இந்த பரமன் சிறந்த தோழன் ???.பரமன் இல்லை என்றால் தீரன் உயிரோடு இருந்து இருக்க முடியாது ??. இவர்கள் நட்பை பார்த்து எனக்கும் கொஞ்சம்பொறாமை தான் ??.கௌதம் வாழ்க்கை எதிர்த்து போராட தெரியாத சுயநலமான கோழை ???. இவன் செஞ்ச ஒரு நல்ல விஷயம் தீரனை கொஞ்ச நாள் வீட்டுல இருக்க அனுமதிச்சது ??. அல்லி இவளும் கௌதம் போல் சுயநலம் கொண்ட பெண் தான். தன் வாழ்க்கை பற்றி யோசித்தாலே தவிர அஸ்வினியை பற்றி யோசிக்கவே இல்லை. குழந்தை காணாமல் போன போது ராதிகா சொன்னதை தானே நம்பினால். கௌதம் அடித்த போது கூட அஷ்வினியை பற்றி யோசிக்கவே இல்லை???. மரகதம் நன்றி கடனுக்கு குழ்ந்தையான தீரனை காப்பாத்தி இருந்தாலும் அடுத்த விஷயம் எல்லாம் தன்னோட பெண்ணுக்காக செஞ்சது மாதிரி தான் இருந்துச்சு ஏன்னா கடைசியா கௌதம் அடிக்கும் போது அந்த பொண்ணு அப்புடி செஞ்சுருக்காதுனு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் ??. விருதன் alise விருஷாலி இவர பத்தி தான் ஆரம்பத்திலேர்ந்து குழப்பம் ???. ஆனால் கடைசியா தான் விருதன் அப்படினு தெரிஞ்சுது. இவரோட காதலை நெனச்சா பிரமிப்பா தான் இருக்கு.நம்ம பார்வையில அவர் செஞ்சது தப்பா தெரியும். அவர் நிலைமையில் யோசிக்கும் போது விருதன் செஞ்சது சரி தான் ??.ராதிகா தேவராஜ் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு இவர்கள் விஷயத்தில் சரியாக நடந்து உள்ளது. விருதன் வேதவல்லியை கொலை செய்த வினை பெற்ற மகனையே கொலை செய்யும் அளவுக்கு சென்று அந்த மகன் உயிரோடு வந்து கேள்வி கேட்க்கும் நிலைமை. பத்து மாதம் சுமந்து பெற்ற மகன் நீ செய்த காரியத்தினால் எனக்கு நல்ல குடும்பம் கிடைத்துள்ளது என்று சொல்வது எவ்வளவு வேதனை தெரியுமா??? அதுவே ராதிகாவிற்கு மரண தண்டனைக்கு சமம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் இறுதியாக வருந்தி இறப்பது. கார்த்திக் தேவகி அழாகன ஜோடி ❤❤❤. மோகினி குறும்பான சுட்டி பெண். இவளை பரமனுடன் சேர்வ து போல் காட்டி இருக்கலாம் ??. இறுதியில் தீரன் அதிரடி அருமை ???அதே போல் அஷ்வினியிடம் மன்னிப்பு கேட்பது மிகவும் அருமை ❤❤❤. விருவிறுப்பானா திருப்பங்கள் நிறைந்த அதிரடியானா கொய்யும் வித்யாசமான கதை.நீங்கள் போட்டியில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் ???.பின் குறிப்பு கொய்யும் கண்கள் மெய் பேசுமா part2 பரமன் ❤மோகினியை எழுது மாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் ???
 
  • Love
Reactions: T21

விருதன் கண்டிப்பாக கெட்டவன் இல்லை... அது தான் தீரன் கூட ஒரு இடத்தில் உங்க காதல் ரொம்ப பிரமிப்பா இருக்குன்னு சொல்லுவான்.. அதனால் தான் விருதனை தீரன் காட்டி கொடுக்க மாட்டான்... கடைசியில் கூட குழந்தைக்கு ஆபத்துன்னு வரும் போது தான். தீரன் உண்மையை சொல்லுவான்... ரொம்ப அழகான கருத்து... ஒரு அழகான விமர்சனமும் கூட... ???? ரொம்ப நன்றி
 
Shayini Hamsha

Active member
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை

"கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ..! "

கதையில் எங்கேயும் எந்த தொய்வும் இல்லாமல் அழகாக விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக இக் கதையை கொடுத்ததுக்கு கதையாசிரியருக்கு நன்றிகள்.

கதையின் முக்கிய மாந்தர்களாக

தீரன் , பரமன், அல்லி , கெளதம் , தேதஸ்வினி, ராதிகா ,விருஷாலி (விருதன்)
மரகதம் ,

மற்றும் இவர்களுடன்
கதையின் சில இடங்களிலே வந்தாலும்

மோகினி , கார்த்திக் , தேவகி

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ.. உண்மையிலேயே.. வாசகர்களை மனதைக் கொள்ளை கொண்டு விட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை..

ஆழி விழிகளை.. கொண்டே.. வாசர்களை கவரந்த கதையின் நாயகன் தீரன் அவனும் அவன் நண்பன் பரமன் இருவருமே எம் மனதை கொள்ளை கொண்டு விட்டனர் .

தீரனின் காதல் மனைவி கதையின் நாயகி தேஜஸ்வினி அப்பாவியாக நடந்தது எதுவும் தெரியாது அறியாமையில் இருந்தாலும் கணவனை கண்டுபிடிக்க தெரியவில்லை. ??ஆனாலும் தீரனையே கெளதமென அவள் நினைத்து இருந்தாலும்
அவள் அவ்வளவு நாளும் அவள் உண்மையான கணவனை கண்டுபிடிக்க தெரியாது அவனை தப்பானவனென நினைத்து கத்தியால் குத்துகின்றாள் இது அவளின் காதலையே கேள்விக் குறியாகின்றது.???

கெளதமின் நெருக்கத்தை தேஸஸ்வினி அசெளகரிகமாக விருப்பமில்லாததாக உணர்ந்திருக்கிறாள் என்றாலும் அவளின் அறியாமை மிக மிக தப்பு. எந்த பெண்ணிற்கும் இருக்க கூடாவே கூடாத அறியாமை..ஒரு வேளை கெளதம் அவளிடம் எல்லை மீறி இருந்தால் அவள் வாழ்வே முழுமையாக அழிந்திருக்கும். அவளாலேயே அவளை மன்னிக்க முடிந்திருக்காது..

கெளதம் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை.. வடிகட்டிய முட்டாள். என்ன படித்து தொழில் பாத்தும் ஒரு நல்ல கணவனாக இருக்கல. அம்மா அப்பா இருவர்களும் மன்னிக்க முடியாத பாவிகளென தெரிந்தும் ராதிகாவிற்கு வக்காளத்து வாங்கி அப்பாவி பெண்ணை வேலைக்காரி மாதிரி நினைக்கின்றான் சுயநாலவாதியின் பிறப்பிடம் ????.

சகோதர பாசம் தீரன் மேல கொஞ்சம் கூட இல்லை. வாழ்வை காப்பாற்றி தந்து உதவி செய்த நன்றி கடனுக்காக கூட தீரனுக்காக கூட எதுவும் நல்லது நினைக்கல.. அஸ்வினியை வேலைக்காரி மாதிரி வேலை ஏவினது போததென்று அவளையே எங்க என் குழந்தை னு கேள்வி கேட்கிறான் மெண்டல். பிறகு என்ன இழவுக்கு அவளிடம் உன் குழந்தையை கொடுத்தான் ? ??

இறுதியில் தீரன் மூலம் அவன் வாழ்வை காப்பாற்றி கொண்டு, சுயநலவாதியாக ராதிகாவிற்கேற்ற மகனென்று நிரூபித்துவிட்டான் .அல்லி மேல் இவன் வைத்த காதல் ஒரு சல்லிக்கும் பிரோசனமில்லை. அல்லியும் அஸ்வினியின் சார்பாக எதுவும் பேசல..நன்றி கெட்ட ஜென்மம்.

அல்லி போன்ற பெண்கள் கண்மூடித்தனமான காதல் என்ற பேரில் , கெளதம் போன்ற பாழுங்கிணற்றில் விழுவதால் கெளதம் போன்றவர்கள் தீரன் சொன்னது போல் சுயமாக சிந்திக்க தெரியாமல் உண்மையான ஆண்மை கட்டியவளுக்கு பிள்ளைகளை கொடுப்பது என்று அதே வேலையை மட்டும் செய்கின்றனர்

ராதிகா இவளெல்லாம் பெண்ணே இல்லை பேயை கூட ஒப்பிடுவது கூட ரொம்ப தப்பு.. பேயை விடவும் மோசமானவள் ராதிகா போன்ற கேடு கெட்ட ஜென்மம் எல்லாம் பெண்ணினத்துக்கு போன்றவர்கள் சாபக்கேடு.

அவளின் கணவன் தேவராஜ் , மகன் என்ற பேரில் கெளதமெல்லாம் ஆண் இனத்தின் சாபக்கேடு. இவர்களின் மரணம் இதனை விட மோசமாக இருந்திருக்க வேண்டும்.

இறுதிவரை விருஷாலி ஒரு ஆணாக இருக்குமென்று நான் எதிர்பார்க்கல.. கதையின் மிக பெரிய டுவிஸ்ட் அதுவும் ஒன்று..?? Hats off ???

விருதன் மேல் அவனின் வாழ்வில் நடந்ததுக்கு பரிதாபம் ஏற்பட்டாலும் அவன் ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தை அபிநவ்வை கொல்ல முயன்றது மன்னிக்க முடியாது.

மரகதம் அல்லி நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுடன் கூட இருப்பவர்களின் புத்தி ஒட்டிக் கொண்டது போல் இறுதியில் சுயநலமாக நடந்து கொண்டது.. மிகப் பெரிய தப்பு.??

பரமாத்மா இவனை எனக்கு தீரனை விடவும் ரொம்ப பிடித்திருக்கின்றது. ???இவனே உண்மையான உறவு , நண்பனுக்கு சிறந்த உதாரணம் இவன் அளவில் பாதி அன்பு பாசம் அக்கறை கூட வேறு யாரும் தீரன் மேல் வைத்திருக்க முடியாது. குகனுடன் தீரன் இருக்கும் சமயத்தில் பரமனின் பொஸிஸ்வினஸ் கொள்ளை அழகு???

கார்த்திக் மனைவி தேவகி மேல் கொண்டுள்ள எல்லை இல்லாத காதல் ரொம்பவும் அருமை . மோகினி தெரியாமல் தப்பு செய்தாலும்.. அவள் அதனை உணர்ந்து வருத்தப்பட்டது..நன்று..
இருந்தாலும் எதனையும் அறிந்து ஆராயாமல் முடிவெடுக்க கூடாதற்கு இவள் நல்ல உதாரணம்.

கார்த்திக் , தேவகி, மோகினி மூவரும் கதையில் சிறிது இடங்களில் வந்தாலும்.. மனதை கவர்ந்தனர்.

உண்மையான ஆண்மகனுக்கு..தீரன் கார்த்திக், பரமன் மூவரும் சிறந்த உதாரணம்..

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ.! அருமையான விறுவிறுப்பான கதையினை மிகவும் சுவாரஸ்யமாக கொடுத்த கதையாசியரின் பரிசாக.. இக்கதை டுவிஸ்ட் 21 போட்டியில் வெற்றி பெற கதை வாசகியாக எனது மனதார வாழ்த்துக்கள்
 
Last edited:
  • Love
Reactions: T21
Top