ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் ரிதம்- கதை திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அவன் இழுக்கும் வேகத்தில் அவனை மோதிவிட... அவன் முகத்தை சுருக்கி பார்த்தாள் .


அவன் முகம் பார்க்க ஏதோ இனம் புரியா... உணர்வு மேலோங்க....


"இப்படியே என் வழக்கை பயணம் உன்னிடம் தொடர கூடாத என்று துடிக்க..."
பார்த்த சில நிமிடங்களில் இது சாத்தியமா..?
என அவளுக்கே இது தவறாக பட...அவள் மனதை அடகினாள்..


அவன் இழுத்த வேகத்தில்...


அவளின் நெற்றி அவன் மார்பில் முட்டி விட " தலை இப்படி வலிக்குது...
இவன் மனுசனா....? இல்ல மிஷினா..!? "


அஹ்ஹ்.... ! வலிக்குதே கத்த கூட முடியயே ...சுற்றி இருப்பவர்கள் முன்னிலையில்.


இங்கு என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்பே ...அவன் கைப்பாவையாக மாறினாள் அவள்...


பாடலின் வரிக்கேற்ப அவளை ஆட்டிவைத்தான் ...... பொம்மலாட்டம் பொம்மைபோல ஆனது அவளின் நிலை.


நடனத்தில் அ, ஆ கூட கற்றிடாத அவளோ .....நடனத்தின் மருவுருவனவன்...அவனிடம் இணைந்து ஆட ...


பார்வையாளர்கள் ஜோடி பொருத்தத்தை பார்த்து வியக்காதவர் எவரும்மில்லை.


அவன் இழுக்கும் திசைகளிலும்....அவன் சுழற்றும் சூழலுக்கு...அசைந்து கொடுத்தாள்.


பாடல் முடிந்து சிறிது நேரம் அவளின் வதனதை ரசித்தவன் நினைவு பெற்றான்....
அவளை விட்டு விலகி நின்றான். அவளோ அவனை முறைத்தவாரு இருந்தாள்.


அவளின் கோபத்தையும் மீறி எக்கச்சக்க வோல்ட்ஜ் அவள் உடம்பில் பாய்ந்தது போலே விறைத்து நின்றாள் சிறிது நேரம் சுயநினைவற்று ......


கொடுத்த ஷாக் பத்தாது ....இன்னும் உனக்கு தருகின்றேன் என்ற எண்ணத்தால்.... ஒற்றை கண்ணை சிமிட்டி .... இதழ்களை குவித்து ஒரு பறக்கும் முத்தம் கொடுக்க...


இவளோ பதறி அவனை விட்டு விலகிச் சென்றாள்.


இந்த இடத்தை விட்டு எப்போ செல்வோம் என்று காத்து இருந்தவளுக்கு சிறிது இடைவேளை கிடைக்க சிட்டாக பறந்தாள்.


தன்னிலை முற்றும் மறந்து அந்த இடத்தைவிட்டு அகன்றாள். எப்படி அந்த அலுவலகம் விட்டு வெளியே வந்தாள் என்ற நினைவு இல்லை...


ஆட்டோ ஏறும் சமயத்தில் தான் பார்த்தாள் அவளின் பதற்றத்தில் உடைமைகள் விட்டு வந்ததை.. தலையை அடித்துக்கொண்டு.


சிலபல யோசனையோடு அந்த அறையை நோக்கி...


தலையை மட்டுமே உள்ளே விட்டு அவன் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு ..... வேக எட்டுக்கள் வைத்த அவள் கைப்பையை நோக்கி அவள் மென்மையான கரங்களை நீட்ட...


அந்த கைப்பை அவள் கைகளில் சென்று அடைவதற்கு முன்பு ..... அவன் கை அதனை எடுத்தது .... அதனுள் உள்ள பொருட்களை ஆராய தொடங்க..


ப்ளீஸ் கொடுங்க ஆட்டோ காசு இல்ல .....
அவள் சொல்வது காதில் விழுந்தும்... அதற்கு பதில் அளிக்காமல்.


அவன் சோதனையை மேற்கொள்ள...'ஆச்சரியப்பட்டு போனான்..
என்ன அழகுசாதன பொருட்கள் ஒன்று கூட இல்லை...! ' ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் பாதி தண்ணீர் காலியான நிலையில் இருக்க அதை எடுத்து பருகியவாரு அவளை பார்க்க..


"எங்கே உதட்டு சாயம்..?"என அவன் கேக்க அவளோ புரியாத பார்வை அவன்மீது பதிக்க..


"லிப்ஸ்டிக் எங்க காணோம்...? "


"அதை எனக்கு உபயோகிக்க பிடிக்காது..."


அவன் அவளை நம்பாமல் அவன் விரல்களால் அவளது பிங்க் நிற ரோஜா இதழ்களை அழுத்தி இருமுறை தேய்த்தான்...


"என்ன செய்கிறீர்கள்..?" அவனது கைகளை வேகமாக தட்டி விட்டாள்...


"செக் செஞ்சேன் லிப்ஸ்டிக் போட்டு இருந்தது போல இருக்கு... அது எப்படி இவளோ பிங்க் ஆ
இருக்கு..? " என அவளின் இதழை சுட்டிக்காட்ட


"நான் வீட்டுக்கு போகனும்...என்னுடைய பொருட்களை கொடுங்க... "


"நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரவில்லை..."என அவனது ஒற்றை புருவத்தை தூக்கி காண்பிக்க.... ஒரு வினாடி மெய் மறந்து நின்றாள் போனாள் அவள்


அவள் தலையை சிலுப்பி கொண்டு... "நான் போகனும்.."


"மாமாடா சொன்ன கூட்டிட்டு போகி விடப்போறேன் ...எதுக்கு என்னிடம் தயக்கம் " அவன் புருவத்தை உயர்த்தி கேட்க அவளோ ஒரு நிமிடம் அவனிடம் மயங்கினாள்...உருட்டும் விழிகளோடு அவனை பார்க்க...


பார்த்து ஒரு மணிநேரம் கூட ஆகவில்லை, அதற்க்குள் முறைவைத்து பேசுபவரின் மீது கொலைவெறி மூண்டது அவளுக்கு


அவனிடம் கைப்பையை பிடிங்கிகொண்டு ஓடினாள்.... "டார்லிங் எங்க போனாலும் மாமா வாட்சிங் யூ." என பறக்கும் முத்தம் ஒன்று அவன் கொடுக்க.


"போடா பொறுக்கி.. "தூரம் சென்றதும் கத்திவிட்டு ஓடினாள்.


'பொறுக்கி...'அவள் சொன்னதை மறுமுறை முணுமுணுத்து ரசித்துக்கொண்டு.


அவள் ஓடுவதை பார்த்து ரசித்து நின்றான். தொடக்கத்தில் இவள் ஓடினாலும் வாழ்க்கை முழுவதும் ஓடுவது... அவனாக இருக்கும் என்று கூறிக்கொண்டு.....


விரைவில் சந்திக்க வருகிறேன்....உங்கள் பிந்து சாரா..
 

Attachments

  • IMG_20201106_193436.jpg
    IMG_20201106_193436.jpg
    362.3 KB · Views: 5

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஓர் அழகிய காலைப்பொழுதில் கதிரவனின் ரம்மியமான மெல்லிய புன்னகையில், அவள் கழுத்திலிருந்த புதிய தாலி... ஆதவனின் ஒளிபட்டு பனித்துளியைப்போல் அழகாய் மின்னிக்கொண்டிருக்க...

தன் மனதிற்கு பிடித்தவனின் கைகளால் வாங்கிக் கொண்ட பாரம்பரியம் மிக்க மூன்று முடிச்சாக இருந்தாலும், அவளுக்கோ அதன் முழு இன்பத்தையும் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை.

'அப்போதெல்லாம் தூரம் இருந்தாலும் நெருங்கி இருந்தது எங்கள் காதல்.... ஆனால் இப்போ, என் அருகில் அமர்ந்திருக்கும் அவனை ஏற்க மனமோ இப்படி யோசிக்கிறது' மனம் போன போக்கில் யோசித்துக்கொண்டு வந்தாள்.

இவளின் எண்ணம் ஒருபுறம் பயணம் செய்துகொண்டு இருக்க.. இந்தக் குழப்பத்திற்கு காரணமான அவளின் மன்னவனோ, எதையோ சாதித்தது போல், முகத்தில் ஒரு பொலிவோடு புதுமாப்பிள்ளைத் தோரணையிலே உட்கார்ந்து இருந்தான்.

அவன் முகத்தில் தோன்றிய தேஜஸை பார்த்து, அவனின் துணைவிக்கு உள்ளுக்குள் தீயை பற்றவைத்தது போலிருந்தது.

அவனை வைத்த கண் வாங்காமல் விசித்திரமாக பார்த்தவளுக்கு, பதிலாக அவனின் அலட்சியப் பார்வை மட்டுமே கிடைத்தது.

அவளுக்கு உள்ளுக்குள் பற்றி எரிந்துக் கொண்டு இருந்த தீ அவளது கண்களில் பிரதிபலித்தது.

" ஏதாவது சாப்பிட வாங்கி வரட்டுமா... ?" என்று தன் அத்தையின் குரலுக்கு பதில் தர நினைத்தவள், ஏதும் பேசாமல் மறுப்பாகத் தன் தலையை மட்டும் அசைத்துவிட்டு மீண்டும் தன் குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள்.

"ஏன்டா.. பொண்ணு ரொம்ப அமைதி போல. உனக்கு ஏத்த மாதிரி பொருத்தமா தான் அமஞ்சிருக்கு, இருந்தாலும் எனக்கு ஒரு மனக்குற, நல்ல வாயாடியா வந்து உன்னோட ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் பேசறவளா இருந்திருந்தா, நான் இன்னும் சந்தோசமாக இருந்து இருப்பேன். பரவால்ல ... என் மருமகள் இப்படி இருக்கிறது கூட அழகுதான்" என தன் மனதில் இருப்பதை மறைக்காது வெளிப்படையாகவே கூறிவிட்டார், அவளின் அத்தை.

அர்ஜுனின் அன்னை மட்டும் சாராவிடம் பேசிக்கொண்டு வர... மெதுவாக அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசிக்கொண்டு வந்தாள் சாரா.

மனமும் உடலும் ஒருசேர அவளை சோர்வாகியாகியது, சிறிது நேரம் தூங்கினால் கொஞ்சம் மனது சமநிலை படும் என்று நினைத்து அமர்ந்து இருந்தாள்.

மீரா அத்தையின் மீது உரிமையோடு சாய்ந்தவாறு தூங்கினாள் சாரா.

சிறிது தூரம் சென்றதும் அவளின் அத்தைக்கு கைகள் மறத்து போனது போல் ஆனது.

அர்ஜூன் சைகையில் அழைத்து சாராவை தாங்குமாறு பணிக்க, அவனுக்கு கசக்குமா என்ன?

இது உரிமையோடு தீண்டும் முதல் ஸ்பரிசம், அவனை வெகுவாக கவர்ந்து இழுத்தாள் அர்ஜுனின் மனம் கவர்ந்த மனையாள்.

மனதில் ஆயிரம் யோசனைகள் அவனுக்கு... 'என்னை தவறாக நினைத்து இருப்பாளோ?.. ' என்று இவனது அறிவு அதன் குரலை உயர்த்தியது.

'இல்லை என்மீது அவளுக்கு அளவுக்கு அதிகமாக நம்பிக்கை உண்டு' என அவன் மனம் அறிவுக்கு போட்டியாக வந்து குரல் கொடுத்து அர்ஜுனை சமாதானப்படுத்தியது.

அவனது மார்பில் இன்னும் ஒன்றி படுத்தாள் சாரா. தனக்கான இடத்தில் வந்து சேர்ந்தது போல, அவள் மனம் நிம்மதியோடு தன்னவனிடம் பாதுகாப்பில் உறங்கினாள்.

தன்னவளை மனைவி என்ற உரிமையோடு தொடும் முதல் ஸ்பரிசம், அர்ஜுன் மெலிதாக சாராவை பார்த்து சிரித்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான்..

அர்ஜுனுக்கு இவர்களின் திருமணம் பற்றி... அதிகமாக ஆசை உண்டு.

இப்படி திடீர் திருமணம் அவனுக்கு சிறிது மனவருத்தத்தை கொடுக்கத்தான் செய்தது.

அர்ஜுன் எப்போதும் அடாவடிதான். முன்பு எல்லாம் அவளின் வேலை நேரத்தில் வம்பிழுப்பதும். அவளுடைய வேலையைச் செய்ய வேறு பணியாள் வைத்துவிட்டு, எப்போதும் சாரா அவனது அருகிலேயே இருக்குமாறு வைத்துக்கொள்வான்.

சாரா தூங்காமல் இருந்திருந்தால் மறந்தும் கூட அவன் புறம் திரும்பி இருக்கமாட்டாள்.

அவனோ அவளின் ஸ்பரிசத்தை ரசித்துக்கொண்டு இருக்க... அர்ஜுனின் அன்னை ஏதோ பேசிகொண்டே வர.. அவனோ தனி உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டு வந்தான்.

இவர்களின் பேச்சு ஏதும் காதில் போட்டுக் கொள்ளாது, நம்ம புதுமாப்பிள்ளையோ அவனுக்கு பிடித்த பாடல்களை மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்தான்.

தொடர்ந்து ஒலிக்கும் அவனது முணுமுணுப்பில் சாரா தூக்கத்திலிருந்து எழுந்து விட்டாள்.

அர்ஜுனை முறைத்தவாரு சாரா விலகி சென்று அத்தையிடம் ஒன்றி அமர்ந்து கொண்டாள்.

அவர்கள் சென்றுகொண்டு இருந்த ரயில் வண்டி முன்னோக்கி தன் பயணத்தை மேற்கொள்ள.

புது மணப்பெண்ணின் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தது.

ஒரு நாள் முன்பு.....

"இன்னும் இரண்டு மணி நேரத்தில் திருமணம் அதற்குள் எப்படியாவது சென்று விட வேண்டும். இந்த ட்ராபிக் வேற...."என்று சலித்தபடி சுற்றிமுற்றி பார்த்தவளுக்கு இந்த நெருக்கடிகளைத் தாண்டி போவது மிகவும் சிரமம் என்று பட்டது.

'ட்ராபிக் இல்லாம போனா கூட பரவாயில்லை ஆனால் நான் இன்னும் ரெடி கூட ஆகவில்லையே என்ன செய்வது...?'என்று தன்னுள் ஆழ்ந்த யோசனையின் பிடியில் சிக்கித் தவித்தவள்,

டிரைவரிடம், "அண்ணா...! இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?"

"ஒரு மணி நேரம் ஆகும் நினைக்கிறேன்மா....."

"அண்ணா இங்க பக்கத்துல ஏதாவது நல்ல ஹோட்டலுக்கு போங்கண்ணா...."

பக்கத்தில் ஒரு விடுதி தென்பட அதன் வாசலில் வண்டியை நிறுத்தினார் அந்த டிரைவர்.... அவ்விடுதிக்குள் நுழைந்தவள்.

"என்னமோ இந்த ஹோட்டலை விலைக்கு வாங்க வந்த மாதிரி இத்தனை செக்கிங் சைன் வாங்குறானுங்க.!!"என்று முனகியவாறு டிரைவர் பக்கம் திரும்பி.

"அண்ணா... இஃப் யூ டோன்ட் மைண்ட்? நீங்க கொஞ்சம் வெயிட் செய்கிறீர்களா, நான் ஒரு அரை மணி நேரத்தில் வந்துவிடுகிறேன்."

"பரவால்ல மா நீங்க போய்ட்டு வாங்க நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்".

என் நம்பரை குறிச்சு வச்சிக்கோ மா நீ வெளியே வந்ததும் கூப்பிடு...."

"தேங்க்ஸ் அண்ணா" என்று சொல்லிவிட்டு ஒரு தலை அசைவோடு அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி விரைந்தாள்.

முழுவதாக தயாராகி ஒரு முறை கண்ணாடியில் அவளை சரி செய்துவிட்டு திரும்பியவள்.

'பரவாயில்லை புடவையில கூட நல்லாத்தான் இருக்கேன் ' என்று நினைத்தவள் அவளது மனம் அவளவனை நினைவு படுத்தியது.

"ஐய்ய்ய்யோ... ! என் கண்ணே பட்டுடும் போல இருக்கே!" என்று தனக்கு தானே சத்தமாக பேசிகொண்டு, ஜஸ்ட் எ மினிட் இத அந்த நல்லவனுக்கும் காட்டனும்னு ஒரு 'கிளிக்' எடுத்து அந்த புகைப்படத்தை அவனுக்கு அனுப்பினாள் .

"ஓகே! லெட்ஸ் மூவ்... இப்போ கெளம்பலாம்".

இப்போது வாகனம் நெரிசல் முன்பை விட சற்று கொஞ்சம் குறைந்திருந்தது.

'எல்லாம் உன் நேரம் சாரா, மண்டபத்தில் சரியாக தாலி காட்டும் நேரத்தில் வந்துருக்கியே உன்ன என்ன செய்றது?'அவளை அவளே கடிந்துகொண்டு அந்த பிரமாண்டமான மண்டபத்தின் உள்ளே நுழைந்தாள். ஏனோ அவள் மனது திடீரென்று படபடத்தது.

'அக்காவை பிரியப்போறோம்ல அதனால தான் இப்படி ஆகுது' ன்னு நெனச்சிட்டே உள்ள ஆர்வமாக நுழைந்தவள்.

'அக்காவின் மாமாவை பார்க்க சென்றவள். வேகமாக கூட்டத்தை விலக்கிக்கொண்டு வேகமாக முன்னேறி சென்றவளுக்கு பெரும் அதிர்ச்சி.

மணமகன் இடத்தில் தன்னுடைய காதலன் கம்பீரமாக இருக்கும் தோரணையைக் கண்டவளுக்கு மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.

'எதுக்கு இவன் இங்க உட்கார்ந்து இருக்கான்?' மக்கு அதுகூட தெரிலையா ? அவனுக்கு கல்யாணம்

'எனக்கு தெரியாமல் என்ன ஏமாத்திட்டானா?? என்று யோசித்தவளுக்கு அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலை சுற்றியது.

தன் அருகில் இருந்த பொருளை இறுக்கி பிடித்தவளுக்கு, காதலனை கொலை செய்யும் அளவிற்கு கோபம் பொங்கிவந்ததை கட்டுப்படுத்தி தன் நிலையை உணர்ந்தவள் அமைதியாக அந்த இடத்திலேயே நின்றுகொண்டாள்.

'ஓ இதனால்தான் அவ்ளோ படபடப்பா இருந்ததா சற்று முன்பு?' என்றெண்ணியவளின் மனமோ பதைபதைக்க. அவள் வாழ்க்கை மற்றும் உயிர் அவளைவிட்டு பிரிந்து செல்லும் உணர்வு.... இவை அனைத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அழுத்தி கண்களை மூடி திறந்தாள்.

'என்னை ஏமாற்றி துரோகம் செய்துவிட்டு இங்க ராஜத்தோரணையில்' இருக்கும் அவனை கண்ணீரோடு கண்கள் சிவக்க... கோபப் பார்வையில் அவனை பார்த்தவளின் மனதிற்குள் நிறைய கேள்விகள்.

சாராவின் வாழ்வில் கண்ணீர் விடக்கூட மறந்த நிமிடங்கள் இதுவாகத்தான் இருக்கும்.

தன் காதலனை மாமா என்று கூப்பிட ஆசைப் பட்டவளுக்கு உண்மையில் மாமா உறவாகி போனான்.

அவளோட காதலன்தான் அக்காவின் கணவன் என்று தெரிந்த பிறகு நம்ம சாராவின் நிலை என்ன...?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
2
வெற்றிகரமாக...அவர்கள் அந்த மிகப் பெரிய நகரத்தின் மத்தியில் வந்து இறங்கினார்கள்.

இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த, வாகனத்தில் ஏறி பயணம் தொடர்ந்தார்கள். இந்த பயணத்தோடு சேர்ந்து, இவர்களின் புது வாழ்க்கை பயணமும் தொடர்ந்தது.

ஆரத்தி எடுத்து விடுபட்டு, போன சில சம்பிரதாயத்தை முடித்துக்கொண்டு, அவரவர் வேலையை துவங்கினார்கள்.

எப்போது தனிமை கிடைக்கும். அப்போது பேசிக்கொள்ள முடிவு செய்து சாரா அத்தை பின்னாலே சுற்றிக்கொண்டு இருந்தாள்.

அர்ஜூனோ அவள் சாப்பிடும் அழகை விழுங்குவதைப் போல பார்த்துக் கொண்டு இருந்தான்.

அர்ஜுனின் பார்வையை பார்த்து சாரா பொத்திக்கொண்டு வந்தது ", அத்தை அவருக்கு ஏதோ வேணும் போல என் சாப்பாட்டை பார்த்துக்கொண்டு இருக்கிறார்" என்று தன் அத்தையிடம் அவனின் செயலை சபையிலே சுட்டிக்காட்டினாள்.

"என்னடா வேண்டும்....?" என்று மீரா கேட்க.

"எதுவும் வேண்டாம் மா...போதும்." என்று அர்ஜுன் சமாளித்தவாறு சாப்பிட ஆரம்பித்தான்.

அன்னை சொன்னதும் அடங்கிவிடுபவனா அவன்... என்று சாரா புரிந்துகொண்டாள். சாராவை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடித்தது, அவனது கண்கள்.

சிறிது நேரம் அனைவரும் பேசி கொண்டிருந்தார்கள்.

அர்ஜுனின் பார்வை அவளிடமே பதிந்து நின்றது.

"அர்ஜுன் கொஞ்சம் இங்கவா.....", என்று அர்ஜுனின் அம்மா அவனை தனியே அழைக்கவும் அவர் அருகில் சென்றான்.

"சொல்லுமா...." என்று தன் அம்மாவிடம் கேள்விக் கேட்க... கண்களோ தன் மனைவியையே விட்டு அகலமா இருந்தது.

"டேய் கல்யாணம் ஏதோ அவசரத்தில் நடந்தது. அதனால் இன்று எதுவுமில்லை... சும்மா வெறிக்க பார்த்துக்கொண்டு இருக்காதே".என்று கடித்துவிட்டு சென்றார்.

சிரித்தவாறு அர்ஜுனின் அன்னை மிக பெரிய சத்தம் இல்லாத குண்டை அவன் மீது வீசினார் ...

"நீ உன் அறைக்கு சென்று தூங்கலாம்" என்ற அவன் தாயின் வார்த்தைகள் அவனுக்கு புரியாமல் போகவே.. சற்று விழித்தப்படி.

"அம்மா! அதனால் என்ன? பாவம் அவளுக்கு ரூம் இங்கு இல்லை நான் அட்ஜஸ்ட் செஞ்சிக்கிறேன்". என்று அர்ஜுன் கூறிய விதத்தில் அவன் அம்மாக்கு சிரிப்பு வர, அதனை அடக்கிக்கொண்டு, முறைப்பை பரிசளித்தார்.

"டேய் நான் சொல்றது புரியுதா இல்லையா....? நீ போ உன் அறைக்கு... மொரடா.....", என்று கூறியபடி தன் மகனின் தோளில் செல்லமாக அன்னை அடித்து விரட்டினர்.

"சரி சரி..... போறேன்" என்றவன் அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு.... முடிந்த அளவு அவளை அவன் கண்களில் நிறப்பிச் சென்றான்.

மணி இரவு பத்து ஆனது, சாரா அமைதியாக ஏதோ யோசித்தவாரு அமர்ந்து இருந்தாள்.

அவனை ஒருவழியாக அனுப்பிவைத்து விட்டு.... மீரா சாராவிடம். "வாமா நம்ம தூங்கலாம்...." , என்று தன் அத்தை கூறுவதை புரிந்துகொண்டு.

ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசாத அர்ஜுனை மனதில் திட்டிக்கொண்டு தூங்கச்சென்றாள்.

இவளுக்கு கோபத்தால் தூக்கம் வரவில்லை என்றால்... அவனுக்கோ தன்னவளை பிரிந்து இருக்க இயலவில்லை.. உரிமை இருந்தும் ஏன் இந்த பிரிவு.....

"இந்த வயதானவர்களை வைத்துக்கொண்டு நிம்மதியா ஒரு வார்த்தையும் பேச முடிகிறதா " என்று புலம்பியவாறு அவனது அறைக்கு சென்றான்.

காலையில் இருந்து அர்ஜுன் அவளிடம் பேச முயற்சி செய்து தோற்றது தான் மிச்சம். அவன் அன்னைதான் சாராவிடம் பேசி கொண்டே இருந்தார் நாள் முழுவதும்.

"சாரா ஏதாவது காலை உணவு சமைத்துவிடு" என்று மீரா கூறியதும் அவரின் முகத்தை கலவரத்தோடு பார்த்தாள்.

"என்ன சாரா டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ் ஆ நீ" என்று சொல்லியவாறு மீரா சிரித்துவிட்டார்.

சாராவிற்கு பதட்டம் கொஞ்சம் குறைந்தது.... சிறிது பதட்டம் அவளிடம் இன்னும் மிஞ்சி இருக்கதான் செய்தது.

"சொல்லித்தாங்க அத்தை இனி கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கொள்கிறேன்" என்று அத்தையிடம் சரணடைந்தாள்.

"அதுஎல்லாம் பெரியவிஷயம் இல்லை... இன்னைக்கு முதல் வகுப்பு, இந்த காய்கறி கொஞ்சம் நறுக்கி வை.... பக்கத்துவீட்டு மாமி அதிரசம் சுடுவதற்கு பதம் எடுக்க வரசொன்னாங்கள்" என்று கூறியவாறு மீரா சென்றுவிட்டார்.

இதை அனைத்தும் அர்ஜுன் தன் அறையிலே இருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான்....

"இதற்கு தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா........" என்று பாடிக்கொண்டே சமையல் அறையை நோக்கி சென்றான்.

மீரா வெளியே சென்ற நேரம் பார்த்து அர்ஜுன் மெதுவாக சாரா என்ன செய்கிறாள் என்று ரகசியமாக பார்க்க.... அவன் பார்த்தது அதிர்ச்சியோ அதிர்ச்சி!

அவன் வந்தது கூட தெரியாமல்.... கேரட் எடுத்துவைத்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தாள்... எந்த பக்கத்தில் இருந்து இதை நறுக்கவேண்டும்? என்று குழம்பிக்கொண்டு இருந்தாள் சாரா.

வடிவம் கோணலாக வர, வடிவம் முக்கியமில்லை டேஸ்ட்தான் முக்கியம்.

"முதலில் அத்தை கொடுத்த வேலை.. குட் கேர்ள்" என்று பெயர் வாங்கவேண்டும் என்ற முனைப்பில் யோசித்துக்கொண்டு இருந்தாள் நம் சாரா.

"கட் செய்ய போறேன்.... கேரட் உன்ன கட் செய்ய போறேன்.... ராகம் இழுத்து பாடினாள் ".

அர்ஜுனுக்கு காதை பொத்திக்கொண்டான் அவளின் சமையல் திறமை ஓரளவுக்கு தெரியும்...

இப்போதுதான் இவளின் பாட்டு திறமை கண்டு பதறினான்.... 'வாழ்க்கை முழுக்க இதை நீ அனுபவிக்கனும் அர்ஜுன் அவ்வ்வ்' அவளை சற்று அதிர்ச்சியோடு சாராவின் பின்னால் நின்று பார்த்துக்கொண்டு இருந்தான் அவள் செய்வது அனைத்தும்.

சாரா கேரட் காட்செய்ய முடியவில்லை. கேரட் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு பீன்ஸ் எடுத்து நறுக்க ஆரம்பித்தாள் அதும் முடியவில்லை ... "கத்தி சரி இல்லை " என்று சாரா கத்தியை குறை சொல்ல..."

'ஆட தெரியாதவளுக்கு மேடை சரி இல்லயாம்' அர்ஜூன் நினைத்துக்கொண்டான்.

"இதை கட் செய்ய ஷார்ப் தேவை இல்லையே..." அர்ஜுன் யோசித்தவரு அவளின் கைகளை எட்டி பார்க்க அதிர்ச்சி கத்தியை கூடவா பிடிக்கக்கூட தெரியாது இவளுக்கு என்று குழம்பினான்.

சாரா கத்தியை திருப்பி பிடித்துக்கொண்டு காய்களை அடித்துக்கொண்டு இருந்தாள்.

'அடியே இது பேரு அடிக்கிறது.. கட்டபண்றது இல்லை'.இவள வச்சிட்டு வாழ்க்கைல ஒரு நேரம் கூட சாப்பாடு கிடைக்காது என்று எண்ணி... இன்னும் என்ன என்ன சேட்டை செய்யப்போறா என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தான்.

சாரா அவன் வந்தது கவனிக்காமல்... காய்கறியை காசாப் போட்டுகொண்டு இருந்தாள். கத்தியக்கி திருப்பி பிடிப்பா என்று நினைத்தவன் பொறுமை இழந்து அதை சொல்லியே விட்டான்.

"சாரா முதலில் கத்தியை திருப்பி பிடி....அப்போ தான் கட் செய்யமுடியும்."திடீர் பின்னே வந்த குரலில் கையை சரியாக வெட்டிக்கொண்டாள்.

"கையை கட் செய்ய தெரிஞ்சவளுக்கு காய்கள் வெட்ட முடியவில்லையா?" அவளை திட்டியவாறு முதலுதவி செய்தான்.

மஞ்சள் தூள் வைத்து... விட்டு விலகவும்.

அவனின் அன்னை வரவும் சரியாக இருக்க.."என்னாச்சி? அர்ஜுன் நீ இங்க என்ன செய்கிறாய்? "

"அத்தை இவர் கட் செய்ய சொல்லி தரேன்னு கையை வெட்டிவிட்டார் "என்று அர்ஜூன்மீது குற்றம் சுமத்தினாள்.

'இவளை பற்றி தெரியாமல் வழியே வந்து மாட்டிக்கிட்டானே' என்று அர்ஜூன் நினைத்தான்.

"அர்ஜுன் வெளிய போ....? "

அர்ஜுன் இங்க வா... "சொல்லுங்கமா மீரா எதாவது உதவி வேணுமா? சாராவை பார்த்தவாறு வினவினான்".

"அர்ஜுன் கொஞ்சம் கீழ குனிஞ்சி நில்லு ..."

"அம்மா என் மேல அவளோ பாசமா... முத்தம் எல்லாம் கொடுக்க போகிறாயா?

அம்மாவிடம் கன்னத்தை காட்டியவாறு சற்று குனிந்து நின்றான் அர்ஜுன்.

நறுக்குகென்று நன்கு குட்டு வைத்தார்கள்...." அம்மா இது ஓவர்.... அவளை வெட்டிக்கிட்டு என்னை மாட்டிவிட்டுட்டா என்னை அடிக்கிறது."

"அத்தை நானும் அடிக்கணும்..." சாரா பாவமாக முகத்தை வைத்து அத்தையிடம் ஆசையாக கேட்க...

"நீ கேட்டு இல்லாமையை சாரா அவனை பெத்ததே நீ அடி கொடுக்கத்தான்.... அர்ஜுன் செல்லம் அம்மாவிடம் வாடா கண்ணா...."

"மா திஸ் நாட் fair. அடி வாங்கத்தான் என்னை வளர்த்தீர்களா?"

அர்ஜுன் சினிங்கியவாறு சாரா முன்பு சற்று குனிந்தான்.... அர்ஜுன் சற்று குனிந்தான்... அடுத்த நொடி சாரா அவனின் தலையிலே இருந்த முடியை பிடித்து இழுத்துவிட்டாள் நன்கு வலிக்குமாறு.

சாராவின் கையோடு சில முடிகள் வந்துவிட்டது.... சாரா அவனிடம் அதை காண்பித்து ஊதி தள்ளினாள்... வெற்றி சிரிப்போடு.

அதான் பிறகு அவனுக்கு நன்கு கொட்டுக்கள் தலையே கொட்டிவிட்டு அனுப்பினார் இருவரும்.

அவன் சென்றபிறகு மாமியார் மருமகள் சிரித்து பேசிக்கொண்டு இருந்ததை பார்த்தவன்.

'உங்க இருவரையும் பிரிக்காமல் விடமாட்டேன் சபதம் எடுத்து அந்த இடத்தை விட்டு அகன்றான்'.

அர்ஜுன் வாங்கிய அடி.... கொஞ்சம் பலம்... சிறிதுநேரம் அவனே ஆசுவாசம் படுத்திவிட்டு.

மறுபடியும் சமையலறை நோக்கி அர்ஜுன் பாட்டு பாடியவாறு நுழைந்தான்...

"உன் சமயலறையிலே நான் உப்பா ? சர்க்கரையை?"

அவனுக்கு எதிர் பாட்டு பாடியது என்னவோ... மீரா தான்...

"அஹ்ஹ்ஹ கறித்தூணி..." பதில் அளித்தது மட்டுமின்றி அர்ஜுன் மீது கறித்தூணி முகத்தில் தூக்கி எறிந்தார்....

"மம்மி ஓவர் இது எல்லாம் " முகத்தில் விழுந்த கரித்துணியை கீழே வீசிவிட்டு மீராவை திட்டிவிட்டு சென்றான்.

2 பிசாசும் நன்றாக உயிர் வாங்குகிறார்கள். மெல்லிய சிரிப்போடு, மனம் முழுவதும் திருப்தியோடு சென்று அவன் வேலையை கவனித்தான்.

அர்ஜுனிற்கு பிடித்து இருந்தது சாரா மீரா ஒன்றிப்போனது.

அடுத்த இரண்டு நாட்களும்....அர்ஜுனின் அன்னை அவனை சாராவிடம் பேசிக்கொள்ள கூட அனுமதிக்கவில்லை.

இந்த விசயம் அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை அவன் அன்னை தான் பார்வையில் அல்லவா அவனை விரட்டினார்...

'அவனாக வந்து பேசுவான்...நடந்ததற்கு ஏதாவது சமாதானம் கூறுவான்' என்று எதிர்பார்த்து சாரா துவண்டுதான் போனாள்.

சாராவிற்கோ மூன்று நாட்களிக்கு மேல் வீட்டில் இருக்க முடியவில்லை.

இந்த மூன்று நாட்களில் அவனிடம் பேச அவள் முயற்சி செய்தாள்.

ஆனால், அவன் அவளின் நோக்கம் புரிந்து விலகி சென்றது வெளிப் படையாகவே தெரிந்தது அதான் பிறகு சாராவும் அர்ஜுன் பேச முயற்சி செய்யவில்லை.

அவளை தவிர்த்தது வேறு காரணம் ஆனால் அவள் புரிந்துக்கொண்டாள் வேறு விதமாக. அர்ஜுன் மீது கோபத்தை உரம் போட்டு வளர்த்துக்கொண்டு இருந்தாள்

'அத்தையிடம் கூறவேண்டும் நான் வேலைக்கு செல்வதை பற்றி.' என்றெண்ணியவள் மீராவின் அறையை நோக்கி சென்றாள்.

' இப்போதே சொல்லிவிடலாம், நாளைக்கு திங்கள்கிழமை வேலைக்கு செல்வதற்கு சரியாக இருக்கும்.'

'அவனாக வந்து பேசிவிடுவான்' என்று எதிர்பாத்தவள், அவன் இந்த மூன்று நாளும் ஒரு வார்த்தைக் கூட பேசாதது அவளுக்கு மேலும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.

இந்த யோசனையை சுமந்து வந்தவளின், பாதையை தடுத்தது அவள் கணவனின் கரம்.

'இவன் எதுக்கு பாதையை மறைக்கிறான்?அதுவும் திடீரென்று!' என்று எண்ணியவள் அவனை, "என்ன?" என்பது போல் பார்த்தாள் சாரா.

"மாலை தயாராகி இரு", என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கூறிச்சென்றான் அர்ஜுன்.

'இப்படி புரியாதது போல பேசும் அர்ஜுனை மனதில் வறுக்க தொடங்கினாள்'.

எதற்கு வந்தோம் என்பதை மறந்துவிட்டு அவன் பின்னால் சென்ற மனதிற்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு, 'முதலில் இவனைப்பத்தி யோசிப்பதை நிறுத்தவேண்டும்'.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
3
வந்த வேலைய விட்டுட்டு இவனை பத்தி யோசிச்சிட்டு இருக்கேன், என்று நினைத்தப்படி தன் அத்தையை தேடி நடக்கலானாள்.

'இதைப் பற்றி அத்தையிடம் எடுத்துக்கூறி வேலைக்கு போய்டணும் " என்று முடிவுக்கு வந்தவள், தோட்டத்தில் இருக்கும் அத்தை நோக்கி அடியெடுத்து வைத்தவள்.. மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு...

'சொல்லிவிடலாம்', என்று எண்ணி ஒரு பெருமூச்சு விட்டப்படி.

" அத்தை உங்களிடம் கொஞ்சம் பேசனும் ." என்று அவள் ஆரம்பிக்கும் போது அவளின் அத்தை, அவளை மேலும் பேசவிடாமல், அவர் பேச்சை ஆரம்பித்து விட்டார்.

"வா மா... நானே வரலாம் என்று நினைத்தேன் உன்னைப் பார்க்க..."

"என்ன அத்த? இவ்ளோ ஹாப்பியா இருக்கீங்க?" என்று அவள் அத்தையின் ஆர்வமான முகத்தை பார்த்து கேட்கவும்..

"பொழுது சாய்ந்த பின் நீங்க ரெண்டு பேரும் கோவில் போயிட்டு வாங்க..." என்ற தன் அத்தையின் வார்த்தையில்,

'திடீரென்று இது எதற்கு?' என்று தோன்றியது அவளுக்கு. அவள் முகத்தில் கேள்வியின் ரேகைகளைக் கண்ட அர்ஜுனின் அம்மா மீரா, மெல்லிய புன்னகையோடு..

"சாந்தி முகூர்த்தம் மா.... அவனை உன்னிடம் சொல்ல சொன்னேனே?! அவன் சொல்லலையா?" என்று தன் அத்தையின் கூறவும் தான் அவளுக்கு விளங்கியது.

'அதுக்கு தான் எருமை ரெடி ஆக சொன்னானா? இது என்ன புது கதை? அவன்கூடலாம் என்னால் வாழவே முடியாது . பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒரு வார்த்தைக்கூட அதை எடுத்து சொல்லாமல் அது பாட்டுக்கு சுத்திட்டு இருக்கான். லவ் பண்ண போது விட்டுட்டு போனவன்... கல்யாணத்துக்கப்புறம் விட்டுட்டுப் போகமாட்டான்னு என்ன நிச்சயம்?' என்று நினைத்தவளின் முகம் வாடிப்போயிருந்தது..

'அதுபோல திரும்ப ஏதாவது நடந்தா என்னால முடியாது. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.' என்று நினைத்தவள் வேகமாக அர்ஜுன் இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.

'ஆனா இன்னைக்கு சம்பவம் இருக்கு அவன்கிட்ட கேட்கிற கேள்வியில அவன் ஓடனும்..' என்று மனதில் கங்கனம் கட்டிக்கொண்டு அர்ஜுனிடம் பேசப் போனாள். அதே நேரத்தில் அவன் ஏதோ பேச வர...

"கொஞ்சம் நிறுத்துரீங்களா? தேவையில்லாததை பேச வேண்டாம். வேற ஒரு பொண்ணுக்கூட உங்க கல்யாணம் நடக்கிறதா இருந்தது. அந்த எதுனாலையோ கல்யாணம் நின்றது. அந்த சமயத்துல நீங்க என்னைய கல்யாணம் பண்ணிட்டீங்க. நம்ம உறவ இதோட நிறுத்திக்கலாம்.

உங்களப்பத்தி தெரிய வேண்டியது தெரிந்துவிட்டது. அதுவரை போதும். நான் எதுவும் கேட்கலை. என்னோட பாஸ்ட்-அ நீங்க கேட்காதீங்க. இந்த கணவன் மனைவி உறவைத் தவிர வேற எதுவும் நமக்குள்ள இல்ல. தேவையில்லாதை பேசி வேண்டாம்." என்று பட்டாசாகப் வெடித்து தள்ளியவளை ஒரு நிமிடம் அச்சரியமாக பார்த்தான். பின்,

"ஹேய்! என்ன நடந்ததுனு புரியாம பேசாத. நான் சொல்றதை கேளு. அங்க என்ன நடந்ததுன்னு எதுவுமே தெரியாமல் இப்படி கோபப்படுவது தவறு." என்றான் அர்ஜுன் பொறுமையாக.

"நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணும்னு இல்ல. அங்க என்ன நடந்தது என்று எனக்கு நன்றாகவே தெரியும். என் மனசுல ஆசைய வளர்த்துட்டு கடைசியா நல்ல வசதியான ஒரு பொண்ணு உங்களுக்கு வீட்ல பார்த்தவுடனே கல்யாணம் கட்டிக்க ரெடியாயிட்டீங்கல? என் நினைவு உங்களுக்கு கொஞ்சம் கூட வரவில்லையா...?" என்று கூறியவளின் குரல் நடுங்கியது. கண்கள் கலங்க அவனை அவள் பார்க்கவும் அர்ஜுனுக்கு பதறியது.

"அப்படி எல்லாம் இல்ல மா...." என்று கூறியபடி ஆறுதலாக அவள் கையை பிடிக்க வர, அவளோ லாவகமாக அவனிடமிருந்து விலகினாள்.

"என்னைய பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல நீங்க..... அங்க போன கடைசி நிமிடம் வரைக்கும் நான் உங்களுக்கு மட்டும் தான்னு நினைச்சுட்டு இருந்தேன்.

அதற்கான தண்டனைத் தான் எனக்கு இப்போ கிடைச்சிருக்கு. வாழ்க்கை முழுக்க இதை நினைத்து நினைத்து நான் வருந்தணும்னு தான் கடவுள் உங்களுக்கும் எனக்கும் முடிச்சி போட்டுவிட்டார். அவளையும் கட்டிக்கிட்டு, அதைப்பத்தி என்னிடம் மறச்சு என்னையும் கட்டிகிடலாம்னு தான பிளான் போட்டு இருந்த....?" என்று கலங்கிய கண்களோடு ஆத்திரத்தில் பொறிந்தாள் அவள்.

இதைக் கேட்டதும் அர்ஜுனின் இதயத்தில் கத்தி எடுத்து குத்தியது போல இருந்தது.

"இதுக்காகத்தான் அன்னைக்கு, 'ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் அதுவும் யாருக்கும் தெரியாமல்' என்று நீ என்னை முளைச்சலவை செய்தாயா?" என்று அவள் மேலும் அவனை நோகடிக்கும் வார்த்தைகளைக் கூறினாள்.

"நான் அன்னைக்கு உன்னோட பிரச்சினைக்கு சொல்யூஷன் சொன்னேன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? பொறுமையா இரு பேசிக்கலாம்." என்று அவளை சமாதனப்படுத்த முயற்சி செய்தான்.

"மோசம் பண்ணிட்டு எப்படி உன்னால பேச முடியுது? இதுல நான் பொறுமையா வேற இருக்கணுமா? துரோகி... போ." என்று ஆத்திரத்தில் அவள் கத்தவும்,

"நான் துரோகியா டி?" என்று மனவலி தாங்காமல் அர்ஜுன் கேட்க..

"ஆமா........." என்று அவள் அக்ரோசமாக கத்தினாள்.

"எனக்கு அப்போ என்ன செய்யுறதுனு புரியலை. என்ன சொன்னா நான் உன்னைய கல்யாணம் பண்ணிடக்கலாம்னு முயற்சி செய்தேன்... ஏதாவது சொல்லிவிட்டால் தப்பாக போயிடுமோனு பயந்தேன்." என்று சோர்வில் தன் தலையில் கைவைத்தப்படி அர்ஜுன் கூற..

"என்னை நீ புரிந்தது அவ்வளவே..." என்றவளின் குரலில் சலிப்பு தெரிந்தது.

"இதுக்கு ஒரு நாள் இல்ல.. தினம் தினம் என்னிடம் அனுபவிப்ப நீ ..." என்று அவள் கூற..

"மூஞ்சியும் ஆளும் பாரு... சரிதான் போடி..." என்று அவன் கூறவும், அவ்விடத்தை விட்டு அவள் நகர்ந்தாள்.

அவள் வருவதற்குள் கோவில் போக தயாராகி வந்தான் அர்ஜுன்.

அணைத்து கோபத்தையும் அர்ஜுன் அவன் அன்னை புறம் திருப்பினான்..

"ம்மா... அவள எனக்கு பிடிக்கலை. உன் சொல் கேட்டு நடந்ததற்கு எனக்கு தண்டனையா.... ? கொஞ்சம் அனுசரணையா நடந்துக்க சொல்லும்மா அவளை.." என்று கோபத்தில் அவன் புருவம் சுருங்கவதைப் பார்த்த அவன் அம்மா.

"ஹேய்! நீ எதுவும் வஞ்சிடாத அவளை. சொன்ன புரியும் அவளுக்கு." என்று அவர் பதட்டத்துடன் கூறினார். தன் தாயின் பதட்டத்தைக்ஸகண்டு சற்று மனம் இளகிய அர்ஜுன்

"சரி ம்மா." என்று அமைதியாக கூறியப்படி அவன் சாப்பிடுவதற்கு நாற்காலியில் அமர... இதை எல்லாம் கேட்டுட்டு அவன் அருகில் வந்து சாப்பிட நாற்காலியை அவள் இழுக்க... 'கீச்!' என்று சத்தம் வந்தது. அந்த சத்தத்தில் கண்களை சுருக்கிய அர்ஜுன்,

"மேனர்ஸ்...!!! " என்று சொல்லிவிட்டு சாப்பிடுவதில் கவனத்தை திருப்பினான்.

இதைக்கேட்ட அவளுக்கு மூக்கு மேல் கோபம் வர, "இடியட்" என்று அவன் காதுபடவே கூறினாள்.

அதை அவன் கண்டு கொண்டது போல தெரியவில்லை. திரும்ப ஒரு முறை சத்தமாக "இடியட்......!!!!" என்று கத்தினாள்.

அவள் கத்திய சத்தம் அர்ஜுனின் அம்மா காதில் விழ, "யாரமா அந்த இடியட்.....?" என்று அவர் அமைதியாக கேட்டார்.

'அச்சச்சோ...மாட்டிகிட்டோமே...!' என்று மனதிற்குள் நினைத்தவள்,

"அது... வந்து... அத்தை......." என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவள் விழிப்பதைப் பார்த்த அர்ஜுனுக்கு லேசாக சிரிப்பு வந்தது.

"நல்லா வாங்கு என் அம்மாவிடம்...." என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அர்ஜுன் அவளிடன் கலாய்க்க.. அவனிடம் எதுவும் கூறாமல் அத்தையிடம் என்ன காரணம் கூறலாம் என்று யோசித்தவளாய்,

"அத்தை.. அது வந்து மாமாவ செல்லமாக அழைத்தேன்..." என்றவள் ஈஈஈஈ என்று பற்களை காட்டி சிரித்தவளை பார்த்தவன்,

"பேசுவது எல்லாம் பேசிவிட்டு மாமாவா....? நல்லா இருக்கு இந்த கதை...." என்று மீண்டும் அவள் காதில் மட்டும் கேட்கும்படி அர்ஜுன் பேசி நமட்டு சிரிப்பு சிரித்தான்.

"இப்படிலாமா கொஞ்சிபீங்க இந்த காலத்து பசங்க?!" என்று சிரித்தப்படி கூறியவர் அவர்களுக்கு தனிமை வழங்கும் நோக்கத்தோடு, அவ்விடத்தைவிட்டு சென்றார். அவர் சென்றதும் அர்ஜுன், தன் மனைவி சாராவிடம்,

"இது பழைய பெயர்... புதுசா வைடி என் சரோ....." என்று நக்கலாக அவன் பேசி முடிக்கும் முன்...

"இப்படி பேசுனீங்கனா, நான் பேசமாட்டேன்...." எல்லாவற்றையும் மறந்து அவனிடம் பேரம் பேசினாள். அதனை கவனித்தவன் சிரிக்க..அவன் சிரிப்பில் மெய்மறந்தவள்,

" பேபி! ஐ வாண்ட் டூ கிஸ் யு." என்று தன்னை மறந்து சாரா கூற..

"ஓகே..ஆனா நம்ம ஃபைட் இன்னும் முடியல." என்று அர்ஜுன் அவளுக்கு நினைவுப்படுத்த...

'எப்படி இதை மறந்து...... அவன்கிட்ட போய் இப்படி கேட்டு வச்சிருக்கேன்? நான் சரியான பைத்தியம்.. அதான் இப்படி என்னைய இம்சை செய்கிறது இந்த இடியட் ...' என்று மனதிற்குள் அவனை அர்ச்சனை செய்துகொண்டே உணவு உண்டு முடிக்கவும் கோவில் கிளம்ப தயாரானார்கள்.

மங்களகரமாக தயாராகி வந்தார்கள் புதுமண தம்பதியர்கள். சாரா, மஞ்சள் நிறத்திலும் ... அர்ஜுன், பட்டு வேட்டி சட்டையிலும் வந்தனர்.

"மஞ்சக்காட்டு மைனா... என்ன கொஞ்சி கொஞ்சி....." என்று அர்ஜுன், சாராவைப் பார்த்து பாட...அதைக்கேட்டு அவள் அர்ஜுனை முறைத்தாள்..

"வரி மாறிவிட்டது...... 'மஞ்சைக் காட்டு மைனா... என்ன முறைத்து முறைத்து போனா.......' " என்று அவன் பாடி முடிப்பதற்குள் சாரா அவனை அனல்கக்கும் பார்வை பார்த்தாள்.

"சரிதான் போடி போடி.... ஏதோ நல்லா இருக்கா என்று பாடினால் ஓவரா தான் பண்ணுற...." என்றவன் கார் எடுக்க போனான்.....

"திமிர பாரு..... இடியட்" என்று அர்ஜுனை முறைத்தபடி பற்களுகுள் வார்த்தைகளை மென்று துப்பினாள் அவனின் மனைவியான சாரா....

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
4

"பாத்துமா அப்படியே கழுத்து ஒரு பக்கம் சுளுக்கிக் போகுது, அப்புறம் எனக்கு தான் எல்லாத்துக்கும் ரொம்ப கஷ்டம் பட வேண்டியதா இருக்கும்".

"என் தலை எப்படி போனா உனக்கு என்ன உன் வேலை வண்டி ஓட்டுவது அதை மட்டும் பாரு, வண்டி கூட ஸ்டார்ட் பண்ண தெரியல வந்துட்டான் வண்டிய தூக்கிட்டு...." கழுத்தை மறுபடியும் முன்பு செய்ததுப் போல் செய்தாள் சாரா .

"மேடம்க்கு நான் டிரைவர் மாதிரி தெரியுதோ!!! " என்றான்.

"என் தலை நான் திரும்பினான் என்ன? உடைஞ்சா உனக்கு என்ன? உன் வேலை மட்டும் பாரு, பதிலே விட்டு போக நினைத்தவனுக்கு எதற்காக இந்த போலி அக்கறை".

"உடைந்தாலும் எனக்கு தான் நஷ்டம் அதுல உனக்கு எதுவுமே இல்லை" என்றாள்.

"ஏன் உனக்கு புரியல எனக்கு தான் கஷ்டம் உனக்கு எதுவுமே இல்லை". அவன் அதையே திரும்ப திரும்ப அவன் சொல்லவும்.....

"அது எப்படி என் கழுத்து போனா உனக்கு என்ன நஷ்டம்".

"உனக்கு சொன்ன புரியவே மாட்டேங்குது நான் டெமோ செய்யவா. அப்போ உனக்கு புரிஞ்சிக்க வசதியா இருக்கும்" என்றான் அவளுக்கு புரியவைக்க.

"போடி மக்கு...!!"

"நான் மக்கு இல்லா நீதான் மங்கா மடையா....போடா".

"சரி சண்டையை அப்புறம் வச்சிக்கோ.. டெமோ காட்டவா?"

"செய்து தொலை இல்லன்னா விடவா போகிறாய் என்னை".

"உன் முகம் கரெக்டா இருந்ததினால் இப்படி முத்தம் கொடுக்க ஈஸி அதுவே யோசிப்பார் வேற பக்கம்...ஓகே உன் மூஞ்சி வேற புறம் திரும்பி இருந்தா எனக்கு இப்படி எட்டி முத்தம் கொடுப்பது ரொம்ப கஷ்டம் ஒரு டைம் என்றால் பரவாயில்லை வாழ்கை முழுவதும் முழுவதும் அப்படி கொடுக்க முடியாது இல்லையா...." என்றான் அறிவாளியா...

"ச்சீய் எச்ச என்று துடைத்து விட்டு அவனை" முறைத்தாள்.

'அடியாத்தி இவர் டெமோ பண்றான் நம்ம சோழி முடிச்சிடுவான் போல', இவன் எந்த விளக்கமும் கொடுக்காமல் இந்த மாதிரி செய்யறத அவளால் ஜீரணிக்கவே முடியல .

"பொறுக்கி!!!!"

தூங்கி கொண்டு இருந்த பூனையை சத்தமில்லாமல் எழுப்பி விட்டுவிட்டாள்.

இதைக் கேட்டதும் எங்க இருந்த அவனுக்கு கோபம் வந்தது என்று தெரியவில்லை "என்னடி நான் பொறுக்கி மாதிரி தெரியுது உனக்கு..."

"ஆமாடா.... பொறுக்கி பொறுக்கி பொறுக்கி..."இடைவிடாது..... அவள் கூறிக்கொண்டே போக...

"மஹாராணி எதுக்கு இந்தபொறுக்கி கூட வரீங்க" என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.

பேசாமல் மௌனம் காத்தாள்.

"என் கோபத்தை அதிகப்படுத்தாமல் இறங்கு.." என்று கர்ஜித்தான்.

"என்ன இப்படி கோவப்படுறீங்க கோபப்பட கூட உனக்கு தெரியுமா அர்ஜுன்" என்றாள் மிரண்டால் விழிகளை உருட்டி.

"இதுக்கு மேல எனக்கு கோபம் வரும் நீ இப்ப இறங்கலாம் உனக்கு ஏதாவது என் கோபத்தை பற்றி தெரியனுமா.... போய் உங்க அத்தைடா போ கேளு".

இன்னும் அவள் இறங்காது அது இவனுக்கு இன்னும் கோபத்தை அதிகப்படுத்த அவனின்

கர்ஜனை மிரண்டால் பாவை...

அவன் குரல் அதிகப்படுத்த..... இவளின் குரல் குறைந்தது.

ஆனா உடனே இவ்வளவு கம்மியா பேச உன்னால தான் மா முடியும்.

"இல்லங்க கோவிலுக்கு போலாம்". பவ்வியமாக பூணகுட்டி பதுங்கியது.

அடி தூள் வாங்க போங்க எல்லாம் கூட இவளுக்கு வருமா!

"நீயும் நானும் கோயிலுக்கு எந்த உபயோகமும் இல்லை ஏதோ புருஷன் கிட்ட பேசுற மாதிரி பேசுற நீ ......எவன் கிட்ட பேசுற மாதிரி பேசுற உள்ள சாமி ரூம்ல நிறைய இருக்கு போட்டோஸ் அதை போய் கும்பிட்டு..."

'நான் சொல்ல வருவதை புரியாமல் குழந்தை தனமா சண்டைக்கு நிற்கும் இவளை என்ன செய்வது...' இன்னும் சாரா மீது கோபம் அதிகரிக்க விட்டால் அடித்துவிடுவான்..அர்ஜுன் சாராவை இறங்க வைப்பதில் நோக்கோடு இருந்தான்.

"சொல்றதுக்குள்ள இறங்கு இல்லன்னா அவ்வளவுதான் கழுத்தை நெரித்து விடுவேன்".

'அடியாத்தி இவன் என்ன கொல்லாம விட மாட்டான் போல.....இப்ப இறங்கி அத்தை கேட்டா இவன மாட்டி விடலாம்' என்று மனதில் திட்டத்தை போட்டுகொண்டு இறங்கினாள்.

அவள் இறங்கிய அடுத்த நிமிடம் கார் பறந்தது, ஒரு நிமிடத்தில் அது கண்ணை விட்டு மறைந்து போனது," வேகமா இந்த எருமை போயி எங்கேயாவது மோதினாப் பரவாயில்லை யார் மீது மோதினால் என்ன ஆகிறது உயிர் மேல பயம் இல்லை".

சாரா தயங்கி வீட்டின் நுழைகிறாள் "என்னமா இன்னும் கிளம்பலையா அத்தை அவரு என்னை இறக்கி விட்டுட்டு போயிட்டாரு".

"நீ என்னம்மா பண்ண...."அவரோ சிரித்தவாறு வினவ...

"எந்த கோவிலுக்கு போறேன் நான் கேட்டேன் அதற்குள் என்னை இறக்கி விட்டுட்டு போயிட்டாரு".

"நார்மலா அவனிடம் பேசினாயா? இல்லை திட்டுனா மாதிரி பேசினாயா?" என்றார்.

"நார்மலா தான் பேசினேன் அவருக்கு நான் பேசினாலே அவருக்கு பிடிக்கவே மாட்டேங்குது அத்தை நான் என்ன செய்வது" என்றாள் சோகமாக.

"வீட்டிலேயே நிறைய சாமி போட்டோ இருக்கு கோவிலுக்கு போனா ஒரு சாமி கும்பிட முடியும். நீ வீட்ல போய் சாமி அறையில் நிறைய சாமி வச்சிருக்கோம் போய் பொறுமையா சாமி கும்பிடுன்னு சொன்னாரு" என்றாள் அப்பாவியாக.

"நானும் வந்துட்டேன் அத்தை அவரு சொல்றது கரெக்ட் தானே"

என்ன ஒரு ஆக்டிங் அவள் மனசாட்சி அவளைக் கேலி செய்தது. எக்ஸ்ட்ரா பிட்டிங் நல்லா இருக்கு...என்று அவளது இன்னோரு மனம் அவளை பாராட்டியது.

"சாரா இப்பதான் பொறுமையா யோசிக்க ஆரம்பிக்கிறான் மென்மையாக இருந்தவனை நான் கடுமையாக மாத்திட்டேன் ஓ... "அவளுக்கு சந்தேகம் வந்தது முதல் முறையாக.

'நல்லாத்தான் இருந்தா நான் தான் உன்னை டென்ஷன் பண்ணிவிட்டு விட்டேன் அவன் சொல்றதும் கொஞ்சம் பொறுமையாக கேட்டு இருக்கலாமோ'.

அவளோட மனசு பண்ணது அவன்தானே எனக்கு புரிய வச்சு இருக்கணும் இல்ல மூணு நாளா என்ன திரும்பி கூட பாக்கல ஒரு வார்த்தை கூட பேசல இன்னைக்கு காலையிலே வந்து சொல்றான்.... எனக்கு கோவம் வரும் இல்ல சரியாக தான் இருக்க சாரா நீ அவளையே சமாதானப்படுத்திக் கொண்டாள் .

"அத்தை அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் நுழைகிறார்......"

"இந்த கல்யாணம் எப்படி நடந்திருந்தாலும் புனிதமான ஒரு கல்யாணமா... ரெண்டு பேரும் கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோங்கமா,

நான் அவனுக்கு சப்போர்ட் பண்ற நீ நினைக்காத மா அவனுக்கு கோபம் வராது கோபம் வந்தது நான் அவன் அவனோட நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும் அதாம்மா கொஞ்சம் பாத்து..."

"எனக்கு நீங்க அடிச்சிக்கிட்டாலும் சந்தோசமா இருந்த போதும் நான் வாழுகின்ற வாழ்கை என் பசங்களுக்காக தானே..."

சாரா ஒரு மாதிரி மனம் ஏதோ போலாக... பதிலேதும் கூட பேசாமல் அமைதியாக இருக்க,

சாரா முகம் மாற்றத்தை பொறுத்துக்கொள்ளாமல் மீரா அர்ஜுனின் புகைப்படத்தை எடுத்து காண்பிக்க...

டெட்டி பியர் கட்டிபிடித்தவாறு தூங்கும் அர்ஜுனை வைத்த கன்வாங்காமல் பார்த்துக்கொண்டு இருக்க...

மீராவிற்கு அந்த மனமாற்றம் போதுமானதாக இருந்தது. விரைவிலே இருவாரும் மனமும் ஒன்றி வாழ்வார்கள் என்று நம்பிக்கை மீராவிற்க்கு தோன்றியது.

மீரா சாராவின் மனமாற்றத்தை கலைக்க விரும்பாமல் அந்த இடத்தை விட்டு சென்றார்.

இதுவரைக்கும் பெருசா ஏதோ ஆசைப்பட்டதில்லை ஆனால் சாரா வாழ்க்கை எல்லாமே அவனா இருக்கவேண்டும் என்று நினைத்தது அர்ஜுனை தான்....

என்ன ஆனாலும் சரி இவை அனைத்தும் இன்று சரிசெய்து ஆகவேண்டும் என்று எண்ணினால் சாரா.

சாரா செய்வது இன்னும் அவனுக்கு எரிச்சலை கிளப்பும் என்று யாருக்கு தெரியும்.

'சரி நம்ம ஆளுதான் செம்மையா சாப்பிடுவாங்க சமையல் அறையை நோக்கிச் செல்ல ஒரு கலக்கு கலக்கலாம் இம்பிரஸ் பண்றோம் அடிச்சு தூக்குரோம்" என்று எண்ணி துள்ளி சென்றாள்.

உனக்கு பல்ப் நிறைய வரப்போகிறது என்று தெரியாமல் கிச்சனில் நுழைந்தாள்.

அவனுக்கு பிடித்தது செய்து வைக்க போன அதற்குள் எல்லாமே முடிச்சிட்டு நீ எனக்கு ஒரு பெரிய பல்பு குடுத்துட்டு அத்தை.

இந்த ப்ளான் கேன்சல் ஆயிடுச்சு நாம போய் அவனோட அறையை சுத்தம் செய்து நல்ல பேரு வாங்குறோம்.

அவனுடைய அறையை நுழைந்ததும் அடுத்த பெரிய பல்பு அவளின் தலைமீது ஒளிர்ந்தது... வடிவேல் துபாய் கமெடிய ஆனது சாராவின் நிலை தரையிலும் மூஞ்சி பார்த்தா கூட தெரியும் போல அந்த ரேஞ்சுக்கு வைத்திருந்தான் அவனோட அறையை.

சரி ரூமுக்கு வந்தது வந்துட்டோம் ஒரு ரவுண்ட் சுத்தி பார்த்துட்டு போயிருவோம்.

அணைத்து பொருளும் அவ்வளவு நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தது, அர்ஜுன் ஐயோ இவனோட ரூம் எல்லாம் நான் மெயின்டன் பண்றதுக்கு நான் ஒரு அரை நாள் லீவு எடுக்கணும் போலவே தினமும்...

"நம்ம தான் ஓனர் நாமலே லேட்டா போனா தப்பில்லை..."அவளுக்குள் பேசியவாறு அறையை நோட்டம்விட்டாள்.

அங்கு இருந்த ஒரு கிளாஸ் பெயிண்டிங் அவளது கண்களை பறித்தது கால்கள் தானாகவே அவற்றை நோக்கி சென்றது சாராவின் கால்கள்.

'அழகா இருக்குடா.... எடுக்க கை வைக்கும்போது யாரோ வருவது சத்தம்கேட்டு திரும்பவும் பெயிண்ட் பிரேம் கையிலிருந்து நழுவி விழுந்தது.

"ஐயையோ தூள் தூளாக உடைந்து போச்சே... இவன் வந்தானா நம்மளை வறுத்து எடுத்து விடுவான்" என்று பயந்து நின்று கொண்டு இருந்தாள்.

அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவனும் அறையில் நுழைந்தான்.

"அடியாத்தி இவன் முறைக்கிறான் இந்த அளவுக்கு அவன் முகம் சிவந்து நான் பார்த்ததில்லை கோவத்துல வந்திருக்கா வெட்கத்தில் சிவந்து இருக்க நமக்கு தெரியலையே" அவனை பயம் கலந்த குழப்பத்தில் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"அர்ஜுனன் தெரியாம கீழே போட்டுட்டு..." சொல்லி முடிக்கும் முன்பு பளார்னு என்று ஒரு அறை அந்த சத்தம் அறை முழுவதும் நிறைத்தது.

"என்னடி நினைப்புல இருக்க... நானும் பார்த்துட்டு இருக்க கொஞ்சம் கூட அடங்காம அங்கேயும் இங்கயும் சுத்திட்டு இருக்கிற யாரு உனக்கு.... யார் இங்கு வர அனுமதி அளித்தது" என்றான் கோபமாக.

"வந்ததும் இல்லாமல் கைய கால அமைதியா வச்சு இல்லாம என் பேவரிட் பெயிண்டிங் போட்டு உடைத்து வச்சிருக்க,

இது எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா 10 லட்சம் முழுசா கொடுத்து வாங்கி இருக்கேன்".

"இது யாரு வந்து உங்க அப்பா தருவாரா....இரிடேடிங் இடியட்".

"இங்க பாருங்க சும்மா.... அவர் என்னத்துக்கு இங்க இழுகிருங்க".

"தொல்லை விட்டுச்சு உன்ன என் தலையில் கட்டினார்கள் அவரை தான் சொல்ல முடியும்".

"எல்லாமே கரெக்டா அரேஞ்ச் செய்து நடந்த கல்யாணம் மாதிரி பேசி கொண்டு இருக்கீங்க" என்றாள் அடக்கி வைத்த கோவத்தை கொட்டினாள்.

"எப்படி உங்க கல்யாணம் நின்னு போச்சுனு என்ன புடிச்சு கல்யாணம் பண்ணிட்டு பேசுற பேச்சை பாரு" என்றாள் அவனை ஏளன பார்வை பார்த்து.

"விட்ட வரதட்சனை கூட கேட்பான்.

ஹலோ உனக்கு நான் வாழ்க்கை கொடுத்திருக்கேன் டா, ஒரு போட்டோ உடைந்ததற்கு இப்படியா அடிக்கிறாய் வலிக்குது என் கண்ணம்".

"வரதட்சனையும் கேப்ப அதுக்கு பதிலா வரதராஜன் அவங்க பொண்ணையும் கூட்டிட்டு போயிடுங்க சொல்லுவேன்".

"என்ன உனக்கு நான் அடங்கி போகனும் அதற்குதான்.... நீ ஏதோ ட்ரை பண்ணிட்டு இருக்க இங்க" என்றான் அர்ஜூன் சம்மந்தம் இல்லாமல்.

ஐயோடா இவனா அப்படி அலைய விட்டு விட்டாலும் போடா டேய் என்றாகிவிட்டது அவளுக்கு.

"என்னடி உன் கால் கீழே இந்த அர்ஜுன் இருக்கணும்னு நினைக்கிறியா. கனவில் கூட நடக்காது அது புரிந்ததா" அவன் விரலை நீட்டி எச்சரிக்கை.

சாரா அர்ஜுனின் நீட்டிய விரலை பிடித்து கடித்துவைத்தாள்.

"ஆஆஆஆ.... ராட்சசி வலிக்குது... ''அர்ஜுன் கைகளை ஒதறியவாறு.... ''வெளிய போடி ".

"என்ன அர்ஜுன் இப்படி பேசுகிறா, நான் அப்படி எல்லாம் எப்பவாது நினைச்சு இருக்கானா. உன்னை அடிமை படுத்துவது போல? " என்று கேட்டாள்.

"என்னது அர்ஜுனா? எதோ நீதான் எனக்குப் பெயர் வைத்த மாதிரி பெயர் சொல்லி அழைக்கிறாய்.." என்றான் கோபமாக.

"இல்லை என்ன விட பெரிய பொண்ணா அதனால் என் பேர் சொல்லி கூப்பிட்றயா?"

எனது பெயர் சொல்லிக் கூப்பிட பெரிய பொண்ணா தான் இருக்கணுமா என்னடா லாட்ஜிக்கு,இது உனக்கு கோவம் வந்தா லாஜிக் எல்லாம் மிஸ் ஆகுது...அர்ஜுன்

வாங்க போங்கனு கூப்பிட்டு பழகிக்கோ... மரியாதையை கொடுக்க.. உங்க வீட்ல சொல்லி தரவில்லையா".

இதைவிட பேசறது இவளுக்கு ஷாக்கா இருக்கு. இவன் இப்படி எல்லாம் பேசுவானா எப்ப பாத்தாலும் சிரிச்சிக்கிட்டே... சுத்தி இருந்தவன் இவனா? என்று சாராவிற்கு சந்தேகம் வந்தது.

ஐயோ அம்மா தப்பா புரிஞ்சுகிட்ட இவனை நம்ம வெளியே போயிருந்தான் கண்ணத்தில் கை வெச்சிட்டே ஹாலில் வந்து உட்கார்ந்துவிட்டாள் ஒரு மூலையில் நாற்காலியை இழுத்துப் போட்டு.

'காலையிலே இருந்து அர்ஜுன் என்ன இப்படி பண்றான் இதைவிடக் கேவலமான அவனது கழுவி கழுவி ஊற்றினாலும் வராத கோபம் இப்போ மட்டும் எப்படி வந்தது ஐயோ மண்டை காயுது.

இவனை புரிந்துக் கொள்ளகூட முடியலையே".

"இவன் என்ன அன்னியனுக்கு டப் கொடுக்கிறான். ஒருநேரம் கொஞ்சுகிறான் ஒருநேரம் கடித்து குதறுகிறான்..." மேடம் க்கு இவங்க பண்றது மட்டும் புரியாது... அர்ஜுன்காக அவளது மனசாட்சி வாதிட,

நம்ம சின்ன வயசுல இருந்து சொல்லி இருக்கு இல்ல உன் வாய் உன் வாயில தான் எல்லாமே இருக்கு இன்னைக்கு பேசினது கொஞ்ச ஓவராயிடுச்சு.

"அதை வேறு ஓடைத்துவிட்டேன் ...... நம்ம சுத்தம் பண்ணாம வந்த தீட்டுவனோ? அவன் அறைக்கு திடும்ப சென்றால் அடிப்பான் ?"

தயங்கி தயங்கி அவரும் அறையின் வாசலில் காத்துக்கொண்டு இருந்தாள்.

அங்கு என்னடி செய்ற வந்து சுத்தம் செய். அவன் கர்ஜனைல மிரண்டு விழிகளோடு உள்ளே நுழைந்தாள்.

"என்ன கையால் சுத்தம் செய்ய போராய. போ தேவையானவை எடுதுவா..." என்றான் அதிகாரத்தோடு.

"சரிங்க இதோ வரேன்...." என்று வேகமாக சென்று சுத்தம் செய்ய தேவையான ஆயுதத்துடன் வந்தாள்.

"என்னடி வரவர நீ சரியில்ல நாலடி போடணும் தோணுதா? "

"ஐயோ அழகன்டா நீ உன்னை போய் நான் எதுக்குடா அடிக்க போறேன்" என்று முணுமுணுக்க.

"என்னது கேக்கல...."என்றான்.

"அதுவந்து நீ அழகா இருக்கிற நான் உன்னை அடிக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்" என்றாள் தயங்கி.

இவன் பேசிட்டு இருக்கும் போதே பக்குனு சிரிக்க ஆரம்பிச்சிட்டா.

வேற ஒன்னும் இல்லைங்க அவன் சொன்னத நினைச்சி ட்ரீம் போயிட்டா.

அவனை துரத்தி துரத்தி அடிக்கிறது போல காட்சி நினைக்கும் போதே சிரிப்பு சிரிப்பா வருது உண்மையா அடிச்சா எப்படி இருக்கும்னு யோசிக்கிறார் .....அவளையே மறந்து சிரித்து விடுகிறாள் அதை நினைத்து.

அர்ஜுனின் கர்ஜனையில் நிகழ் உலகத்திற்கு வருகிறாள்

அடியாத்தி உளறிக்கொட்டி விட்டோமோ.

"இவன் என்ன இப்படி பார்க்கிறான். அடிக்க வருவது போலவே தெரிகிறதே... "

ஐயோ கண்ணத்த கன்னத்தைப் முன்னல்லாம் கண்ணாத்த கிஸ் குடுக்க வருவான்னு தோணும் இப்ப எல்லாம் அப்படியே அறை கொடுக்க வர மாதிரி தோணுது, எல்லாம் என் நிலைமை என்று கலவரமா பார்த்தாள்.

"முன்ன லெப்ட் இப்ப ரைடர் ஐயோ கண்ணத்த மறைத்து விடுவோம். அடிவிலுந்தலும் கொஞ்சம் குறைவாக வலிக்கும்" என்று யோசித்து. இரண்டு கைகளால் இரண்டு கன்னத்தை பொத்தி கொடுக்க.

"நீ கன்னத்தை மறைத்தாலும் என்னால உன்னை எதுவுமே செய்ய முடியாது நினைக்கிறயா...." என்றான்.

"அத ரெண்டு கண்ணு இருக்குல்ல நோண்டி எடுத்துடறேன் அந்த ரெண்டு பல்பு வச்சுட்டு தானே ஆள் மயக்குற..."

'எனது கண்ணை நோண்டி எடுக்குறியா' அதிர்ச்சியில் இரண்டடி பின்னால் போய் விழுந்தாள்.
 
Top