ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதலாடி காத்திருந்தேன் நான் கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 💖 5
மிருதுளா சென்னை மாநகராட்சிக்கு கிளம்பி விட்டாள், இரயிலில் பயணம் , மிருதுளா தனியாக செல்வதனால் குணா அவளுக்கு ஏசி கம்பார்ட்மென்ட்லயே டிக்கெட் புக் பண்ணி இருந்தான்,கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்று.
ஆனால் மிருவிற்க்கோ இரயில் பயணத்தில் ஜன்னலோர சீட்டில், இளையராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்ட செல்வது மிக பிடிக்கும் , ஒருமுறை கல்லூரி சுற்றுளா செல்லும் போதுதான் அந்த அனுபவத்தை உணர்ந்தாள். இருப்பினும் தன் பெற்றோர்களின் நிம்மதிக்காக இதை ஏற்றுக்கொண்டாள்.
அவள் இருக்கும் இடத்தில் இன்னும் வேறு எவரும் வரவில்லை, போக போக ஆட்கள் ஏறுவார்கள் என நினைத்து கொண்டு,தன் ஹெட்செட் எடுத்து காதில் மாட்டினாள்.
இம்முறையும் அதே இளையராஜா இசையே அவள் பயணம் முழுவதும் துணை வரப்போகிறது என நினைத்து கொண்டு
அப்படியே காலை எதிர்த்த சீட்டில் நீட்டி தன் வலது கையை தலையில் வைத்து கண்ணாடி ஜன்னலில் சாய்ந்து பாடலை ஆன் செய்தாள்
பயணம் தொடங்கியது இளையராஜா
பாடலுடன்,
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே... ஹோ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்...
என பாடலின் இசையின் தாலாட்டில் மெல்ல கண்ணயர்ந்தாள் .
பாடல் அடுத்து ,அடுத்து என ஒரு 10 பாடல் மாறியிருக்கும்.
தன் தோளை தொட்டு யாரோ எழுப்பவும் தான் , சட்டென்று பதறி எழுந்தவள்,
"என்ன , என்ன" என ஒன்றும் புரியாது, யார் எதிரில் நிற்கிறார்கள் என்று பதட்டத்துடன் கேட்டவளிடம்.
"ஒண்ணும் இல்லமா உங்க டிக்கெட் அ தாங்க செக் பண்ணணும் என " அங்கு வந்த பெண் டிடிஆர் கேட்கவும் தான் அவள் நிதானத்திற்க்கு வந்தாள்.
தன் கைப்பையில், கையை விட்டு துளாவி டிக்கெட்டையும் ஆதார்கார்டையும் எடுத்து டிடிஆர் கையில் கொடுத்தாள், அவரும் அவளது சீட்டை சரிபார்த்து குறித்து கொண்டு, அவளது டிக்கெட்டும், ஆதார் கார்டையும் அவளிடமே கொடுத்தார், மீண்டும் அதை வாங்கி கைபையில் திணித்து கொண்டிருந்தவள் காதில்
" சார் நீங்க கொடுங்க உங்க டிக்கெட்யை என கேட்கவும் தான் படாரென்று திரும்பி தன் எதிர் இருக்கையை பார்த்தாள், அங்கு ஒரு வாலிபன் அமர்ந்து இருந்தான்.
அவனை பார்த்து விட்டு சுற்றும், முற்றும் பார்த்தாள் அவர்கள் இருவரை தவிர இன்னும் யாரும் வரவில்லை, டிடி ஆர்ரிடம் கேட்டாள்
"மேடம் ,எத்தனை ஸ்டேஷன் தாண்டி இருப்போம் சாரி நான் கொஞ்சம் தூங்கிட்டேன்" என கேட்கவும்
"ஐந்து ஸ்டேஷன் தாண்டி இருப்போம்
மா " என கூறிவிட்டு அவர் தனது வேலையை பார்க்க சென்று விட்டாள்.
இவளும் அப்படியே தன் சீட்டில் அமர்ந்தாள் , அமர்ந்தவள் இப்போது தான் எதிர் சீட்டில் உள்ளவனை பார்த்தாள், இவள் கால் வைத்திருந்த இடத்தில் அவன் அமர்ந்திருந்தான், அலைபாயும் கேசம், பால் போல் முகம் , ஷேவ் செய்தும் செய்யாததுபோல் தாடியும் மீசையும் , அழகான புன்னகை சிந்தும் உதடு , கருப்பு டீசர்ட் , கிரே திரீ போர்த் பேண்ட் என அவனை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து கொண்டிருந்த நேரம் " நீங்க என்னை மேலிருந்து கீழ வரை அடையாளம் பார்த்துட்டீங்கனா , நான் கொஞ்சம் பேசலாமா" என கேட்டான் அந்த புதியவன்.
அவன் பேசியதில் நிகழ்வுக்கு வந்தவள் அவ்வளவு வெளிபடையாவா பார்த்துட்டோம் என தன் மனசுக்குள் தன்னை திட்டியவள், மீண்டும் அவனிடம் " பின்ன இங்க நம்ம இரண்டு பேரும் தான் இருக்கோம் அதான் ஒரு சேப்டிக்கு உங்களை அடையாளம் பார்த்துகிட்டேன், இப்போ அதுக்கென்ன" என வெடுக்கென கேட்கவும் அவன் அமைதியாக,
"அதுக்கு ஒண்ணும் இல்லை மேடம், நீங்க முழிச்சிட்டீங்கன்னா நான் என் போர்வைய எடுத்து கிடலாமா" என கேட்டவனை புரியாமல் பார்த்தாள் மிருதுளா.
"என்னது உங்க போர்வையா என்டயா" என்று குழப்பமாக அவனை பார்க்க.
"ஆமா மேடம் உங்களுக்கு சைடுல பாருங்க இருக்கும் என தன் ஆள்காட்டி விரலை நீட்டியவன் திசையில் பார்த்தாள்" மிரு
அவளுக்கு அருகில் அவள் மேல் இருந்து எடுத்து போட்டதுபோல் கலைந்து கிடந்தது ஒரு போர்வை அப்போது தான் அவள் நினைவுக்கு வந்தது, டிடிஆர் எழுப்பும் போது தன் மேல் மூடி இருந்த போர்வையை இழுத்து அருகில் வைத்தது.
"ஆமா போர்வை, இதெப்படி என் மேலே"
"நான் தான் மூடி விட்டேன்"
"என்னது நீஙகளா?" என அதிர்ச்சியாக கேட்க
"வேற இங்கு யார் இருக்கா, நான் இங்கே வந்தபோ நீங்க குளிர்ல நடுங்கிட்டு இருந்தீங்க பார்க்க பாவமா இருந்திச்சு ,அதான் ஒரு மனிதாபிமானத்தில போர்வை மூடி விட்டேன்" என அந்த புதியவன் கூறவும்
" என்ன பிளர்ட் பண்ண டிரை பண்றீங்களா"
"பார் வாட், பிளர்ட்டிங் ஆ" என அந்த புதியவன் புரியாமல் முழிக்க
"ஆமா பின்ன இல்லையா ,இதே எடத்துல ஒரு பாட்டி இருந்தா மூடி விடுவீங்களா, பியூட்டி இருக்க போய் தான மூடி விட்டிங்க , ஒரு பொண்ணுட்ட அத்து மீறி நடந்து கிட்டது மட்டும் இல்லாமல் அதுக்கு மனிதாபிமானம்ன்னு பேரு வேற ,எப்போ ஒரு பொண்ணு சிக்கும்னு தானே அலைவீங்க இந்த ஆம்பள பசங்கள பத்தி தெரியாது " என அவள் ஆண்களே இப்படித்தான் என ஏளனமாக பேசியவுடன் கோபம் கொண்டவனாக,
"எக்ஸ்கியூஸ் மீ ,என்ன சொன்னீங்க ,அத்துமீறுனனா ,ஆண்களே இப்படி தானா, ஏன் சொல்ல மாட்டிங்க, நான் என் பொருளை யாருக்குமே கொடுக்க மாட்டேன் போயும் போயும் உனக்கு கொடுத்தேன் பாரு என்ன சொல்லனும் ,குளிர்லேயே சாவட்டும்னு விட்டுருக்கனும்" என தன் வலது கையால் தலையில் அடித்து கொண்டவன் சட்டென்று
" என் போர்வைய கொடுங்க" என தன் போர்வையை அவளிடம் இருந்து பிடுங்கி விட்டு தன் இடத்தில் அமர்ந்தான்.
அவளும் தன் இடத்தில் அமர்ந்து , மீண்டும் தன் மொபைலில் பாட்டு கேட்க போனை தேடியபோது அதை காணவில்லை சட்டென்று திரும்பி இவன் எடுத்துருப்பானோ என அவனை பார்த்து "என் போன கொடு" என பட்டென கேட்டுவிட்டாள்.
"சரியா போச்சு , இப்போ இந்த திருட்டு பழி வேறயா, அம்மா தாயே இதோ ஏன் போன பார்த்தியா ரொம்ப காஸ்ட்லி, உன் டப்பா போனெல்லாம் எனக்கு தேவையே படாது , அது உன் ஹென்ட் பேக்குல தான் இருக்கு" என புதியவன் கூறவும் மிருதுளா தன் புருவம் சுருக்கி தன் கைப்பையில் தேட அவளது போன் கிடைத்தது.
இது எப்படி பேக்குள்ள என யோசித்து கொண்டிருக்கும் போதே...
"மேடம் அருமையா பாட்டு கேட்டுட்டே, போன் கீழே விழுந்தது கூட தெரியாம தூங்கிட்டீங்க, நான் தான் போன உங்க ஹேன்ட் பக்ல வைச்சேன் இதுவும் ஒரு சோசியல் சர்வீஸ் மாதிரி தான் பண்ணேன் தாயே , பணத்தை செக் பண்ணிக்கோ பின்ன என்ன தான் சொல்லுவ என சத்தமாக கூறிவிட்டு
" இவங்க டிராவல்ல பொறுப்பில்லாம தூங்குவாங்களாம் நாம ஐய்யோ பாவம்னு ஹெல்ப் பண்ணா நம்மளயே சந்தேகப்படுவாங்களாம் " என அவன் மெல்ல கூறிவிட்டு மீண்டும் தன் போனை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
இவளும் தன் மனதிற்குள் நாமளும் கொஞ்சம் அஜாக்கரதையா இப்படி தூங்குறது, எதாட்டு எடுத்துட்டு போயிருந்தா என்ன பண்றது என நினைத்துக்கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தாள், அவ்ளோ நல்லவனா இவன் என அவனை புருவம் சுருக்கி பார்த்தவள்,இல்ல இல்ல சும்மா கரெக்ட் பண்ண கதை விடுறான் என நினைத்து கொண்டு அமைதியாக இருந்து விட்டாள்.
அவனும் தன் கையில் ஒரு ஆங்கில நாவலை வைத்து படிக்க ஆரம்பித்தவன் தான் ,அதன் பின் இவள் புறம் திரும்பவே இல்லை.
சிறிது நேரம் கழித்து இயற்கை அழைப்பு வரவே கழிவறை நோக்கி சென்றாள்,
அப்போது கழிவறையில் இருந்து ஒரு பாட்டி வெளியே வந்தார் அவர் இவளை பார்த்ததும்,"ஏன்னமா எந்திச்சுட்டியா", என கேட்க இவளுக்கு ஏன் இவர் கேட்கிறார் இவர் யார் ? என்ற குழப்ப முகத்தை காட்ட,
"அது சரி நான் யாருன்னு பார்க்கியா, நான் உனக்கு அடுத்த பகுதில இருக்கேன் , நான் தானமா உனக்கு போர்வை மூடிவிட்டு ,உன் போன உன் பேக்ல வைச்சேன்" என அவர் கூறவும் மிருதுளா இழுவையாக " என்ன நீங்க தான் மூடி விட்டீங்களா அப்போ அவன்"
"யாரு அந்த தம்பியா, அது தான் என்ன கூட்டி வந்து உன் துப்பட்டாவை சரி பண்ணி,போர்வை மூடிவிட சொன்னிச்சு"
"என்னது துப்பட்டாவா, அத எதுக்கு" என யோசனையோடு கேட்டவளிடம்.
" அட டிரெயின்ல தூங்குற பொண்ணு ஒரு போர்வைய போத்திட்டு தூங்களாம்ல ,டிரெஸ் விலகுனா தெரியாம இருந்திருக்கும், ஆமா இந்த காலத்து புள்ளைங்க எங்க ஒழுங்கா டிரெஸ் தச்சு போடுறீங்க, மறைக்க வேண்டியது பாதி வெளியே தெரியற மாதிரி இறக்கமா போடுறீங்க இதுல துப்பட்டா எதுக்கு போடுறோம்னு தெரியாமலயே அதையும் போடுறீங்க ,அந்த புள்ளங்கபோயி என்ன கூட்டிட்டு வந்தது வேற ஒருத்தன்னா " என புலம்புவது போல் அவளுக்கு உண்மையை புரிய வைத்துவிட்டு சென்றார்.
"இவ்வளவு நடந்து இருக்கா ,இதுக்காக தான் மூடி விட்டானா, நாம கேட்டதுக்கு குளிர் என்றான்" என தன் கழிவறை தேவையை முடித்து கொண்டு, இனி தூங்க கூடாது என்று முகத்தை கழுவி விட்டு அவளிடம் சென்றாள்.
அவள் இடம் சென்றவள் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து விட்டு " க்கூம்...." என தன் தொண்டையை செருமினாள், அவனிடம் எந்த அசைவும் இல்லை, அவன் நாவலை கீழே இறக்கவும் இல்லை,
" என்ன இவன் பார்க்க மாட்டிக்கான், ஆமா நீ கொடுத்த மரியாதைக்கு அப்படியே உன்ன தாங்குவான் பாரு" என அவள் மனது அவளை கழுவி ஊத்தியது.
"ஹலோ, மிஸ்டர்" என கூப்பிட்டு கொண்டே அவன் நாவலில் தனது ஆள்காட்டி விரலை வைத்து டொக் ,டொக் என தட்டவும் , அவன் தன் நாவலை கீழே இறக்கி அங்கிட்டும், இங்கிட்டும் பார்த்தானே தவிர மிருவை
பார்க்க வில்லை.
"ஹலோ இங்க பாருங்க நான் தான் கூப்பிட்டேன்" என மிரு கூறவும்
தன் ஒற்றை புருவம் தூக்கி "நீங்களா , என்னயவா?" என ஆச்சரியமாக கேட்பது போல் கேட்டான்.....
காத்திருப்பு தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 💖 6


"ஆமாங்க உங்கள தான் கூப்பிட்டேன்" என மிரு சொல்லவும்.


"ஆஹான் , சொல்லுங்க ,என்ன விஷயம், இப்போ, என்ன சொல்லி திட்ட போறீங்கோ"
என கூலாக கன்னத்தில் கை வைத்தது கதை கேட்பதுபோல் கேட்க


" அது அது வந்து, ........"


" என்ன வந்து" என குழந்தை தலையாட்டி கேட்பது போல் கேட்டான் அந்த புதியவன்.


"வந்துங்க, என்னனா தேங்க்ஸ் அன்ட் சா....சாரி" என கண்ணை மூடி கஷ்டப்பட்டு அந்த வார்த்தையை கூறிவிட்டு, தன் ஒத்த கண்ண மட்டும் திறந்து பார்த்தாள், அவன் என்ன சொல்ல போகிறான் என்று.


"ஏன் திடிர்னு" என அவன் கேட்க


"பாட்டி, சொன்னாங்க நடந்தது என்னனு ,நா வேற உண்மை தெரியாம மிஸ்அன்டர்ஸ்டன்ட்ல ,ஏதோ பேசிட்டேன்" என இழுவையாக அவள் கூற.


"சோ, மேடம் இப்போ ரியலைஸ் பண்ணி என்ட ஸாரி கேட்கீங்க" என தலை ஆட்டி அவளிடம் பேசினான்.


ஆமா என அவளும் பாவம் போல தலையாட்ட, டக்கென அவள் அருகில் வந்தவன், மிகவும் அமைதியாக, "உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா, பொண்ணாடி நீ ? என அவன் கேட்கவும், சட்டென்று அதிர்ச்சி ஆகினவளின் கண்கள் குடைபோல் விரிந்து சிவந்து விட்டது ,


அமுல்பேபி மாதிரி இருந்துட்டு எப்படி என்ன பார்த்து பொண்ணானு கேட்கான் என மனதில் நினைத்து கொண்டே "ஹேய் " என ஒரு விரல் நீட்டி அவள் அவனை முறைக்க.


"விரல , மடக்குடி ஏய் மடக்குடி மடச்சி" என விடாது அவனும் ஆக்ரோஷமாக பேச.


அவளுக்கு தான் கோபத்தோடு சேர்ந்து அவன் ஏன் திடீர்ரென்று இப்படி பேசுகிறான், தான் அவன் மேல் பழி போடும் போது கூட நிதானமாக இருந்தானே ,இப்ப ஏன் சம்பந்தமே இல்லாமல் இப்படி பேசுறான் என அவளுக்கு என்ன சொல்லுவது தெரியாமல் அதிர்ச்சி அடைந்தாள்.


" ஒரு டிரெஸ்யை ஒழுங்கா போட தெரிஞ்சுருக்கா உனக்கு , ஹான் ..." என முறைத்து விட்டு மீண்டும் தொடர்ந்தான்,


"சரி டிரெயின்ல வர்ற , அதுவும் தனியா வர்ற அப்போ எவ்வளவு உஷாரா இருக்கனும், ஆனா நீ பப்பரபேனு படுத்து கிடக்க" என பல்ல கடிச்சிகிட்டு கோபம் அடக்குன குரலில் அவளிடம் பேசினான்.


"இத நாங்க கேட்டா, பெண்ணுரிமை ,நீங்க ஏன் டிரெஸ் அ பார்க்கீங்க, உடம்ப பாக்கீங்க தப்பு எங்க டிரெஸ்ல இல்லை, உங்க கண்ணுல, அது இதுன்னு கொடி பிடிக்க வேண்டியது" என தன் வலது கையை மடக்கி தன் தொடையிலேயே குத்தி கொண்டான்.


அவன் பேசி கொண்டிருக்கும் பேச்சில் அவள் சிலையாகித்தான் போனாள். கண்ணை கூட சிமிட்டாமல் அவனை மிரட்ச்சியோட பார்த்து கொண்டிருந்தாள்


"இப்ப ..... அப்படி... என்ன நடந்தது" என பயத்துடனே அவனிடம் வார்த்தைகளை தேடி கோர்த்து மெதுவாக கேட்டாள்.


"என்ன நடந்ததா" என அவன் நடந்ததை கூற.


பாட்டு கேட்ட களிப்பில் அப்படியே உறங்கியவள் கையிலிருந்த போனும் நலுவி கீழே விழுந்தது.
இந்த புதியவன்,தன் பேக்கை தோளில் மாட்டியபடி, கையில் தனது பயணச்சீட்டு வைத்து தன் இருப்பிடத்தை தேடிக்கொண்டே வந்தான், வந்தவன் அடுத்ததாக போவதற்கு நிமிர்ந்து பார்க்க, அங்கே ஒருவன் எதையோ வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் கூடவே தன் பாகெட்டில் இருந்து மெபைலை எடுக்கும் நேரம் ,புதியவன் அவனை இடித்துவிட்டு அங்கு போக ,அந்த மர்ம நபர் விருட்டென அங்கிருந்து நகர்ந்து விட்டான். அவன் எதை பார்த்து கொண்டிருந்தான் ஏன் தன்னை கண்டவுடன் அவன் சட்டென்று அவ்விடம் விட்டு அகன்றான் என புரியாமல் ,அந்த மர்ம நபர் பார்த்த திசையை பார்க்க அவனுக்கோ,அந்த காட்சியை மேற்கொண்டு காண முடியவில்லை, அவன் கண்டது ,மிருவின் துப்பட்டா சரிந்து அவளது பெண்மையின் மேல்பகுதி சற்று வெளியே தெரிந்தவண்ணம் இருந்தது, மேலும் சீட்டில் கால்களை தூக்கி வைத்து இருந்ததால் இடுப்பிற்க்கும் கீழே சற்று டாப் விலகியும் இருந்தது அவனுக்கு அந்த நிலமை காணமுடியாமல் ,சட்டென்று தன் பேக்கில் உள்ள போர்வையை எடுத்தவன், அவளுக்கு மூடிவிட போகையில் சிறிது யோசித்தான்,


நாம போர்வை மூடுற நேரத்தில் தீடிரென அவள் முழித்து பார்த்து, நாம அவளிடம் அத்துமீற மாதிரி தப்பா நினைத்து சத்தம் கித்தம் போட்டுவிட்டாள் அவ்வளவு தான் என்ன இருந்தாலும் பெண் ,அதுவும் இந்த நிலைமையில் ஒரு ஆண் நாம பார்த்ததோ, உதவி செஞ்சதோ அந்த பொண்ணுக்கு தெரியவந்தா ஒரு மாதிரி ஆக்வர்ட்டா பீல் பண்ணும் என யோசித்தவன் ,


அடுத்த பகுதியில் யாரெனும் பெண்கள் உள்ளனரா என பார்த்தான், அப்போது ஒரு வயதான பெண்மணி இருக்கவே அவரை கூப்பிட்டு அவரிடம் அவனின் போர்வையை கொடுத்து அவளுக்கு மூடி விடச்சொன்னான்.
இதை கேட்டவுடன் மிருதுளாவின் கைகள் அன்னிச்சையாக தன் டாப்பை மேல் இழுத்து ,தன் துப்பட்டாவை சரிசெய்தது.


"ஆமா , இப்போ எல்லாம் செஞ்சி என்னத்துக்கு, அதான் கவனமே இல்லாமல் அப்படி தூங்குனியே" என தலையில் அடித்து கொண்டான்.


"சரி ஏதோ நான் வரப்போயி பரவாயில்லை , நான் கொஞ்சம் லேட் ஆகி இருந்தா ? ஏன்டி இப்போ தான் எல்லார் கையிலயும் போன் இருக்கே, அவன் போட்டோ எடுத்திருந்தானா என்ன பண்ணிருப்ப" என அந்த புதியவன் கூறியதை கேட்கவும் மிருதுளாவிற்க்கு ஒரு நிமிடம் தன் இருதயமே நின்று விடும்போல் ஆகிவிட்டது,


சட்டென்று அவளது கண்களும் கலங்கி அவளை அறியாமல் அந்த நிகழ்வில் கண்ணீர் சிந்தியது,அதை பார்த்த அந்த புதியவன் , அக்கம் பக்கம் பார்த்து விட்டு


"ஏய்....ஏய் ... ஏன் அழுவுற யாராட்டு பார்த்தா என்ன தப்பா நினைக்க போறாங்க,அழாத அதான் ஒண்ணும் எடுக்கலையே" என அவன் அஸ்கி வாய்சில் கூற ,


"அதெப்படி உங்களுக்கு தெரியும் , நீங்க வர்றதுக்கு முன்னாடி ஒரு வேலை எடுத்து இருந்தானா என்ன பண்றது, ஐயயையோ அப்படி ஒரு போட்டா ,வெளியே வந்தா என்ன ஆகுறது " என்று பயப்பட ஆரம்பித்தாள் மிரு ,


ஆம் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் தன் மானம் என்று வரும் போது சிறிது நிலை தடுமாறி தைரியம், வெளியேறித்தான் போகும்..


ஆமா பெருசா இப்போ அழுவுறா இத தூங்குறதுக்கு முன்னாடி யோசித்து இருக்கனும் என மனதில் நினைத்தவன்


"இல்லை, இல்லை பயப்படாத, அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்கல" என அவன் மிருக்கு தைரியம் கூற, அதெப்படி நீங்க சொல்லுறீங்க, அவன் போன பாத்தீங்களா, நீங்க தான் அவன விட்டுடீங்களே" என அழுகையுடனே விம்ம.


"இங்க பாரு , நான் சொல்லுறத கேளு முதல்ல ,கண்ண தொட என்ன நடந்ததுன்னு நான் சொல்லுறேன்" ஒரு வேகத்தில் அவளை திட்டி இருந்தாலும், அவள் அழுகை அவனை கொஞ்சம் அசைத்தது.


"அதுவந்து" .. என அவன் அதன் பின் நடந்ததை கூற


பாட்டியிடம் போர்வையை கொடுத்தவன் அந்த மர்ம நபர் சென்ற திசையிலேயே சென்று ஒவ்வொரு பகுதியாக தேடினான், கடைசிபகுதியில் அந்த நபரை தேடியவன் அங்கும் இல்லை என்று அடுத்த பகுதிக்கு போக காலெடுத்து வைத்து , ஏதோ ஒரு யோசனையில் பின் வந்தவன் சீட்டிற்க்கு மேல் பார்த்தவன் கண்ணில் ஒருவன் குப்புற படுத்து இருந்தான்,


அவன் தான் அந்த மர்ம மனிதன் தான் தன் முகத்தை மறைத்து படுத்து இருந்தான் ,அந்த மர்ம மனிதனின் சட்டை நிறத்தை வைத்து ,அவன் அருகில் சென்று அவனை எழுப்ப அந்த மர்ம மனிதனோ ,
"என்ன சார் " என்று ஒன்றும் நடவாது போல் கேட்க , "நீ இப்போ என் கூட வரலைனா இங்க நடக்கிறதே வேற ,ஒழுங்கா மரியாதையா கீழே இறங்கி வா " என அந்த மர்ம மனிதன் காதின் அருகில் மிரட்டவும் பயத்தில் அவன் இறங்கி வந்தான்,


வந்தவன் தோள் மீது கையை போட்டு கழிவறை அருகே அழைத்து சென்றான் புதியவன் , அழைத்து சென்றவன் சட்டென்று அவன் கண்ணத்தில் பளார் என ஒரு அறைவிட்டான், அந்த மர்ம மனிதனோ அடித்த அடியில் தலைகிறுகிறுக்க நிக்க, போன எடு என்க அவனோ கை நடுக்கத்துடனே போனை கொடுக்க ,


"லாக் என்ன உன் தாத்தா எடுத்து கொடுப்பாரா" என திரும்ப ஒரு அடி விழ அவன் லாக் எடுத்து கொடுக்கவும், அவன் போனை பிரிச்சு மேய்ந்து,அதில் அவள் போட்டோவும் இல்லை, அது எங்கும் அனுப்ப்படவும் இல்லை, அழிக்கப்படவும் இல்லை என உறுதி செய்தான்,


"சார் , சார் நான் போட்டாலாம் எடுக்கல சார் ஏதோ சபலத்துல தெரியாம நின்னு பார்த்துட்டேன் அதுக்கு போயி இப்படி அடிக்கீங்க "என கூற.


"அடிக்கிறது மட்டுமா,உன்ன கொல்லனும் மவன , இரு உன்ன போலீஸ்ல புடிச்சு கொடுக்கிறேன்" என மீண்டும் அடிக்க கை ஓங்க.


"ஐய்யோ சார் ,என்ன போலீஸ்ல சொல்லிடாதிங்க பீளீஸ் என் லைப்பே போயிடும் ,மறுபடி இந்த மாதிரி எந்த பொண்ணையும் அத்துமீறி பார்க்க மாட்டேன், என்ன விட்டுருங்க சார்" என அந்த மர்ம மனிதன் கெஞ்சவும் ,


அந்த புதியவனும் யோசித்தான்
ஆதாரம் இல்லாமல் அவனை போலீஸ்லயும் புடிச்சு கொடுக்க முடியாது முதல்ல கேஸ் கொடுக்கிற பொண்ணுக்கே என்ன நடந்ததுன்னு தெரியாது ,


அதுக்காக பெண்கள் விஷயத்தில் அத்து மீற நினைத்தவனை அப்படியே தண்டிக்காமல் விடவும் முடியாது என நினைத்தவன்.
மீண்டும் பொலீர் என அவன் செவிலில் அறைந்தான், பின் அந்த மர்ம மனிதன் ஆதார் கார்டை வாங்கி அதனையும், அவனையும் ஒரு போட்டோ எடுத்து விட்டு, அவனை பார்த்து


"உன் தகவல் எல்லாம் என்கிட்ட இனி எங்கேயாவது இந்த மாதிரி பண்ண பார்த்தேன், இல்லை கேள்வி பட்டேன் தொலைச்சுடுவேன், அடுத்த ஸ்டேஷன்ல இறங்குற" என அவனை எச்சரித்தான்,


அவன் கூறியதை கேட்டு அந்த மர்ம மனிதன் சரி என்பது போல் தலையாட்டி விட்டு "சார் என் போன் என கேட்க" , சட்டென்று அவனை முறைத்தவன்,


அவனின் போனை பார்மெட் செய்து,ஸ்விட்ச் ஆப்பும் பண்ணி அவனிடம் கொடுப்பது போல் நீட்டி ,சட்டென்று மொபைலை கதவின் ஜன்னல் வழியாக வெளியே ஏறிந்தான்,


டிரெயினும் பாலத்தின் மேல் சென்றதால், அந்த போன் தண்ணீரில் விழுந்தது.


இதை கண்ட மர்மமனிதன் அதிர்ச்சியில் சிலை ஆக, "போன் இருக்க போய் தானே பொண்ண தப்பா போட்டா எடுக்க தோணுச்சு" என மீண்டும் அவனை அறைந்து


" கொன்னு புதைச்சுடுவன்" அடுத்த ஸ்டேஷனுக்கு அப்புறம் நீ இந்த டிரெயின்ல இருக்கவே கூடாது" என திரும்பி தன் இடத்திற்கு வந்து உட்கார்ந்த சில நிமிடத்தில் தான் டிடிஆர் வந்து இவ்வளவும் நடந்தது.


அவன் கூறியதை கேட்டு முதலில் திகைத்தவள் பின் தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என எண்ணி சற்று நிதானம் அடைந்தாள், தன் அழுகையையும் அப்போது நிறுத்தி இருந்தாள்.


"நான் என்ன நல்லவன்னு காட்டிகிட இத சொல்லல இந்த உலகத்தில இப்படியும் இருக்காங்க, இப்படியெல்லாம் நம்மளுக்கு தெரியாமயே நாம அபியூஸ் ஆக வாய்ப்பிருக்குன்னு சொல்லுறேன். நாம தான் டிராவல்ல, வேலை பாக்குற இடத்தில கவனமா இருக்கனும்னு சொல்லுறேன், புரியுதா ,உங்கள நீங்களே சேப்பா வைச்சுக்கோங்க, டிராவல்லயும், பொது இடத்தில குளிக்கும் போது, ஆடைவிஷயத்தில கவனமா இருங்க,


மத்தபடி உங்க சுதந்திரத்தில நாங்க தலையிடல, உங்க சுதந்திரம் உங்களை பிரட்சனையில சிக்கவைக்காம பார்த்து கோங்க". என கூறிவிட்டு அவன் தான் விட்ட இடத்திலிருந்து நாவலை வாசிக்க ஆரம்பித்தான்.


சிறிது நேர அமைதி..

"ஐயம் மிருதுளா " என்ற குரலில் நிமிர்ந்தவன் சிறு புன்சிரிப்புடன்


"ஐயம் யுவராஜ்"என கூறியதோடு இருவரும் அவர்கள் இறங்கும் இடம் வருவதற்காக காத்திருந்தனர்.....


காத்திருப்பு தொடரும்....
 

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 💖 7
இரவு நேரம் இரயில் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது, இன்னும் சிறிது நேரத்தில், சென்னை வந்தடைந்துவிடும், யுவா தன் தலையை ஒரு கணம் கூட நாவலை விட்டு எடுக்கவில்லை, கையில் ஒரு ஆப்பில் வைத்து ,அதை கொறித்து கொண்டே நாவலை படித்து கொண்டிருந்தான்.
மிருவுக்கு தான் தூக்கம் போச்சு ,இதில் யுவா விடம் திட்டு வேறு வாங்கியவள் இனி பயணத்தில் இளையராஜா பாட்டு என்றாலே யுவா தான் கண்முன் வருவான் என அலுத்து கொண்டாள் , இருந்தும் அவன் செய்த உதவி ரொம்ப பெரியது நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் அதனை எடை போட முடியாது என நினைத்தவள் அவனோடு பேச எத்தனித்தாள்.
மிருவுக்கு தான் சிறிது நேரம் கூட பேசாமல் இருக்க முடியாதே ,மீண்டும் அவனிடம் பேச
"ஹலோ, எக்ஸ்கியூஸ்மி"
என மிரு அழைக்க.
மீண்டும் அவன் நாவலை கீழே இறக்கி என்ன என்பது போல் ஒற்றை புருவம் தூக்கி பார்க்க.
"ஏன்னடா , என்னனு வாயில கேட்டா குறைஞ்சா போயிடுவ திமிர், திமிர் கொஞ்சம் அழகா இருக்கோம், ஹீராயிசம் பண்ணிட்டோம்னு திமிரு" என மனதினுள் நினைத்து விட்டு ஏதாட்டு பேசலாமே, இரண்டு பேர் தான் இருக்கோம், தூக்கம் வேற வந்த வழி தெரியாம போயிட்டு அதான்" என மிரு கேட்க.
"ஹீம், பேசலனா விடவா போற" என மனதில் நினைத்த யுவா "சரி என்ன பேசனும் பேசுங்க, நான் கேட்கேன், எனக்கு தேவையில்லாம பேச பிடிக்காது, அதனால நீங்க சொல்லுங்க கேட்போம்" என யுவா கூறிவிட
" என்னமா , சீன் போடுறான்டா சாமி, பெரிய இவருன்னு நினைப்பு, எல்லாம் என் நேரம், " என கண்களை உருட்டிய மிரு "அதுவந்துங்க, நான்"... என பேச ஆரம்பிக்கும் போது அவள் அழைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது அதை பார்த்த மிரு ,பின்பு யுவாவிடம் திரும்பி ஒரு நிமிஷம் என செய்கையில் காட்ட அவனோ இது வேறயா என தன் நாவலை கொண்டே தலையில் அடித்து கொண்டான்.
அவள் அந்த அழைப்பை எடுத்து பேச ஆரம்பிக்க இவன் "இன்னிக்கு இந்த நாவலை படிச்ச மாதிரி தான்" என சலித்து கொண்டே புத்தகத்தை மூடி வைத்தான்.
அவளோ" அப்படியாடி, சரிடி, சரிடி..
ஆ..... அதெல்லாம் நான் வந்துடுவேன் நீ கவலைபடாத, நீ லோக்கேஷன மட்டும் வாட்ஸ் அப்ல அனுப்பிடு , ஓகே நான் இறங்குனதும் கூப்பிடுறேன்" என போனை வைத்து விட்டு அவனை பார்த்து சிரித்துக் கொண்டே "அது என் பிரெண்ட்ங்க, பர்ஸ்ட் டைமா நான் சென்னை வர்றேன்ல அதான் அவ பயப்படுறா, நான் தைரியம் சொல்லிட்டேன் பயப்படாதடி நான் பத்திரமா வந்திடுறேன் , என்ன யாரும் கடத்திட்டு போயிட மாட்டாங்கங்கன்னு சொல்லி புள்ளய சமாதனப்படுத்தி இருக்கேன், என்ன பண்ண இந்த சிட்டி புள்ளைங்க எல்லாம் சரியான பயந்தாங்கோலிகளா இருக்குதுங்க " என தன்னை பெருமையாக பேசிக்கொண்டிருந்தவளை திகைப்புடன் பார்த்தான் யுவா.
"அடிப்பாவி, இவ பயப்படுறது இவ முகரையிலேயே தெரியுது இதில் என்ன பேச்சு பேசுறா, ஆஹா சரியான ஏமபாதகியா இருப்பா போல என நினைத்தவன் அவளிடம்
"ஆமாங்க ,ஆமா, எங்க சிட்டி பொண்ணுங்க எல்லாம் பயந்தாங்கோலிங்க, உங்க கிராமத்து பொண்ணுங்க எல்லாம் ஜான்சி ராணிங்க, என்ன தூக்கம் வந்தா மட்டும் கொஞ்சம் என்ன நடக்குதுன்னு தெரியாத அளவுக்கு முரட்டு தூக்கம் தூங்குவீங்க போல அப்படிதானே" என இவன் நறுக்கென்று கேட்க.
"அட பயபுள்ள எப்படி வாழைப்பழத்துல ஊசியை இறக்குது பாரு சரியான ஊமை குத்துகாரனா இருப்பானோ , எதுக்கும் கொஞ்சம் அடக்கமா பேசுடி மிருகுட்டி "என தனக்கு தானே சொல்லி கொண்டவள்.
"சரி சரி, ரைட்டு, இப்போ எதுக்கு பழசயெல்லாம் பேசிட்டு மிஸ்டர் யூவராஜ்" என இழுவையாக மிரு கூற .
" என்னது பழசா மிஸ் மிருதுளா இது நடந்து இப்போ ஒரு இரண்டு மணிநேரம் தான் ஆகுது" என அவனும் நக்கலாக கூற.
மிருவிற்க்குதான் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போய்விட்டது, எச்சிலை விழுங்கி மீண்டும் பேச ஆரம்பித்தாள் "சரி மிஸ்டர் யுவராஜ் , நீங்கள் எந்த இடத்தில இறங்கனும்" என கால் மீது கால் போட்டு சகஜமாக கேட்பது போல் கேட்க அவனோ ஏன் உங்களுக்கு சென்னையில எல்லா இடமும் அத்துபடியா நீங்களே நீயூ என்ட்ரி, இருக்குற ஜனத்தொகையில எக்ஸ்ட்ரா லக்கேஜ்" என கலாய்க்க அவளுக்கு அதுவரை இருந்த பொறுமை பறந்து அவன் உதவி செய்ததையும் மறந்து அவள் சுயரூபத்தை காட்டினாள்.
"ஹலோ, போனா போகுதேன்னு நம்மளுக்கு ஹெல்ப் பண்ணவர் ஆச்சுன்னு ஒரு ப்ரென்ட்லியா பேச வந்தா, ரொம்ப ஓவரா தான் போறீங்க, அந்தாக்கல இவரு பெரிய உலகம் சுற்றும் வாலிபன் இவருக்கு எல்லா இடமும் தெரிஞ்சுருக்கு, எங்களுக்கு தான் தெரியல அட போயா இனி இறங்குற வரைக்கும் உன்ட பேசிட்டா என்ன என்ன" என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் "ஆங் இந்த டிரெயின்ல இருந்து தள்ளிவிட்டுறு ஆமா" என மூச்சு வாங்க கட்சி மீட்டிங்கில் எதிர்கட்சியை கிழித்து தொங்க விடுவது போல் பேசிவிட்டு அமர்ந்தாள்.
அதனை கண்ட யுவா சட்டென தன் பேக்கினுள் கைவிட்டு, வாட்டர் பாட்டிலை எடுத்து பட்டென மூடி திறந்து அவளிடம் நீட்ட, அவள் அவனை ஒரு கனல் பார்வை பார்த்து விட்டு "என்ன நக்கலா" எனக்கேட்க அவனோ இல்லை வாங்கல் ,மூச்சு வாங்கல்" என அவளிடம் எதிர் வாதம் புரிய ,
"தேவையில்லை எங்ககிட்டையும் பேக்கு இருக்கு அதுக்குல்லயும் வாட்டர் பாட்டில் இருக்கு" என பேக்கினுள் கைவிட்டு வாட்டர் பாட்டிலை எடுக்க அதுவோ காலி பாட்டிலாக இருந்தது, அதை பார்த்த யுவா வோ விழுந்து விழுந்து சிரிக்க அதில் மேலும் கடுப்பான மிருதுளாவோ "எல்லாம் அவனுக்கு சாதகமாவே நடக்குதே என புலம்பியவளிடம் மேலும் அருகில் தனது வாட்டர் பாட்டிலை நீட்டினான் அவள் வாங்கா திருக்க , அவனோ திமிரு புடிச்சவ ,எப்படி வாங்காம இருக்கா,என நினைத்து கொண்டு
"ஹலோ, மேடம் நான் ஒண்ணும் உங்க அஸிஸ்டென்ட் இல்லை, வாட்டர் பாட்டிலை புடிச்சுட்டு காத்திருக்க, இப்ப நீ வாங்கல நான் உள்ளக்க வச்சுடுவேன் என டக்கென பாட்டிலை தன் புறம் இழுக்க, அவளுக்கோ பேசிய பேச்சில் தொண்டை வரண்டு போய் இருந்ததால் எங்கே விட்டால் அவன் சொன்னதை செய்து விடுவான் திமிர்பிடித்தவன் என யுவாவை மனதில் திட்டியவள் பாட்டிலை வேகமாக பிடிங்கி மட மட வென அவனுக்கு தண்ணீர் மிச்சமில்லாமல் குடித்து முடித்த சந்தோஷத்தில் அவனிடம் கொடுத்தவள் கண்கள் உனக்கு தண்ணி இல்லையே என்ற திமிரில் மின்னியது.
"அடப்பாவி, புளியங்கா, காலி பண்ணிட்டாளே" என தண்ணீர் பாட்டிலை திரும்ப திரும்ப பார்த்து விட்டு தனது பையில் நுழைத்தான்.
"எப்படி, எங்ககிட்டேயா" என நினைத்தவளுக்கோ இயற்கை அழைப்பு வரவே அவனை பார்த்து இ...இ...இ .. என இழித்து கொண்டே கழிவறைக்கு ஓடினாள்,
அவள் ஓடியவிதத்தில் யுவாவிற்கு தான் தனக்கு வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் கண்ணில் கண்ணீர் வரும்படி ஆழ்மனதில் இருந்து சிரித்தான்.
அவன் வெகுநாட்களுக்கு பிறகு சிரிக்கும் சிரிப்பு இது .... அவன் சிரிப்பை குதுகலத்தை திருடியது ஒரு மோசமான நிகழ்வு..
அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் மனதில் திட்டிக்கொண்டும் வெளியே இழித்து கொண்டும் இருக்க, நேரமும் அதன் பணியை பார்த்தது, ஆம் அந்த நள்ளிரவு நேரத்தில் இரயில் ஸ்டேஷன் வந்தடைந்தது, இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமலே இறங்கினர்.
ஸ்டேஷன் வெளியே நின்றிருந்த வண்டிகள் அனைத்தும் தத்தம் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதன், அதன் வழியை பார்த்து சென்று கொண்டிருந்தது, சிறிது நேரத்தில் அவ்விடம் வெறிச்சோடி போனது.
அங்கே நின்றிருந்தது, மிருவும், யுவா மட்டுமே இருவரும் தாங்கள் பதிவு செய்த
கேப்- பிற்க்காக காத்திருந்தனர்.
"என்ன ஊருயா இது ஒரு வண்டிக்கு இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டி இருக்கு" என சிடு சிடுத்தவளோ , அங்கு ஒரு கேப் வருவதை பார்துவிட்டு வேகமாக தன் பைகளை தூக்கி தயாராக நின்று கொண்டிருந்தாள்.
யுவா வோ சாதாரணமாக நின்றான்
வண்டி வந்து இருவருக்கும் நடுவில் நின்றது.
வேகமாக கதவை திறந்து உள்ளே அமரப்போனவளிடம், வண்டி டிரைவர் "மேடம் ஒ டி பி சொல்லுங்க" என கேட்க, ஏற்கனவே ஆர்வக்கோளாரு தனக்கு ஓடிபி வரவும் அதை மனப்பாடம் செய்திருந்தாள் "அது வந்து அண்ணா 8056 அண்ணா" என்றாள்
"ஸாரி மேடம் ஓடிபி தப்பா இருக்கு "என டிரைவர் கூற , இது தாண்ணா வந்துச்சு என தன் ஹேண்ட்பேக்கில் கையை விட்டு போனை தேடினாள்.
"3193 " என குரல் கேட்டு நிமிர்தவள் அது யுவா என தெரிந்தவுடன் "பக்கி என் போன நோண்டி பார்த்து இருக்கு என அப்பவும் அவனை மனதில் திட்டியும் மீண்டும் போனை தேடினாள்.
"ஓடிபி கரெக்ட் சார் ,வாங்க" என டிரைவர் கூறவும், வேகமாக அவனை இடித்து தள்ளி முன்னே வந்தவள்.
"அண்ணா நான் தான் கேப் புக் பண்ணேன், அவனை ஏறச்சொல்லுறீங்க"என கேட்க
"ஹேய், நானும் தான் புக் பண்ணேன் என் ஓடிபி தான் கரெக்ட்" என அவன் போனிற்க்கு வந்த மெசேஜ்யை காட்ட, அவளும் வேகமாக தன் போனை எடுத்து தனக்கு வந்த மெசேஜ்யை காட்டினாள் , அதை அவள் கையில் இருந்தபடியே வாசித்தவன், அவளைப்பார்த்து... நெற்றியை நீவிய படியே ,
"மேடம்க்கு , கேர்பூலா டிராவல் பண்ணதான் தெரியாது, ஒழுங்கா கேப் கூடவா புக் பண்ண தெரியாது, நீ புக் பண்ண கேப் அடுத்த இரண்டு நிமிஷத்தில கேன்சல் ஆகிட்டுன்னு மெசேஜ் வந்திருக்கு அத பார்த்தியா" எனக் கேட்க சட்டென்று தனக்கு வந்த மெசேஜ்யை பார்த்தவள்களுக்கு அதிர்ச்சி தான் அடையாளம் ஆகிபோனது.
"அண்ணா நீங்க கிளம்புங்க" என முன் சீட்டில் அமர்ந்து கார்கதவை சாத்தியவன்,
கண்ணாடி வழியாக அவளை பார்க்க, அவளோ தெரியாத ஊரில் இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டி விட்டோமே என கண்கள் கலங்கி எங்கோ பார்த்து கொண்டிருந்தாள்.
இப்படி ஒரு இரவில் அவளை தனியாக விட்டுச்செல்வது சரியில்லை என நினைத்தவன்.
சிறிது நேரம் பார்த்தான் "திமிரு ,புடிச்சவ ஒரு ஹெல்ப் கேட்காளான்னு பாரு அசாரம நிக்கா" என எரிச்சலுற்று பின் தன் பேக்குடன் கீழ் இறங்கி, அவள் அருகில் சென்றான்
"ஹலோ மேடம், உங்க பிரென்ட்க்கு கால் பண்ணிங்களா"
"பண்ணேன், நாட் ரீச்சபுல் "
"சந்தோஷம்" என தலையை இருபுறமும் ஆட்டியவன் தன் நாடியை வருடிவிட்டு ,
" ரொம்ப லேட் ஆகிட்டு இதுக்கு மேல,எந்த கேப்பும் வராது, பேசாட்டி இந்த கார்லயே நீ எங்க போனுமோ போ " என கூறினான்.
அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவள் வாய் அவளுக்கு எதிராக தான் வேலை பார்த்தது.
"சரி , நான் இதுல போனா, அப்போ நீங்க எப்படி போவீங்க இதுக்கு மேல கேப் வேற வராதே" என பாவம் போல முகத்தை வைத்து கொண்டு கேட்க
அவனுக்கோ இவளை என்ன செய்தால் தகும் என முறைத்தவன் "ஆங்.. நடந்து போறேன் மேடம் " என கூற...

"ச்சே, ச்சே எனக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க, நீங்களும் தாராளமா இந்த கார்லயே வரலாம், நான் தப்பா நினைக்க மாட்டேன் மனுசனுக்கு மனுசன் ஒரு உதவி தானே வாங்க" என அசால்டாக கூறிவிட்டு நடந்தவளை பார்தவன் தன் தலையில் அடித்து கொண்டு இப்படி ஒரு பொண்ண நான் பார்ததே இல்லை ஆண்டவா என பெருமூச்சி விட்டுகொண்டு காரில் முன்னாடி ஏறினான்.
வண்டியும் கிளம்பியது....

மிருவின் வாழ்க்கையில் அவள் காதல் காத்திருப்புக்கான புதிருக்கான விடைக்கான
குறிப்புகளும் சேர்ந்தே ஆரம்பித்தது ...
காத்திருப்பு தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 💖 8
வண்டியில் சென்று கொண்டிருந்தனர், அந்த நல்லிரவில் ஊரே அமைதியாக இருந்தாலும். மிருவினாள் மட்டும் அவளை அமைதியாக வைக்க முடியாமல் தொன தொன வென பேசிக்கொண்டே வந்தாள்.
"ஏப்பா சாமி நல்ல லவ்ட் ஸ்பீக்கர பெத்து போண்டுருக்காயான் இவளோட அப்பன் " என வாய்க்குள்ளே முனு முனுத்துக்கொண்டு தன் இரண்டு கையையும் வைத்து காதை அடைத்துக்கொண்டான் .
"ஹலோ , டிரைவர் அண்ணா" என மிரு கூப்பிடவும்.
"என்ன மேடம் , உங்களை தானே முதல்ல இறக்கிவிடனும் , இறக்கி விட்டுடுறேன்" என சலித்துக்கொண்டே கேப் டிரைவர் கூறியதற்கு ஒரு காரணம் உண்டு.ஏதற்காக என்றால் இதனை இதோடு ஒரு இருபது தடவை கூறியிருப்பாள் மிருதுளா.
சிறிது தூரம் சென்றவுடன், மீண்டும் மிருதுளா "அண்ணன்" என ஸ்டார்ட் பண்ண, அதில் ஏரிச்சலுற்ற யுவா, அவளை நோக்கி டக்கென திரும்பி "அடிங்கொய்யால வாயை மூடிடு , ப்ரோ, ப்ளீஸ் இந்த மேடம் எங்க இறங்கனுமோ மொதல்ல அங்க இறக்கி தொலைங்க, உடைஞ்ச டேப்ரிக்கார்டர் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்கா, என்னமோ இந்த அழகு சுந்தரிய கடத்திட்டு போற மாதிரி தான்" என தலையில் அடித்து கொண்டு "ஒரே இம்சை புடிச்சவா"மீண்டும் திரும்பி அமர்ந்தான்.
"போனும், போனும்னு சொல்லுறியேமா அட்ரஸ சொல்லுமா " என டிரைவர் கேட்க.
"கே கே நகர் லோட்டஸ் அப்பார்ட்மென்ட் போங்கன்னா" என மிருதுளா கூறவும் , தன் இருவிழிகள் விரிய யுவா மிருதுளாவை கண்ணாடி வழியே பார்த்தான், பின் சீட்டில் அவளோ படிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி கார் கண்ணாடி வழியே வெளியே ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அவள் இறங்கும் இடம் வரவும், இறங்கியவள் எவ்வளவு என்று கேட்டு அதற்கு பாதியை மட்டும் யுவா கையில் கொடுத்து விட்டு "மிஸ்டர் யுவராஜ் மீதி உங்க பங்கு ,நீங்க இறங்கும் போது சேர்த்து போட்டு கொடுத்திடுங்க, அண்ணா இவர்ட்ட கொடுத்துட்டேன் வாங்கிக்கோங்க, தாங்க்ஸ்னா, தாங்க்ஸ் மிஸ்டர் யுவராஜ் " என கூறிவிட்டு தனது லக்கேஜ்டுடன் நடந்து சென்றாள்.
தனது கையில் உள்ள பணத்தையும், தன்னை கடந்து செல்லும் அவளையும் பார்த்தவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்சிரிப்பு தோன்றியது , ஏனோ அவளின் திமிரு இவனுக்கு பிடித்திருந்தது , ஆணவம் இல்லாத அழகிய திமிரு பெண்மைக்கான அற்புத திமிரு, அதனாலேயே அவளிடம் வம்பு செய்தான்.
அப்பார்ட்மென்டுக்குள் நுழைந்தவள் ஆடித்தான் போனாள் 10 மாடி கொண்ட மிகப் பெரிய அப்பார்ட்மென்ட், இவள் போகவேண்டியது 8 வது மாடியில், உள்ள ஒரு
ப்ளட் க்கு, சுற்றி ,முற்றி பார்த்தபடி நின்றிருந்தவளிடம் ஓடிவந்த வாட்ச்மேன்,
"யாரும்மா, நீ எங்க வந்திருக்க, என்ன வேணும்"
"அண்ணா இங்க 8 வது மாடியில் ஸ்வேதா அவங்க வீட்டிற்க்கு வந்திருக்கிறேன்"
"ஓ, அந்த ஐ,டி கம்பெனில வேலை பாக்குதே அந்த பொண்ணு ப்ளாட்க்கா, போம்மா, நேரா போய் திரும்புமா அங்க லிப்ட் இருக்கும் அதுலயே போலாம்" எனக் கூற நல்லவேலை
"இவராட்டு வந்தாரே" என கூறிக்கொண்டே தனது பேக்குகளை எடுத்து கொண்டு ,லிப்ட் பக்கம் நடந்தாள்,
லிப்ட்டை ஆன் பண்ணி அது திறந்தவுடன்,உள் நுழையவும் யாரோ லிப்ட் நோக்கி ஓடி வந்து ஒரு கால் வைத்து லிப்ட் கதவை மூடிவிடாதபடி தடக்கவும், யாரென்று அதிர்ச்சியில் பார்த்தவளுக்கு மேலும் அதிர்ச்சியை அளிக்கும் விதமாக அங்கு நின்றிருந்தது யுவா தான் .
யுவாவும் லிப்ட்க்குள் வர , லிப்ட் கதவு மூடி அது மேலே செல்ல ஆரம்பித்தது, அவனை இப்பொழுதும் நம்பாத மிரு மூளையோ வாய்க்கு வந்ததை பேசச்சொல்லியது மிருவிடம் "ஹலோ மிஸ்டர் , என்ன பாலோ பண்றீங்களா, நானும் ஏதோ எனக்கு உதவி பண்ணவராச்சேன்னு அமைதியா இருந்தா கடைசில என் வீட்டை பாலோ பண்ற அளவுக்கு வந்துட்டீங்க, எனக்கு என்னமோ என்ன காப்பாதுனதுக்கு ஒரு காரணம் சொன்னீங்களே அது நீங்களே சொன்ன கதையாருக்கும்னு நினைக்கிறேன், ஏன்டா ,ஏன்டா இப்படி பொண்ணுங்கள நிம்மதியா இருக்க விட மாட்டிக்கிறீங்க, நாய் மாதிரி பின்னாடி அலையுரீங்க" , என வாய்க்கு வந்தபடி அவனை பேச அவனுக்கோ கோபம் வந்தாளும், உண்மை தெரியாமல் பேசுபளிடம் என்னத்த பேச என அனைத்தையும் பொறுத்துக்கொண்டு , அமைதியாக இருக்க,
அவளது வாய் அமைதியாக இல்லை, அவள் வாயை மூட வைப்பதற்க்காக தன் வலது காலை கொண்டு லிப்டை ஓங்கி உதைக்க, அதில் பயந்தவளோ வாயை கப்பென மூடிவிட்டு மனதிற்குள் "திமிரு புடிச்ச ராஸ்கல்" என்று கூறிவிட்டு தனது பையை இறுக்கி பிடித்து கொண்டாள்.
லிப்ட் 8 வது தளத்திற்கு வந்து அதன் கதவு திறக்கவும் ,வேகமாக வெளியே ஓடிவந்தவள், அவள் தோழி வீட்டின் முன் நின்று காலிங் பெல் அழுத்தினாள் , மிருவை எதிர்பார்த்து காத்திருந்த தோழியும் உடனே கதவை திறந்தாள்.
கதவை திறந்த அடுத்த நொடி, அவளை தள்ளிக்கொண்டு, மிரு வீட்டிற்க்குள் வந்து கதவை சாற்றினாள்.
"ஹேய், மிரு ஏன் இவ்வளவு அவசரம்" என கேட்டுக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்க,
"இது அவன் தான்" என மிரு கோபத்துடன் கதவை திறக்க "எவன் டி " என ஸ்வேதாவும் மிருவின் பின் தொடர்ந்தாள்.
கதவை திறந்து பார்க்க, அங்கு யுவராஜ் நிக்கவும், "டேய் உனக்கு ஒரு தடவை சொன்னா அறிவில்லை ச்சே, இப்பவே உன்னை போலீஸ்ல பிடித்து கொடுக்கேன்" என போனை எடுத்தவள் கையில் இருந்து போனை வாங்கினாள் ஸ்வேதா, என்னடி பண்ற வந்ததும் வராததுமா,என ஸ்வேதா கூற
மிரு யோசனையில் முழிக்க.
"அண்ணா வந்துட்டீங்களா, நீங்க இன்னிக்கு வர்றதா சொல்லவே இல்லை, அதான் நான் உங்களுக்கு கால் பண்ணல, உள்ளே வாங்கன்னா கீ தர்றேன்" என கூறிவிட்டு கீ எடுக்க உள்ளே சென்றாள் ஸ்வேதா
மிரு இம்மையும் புரியாமல் மறுமையும் புரியாமல் திகைத்து நிற்க
அதற்குள் ஸ்வதாவும் சாவியை யுவா விடம் கொடுக்க அடுத்த நிமிடம் அங்கிருந்து கிளம்பினான் யுவா, மிருவை முறைத்துக்கொண்டே.
"அவன் வீடு இங்கே இருந்ததால் தான் என் பின்னாடி வந்திருக்கிறான், நாம தான் மறுபடியும் தப்பா புரிஞ்சுகிட்டோமே,மிரு மறுபடியும் சொதப்பிட்டியேடி" என அவள் வாய் மீதே இரண்டு அடி அடித்துக்கொண்டாள்.
கதவை அடைத்து விட்டு உள்ளே வந்த ஸ்வேதாவோ
"ஹேய் யாருன்னு நினைச்சு திட்டுன நீ அவரை"
"அது யாருடி" என கதவை பார்த்து கொண்டே மிரு கேட்க.
"அவரா? ,அவர பத்தி சொல்லனும்னா நிறைய இருக்கு ,அத அப்புறம் பேசுவோம் நீ வருவேன்னு தான் தூங்காம இருந்தேன், ஆன்லைன்ல பார்த்தது, உன்ன அத விட நேர்ல சூப்பரா இருக்க, சரி வா தூங்குவோம் நாளைக்கு சன்டே தான் நிறைய பேசலாம்" என மிருவை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் ஸ்வேதா.
ஆம் , ஆபீஸ் சிறிது காலம் ஆன்லைன்லயே நடந்தது, அதன் மூலம் தான் ஸ்வேதாவுடன் பழக்கம், ஸ்வேதா மிரு வை விட இரண்டு வயது மூத்தவள், ஆரம்பத்தில் அக்கா என்று கூப்பிட்டவளை , பெயர் சொல்லி அழைக்குமாறு வேண்டியதால் மிருவும், ஸ்வேதா என்றே அழைத்தாள்.
ஆன்லைனில் வேலை பார்த்தது, குணாவுக்கு மட்டுமே தெரியும், வீட்டில் யாருக்கும் தெரியாது, திலகாவும் மிருவை திட்டி கொண்டே இருப்பாள் நாள்புராவும் கழுதை ரூம்க்குள்ளே அந்த லேப்டாப்பை கட்டிகிட்டு குஞ்சி பொறிச்ச கோழி மாதிரி அடைகாத்துட்டு கிடக்கா என பலசமையங்களில் திட்டி இருக்கிறாள்.
ஸ்வேதா வீட்டில் இருந்து போன யுவா , பேக்கை சோபாவில் போட்டு விட்டு, தனதறைக்கு சென்றவன், அங்கு மாட்டியிருந்த புகைப்படத்திற்கு முன் மண்டி இட்டு , கைகளை தரையில் குத்தி கதறி அழுதான், இந்த முறையும் நான் தோத்துட்டேன், தோத்துட்டேன் வெறும் கையா தான் இப்பவும் வந்திருக்கேன், என்னை மன்னிச்சுரு, என்னை மன்னிச்சிரு, ஆனா உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்குனவனை நான் சும்மா விடமாட்டேன், சும்மா விடமாட்டேன் அவன் சாவு என் கையில தான் " என வெகுநேரம் அழுதவன் தரையிலேயே மடங்கி தூங்கி போனான்.
மிருவும், ஒரு வேகத்தில் வந்துவிட்டாள், ஆனால் அவளால் அந்த மாடியை ஒரு நாள் பார்க்காமல் இருக்க முடியுமா என்பது அவள் ஒருவளே அறிந்த உண்மை.
அந்த மாடியில், அந்த வீட்டில் தான் எவ்வளவு நினைவுகள், அவனையே சுற்றி சுற்றி வந்தது.
அவனுக்காக என்னென்ன கிறுக்குதனம் எல்லாம் செய்தாள், அவன் ஒற்றை பார்வைக்காக எவ்வளவு தவம் இருந்து இருப்பாள், அவன் சிரிப்பை எவ்வளவு மனதிற்குள் சேர்த்து வைத்திருப்பாள், அவன் வீசிய குப்பைகளை எத்தனை பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறாள், அவ்வளவு எளிதில் அவள் கண்ணில் இருந்து தப்பித்து விட்டானே.. அவன் அந்த மாடி விட்டு ராஜகுமாரன்...
யோசித்து கொண்டிருந்த நேரத்தில், குணா அழைப்பு வரவும் அதை ஏற்றவள், ஸ்வேதா தூங்குவதால் அறைக்கு வெளியே வந்தாள்
"டேய், நீ இன்னும் தூங்கலயா"
" உன்னை தனியா அனுப்பிட்டு எப்படி டி, தூக்கம் வரும், எரும மாடே, ரீச் ஆனவுடன் போன் பண்ண சொன்னல்ல கழுத "
"அட சாரி குணா, நீ தூங்கிஇருப்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு , காலையில இன்பார்ம் பண்ணலாம்னு இருந்தேன்"
"சரி சரி ரொம்ப டயர்டா இருப்பே, ஏற்கனவே அன் டைம் நீ தூங்கு காலையில பேசுவோம்" என பேசிவிட்டு போனை வைக்கப்போன குணாவிடம்,
"டேய் குணா"
" என்ன மிரு"
"மாமாட்ட, மாட்டிறாத டா, கொஞ்சம் கவனமா இரு சீக்கிரம் ஐடியா எதாட்டு சிக்கும், வெளியூர்ல இல்லை வெளிநாட்டுல எதாட்டு வேலைக்கு டிரை பண்ணு முடியாத பட்சத்துல அங்க எஸ்கேப் ஆகிடலாம் என்ன, வெட்டியா ஊர சுத்தாத சரியா"
"சரி நீ கவலைபடாத நான் கவனமா இருக்கேன் , நானும் டிரை பண்ணிட்டு தான் இருக்கேன்டி , ஜென்சிக்கும் சேர்த்து தான் பண்றேன் ஓகே, இப்போ நீ நிம்மதியா தூங்கு குட் நைட் " என போனை வைத்தான் குணா.
பல நினைவுகள், பல வேதனைகள், பல சுமைகள், பல ஏக்கங்களை சுமந்த அந்த இரவு ஒரு புதிய விடியலை நோக்கி நகர்ந்தது...

காத்திருப்பு தொடரும்...
 

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 💖 9
விடியல் ,அந்த விடியல் அனைவருக்கும் சாதகமாக விடிவதில்லை, ஒரு சிலருக்கும் இன்பமும், மற்ற சிலருக்கு துன்பமுமாக விடிகிறது .
"எவ்வளவு தைரியம் , தின்னக்கம் இருந்தாலே நீ இந்த காரியம் பண்ணுவ" என வீரய்யா ஒருவனை தலைகீழ் தொங்க விட்டு விறகு கட்டையால் அடி வெளுத்து கொண்டிருந்தார்,அவன் வாய் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால் அவனால் கதற கூட முடியவில்லை, தொங்கியவனின் இரத்தம் தரையில் கோலம் போட அவன் உயிர் ஊசலாடி கொண்டிருந்தது.
அப்போது அங்கு கரைவேட்டி ,கட்டி வெள்ளை சட்டை அணிந்து, கழுத்தில் சில பல தங்கச்சங்கலியும், கையில் தங்க கைச்செயினும், நெற்றியில் பெருவிரல் அளவிற்கு இடப்பட்ட குங்குமமும், ஆறு கிலோமிட்டர் அங்குட்டு நின்னாலும் அடிக்கும் அத்தர் வாசம் , அதுமட்டும் இல்லாமல் பிரபலமான ஒரு பெரிய கட்சியின் கட்சி கொடி கட்டிய வெள்ளை நிற டோயோட்டோ பார்ச்சுனர் காரில் மிடுக்காக ,ஆளுமையுடன் வந்து இறங்கினார் அவர்,
வந்தவர் ,செத்துக்கொண்டிருப்பவனின் அருகில் வந்து,
" லேய் ,எம்புட்டு சொன்னேன், அப்பவே விலகி இருந்தா இம்புட்டு தூரம் வந்திருக்குமா, அப்படி என்னலே அதுப்பு உங்களுக்கு, எம்முட்டு வலசல் தான் கேட்குதோ , நாதாரி பயலுவலா, ஏலேய் வீரய்யா இந்த நாய கண்டதுண்டமா வெட்டி வலநாட்டு மலகாட்டுல வேதைச்சு விட்டுருடா, ஒரு பயலுவலும் இவனை கண்டுபிடிக்க கூடாது,ஊர விட்டு ஓடி போன மாதிரி செட் பண்ணிருடா" என கூறிய பின் ,தொங்கியவன் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு, தன் வேட்டியில் தூசி தட்டியபடி மீண்டும் தன் காரில் ஏறினார், சுந்தரபாண்டி.
மிருதுளாவின் தாய்மாமா, வீரசக்கம்மாளின் ஒரே மகன் ஊரின் பெரிய புள்ளி, சில அன்டர்கிரவுன்ட் வேலையில் ஈடுபடுபவர், காதல் என்று அலைந்தால் காக்கா சுடுவது போல் சுட்டு தள்ளி விடுவார் ,இல்லை என்றால் வெட்டி வீசிவிடுவார். ,ஆனால் இது வெளி உலகிற்கு தெரியாது , மறைமுகமாக ஒதுங்கி நின்று வேலை செய்வார், அரசியல் ஆதரவுபயங்கரமா உள்ளவர், போலீஸ் எல்லாத்தையும் தன் சட்டை பாக்கெட்டுக்குள் வைத்திருப்பவர். ஆனால் ஊரை பொறுத்தவரை, பெரிய மனுசன் , ரொம்ப நியாயமானவர், சில பல பஞ்சாயத்து கூட அவரிடம் வரும். ஏழை சனங்களுக்கு ஓடி ஓடி உழைப்பவர், கோவில் குளம் என்றால் காசை வாரி வழங்குபவர். அன்னதானம் ,கோவில் கொடை என பொறுப்பேடுத்து நடத்தும் ஒரு பெரிய புள்ளி இந்த சுந்தர பாண்டி.
பண்ணின பாவத்தினால் என்னவோ , குணா 8 வருடம் கழித்து தவம் இருந்தான் பிறந்தான். அதனாலேயே மகன் மேல் அளவு கடந்த பாசம். இருந்தாலும் அவனை பயத்திலும் அதிகாரத்திலுமே வளர்த்து இருக்கிறார்.
அந்த வெள்ளை ஆடம்பரமான கார் , அவர் வீட்டு வாசலில் வந்து நின்றது, வீட்டுக்கு முன் வாசலில் உள்ள தார்சாவில் கட்டிலில் காலை நீட்டி அமர்ந்து வெத்தலை இடித்து கொண்டு அமர்ந்திருந்தார் வீரசக்கம்மாள்.
காரில் இருந்து இறங்கிய தன் மகனை பார்த்து "வாயா, என்னயா கோழி கூவுறத்து முன்னாடியே வெளியே போன வர இம்புட்டு தாமசம் ஆகிட்டாக்கும்யா"
"இல்ல ஆத்தா, வெளியே ஒரு முக்கியமான சோலி அது முடிய தாமசம் ஆகிட்டு" என வேட்டியை மடித்து கொண்டே பதில்லளித்தார்.
"அடியே சுமதி, என் புள்ள வந்துட்டான் வெரசா அந்த சாப்பாட்டை எடுத்து வை" என வெத்தலை இடிப்பதை நிறுத்தி விட்டு சுமதிக்கு கேட்கும் வண்ணம் கூச்சலிட்டார்.
"ஆத்தா எதுக்கு இப்படி கூச்சல் போடுற, சாப்பாடுலாம் வேண்டாம், முதல்ல நான் கிணத்தடியில போய் குளிச்சிட்டு வர்றேன்" என சுந்தர பாண்டி தனது காலடியை கிணத்து நோக்கி கிளப்ப .
"ஏன்யா ராசா, கருமாதி வீட்டுக்கு ஏதும் போய்ட்டு வர்றீயா" என இழுவையாக கேட்க
"ஆமாத்தா, கருமாதி தான் பண்ணிட்டு வாரேன்" என மனதில் நினைத்து கொண்டே "ஆமா ஆமா" என்ற தலை அசைப்புடனே கிணத்தடி பக்கம் சென்றான்.
"அடியே, சுமதி என்புள்ள கிணத்தடி பக்கம், போயிருக்கான் துண்டு, சோப்பு,எடுத்துட்டு போ" என மீண்டும் ஒரு கூச்சலிட்டு விட்டு தன் வெத்தலை இடிக்க ஆரம்பித்தார்.
கிணத்தடியில், தன் நகைகளையும், போனையும் கலட்டிக்கொண்டே
"குணாசேகரா" என சத்தமிட்டார்...
வெளியே தன் தந்தை அழைப்பதை அறியாத குணாவோ அவனது அறையில் தனது படுக்கையில் படுத்து காலாட்டிக்கொண்டே ஹெட்சேட்டில் ஜென்சியுடன் கடலை போட்டு கொண்டிருந்தான்.
தன் கணவனுக்கு உடை எடுத்து கொண்டிருந்த சுமதியோ, கணவன் குரல் கேட்டு பதறி அடித்து வெளியே வந்து தன் மகன் அறை வாயிலை அண்ணாந்து பார்த்தார். அவனோ கதவை திறப்பதாக தெரியவில்லை, அதற்குள் மீண்டும் சுந்தரபாண்டி
"ஏலேய் ,குணசேகரா என கர்ஜிக்கவும், கீழ் இருந்த சுமதி பட பட வென மாடிப்படியில் ஏறி தன் மகன் கதவை திறந்து உள்ளே போக, பதட்டத்துடன் நிற்க்கும் தன் அன்னையை ஏன்னவோ ஏதோ என்று பார்த்த குணா
"என்னமா, என்னாச்சு " என கேட்க.
"ஏலேய் , உன்ன அப்பா கூப்பிடுறாரு" என நடுக்கத்துடன் கூற.
"யேம்மா, கேட்குறேன்ல சத்தமா சொல்லாம மெளன பாச பேசுற ஏதும் மெளனவிரதமா இன்னிக்கு " என குணா கேட்கவும்.
கோபத்தின் உச்சிக்கே சென்ற சுமதி அவன் காதில் உள்ள ஹெட்செட்டை கழற்றி விட்டு "அட எடுபட்ட பயல, இந்த செவுட்டு மிசின
கலட்டி தொலை ,நாதாரிப்பயல உங்கய்யா கிணத்தடியில இருந்து கத்திகிட்டு இருக்காரு போ, விரசா போய் என்னான்னு கேளு இல்லைனா ,உன் தோளு உறிஞ்சிடப்போவுது" என தன் மகன் கையில் உள்ள போனை பிடிங்கி கட்டிலில் ஏறிந்தார்.
இந்த கலவரைத்தை போனில் கேட்ட ஜென்சியோ பயத்தில் எப்போதோ போனை கட் செய்திருந்தாள்.
விழுந்தடித்து, ஓடிவந்து தன் தந்தை முன் நின்றவன் "என்னப்பா" என அவர் முகத்தை பயத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தான்.
அதற்குள் சுமதியும் துணிகளுடன் அங்கு வந்தாள்.
"தம்பி, என்ன பாத்திட்டு நிக்கா, தண்ணிய இறச்சி இந்த குண்டால ஊத்து,அப்பாரு குளிக்கட்டும் " என்றாள் சுமதி
சட்டென்று சுதாரித்தவன், பட்டென வாளி எடுத்து கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து குண்டாவில் ஊற்ற ஊற்ற தன் பண்ணின பாவம் அதிலே கரைந்து விடுவதுபோல் குளித்து முடித்த சுந்தரபாண்டி, தன் மனைவியிடம் துண்டை வாங்கி துடைத்து துணி மாற்றி விட்டு உள்ளே நேராக பூஜை அறைக்கு சென்றார்.
அதற்குள் அவரது துணிமணிகளை அலசி, கிணத்தடி கொடியில் காய போட்டுவிட்டு, சுமதியும் குணாவும் உள்ளே வந்தனர்,
அப்போது சுந்தரபாண்டியும் நெற்றியில் பெரிய பட்டை போட்டு பெரிய பக்திமானாக வெளியே வந்தார்.
வந்தவர், சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபின் "ஐயா, குணசேகரா, சாப்டாச்சா"
"ஆங், சாப்டேன் ப்பா " என மெல்ல நலுவ பார்தவன் .
"குணா, குணா" என்ற தன் அத்தையின் அழைப்பில் நின்று திரும்பி பார்த்தான்.
"ஏன்த்தா, உன் மருமவன ஏலம் போட்டுட்டே வார" என சுந்தரம் கேட்க.
"அண்ணே, நீ இருக்கியா,உன்ன இப்பெல்லாம் பாக்கவே முடியரதில்லைன்ன " என பேசிக்கொண்டே தன் அண்ணன் அருகில் செல்ல அவரோ "உட்காருத்தா சாப்புடுறீயா, ஏடி என் தங்கச்சிக்கு தட்ட வை" என சுமதிடம் கூற
"அட, வேண்டாம்னா சாப்ட்டேன்" அதற்குள் சுமதி தட்டை அவள் புறம் வைக்க "மதினி, வேணாமானா கேட்குறீகளா" என தள்ளி வைத்தாள்.
"என்னத்தா இந்நேரம்" - சுந்தரம்
"அதுன்னே, உன் மருமகா நேத்து ஊருக்கு போனா , போய்யிட்டு ஒரு போன் கூட பண்ணல பயபுள்ள, ஆனா உன் மகனுக்கு கண்டிப்பா போன் பண்ணி சொல்லி இருப்பா அதான் கேட்க வந்தேன்.
"இப்ப ஏன்த்தா ,பொட்டப்புள்ளையே வெளியூர்க்கு அனுப்பிட்டு காலம் கிடக்குற கிடையில ஒரு பயபுள்ளைகளையும் நம்ப முடியல அம்புட்டும் காவாலியா அலையுதுக" என சாப்பிட்ட கையை கழுவி விட்டு , சுமதி முந்தானையில் கையை துடைத்தப்படியே கேட்டவரிடம் .
"நானும் , சொல்லிட்டேன்னே, தாப்பனும், பொண்ணும் எங்க என் பேச்சை கேட்கிறாங்க , மிருதுளா விருப்பம் தான் அவ அப்பாரு விருப்பமும்".
"ரத்தனவேலு பண்றது ஒண்ணும் எனக்கு புடிக்கல ஆத்தா, இருக்கட்டும், என் மருமவ என் வீட்டுக்கு வரட்டும்" என கூறிவிட்டு அவர் தனதறைக்கு செல்ல பின்னாடியே சுமதியும் சென்றார், வேறேதுக்கு சுந்தர பாண்டி தூங்குற வரை கால் அமுக்கி விட.
இதில் ஒரு ஓரமாய் நின்றிருந்து நடந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் குணா.
"ஏலேய் மருமவன அந்த அடங்காபிடாரி போன் பண்ணி ஏதும் சொன்னாலா ,நீ என்னல கேட்க கேட்க சிலையா நிக்கா" என சுமதி குணாவின் தோளை தட்ட .
"அதெப்படி அத்தை, நீயும் உன் அண்ணனும் ஒரே மாதிரியே இருக்கீக , ச்சை நல்ல குடும்பமடா வில்லங்கம் புடிச்ச வில்லன் குடும்பம்".
" அட எடுபட்ட பயல, அடிங்க என் அண்ணனை வில்லன் ஆ சொல்லுத மென்னைய பேத்துடுவேன் ஆமா, சரி நீ ஏதோ திருட்டு தனம் பண்ணுறியாம் அப்படியா ,இந்த காதல் ,அது இதுன்னு" என மருமகனை வம்பிழுத்தாள் திலகா.
"அட ஆத்தா, திலகாத்தா, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை, உன் மகா ஊரு போய் சேந்துட்டாளாம்,நல்லபடியாக, தூங்கி எந்திச்சு உனக்கு போன் பண்ணுவா, அதுவரை உன் திருவாய மூடிட்டு இரு அத்தை, குடும்பத்துல கொழப்பம் உண்டு பண்ணிடாத, நீ தூக்கி வளர்த்த புள்ள ஏதாட்டு பாத்து செய் ,அம்மாடி உங்க சங்காத்தமே வேண்டாம் இப்போ தெரியுது மிரு ஏன் இப்படி இருக்கான்னு, அம்மாடி" என வடிவேல் போல கூறியவன் மாடிக்கு தனதறைக்கு ஓடிவிட்டான்.
திலகாவும், தன் அன்னையிடம் பேசிவிட்டு, வீட்டிற்க்கு வரவும், மிருதுளா போன் செய்யவும் சரியாக இருந்தது.
"அடியே, ஊருக்கு போய்யிட்டு ஒரு போன் பண்ணியா"
"அதான் பண்ணிட்டேன மா"
"எப்போ பண்ற, சரி பாதுகாப்பான இடத்தில தான இருக்க"
"ஆமா மா , பாதுகாப்பான இடம் தான் என் பிரெண்ட் ஒரு பொண்ணு இருக்கா ,பேரு ஸ்வேதா "
"அந்த புள்ளட்ட குடு நான் பேசுறேன்"
" எதுக்கு, என்ன ஊர்ல அசிங்கப்படுத்துனது காணாததுன்னு, இவட்டையும் கேவலபடுத்த போறியா, ஒண்ணும் தேவை இல்லை ,
சரிம்மா, நான் அப்பறமா பேசுறேன்"
"அடியே உன் அப்பாட்ட ஒரு வார்த்தை பேசுடி"
"அதெல்லாம் காலையிலேயே பேசிட்டேன், நீ போன வை"
என போனை வைத்தவள் தற்செயலாக நிமிர்ந்து பார்க்க, அங்கு யுவா பால்கனியில் தம்பில்ஸ் எடுத்து கொண்டிருந்தான், கருப்பு கையில்லா உள் பணியன் போட்டிருந்தவன், வேர்க்க விருவிருக்க உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.
மிருவும் தன் பிளாட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்தாள்....
"இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை " என்று வாய் சொன்னாலும் கண்ணு என்னவோ அவளை அறியாமல் அவனை சைட் அடித்தது.
"என்னடி ,யுவா அண்ணனை சைட் அடிச்சாச்சா" என்ற குரலில் திரும்ப அங்கு ஸ்வேதா காப்பியுடன் நின்றிருந்தாள்.
இரண்டு பேரும் நேற்று சரியான தூக்கமின்மையால், இன்று காலை பத்து மணிக்கு தான் எழுந்து காப்பி குடிக்குதுங்க.
"அடியே நான் கமிட்டட் ,ஆல்ரடி ஆள் இருக்குடி நீ வேற , ஆள் அழகா இருந்தா கண்ணு பார்க்கதான் செய்யும், பார்கிறது வேற டிபார்ட்மெண்ட், சைட் அடிக்கிறது வேற டிபார்ட்மெண்ட்" என திறமையாக சமாளித்ததாய் நினைத்தாள் அகங்காரி.
பேசிக்கொண்டே மிருதுளா ஊஞ்சலில் உட்கார, ஸ்வேதா அங்கிருந்த பீன் பேக்கில் உட்கார்ந்தாள்.
"ஆஹா, என்னா பேச்சு பேசுறடி நீ " என வாயை பிளந்தாள் ஸ்வேதா.
இது வெறும் டிரையலர் என்று அறியாத சிறுபிள்ளை ஸ்வேதா பாவம்.
" சரி என்னமோ உங்க நொன்னன பத்தி காலையில சொல்லுறேன்னு சொன்னில , சொல்லுடி" என மிரு காப்பி அருந்தி கொண்டே கேட்க , ஸ்வேதாவும் சிறு அமைதியுடன் ஆரம்பித்தாள்..........

காத்திருப்பு தொடரும்......
 
Status
Not open for further replies.
Top