ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதலாடி காத்திருந்தேன் நான் கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
வணக்கம் நட்பூக்களே

இந்த கதை சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கியமான சில அவலத்தை மையமாக கொண்டு எனது கற்பனை கலந்து எழுதி இருக்கிறேன்.
மேலும் இது யாரையும் குறிப்பிட்டோ, தாக்கியோ எழுதப்படவில்லை , கதை காதல் ,துரோகம் ,பலி என எல்லா கோணத்திலும் செல்லும் , கதையை கதையாக மட்டும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 🙏🙏🙏
ei02W3N67111.jpgஇதோ காதலாடி காத்திருந்தேன் நான்
 
Last edited:

Naga Novels

Active member
Wonderland writer
காத்திருப்பு 💖 1

அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள்..
விழித்தவள் தான் எங்கே இருக்கிறோம் என சுற்றி முற்றி பார்க்கும் போது அவளுக்கு எதிரே ஒருவன் கத்தியுடன் நெருங்கி வந்து கொண்டிருந்தான்.

அவளோ தன் வயிற்றில் கை வைத்தப்படியே கண்கள் கலங்க கத்தியுடன் நேரே வந்தவனை ஏறிட்டு பார்த்தாள் அந்த பார்வையில் ஒரு ஏக்கம் தெரிந்தது தான் இங்க இருந்து தப்பித்து விடமாட்டோமா என்று கண்கள் கலங்க கை நடுக்கத்துடன்

"வேண்டாம் என்ன விட்டுருங்க , நானும் என் பிள்ளையும் உங்க கண்ணுல படாமல் எங்கேயாவது போய்டுறோம் நீங்க உங்க பையனுக்கு உங்க இனதுல கல்யாணம் பண்ணிவைச்சுடுங்க ஐயா, இப்ப என்ன விட்டுங்க ஐயா என் புள்ளை உலகத்தை பார்க்கனும்" என அந்த கற்பினிபெண் கதறினாள் .

"ஏன்டி தரங்கெட்ட நாயே எவ்வளவு உடம்பு தின்னக்கம் ,துணிச்சல் இருந்தா என் பையனே வலைச்சுபோடுவ, சரி படுபாவிபய ஆசைக்கு அனுபவிச்சிட்டு போகட்டும்னு விட்டா , நீ என்னடானா உடம்பு தெனவெடுத்து அவன்ட புள்ளையும் வாங்கிட்டு இப்போ தாலியும் வாங்க இழுத்துட்டு போவ , இந்த ஊர் என் கோட்ட டீ , இப்ப உன்னால தப்பிக்க முடியாது சாவுடி பொசக்கெட்ட சிரிக்கி" என கத்தியை கற்பினி வயிற்றை நோக்கி குத்த சென்றதும்,
"அத்தை " என்ற அலரல் சத்தத்தோடு தொலை காட்சி அணைந்தது...
"அடி ஆத்தாடி, இதென்ன நல்ல கட்டதுல இப்படி டிவில கரென்ட் போயிடுச்சு , ஆமா கத்தி குத்துனா அம்மானு தானே கத்துவாங்க இதென்ன அத்தைனு கத்துறா " என விரசக்கம்மாள் உச்சுகொட்டிகிட்டே திரும்ப அங்க பத்திரகாளி என மிருதுளா கையை இடுப்பில் ஊன்றி நின்றாள்.
"அடியே கிழவி, நான் இங்கு உயிர் போர மாதிரி கத்திட்டு இருக்கேன் நீ என்னடானா, ஜாலியா நாடகம் பாத்துட்டு இருக்க " என மிருதுளா தன் அம்மாயி பார்த்து முறைத்தவள்.... மீண்டும் கத்த ஆரம்பித்தாள்
"அத்தை , அத்தை எங்க போனீங்க " என புயல் போல் கோபத்தில் உள் நுழைந்தாள் மிருதுளா.
"ஏன்டி ,ஏன் இப்படி கத்திக்கிட்டு வார சண்டைகோழி மாதிரி " என சுமதி அடுக்களையில் இருந்து வெளியில் வந்தார்.
"நீங்க மொதல்ல சொல்லுங்க உங்க தவப்புதல்வன், அந்த தருதலையை எங்க, டேய் எருமமாடு , இளவெடுத்தவனே எங்கடா இருக்க பரதேசி, இப்படி பயந்து ஒழியுறதுக்கு நீயெல்லாம் வாயில நல்லா வருது "என அர்ச்சித்துக்கொண்டே அனைத்து அறையிலும் தேடினாள் அவள் அத்தை மகன் குணசீலனை .
" அவன ஏன்டி கீழ தேடிட்டு இருக்க, என் பேரான்டி சிங்கமுடி உனக்கெல்லாம் எதுக்கு பயப்படனும்ங்கிறேன் அவன் மாடி ரூம்ல தான் இருக்கான் " என வீரசக்கம்மாள் வெத்தலை இடித்தும் , மென்னும் துப்பிகொண்டே கூறினார்.
" அடியே கிழவி , எல்லாம் உன் வேலையாதான் இருக்கும், இருடி அவன துவைச்சுட்டு வெத்தலை குழவியே உன் மண்டையிலே போடுறேன்"
என ஆவேசமாக பாவடையை எடுத்து சொருகிட்டு மாடி ஏறினாள் மிருதுளா.
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள் எல்லோருக்கும்
என் மீது கண்கள்
டடான் டடான் டடான்

என ஹோம்தேட்டரில் பாட்டு போட்டு ஆடிக்கொண்டிருந்த குணாவை பிட்டத்திலே ஒரு மிதி விட்டாள் மிருதுளா, மிதிவாங்கிய குணாவோ எம்மேங்கோ என வடிவேல் போல் மெத்தையில் குப்புறவிழுத்தான்.
விழுந்தவன் முகத்தின் மேல் தலையணை அமிழ்தியவளோ " எவ்வளவு தைரியம் இருந்தால் மவன என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மதம்னு சொல்லிருப்ப" என அதன் மீதே இரண்டு குத்து விட்டாள் மிருதுளா.......
"அடியே ராட்சசி, டெவிலு, பிசாசு, காட்டேரி இறங்கி தொலடி அரிசிமூட்டை" என அவளை தன் மீதிருந்து தள்ளி விட்டான் குணா, மிருதுளா டிரெசிங் டேபிள் அருகில் கீழே விழவும், கலைந்த சிகையுடன் மூச்சு வாங்க எழுந்தமர்ந்தான் குணா.
"ஏன்டி ,எருமமாடு, எதுக்கு இவ்வளவு ஆத்தரம், என்னாத்துக்கு என்ன கொலை பண்ண பார்த்த , மூதேவி மூஞ்சிய பாரு
நல்லா பொண்ண பெத்து போட சொன்னா நல்லா புளி மூட்டைய பெத்து போட்டுருக்காங்க எங்க அத்தை" என சலித்து கொண்டவனை மீண்டும் எழுந்து, கையில் கிடைத்த பவுடர் டப்பாவால் வாயிலேயே ஒண்ணு விட்டாள் மிருதுளா
"ஹேய் பைத்தியம் எதுவானாலும் தெளிவா சொல்லிட்டு அடி பூதகி " என அங்கிருந்த தலையனையை எடுத்து தன் மடிமீது போட்டு இடுப்போடு சேர்த்து அணைத்து
கொண்டான் " பாதுகாப்பு மிக முக்கியம் அமைச்சரே என்பது போல ஏனெனில் மிருதுளா கோபம் அவன் அறிவான்.
சட்டென எழுந்தவள், ,"ஏன்டா எங்கப்பாட்ட என் கல்யாணம் பண்ண ஓகே சொன்ன , அதுமட்டுமல்லாம லவ் பண்றோம்னு வேற சொல்லிருக்க எவ்வளவு தைரியம் உனக்கு" என்று மீண்டும் கை ஓங்க, மற்றொரு தலையணை கொண்டு அதை தடுத்து மல்லு கட்டினான் குணா,விடாது அடித்தாள் மிருதுளா, ஒரு கட்டத்தில் அவளை சமாளிக்க முடியாது,
" அடியே ,உங்கப்பன் உனக்கு மாப்பிள்ளை பார்க்க மேட்ரி மோனி சைட் வரை போயிட்டாரு டீ அதான் அப்படி சொன்னேன்" என கூறியவனை அடிக்க ஓங்கிய கை அந்தரத்தில் நின்றது .....
காத்திருப்போம் அடுத்த அத்தியாயத்திற்க்காக.......💙💙💙💙
 

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 2

அடிக்க ஓங்கிய கை அந்தரத்தில் நின்றது, அவன் சொன்னதை கேட்ட அதிர்ச்சி உடன் கண்கள் கலங்க பேச ஆரம்பித்தாள்

"என்னடா சொல்லுற ,என் அப்பா எனக்கு மேட்ரிமோனியல்ல மாப்பிள்ளை பார்க்காரா"

"ஆமா , பிறகு என்ன செய்வாறம், நீ தான் உள்ளுர்ல, சொந்தத்திலன்னு பொண்ணு பார்க்க வந்த அத்தனை பயபுள்ளைகளையும் தொறத்தி விட்டுட்ட , எவனும் உன் வீட்டு பக்கம் பொண்ணு கேட்டு வரமாட்டுறானுங்க, ஜோசியர்ட்ட விட்டு வேற எங்கேயாவது பார்கலாம்முன்னு உங்க அப்பாரு நினைச்சாரு அதையும் வுட்டியா நீ வயசான மனுசன்னு கூட பார்க்காம அந்த ஜோசியக்காரர சகதில தள்ளிவிட்ட நீ , கொஞ்சம் கரச்சலா பண்ணிருக்க, இதெல்லாம் உங்க அப்பாருக்கு தெரியும் அதான் இப்படியே விட்டா வேலைக்கு ஆகாதுன்னு, அங்கே போயிட்டாரு"

"அப்படியா" என்று அதிர்ச்சி மாறமல் மிரு கேட்க

"என்னடி ,அப்படியா, நல்லவேளை என் கண்ணுல பட்டார்" என அன்று நடந்ததை கூற ஆரம்பித்தான்.
அந்த மேட்ரி மோனி அலுவலகம் எதிரில் நின்று உள்ளே போலாமா வேண்டாமா என்பது போல் யோசனையில் இருந்தார்

ரத்னவேல் மிருதுளாவின் அப்பா, அப்போது அந்த வழியாக எதேர்ச்சியாக சென்ற குணாவின் கண்ணில் அவர் பட "என்ன இவரு இங்க என்ன பண்ணிட்டு இருக்கார்" என தனக்குள்ளே சொல்லியபடி தனது புல்லட்டை அவர் அருகில் நிறுத்தினான் குணா, தன் அருகில் நின்ற வண்டியின் சத்ததில் சுயதிற்க்கு வந்தவர் திரும்பி பார்க்க,

"என்ன மாமா , இங்க நிக்கிங்க "
என்று கேட்க.

"இல்லை மருமகனே இந்த ஆபிஸ்க்கு வந்தேன் அதான் உள்ள போய், எப்படி விசாரிக்கிறது, என்னாபண்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருந்தேன்" என்று சுற்றும் முற்றும் தலையை திருப்பியபடி பார்த்தார் ரத்தினம்.

"மாமா, இது முதல்ல என்ன ஆபிஸ்னு தெரியுமா, இல்லை வேற ஏதும் நினைச்சு தெரியாம வந்துட்டியலா" என குணா கேட்க

"தெரிந்து தான் வந்தேன் மருமகனே, என் பொண்ணுக்கு" என்று அவர் ஆரம்பிக்கும் போதே..
யோசனையில் இருந்தவன் பேச ஆரம்பித்தான்

"மாமா, முதல்ல வாங்க போயிக்கிட்டே பேசுவோம், ப்ளீஸ் வாங்க மாமா, சரி எதுல வந்தியே "

"ஆட்டோல தான் மருமவனே "

"ம்ம்ம், அப்போ வண்டில ஏறுங்க போயிகிட்டேபேசுவோம்" என குணா கூறவும்
மனம் இல்லாமல் அந்த

மேட்ரிமோனி அலுவலகத்தையும் ,குணாவையும் மாறி மாறி பார்த்து விட்டு ஒரு மனதாக வண்டியில் ஏறினார்.

வண்டி நேராக ஊருக்குள் ரத்னவேல் தோட்டத்திற்க்கு ஓட்டி சென்றான் குணா

அழகான பச்சைபசேல் புல்வெளியை தாண்டி , அடர்ந்த தென்னந்தோப்பிற்குள் சென்றது அங்கு சிறிய ஓட்டுவீடு தோட்ட ஆட்கள் அதை பராமரித்து வைத்திருந்திருந்தனர் பழைய காலத்து வீடு அது வீரசக்கம்மாள், விருமாண்டி வாழ்ந்த வீடு...
ஆம் அந்த ஊரில் பெரிய தலக்கட்டு குடும்பம் வீரசக்கம்மாள்- விருமாண்டி தம்பதி அவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள்.
மகன் சுந்தரப்பாண்டி - சுமதி தம்பதிகளின் ஒரே புதழ்வன் தான் குணசீலன் என்ற குணா.
மகள் திலகவதி - ரத்னவேலின் ஒரே தவப்புதழ்வி தான் மிருதுளா ...
வீரசக்கம்மாள் தன் கணவன் விருமாண்டி இறப்புக்கு பின் சொத்து பங்கிட்டதில்,
தாங்கள் வாழ்ந்த தோட்டத்து வீட்டையும் தோப்பையும் தன் மகளுக்கு சீர் வருசையாக கொடுத்திருந்தார் வீரசக்கம்மாள் அதிகப்படியாக.
தண்ணீர் பம்புசெட் தண்ணீர் பீய்ச்சி அடிக்க , அந்த தொட்டி அருகில் போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து பேசினர் இருவரும் " சொல்லுங்க மாமா, இப்ப என்ன அவசரம்னு அந்த மேட்டர மோனிவரை மாப்பிள்ளை பார்க்க போனீங்க" என தன்மையாக கேட்க .

"இல்லை , மருமகனே, எத்தனை மாப்பிள்ளை தட்டி போச்சு எல்லாத்துக்கும் நம்ம மிருது தான் காரணம், அதான் இனி உள்ளுர்ல சரிபட்டு வராதுன்னு அங்க போய் எதாட்டு பண்ணலாமான்னு பார்த்தேன்"

"ஏன் மாமா, அவ படிப்பு இந்த வருசம் தானே முடியுது அதுக்குள்ள ஏன்"

"இப்போது இருந்து பார்த்ணாதானே முடியும் அதான்,பொட்டப்புள்ள மருகனே ஒருத்தன் கைல புடிச்சு கொடுத்தா நிம்மதியா இருக்கும்"
தன் மாமாவின் தீவிரத்தை உணர்ந்தவன், சிறிது கண்கள் மூடி யோசித்து விட்டு ,

"ஏன் மாமா அந்த ஒருதனா நான் தெரியலயா உங்களுக்கு " என கேட்க.
சிறிது ஆச்சரியத்துடனும், யோசனையுடனும் குணாவை பார்தவர் "என்ன மருமகனே சொல்லுரீங்க ,சுந்தரம் கூட சொன்னான், நான் தான் நீங்க சின்ன புள்ளையில இருந்து பழகுறதுனால அது சரியா வருமான்ட்டு வேணாடம்னுட்டேன் அவனும் சரின்னு சொன்னப்புறம் தான் வெளியே பார்த்தேன், இப்ப நீங்க என்னமோ சொல்லுறீயே பா , அப்போ அதனால தான் மிரு........." என்று இழுக்க.

"ஆமா, மாமா, நானும் ,மிருவும் விரும்புறோம், அதான் வந்த எல்லா வரனையும் கலைச்சு விட்டோம்" என்றவனை குழப்பத்தோடு பார்த்தவர் " ஏன் மருமகனே எங்க கிட்ட சொல்லிருக்களாமே அதுல என்ன தயக்கம் "

"எப்படி மாமா ,சொல்லுறது, அவ படிப்பு முடியல, என் படிப்பு முடிஞ்சும் நான் வெட்டியா இருக்கேன் எப்படி நாங்க சொல்ல.எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுங்க மாமா, நான் கொஞ்சம் என்ன செட்டில் பண்ணிட்டு மிருவ கல்யாணம் பண்ணிகிடுறேன், அவளும் வேலைக்கு போக ஆசைபட்டா, அவளும் போகட்டும், கொஞ்சம் பிரியா விடுங்க மாமா" என அவர் கையை பிடித்து கேட்க. சரி என்பது போல் தலையாட்டினார் இப்போது தான் குணாவிற்கு நிம்மதியா இருந்தது.

அங்கிருந்து வீடு சென்றவர், மிருவிடம் இதை தெரிவிக்க அதன் பின் தான் அவள் பத்திரகாளி அவதாரம் எடுத்து இவ்வளவும் நடந்தது.

"போதுமாடி, பிசாசு குட்டி உனக்கு ஒரு வருஷம் தான் டைம் நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது, உன் மனசமாத்துவியோ என்னபண்ணுவியோ ஒரு முடிவு எடுத்துதான் ஆகனும், உனக்காக நான் கஷ்டப்பட்டு ஒருவருஷம் வாங்கி கொடுத்துருக்கேன் அதுக்கு தாங்க்ஸ் சொல்லி என் கால்ல விழுவியா கொரிலா மாதிரி கொதர்ற" என்று தலையை சரிசெய்து கொண்டான்.
மிருதுளாவோ அவனை பார்த்த மாதிரி " சரிடா எதாட்டு பண்ணமுடியுமான்னு பார்க்கேன் இல்லைனா"

"இல்லைனா" என சிவிகொண்டிருந்த தலையை பாதியிலேயே நிறுத்தி திரும்பி மிருதுளாவை பார்த்தான்.

"இல்லைனா உன்னய கல்யாணம் பண்ணிகிடுறேன் மச்சான்" வேற என்ன பண்ண என் தலையெழுத்து..

அவள் அப்படி சொல்லவும் பட்டென அவள் காலைபிடித்தவன் " தெய்வமே என் வாழ்க்கையில மண்ணள்ளி போட்டுடாத ப்ளீஸ்" என கெஞ்சினான்.

"எந்திரிடா பன்னாட, நீ என் பிரெண்ட் ஜென்சிய லவ் பண்ணறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, என்ன ஓரே கல்லுல ரெண்டு மாங்காவா, இதுல இவரு பெரிய தியாகி மாதிரி கால்ல வேற விழுகோனுமா மூஞ்சிய பாரு பரதேசி " என கேட்க.
பாவம் போல் அவளை பார்த்தான் குணா,

"சரி விடு, நீ ஒரு வருஷம் வாங்கி கொடுத்ததே பெரிய விஷயம் பார்ப்போம் " என கூறிவிட்டு கீழே சென்றவளை பார்த்தவன்
தனது இரு கையையும் மேலே தூக்கி"அய்யா கருப்பா இவ வாழ்கையில எதாட்டு மந்திரம் போட்டு மேஜிக் பண்ணி என்ன காப்பாத்திடுபா" என வேண்டிக்கொண்டான்.
அவன் கூறியதை காதில் வாங்கியவள் திரும்ப வந்து " அப்படியே ஜீசஸ்டயும் வேண்டிக்கோ, அவரும் கேல்ப் பண்ணணும்டா பன்னி " என கூறிவிட்டு சிரித்தப்படி கீழே சென்று விட்டாள்.
 

Naga Novels

Active member
Wonderland writer
காத்திருப்பு
அத்யாயம் 💙 3
குணாவிடம் பேசிவிட்டு மாடியில் இருந்து இறங்கி வந்தவளை வழிமறித்து காப்பியை நீட்டினாள் சுமதி "ஏன்டி என் புள்ள உசுரோட தான் இருக்கானா இல்லை ஏதும்உசுரோட பண்ணிட்டியா சத்தமே வரல" என மாடியை பார்த்து கொண்டே கேட்க.
"அதெல்லாம் பெருசா ஒண்ணும் சேதாரம் இல்லாமல் தான் பேயோட்டிருக்கேன்,
ஒண்ணும் பதறாதீங்க கீழ வருவான் ஏதாட்டு திங்குறதுக்கு" என தன் காப்பி கப்பை சுமதியிடம் கொடுத்து விட்டு கிளம்பும் போது வீரசக்கம்மாளை பார்த்து
" ஏய் கிழவி இன்னிக்கு தப்பிச்சுட்ட ,ஒரு நாள் உனக்கு இருக்குடி, அத்தை சோத்துல ஏதயாட்டு கலந்து கொடுத்து இத சாகடிச்சுடுங்க,நிம்மதியா இருக்கும் குடும்பம் " என சுமதி காதில் சொல்லவும் கிளுக் என வாயமூடி சுமதி சிரிக்கவும் அது அனைத்தும் வீரசக்கம்மாள் காதில் விழ ,
"என்னங்கடி அங்க என்ன போட்டுத்தல்ல பேசுறீகிலோ இந்தாடி வாயாடி இவளுக்கு பதில் நான் மட்டும் உனக்கு மாமியாரா இருந்தா இந்த சில்லுவாய புடிச்சு ஆட்டி விப்டுருப்பேன் ஆட்டி " என வெத்தலையை இடிக்க,
"ஆத்தி கிழவி காது என்னா ஷார்பு ,அத்தையோவ் பார்த்து பதமா இருங்க, அந்த பாயாசத்துல பாஸ்சன் மறந்துடாதீங்க மீ எஸ்கேப்பு " என தன் வீட்டை நோக்கி ஓடினாள் .
குணா வீட்டிற்க்கு எதிர் வரிசையில் இரண்டு வீடு தள்ளி தான் மிருதுளா வீடு, தன் அண்ணன் வீட்டிற்க்கு அருகிலே இருக்க வேண்டி அந்த வீதியிலேயே வீடு வாங்கி வந்திருந்தாள் திலகவதி, ரத்னவேலும் ,சுந்தரபாண்டியும் உறவுமுறையையும் தாண்டி நல்ல நண்பர்கள், அதனாலே திலகவதிக்கு இது சாத்தியமாயிற்று.
துள்ளி குதித்து வீட்டிற்க்குள் வந்த மிருதுளாவை ,வாசலிலேயே வறவேற்றது திலகவதியின் அர்ச்சனை குரல், அதை வழக்கம் என ஏற்ற மிரு தன் அறைக்கு செல்ல
" அடியே நில்லுடி ,எங்க போய் ஊர்சுத்திட்டு வர , கொஞ்சம் கூட பொம்பளை பிள்ளைன்னு நினைப்பு இருக்கா, ஆம்பள மாதிரி அதிகாரம் பண்ணிட்டு அலையுது தருதலயா ஊர சுத்து கேட்டா காலேஜ்ன்டுருவா இப்போ தான் எல்லாம் முடிஞ்சுடுச்சே , இப்பவாவது கொஞ்சமாட்டு வீட்டு வேலையில தாய்க்கு உதவியா இருப்போம்னு தோணுதா பாரு , பாவம் சுமதி மதினி எந்த ஜென்மத்தில என்ன பாவம் செய்தாலோ நீ அவளுக்கு மருமகளா போவ போற " என திட்டி தீர்த்து விட்டு ஓய்ந்து போனால், ஏனென்றால் பதில் பேசத்திடத்தான் அங்கு மிரு இல்லையே அவள் எப்போதோ அவள் அறைக்குள் சென்று அடங்கி இருந்தாள் .
அறைக்குள் வந்தவளோ தனது அலமாரியில் இருந்து ஒரு சிறிய ஆல்பத்தை எடுத்தாள் வேகமாக கடைசிபக்கத்தை திருப்பினாள் அதில் தானும் தன் தந்தையும் இருக்கும் புகைப்படத்திற்க்கு அடியில் மற்றொரு புகைப்படம் இருந்தது அதை எடுத்தாள் , கட்டிலில் அமர்ந்தாள் கையில் இருக்கும் புகைப்படத்தில் துளி துளியாக கண்ணிர் துளிகள் வேகமாக தன் துப்பட்டாவால் துடைத்தவள் அப்படியே உடைந்து அழுதாள், சத்தம் வரவில்லை என்றாலும் கண்ணீருக்கு பஞ்சமில்லை, ஏன் ? என்ற கேள்விக்கு எல்லாம் விதி என்ற பதிலே அவள் முன் வந்தது.
ஆம் மிரு ,எவ்வளவு தைரியமாக, துடுக்காக ஆண் பிள்ளை போல் நடந்து கொண்டாலும், அவள் உண்மை ரூபம் அந்த அறை மட்டுமே அறியும், பூவை விட மென்மையானவள் கஷ்டம் தெரியாமலே வளர்ந்த கைக் குருவி.
ஆனால் இப்போது கஷ்டம் மட்டுமே அவளது சொந்த உடைமை ஆகிப்போனது. அவன் கொடுத்து விட்டு சென்றது, அவனே அறியாமல் நடந்த பிழை ,இந்த மிருவின் கஷ்டம், அவன் வாங்காமல் கொடுத்த பரிசு தான் மிருவின் கண்ணீர் , அதை மறக்கவே அவள் எடுத்த வேடம் இந்த துடுக்கு தனம்.
மாடியில் தான் மிரு அறையும் தன் அறைக்கு வெளியே வரண்டா அதில் எண்ணற்ற செடிகள், பூக்கள் அதன் அருகில் சென்று நின்றவள் கண்கள் அந்த வீட்டில் பதிந்தது, எண்ணம் பின்னோக்கி ஓடியது.
அன்று........
மாடி வராண்டாவில், மழை அடித்து பெய்ய செடிகளோடு கொடிகளோடு கொடியாக நினைந்தவள் கண்ணில், சிறிது தூரத்தில் நான்கு வீடு தள்ளி அதே போல் மழையில் நனைந்து கொண்டு மாடியில் நனைந்த துணிகளை எடுத்து கொண்டிருந்தது அந்த உருவம், மழைத்துளிகளுடனே முகம் தெரியவில்லை என்றாலும் அவன் வனப்பு அவனை ஒரு ஆண்மகன் என காட்டியது, மெய்மறந்து பார்த்து கொண்டிருந்தவளை மழைதுளி முழுதும் ஆட்கொள்ள, சட்டென்று கண்கள் கூச வஞ்சம் செய்தது மின்னல் ஒளி, கண் கூசி கண்திறந்தவள் கண்களில்............
அந்த வீட்டின் மாடி ஆள் அரவம் இன்றி வெறுமையாகவே இருந்தது .
இருந்து மழையானது நிற்கவில்லை அவளது கண்களில்,
"அடியே ,எருமமாடு கீழ வந்து இந்த தொவைச்ச தூணிய மாடி வரண்டால காய போடு ,திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குறத மட்டுமே செய்யாத, நாளைக்கு பொட்டபுள்ளைய என்ன வளப்பு வளத்து வச்சுருக்கன்னு சாதி சனம் என்ன காறி துப்பபோது " என்ற திலகவதியின் அர்சனையுடன் ஒரு முடிவெடுத்தவளாய் கீழே சென்றாள்.
ஆம் முடிவெடுத்து விட்டாள்....
காத்திருங்கள்
அடுத்த அத்யாயத்திற்க்கு.....
 

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 💙 4
இரவு நேரம் மூவரும் உணவு அருந்தும், மேஜையில், அமர்ந்திருந்தனர், ரத்தினம்,திலகவதி, மிருதுளா.
திலகவதி சாப்பாட்டை பரிமாறிக்கொண்டே பேச ஆரம்பித்தாள் " ஏங்க என்னால முடியல உங்க மகா வீட்டுல ஏவுன வேலை எடுத்த வேலை செய்ய மாட்டிகா, நாளைக்கு என்னிய நல்லா அவமானப்படுத்த காத்துருக்கா, இப்ப படிப்பு வேற முடிஞ்சிட்டு இன்னும் தின்னுட்டு தின்னுட்டு தூங்குறததான் பொலப்பா வச்சிட்டு இருப்பா, இவள எப்படி வீட்டுல வச்சு சமாளிக்க போறேனோ தெரியல " என சாம்பாரோடு சேர்த்து பயன் புலம்பலையும் சேர்த்து ரத்தினம் சாப்பாட்டில் ஊற்றினாள்.
" திலகா இப்பெல்லாம் நீ ரொம்ப புலம்புறன்னு நினைக்கேன், நம்ம புள்ள நம்ம வீட்டுல இருக்குற வரைக்கும் ராசாத்தி மாதிரி இருந்துட்டு போகட்டுமே நாளைக்கு என்னங்குறத அவ பார்த்துபா, நீ மனுசன நிம்மதியா சாப்டவுடு" என சாப்பிட ஆரம்பித்தார் ரத்னம்.
விடுவாளா திலகவதி
" அது சரி நாள்பூராவும் இவ பண்ற அட்டூழியத்தை நான் தானே சமாளிக்கனும்" என்று திலகா பேசி முடிக்கவில்லை ,
" அதற்கு அவசியம் இல்லமா" என தன் சோத்து தட்டில் சோற்றை பிசைந்த வாறே மிருதுளா கூறினாள்.
ரத்னமும், திலகாவும் இவ என்ன சொல்றா என திகைப்புடன் பார்க்க திலகாவோ " ஏன்டி திருந்திட போறீயா " என கேட்டவாறே முட்டை பொறியலை எடுத்து வாயில் போட்டாள்.
" இல்லை ,எனக்கு வேலைகிடைச்சிருக்கு , வேலைக்கு போகப்போறேன்" என மிருதுளா சர்வசாதாரமாக கூற, திலகாவிற்க்குதான், வாயில் போட்ட முட்டை அரைபடவே இல்லை.
" ஏன்னமா சொல்லுற, எப்படி ? " என தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கேட்ட ரத்தினத்திடம் " அப்பா கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சிருக்கு பா நல்ல வேலை அதான்"
வெடுக்கென மென்னும் மெல்லாமலும் வாயில் வைத்திருந்த முட்டையை விழுங்கிவிட்டு " என்னடி பேசுற வேலைக்கா, அடியே கல்யாணம் பேசியாச்சி விட்டோட அடக்க ஒடுக்கமா இரு, வேலைக்கு அதுக்குன்ன வெளக்கமாறு பிஞ்சுடும் சொல்லிபுட்டேன் ஆமா" என பேசியவளிடம்
" திலகா நீ கொஞ்சம் பேசாம இரு ,அம்மாடி மிரு நீ சொல்லுமா போலான்னு நினைக்கிறீயா இல்லை முடிவே பண்ணிட்டியா? " என தான் சாப்பிடுவது நிறுத்தி விட்டு மகள் முகத்தையே பார்த்தார் ரத்தினம்.
" முடிவு பண்ணிட்டேன் பா" என மிருதுளா கூறவும்.
" எப்படி பேசுறா பாருங்க எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் , வேலையும் வேண்டாம் ஒரு ஓலையும் வேண்டாம்னு சொல்லுவீங்களா ,அத விட்டு அவ கிட்ட டீடெய்லு கேட்கிறீங்க" என திலகா கோபத்தில் கத்த தொடங்கிவிட்டாள்.
" திலகா " என்ற ஒத்த வார்த்தையோடு திலகவதியின் கையை பிடித்து அமுக்கினார் ரத்னம் அதை புரிந்து கொண்ட திலகவதி தன் கணவன் முகத்தை பார்த்து அப்படியே அமைதியாக மிருதுளாவையும் பார்க்க அவள் சாப்பாட்டை பிசைந்தவள், பிசைந்தவள் தான் ஒரு பருக்கை வாயினுள் போக வில்லை .
" ம்ம்... எப்போ கிளம்பளான்னு இருக்க"
"இன்னும் ஒருவாரத்தில பா"
"எவ்வளவு நாளுக்கு வேலை செய்ய போற "
"ஒரு ஒருவருஷமாட்டு வேலைபார்த்துகிறேன் பா"
"சரி மா நீ கிளம்ப வேண்டிய ஏற்பாடை பண்ணு, நான் என் பொண்ணை நம்புறேன் அவ எது பண்ணாலும் சரியா தான் இருக்கும் அவ அப்பாவ நாலுபேரு முன்னாடி தலை குனிய விடமாட்டா நீ சாப்டு கண்ணு" என்று கூறிய தன் அப்பாவை சட்டென்று தலை தூக்கி பார்த்த மிரு வின் கண்கள் கலங்காமல் இல்லை , சிறிது சாப்பிட்டவள் ,சாப்பாட்டு தட்டை அடுக்களையில் வைத்து விட்டு கை கழுவி தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
"ஏன்னங்க நீங்க " என குழப்பமாக கேட்ட திலகாவிடம் , "நீ மொதல்ல சாப்பிடு மத்தத ரூம்ல போய் பேசிக்குவோம், சாப்பாட ரொம்ப நேரம் காக்க வைக்க கூடாது" என ரத்னம் கூற இருவரும் சாப்பிட்டனர்.
அறைக்கு சென்ற மிரு தன் தோழி ஜென்சிக்கு அழைத்தாள்.
"ஏய் சொல்லுடி, என்ன இந்த நேரம் ஏதும் முக்கியமான விஷயமா? என ஜென்சி கேட்க.
"ஆமாடி , நான் அந்த ஜாப்க்கு போக போறேன்"
"என்னடி நீ காலையில தான் பேசுறப்போ வீட்டுல இருந்து ஜாலியா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க போறன்னு சொன்ன , இப்ப என்ன ஆச்சு , அதோட ஆன்லைன்ல வேலை பார்த்ததே போரடிச்சுதுன்னு வேற சொன்ன " என ஜென்சி கேட்க.
"அப்போ நான் எதுக்கு வேலைக்கு போகபோறன்னு உனக்கு தெரியாது, அதெப்படி, அந்த பன்னாடையும் நீயும் சொல்லி வந்த மாதிரி ஒண்ணும் தெரியாத மாதிரி ஆக்ட் விடுறீங்க, அந்த மூதேவி ஏற்கனவே உனக்கு கால் பண்ணி எல்லாம் சொல்லிருக்கும், பின் ஏன்டி சீன் போட்டு கடுப்புகள கிளப்பிட்டு இருக்க" என சிடு சிடு வேன் பொரிந்து தள்ள
"ஆத்தா மகமாயி தெரியாம கேட்டுட்டேன், மன்னிச்சு விடுமா தாயே " என மிரு காலில் விழாத குறையாக கெஞ்சினாள் ஜென்சி.
" சரி போய் தொலை, ஒரு வருஷம் இன்னிக்கு அவங்க டைம் கொடுத்தாலும், அவங்கள நம்ப முடியாதுடி கண்ணுக்கு முன்னாடியே இருந்தா, அந்த கிழவி எதாட்டு டிராமா போட்டு கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணிடும், அதான் கிளம்புறேன், சரியா, நீங்க இரண்டு பேரும் ஜாக்கிரதையா இருங்க கூடிய சீக்கிரம் நான் ஒரு பிளான் பண்றேன், அதுக்குள்ள வீட்ல மாட்டிடாதீங்க சரியா? " என அழுத்தமாக மிரு கேட்க
" ம் ம் சரிடி பார்த்து இருந்துகிடுறோம்" என சுரத்தையே இல்லாமல் வார்த்தை வந்தது.
"இங்க பாரு ஜென்சி, அந்த பன்னாட கால் பண்ணி எங்கயாவது கூப்பிடுவான், போயிடாத ,கொஞ்சம் பொறுமையா இருங்க சொல்லிட்டேன்" என மிரு தன் தோழியின் மீதும், தன் தோழன் தன் மாமன் மகன் குணாமீதும் அக்கறையுடன் கூறினாள்.
"சரி சரி பார்த்துகிறேன், அப்புறம் மிரு" என ஜென்சி இழுவையாக கூற
" என்னடி என் இழுவை"
" மிரு...... இப்போ போகப்போற புது இடத்திலயாவது நீ பழச மறக்கப்பாருடி ப்ளீஸ், நடக்காத, இனி நடக்கவும் முடியாத ஒண்ண நினைச்சுகிட்டு இனி எவ்வளவு நாள் தான் அவஸ்த்த படுவ , உன் வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை பத்தி யோசிடி" என கலங்கும் தன் விழிகளை துடைத்தப்படி ஜென்சி பேசுவது மிருவாள் புரிந்து கொள்ள முடிந்தது.
" ம்ம்ம்..... பார்ப்போம் குட் நைட்" என்றதோடு அழைப்பை துண்டித்தாள்..
பழசை மறக்கவா, என்னால் அதை முடிந்தால், கண்டிப்பாக முயலுவேன் ஜென்சி ஆனால்.... என மனதிற்குள் கூறியவள் அப்படியே கலங்கிய கண்களுடன் தலையணையில் சரிந்தாள்..
இங்கு அறையை மூடிவிட்டு தன் கணவன் ரத்தினம் நோக்கி வந்த திலகாவோ, " உங்க மனசில என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க, வயசு பிள்ளைய கால காலத்துல கல்யாணம் பண்ணி அனுப்பாம வேலைக்கு அனுப்புறீங்க" ஆவேசமாக கேட்க சட்டென்று திலகாவை பிடித்து இழுத்து கட்டிலில் அமர வைத்த ரத்தினமோ, தன் மனைவி கைகளை பிடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்...
" அட திலகமே கல்யாணம்ங்கிறது அவ்வளவு லேசுபட்ட காரியமா, நீண்ட நாள் பயணம் டி ,நாம பேசி முடிச்சுட்டோம் உன் அண்ணன் பையனுக்கும், நம்ம பொண்ணுக்கும், ஆனா அதுங்க மனசுல என்ன இருக்குன்னு சரியா தெரியலயே"
"என்னங்க நீங்க, குணாவே தானே கேட்டான் மிருவ கட்டி கொடுங்கன்னு பின்ன என்ன?, அதுக்கு மிருவும் மறுப்பு சொல்லலியே "
"அடியே திலகாமா நீ காதல் திருமணம் பண்ணினவ தானா? " என திலகவதி தலையிலேயே தட்டினார் ரத்தினம் .
"இந்தா பாருங்க தலையில தட்டுற சோலி வச்சுகிடாதீங்க ஆமா , நான் ஒண்ணும் அனாத இல்லை, எனக்கு எங்க ஆத்தா அண்ணன் எல்லாம் இருக்காங்க ஆமா" என கோவிச்சவள் கையை மீண்டும் பிடித்து

"அடியே ,நான் சொல்லுறத முழுசா கேளு, இவ்வளவு நாள் ஊதாரியா சுத்திட்டு இருந்த உன் அண்ணன் மவன் ஒரு வருஷத்தில செட்டில் ஆகப்போறானாம் , இவ என்னடான்னா அவன் வீடே கெதின்னு கெடக்கிறவா , கல்யாணம் பேசியாச்சுன்னு தெரிந்தும் வேலைக்கு போறாளாம் அதுவும் ஒரு வருஷம் , இதெல்லாம் விரும்புறவங்க பண்ற வேலையாடி என் மடச்சி" என மீண்டும் தலையில் தட்ட போனவரை ஒரு மொறை முறைத்தாள் திலகா, சட்டென்று கையை இறக்கிய ரத்தினமோ , கட்டிலில் இருந்து இறங்கி ஜன்னல் ஓரம் நின்று ஓய்ந்து போன வீதியை பார்தவர்,
"இரண்டு பேர் மனசுலயும் ஏதோ இருக்கு, சொல்லப்போன இரண்டு பயபுள்ளைகளும் ஏதோ கூட்டு களவானித்தனம் பண்ணுதுக, என்ன விடுடி என் பொண்ணு என்ன பண்ணாலும் நான் அவ பக்கம் தான் ஆனா உன் அண்ணன் இருக்கானே என்னியவே நண்பன்னு பார்க்காம தொவைச்சு தொங்கவிட்டவன் ஏதோ ஒரே சாதி சனம் பாவம் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தான். ஆனா குணா அவன் மகன் , அந்த பயபுள்ள பாடு தான் என்னாகப்போதோ" என திலகாவதியை பார்த்து கூற அவளோ பேயறைந்தவள்
போல அமர்ந்திருந்தாள்.....

" தூங்கு, நடக்கிறது தான் நடக்கும், கடவுள் இருக்கான் படுடி" என உறங்கபோனார் ரத்தினம்.
வாரம் நிமிடமாக ஓடியது... .
மிரு கிளம்பும் நாளும் வந்தது...

காத்திருப்பு தொடரும்.
 
Status
Not open for further replies.
Top