கனவு 1
நான் இவங்க கதை கேட்டு ரொம்பவே ஆச்சரியப்பட்டேன் ...
மீரா பணத்துக்கு குறைவில்லாத குடும்பத்துல பிறந்தவங்க...
ஒரு அக்கா மட்டுமே...
அப்பா வெளிநாட்டுல இருந்தார்... அம்மா மிகவும் கண்டிப்பானவர்...
டாக்டர் ஆகணும் என்கின்ற அவரது கனவு நிறைவேறாத கனவாகியது..
11th படிக்கும் போது அவருடைய மாமாவின் பையன் விஜய் கல்யாணம் பண்ண கேட்டு இருக்கின்றார்..
அவருக்கும் பிடித்து விட அவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்து இருந்து இருக்கின்றார்..
அதன் பிறகு காலேஜ் ல மூன்றாம் வருடம் படிக்கும் போது மீராவுடைய அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம போனது...
அதன் விளைவாக கொஞ்சம் ஆக்ரோஷமாவும் நடக்க ஆரம்பித்து இருந்தார்..
அப்போ தான் மீராவுக்கு அவங்க அம்மாவுடைய அண்ணன் பையனான ஜெயனை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருக்காங்க...
மீராவுக்கு விஜய்க்கு அழைத்து விடயத்தை சொல்ல விஜய் சொன்ன பதில் , " நான் கல்யாணம் ஆகி ஹனிமூனுக்கு வந்து இருக்கிறேன் " என்று தான்...
வேறு வழி இல்லாமல் ஜெயனை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டாங்க...
அவரது நன்றாக வாழ்கையின் ஆரம்பம் அது...
ஜெயனுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் மீராவை தேடி வீட்டுக்கு வந்த ஜெயன் அவருடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்து இருக்கின்றார்...
வீட்டில் மீராவுக்கு சொல்லவும் பயம்...
" ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது " என்று சொல்லி விடுவார்களோ என்று பயம்..
திருமணத்துக்கு பல மாதங்கள் இருந்தன..
ஆனால் அதற்குள் கற்பமாகி விட்டார் மீரா..
மூன்று மாதங்கள் அவருக்கே தெரியவில்லை.
அதன் பிறகு வெளிநாட்டில் இருந்து வந்த அவர் அக்கா தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்று கர்ப்பத்தை உறுதி செய்தார்..
ஜெயனிடம் மீரா விஷயத்தை சொன்ன சமயம் , " கல்யாணத்துக்கு ஆறு மாசம் இருக்கு...வெளியில தெரிஞ்சா அசிங்கம்... அதனால அபார்ட் பண்ணிடலாம் " என்று சொல்லி விட்டார்...
மருத்துவமனையிலோ , " இப்போ அபார்ட் பண்ண முடியாது... ஐந்து மாதங்கள் கடந்த பின்னர் டிலிவேர் பண்ணி தான் குழந்தையை எடுக்கணும் " என்று சொன்னார்களாம்...
அதே போல ஐந்து மாதங்கள் கழிய குழந்தையும் அகற்றப்பட்டது..
முழுவதுமான உருவான குழந்தை... மேலும் இரு வருடங்களுக்கு கர்ப்பம் ஆக கூடாது என்று சொல்லி இருந்தார்கள்... குழந்தையை அவர்கள் பல போராட்டங்களுக்கு பின்னர் தான் அகற்றி இருந்தார்கள்...
குழந்தைக்கு உயிரை மாய்த்துக் கொள்ள இஷ்டம் இல்லை போலும்...
ஜெயன் மீராவை பார்க்க கூட மருத்துவமனைக்கு வரவில்லை.
இதனை கேட்ட சமயம் என்னால் மீராவின் மனநிலையை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை...
இத்துடன் மீராவின் போராட்டம் முடிந்து விடவில்லை... மேலும் தொடர்ந்தது...
அதன் பிறகு ஜெயனுடனான திருமணம்...
அப்போது தான் தெரிந்தது ஜெயன் போதை பழக்கத்துக்கும் மது பழக்கத்துக்கும் அடிமை என்று...
அவரது குடும்ப வாழ்க்கை மோசமாக இருந்தாலும் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருந்தது...
வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக பணி புரிந்தவர் அவர்...
திருமணத்துக்கு பிறகு நல்ல வேலை கிடைத்த போதும் அவரை வேலை பார்க்க அனுமதிக்கவில்லை...
மீராவோ ஜெயனின் தாய் தந்தையுடன் இருந்தார்.. ஜெயன் சனி ஞாயிறில் மட்டுமே வீட்டிற்கு முழு போதையுடன் வருவார்... மீராவிடம் மிகவும் மோசமாக நடந்தும் கொள்வார்..
அதன் விளைவு மீண்டும் கர்ப்பம்...
இரு வருடங்களுக்கு கர்ப்பம் ஆக கூடாது என்று சொன்ன பின்னரும் தவிர்க்க முடியாத கர்ப்பம்...
டாக்டரும் திட்டி விட்டார்...
பலவீனமான கருப்பையில் குழந்தை தங்க முடியாமல் இரு மாதங்களிலே கலைந்து விட்டது...
அத்துடன் நிறுத்தவில்லை... ட்ரக்ஸ் எடுத்து விட்டு மீராவை மேலும் மேலும் ஜெயன் துன்புறுத்தியதால் மறுபடியும் கர்ப்பம்..
இந்த முறை ஜெயன் மீரா தன்னுடன் ஒத்துழைக்க மறுத்ததால் கோபத்தில் தள்ளி விட அந்த குழந்தையும் கலைந்தது...
இரு வருடங்களில் மூன்று கருக்கலைப்பு.
இந்த பெண்ணுடைய உடல் எப்படி தங்கியது என்று தான் நான் யோசித்தேன்...
நினைத்து பார்க்க முடியாத வலி...
ஆனால் வலியிலும் விளைந்த நன்மையாக வந்தது மீராவின் விவாகரத்து முடிவு...
இல்லை என்றால் குழந்தையை காரணம் காட்டி ஜெயனுடன் வாழ்க்கையை தொடர வேண்டிய நிலைக்கு மீரா தள்ளப்பட்டு இருப்பார்...
அப்படி தான் பல பெண்கள் இன்னுமே நரகத்தினுள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்...
மீரா எடுத்த சிறந்த முடிவு இந்த விவகாரத்து என்று எனக்கு தோன்றியது..
விவகாரத்துடன் வாழ்க்கை முடிந்து போவதை இல்லை என்பதற்கு மீரா உதாரணம்...
திருமண விடுதலை பெற்று வந்தவர் மேலும் படித்தார்...
அப்போது தான் மதனை பார்த்தார்...
மதனும் விவகாரத்து ஆனவர்..
மீராவுக்கு மதனை பிடித்து இருந்தது...
திருமணம் செய்ய சொல்லி கேட்க அவரும் சம்மதித்தார்..
ஆனால் வீட்டில் மீண்டும் தடை...
சொத்துக்காக தான் மதன் திருமணம் செய்ய சம்மதித்து இருக்கின்றார் என்று அவர்கள் பக்கம் இருந்து புகார்...
ஆனால் மதனோ எந்த சொத்தும் வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டார்..
பல போராட்டங்களுக்கு பிறகு மதனை திருமணம் செய்து கொண்டார்..
வீட்டில் தங்களுடன் பேச கூடாது என்று சொல்லி விட்டார்கள்..
மீராவின் அக்கா மட்டுமே அவருக்கு துணையாக...
மீரா மற்றும் மதனுக்கு இப்போது அழகான பெண் குழந்தையும் இருக்கிறது...
மீராவின் முன்னேற்றத்துக்கு அவர் கணவரும் துணையாக இருக்கின்றார்..
வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் சேர்த்து விடியலாக அவர் கணவர்...
பண விஷயத்தில் சில கஷ்டங்கள் இருந்தாலும் நிறைவான வாழ்க்கை..
இவங்க கதை என்னை ரொம்ப சிலிர்க்க வைத்தது...
இது நாவலாகவே எழுத கூடிய கதை என்று தான் நான் அவரிடம் சொன்னேன்...
முதலாவது கதையாக என் மனதை நிறைத்த கதையை சொல்ல நினைத்தேன்...
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...