ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னோடு வா அன்பே....-கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 10:


இருவரும் சத்தமாக சிரிக்க , பிரியா ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டு இருந்தாள் “ ஏன் சிரிக்கிறீங்க...” தயங்கியவாறு அவள் கேட்க சிரிபை கட்டுபடுத்தியவன் “ பிரியா…. பிரியா… உன்னை என்ன பண்றது உன்னோட ஃபேமிலியோடா சொத்து மதிப்பு எவ்ளோனு தெரியுமா உனக்கு” என்று விஷ்வா கேட்க


அவளோ இல்லை என்று தலை அசைத்தாள் , அவளை பார்த்து உடலை முன்னோக்கி வைத்தவன் “நல்லா கேட்டுக்கோ…, ராஜா குரூப்ஸ் உன் அப்பாவுக்கு அப்பாவோட காலத்துல தொடங்கியது கிட்ட தட்ட ஐநூறு கொடி மதிப்பு இருக்கு, நூறு கோடி பெரிய லாஸ் தான் ஆனா அதுக்கு வீட்டை விக்கிற அளவுக்கு நிலைமை எல்லாம் இல்லை, கொஞ்ச நாளுல சரி கட்டிடலாம், அதும் இல்லையா அவங்களோட வேறே புரோபெர்டியை வைக்கலாம், வீட்டை எல்லாம் விற்க மாட்டாங்க உன் கிட்ட போய் சொல்லி இருக்காங்க” என்று சொல்ல


அவளோ அவன் சொல்வது உண்மைதானா என்னும் விதத்தில் ஆச்சரியமாக பார்த்து இருந்தாள்


“ இன்னும் சந்தேகமா இருக்கா என்ன…” என்ற ஷ்யாமின் கேள்விக்கு அவன் புறம் திரும்பியவள் அவனை கேள்வியாக பார்க்க


“ சரி நான் காட்டுறேன்..” என்றவன் மடிக்கணினியை எடுத்து அதில் ராஜா குரூப்சை பற்றி அவன் சேகரித்து வைத்து இருந்த எல்லா ஆவணங்களும் காட்ட , பிரியாவின் கண்கள் வியப்பில் விரிந்தது


“ அப்போ ஏன் என் கிட்ட பொய் சொன்னாங்க..” என்று அப்பாவியாய் அவள் கேட்க


“ அவங்களுக்கு நான் மறுபடியும் அவங்க கூட டீல் வச்சுக்கணும் அதனால தான் , உன் கிட்ட இப்படி சொன்னா தானே நீ வந்து என் கிட்ட பேசுவ” என்று விஷ்வா தொலை குலுக்க என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள் பெண்ணவள்


கூடவே ஷ்யாம் “இதுல இருக்குற ப்ராப்பர்ட்டி பிசினஸ் எல்லாமே நீ பொறக்குறதுக்கு முன்னாடியே மூணு பக்கமா பிரிச்சாச்சு, சோ அதுல உனக்கு பங்கு இருக்காது ஆன வீடு உன் அப்பா பேருல இருந்தது அதுல உனக்கு நாலுல ஒரு பங்கு இருக்கு அதை நீ வேண்டாம்னு எழுதி குடுத்திட்ட ஆனாலும் கேசு போட்டா உன் பேருக்கு வர வாய்ப்பு இருக்கு அதனால கூட வீட்டை மட்டும் விக்குறதா சொல்லி இருக்கலாம்” என்று சொல்ல


அதை எல்லாம் ஆச்சரியமாக தான் பார்த்து இருந்தாள் பெண்ணவள்


“ இப்போ நான் என்ன பண்ணட்டும், நீங்க ஒத்துக்கலைனா வீட்டுல எல்லாரும் என்னை திட்டுவாங்க, உங்க கிட்ட யாரு என் பேரை சொல்ல சொன்னது, எதுக்கு என்ன இதுல இழுத்து விட்டீங்க தன்னால தானே..” என்று அவள் கண்கள் கலங்க சொல்ல


அவள் கோபத்தை பார்த்தவன் “ அட பிரியாவுக்கு கோபம் கூட வருமா என்ன” என்று அவன் கிண்டல் செய்ய அவனை ஏறிட்டு முறைத்தாள் பெண்ணவள் “ அட முறைக்குற…. , சரி இப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு” என்று அவளிடம் கேட்க


அவனை ஏறிட்டு பார்த்தவள் “பழைய படி எல்லா டீலிங்குசும் வைக்க முடியாதா…” என்று கேட்க


அவள் கேட்ட தோரணையில் சிரிப்பும் வர “சரி உனக்காக ஒத்துக்கிறேன்” என்று சொல்ல


அவள் முகம் பிரகாசமானது “ ஆனா ஒரு கண்டிசன்..” என்க ப்ரியாவும் ஷ்யாமும் கேள்வியாக அவனை பார்க்க “அதை நான் பார்த்திபன் கிட்ட சொல்லிக்கிறேன்…” என்க


“ அப்போ நான் கிளம்பவா…” என்று கேட்க “ அதுக்குள்ள என்ன அவசரம் , நீ ஆபீசுக்கு தானே போற நானும் அங்க தான் வரேன் சேர்ந்து போகலாம்” என்றவன்


ஷ்யாமை நோக்கி “ ஷ்யாம் பார்த்திபன் கிட்ட நாம வர்ற போறதா சொல்லி அப்போய்ண்ட்மென்ட் வாங்கு” என்று சொல்ல


“ சரி டா..” என்றவனும் அலைபேசியை எடுத்து கொண்டே ஓரமாக செல்ல
இப்போது பிரியாவை பார்த்தவன் “ சாப்டியா…” என்று கேட்க அவளோ ஆம் என்று தலை அசைக்க அவன் கூர்ந்து பார்த்ததில் தலை தானாக இல்லை என்று ஆடியது


“ சரி போற வழியில சாப்டு போலாம்” என்று சொல்ல “ இல்லை பரவாயில்லை.. நான் சாப்டுப்பேன்..” என்று சொல்ல அவனிடம் முறைப்பு தான்


அப்போது ஷ்யாம் அவ்விடம் வந்து “எப்போ வேணா வரட்டுமாம் எப்போ போலாம்” என்று கேட்க “ இப்போவே போகலாம்” என்றவன் எழுந்து கொள்ள ப்ரியாவும் எழுந்து கொண்டாள்


மூவருமாக ஆபீசை விட்டு வெளியேற பிரியா அவள் வந்த காரில் ஏற போக அவள் கையை பற்றி தடுத்தவன் டிரைவரிடம் “ எங்க காரை ஃபாலோ பண்ணு” என்று சொல்லி விட்டு அவளை இழுத்து கொண்டு அவன் காருக்கு செல்ல “ விடுங்க நான் அவர் கூடவே வரேன்…” என்று சொல்ல


அவன் கேட்பானா என்ன அவளை இழுத்து பின் இருக்கையில் அமர வைத்தவன் அவனும் ஏறி அமர்ந்து கொள்ள ஷ்யாம் காரை இயக்கினான்
அவள் பயந்து கொண்டே இருக்கையில் ஒடுங்கி போய் அமர்ந்து இருக்க

அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “ நான் என்ன வம்பைரா உன்ன கடிச்சு தின்ன, இப்படி பயந்து போய் பாக்குற” என்று கேட்க


அவள் மனதிற்குள்ளோ ‘ இவனும் கடிப்பான் தானே..’ என்று எண்ணி கொண்டது வெளியே இல்லை என்று தலை அசைக்க


அவனோ ஷ்யாமிடம் “ ஷ்யாம்… பக்கத்துல நல்ல ரெஸ்டாரண்டா பார்த்து நிப்பாட்டு…” என்க அவனும் சரி என்றான்


திரும்பி பிரியாவை பார்க்க அவளோ கைப்பையை இறுக்கமாக பற்றி இருந்தாள் அதை கண்டவன் அவளிடம் இருந்து கைப்பையை உருவ பதறியவள் “ அது என்னோடது…” என்று சொல்ல


“ இரு டி கொடுக்கிறேன்..” என்று அதை திறந்து ஆராய பெரிதாக ஒன்றும் இல்லை நேற்று அவன் கொடுத்த புரொட்டீன் பார் ஒரு புக் மற்றும் பேனா கொஞ்சம் காசு ஒரு மொபைல் ஃபோன் அவ்ளோ தான்


அவளை ஏறிட்டு பார்த்தவன் “ மத்த பொண்ணுங்க வச்சிக்கிற மாதிரி மேக்கப் பொருட்கள் எதுவும் இல்லையா” என்று கேட்க இல்லை என தலை அசைத்தாள்


பிறகு அவள் போனை எடுத்து “பாஸ்வேர்ட் என்ன” என்று கேட்க அவளோ சொல்லாமல் தயங்கி நிற்க்க “உள்ளே ஏதாவது சீக்ரெட் வச்சு இருக்கியா என்ன” என்க


அவளோ “ அப்படி எல்லாம் இல்லை 1109” என்றாள் அவனும் அந்த என்னை போட்டு ஓன் செய்தவன் அதில் இருந்து அவள் அலைபேசிக்கு அழைப்பு விடுவிக்க “ என்ன பண்றீங்க” என்று கேட்க


“இது தான் என் நம்பர் சேவ் பண்ணிக்கோ” என்றவன் அவனே அவன் அலைபேசி எண்ணை அவள் போனில் மாமா என்று பதிவு செய்ய அதை எட்டி பார்த்தாள் “ மாமா வா…” என்று ஒவ்வமையாக கேட்க ஷ்யாம் சத்தமாக சிரித்து விட அவனை முறைத்தவன் அவளிடம் திரும்பி “இனிமே நீ என்னை அப்படி தான் கூப்பிடணும்” என்று சொல்ல அவள் மிரண்டு விழித்தாள்


அடுத்து ஷியாமின் எண்ணை ஷ்யாம் அண்ணா என்று பதிவு செய்தவன் “ இது ஷ்யாம் நம்பர் எனக்கு கால் பண்ணி கிடைக்கலெனா அவனுக்கு கால் பண்ணு” என்று சொல்ல அவளோ மனதிற்குள் “ நான் என் கால் பண்ண போறேன்..” என்று எண்ணி கொண்டது


அப்போது ரெஸ்டாரன்ட் வந்து விட காரை ஓரம் கட்டியவன் “ வா சாப்பிட்டு போலாம்..” என்று சொல்ல அவன் சொன்னால் கேக்க மாட்டான் என்று தெரிய இறங்கி கொண்டாள்


என்ன தான் பெரிய வீட்டு பெண்ணாக இருந்தாலும் இது போன்ற இடத்துக்கு அவள் வருவது இது தான் முதல் முறை
பெரிய பிரம்மாண்டமாக இருந்த இடத்தை அவள் மிரட்சியாக பார்க்க அவள் பார்வையை கண்டவன் “ ஃபர்ஸ்ட் டைம் ஆ” என்க அவளும் ஆம் என்று தலை அசைக்க


மூவருமாக விஐபி ஏரியாவில் இருந்த தனி இருக்கையில் வந்தார்கள் தனி அறையாக இருக்க பெரிதாக தொல்லையும் இல்லை யாரும் பார்த்து விடுவார்களா என்ற அச்சமும் இல்லை


பேரர் வந்து என்ன வேண்டும் என்று கேட்க அவளோ இருவரையும் பார்க்க “ உனக்கு எது வேணுமோ ஆர்டர் பண்ணு” விஷ்வா சொல்ல அவளோ இருவரையும் மீண்டும் தவிப்பக பார்த்தாள்


அவளுக்கு இந்த பெரிய இடத்தில் என்ன வாங்கி சாப்பிடுவார்கள் என்றே தெரியாதே அவள் மொழியை கண்டவன் “ சிக்கன் சாப்பிடுவியா…” என்று கேட்க அவளும் ஆம் என்றாள் “ ஒரு சிக்கன் நூடுல்ஸ் ஒரு காஃபி , ஷ்யாம் உனக்கு என்ன வேணும்” என்று அவனிடம் கேட்க “ எனக்கு ஒரு காபி போதும்” என்று சொல்ல


கொஞ்ச நேரத்தில் அவர்களுக்கான சாப்பாடும் வந்து சேர்ந்தது மற்ற இருவரும் காபியை அருந்த அவளுக்கு மட்டும் கொண்டு வந்த நூடுல்ஸை எப்படி சாப்பிடுவது என்று அவள் தயங்கி நிற்க்க


“ எல்லாத்துக்கும் எதுக்கு தயங்கி நிக்கிற போல்டா இரு இங்க யாரும் உன்னை திட்ட போறது இல்லை புரியுதா..” என்று கேட்க அவளும் ஆம் என்றாள் ஆனால் சாப்பாடு தான் உள்ளே போகவில்லை அதை கவனித்தான் “ ம்ச்…” என்று சலித்து கொண்டே


கொஞ்சம் நூடுல்ஸை எடுத்து முதலில் அவன் சாப்பிட கொஞ்சம் எடுத்து அவள் முன் நீட்டினான் அதை கண்டு அதிர்ந்தவள் “ நானே சாப்டுக்கிறேன்..” என்று அதை வாங்கி அவள் சாப்பிட

ஷ்யாமிற்கு தான் சிரிப்பை அடக்க முடியவில்லை அடக்க பட்ட சிரிப்புடன்

அவன் அமர்ந்து இருந்தான்
கொஞ்ச நேரத்தில் மூவரும் சாப்பிட்டு விட்டு அங்கே இருந்து கிளம்பி விட்டார்கள்


கார் நேரே சென்றது பார்த்திபனின் ஆபீசுக்கு தான் விஷ்வா இறங்கி முன்னால் செல்ல ஷ்யாம் மற்றும் பிரியா அவனை பின் தொடர்ந்து சென்றார்கள்


அவன் வந்ததை கண்டதுமே அங்கே வேலை செய்யும் ஊழியன் “வாங்க சார் உங்களுக்காக தான் பார்த்திபன் சார் வெயிட் பண்றார்” என்று அவர்களை அழைத்து கொண்டு பார்த்திபன் அறைக்கு செல்ல


உள்ளே பார்த்திபனுடன் சேர்ந்து கௌரி மற்றும் நாராயணன் அமர்ந்து இருந்தார்கள்


விஷ்வா வருவதாக கூறியதும் இருவரும் வந்து விட்டார்கள் அவனை கண்டதும் “ உக்காருங்க விஷ்வா..” என்று சொல்ல அவனும் ஷ்யாமும் அமர்ந்து கொள்ள பிரியா அங்கேயே நின்றாள்


“ என்ன முடிவு எடுத்திருக்கீங்க விஷ்வா..” பார்த்திபன் பொறுமையாக பேச ஆரம்பித்தார் “ வெல் ராஜா குரூப்ஸ் ஓட நாலு வாரிசுகளும் இங்க தான் இருக்கீங்க சோ என்னோட முடிவை நான் சொல்லிக்கிறேன்” என்று சொல்ல


எல்லோரும் அவனை தான் ஆர்வமாக பார்த்து இருக்க , அவன் சொல்லும் முடிவில் அவர்கள் அவர்கள் கோபம் உச்சிக்கு போகபோவாது தெரியாமல்.


தொடரும்…

 
அத்தியாயம் 11:


நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து இருந்த விஷ்வாவில் தான் அனைவரின் பார்வையும் நிலைத்து நின்றது


அவனோ சாவகாசமாக டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டே பார்த்திபனை பார்த்து “ சீ மிஸ்டர் பார்த்திபன் எனக்கு உங்க கூட மறுபடியும் பிசினஸ் பண்ண விருப்பம் இல்லை இருந்தாலும் உங்க தங்கச்சி பிரியா வந்து என் கிட்ட கெஞ்சி கெட்டதால தான் இங்க வந்து இருக்கேன்” என்றவன் ஒரு கணம் பிரியாவை ஏறிட்டு பிறகு பார்த்திபனை பார்த்தவன்


“ அவங்களாக தான் இந்த சொத்து வேண்டாம்னு முடிவு பண்ணி எழுதி தந்ததா சொல்றாங்க எனக்கு அதுல நம்பிக்கை இன்னும் வரல , பிக்காசு அவங்களுக்கு இதை தவிர வேறே எந்த பிடிமானமும் இல்லை சோ அவங்களா எப்படி எழுதி தருவாங்க எனக்கு என்னமோ நீங்க மிரட்டி எழுதி வாங்குனதா தோணுது” என்று சொல்ல


பிரியா அவசரமாக “ ஐயோ இல்லை நான் தான் வேண்டாம்னு சொன்னேன்” என்று சொல்ல அவளை திரும்பி அழுத்தமாக பார்த்தவன்


“ மிஸ். பிரியா நான் பார்த்திபன் சார் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் சோ நீங்க கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா..” என்று அழுத்தமாக சொல்ல


அவள் வாயை மூடி கொண்டாள், இப்போது பார்த்திபனை பார்க்க அவரோ “நோ…. விஷ்வா பிரியா சொல்றது தான் உண்மை அவளா தான் விரும்பி எழுதி தந்தா” என்று சொல்ல


சத்தமாக சிரித்த விஷ்வாவோ “ என்ன பண்ண மிஸ்டர், நீங்க சொல்றது உண்மையா கூட இருக்கலாம் ஆனா கார்ப்பரேட் மூளை சந்தேகமா தான் பார்க்க தோணுது” என்று சொல்ல


ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொஞ்ச நேரம் யோசித்த பார்த்திபன் “இப்போ நாங்க என்ன பண்ணனும் , பிரியா எழுதி தந்தது வேணாம்னு சொன்னா நீங்க நம்புவீங்களா” என்று கேட்க


நாராயணன் மற்றும் கௌரி பல்லை கடிக்க , பிரியா அதிர்ந்து அவரை பார்க்க ஷ்யாம் நிதானமாக விஷ்வாவை பார்த்தான்


விஷ்வாவோ “நோ…. கொஞ்சம் பெருசா … மூணு ஷேர்ஸ் நாலு ஷேர்ஸ் ஆக போடணும் ஒகே வா..” என்று புருவம் உயர்த்தி கேட்க


மற்ற மூவரும் ஒரு சேர “ வாட்…” என்று அதிர பிரியாவோ “ எனக்கு எதுவும் வேண்டாம்” என்று அவசரமாக சொல்ல


“ வில் யூ பிளீஸ் ஷாட் அப்” என்று சீறினான் விஷ்வா , அவள் அவன் கோபம் கண்டு அதிர்ந்து நின்று விட்டாள் ஆனால் இதயம் படபடவென அடித்து கொண்டது


பிறகு வீட்டில் அவளை தானே வைத்து செய்வார்கள், அவன் எல்லாம் சொல்லி விட்டு செல்வான் சிங்கத்தின் குகைக்குள் இருக்கும் முயல் குட்டி தானே மரண பயத்தை தினம் தினம் காணவேண்டும்


அவளோ அதே அதிர்ச்சியுடன் மூவரையும் பார்க்க , அவர்கள் முகம் இறுக்கமாக இருந்தது


எல்லோரும் அமைதியாக இருக்க டேபிளில் மெல்ல தாளம் இட்டவன் “இதுக்கு ஓகே அப்படினா சொல்லுங்க இல்லை நான் கிளம்புறேன் அப்புறம் யாரையும் பேச என் ஆபீசுக்கு அனுப்ப கூடாது” என்று சொல்ல


அவனை ஏறிட்டு பார்த்த பார்த்திபன் “ ரொம்ப பெரிய விஷயம் பேசி தான் முடிவு எடுக்க முடியும்” என்று சொல்ல


“ ஓகே டேக் யுவர் டைம்” என்று சொல்லி கொண்டே எழுந்து கொள்ள ஷ்யாமும் அவனுடன் எழுந்து கொண்டான்


பார்த்திபனுக்கு கை குலுக்கி விட்டு அவன் சென்று விட பிரியா நிற்கவா செல்லவா என்ற தொனியில் நிற்க்க அவர்களின் சுட்டெரிக்கும் பார்வை தாங்க முடியாமல் வெளியே சென்று விட்டாள்


வெளியே வந்து அவனை காண அவனோ லிஃபிடினுள் நுழைந்து விட்டான் , அதை கண்டதும் அவளும் ஓடி சென்றாள் உள்ளே செல்லும் பொருட்டு அதுவோ அடைய போக , அவள் ஓடி வருவதை கண்டவன் கையால் தடுக்க அவளும் ஓடி வந்து உள்ளே நுழைந்து கொண்டாள்


வந்தவள் மூச்சு வாங்க “ உங்க கிட்ட நான் கேட்டேனா …. எனக்கு பங்கு வேணும்னு எதுக்கு அவங்க கிட்ட இப்படி கேட்டீங்க..” என்று கோபமாக கேட்க


அவளை முறைத்தவன் “ என் கிட்ட மட்டும் கோபப்படு இந்த கோபத்த உன் வீட்டு ஆட்கள் கிட்ட காட்டி இருந்த உன் கிட்ட இருந்து எதுவும் வாங்கி இருக்க மாட்டாங்க” என்று சொல்ல


அவளோ “ ஆமா நான் குடுக்கலென்னா என் உயிரை மொத்தமா எடுத்து இருப்பாங்க, எழுதி குடித்ததாலா மட்டும் தான் இப்போ உயிரோட இருக்கேன் “ என்று சொல்ல


அவனோ “ பார்த்து பேசுடி லிஃப்ட் ல காமெரா இருக்கு” என்க பதறி திரும்பி பார்த்தவள் பவ்வியமாக “ கேட்டிருக்குமா..” என்று கிசுகிசுப்பாக கேட்க


அவள் பாவனையை பார்த்து சிரித்தவன் “ இருக்காது..” என்க அவளோ மீண்டும் மெல்லிய குரலில் “ எதுக்கு இப்படி கேட்டீங்க இனிமே எனக்கு தானே பிரச்சனை நான் அவங்க வீட்டுல தான் இருக்கணும்” என்று சொல்ல


“ இது தான் பிரச்சனையே, அது உனக்கும் வீடு தான் அவங்க வீடுன்னு சொல்லாம இருக்க தான் மச்சான் இப்படி ஒரு ஐடியா போட்டு அவங்களை நல்லா ரவுண்டு பண்ணி இருக்கான் , இந்த சான்சை யூசு பண்ணிக்கோ மா” என்று ஷ்யாம் சொல்ல


“ உங்களுக்கு அவங்களை பத்தி தெரியாது அண்ணா , ரொம்ப மோசம் ஆனவங்க , நீங்க எனக்கு ஹெல்ப் பண்றதா இருந்தா ஒரு நல்லா லேடிஸ் ஹாஸ்டல் அப்புறம் நல்ல வேலை வாங்கி தாங்க போதும்” என்று சொல்ல


“ கொஞ்ச நாள் பொறுத்துக்கோ உனக்கு பாதுகாப்பான ஒரு இடம் கொடுக்கிறேன்” என்று விஷ்வா சொல்ல ஷ்யாமோ அவன் காதருகே “உன் வீடு தானே மச்சி” என்று சொல்ல


அவனை ஏறிட்டு முறைத்தான் விஷ்வா..


அவனை ஏறிட்டவன் “ நீ என்ன நினைக்கிற நீ சொன்னதுக்கு அவங்க ஒத்துப்பங்களா” என்று ஷ்யாம் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல அவனோ “ சான்சே இல்லை வேறே ஐடியா பண்ணுவாங்க, என்ன பண்றாங்கேனு பொறுத்து இருந்து தான் பாக்கணும்” என்க ஷ்யாம் இடம் ஒரு பெருமூச்சு


அதை தொடர்ந்து அவர்கள் சென்று விட , பிரியா மேலே சென்று அவள் வேலையை கவனிக்க சென்று விட்டாள், மறந்தும் பார்த்திபன் பக்கம் செல்லவே இல்லை


ஆனால் இங்கு பார்த்திபன் அறையில் மூவரும் மும்முரமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்


“ என்ன அண்ணா அவன் இப்படி சொல்லிட்டு போறான்” என்று கௌரி ஆதங்கமாக கேட்க “ ஆமாம்… நூறு கோடி நஷ்டத்தை ஈடு கட்ட அவன் கிட்ட கேட்டா அவன் நம்ம மொத்த சொத்தையும் பங்கு போட சொல்றான் இது சரி வராது வேறே வழி தான் பாக்கணும்” என்று நாராயணன் சொல்ல


இருக்கையில் சாய்ந்து அமர்ந்து யோசித்த பார்த்திபன் “ நானும் அதே தான் யோசிச்சேன் , விஷ்வா கிட்ட பேசி எந்த பயனும் இல்லை நாம வேறே வழி தான் பாக்கணும்” என்று சொல்ல


“ தப்பா எடுத்துக்க மட்டீங்கென நான் ஒரு வழி சொல்றேன் என்று நாராயணன் சொல்ல மற்ற இருவரும் அவரை கேள்வியுடன் திரும்பி பார்க்க


“ எப்படியும் நாம பிரியாவை வச்சு காசு பார்க்க தானே பிளான் போட்டு இருந்தோம் ஆனா என்ன நல்ல டீலிங் வந்தா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா யோசிச்சோம் , ஆன அதை விட நல்ல ஐடியா ஒன்னு இருக்கு” என்று நிறுத்த


“ என்ன ஐடியா …” என்றாள் கௌரி “ உங்களுக்கு இந்திரஜித் சிங் யாருன்னு தெரியுமா” என்று கேட்க பார்த்திபனோ “ தெரியும் பெரிய மல்டி மில்லினியர் டைமண்ட் எக்ஸ்போர்ட் தான் மெயின் பிசினஸ்” என்று சொல்ல


“ ஆமாம் அவனுக்கு ஒரு வீக்கினாசு இருக்கு பொண்ணுங்க அதுவும் வெர்ஜின் பொண்ணுங்க, அவனுக்கு ஒரு பொண்ணை குடுத்தா ஒரு மாசம் இல்லை ஆறு மாசம் வச்சு இருக்குறதுக்கு பெரிய அமௌண்ட் கொடுப்பான்” என்று சொல்ல


“ என்ன சொல்றீங்க அதுக்காக அவளை விக்க சொல்றீங்களா, நமக்கும் பொண்ணுங்க இருக்காங்க” என்று கௌரி கோபமாக சொல்ல


“ நாம கிட்ட வேறே வழி இல்லை “ என்று நாராயணன் சொல்ல


“ நோ…. நாராயணன் என் கிட்ட வேறே ஐடியா இருக்கு” என்று பார்த்திபன் சொல்ல

இப்போது இருவரும் அவரை திரும்பி பார்க்க அவரோ “ இந்திரஜித் சிங் ஓட மனைவி இறந்து ரெண்டு மாசம் ஆகுது அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க பொண்ணு தேடிட்டு இருக்கான் , நாம பிரியாவை அவனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கலாம் பதிலுக்கு அவன் பிசினஸ் ல பார்ட்னர்ஷிப் கேக்கலாம் , குடுக்க சான்ஸ் இருக்கு, அப்படி மட்டும் கிடச்சுன்னா இந்த நூறு கோடியை ஒரே மாசத்துல எடுத்திடலாம்” என்று சொல்ல


“ இதுவும் நல்ல ஐடியா தான் அண்ணா” என்று நாராயணன் சொல்ல கௌரியும் தலை அசைத்தார்


“ ஆனா அவர் கிட்ட பிரியாவை பத்தி எப்படி பேசுறது” என்று கேட்க


“ நம்மள நிலேஷ் பொண்ணோட பர்த்டே பார்டிக்கு ஃபேமிலியோட கூப்பிட்டு இருக்கான் தானே அங்க அவளை கூட்டிட்டு போலாம், நிலேஷ் இந்திரஜித் கூட பிசினஸ் பண்றான் சோ அவனும் வர வாய்ப்பு இருக்கு அங்க போன ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என்று பார்த்திபன் திட்டம் போட


அவர்களும் ஆமோதிப்பாக தலை அசைத்தனர், இங்கு அவளை வைத்து அவர்கள் பெரிய திட்டம் தீட்டுவது அறியாமல் , தனது வேலையை மும்முரமாக பார்த்துகொண்டு இருந்தாள் பெண்ணவள்


இவர்கள் ஆடும் சதி ஆட்டத்தில் அவள் சிக்குவாளா, இல்லை விஷ்வாவிடம் அவர்கள் சிக்குவார்களா என்பது அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


தொடரும்…

 
அத்தியாயம் 12:


அன்று வேலை முடித்து வீட்டுக்கு திரும்பினாள் பெண்ணவள் படபடக்கும் இதயத்துடன் தான் உள்ளே நுழைந்தாள்
அவள் பெயரை இழுத்து விட்டதில் அவளிடம் அவர்களுக்கு கொலை வெறி ஆத்திரம் இருக்கும் என்று தெரியும் , கடித்து குதறி விடுவார்களோ என்று பயந்து கொண்டு தான் உள்ளே சென்றாள்


வழக்கத்துக்கும் மாறாக அவளை யாரும் ஒன்றும் சொல்லவில்லை, அவரவர் வேலைகளை பார்த்து கொண்டு கடந்து விட்டனர் அவளுக்கு அப்போது தான் அப்பாடா என்று இருந்தது


அவளுக்கு தெரியாதே அவர்கள் வேறு திட்டத்தை தீட்டி இருப்பது, அது சரியாக நிறைவேற வேண்டும் என்றால் கொஞ்சம் அமைதியாக தான் இருக்கவேண்டும் அதனால் தான் நரிகள் பதுங்கி கொண்டு இருக்கிறார்கள்


மெதுவாக மேலே அவள் அறைக்கு ஏறி சென்றாள் , கதவின் குமிழில் கையை வைக்க “ பிரியா..” என்ற ஒரு குரல் திரும்பி பார்த்தாள்


திவ்யா தான் நின்று இருந்தாள் இந்த வீட்டில் கொஞ்சம் இறக்க குணம் உள்ள பெண் , அது பார்த்திபனின் மகள் என்பது தான் அதிசயமே…


சிரித்து கொண்டே அவளை நெருங்கியவள் “ எப்படி இருக்க காலையில பேச முடியல” என்று சிரித்து கொண்டே கேட்டாள் அவளுக்கும் ஒரு இதம் பரவ “ நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க..” என்று மரியாதையாக கேட்டாள்


“ நல்லா இருக்கேன் , மரியாதை எல்லாம் வேண்டாம் நீ வா போனு கூப்பிடு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்க


அவளோ “ ம்ம்…” என்றாள் “ உள்ள போய் பேசலாமா…” என்று கேட்டாள் அவளும் “ வாங்க..” என்று அழைத்து கொண்டே அவள் அறைக்குள் செல்ல


உள்ளே வந்தவள் கட்டிலில் அமர்ந்து கொண்டே “ புது வேலை எல்லாம் எப்படி போகுது…” என்று கேட்க


பிரியாவோ “ கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு பட் சீக்கிரம் பழகிப்பேன்..” என்று சொல்ல மென்மையாக சிரித்தவள் “ எனக்கும் இந்த வருஷம் படிப்பு முடிஞ்சிடும் அப்புறம் நானும் கம்பெனிக்கு வந்துடுவேன்” என்று சொல்ல அவளும் சிரித்து கொண்டாள்


பிரியாவை விட இரண்டு வயது பெரிய பெண் தான் ஆனால் பிரியா பேச்சிலர் டிகிரி மட்டும் தான் முடித்து இருந்தாள் அதற்கு மேல் அவளை படிக்க வைத்து காசை வீண் செய்ய அவர்கள் விரும்பவில்லை வேலை செய்ய சொல்லி விட்டனர், ஆனால் மகளை மேல் படிப்பு படிக்க வைத்திருந்தனர்
அவளை ஆழ்ந்து பார்த்தவள் “ நெஸ்ட் என்ன பிளான்…” என்று கேட்க அவளிடம் பதில் இல்லை ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு


அவள் அமைதியாக நிற்க்க “இங்க பாரு பிரியா… , லைஃப் ல ஏதாவது பிடிப்பு வேணும், எதோ வாழ்நோம்னு வாழ கூடாது….” என்று சொல்ல


அவளிடம் விரக்தியான சிரிப்பு மட்டுமே அதை கண்டு பெருமூச்சு ஒன்றை விட்டவள் “ யாரையாவது லவ் பண்றியா..” என்று கேட்க அவளோ வேகமாக இல்லை என்று தலை அசைத்தாள்


அதை கண்டு சத்தமாக சிரித்தவள் “ பண்ணலாம் தப்பு இல்லை… உனக்கு புடிச்ச யாருக்காவது ப்ரொபோஸ் பண்ணு லைஃப் மாறிடும்” என்று சொல்ல


அவளோ அதிர்ச்சியில் கண்களை விரித்தாள் அவளை பொறுத்தவரை இதெல்லாம் தப்பு என்று தான் சொல்லி தந்து இருக்கிறார்கள்


எழுந்து வந்து அவள் தோளை தொட்டவள் “ காதலிக்கிறது தப்பு இல்லை பிரியா… நல்லா இருக்கும்” என்று சொல்லி விட்டு செல்ல


அவளோ பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டாள்


அவள் சென்றதும் அறை கதவை தாளிட்டு விட்டு கழுத்தில் இருந்த சாலை கழற்றி இருக்கையில் போட்டு விட்டு டிரெஸ்ஸிங் டேபிள் முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்


கண்ணாடியோடு கண்ட தன் பிம்பத்தை வெறித்து பார்த்தாள் எதற்கு இந்த பாழ் ஜன்மம் என்று அவள் எண்ணாத நாள் இல்லை


நினைவு தெரியும் முன்னரே அம்மாவை இழந்து விட்டாள், அதன் பிறகு அவளுக்கு நினைவு இருந்தது என்னமோ அப்பாவின் ஒதுக்கம் தான்

கூட பிறந்தவர்கள் அவள் அப்பா ஒத்த வயதில் இருக்க அவர்களின் பிள்ளைகள் தான் அவளுக்கு ஏற்ற வயதில் இருந்தார்கள்


சின்ன வயதில் அவர்களுடன் விளையாட போகும் ஞாபகம் உண்டு அவர்கள் இவளை விளையாட சேர்ப்பதே இல்லை இருந்தும் மீண்டும் மீண்டும் போவாள்


ஒரு நாள் விளையாடி கொண்டு இருந்த திவ்யாவின் கையில் இருந்த பொம்மையை பறித்தது மட்டும் தான் ஞாபகம் இருந்தது


கையில் கிடந்த கம்பாலையே அவளை அடித்து நொறுக்கி விட்டார் மீனா அது அவளின் நான்கு வயதில் நடந்து இருக்கும் மறக்க கூடிய வயது தான் ஆனாலும் அந்த நிகழ்வு இன்னும் ஆணி அடித்தது போல் நெஞ்சில் நின்று இருந்தது


அந்த அடி அது தந்த வலி அதன் பிறகு காய்ச்சலால் ஒரு வாரம் அவள் அவதி பட்டது எல்லாம் நினைவு அடுக்குகளில் தேங்கி நிற்க்க உதட்டில் ஒரு வலி நிறைத்த புன்னகை


அந்த நிகழ்வின் பின் அவள் தகப்பனுக்கு இவள் இங்கே இருப்பது சரி இல்லை என தோன்றியது போலும்

இத்தனை நாள் சொந்தங்கள் சுற்றி இருந்தும் அநாதையாக வாழ்ந்தவளை நிஜாமலும் அனாதை ஆக்கி விட்டார்


அனாதை பிள்ளைகள் பெற்றோர்களால் வளர்க்க முடியாத பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து தங்கி இருக்கும் இடம் அது சர்ச் வழி ஃபாதர் மற்றும் கன்னியாஸ்திரிகள் நடத்தும் மடத்தில் கொண்டு சென்று சேர்த்தார்


மாதா மாதம் பணம் கொடுப்பார் தான் ஆனால் அந்த காசு அவளுக்கு பாசம் கொண்டு வந்து கொட்டாதே, நிஜமாலும் அநாதையாக தான் வளர்ந்தாள்


கடவுள் தந்த வாழ்க்கையை அவரே எடுக்கட்டும் என்று எண்ணி ஒரு வாழ்க்கை


பல நேரங்களின் வாழ்க்கை கசக்கும் அவளும் நடை பிணம் போல தான் வாழ்ந்து வந்தாள்


மீண்டும் இங்கே வந்த போதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை அவளிடம் நிம்மதியாக இருக்க விட்டால் போதும் என்ற மனநிலை தான்


இதில் எங்கே காதலிப்பது , காதல் கணவன் குடும்பம் அதுக்கெல்லாம் தகுதி இல்லாதவள் என்ற எண்ணம் தான் அதையும் மீறி விஷ்வாவை போன்ற ஆட்கள் நடமாடும் இந்த உலகத்தில் தன்னை , தன் வாழ்க்கையை யாரை நம்பி ஒப்படைப்பது என்ற பயம் தான்


ஆம் அவளை பொறுத்தவரை விஷ்வா ஒரு கெட்டவன் அவனை நினைத்தாலே அந்த முதல் சந்திப்பு தான் மனதில் வரும் அந்த நாள் அவள் ஆசையாக வேலைக்கு சேர்ந்த நாள்


அதை மொத்தமாக கெடுத்து விட்டான், அவளையும் கெடுக்க முயற்சித்து விட்டான் , அவள் அவன் நினைத்த பெண் அல்ல என்று தெரிந்தும் அவன் அவளை ஆட்கொள்ள முயன்றது , அதற்கு பின்னும் அவன் அவளை காயப்படுத்தும் விதம் தானே நடந்துள்ளான்


அதும் அவன் பெண்களை போக்கிப்பவன் அவனை போல் ஒரு கெட்டவனை அவள் பார்த்ததே இல்லை


இப்படி பட்ட ஆண்கள் மத்தியில் வாழ்க்கை துணையா நினைக்கவே பயமாக தான் இருந்தது


பெருமூச்சுடன் எழுந்தவள் குளியலறைக்குள் சென்று முகத்தை கழுவி கொண்டு தன்னை சுத்த படுத்தி ஆடையை மாற்றி விட்டு வெளியே வந்தாள்


அவள் வயிற்றுக்கு ஏதாவது குடுக்க வேண்டுமே, மற்றவர்களை பார்க்க பிடிக்காது என்றாலும் தன்னை கவனிக்க வேண்டுமே


தயங்கி கொண்டே கீழே இறங்கி சென்றாள் படிகளில் இறங்கி வரும் பெண்ணவளில் தான் மோகமாக படிந்து இருந்தது கார்த்திக்கின் கண்கள்

முன்னரையில் சோஃபாவில் அமர்ந்து இருந்தவன் அவளை அடி முதல் நுனி வரை பார்த்து விட்டு உஷ்ண பெருமூச்சை விட்டு விட்டான்


அவன் பக்கத்தில் அமர்ந்து இருந்த கௌதம் அவன் பெருமூச்சை கண்டு கொண்டு “ என்னடா … பெருமூச்சு எல்லாம் பலமா இருக்கு..” என்று கேட்க


அவனோ கண்களால் பிரியாவை காட்டி “ செம்மையா இருக்கா இல்லை, ஒரு நாள் அவ வேணும் டா…” என்று தாபமாக சொல்ல அவனை வெறித்தவன் “ நானும் காலையில பார்த்தேன் பட் நமக்கு சித்தி முறை டா அப்படினா அம்மா மாதிரி அதான் பக்கமா விட்டுட்டேன்..” என்று அவன் சொல்ல


“ போடா… லூசு இப்படி ஒரு பொண்ணை யாராவது சித்தியா ஏத்துப்பானா, நம்மள விட சின்ன பொண்ணு சித்தியாம் சித்தி… நான் கண்டிப்பா டிரை பண்ணுவேன்” என்று சீரியஸ் ஆக சொல்ல


“ நீ என்னமோ பண்ணு மாமா கிட்ட அடி வாங்காத வரைக்கும் நல்லது” என்று விட்டு அவன் எழுந்து செல்ல பார்த்திபனை நினைத்தவன் பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு எழுந்து சென்றான்


தன்னை பற்றி ஒருவன் இத்தனை வன்மமாக எண்ணி இருக்கிறான் என்று அறியாதவள் தயங்கி கொண்டே உணவு மேஜைக்கு நடந்து சென்றாள்


அங்கே மீனா மற்றும் கௌரி பேசி கொண்டே தேநீர் அருந்தி கொண்டு இருக்க , அவளுக்கு அங்கே நிற்கவே முடியவில்லை பயமாக இருக்க அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்


அங்கே வேலை செய்யும் கண்ணமா டீயை ட்ரெயில் அடுக்கி கொண்டு இருக்க அவரிடம் சென்றவள் “ டீ இருக்கா…” என்று கேட்க அவர் சற்று இலக்கிய மனம் உள்ளவர்
சொந்த வீட்டில் வேலை ஆளிடம் பவ்வியமாக வந்து கேட்கும் பெண்ணை வாஞ்சையாக நோக்கியவர்

அவளுக்காக ஒரு கப்பை எடுத்து கொடுக்க அவளும் சிரித்த முகாகவே அதை வாங்கி கொண்டாள்


அவர் மற்றவர்களுக்கு தேநீர் கொடுக்க சென்று விட பிரியாவுக்கு வெளியே செல்லவே பயம் அதனால் அங்கேயே நின்று அருந்தி கொண்டாள்


அதே நேரம் கப்பை சிங்கில் போட வந்த மீனா அவள் கிச்சனில் நின்று அருந்துவதை கண்டு நக்கலாக இதழ்வளைத்தாள்


அவள் வீட்டில் அவள் சொந்த வீட்டில் இப்படி வேலை ஆட்களை போல நடத்துவதும் அவள் யாஜமானி போல ஆட்சி செய்வதும் அவளுக்கு அலாதி பிரியம்


அவர் சென்றதும் கப்பை கழுவி வைத்தவள் அறைக்குள் சென்று விட்டாள் .


அவளை அறியாமலேயே அந்த வீட்டினர் அவள் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்து விட்டனர்


தனக்காக எப்போதும் பேச தெரியாத பெண் இனியும் எதிர்த்து பேசாமல் அதை ஏற்றுக்கொள்வளா....


இல்லை அவளுக்கு பிடிக்காதவனிடம் சரண் அடைவாளா என்று அடுத்த அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…


தொடரும்….

 
அத்தியாயம் 13:


இரண்டு நாட்கள் கடந்து இருக்கும் அறைக்குள் அமர்ந்து உடைகளை மடித்து வைத்து கொண்டு இருந்தாள் பிரியா


அவளோ மடித்த துணிகளை கபார்டியில் வைக்க எந்திரிக்கவும் அவள் அறை கதவை சடாரென திறந்து கொண்டு அதிரடியாக உள்ளே நுழைந்தனர் மீனா மற்றும் கௌரி


பிரியா உள்ளே வந்த இருவரையும் அதிர்ச்சியாக ஏறிட்டு பார்க்க

அவர்களோ கொண்டு வந்த பையை எடுத்து கட்டிலில் போட்டவர்கள் “ இதோ பாரு இன்னைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு நம்ம பிசினஸ் பார்ட்னர் வீட்டுல பர்த்டே பார்ட்டி இருக்கு, எல்லோரையும் ஃபேமிலியா கூப்பிட்டு இருக்காங்க, உன்னை கூட்டிட்டு போகலேனா அப்புறம் அவனும் ஏதாவது சொல்லி டீலிங் கேன்சல் பண்ணிட்டா என்ன பண்றது அதான் உன்னையும் கூட்டிட்டு போக அண்ணா சொல்லி இருக்கார், சீக்கிரம் ரெடி ஆகி இரு ஆறு மணிக்கு போகணும்” என்று கௌரி படபடவென சொல்ல


அதிர்ந்து நின்ற ப்ரியாவோ “ இல்லை அக்கா நான் எதுக்கு…. நான் வரல….” என்று தட்டு தடுமாறி சொல்ல


அவளை உக்கிரமாக முறைத்து பார்த்த மீனாவோ “ எங்களுக்கு மட்டும் உன்னை கூட்டிட்டு போகணும்னு ஆசையா என்ன , வீண் பிரச்சனை எதுக்குன்னு பாக்குறோம் , ஓழுங்க நாங்க சொன்னதை கேட்டு தயார் ஆகுற வழிய பாரு…” என்று சொல்ல


அவளோ வேறு வழி இல்லாமல் தலை அசைத்தாள்


வெளியே வந்த கௌரி மீனாவிடம் “ நானும் அவ வரமாட்டேனு அடம் பிடிப்பானு நினைச்சேன், ஆன நீங்க அவ வாயை அடைச்சு வரவச்சிட்டீங்க அண்ணி” என்று சிரித்து கொண்டே சொல்ல


அவளை ஏறிட்டு பார்த்தவள் “ அப்புறம் இவ கிட்ட எல்லாம் பேசவேண்டிய விதத்துல தான் பேசணும் இல்லைனா தலையில ஏறி உக்கார்ந்திடுவா…..” என்று சொல்லி கொண்டே நகர


“ ஆமாம் உங்க கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு அண்ணி…” என்று சொல்லி கொண்டே அவருடன் சேர்ந்து கௌரியும் சென்று விட்டாள்


அதே நேரம் உள்ளே பிரியாவின் அறையில் அவர்கள் கொடுத்து விட்டு சென்ற உடையை எடுத்து பார்த்தாள் பிரியா, சிவப்பு நிறத்தில் சின்ன கை வைத்த நீளமான கவுன் அது


எடுத்து பார்த்தவளுக்கு புருவம் இடுங்கியது அதன் விலை எப்படியும் அம்பதாயிரம் இருக்கும் அத்தனை விலை கொடுத்து அவர்கள் தனக்கு எதற்காக வாங்கி தந்து இருக்கிறார்கள் என்ற யோசனை எழ


அடுத்த கணமே “ எல்லார் முன்னாடியும் கூட்டிட்டு போறதால நல்ல டிரஸ் வாங்கி குடுத்திருப்பாங்க…” என்று அவளே அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்து விட்டாள்


ஆனால் அந்த ஆடையை அணியதான் மனம் வரவே இல்லை, அவள் இப்படியான உடைகளை அணிந்ததும் இல்லை அல்லவா , கொஞ்சம் தயக்கமாக இருந்தது, அதற்கென்று அணியாமல் இருக்கவும் முடியாதே அவர்கள் கொடுத்து விட்டு சென்றது அல்லவா


பெருமூச்சுடன் அதை எடுத்து ஓரமாக வைத்து விட்டு, அவள் எழுந்து சென்று குளிக்க சென்று விட்டாள்


நேரம் ஐந்து மணியை தொட்டு இருக்கும் அவர்கள் கொடுத்து விட்டு சென்ற உடையை எடுத்து அணிந்து கொண்டாள் பிரியா


உடை சற்று இறுக்கமாக இருந்தது பின்னால் சிப் வைத்து இருந்தது அதை போட முயன்றாள் முடியவில்லை, நீண்ட நேரம் அதனை போட முயன்றவளால் போட முடியாமல் போக


மெல்ல கதவை திறந்து வெளியே எட்டி பார்த்தாள் சுற்றிலும் யாரும் இருப்பதாக தெரியவில்லை, எல்லோரும் பார்டிக்கு செல்ல தயார் ஆகிக்கொண்டு இருப்பார்கள் என புரிந்து போக
பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டு உள்ளே செல்ல போக “ உன் கிட்ட எக்ஸ்ரா ஹேர் கிளிப் இருக்கா…” என்று கேட்டு கொண்டே அவளை நோக்கி வந்தாள் திவ்யா


அவளை கண்டதும் ஒரு நிம்மதி வந்த உணர்வு அவளுக்கு கதவை திறந்து விட்டவள், அவள் உள்ளே வந்ததும் கதவை மூடி கொண்டாள்


அந்த ஆடையில் அவளை பார்த்த திவ்யா “ வாவ் ரொம்ப அழகா இருக்க பிரியா , இந்த டிரஸ் உனக்கு ரொம்ப நல்லா பொருத்தமா இருக்கு” என்று சிலாகித்து சொல்ல


அவளை பாவமாக பார்த்தவள் “ எனக்கு ஒரு மாதிரியா இருக்கு திவ்யா…. இந்த சிப் கூட போட முடியல” என்று திரும்பி காட்ட


சத்தமாக சிரித்தவள் “ இதுக்கு போய் டென்ஷன் ஆகிரியா இரு நான் ஹெல்ப் பண்றேன்…” என்றவள் அவளுக்கு சிப்பை போட்டு விட


அவளோ “ தேங்க்ஸ்….” என்றாள் “ இதுக்கு மேட்சிங் ஜூவல்லரி இருக்க உன்கிட்ட” என்று திவ்யா கேட்க “ இல்லையே நான் போட்டிருக்கிறது தான் இருக்கு” என்றாள் பாவமாக


“ நீ இரு என்கிட்ட இதுக்கு ஏத்த மாதிரி ஒரு செட் இருக்கு கொண்டுவரேன்” என்றவள் அவள் அறைக்கு சென்று அந்த ஆடைக்கு ஏற்ப அணிகலன்களை கொண்டு வந்து அவளுக்கு போட்டு விட்டாள்


கழுத்தோடு ஒட்டிய மெல்லிய சங்கிலி மற்றும் காதோடு ஒட்டிய சின்ன கம்மல் அது அவளை இன்னும் அழகாக காட்டியது


அவளை பின்னால் இருந்து கண்ணாடியோடு பார்த்தவள் “ இதுக்கு போனிடையில் போட்டா நல்லா இருக்கும், நான் போட்டு விடறேன்” என்று சொல்லி அவளே தலை அலங்காரத்தை செய்து விட்டு முகத்தில் சின்னதாக ஒப்பனையும் செய்து விட்டாள்


இப்போது கண்ணாடியில் திருப்தியாக பார்த்தவள் “ இப்போ பாரு அழகா இருக்க , இன்னைக்கு பார்டிக்கு வர்ற எல்லாரும் உன்னை தான் பார்க்க போறாங்க” என்று சொல்லி சிரிக்க
அவளும் சிரித்து கொண்டாள்

நிஜமாகவே பிரியாவுக்கு அவளை இன்று கண்ணாடியில் பார்க்க பிடித்து இருந்தது, இதுவரை இப்படி அலங்காரம் செய்தது இல்லை அல்லவா… முகத்தில் தானாக ஒரு பிரகாசம் வந்து ஒட்டி கொண்டது


“ இந்தாங்க நீங்க கேட்ட கிளிப்…” என்று திவ்யாவிடம் நீட்ட அவளும் அதை வாங்கி அவள் சிகை அலங்காரத்தை செய்து கொண்டாள்


திவ்யாவும் நீல நிறத்தில் ஒரு கவுன் தான் அணிந்து இருந்தாள் அவளும் அழகாக தான் இருந்தாள் “ இந்த டிரஸ் உங்களுக்கு அழகா இருக்கு” என்று பிரியா சொல்ல


தன்னை ஒரு முறை சுற்றி பார்த்தவள் “ அப்படியா… தான்க்யூ….” என்றாள் சிரித்து கொண்டே


அதை தொடர்ந்து இருவருமாக கீழே இறங்கி சென்றனர், மற்ற எல்லோரும் தயாராகி கீழே அமர்ந்து இருக்க படியில் இறங்கி வந்த பிரியாவில் தான் எல்லோர் கண்ணும் இருந்தது , அவர்கள் கண்ணில் ரசனை இருந்தாலும் மூளை என்னமோ வக்கிரமாக தான் யோசித்து கொண்டது


“ சரி வாங்க டைம் ஆச்சு கிளம்பலாம்…” என்று பார்த்திபன் சொல்ல எல்லோரும் காரை நோக்கி நடக்க “ வா பிரியா நாம சேர்ந்து போலாம்” என்று திவ்யா அவள் ஏறிய காரிலேயே அவளையும் அமர்த்தி கொண்டாள்


பிரியா கௌதம் மற்றும் கார்த்திக்கை கடந்து தான் சென்றாள் அப்போது கௌதம் கார்த்திக்கிடம் “ இன்னைக்கு ரொம்ப அழகா வந்து என்னை டெம்ட் பண்ணிட்டே இருக்கா டா எப்போ என் கண்ட்ரோல் போகும்னு தான் தெரியல” என்று கௌதம் சொல்ல


“ கொஞ்சம் அடக்கி வாசி டா…. மாமாவுக்கு தெரிஞ்சா பிரச்சனை தான்” என்றான் கார்த்திக்


“ வந்தா பார்த்துக்கலாம்…” என்று கண்ணை சிமிட்டி சொன்னவன் அவர்கள் செல்லும் காரில் ஏறிக்கொண்டான், கார்த்திக் தலையை இருபுறம் அசைத்து பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு கடந்து விட்டான்



திறந்த வெளியில் அமைக்க பட்டு இருந்த பார்டி அது , பணக்கார வர்க்கத்தின் பார்டி என்றால் சொல்லவும் வேண்டுமா காசை கரைத்து இருந்தார்கள்


கண்களை கவரும் அலங்காரம், விதவிதமான சாப்பாடு, விலை உயர்ந்த மதுபானம், டிஜே ஆட்டம் பாட்டம் என கலை கட்டியது அந்த இடம்
பிரியா மற்றும் அவர் வீட்டினர் வந்த வாகனமும் அந்த இடத்தை வந்து அடைந்தது , எல்லோரும் இறங்கி நடந்து கொண்டே பார்டி நடக்கும் இடத்தையும் அடைய அங்கே கோட் சூட் என நின்று இருந்தார் நீலேஷ் அவர்களை கண்டதும் “ அட வாங்க வாங்க…. எல்லோரும் எப்படி இருக்கீங்க…” என்று பார்த்திபனை அணைத்து வரவேற்றவர்


மற்றவர்களையும் இன்முகமாக வரவேற்று அவரின் மனைவி குழந்தை என எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார், பார்த்திபன் அவர்களுக்காக வாங்கின பரிசையும் கொடுத்து விட்டு எல்லோரும் நகர்ந்து விட்டனர்


கொஞ்ச நேரத்திலேயே அவர்களிடம் வந்து பேச தொடங்கினார்கள் அவர்களுடன் வேலை செய்பவர்கள், எல்லோரும் ஒருவரை ஒருவர் பிடித்து கொண்டு நகர்ந்து விட இப்போது தனித்து விடப்பட்டது என்னமோ பிரியா தான்


திவ்யாவும் அவள் கல்லூரி தோழியை கண்டு அவளிடம் பேச போக அங்கே இருந்த இருக்கையில் தனியாக அமர்ந்து விட்டாள் பிரியா


சுற்றும் முற்றும் இருந்த அலங்காரத்தை பார்த்து கொண்டே அவள் அமர்ந்து இருக்க , கூட்டத்தில் சட்டென்று ஒரு சலசலப்பு அவளும் எல்லோரும் செல்லும் திசையில் பார்க்க
அங்கே கம்பீரமாக நடந்து வந்து கொண்டு இருந்தனர் வரதன் குடும்பத்தினர்


வரதன் தாத்தா நடுவே வர அவருக்கு இருபுறமும் விஷ்வா மற்றும் வெற்றி வந்து கொண்டு இருக்க வெற்றியின் பக்கத்தில் வேணி வர விஷ்வாவின் பக்கத்தில் ஷ்யாம் வந்து கொண்டு இருந்தான்


அவர்கள் நடந்து வரவும் எல்லோரும் அவர்களை தேடி வந்து கை குலுக்கி பேச தொடங்க அங்கேயே தேங்கி விட்டனர்


பிரியாவோ அங்கே வந்த விஷ்வாவை கண்டு “ ஐயோ …. இவனா , எங்கே போனாலும் இவன் எதுக்கு வரான் இவன் கண்ணுல நாம படவே கூடாது” என்று எண்ணியவள் சட்டென்று அங்கே இருந்து எழுந்து சாப்பாடு வைக்க பட்டு இருந்த திரைக்கு பின்னால் அவளை மறைத்து கொண்டு நின்று விட்டாள்


அந்த தூணின் மறைவில் நின்றவள் “ கடவுளே இவன் கண்ணுல மட்டும் படமா என்னை காப்பாத்து பா…” என்று கடவுளுக்கு அவசரமாக ஒரு வேண்டுகோளை வைத்து விட்டாள்.



தொடரும்…..


 
அத்தியாயம் 14:


விஷ்வாவை அசைய முடியாத வண்ணம் ஆட்கள் பிடித்து கொண்டனர் அவனும் அவர்களிடம் பேசிக்கொண்டே “ எச்க்கியூஸ் மீ ஒரு கால் பண்ணிட்டு வரேன்…” என்று சொல்லி கொண்டே அவர்களிடம் நைசாக நழுவி விட்டான்


அவனிடம் இருந்து மறைந்த பெண்ணவள் வெளியே தலையை காட்டாமல் அங்கே மறைவாக நின்று கொண்டே அங்கே ஆடிக்கொண்டு இருந்தவர்களை பார்த்து நிற்க்க அவள் கையில் இருந்த கைபேசி அலறியது எடுத்து பார்த்தவளுக்கு தூக்கிவாரி போட்டது


அதிலோ மாமா… காலிங் என்று வர “ அவன் எதுக்கு இப்போ கால் பண்றான்” என்று எண்ணியவள் தலையை சற்று வெளியே நீட்டி அவனை தேட எங்கேயும் காணவில்லை “ எங்கே போய் இருந்து கால் பண்றான்” என முனு முனுத்து கொண்டே அதை உயிர்ப்பித்து காதில் வைத்தாள்


“ ஹாய் டியர்” என்ற கம்பீரமான குரல் அலைபேசிக்கு உள்ளே மட்டும் அல்ல அவள் முதுகுக்கு பின்னாலும் கேட்டது அதிர்ந்து கண்களை விரித்தவள் அப்படியே திரும்பி அவனை பார்க்க
பக்கவாட்டாக அங்கே இருந்த சாலட் பவுலை எடுத்து சாப்பிட்டு கொண்டு அவளை பார்க்காமல் முன்னால் பார்த்த படி பேசிக்கொண்டு இருந்தான், கையில் அலைபேசி இல்லை காதில் ப்ளூடூத் உடன் இணைக்க பட்டு இருந்தது


“ என்ன பார்க்காம முன்னாடி பாரு…” என்ற அவன் அதட்டலில் சட்டென்று முன்னால் திரும்பி கொண்டாள்


அவன் அவளை உள்ளே வந்ததுமே பார்த்து விட்டான், அவன் கழுகு கண்களில் இருந்து தப்பிக்க முடியுமா என்ன, அவள் அவனை கண்டு உள்ளே ஒளிந்து கொண்டதை பார்த்தவன் வந்து விட்டான் அவளை தேடி


“ இங்கே எதுக்கு வந்து இருக்க” என்றான் அவளோ தட்டு தடுமாறி “ அண்ணா அழைச்சிட்டு வந்தார்..” என்றாள் அவனோ “ எதுக்கு…” என்க அவளோ “ தெரியல ஃபேமிலியா கூப்பிட்டு இருக்காங்க அதான்…” என்று சொல்ல


“ ஓ….” என்று ஒரு மார்க்கமாக இழுத்தவன் “ சரி எதுக்கு இப்படி டிரஸ் பண்ணி இருக்க , நல்லவே இல்லை முதல அந்த முடியை விரிச்சு முன்னால விடு” என்று கடுகடுப்பாக சொல்ல


“ ஏன் இதுக்கு என்ன நல்லா தானே இருக்கு..” என்று அவள் சொல்ல அவளை பக்கவாட்டாக திரும்பி ஒருகணம் பார்த்தவன் “ நல்லா தான் இருக்கு ஆனா வேண்டாம்..” என்று சொல்ல அவளோ “ இருக்கட்டுமே…” என்றாள் கெஞ்சலாக


அவனோ “ சரி என்னமோ பண்ணு நான் சொல்றதை மட்டும் கேளு, இங்க இருக்குற எந்த சப்பாட்டையும் சாப்பிட கூடாது, எதையும் குடிக்க கூடாது” என்க
அவளோ அதிர்ந்து “ ஏன்… ஏன்…” என்று படபடவென கேட்க அதில் இதழ் விரித்தவன் “ நீ சாப்பிடுற சாப்பாட்டுல யாராவது மயக்கு மருந்து கலந்து தந்து உன்னை கொண்டு போய் ஏதாவது பண்ணிட்டா அதான் , ரொம்ப மோசமான உலகம் டி பார்த்து கவனமா இரு” என்று எச்சரிக்க


அவன் சொல்வதில் இருக்கும் உண்மையை உணர்ந்தவள், அங்கே இருந்த வித விதமான சாப்பாட்டுக்களை ஏக்கமாக பார்த்து விட்டு பெருமூச்சை விட்டவள் “ சரி சாப்பிடல” என்றாள்


“ குட் கேர்ள்….” என்றவன் “ ஆமாம், எதுக்கு என்னை பார்த்து ஓடி ஒலிஞ்ச” என்று கேட்க அவளோ ஒருகணம் நிறுத்தி “ அப்படி எல்லாம் இல்ல சும்மா தான் இந்த பக்கம் வந்தேன்” என்றாள்


அவனோ “ ம்ம்….. நம்பீட்டேன்….. இங்க இருக்குற அத்தனை பொண்ணுங்களும் நான் பார்க்க மாட்டேனா பேசமாட்டேனா அப்படின்னு ஏங்கி போய் இருக்க நீ என்னடான்னா ஓடி ஒளியுற” என்று கொஞ்சம் ஆதங்கமாக சொல்ல


“ சும்மா அடிச்சு விடாதீங்க இங்க யாரும் உங்கள பாக்கல…. ரொம்ப தான் தற்பெரும உங்களுக்கு” என்று அவள் கலாய்த்து விட அவனோ “ அப்போ நான் சொன்னதை நீ நம்பல அப்படி தானே…. இரு உனக்கு ப்ரூஃப் பண்றேன்” என்றவன் சுற்றும் முற்றும் பார்க்க


அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்து அவள் நண்பியுடன் பேசிக்கொண்டு இருந்த சுவேதா நாராயணனின் மகள் அவனையே அடிக்கடி பார்த்து கொண்டு இருக்க அவளை பார்த்தவன்


“அதோ அங்க பிங்க் டிரஸ் போட்டு உக்கார்ந்து இருக்காளே அது உன் அண்ணன் பொண்ணு தானே” என்று பிரியாவிடம் கேட்க


அவளும் சுற்றும் பார்த்து சுவேதாவை கண்டு கொண்டவள் “ ஆமாம் சுவேதா அதுக்கு என்ன” என்க


“ அவளும் என்னை தான் சைட் அடிச்சிட்டு இருக்கா உனக்கு நம்பிக்கை இல்லைனா நான் ப்ரூஃப் பண்ணி காட்டாவா…” என்றவன்


அவளை நோக்கி மந்தஹசமாக சிரிக்க அவளோ அவன் சிரித்ததை கண்டு அவனை நோக்கி பல்லை காட்டி சிரிக்க, அவனோ புருவத்தை உயர்த்தி காட்டினான் அவளோ அதில் வெட்கப்பட்டு அவனை பார்க்க அவனோ மீண்டும் தலையை சாய்த்து சிரிக்க அவளோ அதில் குதூகலமானவள்
எழுந்து அன்ன நடை போட்டு கொண்டு அவனை நோக்கி வந்தவள் “ ஹாய்…” என்று கையை நீட்ட


அவனோ இயர் போடில் கையை வைத்து கொண்டு அவளை கேள்வியாக பார்த்து “ வாட்…” என்றான் அவளோ சற்று தடுமாறி “ நீங்க சிரிச்சீங்க கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு…” என்று இழுக்க


உடனே அவனை “ ஓ… ஆம் ரியலி சாரி போன் பேசிட்டு இருந்தேன்…” என்று காதை காட்ட “ஓ…” என்றவள் அங்கேயே தயங்கி நிற்க்க அவனோ அவளை கண்டு கொள்ளாமல் அலைபேசியில் பேசுவது போல் பாவனை செய்ய
வேறு வழி இல்லாமல் அவள் மூக்குடைந்து அங்கே இருந்து சென்று விட்டாள்


அதை கண்ட பிரியாவுக்கு சிரிப்பு அடக்க முடியாமல் வர மெல்லிய சத்தத்துடன் சிரித்து விட்டாள்


அவள் சிரிப்பை கேட்டவன் “ இப்போ புரியுதா என் வேல்யூ என்னன்னு, கொஞ்சம் சிரிச்சத்துக்கே இப்படி வந்து நிக்கிறா..” என்று சொல்ல


அவளோ “ சரி சரி ஒத்துக்கிறேன்” என்றவள் மெல்ல அங்கே மறைவில் இருந்து முன்னால் வர “ஹேய் பிரியா இங்க என்ன பண்ற உன்னை எவ்ளோ நேரமா தேடிக்கிட்டு இருக்கேன் இங்க வா…” என்று பாசம் இருப்பது போல் அழைத்தார் பார்த்திபன்


அவர் அருகே கௌரி, நாராயணன், மீனா நின்று இருக்க இன்னொருவர் முற்றிலும் புதியவராக இருந்தார் விலை உயர்ந்த கோட் சூட் அணிந்து கை கழுத்து விரல் என ஒன்று விடாமல் வைரங்கள் வாரி போட்டு இருந்தார் ஒரு ஐம்பது வயது இருக்கும் அவளை கண்கள் பளபளக்க பார்த்து நின்றார்


அவரை அங்கே இருந்து பார்த்த விஷ்வாவோ “ போன் கட் பண்ணாத நான் அவங்க என்ன பேசுறாங்கேனு கேட்கணும்” என்று விஷ்வா கட்டளை இட


ஒன்றும் புரியாமல் அலைபேசியை அணைக்காமல் கையில் வைத்து கொண்டாள் பிரியா, மெல்ல நடந்து அவர்கள் அருகே வர, அந்த புதியவர் அவளை அடிமுதல் நுனி வரை பார்த்தார், அவளுக்கோ அவர் பார்வை சங்கடத்தை கொடுத்தது


“ வா பிரியா….. இந்திரஜித் சார் இது தான் என் தங்கச்சி பிரியா நீங்க இதுவரைக்கும் பார்த்தது இல்லையே, பிரியா இவர் இந்திரஜித்” என்று இருவருக்கும் மாறி மாறி அறிமுகம் செய்து வைக்க


“ தங்கச்சின்ணு சொன்னீங்க உங்க பொண்ணு வயசு தான் இருக்கு” என்று இந்திரஜித் சொல்ல


“ ஆமாம் சார் சின்ன பொண்ணு தான் இனிமே தான் அவளுக்கு கல்யாணம் பண்ணனும் வரன் பாத்திட்டு இருக்கோம்” என்று சொல்ல

பிரியாவுக்கு இது புது செய்தி நம்பாமல் அவர்களை பார்க்க


அவரோ “ ஓ…. ஓகே…” என்று இழுவையாக சொல்லி விட்டு “ ஹாய் பிரியா உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்” என்று அவளை நோக்கி கையை நீட்ட அவளோ தயங்கி கொண்டு அவர் முன் இரு கைகளையும் கூப்பி “ வணக்கம்..” என்று சொல்ல


“ ஹேய் என்ன பண்ற அவரு கையை நீட்டினா கையை குடு, இது தான் நீ கத்துக்கிட்ட மரியாதையா….” என்று மீனா அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அதட்ட


சட்டென்று அவளுக்கு கண்ணீர் துளிர்த்தது இருந்தும் அவள் அசையாமல் இருக்க இந்திரஜித்தும் கையை நீட்டி கொண்டே நின்றார் “ கையை குடு..” என்று மீனா மீண்டும் அதட்ட


கைகள் நடுங்க அவரை நோக்கி மெல்ல கையை நீட்ட எத்தனித்ததும் “ஹாய்…. Mr. இந்திரஜித் உங்களை இங்க பார்ப்பேனு நான் நினைக்கவே இல்லை” என்று ஒரு குரல் பிரியாவின் பின் இருந்து கேட்டது எல்லோரும் அவனை திரும்பி பார்க்க
பிரியாவின் முதுகு புறத்தில் இருந்து அவளை உரசியும் உரசாமலும் முன்னால் சரிந்த விஷ்வா இந்திரஜித்தின் நீட்டிய கரத்தை பற்றி குலுக்கி இருந்தான்


“நீ போ…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதம் அவள் காதில் சொன்னவன் “ அப்புறம் உங்க பிசினஸ் எல்லாம் எப்படி போகுது, நான் உங்க கூட ஒரு டீல் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன், உங்களுக்கு விருப்பம்னா மேற்கொண்டு பேசலாம்…” என அந்த இடத்தை அவன் ஆக்கிரமிக்க


இந்திரஜித்தும் வேறு வழி இல்லாமல் அவனுடன் பேச “சரியா என்க இருந்து தான் வர்றானோ…” என்று எண்ணியவாறு மற்றவர்கள் நின்று இருக்க பிரியா மெல்ல அங்கே இருந்து நழுவி விட்டாள்


அவள் வேகமாக முன்னால் நடந்து செல்ல “ பிரியா…. நீ இங்க என்ன பண்ற…” என்ற குரல் திரும்பி பார்த்தாள் ஷ்யாம் தான் நின்று இருந்தான்


அவனை நோக்கி சிரித்தவள் “ ஃபேமிலியா இன்விட் பண்ணி இருந்தாங்க அதான் வந்தேன்..” என்று சொல்லி கொண்டே அவன் பக்கத்தில் வர “ யாரு டா இந்த பொண்ணு…” என கேட்டது என்னமோ வேணி தான்


அவரை பார்த்தவன் “ இது தான் பிரியா அன்னைக்கு தாத்தா சொன்னார் ல ராஜா சார் ஓட கடைசி பொண்ணு” என்று சொல்ல அவரை அவளை வாஞ்சையாக பார்த்து “ எப்படி மா இருக்க..” என்க


“ நல்லா இருக்கேன்” என்று சொன்னவள் இவர் யார் என்ற தோரணையில் ஷ்யாமை பார்க்க அவனோ “ இது தான் விஷ்வா ஓட அம்மா…” என்று அவளுக்கு அறிமுகம் செய்ய


“ ஓ… நீங்க நல்லா இருக்கீங்களா…” என்று கேட்க “ நல்லா இருக்கேன் மா…” என்றவர் ஷ்யாமிடம் “ ரொம்ப அழகா இருக்கால உன் பிரெண்ட் கிட்ட என் மருமகளா கூட்டிட்டு வர சொல்லு டா..” என்க


அவனோ “ நீங்க சொல்லலெனானும் இவ தான் உங்களுக்கு மருமக…” என்று சொல்ல அவரோ “ நிஜமாவா…” என்றார் கண்களை விரித்து.


தொடரும்……

 
Status
Not open for further replies.
Top