ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உள்ளம் அலைபாயுதே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உள்ளம் அலைபாயுதே- கதை திரி
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 01

வானம் முழுவதும் கருமேகங்கள் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன. இரவு அடித்து பெய்த மழை இப்பொழுது தூறலாக மாறியிருந்த போதிலும் நிலத்தை உலர்ந்து விடாமல் பார்த்துக்கொண்டது இயற்கை.

இந்த ரம்யமான பொழுதில் பாடத்திட்டத்துக்கான குறிப்புகளை எடுத்து முடித்த சுதா ப்ரியா மடிக்கணினியை மூடி வைத்தாள்.

வெள்ளை நிற ஷர்ட் மற்றும் சாம்பல் நிற ஆபீஸ் பேண்ட் அணிந்து இருந்தவள் கூந்தலை கொண்டை போட்டு இருந்தாள். காதுகளிள் சின்ன தோடுகளுடன் கையில் சாதாரண கைகடிகாரம் அவ்வளவே அவளது அலங்காரம்.

சில்லென்ற காற்று அவள் முகத்தில் பட ஜன்னலை நோக்கி சென்றவளின் பார்வைக்கு கீழ்தளத்தில் இருக்கும் நீச்சல் தடாகமும் அதன் அருகில் இருக்கும் கல்லிருக்கைகளும் கண்ணில் பட பழைய நினைவுகள் வந்து நிழலாடியது.

மூன்று வருடங்களுக்கு முன் இதே கல்லூரியின் கடைசி நாளில் நண்பர்களோடு சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தவளின் பார்வை அடிக்கடி அவளுடன் ஒரே வகுப்பில் படிக்கும் அருணை வட்டமிட்டது.

அருணை தவிர மற்ற அனைவருக்கும் அவளுக்கு அவன் மேல் பிடித்தம் இருப்பது தெரியும்.

இந்தக் காட்சியை கவனித்த பரத் “உனக்கு தான் அவன புடிச்சி இருக்குல்ல. போய் சொல்லு, இதுக்கு அப்புறம் எப்போ மீட் பண்ணுவோம்னு யாருக்குமே தெரியாது. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாத ப்ரியா“ என்று நண்பியின் மனதை புரிந்த நண்பனாக கூறினான்.

அவளுடைய உடல் மொழியிலேயே அவளின் தயக்கம் வெளிப்பட அதைக் கண்டுக்கொண்டவன் ”என்னமோ பண்ணு.“ என்று கோபித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டான்.

நண்பனின் கோபம் புரிந்தாலும் அமைதியாக இருந்தவளை மற்ற நண்பர்களும் தொந்தரவு செய்யாமல் எழுந்து சென்றனர்.

தலையை கவிழ்ந்து கண்ணை மூடி யோசித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் காதுகளில் கேட்டது அவள் மனம் கவர்ந்தவனின் குரல்.

“ஹே ப்ரியா, ஏதோ பேசணும்னு சொன்னியாமே?” என்று அவன் சொன்னதும் கண்ணிரண்டும் வெளியே வரும் அளவுக்கு பயத்தோடு நண்பர்களைத் தேட அவர்களோ தூரத்தில் நின்று நடப்பதை கவனித்தனர்.

பரத்தை வாய்க்கு வந்தக் கெட்ட வார்த்தையால் மனதுக்குள் திட்டிக் கொண்டவள் அருணை எப்படி சமாளிப்பது என்று விளங்காமல் முழித்தாள்.

“ப்ரியா என்ன ஆச்சு?” என்று அவன் கேட்டதும் முதலில் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டவள் தன் அருகில் இருக்கும் இடத்தைக் காட்டி அமரும்படி கூறினாள்.

அருண் அமர்ந்ததும் அவன் முகம் பார்த்தவளுக்கு வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்க தொடங்கியது.

மனதை ஒருநிலைப்படுத்தியவள் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறிவிட முடிவெடுத்தாள்.

“அருண் ஐ ஹேவ் எ கிரஷ் ஓன் யூ (i have a crush on you)” என்று அவள் கூறியதும் அவளை பார்த்து முறுவல் பூத்தவன், “ஆக்சுவலி ப்ரியா… ஐ ஹேவ் கிரஷ் ஓன் சம்வன் எல்ஸ். வேறொரு பொண்ண புடிச்சிருக்கு” என அவன் கூறிட உள்ளே வருத்தமாக இருந்தாலும் அதை வெளியே காட்டாது சிரித்துக்கொண்டே “சாரி எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா இப்படி சொல்லி இருக்க மாட்டேன்” என்று அவள் விளக்க முற்பட அவளை பேசவிடாமல் இடைமறித்தவன் “இல்ல பரவால்ல இதெல்லாம் நினைச்சு நீ ஆக்குவடா ஃபீல் பண்ணிக்காத. லெட்ஸ் கன்டினியூ டு பி குட் ஃப்ரண்ட்ஸ் (lets continue to be good friends)” என்று அவளிடம் கூறி எழுந்து சென்றுவிட்டான்.

மூன்று வருடங்களுக்கு முன் நடந்ததெல்லாம் யோசித்து பார்த்தவளுக்கு இப்பொழுது அதையெல்லாம் நினைத்தால் சிரிப்பாக இருந்தது.

படிப்பு முடிய அதே கல்லூரியில் துணை ஆசிரியராக சேர்ந்தவள் கடந்த ஒரு வருடமாக பேராசிரியராக பணிப்புரிகிறாள்.

ப்ரியா ஜன்னல் வழியாக நீச்சல் தடாகத்தை பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட ஆர்த்தி அவள் தோள் மேல் கை வைக்க திரும்பினாள்.

“என்ன மேடம் பழைய நினைவுகளா?”என்று ப்ரியாவை கலாய்க்க, “ம்” என்று கூறினாள் அவள்.

ஆர்த்தியும் ப்ரியாவும் ஒன்றாக படித்து ஒன்றாக வேலை செய்வதால் இருவருக்கும் அடுத்தவரின் வாழ்க்கையைப் பற்றி நன்றாக தெரியும்.

ஆர்த்தி நண்பியின் முகத்தை ஆவலாக பார்த்து, “கேஸ் வாட்… நம்ம பேச்சுக்கு (batch) ரியூனியன் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க” என்றாள் உற்சாகமாக.

“ரியூனியனா இன்னும் ஃபோர் இயர்ஸ் கூட கம்ப்ளீட் ஆகல. இதுல எதுக்கு இதெல்லாம் பண்ணனும்?” என கேட்டாள் ப்ரியா.

“தெரியல மேனேஜ்மென்ட் ஏதோ பேசிட்டு இருந்தது மட்டும் கேட்டேன். சரி சரி எனக்கு கிளாஸ்க்கு லேட் ஆச்சு நான் கிளம்புறேன் பாய்” என்று கிளம்பினாள் ஆர்த்தி.

ஆர்த்தி கிளம்பியதும் மேசை மேல் கலைந்துக் கிடந்த காகிதங்களை ஒழுங்குப் படுத்தி வைத்துக்கொண்டிருந்தவளுக்கு அழைப்பு வருவதை ஓசையால் தெரியப்படுத்திய கைபேசி தன் இருப்பைக் காட்டியது.

இணைப்பை இணைத்ததும், “ப்ரியா ஜோசியர் கிட்ட போயிட்டு வந்துட்டோம் உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடலான்னு சொன்னாரு” என்று அவளின் தாய் கூறவும் அதற்கு அவள் சரி என்று ஒரு வார்த்தையில் பதிலளித்தாள்.

“என்னடி நான் எவ்ளோ பெரிய விஷயம் சொல்றேன் அமைதியா இருக்க” என்று கேட்க, “வேற என்ன சொல்லணும்” என்று கேட்ட மகளை என்ன செய்தால் தகும் என்று தோன்றியது அவருக்கு.

“உன்ன வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. இந்த வார கடைசியில் உன் பெரியப்பாவுக்கு தெரிஞ்ச மாப்பிள்ளை யாரோ இருக்காராம். உன்ன பாக்க வரலாமான்னு கேட்டாரு. நீ என்ன சொல்ற?“ என்று அவர் சொல்ல அதற்கும் சரி என்றவள் அழைப்பை துண்டித்தாள்.

கடிகாரத்தில் மணி 11 என்று காட்டவும் மற்ற நினைவுகள் எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மடிக்கணினியை எடுத்துக்கொண்டு வகுப்பை நோக்கி சென்றாள்.

************************************

“கௌதம் உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. இன்னும் மூணு வாரத்துல கல்யாணம். நீ கோர்ட்டுக்கு மெஷர்மெண்ட் கூட கொடுக்கல. என்ன நெனச்சிட்டு இருக்க? நீ பண்றது எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல அவ்வளவு தான் சொல்லுவேன்“ என்று காணொளி அழைப்பில் இருந்த மகனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் ஈஸ்வரி.

கௌதம் வீட்டுக்கு செல்ல பிள்ளை. ஆறடி உயரம் வளர்ந்தவன் என்றாலும் அவன் அன்னைக்கு எப்பொழுதும் அவன் கைக்குழந்தையே.

”அம்மா தயவு செஞ்சு இப்படி கத்தாதிங்க. நான் இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்ல வீட்டுக்கு வந்த பிறகு பாத்துக்கலாம்” கௌதம் தன்மையாக கூற அவர் கோபத் தீயில் எண்ணெய் ஊற்றியது போல மேலும் பொங்க ஆரம்பித்தார்.

“ஹாஸ்பிட்டல் முடித்து வீட்டுக்கு வந்த உடனே உன் பிரெண்ட்ஸ் பாக்க போற. நைட் ரொம்ப லேட்டா தான் வருவ, அப்புறம் காலைல நான் எழுந்துக்கறதுக்கு முன்னாடியே ஹாஸ்பிடல் ஓடிடுற. இதுல நீ என்கிட்ட வீட்ல பேசிக்கலாமுன்னு சொல்றியா?” என்று அவர் கூற அருகில் இருந்த அவரது தங்கை மகள் ஆராதனா அண்ணன் திட்டு வாங்குவதை ரசித்து கொண்டு இருந்தாள்.

ஈஸ்வரிக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள் என்பதால்தனது தங்கை மகளை கூடவே வைத்திருப்பார். அதனால் பார்ப்போருக்கு எப்போதுமே ஆராதனா அந்த வீட்டின் கடைக்குட்டியாகத் தான் தெரிவாள்.

“ஏய் நீதானே அம்மா கிட்ட நான் இன்னும் கோர்ட்டுக்கு மெஷர்மென்ட் கொடுக்கலைன்னு மாட்டி விட்ட?” என்று தங்கையிடம் அவன் பாய, “அவளை ஏன் திட்டுற உண்மையை தானே சொன்னா” என்றார் ஈஸ்வரி.

“அண்ணா நீ ரொம்ப மோசம். இப்போ எல்லாம் நீ நாங்க சொல்ற எதையுமே கேக்குற இல்ல. காலைல கூட நீ சரியாவே சாப்பிடல. பெரியம்மா எவ்வளவு ஃபீல் பண்றாங்க தெரியுமா? கல்யாணத்துக்கு அப்புறம் நீ என்னை பாக்க வருவியோ என்னவோ?“ என்று தங்கையும் சேர்ந்து குறை பாட, இருவரையும் பார்த்து முறைக்க முயற்சி செய்தவன் சிரித்துக்கொண்டே, “சரி இன்னைக்கு மெஷர்மெண்ட் கொடுத்துடறேன் போதுமா?” என்று கூறியவன் காணொளி அழைப்பை நிறுத்திவிட்டு நோயாளிகளை பார்க்க தயாராகினான்.

மதிய உணவை சாப்பிட கேன்டீன் சென்றுக்கொண்டிருந்த கெளதம் நார்மல் வார்டு கடந்து செல்லும் போது, தன் அன்னையை மாதிரியே அவரது மகளை திட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்தான்.

“இப்பதான் உனக்கு கல்யாண யோகம் வந்திருக்குன்னு ஜோசியர் சொன்னாரு. அதுக்குள்ள இப்படி போய் காலை ஒடச்சிட்டு வந்து நிப்பியா?” மாப்பிள்ளை வீட்டினர் நாளை பார்க்க வரும்போது இப்படி காலை உடைத்துக் கொண்டாளே மகள் என்ற வருத்தத்தில் அவளைக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தார் தாரணி.

“அம்மா ஸ்கூட்டில வரும்போது ஒரு சின்ன ஆக்சிடென்ட் தான். பெரிய அடி எல்லாம் இல்ல. டாக்டர் கட்டுப் போடும் போது கொஞ்சம் பெருசா போட்டு விட்டுட்டாரு. நாளைக்கு வீட்டுக்கு போயிடலாம்னு கூட சொல்லிட்டாரு. சோ தயவு செஞ்சு கத்தாதிங்க மா“ என்று தாயிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள் ப்ரியா.

”அத நீ சொல்லாத. டாக்டர் சொல்லட்டும் அப்ப நம்புறேன்.“ என்று மகளிடம் கூறியவர் டம்ளரில் ஜூசை ஊற்றி மகளிடம் கொடுத்தார்.

இவர்களின் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த கௌதம் ப்ரியாவின் கட்டில் அருகே வந்தவன் அவளின் டைக்னோசிஸ்(diagnosis) ரிப்போர்ட்டை எடுத்து பார்வையிட்டான்.

கௌதம் அணிந்திருந்த வெள்ளை கோர்ட்டை பார்த்ததுமே அவன் வைத்தியன் என்று விளங்க ப்ரியாவை பரிசோதிக்க வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார் தாரணி.

உண்மையில் ப்ரியா கூறுவது போல் அவளுக்கு பெரிதாக அடிபட்டிருக்கவில்லை என்று தெரிந்ததும் அவள் அன்னையை பார்த்து “உங்க பொண்ணுக்கு கால்ல சின்ன அடி தான் பயப்படறதுக்கு ஒன்னும் இல்ல. நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு போயிடலாம்” என்று அவன் கூற மகளின் உடல் நிலை குறித்து கலக்கமாக இருந்தவரின் முகம் கௌதம் சொன்னதை கேட்டு தெளிவு பெற்றது.


தக்க சமயத்தில் வந்து தன் அன்னையின் வசுவுகள் இருந்து காப்பாற்றிய கௌதமை பார்த்து சத்தம் வராமல் இதழ் அசைத்து அவள் நன்றி சொல்ல கண்ணை முடி திறந்தவன் அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.

தொடரும்...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 02

ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறையில் மணப்பெண் அலங்காரத்தில் தயாராகிக் கொண்டிருந்தாள் ஆராதனா.

ஒப்பனை அலங்காரம் செய்பவர், “மேடம் ரெட் ஷேட் லிப்ஸ்டிக் போடலாமா? இல்ல நுயுட் ஷேட் லிப்ஸ்டிக் போடலாமா?” என்று அவள் விருப்பத்தை கேட்டு அதற்கேற்ப நடந்து கொண்டிருந்தார்.

தங்கை மகளைக் காண அறைக்குள் கௌதமோடு வந்த ஈஸ்வரி அவள் அலங்காரத்தை பார்த்து ஒப்பனை கலைஞரை பாராட்டிக் கொண்டிருக்க, ஆராதனா அவள் அண்ணன் அருகில் வந்து அவனுடைய கோர்ட்டை சரியாய் இருக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்தாள்.

கோர்ட் சூட் திருப்தியாக இருக்கவும், “பாத்தியா அண்ணா இதுக்கு தான் நான் அப்பவே உன்ன டைலர் கிட்ட போக சொன்னேன். இவ்ளோ பெர்பெக்ட் ஆன கோர்ட் போய் மெசர்மென்ட் குடுத்தா தான் கிடைக்கும்” என்று கூறினாள்.

அறையின் கதவைத் திறந்துக்கொண்டு வந்த அஸ்வின் ஈஸ்வரியின் மூத்த மகன், “கல்யாணம் உனக்கு, இவனுக்கு இல்லை முதல்ல போய் உன்னோட அலங்காரத்தை முடிச்சிட்டு வா. மகேஷ் அங்க ரெடி ஆகிட்டார்” என்று ஆராதனாவிடம் கூறியவன் கையோடு கௌதமை அழைத்துச் சென்றான்.

ஹாலின் அலங்காரங்களும் மின்விளக்குகளும் மணமக்கள் குடும்பத்தின் செல்வ செழிப்பை எடுத்துக்காட்டியது.

ஈஸ்வரியும் அவர்களின் தங்கை அருணாவும் அண்ணன் தம்பியான சக்கரவர்த்தி மற்றும் விஷ்வாவை திருமணம் செய்து கொண்டனர்.

ஈஸ்வரிக்கும் சக்கரவர்த்திக்கும் இரண்டு மகன்கள் அஸ்வின் மற்றும் கௌதம். அருணாவுக்கும் விஷ்வாவுக்கும் ஒரே ஒரு மகள் ஆராதனா.

அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து ஒரு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கல்லூரி படித்து முடிந்ததும் அஸ்வினும் இவர்களோடு இணைந்து கொள்ள, கௌதம் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அவன் விருப்பப்படியே மருத்துவம் படிக்க வைத்தனர். இப்பொழுது தனியார் மருத்துவமனையில் வைத்தியனாக பணிபுரிகிறான்.

பணத்துக்கு குறைவே இல்லாததால் அவர்கள் வீட்டு இளவரசியின் திருமணத்துக்கு அனைத்துமே பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தனர்.

தங்கையின் திருமண வரவேற்புக்கு வந்திருந்த விருந்தினர்களை கவனித்துக்கொண்டு அவர்களுக்கான மதிய உணவு தயாராக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருந்தனர் அண்ணன்கள் இருவரும்.

ஆராதனாவின் அம்மா அருணா பம்பரம் போல் ஹாலை சுற்றியவர் ஓய்வு இல்லாமல் வேலையாட்களிடம் வேலை ஏவி கொண்டிருந்தார்.

வயலட் நிற புடவை அணிந்து காதில் பெரிய ஜிமிக்கி மிதமான ஒப்பனையில் அழகாய் மங்கை ஒருத்தி ஒரு ஓரமாக தனியாக அமர்ந்திருந்ததைக் கண்டதும் அவள் அருகில் சென்றார்.

“வணக்கம் மா. நீங்க மாப்பிள்ளை வீடா? பொண்ணு வீடா?” என்று அவர் கேட்க, “ஹலோ ஆண்டி, நான் மாப்பிள்ளையோட ஸ்கூல் ஃப்ரெண்ட்” என்று தன்னை அறிமுகப் படுத்தினாள் அவள்.

தனியாக இருப்பதால் அவள் பேச்சுத் துணைக்கு யாராவது கிடைப்பார்களா என்று ஹாலை சுற்றி தேடியவர் கண்களுக்கு அகப்பட்டான் கௌதம்.

நேராக கௌதமிடம் சென்றவர், “கௌதம் அந்த வயலட் சாரி கட்டி இருக்க பொண்ணு இருக்கா இல்ல… அந்த பொண்ணுக்கு வெல்கம் ஜூஸ் கொடுத்துட்டு பேசிட்டு இரு. நான் மாப்பிள்ளையையும் ஆராதனாவையும் மேடைக்கு அழைச்சிட்டு வர போறேன்” என்றவர் அங்கிருந்து கிளம்பிட சித்திசொன்ன வயலட் நிற புடவை அணிந்தப் பெண்ணை கண்டதும் ஆச்சரியத்தோடு அவள் அருகில் சென்றான்.

தன் எதிரே ஆறடியில் கருப்பு நிற கோட் சூட் வெள்ளை நிற ஷர்ட் அணிந்து தலை முடிக்கு ஜெல் தடவி பார்ப்பதற்கு ஹீரோ போல் இருக்கும் கௌதமை பார்த்தாள் ப்ரியா. பார்த்ததும் ஹாஸ்பிடலில் தன் அன்னையின் திட்டில் இருந்து காப்பாற்றிய வைத்தியன் என்று புரிந்ததும் அவனைப் பார்த்து பொன் சிரிப்பை உதிர்த்தாள்.

“நீங்க ஆராதனா ஃப்ரெண்டா?“ என்று கேட்டவன் அவள் அருகே அமர்ந்து கொண்டான். அவள் இல்லை என தலையாட்ட, ”அப்போ விஷ்வா சித்தப்பா (அருணாவின் கணவர்) சொந்தக்காரங்களா?“ என்று கேட்டான்.

மறுபடியும் இல்லை என்று தலை ஆட்டியவள் ”நான் மாப்பிள்ளையோட ஸ்கூல் ஃப்ரெண்ட்” என்றாள்.

”ஓ அப்படியா... சித்தி வந்து என்னை உங்களை கவனிக்க சொன்னதும் நான் பொண்ணு வீடுன்னு நினைச்சிட்டேன்” என்றவன் வெயிட்டர் ஒருவரை அழைத்து அவளுக்கு பழச்சாறு கொண்டு வருமாறு பணித்தான்.

பழச்சாறு வந்ததும் அதை அவள் பக்கம் நகர்த்தியவன், “ இப்போ கால் எப்படி இருக்கு?” என்று நலம் விசாரித்தான்.

“இப்ப கால் ஓகே தான். வர்க் கூட போக ஆரம்பிச்சுட்டேன். தேங்க்யூ நல்ல நேரம் அன்னக்கி நீங்க வந்து என்னை எங்க அம்மா கிட்ட இருந்து காப்பாத்தினிங்க” என்று மனதார நன்றி கூறினாள்.

”ஒரு சின்ன உதவிக்கு எல்லாம் எதுக்கு தேங்க்யூ சொல்றீங்க. அப்ப நீங்க ரொம்ப திட்டு வாங்கிட்டு இருந்தீங்க. அதுதான் என்னால முடிஞ்ச உதவியைசெஞ்சேன். நீங்க எங்க வர்க் பண்றீங்க? என்று கேட்டு பேச்சை வளர்க்க தொடங்கினான்.

கௌதமுக்கு இயல்பாகவே அந்நியர்களிடம் அதிகம் பேசும் பழக்கமில்லை கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லிவிட்டு அமைதியாகி விடுவான். ஆனால் இன்றோ தன்னுடைய இயல்புக்கு மாறாக அவளுடன் பேச்சை வளர்த்து கொண்டு இருந்தான்.

இருவரும் ஒரு கட்டத்துக்கு மேல் பொது விஷயங்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என அனைத்தையும் பற்றி பேச அரை மணி நேரம் அவர்களுக்கு தெரியாமலே கழிந்தது.

தங்கை மேடைக்கு வந்ததை கூட கவனிக்காமல் ப்ரியாவிடம் உரையாடிக் கொண்டிருந்த மகனை கண்ட ஈஸ்வரி தன் தங்கை அருணாவிடம் பிரியாவை சுட்டிக்காட்டி யார் என்று விசாரித்தார்.

மாப்பிள்ளை பெண்ணை கவனிப்பதில் கௌதமை மறந்த அருணா அவன் இன்னும் அவள் அருகே இருந்து பேசிக் கொண்டிருப்பதை உலக அதிசயமாக கருதியவர், “என்னக்கா இது நம்ம கௌதமா?நான் ஏதோ பேச்சுக்கு அந்த பொண்ணு கிட்ட பேச சொன்னா. இவ்வளவு நேரமா பேசிக்கிட்டு இருக்கான். இவன் யார்கிட்டயும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேச மாட்டானே” என்று அக்காவிடம் வினவினார்.

”அது தான் எனக்கும் புரியல. அந்த பொண்ணு நம்ம மாப்பிள்ளை மகேஷ் பிரண்ட் னு தானே சொன்ன?”என்று மறுபடியும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டவர் மனதில் குறித்துக் வைத்து கொண்டார்.

பஃபே ஆரம்பித்ததும் ப்ரியாவுக்கு துணையாக சேர்ந்து சென்று உணவருந்தினான் கௌதம்.

இந்தக் காட்சியை கௌதமின் தந்தை சக்கரவர்த்தியும் அண்ணி ஸ்ரேயாவும் நம்ப முடியாமல் பார்த்தனர்.

நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரேயா அவளின் மாமியாரை தேடிப்பிடித்து தான் கண்ட காட்சியை விவரிக்க, ஈஸ்வரி அவரும் தன் பங்குக்கு தான் கண்டவற்றை கூறினார்.

இப்படி தன்னை கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றே தெரியாமல் ப்ரியாவோடு சுவாரசியமாக உரையாடி கொண்டிருந்தான் கௌதம்.

உணவருந்தி முடிந்ததும் நேரமாவதாக கூறிய ப்ரியா மணமக்களோடு புகைப்படம் எடுக்க சென்றபோது அவளுடனே வந்த கௌதம் மேடையிலே ஏறாமல் கீழே நின்று கொள்ள, புகைப்பட கலைஞர் மூவராக புகைப்படத்துக்கு நிற்பது நன்றாக இருக்காது என்று பேசிக்கொண்டு புகைப்படம் எடுக்க மகேஷ் மேடையில் நின்ற வண்ணம் கௌதமை மேடைக்கு வருமாறு செய்கை செய்ய அவனும் மேடை ஏறினான்.

கௌதம் தங்கையின் அருகே நின்று கொள்ள, நண்பன் மகேஷின் அருகில் ப்ரியா நிற்க புகைப்படம் எடுக்கப்பட்டது.

*****************************************

“அக்கா நம்ம அவசரப்படுறோமோன்னு தோணுது. கௌதம் கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே. அந்த பொண்ணு வீட்ல இன்ஃபார்ம் பண்ணாம போறோம் ஏதாவது தப்பா நினைச்சுட்டாங்கனா?” என்று அருணா ஈஸ்வரியிடம் கூறிக் கொண்டிருந்தார்.

ஆராதனாவின் திருமணம் முடிந்து இரண்டு வாரம் ஆகியிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தங்கைக்கு அழைத்து மகேஷின் மூலம் ப்ரியாவின் விலாசத்தை தெரிந்து கொண்டார்.

காலையில் தங்கையை அவர் வீட்டுக்கு சென்று சம்பந்தம் பேசுவதற்கு அழைத்து வந்து விட்டார்.

“இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. அந்தப் பொண்ணு மகேஷ் கிளாஸ்மெட்டுனு சொன்ன. எப்படியும் அந்த பொண்ணுக்கு வரன் பாக்காம இருக்கமாட்டாங்க. நம்ம லேட்டா போய் மிஸ் பண்ணிடக் கூடாது இல்ல. அதனால ரொம்ப யோசிக்காம வா” என்று கூறிய ஈஸ்வரி வாங்கி வைத்த பழங்களையும் இனிப்பு வகைகளையும் எடுத்துக்கொண்டு இருவரும் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினர்.

இட்லிக்கு மாவரைத்துக் கொண்டிருந்த தாரணி வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டதும் கையை கழுவி துண்டால் துடைத்துக் கொண்டு வந்து கதவை திறந்தார்.

வாசலில் நின்ற புதியவர்களை யார் என்று புரியாமல், “யார் நீங்க?” என்று கேட்டார்.

“நாங்க உங்க பொண்ணு ப்ரியாவை பொண்ணு பார்க்க வந்திருக்கோம்” என்று அவர்கள் கூறியதும் தன் காதில் சரியாக தான் விழுந்ததா என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.

இருவரையும் உள்ளே அழைத்து காபி கொடுத்து உபசரித்தவர் நேராக சென்று மகளுடைய அறையைத் தட்டினார்.

கல்லூரியில் இன்று வகுப்புகள் இல்லை என்பதால் வீட்டில் தான் இருந்தாள் ப்ரியா. ஓய்வு நாள் என்றதும் நல்ல உறக்கத்தில் இருந்தவள் அன்னை கதவு தட்டும் சத்தத்தில் எழுந்து வந்தாள்.

“என்னம்மா இன்னைக்கு ஒரு நாள் தான் லீவ். இன்னைக்கு வந்து தூங்கவிடாமல் கதவைத் தட்டுறியே…” என்று தூக்கத்தை கலைத்த ஆதங்கத்தில் கூறினாள்.

“நான் ஒன்னும் பண்ணல. நீ தான் ஏதோ பண்ணி வச்சிருக்க. உன்ன தான் பொண்ணு பாக்க வந்திருக்காங்க” என்று தாரணி கூறியதும் அன்னையிடம் எரிந்து விழத் தொடங்கினாள், “ஏன்மா இப்படி சொல்லாம கொள்ளாம பொண்ணு பார்க்க கூப்பிட்டு இருக்கீங்க. கொஞ்சம் கூட அறிவே இல்லையா?” என்று கத்தினாள் அவள்.

“வேணாம் ப்ரியா நானும் வயசு பொண்ணை திட்டக் கூடாது என்று பார்க்கிறேன். நீயே உன்னை பொண்ணு பார்க்க கூப்பிட்டு இப்ப என்னை புடிச்சு திட்டுறியா?” என்று அவள் தாய் கூறவும் தான் இது அவருடைய வேலை இல்லை என்று புரிந்தது அவளுக்கு.

“அம்மா சத்தியமா நான் யாரையும் வர சொல்லலம்மா.” என அன்னையிடம் சரணடைந்தாள்.

“சரி யாருன்னு தெரியல. நீ முதல்ல டிரஸ் மாத்திட்டு கீழ வா” என்றவர் மகளை மேலிருந்து கீழ் வரை பார்வை பார்த்துவிட்டு சென்றார்.

வீட்டுக்கு போடும் உடையிலிருந்து சுடிதாருக்கு மாரியவள், தலையை இழுத்துப் பிண்ணிக்கொண்டு கீழே சென்றாள்.

ஒப்பனை ஏதும் இல்லாமலே மகாலட்சுமி போல் காட்சியளித்த ப்ரியாவை அருணா மற்றும் ஈஸ்வரிக்கு மிகவும் பிடித்து விட இந்த சம்மதத்தை விடவே கூடாது என்று மனதுக்குள் முடிவு செய்தார் ஈஸ்வரி.

ஆராதனாவின் திருமண வரவேற்பில் ப்ரியாவை பார்த்தது, கௌதம் பிரியாவும் சிரித்து பேசியது, ஒன்றாக உணவருந்தியது என்று எல்லாவற்றையும் கூறி பெண் கேட்க, கணவரும் மகனும் வீட்டில் இல்லை வீட்டில் இருக்கும் அனைவரிடம் கலந்து பேசிவிட்டு சொல்வதாக கூறி இருவரையும் வழி அனுப்பி வைத்தார் தாரணி.


தொடரும்...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 03

பால்கனியில் நின்று வீதியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவின் யோசனை வேறெங்கோ பயணித்துக் கொண்டிருந்தது.

ஈஸ்வரியும் அருணாவும் கிளம்பியதும் தாயின் அர்ச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக ஆர்த்தியின் வீட்டுக்கு வந்து விட்டாள்.

கையில் காபி கப்புகளோடு வந்த ஆர்த்தி ஒன்றை தோழியிடம் கொடுத்துவிட்டு அவளும் காபியை பருகத் தொடங்கினாள்.

“இப்படியே இங்கே நின்னுட்டு இருக்க போறியா…வீட்டுக்கு போற ஐடியா இருக்கா இல்லையா?” என்று கேட்டாள் ஆர்த்தி.

“எனக்குன்னு தான் எங்கிருந்து வர்றாங்களோ தெரியல ஆர்த்தி. சும்மா ஒரு பையன் கிட்ட பேசுனதுக்கு கல்யாணம் பண்ணிக்க கேட்டு வந்திருக்காங்க. அவங்க போனதுமே அம்மா முகத்தை நீ பார்க்கணுமே. நான் சொன்னத நம்பினாங்களா இல்லையான்னு கூட எனக்கு தெரியல. நான் பேசாம நைட் இங்க தங்கிக்கட்டுமா?” என்றாள் ப்ரியா.

ப்ரியாவை பார்க்க ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும் மற்றொருபுறம் பாவமாக இருந்தது ஆர்த்திக்கு.

“நீ வீட்ல தங்குறதெல்லாம் பிரச்சனை கிடையாது. ரகு ஆபீஸ் முடிஞ்சு வந்துருவாரு. இன்னைக்கு நைட் ரெண்டு பேரும் ஊருக்கு போகலாம்னு பிளான் பண்ணினோம். அதுதான் யோசிக்கிறேன்” என்று ஆர்த்தி கூறியதும் தோழியை கஷ்டப்படுத்துகிறோமோ என்று யோசித்தவள் பால்கனியில் இருந்து அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்ததுமே அவள் கைப்பேசி சினுங்க அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஹலோ ப்ரியா, கெளதம் பேசுறேன்.ஐ அம் ரியலி சாரி வீட்ல ஒரு சின்ன கன்ஃபியூஷன் ஆயிடுச்சு. எனக்கு சொல்லாமலே அவசரப்பட்டு உங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. நாளைக்கு உங்கள மீட் பண்ணலாமா,ஆர் யூ ப்ரீ?” என்றான் கௌதம்.

கௌதம் சந்திக்க கேட்டதும் என்ன சொல்வது என்றே அவளுக்கு புரியவில்லை. ஒருமுறை அவனை சந்தித்ததற்கே பெண் கேட்டு வந்து விட்டார்கள். இன்னொரு முறை சந்தித்தால் என்ன ஆகுமோ. என்று அவள் மூளை அவளுக்கு எச்சரிக்கை செய்ய. மனமோ என்னதான் சொல்கிறான் என்று கேட்போம் என்று நினைத்தது.

அவனிடம் சந்திப்பிற்கான நேரத்தையும் இடத்தையும் கூறிவிட்டு அலைபேசி அழைப்பை துண்டித்தாள்.

“யாரடி அது போன்ல?” என்று கேட்டவாறு வந்து சோபாவில் அமர்ந்தாள் ஆர்த்தி.

“கௌதம்”

“என்ன சொல்றாரு சார்?”

“மீட் பண்ணனும்னு கேக்குறான்”.

“பார்த்து டி ஒரு வாட்டி மீட் பண்ணதுக்கே அவங்க அம்மா கல்யாணம் பேச வந்துட்டாங்க”

“நீ வேற என்னை பயமுறுத்தாதடி”

“உன்ன பயமுறுத்தணும்னு சொல்லல. எதுக்கும் ஜாக்கிரதையா இருக்க சொல்றேன். நல்ல பையனா இருந்து பேசி பிடிச்சிருந்தா நல்லது தான்”

“அவன் பேசி கூப்பிட்டது பார்த்தா கல்யாணத்தை பத்தி பேசுறதுக்கு கூப்பிட்ட மாதிரி இல்ல. ஜஸ்ட் ஒரு சாரி மீட் அப் மாதிரி தான் தெரியுது”

“அதான் போன்லயே சொல்லிட்டானே... எனக்கு என்னமோ அவனுக்கு உன்ன புடிச்சிருக்கு நினைக்கிறேன்”

“அத பத்தி எல்லாம் இப்ப எனக்கு யோசிக்க டைம் இல்ல. நான் வீட்டுக்கு கிளம்புறேன்”

“நல்ல முடிவு, வீட்டுக்கு போ. நான் ஒரு ஒன் வீக் இருக்க மாட்டேன். எனக்கு ஒரு டெக்ஸ்ட் அனுப்பு” என்று ஆர்த்தி கூற வீட்டுக்கு கிளம்பினாள் ப்ரியா.

வீட்டுக்கு வந்ததுமே அறைக்கு சென்று அமைதியாக இருந்து கொண்டாள்.

தாரணி இரவு உணவை சாப்பிடுவதற்காக வீட்டினரை அழைக்க அனைவரும் சாப்பாடு மேசையில் கூடினர்.

சிவகுமார் வங்கி மேனேஜராக பணிபுரிகிறார். தாரணி மற்றும் சிவகுமார் 27 வருட திருமண வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷங்கள் தான் அரவிந்த் மற்றும் ப்ரியா. அரவிந்த் ப்ரியாவை விட ஒரு வயது மூத்தவன். நண்பர்களோடு சேர்ந்து கார் ஷோரூம் ஒன்று இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறான். சிவகுமார் குழந்தைகள் மேல் உயிரையே வைத்திருக்கிறார். அவர்களுக்கு ஒன்று என்றால் தாங்க மாட்டார். தாரணிக்கும் குழந்தைகள் மேல் பாசம் உள்ளது ஆனால் அதை வெளிப்படையாக காட்டி செல்லம் கொடுத்து கெடுக்க கூடாது என்று நினைப்பார்.

சாப்பாடு மேசையில் உணவுப் பதார்த்தங்களை திறந்து பார்த்த அரவிந்தன் முகம் சுருங்கியது.

“என்னம்மா இன்னைக்கும் பூரியா? நான் உங்களை இட்லி தானே செய்ய சொன்னேன்” என்று சினுங்கினான்.

“நேத்து தானடா உனக்கு இட்லி செய்தேன். இன்னைக்கு அவளுக்கு பிடிக்குமே என்று பூரி செய்தேன்” என்று தாரணி கூறியவும் உதட்டை குவித்து அம்மாவுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பிய ப்ரியா பூரியையும் கிழங்கு மசாலாவையும் ரசித்து உண்ண தொடங்கினாள்.

“ஆமா உனக்கு உன் பொண்ணு தான் ஒசத்தி” என்று தங்கையை பார்த்து முறைத்துக் கொண்டு கூறியவன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு இருந்தான்.

“உனக்காக தாண்டா காலையில் இட்லி மாவு அரைத்தேன். நாளை காலையில் இட்லி தான் சரியா?இப்ப சாப்பிடு” என்று மகனுக்கு பரிமாறினார்.

உணவை பரிமாறிக் கொண்டிருந்தவரின் கையைப் பிடித்து அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தார் சிவகுமார்.

“எல்லாருக்கும் அவங்களுக்கு என்னென்ன வேணுமோ அதை நாங்களே எடுத்து போட்டு சாப்பிட்டுப்போம். நீயும் எங்களோடு சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடு” என்று மனைவியை அதட்டி சாப்பிட வைத்தார் அந்த பாசமான கணவர்.

அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “இன்னைக்கு காலைல ரெண்டு பேர் வந்து ப்ரியாவ பொண்ணு கேட்டுட்டு போனாங்க” என்று கணவர் மற்றும் மகனின் முகத்தை பார்த்துக்கொண்டு கூறினார்.

அன்னை திடீரென்று விஷயத்தை போட்டு உடைப்பார் என்ற எதிர்பார்க்காதவள் தலையை நிமிர்த்தாமலே சாப்பிட்டு முடித்தாள்.

“அவ சின்ன பொண்ணு” என்றார் சிவகுமார்.

“ஜோசியர் மட்டும் இவளுக்கு கல்யாணம் யோகம் போன வருஷமே இருக்குன்னு சொல்லி இருந்தா இந்த நேரம் ஒரு குழந்தைக்கு அம்மாவாவே இருந்திருப்பா இவ உங்களுக்கு சின்ன குழந்தையா? நீங்க வேணா பாருங்க இவளுக்கு கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் இயர் அனிவர்சரி கைல குழந்தையோடு தான் இருக்கப் போறா”என்றார் தாரணி.

அவர் காலையில் நடந்து முடிந்ததை பற்றி முழுதாக கூறியதும். சிவகுமாரின் முகத்தையே அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர். எந்தவிதமான முக பாவத்தையும் வெளிப்படுத்தாமல், “பொண்ணு ஒன்னு வீட்ல இருந்தா நாலு பேர் வந்து கேட்க தான் செய்வாங்க. நீ அவங்க ஹஸ்பண்ட் ஓட நம்பர் குடு அவங்க ஃபேமிலி பத்தி விசாரிச்சு பார்த்து முடிவு பண்ணுவோம்” என்றவர் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு கழுவ சென்றார்.

தந்தையின் பின்னாலே சென்ற ப்ரியா, “அப்பா என் மேல எந்த தப்பும் இல்லை. அவங்க தான் நான் அந்த பையன் கூட ஃப்ரென்ட்லியா பேசுனதை தப்பா நினைச்சுட்டு...” என்று தந்தைக்கு விளக்கம் அளிக்க முயற்சித்தவளை பார்த்து சிரித்தார் சிவகுமார்.

“எனக்கு என் பொண்ணு மேல நிறையவே நம்பிக்கை இருக்கு. அவ என்னை எப்பவுமே தலை குனிய விட மாட்டா“ என்று கூறியவர் கையை கழுவி துண்டால் துடைத்தவர் மகளின் தலையை பாசமாகக் கோதினார்.

பேச்சை மாற்றுவதற்காக, “சரி அப்பாவோட புது ஹேர் ஸ்டைல் பத்தி சொல்லவே இல்ல?” என்று தன்னுடைய புது ஹேர்க்கட்டை காட்டிக் கேட்டார்.

சிவகுமாருக்கு எப்பொழுதும் தன்னை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்வது மிகவும் பிடிக்கும். காலையிலே தவறாமல் உடற்பயிற்சி செய்பவர். உணவில் கூட கடுப்பாடாக இருப்பார். வெளியில் அவ்வளவாக வாங்கி உண்ணும் பழக்கம் அவருக்கு கிடையாது. அரவிந்தும் சிவகுமாரும் ஒன்றாக தெருவில் நடந்தால் அண்ணன் தம்பியா என்று கேட்கும் அளவுக்கு அவர் இளமையாக தெரிவார்.

சூப்பரா இருக்கு என்று கூறியவள் அன்றைய நாள் எப்படி சென்றது என்று உரையாடிவிட்டு அறைக்கு தூங்க சென்றாள் ப்ரியா.

சிவக்குமார் வீட்டில் எப்போதுமே 7 மணிக்கு இரவு உணவை முடித்துக் கொண்டு 10 மணிக்கெல்லாம் உறங்கி விட வேண்டும். அதற்கு நேர் மாறாக இருந்தது சக்ரவர்த்தியின் குடும்பம்.

வீட்டுக்கு ஏழு மணிக்கு வந்த கௌதம் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.

ஸ்ரேயா இரவு உணவை உண்டு விட்டு வெட்டி வைத்த ஆப்பிள் துண்டுகளை மாமியாரின் அன்பு மிரட்டலின் காரணமாக கஷ்டப்பட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அண்ணியின் அருகே வந்து அமர்ந்தவன் ஆப்பிள் துண்டுகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். கொழுந்தன் வந்ததும் நிம்மதி அடைந்த அண்ணி ஆப்பிள் தட்டை அவன் பக்கம் நகர்த்தி வைத்துவிட்டு பாலை எடுத்து குடித்தாள்.

எட்டு மணிக்கு சரியாக வீட்டுக்குள் நுழைந்தனர் சக்கரவர்த்தியும் அஸ்வினும். அவர்கள் உடை மாற்றி வந்ததும் சக்கரவர்த்தி, அஸ்வின் மற்றும் கௌதம் மூவரும் ஒன்றாக உணவருந்தினர்.

மருமகளை உன்ன வைப்பதற்காகவே அவளுடன் சேர்ந்தே சாப்பிடுவார் ஈஸ்வரி. வேலைக்காரர்கள் இருந்தாலும் கூட கணவருக்கும் பிள்ளைகளுக்கும் தானே பரிமாற வேண்டும் என்று நினைப்பார் ஈஸ்வரி.

சாப்பிடும்போது அன்னையை முறைத்துப் பார்த்துக் கொண்டே உணவருந்தினான் கௌதம்.

அஸ்வினும் சக்கரவர்த்தியும் பிசினஸ் விஷயமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“இருந்தாலும் அஸ்வின் நீ அவசரப்பட்டு இருக்க கூடாது. உன்கிட்ட எவ்வளவு திறமை இருந்தாலும் உன்னோட அவசரம் அதெல்லாம் ஒண்ணுமே இல்லாம பண்ணிடுது. எந்த விஷயம் பண்ணும் போதும் பொறுமையா பண்ண கத்துக்கோ” என்று தன்னுடைய அனுபவத்தில் இருந்து மகனுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார் சக்கரவர்த்தி.

தந்தை சொல்வதற்கெல்லாம் ஆமாம் என்று பேச்சுக்கு தலையாட்டிக் கொண்டு இருந்தான் அஸ்வின்.

இது வழமையாக நடப்பது தான்.

“டேட், அம்மா இன்னைக்கு என்ன பண்ணாங்க தெரியுமா?” என்று கௌதம் ஆரம்பித்ததும் மனைவியின் முகத்தையே கவனித்தார் சக்கரவர்த்தி.

ஈஸ்வரி அமைதியாக இருக்கவும் தொடர்ந்து கௌதமே, “அன்னைக்கு நான் ரிசப்ஷன்ல பேசிகிட்டு இருந்த பொண்ணு வீட்டுக்கு போய் பொண்ணு கேட்டிருக்காங்க” என்று அவன் அன்னையை மாட்டி விட,

அவரோ, “வெரி குட் ஈஸ்வரி. நானே உன் கிட்ட சொல்லணும்னு இருந்தேன்” என்று மனைவியை பாராட்டினார்.

ஒன்றுமே புரியாமல் அவன் தந்தையை பார்க்க, “பின்ன என்னடா நீ வாழ்க்கையில அஞ்சு நிமிஷத்துக்கு மேல யார்கிட்டயுமே பேசி நாங்க யாருமே பார்த்ததில்லை. அப்படின்னா உனக்கு அந்த பொண்ணை புடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்” என்று அவன் தந்தை கூறவும் அப்பொழுதுதான் அவனுக்கே அந்த விஷயம் உறுத்தியது.

தந்தை கூறியது வைத்துப் பார்த்தால் தனக்கும் அந்த பெண்ணை பிடித்திருக்கின்றதா என்ற யோசனையோடே உறங்கச் சென்றான் கௌதம்.


தொடரும்...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 04

கௌதம் அவள் கூறிய இடத்துக்கு சொன்ன நேரத்தில் வந்து நின்றான்.

உணவகத்தில் கூட்டம் குறைவாக இருக்கவும் உள்ளே நுழைந்து இருவருக்கான இடத்தில் சென்று அமர்ந்தான்.

அவன் வந்த ஐந்து நிமிடத்தில் உணவகத்தில் நுழைந்த ப்ரியா அவன் இருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.

“ஹாய், தேங்க்யூ ஃபார் கம்மிங்” என்று எழுந்து நின்று அவன் கை கொடுக்க சம்பிரதாயமாக அவளும் கைகுலுக்கினாள்.

இருவரும் எதிர் எதிரே அமர்ந்ததும் வெயிட்டர் மெனு காட்டை கொடுத்துவிட்டு சென்றார்.

“என்ன சாப்பிடுறீங்க?” என்று கௌதம் கேட்டதும் தனக்கு மிகவும் பிடித்த பிஸ்காஃப் பிறப்பே (biscoff frappe) அவள் ஆர்டர் செய்ய அவன் என்ன வாங்குவது என்று தெரியாமல் மறுபடியும் மறுபடியும் மெனுவை புரட்டி பார்த்தான்.

“எதுவுமே புடிக்கலையா?” என்று ப்ரியா அவனிடம் கேட்க,

“அப்படி இல்ல. எனக்கும் உங்களுக்கு ஆர்டர் பண்ணதே ஆர்டர் பண்ணிக்கோங்க” என்றான்.

சரி என்று அவள் அவனுக்கும் ஆர்டர் செய்திட அடுத்து என்ன என்று அவனேயே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையின் பொருள் புரிந்ததும் குரலை செருமிக் கொண்டு, “சாரி, வீட்ல அம்மா கொஞ்சம் அவசரப்பட்டு உங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. மகேஷ் எனக்கு போன் பண்ணி சொன்னதும் தான் எனக்கே தெரியும்”என்று உண்மையை கூறினான்.

ப்ரியாவை பெண் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததுமே அருணா மகளுக்கு அழைத்து பெண் பார்க்க சென்ற விஷயத்தை கூறவும் மகேஷ் மாமியாரின் திட்டத்தில் உடன்பட விரும்பாமல் சம்பந்தப்பட்ட இருவருக்கும் அழைக்க முடிவு செய்தவன் முதலில் கௌதமுக்கு அழைத்து விட்டான். அனைத்தையும் கேட்ட கௌதம் தானே ப்ரியாவிடம் இதைப் பற்றி பேசி மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியதால் மகேஷ் ப்ரியாவுக்கு அழைக்கவில்லை.

நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கௌதம் கூறி முடிய ஆர்டர் செய்த பானங்கள் வந்தன.

யாரோ ஒரு பெண்ணிடம் தான் ஏன் இவ்வளவு விளக்கம் கொடுக்கிறோம் என அவனுக்கு தெரியாத போதும் அவளிடம் நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பு இருந்தது அவனிடம்.

ப்ரியா ரசித்து குடித்த விதமே கூறியது அவளுக்கு மிகவும் பிடித்த பானம் என்று.

மும்முரமாக பிறப்பே குடித்துக் கொண்டிருந்தவளை பார்த்த கௌதம் “கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?”என்று கேட்டான்.

தன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்பி விடுவான் என்று அசாத்திய நம்பிக்கையில் இருந்தவளை அசைத்துப் பார்த்தது அவனின் கேள்வி.

அந்த நொடி ஆர்த்தி சொன்னது போல் இருக்குமோ என அவள் நினைக்க இதுவரை தைரியமாக இருந்தவள் படபடப்பு அடைய தொடங்கினாள்.

“கல்.. கல்யாணம்” என்று திக்கியவளுக்கு அதற்கு பின் வார்த்தைகள் வருவேனா என அடம் பிடித்துக் கொண்டிருந்தது.

“ஏங்க கல்யாணத்தை பத்தி தானே கேட்டேன். நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்ட மாதிரி பயப்படுறீங்க” என்றான் சகஜமாக சிரித்துக் கொண்டு.

அது தான் பயமே என்பது போல் அவன் முகத்தை பார்த்து வைத்தாள்.

“யாரையாவது லவ் பண்றீங்களா என்ன?” என்று அவன் கேட்டதும் அவளுக்கு எப்பொழுதும் தோன்றும் அருணின் முகம் கண் முன்னே தோன்றி மறைய வெளிப்படையாக தன் மனதில் இருப்பதை கூற தொடங்கினாள்.

“லவ் இல்ல…காலேஜ் டைம் கிரஷ் இருந்துச்சு”என்று தன் கிரஷ் பெயிலியர் ஸ்டோரியை எடுத்துவிட சுவாரசியமாக கேட்டவன் “அவ்வளவுதானா?” என்று கூறி சப்பென்று ஆக்கிவிட்டான்.

அவன் சொன்ன விதம் அவளை கேலி செய்வது போல தோன்ற, “ஏன் உங்களுக்கு ஒரு ரெண்டு லவ்வர் இருப்பாங்களா?” என்றாள் நக்கலாக.

மீதம் இருந்த பானத்தை மொத்தமும் வாய்க்குள் சரித்தவன் அதை முழுங்கி விட்டு மூனு என்று விரலை மடக்கி கூறினான்.

அவள் வாயைப் பிளந்த வண்ணம் அவனை காண,

“ஏங்க நான் பார்க்க நல்லா இல்லையா?எனக்கெல்லாம் மூன்று கேர்ள் பிரண்டு இருக்க கூடாதா என்ன?”என்றான்.

பெரிய நெற்றி, அடர்த்தியான புருவங்கள், நீளமான மூக்கு மற்றும் அவன் பிங்க் உதடுகள் சிகரெட்டை தொட்டதில்லை என கூறும் விதமாக இருந்தது.

வந்ததிலிருந்து ஒவ்வொரு முறையும் அவன் கேசத்தை விரல்கள் கொண்டு கலைக்கும்போது கண்களாலேயே அவனை பருகிக் கொண்டிருந்தவள் இதற்கு என்ன பதில் சொல்வாள்.

“நல்லாதான் இருக்கீங்க” என்றவள் வெட்கத்தை மறைக்கும் பொருட்டு பேச்சை மாற்றி, “அது எப்படி மூன்று?” என்று கேட்டாள்.


“ஒன்னு டென்த் (10th) படிக்கும் போது. அப்புறம் டுவெல்த் (12th) படிக்கும் போது. கடைசியா காலேஜ்ல படிக்கும் போது தேர்ட் இயர். ஸ்கூல் படிக்கும்போது கூட அவ்வளவு சீரியஸ்ஸா லவ் பண்ணல. ஆனா, காலேஜ்ல தீபாளினு ஒரு பொண்ணு. ரெண்டு பேரும் ரொம்ப சின்சியராதான் லவ் பண்ணினோம். காலேஜ் முடிஞ்சதும் அவ வீட்டில போய் பேசினேன். அவங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். கல்யாணம் பண்ணிக்க கேட்ட போது முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாரு. கொஞ்ச நாள் கஷ்டமா இருந்துச்சு. அது நடந்த ரெண்டு மாசத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. தீபாளிக்கு இப்போ ரெண்டு குழந்தை இருக்காங்க”

இயல்பாகவே அவளிடம் தன் காதல் வாழ்க்கையை பற்றிய சுருக்கத்தை கூறியவன். வெயிட்டரை வரவழைத்து பில்லுக்கு பணத்தை செலுத்தினான்.

அவன் கூறியதில் இருந்து விடுபட முடியாமல் ஆச்சரியமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கருத்தில் அவன் வெயிட்டரை வரவழைத்தது, பில்லுக்கு பணத்தை செலுத்தினது என்று ஒன்றுமே பதியவில்லை.

எப்பொழுதோ முடிந்து போன அவன் காதல் அத்தியாயத்துக்காக இப்பொழுது வருந்திக் கொண்டிருந்தாள் பெண்.

“ஹலோ ஹலோ”என்று ப்ரியாவின் முகத்துக்கு முன்னால் அவன் கையசைக்க சுயம் பெற்றாள்.

கிளம்புவோமா என கௌதம் எழுந்து நிற்க அவள் வெயிட்டரை அழைத்தாள்.

“ஏன் இப்ப வெயிட்டரை கூப்பிடுறீங்க?” என்று கேட்டான்.

“பில் பே பண்ணனும்” என்று அவள் இழுக்க,

“சரியா போச்சு அதெல்லாம்
பண்ணியாச்சு வாங்க போலாம்” என்றவன் அவளை முன்னே செல்ல விட்டு பின் தொடர்ந்தான்.

அவள் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி ஹெல்மட்டை போட்டுக்கொள்ள, “பை த வே உங்களுக்கு எப்பயாவது கல்யாணம் பண்ணனும்னு ஐடியா இருந்துச்சுன்னாஃபர்ஸ்ட் என்கிட்ட சொல்லுங்க” என்று கூறியவன் குளிர் கண்ணாடியை கண்களில் மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் கூறியதை எந்த அர்த்தத்தில் எடுத்து கொள்வது என்று அவளுக்கு விளங்கவில்லை.


*****************************************

“அப்பா உங்க பக்கத்தில் இருக்க அந்த பொண்ணுக்கு என் வயசு இருக்குமா?” என்று தந்தையிடம் கேட்டுக்கொண்டு இருந்தாள் ப்ரியா.

“ஆமாண்டா. ரொம்ப நல்ல பொண்ணு” என்றார்

“ஆனாலும் அந்த பொண்ண விட நீங்க யாங் ஆஹ் தெரியுறீங்கப்பா“ என்று கூறி அவர் தலையில் ஐஸ் கட்டியை இறக்கி வைத்தாள்.

மகளின் பேச்சு சத்தம் கேட்டு வந்த தாரணி கணவர் நேற்று சென்ற வங்கி அவார்ட் பங்க்ஷன் படங்களை மகளுக்கு காட்டி கொண்டு இருக்கின்றார் என்று புரிந்ததும் தானும் அவர்களோடு இணைந்து கொண்டார்.

சிவகுமாரின் கிளையில் பெரும்பாலும் பெண் ஊழியர்களே இருந்தனர். அவர்களோடு சேர்ந்து எடுத்த குரூப் புகைப்படத்தை பார்த்த தாரணி,

“பாத்தியா ப்ரியா உங்க அப்பா பெரிய கிருஷ்ணன் மாதிரி நடுவுல நிக்க அவர் சுற்றி ஒரே பொண்ணுங்களா இருக்கு” என்று மகளிடம் கூறி கணவரை போலியாக முறைத்தார்.

“ஆமாம்பா. உங்களுக்கு சிவகுமார்னு பேர் வைக்கிறது பதிலா கிருஷ்ணன் என்று பெயர் வைத்திருக்கலாம் ரொம்ப ஹண்ட்சம் பா நீங்க ” என்றாள் ப்ரியா.

“அதானே பார்த்தேன். நீ எப்ப எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்க, உனக்கு எப்பவும் அப்பா அப்பா அப்பா தானே. என் பையன் வரட்டும் உங்க ரெண்டு பேரையும் கவனிச்சுக்குறேன்“ என்று தாரணி கூற,

தந்தையின் தோள் மேல் சாய்ந்து கொண்டு அன்னையைப் பார்த்து உதட்டை சுளித்தாள் ப்ரியா.

ப்ரியாவுக்கு தாயை விட தந்தையின் மேல் பாசம் அதிகம். அவரை பற்றி அன்னையே கூட குற்றம் சொன்னாலும் சண்டைக்கு செல்வாள்.

இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு வீட்டுக்குள் நுழையும் போதே, “அம்மா…அம்மா”என்று சத்தம் எழுப்பிக்கொண்டு வந்து சேர்ந்தான் அரவிந்த்.

“உன் மகன் உன்னை தேடி வந்துட்டான் பாரு”என்று மனைவியிடம் கூறினார் சிவகுமார்.

மலர்ந்த முகத்தோடு சந்தோஷமாக வீட்டினரை எதிர்கொண்ட அரவிந்த், “உங்க எல்லாருக்கும் சர்ப்ரைஸ் இருக்கு. சீக்கிரம் வெளியில் வாங்க”என்று கூறி மூவரையும் வீட்டின் வாசலுக்கு அழைத்து சென்றான்.

வீட்டின் வாசலில் அரவிந்த் தன் சொந்த உழைப்பில் சேர்த்து வைத்து வாங்கிய மினி கூப்பர் பளிச்சென்று கண்ணை பறிக்கும் சிகப்பு கலரில் நின்று கொண்டிருந்தது.

ஆச்சரியமும் சந்தோஷமாக, “அண்ணா எப்ப வாங்கின சொல்லவே இல்ல” என அவனை கட்டி அணைத்து வாழ்த்தினாள்.

மகன் தன் சொந்த உழைப்பில் வாங்கிய காரை பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தனர் அவனின் பெற்றோர்.

தங்கையின் கையில் கார் சாவியை கொடுத்து ஓட்டுனரின் இருக்கையில் அமர வைத்தான்.

அரவிந்த் அவள் அருகில் இருந்த இருக்கையில் அமர பின் சீட்டுகளில் சிவக்குமாரும் தாரணியும் அமர்ந்தனர்.

கடற்கரை சாலை ஓரமாக காரை லாவகமாக செலுத்திக்கொண்டு குடும்பத்தினரோடு இன்பமாக அந்த நேரத்தை கழித்துக் கொண்டிருந்தாள் ப்ரியா.

அரவிந்த் திடீரென பின்னால் அமர்ந்திருந்த பெற்றோரைப் பார்த்து, “நாம ஏன் நாளைக்கு வெளியே எங்கயாவது போயிட்டு வரக்கூடாது” என்று யோசனையை முன் வைத்தான்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் ஆமோதிப்பாக தலையசைக்க தாரணி மட்டும் யோசனையோடு, ”நாளைக்கு உங்க பெரியப்பா வாரேன்னு சொன்னார் டா. மறுபடியும் தாரணிக்கு ஒரு வரன் வந்திருக்கு என்று ஆரம்பிச்சாரு. என்ன சொல்ல போறாருன்னு தெரியல“ என்றார்.

“என்னம்மா இது. நாளைக்கு தான் வரணுமா அவரு” என்று சீறியவன், இப்ப என்ன அவசரம். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே. அதுக்கப்புறம் ப்ரியாக்கு கல்யாணம் பண்ணி வைப்போம். அவ இல்லாம நம்மளால எப்படி ஜாலியா இருக்க முடியும். இப்போதைக்கு வேணாம்னு பெரியப்பா கிட்ட சொல்லுங்கம்மா” என்றான் ப்ரியாவின் பாசக்கார அண்ணன்.

இவர்கள் உரையாடல் காதில் விழுந்தாலும் கார் ஓட்டுவதிலேயே கவனமாக இருந்தாள் ப்ரியா.

இருந்தும் அவள் மணக்கண்ணில் வந்து நின்று சிரித்து அவளை வசிகரித்தான் கௌதம். மறுபடியும் வரன் பார்க்க தொடங்கி விடுவார்களா என்று யோசிக்க தொடங்க,

“சரி அந்த பேச்ச விடுங்க. நான் அண்ணா கிட்ட பேசுறேன். நாளைக்கு நாமெல்லாம் வெளியில போறோம்” என்று கூறி அந்தப் பேச்சுவார்த்தையை முடித்து வைத்தார் சிவகுமார்.


தொடரும்...
 
Last edited:
Status
Not open for further replies.
Top