உயிரே 11
“அண்ணி, அக்கா “என்று அவள் பின்னால் இருந்து வந்த குரலில் திரும்பியவள் அங்கு வடிய முகத்துடன் நின்றிருந்தனார் தாரு, நேத்ரா பார்த்தாள்
“அக்கா நடந்தை நினைச்சிட்டே இருக்காதிங்க “என்றாள் நேத்ரா
“ஆமா அண்ணி நடத்தையே நினச்சிட்டு இருக்காதிங்க அண்ணி அழுதுட்டே இருக்குறதால எதுவும் மாறிட போறது இல்லை எதார்த்தத்தை ஏத்துக்க முயற்சி பண்ணுங்க “என்று தாரு சொல்ல
வார்ஷாவிற்கு அழுகையை அடக்க முடியாது உடைந்து அழ தொடங்கினர் அவளை இருவரும் அனைத்துக்கொண்டனர் அவளால் இவ்ளோ அழ முடியுமோ அழுது திறக்கட்டும் என்று இருவரும் அமைதியாய் அவளை முதுகை வருடிக்கொடுத்தனர் எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கே தெரியவில்லை ஆனால் முன்பை விட மனம் இப்போது லேசாக இருந்ததை மட்டும் அவளால் உணர முடிந்தது அழுகை குறைய
“அண்ணி கொஞ்ச நேரம் தூங்குங்க மனசுக்கு தெளிவு கிடைக்கும் “என்று அவளை படுக்கசொல்லோவிட்டு வெளியே சென்றனர் இருவரும். சோர்ந்தபோன மனதும் படுத்த உடனே உறக்கத்தை தழுவிக்கொண்டது..
“நேர்த்தி இன்னைக்கு என்ன ஸ்பெஷல் செஞ்சி எல்லாரையும் காலிப்பன்ன பிளான்? “
“ரிஷி சார் என்ன ரொம்ப இன்செல்ட் பண்றீங்க சொல்லிட்டேன் “
“ஹா ஹா உண்மையா சொன்னேன் மா அது ஒரு குத்தமா “
“இருக்க உங்களுக்கு ஸ்பெஷலா கேசரி போட்டுடுறேன் “
“அய்யோ வேணாம் தாயி “என்று பதறினான்
“அந்த பயம் இருக்கட்டும் “
“தாரு உன் அண்ணா வர வர என்ன ஓவரா இன்செல்ட் பன்றாரு சொல்லிவை அப்புறம் இந்த நேத்ரா யாருனு கட்டவேண்டிவரும் சொல்லிட்டேன் “என்று டைலாக் பேச பாட்டி வந்து தலையில் தட்ட “பாட்டி... “
“இந்த முஞ்சையே பாக்க சகிக்கல இதுல இன்னொரு மூஞ்சி வேறயா “என்று அவர் பங்குக்கு அவரும் கிண்டல் செய்ய
“இந்த மூஞ்சிக்கு என்ன கொறச்சலாம் “
“அங்க என்ன ஒழுங்கா இருக்கு முதல்ல அதை சொல்லு “
“பாட்டி..... “
“சரி சரி ஏன் காதுபக்கத்துல கத்துற “என்று வழக்கம் போல் கலகலப்பாய் கிச்சனில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர் பெண்கள்
துருவ் லேப்டாப்பில் வேலைசெய்துகொண்டிருக்க உள்ளே வந்தான் ரிஷி “பிரதாப் “
“ஹ்ம்ம் சொல்லு ரிஷி “
“இன்னைக்கு நாம அந்த டீல்ல முடிச்சாகனும் “
“டோன்ட் வரி ரிஷி அந்த டீல் நமக்குத்தான் கிடைக்கும் அதுக்கான எல்லா வேலையும் முடிச்சாச்சு அதை நான் பாத்துக்குறேன்
“வாவ் சூப்பர் டா அண்ணா “
“இந்த பிரதாப் ஒன்ன நெனச்ச அது முடியாம போகுமா என்ன? இந்த பிரதாப் நினைக்குறதுதான் நடக்கும் நடக்கவைப்பேன் “
“தட்ஸ் மை பிரதாப் “என்று அவனை அணைத்துக்கொண்டான் ரிஷி.
கே ஆர் குரூப்ஸ் பல துறைகளை உள்ளடக்கிய நிறுவனம் சென்னையின் நம்பர் ஒன் மென்பொருள் , அடைவடிவமைப்பு மற்றும் கட்டுமான துறைகளை உள்ளடக்கியது அதுமட்டும் இல்லாது கே ஆர் ஹாஸ்பிடல்ஸ், கே ஆர் காலேஜ்ஸ் என அனைத்தையும் உள்ளகியது.
துருவேந்திர பிரதாப் குடும்பம் பரம்பரை பணக்காரர்கள் அவர்கள் அவர்களின் தந்தையாயும் சித்தப்பாவும் சேர்ந்து சிறிதாக உருவாக்கிய கட்டுமான நிறுவனத்தை இவன் திறமையாலும் விடாமுயற்சியாலும் என்று பன்மடங்கு பெரிதாக்கினான் அதுமட்டும் இன்றி மென்பொருள் , உடை வடிவமைப்பு அவன் உருவாக்கியது இன்ஜினியரிங் முடித்துவிட்டு எம்பிஏ மாஸ்டர் டிகிரி முடித்தான் அதன் பின் ஆடை வடிவமைப்பின் ஆர்வம் இருந்ததால் யூஎஸ் சென்று படித்தான் அவனுக்கென்று எப்போதும் தனி ஸ்டைல் உண்டு அவன் அணியும் ஆடைகள் ஒவ்வொன்றும் அவனுகவே வடிவமைக்கப்பட்டதாகவே மட்டும் இருக்கும் அவனின் ஸ்டைல்ளுக்கென்றே பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு இன்றும்.. இம்மூன்று துறைகளிலும் தனக்கென ஒரு சாம்ராஜயத்தையே உருவாக்கி உள்ளான்... ரிஷியும் தன் அண்ணனுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று அதே துறையை தேர்தெடுத்து படித்தான்....
“உன் கிட்ட கொஞ்சம் பேசணும் பிரதாப் “
“சொல்லு ரிஷி “என்றான் வேலையை பார்த்த படியே
“அன்னைக்கு நடந்த அந்த அஸிடெண்ட் வெறும் அச்சிடேன்ட்டா எனக்கு தோணலை அந்த அச்சிடேன்ட்டை யாரு பிளான் பண்ணி செஞ்சி இருக்காங்க வெளில இது எதார்த்தமா நடந்த மாதிரி தெரியணும்னு பக்கவா பிளான் பண்ணி இருக்காங்க பிரதாப் “
“ஹ்ம்ம்ம் தெரியும் ரிஷி “
“எப்படி பிரதாப் சொல்ற? “
“அன்னைக்கு என்னோட கார் ஏசில மயக்கமருந்தை கலந்து இருக்காங்க ஏசி ஆன் ஆனதும் அந்த மயக்க மருந்து ஏர்ல ஸ்பீல்டு ஆகுறமாதிரி பக்கவா ரெடி பண்ணி இருக்காங்க அப்படியே நான் அன் கான்ஷியஸ் ஆனதும் ஈஸியா என்ன கிளோஸ் பனிடலாம்னு பிளான் பண்ணி லாரி வச்சி அச்சிடேன்ட் பண்ணி என்ன கொள்ள பிளான் பண்ணி இருக்காங்க “
“வாட் !! எல்லாத்தையும் தெரிஞ்சி எப்படி இவ்ளோ கூல்ல இருக்க பிரதாப் இந்நேரம் அவனை கொன்னு புத்தரிருக்க வேணாம் “என்று ஆக்ரோஷமாக கத்தினான் ரிஷி
“கூல் ரிஷி... பட்சி நம்மளை தேடிவந்து மாட்டும் “
“அது இப்படி பிரதாப் நம்மை பகச்சிக்கிட்டாலே அவன் உருத்தெரியாம போயிடுவான் இவன் நம்மகிட்ட வேலையை காமிச்சு இருக்கான் இவனுக்கு நாம இடத்துக்கு வர தைரியம் இருக்க முதல்ல “
“ரிஷி பட்சி அவங்க ஆளோட சிக்கிடுச்சி கொஞ்சம் பொறுமையா இரு “என்று கண்சிமிட்ட
“பிரதாப் ஏதோ பிளான் பண்ணி இருக்க போல “
“எஸ், இந்த அந்த ரெண்டுபேரால நமக்கு ஆகவேண்டிய காரியம் நிறைய இருக்கு சோ கொஞ்சம் பொறுமைய வேடிக்கை பாப்போம் “என்றான் பிரதாப்
“அப்போ வேடிக்கை பாத்துடா வேண்டியதுதான் “என்றான் ரிஷி
வர்ஷா கண்விழிக்கும் போது ஆதவன் மேற்குவானில் மறைய தொடங்கி இருந்தான் கண்விழித்தவள் எழுந்து கண்ணை கசக்கிகொண்டே கீழே போனாள் தூங்கி எழுந்ததில் பயங்கரமாக பசி எடுக்க முதலில் கிச்சன் எங்கிருக்கிறது என்று தான் தேடினாள் தன்னுடன் மல்லுக்கு நிற்கும் வயிற்றை முதலில் சமாதானம் செய்யவேண்டும் அல்லவா!
“பாட்டி, தாரு, நேத்ரா”என்று அழைக்க
“என்னடா நல்லா தூங்கினாயா ?”என்று ஷோபாவில் அமர்ந்தபடி பாட்டி கேட்க
“ஹ்ம்ம் தூங்கினேன் “என்றவள் பாட்டியை கட்டிக்கொண்டு அவர் தோளில் சாய்ந்து தூங்க தொடங்கி விட்டாள்
“என்ன டா இன்னும் தூக்கம் தெரியலையா “
“ஹ்ம்ம் “என்றுமட்டும் சொல்லி துக்கத்தை தொடர்ந்தாள்
“பாட்டி எனக்கு பசிக்குது “
“அச்சோ என் செல்லதுக்கு பசிக்குதா? இரு நான் போய் உனக்கு சாப்பிட கொண்டுவரேன் “என்று அவர் எழ முயற்சிக்க
“பாட்டி நீங்க இப்படியே இருங்க உங்க மேல படுத்து தூங்க நல்லா இருக்கு “என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கலானாள்
“சரி நீங்க தூங்கு ரித்து கண்ணா “என்று தன் பேத்தியை தன் தோல்களில் தூங்க அவளை தட்டிக்கொடுத்தார்.. ரித்து வர்ஷினி தன் பேத்தி என்று அவருக்கு தெரியும் ஆனால் தன் தான் அவளின் பாட்டி என்பது அவளுக்கு தற்போதுக்கு தெரியவண்ணம் பார்த்துக்கொண்டார். அந்த குடுப்பதில் உள்ள அனைவர்க்கும் தெரியும் அவள் சகுந்தலா குணசேகரனின் மகள் என்று ஆனால் தற்போதைக்கு ரித்து வர்ஷினிக்கு இது தெரிய வேண்டாமென்று துருவ் சொன்னதால் அனைவரும் அவன் சொன்னபடியே நடத்துக்கொண்டனர்
குழந்தையாய் இருக்கும் போது அவளை தூக்கி பாராட்டி சீராட்டி வளர்க்கும் பாக்கியம் தான் அவருக்கு கிடைக்க வில்லை இப்போதாவது அவளை கொஞ்சவும் அன்பு காட்டவும் அவருக்கு வாய்ப்புக்கிடைத்துள்ளதே என்று பாட்டியின் மனம் சந்தோஷமடைந்தது
தான் கணவருக்கு பயந்து தன் மகளையும் அவள் குழந்தையும் பார்க்க கூட அவர் முற்படவில்லை கணவருக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயமே அவருக்கு அதிகம்
“அக்கா என்ன இன்னும் தூக்கம் தெரியலையா? “
“ஆமா நேர்த்தி “
“சரி முதல்ல இந்த காபி குடிங்க அப்புறம் தூங்கலாம் “என்று அவளிடம் காபியை நீட்டினாள் நேத்ரா
“என் வயிறு வேற எனக்கு எதிரா தர்ணா பண்ணிட்டு இருக்கு அதுக்கு எதாவது குடுத்து சமாதானம் பண்ணத்தான் சமத்தா கம்முனு போய் படுத்து தூங்கிடும் இதோட நைட் தான் எழுத்துக்கும் “என்றாள் அவள் சொன்னதை கேட்டு நேத்ராவும் பாட்டியும் சிரிக்க தொடங்கிவிட்டனர் பாட்டிக்கு இப்போதுதான் மனம் நிறைந்து இருந்தது
தான் சாவதற்குள் ஒருமுறையாவது தன் பேத்தியை பார்த்துவிட வேண்டும் என்று அவர் வேண்டாத கடவுள் இல்லை இப்போது அவரின் ஆசையை துருவேந்திர பிரதாப் நிறைவேற்றி விட்டிருந்தான் அதுமட்டும் இல்லாது இனி எந்த சூழ்நிலையிலும் ரித்து வர்ஷினி நம்மை விட்டு போகமாட்டாள் என்று அவன் உறுதியளித்த பின்னே பாட்டியின் மனம் நிம்மதியடைந்தது ....அவன் ஒன்றை சொன்னாள் அதை மாற்ற யாராலும் இயலாது என்பதை அனைவரும் அறிவார்கள்...
“பாட்டி உங்க பேரன் எப்பவும் இப்படித்தானா? சரியான சிடுமூஞ்சி எனக்கு இந்த நியூ வெர்ஷன் துருவேந்திர பிரதாப்பை புடிக்கவே இல்லை எப்போ பாரு மூஞ்ச உர்ருனு வச்சிட்டு சுத்திகிட்டு கிடக்குறாரு.. ஓல்ட் வெர்ஷன் பப்பு எப்பவும் சாக்லேட் பாய் எப்பவும் முகத்துல கியூட் ஸ்மைல் இருந்துட்டே இருக்கும் நீங்க அந்த சாக்லேட் பாய்யை வரச்சொல்லுங்க இந்த சிடுமூஞ்சியை பாக்க சகிக்கலை “என்றாள் தூங்கிக்கொண்டே.. இதில் கொடுமை என்னவென்றால் யாரை பற்றி குற்றப்பத்திரிகை வாசிக்கிறாளோ அவனே தன் எதிரில் நிற்பது தெரியாமல் கண்களை மூடிக்கொண்டு மேலும் புகழ்த்துக்கொண்டிருப்பதுதான்
பாட்டி அவளுக்கு சிக்னல் கொடுத்தும் பயனில்லாம் போக “இன்னைக்கு செத்தான் சேகரு “என்று மனதில் நினைத்து கொண்டார் பாட்டி வேற என்ன செய்வது
“என்ன பாட்டி சைலன்ட்டா இருக்கீங்க? “என்று கண்ணை திறக்க அவள் எதிரே பிரதாப் நின்றுகொண்டு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளை எரித்துவிடுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தான் இன்று ஒரு முக்கியமான டீல்லை முடிப்பதற்கு ஆபீஸ் செல்ல தயாராகி கீழே வந்தவன் ரித்து பாட்டியின் மேல் சாய்ந்து கொண்டு வாயாடிக்கொண்டிருப்பதை கேட்டு அங்கே வந்து நின்றான் அதை அறியாமல் அவன் மேலயே குறை சொல்லிக்கொண்டிருந்தாள் வர்ஷா
“இவன் எப்போ வந்தான் எதுல இருந்து கேட்டு தொலச்சானு தெரிலயே இவன் முறைக்குறத பாத்தா பக்கி எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்கும் போலயே “
“பாட்டி உன் பேரன் வந்துருகர்னு சொல்ல வேண்டியதுதானா இப்படி என்ன கொத்துவிட்டு வேடிக்கை பக்குறியே பாட்டி “என்று ஹஸ்கி வாய்ஸ்ல் சொல்ல
‘ஆத்தி இதுக்கு மேல இங்க இருந்த நாம்மா உயிருக்கு சேதாரம் ஆயிடும் எஸ்கேப் ஆகிடு வர்ஷா ‘என்று அவளே அவளுக்கு சொல்ல..
பாட்டி காது அருகில் சென்று ஹஸ்கி வாய்சில் “இவர் எப்போ வந்தார் பாட்டி சொல்லி இருக்கலாம்ல “
“நான் தான் சிக்னேல் குடுத்தேனே நீ தான் அதை கவனிக்காம இருந்துட்டு இப்போ வந்து என்ன சொல்றயே “என்று பாட்டியும் ஹஸ்கி வாய்சில் சொல்ல
சமாளிப்போம் என்று தன்னை தானே சொல்லிக்கொண்டு எழுந்தவள் “என்னவாம்.... “என்று கேட்டபடியே அங்கிருந்து ஓடிவிட்டாள் ...
‘எங்க ஓடினாலும் கடைசியில் என்கிட்டேதான் வந்து சேரனும் அப்போ கவனிச்சிக்குறேன் உன்ன அந்த பப்பு நல்லவனா இல்ல இந்த துருவேந்திர பிரதாப் நல்லவனான்னு அப்போ பாக்கத்தான போற!’என்று மனதில் நினைத்தவனின் முகத்திலும் குறும்புத்தனம் வந்து போக அதை பாட்டியின் கண்களும் தவறாமல் குறித்துக்கொண்டது ......
“இப்போ எஸ்கேப் ஆயிட்டா அப்புறம் மாட்டுவ அப்போ பாத்துக்குறேன் உன்ன “என்றவன் ஆபீஸ் கிளம்ப தயாரானான்
“என்ன துருவ் இன்னைக்குத்தான் வந்த அதுக்குள்ள ஆபீஸ் போயகனுமா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ல “
“இல்ல பாட்டி ஆபீஸ் இன்னைக்கு ஒரு முக்கியமான டீல்ல சைன் பண்ணனும் பாட்டி அந்த டீல்ல முடிச்சே ஆகணும் பாட்டி “
“சரிப்பா அப்போ ரிஷியை அனுப்பு நீ ரெஸ்ட் எடு “
“இல்ல பாட்டி இந்த த்ரீ மந்த்ஸ் ஃபுல்லா ரிஷி கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்லாம எல்லாத்தையும் பாத்துக்கிட்டான் இனி அவனுக்கு ஆபீஸ் டென்ஷன்லாம் வேணாம் பாட்டி எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் “
“அப்படி சொல்லுங்க அண்ணா “
“இனிமேல் ஆம் பிரீ பட்.... நான் வழக்கம் போல அப்டியே ஜாலியா ஊர் சுத்துறவேலையை பாக்குறேன் நமக்கு இந்த ஆபீஸ் ஒர்க் இதெல்லாம் சுத்தமா செட்டே ஆகாது...சாப்பிட்டோமா நல்லா லைப்ப என்ஜோய் பண்ணோமானு இருக்கணும் பாட்டி ”என்று தொப்பென்று ஷோபாவில் விழ
“அவனே இப்போதான் கொஞ்சம் பொறுப்பா இருக்கான் நீயே அவனுக்கு செல்லம் குடுத்து கெடுத்துறத துருவ் “
“பாட்டி அவன் சின்ன பையன் அவன் எப்பவும் போலவே இருக்கட்டும் விடுங்க அவனுக்கு ஏன் இந்த டென்ஷன்லாம் “
“தட்ஸ் மை பிரதர் “என்றவன் அவனை அணைத்தான்
“பாட்டி நைட் பிரண்டோட பார்ட்டி போனும் நான் போய் ரெடி ஆகுறேன் “
“ரிஷி... “என்று பிரதாப் அவனை கண்டிப்புடன் பார்க்க
“டோன்ட் ஒர்ரி அண்ணா நான் ட்ரிங்ஸ் பண்ண மாட்டேன் வாழ்க்கைல ஒரு முறை அந்த கருமத்தை குடிச்சிட்டு நான் உங்ககிட்ட பட்ட அவஸ்தையே போதும் இனி கூல் ட்ரிங்ஸ்ஸா கூட குடிக்க மாட்டேன் டா ஏன் கூல் ட்ரிங்க்ஸ்ஸா குடிக்குற மாதிரி கனவு கூட கணமாட்டேன் டா போதுமா “என்றான் ரிஷி
“தட் குட் “
“பாட்டி நான் கிளம்புறேன் நைட் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகும் நீங்க எனக்காக வெயிட் பண்ண வேணாம் நீங்க சாப்பிட்டு தூங்குங்க “என்று பாட்டியிடம் விடைபெற்று சென்றான்
பிரதாப்பிடம் தப்பித்து ஓடியவளுக்கு நல்லா நல்லா வாசனைகள் மூக்கை துளைக்க வாசம் புடித்துக்கொண்டே கிச்சனுக்கு சென்றாள் “பேசாம கிச்சன்லேயே செட்டில் ஆகிடலாம் போல “என்றவள் மேடையில் அமர்ந்து அங்கு பட்டம்மா செய்துவைத்திருந்த பலகாரங்களை ருசிக்க தொடங்கி இருந்தாள்
“பட்டமா பாட்டி உங்க கையை காட்டுங்க “
“ஏன்ம்மா? “
“காட்டுங்க சொல்றேன் “என்றவள் அவர் கையை பற்றி முத்தமிட்டாள்
“பலகாரம் சமய இருக்கு பாட்டி நான் இவ்ளோ டேஸ்ட்டா சாப்பிட்டதே இல்லை உண்மையா சொல்லனும்னா நான் இதை எல்லாம் சாப்பிட்டதே இல்ல பாட்டிமா சின்ன வயசுல இருந்தே அப்பா தான் என்ன வளத்தது எல்லாம்... அப்பாக்கு எனக்கும் இந்த மாதிரி பலகாரம் எல்லாம் செய்ய தெரியாது பாட்டி ஆன அப்பா சொல்லுவாங்க இந்தியால பெஸ்டிவல் டைம்ல எல்லாரும் விடுங்கள்ல ஸ்வீட்ஸ் அப்புறம் இந்த மாதிரி பலகாரம்லா செய்வாகளாம் அப்பா சொல்லுவாங்க அம்மா எங்க கூட இருந்து இருந்தவளாது அதையெல்லாம் செஞ்சி தந்து இருப்பாங்க அம்மாவும் அப்போல்லாம் எங்க கூட இல்லை “என்றவளின் குரல் அடங்கியது
“பாட்டி உங்களுக்கு ஒன்னு தெரியுமா நான் இங்க இருக்கான்னு என் அப்பாக்கு தெரியவே தெரியாது பொய் சொல்லிட்டுதான் வந்தேன் எவ்ளோ ஆசை ஆசையா சந்தோசமா வந்தேன் தெரியுமா பாட்டிமா ஆன அந்த சந்தோசமல கொஞ்ச நாள்லயே என்ன விட்டு போயிடும்னு கனவுல கூட நினைக்கலை அந்த கடவுள் சந்தோசத்தை குடுத்து அதை அனுபவிக்குறதுக்கு முன்னாடியே என்கிட்ட இருந்து பரிச்சிட்டான் “என்று எதார்த்தமாக அவளையும் அறியாமல் அவள் சொல்ல அதை கேட்டு பட்டம்மா முகம் வாடிப்போனார் அதை பார்த்தவள் அவளையே நொந்துகொண்டாள் வயதானவரை எப்படி மனம் நோகவிட்டுவிட்டோமே என்று
“உங்க கைல அப்படி என்ன மேஜிக் வச்சிருக்கீங்க பாட்டி உங்க கையாள செஞ்ச பலகாரம் எல்லாம் இவ்ளோ டேஸ்ட்டா இருக்கு “என்றாள்
“நல்லா இருக்குதடா? “அந்த வயதானவர் ஆர்வமாய் கேட்க
“என்ன பாட்டி இப்படி கேட்டுட்டீங்க நான் இன்னைல இருந்து உங்க பேன் ஆயிட்டேன்னா பாத்துக்கோங்க.. பாட்டிமா நான் கேட்ட எனக்கும் இதெல்லாம் செஞ்சி தருவீங்களா? “
“அம்மாடி என்ன இப்படி கேட்டுட்ட உனக்கு எப்போ என்ன பலகாரம் வேணும்னாலும் சொல்லு நொடில செஞ்சி குடுத்துடுறேன் “என்றார் குதூகலமாய்
“பட்டு அண்ணிக்கு மட்டும்தான் இந்த கவனிப்பில்லாம்மா? எனக்கு கிடையாதா? அப்போ எனக்கு செஞ்சி கொடுக்கமாட்டிய பட்டு “என்று பட்டம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டு ரிஷி கேட்க
“என் ரிஷி குட்டிக்கு இல்லாததா “என்றவர் ரிஷியின் கன்னத்தை கிள்ளினார்
“அதானே பாத்தேன் என் சமையல் ராணிக்கு எப்பவும் நான்தான் ஸ்பெஷல்”என்றவனுக்கு போட்டியாய் வந்து நின்றனர் தாருவும், நேத்ராவும்
“பட்டு பேபி அப்போ நாங்க ஸ்பெஷல் இல்லையா உனக்கு “என்று மூஞ்சை தொங்கபோட்டுக்கொண்டு இருவரும் நிற்க,
“ஆட என் சின்ன குட்டிங்களும்தான் எனக்கு ஸ்பெஷல் “என்றவர் இருவர் தடையையும் கிள்ளி முத்தமிட்டார்
“பட்டு பேபினா பட்டு பேபி தான் “என்று இருவரும் பட்டம்மாவின் கன்னத்தை எச்சில் செய்தனர்....