ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிரத்தில் உதித்த உறவே..! - கதை திரி

Status
Not open for further replies.

Preetha ravichandran

New member
Wonderland writer
உயிரே 5

ரத்து வர்ஷினி இந்தியாவை நோக்கி பயணமாக தயாரானாள் ரோகித் மனம் இல்லாமல் தான் அனுப்பினான் இதுவரை பழக்கம் இல்லாத நாடு அவளுக்கு பாதுகாப்பாக இருக்குமா? அவள் அங்கு எப்படி சமாளிப்பாள் என மனம் அவள் மேல் கொண்ட அக்கறையால் கவலைகொள்ள அவளோ தன் தாயும் உறவுகளை சந்திக்க போகிறோம் தன்னை பார்த்த அவர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்களா? என்று பல வித உணர்வுகளை தன்னுள்கொண்டு பயணமானான்
இந்த பயணமே அவள் வாழ்வை புரட்டிப்போட போகிறதென்பதை அவள் அப்போது அறியவில்லை அறிந்திருந்தால் இந்த பயணத்தை ஏற்காமலிருந்திருப்பாளோ என்னவோ.. !!

அவளின் இந்த பயணம் அவளுக்கு சொல்ல முடியாத பலவித உணர்வுகளையும், சந்தோஷங்களையும் அவளுக்கு தந்தது ...அவளை ரெஸிவ் செய்ய ராமலிங்கம் ஏர்போர்ட்டில் காத்திருந்தார் ஏர்போர்ட்டில் ராமலிங்கத்தை கண்டறிந்தவள் அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திகொண்டாள்.
நியூயார்க்கில் இருந்து கிளம்பும் போதே ராமலிங்கத்திற்கு கால் செய்து அணைத்து விபரத்தையும் சொன்னவள் இவை அனைத்தும் தன் தந்தைக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சொன்னாள் வர்ஷாவின் அசைக்காக ராமலிங்கம் குணசர்க்காரனிடம் இதைப்பற்றி எதுவும் சொல்ல வில்லை....

வர்ஷாவை ரெஸிவ் செய்ய ராமலிக்கத்துடன் அவர் புதல்வன் நந்தனும் வந்திருந்தான்

“நந்தா ரித்து வர்ஷினி வந்துட்ட “என்று ராமலிங்கம் அவர் புதல்வன் நந்தனிடன் சொல்ல,நந்தன் புன்னகையோடு அவளை வரவேற்றான்
“வெல்கம் வர்ஷினி “என்று தோழமையுடன் வரவேற்க வர்ஷாவும் புன்னகை மாறாத முகத்துடன் அவனுக்கு நன்றி கூறினாள்
“அங்கிள் உங்களை ரொம்ப சிரமப்படுத்திட்டேன் அதுக்காக என்ன மன்னிச்சிடுங்க டாடிக்கு தெரியாம இதல்லாம் பண்ணனும்னா அதுக்கு உங்களோட உதவி தேவைப்பட்டது அதன் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டியதா ஆயிடுச்சி “என்றாள் வர்ஷா
“எனக்கு ஒரு சிரமமும் இல்லை டா வர்ஷா, இந்த உங்க அம்மாவோட அட்ரஸ் “என்று ஒரு காகித துண்டை அவளிடம் நீட்டினார் ராமலிங்கம்
“உனக்கு என்ன உதவி தேவை பட்டாலும் உடனே யோசிக்காம என்கிட்ட கேக்கணும் சரியா “என்றார் ராமலிங்கம்
“சரிங்க அங்கிள் “

“அம்மாடி வர்ஷா எனக்கு உடம்பு முடில நான் வீட்டுக்கு போறேன் உனக்கு துணையாக நந்தா வருவான் அவன் உனக்கு தேவையானதை செய்வான் டா “
“சரிங்க அங்கிள் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க “
“நந்தா வர்ஷாக்கு தேவையா எல்லா உதவியும் அவ கூட இருந்து செஞ்சிக்கோடு “
“சரிப்பா நான் பாத்துக்குறேன் நீங்க வீட்டுக்கு கிளம்புங்க “என்றான் நந்தன்
வர்ஷினிக்கும் நந்தனுக்கும் முன்பே அறிமுகம் உண்டு ஆனால் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை... இந்தியா வருவதற்கு முன் நந்தனின் உதவியால் சில தகவல்களை சேகரிக்க முடிந்தது, இந்தியாவில் கிடைத்த முதல் நட்பு நந்தன் தான்
“வாங்க வர்ஷா நாம கிளம்பலாம் “
“ஓஹோ, இந்த போங்க வாங்க இல்லாம போ வானே கூப்பிடலாமே பிரண்ட்ஸ்குள்ள போர்மாலிட்டீஸ்ல எப்பவும் இருக்க கூடாது “என்றாள் வர்ஷா
“ஹ்ம்ம்ம் ஓகே வர்ஷா இனி நோ போர்மாலிட்டீஸ் “என்று புன்னகைத்தான் நந்தன்
“தட்ஸ் குட் நந்து, நாம இப்போ எங்க போறோம்? “
“உங்க அம்மாவ பாக்க !”என்றதும் வர்ஷாவினுள் சொல்ல முடியாத பல உணர்வுகள் உள்ளுக்குள் படபடப்பை ஏற்படுத்தியது.

‘தன் தாயின் முகம் கூட நினைவில்லை குழந்தைகளுக்கு தாய் தான் அனைவரையும் அறிமுகம் படுத்தவள் இங்கு தாயிடம் தன்னை தானே அரிமுகப்படுத்தி கொள்ளும் பெரும் கொடுமை” அவளுக்கு
நந்து கார் ஒரு வீட்டின் முன் நிற்க வர்ஷா கேள்வியாய் பார்த்தாள், நந்து தலையசைக்க கண்கள் படபடக்க கைகள் நடுங்க கார் கதவை திறந்தவளில் கால்கள் ஓய்ந்து போனது இத்தனை வருட தவம் தன் கண்முன்னே வர போகிறது என்ற ஆனந்தம் ஒருபுறம் தன்னை பார்த்ததும் தன் தாயிக்கு தன் மேல் கோபம் வருமா? என்ற பல சிந்தனைகளில் சிக்கி தவித்தாள் ஒருவேளை தன்னை ஏற்காவிட்டால்!!

அவளின் உணர்வுகளை புரிந்தவனாய் நந்தன் அவள் கைகளை பற்றிக்கொண்டு “வா” வென்று அவளை அழைத்து செல்ல ஒவ்வொரு நிமிடமும் விசித்திரமாய் இருந்தது இதுவரை வாழ்வில் அனுபவிக்காத ஒன்று இவை அனைத்தும் நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்மாவை பார்க்க வேண்டுமென்ற ஏக்கம் இப்போது நெனவாக போகிறது என்ற சந்தோசம் இதோ தன் தாயுடனான முதல் சந்திப்பு ..

கதவுக்கு முன்னால் நின்ற இருவரும் கதவை தட்ட ஒருசில நொடிகளில் கதவு திறக்க பட்டது ஒரு பெண்மணி கதவை திறந்து “நீங்கள் யார்?, உங்களுக்கு யார் வேண்டும்? “
“மிஸஸ். சகுந்தலா குணசேகரன்? “என்று நந்தன் தன் சந்தேகத்தை தெளிவுபடுத்தும் விதமாக கேட்க
“சகுந்தலா குணசேகரன் நான்தான் “என்றார் அந்த பெண்மணி

“அம்ம்மா..... “என்று ரித்து அழைக்க சகுந்தலா ரித்துவை பார்த்து கண் இமைக்காது நின்றார்,பேச வார்த்தையாற்று கண்களில் நீர் பெருக்கெடுக்க தன் மகளை பார்த்தார் சகுந்தலா
“அம்மா “என்று தாயை கண்ணீருடன் அழைக்க
சகுந்தலா இருகைகளையும் நீட்டி அழைக்க தன் தாயிடம் ஒண்றிகொண்டாள் ரித்து இதுவரை கிடைக்காத அரவணைப்பு வாழ்வில் தனக்கு கருத்து தெரிந்தத பின் தாயிடமிருந்து கிடைக்கும் முதல் அணைப்பு மனம் முழுவதும் நிறைந்து சந்தோசத்தின் வெளிபாடாய் கண்களில் வடியும் கண்ணீர்
“அம்மா “
“ரித்து அம்மாவை பாக்க இப்போதான் தோணுச்சா “என்றார் சகுந்தலா

“எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து உன் பாசத்துக்காகவும் அரவணைப்புகவும் ரொம்ப ஏங்கி இருக்கேன்மா அப்பாகிட்ட இதல்லாம் சொல்ல முடியாது சொன்ன அப்பா கஷ்டப்படுவாரோன்னு சொல்ல மாட்டேன்மா “என்று சிறுபிள்ளையாய் அழ அவளை ஆறுதலாய் தட்டிக்கொடுத்தார் சகுந்தலா அப்போதுதான் வெளியே நின்றே பேசிக்கொண்டிருக்கிறோம் என்று உணர இருவரையும் உள்ளே அழைத்து சென்றார்
சகுந்தலாவும் குணசேகரனும் திருமணம் அகி வந்த அதே வீட்டில்தான் இன்று வரை சகுந்தலா வசித்துக்கொண்டிருக்கிறாள் ரித்து பிறந்தது இந்த வீட்டில் தான் குணசேகரனுக்கும் சகுந்தலா இருவருக்குமான காதலின் நினைவுகளும் இங்குதான்
அந்த வீட்டில் குணசேகரன் சகுந்தலா திருமண போட்டோ இருக்க அதை ஆசையாக பார்த்து ரிதுவின் கண்கள் அகலவிரிந்தது
நந்தன் இவர்களை தொல்லை செய்யாமல் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தான்
இருவருக்கும் காபி போட்டு கொண்டுவந்து கையில் கொடுத்தார் சகுந்தலா
கண்களை முடி காபி மனத்தை நுகர்த்தவள் அதில் லயித்துப்போனாள் மெய்மறந்து காபி ருசித்தவள் “அம்மா உங்க பில்டர் காபி சூப்பர்மா என் லைப்ல இப்படி ஒரு காபியை இப்போதான் முதல் முறையா குடிக்குறேன் இப்போ மட்டும் ரோகி இருந்தான் அவ்ளோதான் உங்க காபிகாகவே இந்தியா விட்டு போகமாட்டானு அடம்புடிச்சிருப்பான் “என்றவளை, சகுந்தலா அனு அணுவாய் தன் மகளை ரசித்துக்கொண்டிருந்தாள்

“நந்து தமிழ் நாட்டு பண்பாடு கலாசாரம் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கு எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும் இங்க இருக்க எல்லாத்தையும் சுத்தி காட்டுராய ப்ளீஸ் “என்று ஆர்வமாய் கேட்டாள்
“அதுக்கு என்ன காட்டிட்ட போச்சு “என்றான் நந்தன்
“அப்போ இப்போவே போலாமா “என்று ஆர்வமாய் அவள் கேட்க
“இன்னைக்கு வேணாம் இன்னொருநாள் போலாம் இன்னைக்கு ரெஸ்ட் எடு வர்ஷா “என்றான் அக்கறையுடன்
“அம்மா நீங்களாவது சொல்லுங்கம்மா “என்று அம்மாவை சப்போர்டுக்கு அழைக்க
“தம்பி சொன்ன மாதிரி இன்னொரு நாள் போகலாம் டா “என்றார்

“உங்க அப்பாக்கு இன்னும் என்மேல கோவம் போகலையா? “என வடிய முகத்தோடு கேட்க
“குடியசிக்கிறம் போயிடும் அம்மா நீங்க கவலை படாதீங்க”
“ஏன்டா இப்போகூட உன் அப்பாக்கு என்ன பாக்கணும்னு தோணலைல அவ்ளோ வெறுப்பு, கோபமா என்மேல “என்று கண்கலங்கினார்
“அம்மா ப்ளீஸ் அழாதீங்க நீங்க அழறதை பக்கவா கடல் கடந்து வந்துருக்கேன் !!, என் அம்மா எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் அதன் எனக்கு வேணும் “என்றாள் ரித்து

“ஆன்ட்டி உங்க பொண்ணு இப்போ உங்கள தேடி வந்த மாதிரி அங்கிளும் கூடிய சீக்கிரம் வந்துடுவார் “என்று ஆறுதல் கூறினான் நந்தன்
“சரி நான் கிளம்புறேன் மீட்டிங் இருக்கு “இன்னொரு நாள் வந்து பாக்குறேன் “என்று இருவரிடமும் விடைபெற்று சென்றான் நந்தன்
“அம்மா எனக்கு பசிக்குது “என்று ரித்து கேட்க சகுந்தலாவிற்கு தலைகால் புரியவில்லை “ஐந்து நிமிஷம் இருடா உடனே ரெடி பண்ணிடுறேன் “என்று குதூகலமாய் சமையல் வேலையை துடன்கினார்,
ரித்துவின் தாய் அரக்கப்பரக்க சமையலை செய்து முடித்து “அம்மாடி ரித்து வா சாப்பிடலாம் “
“அம்மா அதுக்குள்ள சமச்சிட்டியா? “
“ஹ்ம்ம் முடிஞ்சாச்சு “
“இவ்ளோ சீக்ரமாவா? “
“என் பொண்ணு என்கிட்ட முதல் தடவையா பசிக்கிதுன்னு கேட்டு இருக்குற அதெப்படி மெதுவா செய்ய முடியும் வாடா நாம சாப்பிடலாம் “
“அம்மா காமகமனு வாசனை வருது “என்று அமர்ந்தவள் சாப்பிட தயாரானாள்
“உனக்கு என்ன புடிக்கும்னு தெரியாது அதன் எல்லாத்தையும் செஞ்சி இருக்கேன் புடிக்கலான சொல்லு டா மாத்திக்குறேன் “
“அம்மா நீ எது செஞ்சாலும் எனக்கு புடிக்கும்மா “என்று உண்ண துடங்கினாள். ரித்து ரசித்து ரசித்து சாப்பிட சகுந்தலாவிற்கு அதீத ஆனந்தம்
“அம்மா எனக்கு ஒரு சந்தேகம்? “
“என்னடா? “
“அப்பாவா பிரிஞ்ச அப்புறம் ஏன் உங்க பாமிலியோட இல்லாம தனியா இருக்கீங்க? “
“ஏன் பெத்தவங்களுக்கும் கூட பொறந்தவங்களுக்கும் நான் உயிரோட இருக்குறதே புடிக்கலை இதுல எங்க அவங்க என்ன சேத்துக்குறது !”
“ஏன் அம்மா அவங்க அவ்ளோ கெட்டவங்கள? “
“கெட்டவங்களாம் இல்லடா அவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க “
“நல்லவங்களா இருந்த உன்ன இப்படி கஷ்ட பாட விட்டு இருப்பாங்களா சொல்லு ரியலி ஐ ஹேட் தேம் “
“அப்டிலாம் சொல்ல கூடாதுடா “
“உண்மையா எனக்கு அவங்க யாரையும் பிடிக்கலைமா!, இனி அவங்க யாரையும் என் லைப்ல பாக்கவே கூடாதுனு நினைக்குறேன்மா, நான் இங்க வரும்போது அவங்க எல்லாரையும் பாக்கலாம்னு எவ்ளோ ஆசை ஆசையா வந்தேன் தெரியுமா??,ஆன இப்போ சொல்லுறேன் என் அம்மாவை இவ்ளோ கஷ்டப்படுத்தினவங்களை என் வாழ்நாள்ல எப்பவுமே நான் பக்கக்கூடாதுமா “என்றாள் வெறுப்புடன்
“உனக்கும் உங்க அப்பாவா மாதிரியே கோவம் வருது ரித்து “என்றார் சகுந்தலா
“அம்மாடி இனிமேல் அம்மாவை விட்டுட்டு நீ போக மாட்ட தானே!!?“என்று ஏக்கத்தோடு கேட்க
“இல்லம்மா இனி எப்பவும் உன்கூட இருப்பேன் அப்பாவையும் கூடிய சீக்கிரம் நம்மகூட இருக்க வைப்பேன் அம்மா “என்று உறுதியாய் கூறினாள் ரித்து வர்ஷினி
இப்படியே நாட்கள் போக நந்தனும் வந்து பார்த்து சென்றான்

**********************
“நேத்ரா நீ ஏன் இந்த வேலைலாம் செய்றா? “என்று தாரு கடிந்துக்கொள்ள,
“தாரு எனக்கு சும்மாவே இருக்க ரொம்ப போர் அடிக்குது இப்போ கொஞ்சம் நடக்க முடித்து அதன் ரூம்லேயே இருக்க போரிங்க இருக்கு “
“அதுக்கு? “
“சமைக்குறேன் “
“உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை எல்லாம்!!? “என்று தாரு சொல்ல நேத்ரா அவளை முறைத்துக்கொண்டு இருந்தாள் “இப்படியே பேசின உனக்கு பாயாசம் ரெடி பண்ண வேண்டி இருக்கும் பாத்துக்கோ “என்று மிரட்டும் பாவனையில் நேத்ரா சொல்ல
“அய்யோ!!!, பாயாசமா வேணாம் சாமி நான் எதுவும் பேசலை “என்று வாயில் கைவைத்து கொண்டாள் தாரு

“என்ன பண்றீங்க “என்று பாட்டி வர
“பாருங்க பாட்டி நான் சமைக்குறதை பாத்து தாரு கிண்டல் பண்ற “என்று பாட்டியிடம் குற்றப்பத்திரிகை வாசித்தாள் நேத்ரா “சாட்சிக்கு திரா, தியா கிட்ட கூட கேளுங்க “என்று திரா ,தியாவையும் சப்போர்டுக்கு அழைத்தாள் நேத்ரா
“எங்க உசுருக்கு எந்த ஆபத்தும் வராத பாத்துக்கோ தாயி “என்று பாட்டி அவர் பங்குங்கு அவளை கிண்டல் செய்தர்
“பாட்டி நீங்களுமா?? “என்று சிணுங்க
“உண்மை கசக்கத்தான் செயும் “என்றார் பாட்டி
“போங்க பாட்டி “
“எம்மாடி இந்த வயசான காலத்துல பாட்டிக்கு பாயாசம் கியாசம் எதுவும் போற்றாத வயசான உடம்பு “என்று மேலும் சீண்டினார் பாட்டி
“பாட்டி நான் அவ்ளோ மோசமலம் சமைக்க மாட்டேன் “
“அதை நாங்க சொல்லணும் “என்ற தாருவை முறைத்துக்கொண்டிருந்தாள் நேத்ரா
“பாட்டி “என்று சிணுங்க அங்கு ஒரே சிரிப்பலை பரவியது கீழே வந்த ரிஷியின் காதுகளில் இவர்களில் சிரிப்பொலி கேக்க சிறிது நேரத்தில் அவனுக்கே சந்தேகம் வந்து விட்டது ‘இது நம்ம விடுத்தான? ‘ என்று கிச்சனை எட்டிப்பார்க்க அணைத்து பெண்களும் அங்குதான் இருந்தார்கள் தியா திரா இருவரும் சமையலறை மேடையில் அமர்திருத்தனர் நேர்த்தி தோசை உற்ற தாரு திரா, தியா இருவருக்கும் ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள் பாட்டி அவர்களுடன் பேசி கொண்டிருந்தாள் கிட்ட தட்ட மூன்று மாதங்கள் கழித்து இப்போதுதான் சகஜமான சூழ்நிலையை அவனால் உணர முடிந்தது அதற்க்கு காரணமான நேத்ரா. அவளுக்கு மனம் ஆயிரம் முறை நன்றி சொல்லியது

எத்தனை பெரிய பேரச்சனைகளையும் சமாளித்துவிடலாம் ஆன குடும்பத்தையும் அதன் பொறுப்புகளையும் பெண்களால் மட்டுமே சமாளிக்க முடிகிறது.
ஒரு பெண் இருந்தால் போதும் வீடே நிறைந்து விடுகிறது அது தாய், தமக்கை, தாரம், பெண் குழந்தை இப்படி எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் சரி அவர்கள் இன்றி விடு என்றும் முழுமை பெறுவதில்லை
பிரச்சனை தீர்க்க மட்டுமே போராடுகிறேன் ஆனால் வீட்டிலிருப்பவர்களின் மனநிலையை மாற்ற அவைகளை மனதில் நிம்மதியை கொண்டுவர என்னால முடிந்திருக்கவில்லை வந்த சில தினங்களில் நேத்ரா இவர்களை மனதளவில் மாற்றிவிட்டாள் என்பது அவனுக்கு நம்பமுபையாத ஒன்றாக இருந்தது ஆனால் உண்மைதான் இவை நேத்ரா வந்த கொஞ்ச நாள்களில் அனைவருடனும் நன்கு ஒட்டிக்கொண்டாள். அனைவரிடத்திலும் கலகலப்பாக பேசுபவள் அவள் இருக்குமிடத்தில் சிரிப்பலைகள் எப்போதும் சூழ்ந்துகொள்ளும்

அவளிடம் இருக்கும் அணைத்து சோகங்களையும் மறந்து மறைத்து மற்றவர்களை சிரிக்க வைக்கும் அவளின் இந்த குணம் ரிஷியை அவளின்பால் வெகுவாய் ஈர்த்தது நேத்ரா வந்த பின் அவன் மனபாரம் பாதி குறைந்து விட்டது போன்றுதான் இருந்தது அவனுக்கு..
 

Preetha ravichandran

New member
Wonderland writer
உயிரே 6


“எங்க என்ன நடக்குது சொன்ன நானும் சிரிப்பேன் இல்லை “என்று சமையலறை கதவில் சாய்த்தபடி மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு நின்றுகொண்டு ரிஷி கேட்க
“நம்ம நேத்ரா திடீர் திடிர்னு விபரீத முடிவையெல்லாம் எடுக்குற அதன் என்னனு விசாரிச்சிட்டு இருக்கோம் “
“விபரீத முடிவ? அப்படி என்ன முடிவு? “
“சமைக்க பெறலாம் “
“அய்யயோ !!!ஏன் நேத்தி உனக்கு இப்படி ஒரு கொலவெறி எங்க மேல எதாவது கோபம் இருந்த நாலு அடி கூட அடிச்சிரு இப்டிலாம் அதிரடியா விபரீத முடியலாம் எடுக்காத எதுவா இருந்தாலும் பேசி தித்துப்போம் சரியா “என்று ரிஷியும் அவன் பங்கிற்கு அவளை கிண்டல் செய்ய அனைவரும் சிரித்துவிட்டனர்
“ரிஷி சார் உங்க டைரில நல்லா நோட் பண்ணி வச்சிக்கோங்க இனிமேல் உங்களுக்கு என் கையாள சமைச்ச சாப்பாடுதான் “என்று மிரட்ட
“அய்யயோ !!! வேணாம் நான் பாவம் “என்று அலறினான் ரிஷி
“நான்தான் சமைப்பேன் “என்று முடிவாக மிரட்டினாள் நேத்ரா

“அது சரி இனி நம்ப தலையெழுத்தை யாரால மாத்த முடியும் எல்லாம் விதி “என்றான் ரிஷி
“பாட்டி பருப்பு எங்க இருக்கு? “
“என்ன பருப்பு நேத்ரா? “
“அது ஒருமாதிரி குட்டி குட்டிய இருக்கும் அப்புறம் ஒரு சைட் பிளாட்டா இருக்கும் பாக்க எல்லோ கலர்ல இருக்கும் அது எங்க இருக்கு? எடுத்துகுடுங்க “
“இவ எந்த பருப்பை சொல்ற ஒருவேளை துவரம் பருப்பை சொல்றலோ? “என்று தாரு சந்தேகமாய் கேட்க
“ஹான் அதன் அதன் அதே பருப்புதான் அது வேணும் எடுத்துக்கொடு தாரு “
“ஆமா அதை ஏன் கேக்குற? “
“ரசம் வைக்கலாம்னு இருக்கேன் அதன் அந்த பருப்பை வேகவெச்ச தான ரசம் வைக்க முடியும் “என்றவளை
“அடிப்பாவி ரசம் வைக்க ஏன் டி துவரம் பருப்பை வேகவைக்கணும்? “
“அப்போ அதை வேகவைச்சி செய்ய கூடாத!!? அப்போ வேற இதை வேகவைச்சி செய்யணும்? “
“அடிப்பாவி ரசத்துக்கு ஏன் டி துவரம் பருப்புலாம் வேகவைக்கணும் சாம்பாருக்கு தான டி துவரம் பருப்புலாம் தேவை. “
“ஓஓஓஓ!! அப்டியா !!நான்கூட துவரம் பருப்பை வேகவச்சிதான் ரசம் வைப்பாங்கனு நினச்சேன் ஈஈஈஈஈஈ”என்று சமாளிக்க
“முதல் உனக்கு சமைக்க தெரியும? தெரியாதா? “என்று அனைவரும் முறைக்க
“ஒரு இன்டர்நேஷனல் குக்கை பார்த்து என்ன கேள்வி கேட்டுட்ட தாரு உனக்கு என் சமையலோட அருமை தெரில போக போக தெரிஞ்சிப்ப நீ “
“அப்படிங்கள மேடம் சரி ரசம் எப்படி வைக்குறதுனு கொஞ்சம் சொல்லுங்க பாப்போம்? “
“ரசம் தானா அதெல்லாம் ஜுஜுபி மேட்டர் “
“அதைத்தான் கேக்குறேன் சொல்லுங்க? “

“அது அது ஹான் “என்று நியாபகம் வந்தவளாய் “கைல கிடைக்குற எல்லா ஐட்டத்தையும் ஒன்ன போட்டு மிக்ஸியில் அரைச்சி தண்ணில கலந்து அப்டியே கேஸ்ல வைக்க வேண்டியதுதான் அப்புறம் முக்கியமான ஒன்னு கேஸ்ஸா பத்தவைக்கணும் அதன் ரொம்ப இம்போர்ட்டண்ட் அப்போதான் ரசம் ரெடி ஆகும் “என்று சொல்ல தீவிரமாய் ரசம் வைக்க தேவையான கையில் கிடைக்கும் பொருள்களை எல்லாம் எடுத்தாள்
நேத்ரா எல்லாரும் சிரிப்பை அடக்கி கொண்டு நிற்க தாருவே தொடர்ந்தாள்

“அப்டிங்களா மேடம் அப்போ இந்த மிளகு, சீரகம், அப்புறம் மிளகாய், பூண்டு, தக்காளி இதெல்லாம் யூஸ் பண்ண கூடாதா ?”
“ச்ச ச்ச அதெல்லாம் போடா கூடாது “என்று முகத்தை அஷ்டகோணலாக்கி சொன்னாள் நேத்ரா
அனைவரும் சிரிப்பு தாங்க முடியாமல் குபீரென்று சிரிக்க தொடங்கி விட்டனர் ரிஷியால் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்க
“ஒரு இன்டர்நேஷனல் குக் பாத்து இப்டிலாம் சிரிச்சி கிண்டல் பண்ண கூடாது என் அருமை உங்களு எல்லாம் தெரியலை அதன் சிரிக்குறிங்க “
“அய்யோ !!பாட்டி என்னால முடில சிரிச்சி சிரிச்சி வயிறுவலிக்குது பாட்டி ப்ளீஸ் அவளை இதுக்கு மேல எதுவும் சொல்ல வேணாம்னு சொல்லுங்க “என்று ரிஷி சிரிக்க
“ரிஷி சார் இன்னைக்கு உங்களுக்காக ஸ்பெஷலா ஒரு ஐட்டம் பண்ண போறேன் “அய்யயோ இதுவேறயா !!”
“அது என்ன ஸ்பெஷல் ஐட்டம்? “என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்க
“கேசரி தான் “
“அதை எப்படி செய்வ நேத்ரா “என்று தாரு கேட்க இப்போ எதை அள்ளி போடபோறாணு தெரிலயே என்று ரிஷி அவள் முகத்தை ஆர்வம் கலந்த மரணபயத்தோடு பார்க்க
“அது ரொம்ப சிம்பிள் தாரு கடாய்ல எண்ணெய் உத்தி முந்திரி திராச்சைலாம் போட்டு நல்லா வறுக்கணும் வெரி இம்போர்ட்டண்ட் கருக விட கூடாது அப்டியே பொன்னிறமா வறுக்கணும் இட்ஸ் வெரி இம்போர்ட்டண்ட் ஓகே நோட் இட் அப்புறம் தண்ணி ஊத்தணும் “
“ஒரு டவுட் இவ்ளோ தண்ணி ஊத்தணும்? “என்று தாரு இடையில் கேட்க

“காச பணமா அள்ளி ஊத்தவேண்டியதுதான் இதுல எதுக்கு கஞ்சத்தனம் , நீ இப்படி குருகுல குருகுல கேள்வி கேட்ட எனக்கு மறந்துடும் “என்றவளை “சரி சரி நான் டிஸ்டர்ப் பண்ணல நீ மேல சொல்லு “என்றாள் தாரு
“தட்ஸ் குட் கேர்ள் “என்றவள் மேலே தொடர்ந்தாள்
“ஆமா இதுல விட்டேன்? “
“வஞ்சனை இல்லாம அள்ளி ஊத்த சொன்னேயே !!”என்று எடுத்து கொடுக்க
“ஹா ஹான்.., அப்புறம் அதுல சக்கரை போடணும் “
“இவ்ளோ போடணும்? என்று தாரு இடைப்புக
“ஹா அதுவா “யோசிப்பதுபோல் பாவனை செய்தவள் “வழக்கம் போல அள்ளி கொட்டிக்கலாம்.. பச்.., நீ டிஸ்டர்ப் பண்ண நான் மரத்துட மாட்டேனா “
“சரி சரி நான் டிஸ்டர்ப் பண்ணல நீ மேல சொல்லு “
“ஹ்ம்ம்.., அப்புறம் மைதா மாவை கொட்டி நல்லா கிளறி விடணும் அப்புறம் கொஞ்சம் நெய் விட்டு இறக்கிடனும் “ஏதோ பெரிய செஃப் அளவிற்கு பில்டப் செய்து சொல்லி முடித்து இல்லாத கலரை தூக்கி விட்டாள் நேத்ரா
அனைவரும் குபீரென்று சிரித்து விட்டனர் “அய்யோ நேத்ரா அதுக்கு பேர் பசை டி “என்று சிரிக்க வயிறு வலியே வந்துவிட்டது அனைவர்க்கும்
“ரிஷி அண்ணா உன்ன காலி பண்ண பிளான் பண்ணிட்டா நேத்ரா “
“அவ கிடக்குற நீங்க மதியம் சாப்பாடுக்கு வந்துடுங்க சார். “
“அய்யோ சாமி ஆளைவிடு இனிமேல் நான் விட்டு பக்கமே தலைவச்சி படுக்க மாட்டேன் என்ன விற்று “என்று விட்டால் போதும் என்று ஓடியே விட்டான் ரிஷி
“ரிஷி சார் சாப்பிட்டு போங்க “என்று நேத்ரா கத்த
“வேணாம் தாயி நான் பட்டினியா கிடந்து செத்தாலும் பரவால்ல இனி வீட்ல பச்சைத்தண்ணியை கூட குடிக்க மாட்டேன் “என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்

**************

“அம்மா எங்கயாவது வெளில கிளம்புறீங்களா ?”
“ஆமாமா பக்கத்துல இருக்க கடைசிவரைக்கும் போய்ட்டு வரணும் “
“குடுங்க நான் போய்ட்டு வரேன்.. “
“வேணாம் டா உனக்கு இந்த இடம் ரொம்ப புதுசு வழி தெரியாம வேற எங்க போய்ட்டா கஷ்டம் “
“அதெல்லாம் கரெக்ட்டா போய்ட்டு வந்துடுவேன் அம்மா நீங்க குடுங்க “
“சரி மா பத்திரமா போய்ட்டு வா “என்று அந்த லிஸ்ட்டை அவளிடம் கொடுத்தார் சகுந்தலா

ரித்துவிற்கு புது இடம் என்பதால் ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே போக தெருவில் சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக விளையாடி கொண்டிருந்தனர் அதை அருகில் சென்று பார்க்க ஆசையாக இருந்தது அவளுக்கு சில பெண் பிள்ளைகள் கட்டம் போட்டு ஒரு காலைத்தூக்கி கொண்டு ஒருகாலால் குதித்து குதித்து விளையாட அவர்கள் அருகில் நின்று அதை வேடிக்கை பார்த்தாள் அந்த பெண் கண்களை மூடிக்கொண்டு இரு கால்களையும் தூரம் வைத்துக்கொண்டு அவளுக்கு நேரெதிரில் இருந்த அந்த பெட்டிக்குள் நடுவே குதித்து நின்றாள் “ரைட்டா “என்று அவள் கேட்க “ரைட்டு “என்று கோரஸாக மாற்ற பெண்கள் சொல்லினர் இதே போல் அடுத்த பெட்டிக்கு அவள் தாவ அதே போல் “ரைட்டா “என்று கேட்டாள் மற்றகிவர்கள் “ரைட்டு “என்று சொல்ல அவள் அடுத்த பெட்டிக்கு தாவினால்இப்போது பெட்டிக்கு நடுவே நிற்காமல் அந்த பெட்டியின் வரையப்பட்டிருந்த கோட்டில் கால் வைத்துவிட்டு “ரைட்டா “என்று கேட்க “வ்ராங்கே”என்று துள்ளி குதித்து கத்தினார் மாற்ற சிறுமிகள்

“என்னையும் உங்க விளையாட்டுல செத்துப்பிங்களா ?என்று ரித்து அவர்களிடம் கேட்க

அனைவரும் பலமாய் யோசித்து “சரி வாங்க சேத்துக்குறோம் “என்றனர் இப்போது ரித்துவின் முறை அந்த பெட்டிக்கு நேர் எதிர் நின்றவள் கண்களை மூடியபடி முதல் பெட்டியில் குதித்தல் “ரைட்டா “ என்று கேட்க “ரைட்டு “என்று கோரஸாக சொன்னார் அனைவரும் .. அடுத்த பெட்டில் குதிக்க “ரைட்டா “என்று கேட்க “ரைட்டு “என்றனர் அனைவரும் “மூன்றாம் பெட்டியில் குதிக்க “ரைட்டா “என்றாள் “ரைட்டு “என்றனர் அனைவரும் “ஐ நான் வின் பண்ணிட்டேன்” என்று குதித்தாள் ரித்து சிறிது நேரம் விளையாடி விட்டு அங்கிருந்து விடைபெற்றாள் இப்படியே போகும் வழி எல்லாம் வேடிக்கை பார்த்தும் விளையாடிக்கொண்டும் சென்றவள் ஒருவழியாய் கடையை சென்றடைந்தாள் லிஸ்டில் இருந்த சாமான்களை எல்லாம் வாங்கிக்கொண்டு நடந்தவளை எல்லாரும் விசித்திரமாக பார்த்தார்கள் ‘யார் இந்த பெண் பார்க்க வெள்ளக்கிக்காரி போல் இருக்கிறாள் ஆனால் தமிழ் நாட்டுக்கே உரித்தான கலையான முகம்’ என்று அவளை ஊடுருவிய சென்றது அணைத்து கண்களும்...
வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் வழியில் ஒரே ஆரவாரத்தோடு கூட்டமா நின்றிருந்தார்கள் அங்கு ஏதோ சரி இல்லை என்பது மட்டும் அவளுக்கு நன்றாக புரிந்தது என்னவென்று பார்க்கலாமென்று அருகில் போக போக “திக் திக்”என்றிருந்தது அவளுக்கு ...

கூட்டத்திற்கு அருகில் சென்றவள் அதிர்ந்தே போனாள் அங்கு பல பேர் சேர்த்து ஒருவனை அடித்துக்கொண்டிருந்தார்கள் அதை பார்த்து ஆத்திரமான ரித்து கூட்டத்தை விலகினால் “ச்சை என்ன மனிஷன்கயா நீங்களா மிருகத்தை விட மோசமான பிறவிங்க இருக்கீங்க ச்சை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லமா எப்படி உங்கள இப்படி நடந்துக்க முடித்து அதுவும் மனநலம் சரி இல்லாதவங்க கிட்ட உங்க எல்லாரையும் நான் சும்மா விட மாட்டேன் ஐ கால் தி போலீஸ் “என்று போனினை எடுக்க
போலீஸ் என்றதுமே பாதி கூட்டம் நைசாக நழுவிவிட்டது மிதி இருந்த சிலர் “என்ன போலீஸ் கிலீஸ்னு சொல்லிட்டு இருக்கிங்க அவன் என்ன பண்ணனும் தெரியுமா? “
“முதல் மரியாதையா பேசு அவர் என்ன உன் விட்டு வேலைக்காரனா அவன் இவன் சொல்ற உன் விட்டு வேலைக்காரனை கூட அவன் இவனும் சொல்ற அதிகாரம் உனக்கு இல்லை.”

“சும்மா கத்தாதம்மா, ஹோட்டல்லா எல்லாரும் சாப்பிடும்போது உள்ள உள்ள போய் எல்லாரையும் தொல்லை பண்றன் எவ்ளோ அடிச்சாலும் அங்கேயே வந்து நிக்குறான் “என்று ஒருவன் சொல்ல அமைதியாய் அவனை அருகில் அழைத்தவள் ப்ளீர்ரென்று கன்னத்தில் ஒரு அறைவிட்டாள் அந்த அறையிலே தலை சுற்றி கிறுகிறுவென்றனது அவனுக்கு “பல்லை ஒடச்சிருவேன் ராஸ்கல் இங்க இருக்குறவங்களை கொலை பண்ணற, இல்லை கொள்ளையடிச்சாரா, இல்லை உன் பொண்ணு கையை புடிச்சி இழுதற சொல்லு “என்று பயங்கர கோபத்தோடு கேட்க
“இல்லை “என்றான் அந்த ஹோட்டல் முதலாளி அப்புறம் என்ன டாஷ்க்குடா இவர் மேல கை வச்ச ஒருத்தன் வயித்து பசிக்காக தானா இங்க வந்து நின்னான் ஒன்னு உங்கிட்ட இருக்கறத கூடு இல்லையா எதுவும் இல்லனு நல்லத்தனமா சொல்லி அனுப்பி விட்டு இருக்கணும் அத விட்டுட்டு அடிக்குற ராஸ்கல் “
“நீங்க எல்லாம் மனிஷா ஜென்மமோ ச்சை வாயில்லா ஜீவனுக்கு இருக்க மனசு கூட உங்களுக்கெல்லாம் இல்லாம போச்சி... ஒரு வேலை சோறு போடுறதால உன் சொத்து கொறஞ்சி போச்சா என்ன “தன் வாய்க்கு வந்ததெல்லாம் கேட்டவள் அவனை அற்பபுழுவாய் பார்த்தாள்

தனக்கு பின்னால் இவர்களுக்கு பயந்து நிற்கும் பாதிக்கப்பட்டவனை கையை பற்றி அழைத்து வந்தாள் “உங்களுக்கு பசிக்குதா? “என்று அவனிடம் கேக்க “ஆம் “என்று பலமாய் தலையசைத்தான் அவன்
“உங்க பேரென்ன? “என்று அவள் கேட்க அவன் எதுவுமே பேசாமல் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்

அருகில் இருக்கும் ஒரு கடையில் அவனுக்கு உணவு வாங்கிக்கொடுத்து அவனை சாப்பிட வைத்தவள் அவனுக்கு அடிபட்ட இடத்தில் மருந்து வாங்கி பூசிவிட்டாள் அவனை இப்படியே விட்டு செல்ல மனமின்றி சிலரிடம் விசாரித்து போலீஸ் ஸ்டேஷன்க்கு அழைத்து சென்றாள் ரித்து

“சார் என் பேர் ரித்து வர்ஷினி. இவர் மனநல பாதிக்கப்பட்டு இருக்காரு சார் இவரை அவர் குடுப்பதுகிட்ட செக்கனும். “
“கம்பளைண்ட் எழுதி கூடுமா. “
“சரிங்க சார் “என்றவள் கம்பளைண்ட் எழுதி கொடுத்தாள்
“சார் எப்போ சார் இவங்க பேமிலி கண்டுபுடிப்பிங்க? “
“கூடிய சீக்கிரம் “என்றவரின் வார்த்தையின் நம்பிக்கை துளியும் அவளுக்கு வரவில்லை இவர்கள் எல்லாம் இப்படித்தானா என்ற சலிப்புதான் வந்தது இந்த கம்பளைண்ட் ஏற்றுக்கொள்ள படுமா என்பது கூட சந்தேகம்தான் அவளுக்கு
“சார் இவங்களை பாதுகாப்பான இடத்துல விடணும் “
“எதாவது ஹோம்லா செத்து விட்டுடலாம்”என்றார் அதிகாரி அப்படி சேர்க்க அவள் மனம் உடன்படவில்லை

“சார் நீங்க இவரோட பேமிலியை கண்டுபுடிக்குற வரைக்கும் இவர் என் பாதுகாப்புலயே இருக்கட்டுமே? அதுக்கு நீங்க அனுமதி தரமுடியுமா ?”என்றாள் ரித்து
“வயசு பொண்ணு எப்படிம்மா வயசுப்பையனை வச்சிக்க முடியும் “
”முடியும் சார் உங்களோட பெர்மிஸ்ஸின் இருந்த போதும் “
“சரி அவங்க பேமிலியை கண்டுபுடிக்குற வரைக்கும் இந்த பையனை உன் பாதுகாப்புலயே வச்சிக்கோமா எதாவது விவரம் தெரிஞ்ச உன்னக்கு இன்போர்ம் பண்றேன் “
“ஓகே சார் “என்றவள் அவனை கையோடு வீட்டிற்கு அழைத்து சென்றாள்

தாயிடம் நடந்ததை சொன்னாள் “அம்மா இவங்களும் நம்ம கூடவே தங்கிக்கட்டுமே ப்ளீஸ் மா “என்றவளை விழி அகலாது பார்த்தார் தன் பெண்ணின் இச்செயலை மெச்சிக்கொண்டார்
“உனக்கு ஓகேனா எனக்கும் ஓகேதான் “என்றார் சகுந்தலா தாயின் சம்மதத்தை கேட்டு குதூகலித்தல் ரித்து
“அம்மா முதல்ல இவங்களுக்கு பேர் வைக்கணும் ஒரு நல்லா பெர சொல்லுங்க “
“ஹ்ம்ம்ம் பப்பு வைக்கலாமா? “
“ஹ்ம்ம்ம் வைக்கலாமே “
“பப்பு என் அண்ணா பையன் பேர் உன் மாமா பையனோட பேர் அவன்னை எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும் அவ்ளோ செல்லம் அவன்தான் வீட்டுக்கு முத்த பிள்ளை இவனை பார்த்தது எனக்கு பப்பு நியாபகம் வந்துடுச்சி இந்நேரம் சிங்கக்குட்டி மாதிரி வளந்து இருப்பான் “என்றார் கண்களில் பூரிப்போடு
“நாம பப்புனே வைக்கலாம்மா “என்றவள் அவனை பப்பு என்றழைத்தாள்....

**********************

மின்னல் வேகத்தில் வந்த அந்த காரிலிருந்து கையில் கன்னுடன் இறங்கியவன் கொலைவெறியோடு உள்ளே சென்றான் காட்ஸ் அனைவரும் அவனை பின்தொடர்ந்தனர் “என்ன எதாவது சொன்னானா? “என்று அங்கிருந்த தன்னுடைய ஆள்களிடம் விசாரித்தவன் எவ்வளவு அடித்தாலும் எதுவும் சொல்லவில்லை என்று அவன் ஆட்கள் சொல்ல தனக்கு எதிரே கட்டிப்போட்டு போட்டிருத்தவன் நெற்றியில் கன்னை வைத்து அழுத்தம் கொடுக்க

“ரிஷி ப்ளீஸ் என்ன நம்பு நான் உண்மையிலே எதுவும் பண்ணலை “என்று ரிஷியின் எதிரில் கைகளைகட்டியபடி அமர்த்திருந்தவன் மரண பீதியில் கெஞ்ச
“இதை நான் நம்பணுமா? “என்று கன்னை இன்னும் அழுத்தம் கொடுக்க “ ரிப்பரை லைட்டா பிரஸ் பண்ண போதும் உன் தலைலா புல்லட் சத்தமில்லாம இறங்கிடும் நீ மேல்லோகம் போயிடுவ என்ன பண்ணவா!!? “
“நம்பு ரிஷி நான் உங்க அண்ணனை பழிவாங்கணும்னு நினைச்சது உண்மைதான் ஆன இப்போ நடக்குறதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ரிஷி துருவேந்திர பிரசாத்தை நெருங்குற அளவுக்கு எனக்கு தைரியமும் இல்லை பலமும் இல்லை என்னை நம்பு “என்று மரண பீதியில் அழ
“இவனுக்கு என் அண்ணனின் நிழலை கூட தேட தெரியாம் இல்லை என்பதை உணர்ந்தவன் கன்னை கீழே இறக்கினான் ரிஷி
“ரிஷி என்னாச்சி? “என்று பி ஏ ராஜேஷ் கேட்க
“இவன் கண்டிப்பா செஞ்சி இருக்க மாட்டேன் இவனுக்கு அவ்ளோ தைரியம் இல்லை ராஜேஷ் இவன் ஒரு புள்ள பூச்சி “
“என்கிட்ட கண்ணாமூச்சி விளையாடு விளையாடுறவன் யாருனு கண்டு புடிக்குறேன் “என்று கொலைவெறியோடு சொன்னவனை அனைவரும் கண்களில் பயத்தோடு பார்த்தனர்

“காட்ஸ் டிஸ்போஸ் ஹிம் “என்றவனின் கட்டளையை ஏற்றவர்கள் கட்டிப்போட்டு இருந்தவனை கட்டவிழ்த்து வெளியே தள்ளினார் காட்ஸ்...
ரிஷி ஆழ்ந்த சிந்தனையில் இருக்க “என்ன பாஸ் யோசனையில் இருக்கீங்க? “என்று ராஜேஷ் கேட்க
“என் யூகம் சரியா இருந்த அந்த அச்சிடேன்ட்க்கும் என் அண்ணா காணாம போனதுலயும் ஒரு பொண்ணு சம்மந்த பட்டு இருக்கணும் “என்றான் ஊர்ஜிதமாய்
“எப்படி பாஸ் சொல்றிங்க? “
“போக போக உனக்கே தெரியும். “என்றான் ரிஷி..

கன்னை பின்பக்கம் ஷர்டுக்கு உள்ளே சொருகியவன் அங்கிருந்து புறப்பட்டான்..
 

Preetha ravichandran

New member
Wonderland writer
உயிரே 7


தனக்கு இருக்கும் சந்தேகத்தை திலீபன் அண்ணனிடம் தெரியப்படுத்த நினைத்தவன் தீபனுக்கு கால் செய்தான் “ஹலோ அண்ணா “
“சொல்லு ரிஷி “
“அண்ணா எனக்கு ஒருத்தரோட டீடெயில்ஸ் வேணும் இப்போ அவங்க எங்க இருக்காங்க என்ன பண்றங்கனு ஒன்னு விடாம எல்லா இன்போர்மேஷனும் தெரியணும் “என்று பீடிகையோடு ரிஷி சொல்ல
“நம்ளளோட கேஸ்க்கு சம்மந்தப்பட்டவங்கள? “என்று திலீபன் கேட்டான்
“என்னோட சந்தேகம் சரியானதுனா நாம துருவ் அண்ணாவை கூடிய சீக்கிரம் கண்டுபுடிச்சிடலாம் அண்ணா “
“சரி யாருனு சொல்லு ரிஷி? “
“ரக்ஷிதா. ரக்ஷிதா போட்டோ அண்ட் டீடெயில்ஸ் உடனே உங்களுக்கு அனுப்புறேன் அண்ணா “
“சரி ரிஷி நீ அனுப்பு நான் நீ கேட்டதை உனக்கு அனுப்புறேன் “
“தேங்க்ஸ் அண்ணா “என்றவன் நேராக வீட்டிற்கு சென்றான்
ரிஷி உள்ளே சென்றதும் ஆதிரா, ஆதியா இருவரும் காலைக்கட்டிக்கொண்டனர் இருவரையும் தூக்கியவன் ஷோபாவில் அமர்ந்தான் “பாட்டி, தாரு அத்தை, நேர்த்தி சித்திலாம் எங்க டா? “என்று அவனையும் அறியாமல் நேர்த்தியை தன் மனைவியின் ஸ்தானத்தில் சொன்னான் ரிஷி அவனையும் அறியாமல் வந்த வார்த்தையை அவன் கவனிக்க வில்லை
“உள்ள இருக்காங்க சித்தப்பா “என்றனர் இருவரும்
”என் பட்டு குட்டிஸ் சாப்டாச்சா? “
“சபித்தோம் சித்தப்பா “என்று மழலை மொழியில் இருவரும் சொல்ல.. பாட்டியிடம் இருவரையும் விட்டுவிட்டு ரிஷி நேத்ராவை பார்க்க அவள் அறைக்கு சென்றான்

“ஒய் நேர்த்தி இப்போ கால் வலி எப்படி இருக்கு? “
“பரவால்ல ரிஷி சார் நடக்க முடியுது “
“சரி இந்த “என்று ரெண்டு பைகளை அவளிடம் நீட்டினான்
”என்ன சார் இது? “
“ஏன் கைல வாங்கி பாக்க மாட்டிங்களா மேடம் “என்று முறைக்க
“சரி சரி அதுக்கு ஏன் இப்படி கண்ணை காட்டி பயமுறுத்துறீங்க ?”என்றவள் இரண்டு பையையும் வாங்கி பார்க்க ஒன்றில் செல்போன் மற்றொன்றில் அவளுக்கான டிரஸ்களும் இருந்தது “

“ஏன் சார் வின் செலவு “என்றவளை முறைதான் ரிஷி
“சும்மா சும்மா மொறைக்காதீங்க “என்று அவள் முணுமுணுக்க
“என்கிட்ட இருக்றதே போதும் ரிஷி சார் எதுக்கு வீணா இதெல்லாம்? “
“வாங்கணும்னு தோணுச்சு வாங்கிட்டு வந்தேன் “அன்று அவள் பாக் பார்க்கும் போது நல்லா உடைகள் ஏதும் இல்லை அதனால் வாங்கி வந்தேன்னு சொன்ன கஷ்ட படுவாள் என்று மாத்தி சொன்னான்
இன்னைக்கு செக்கப் போகணும் நியாபகம் இருக்க? “என்று கேட்டான்
“கால் சரி ஆயிடுச்சி ரிஷி சார் செக்கப்லாம் வேண்டாம் சார் ப்ளீஸ் “
“நோ... இன்னைக்கு போயே ஆகணும் போய் ரெடி ஆகு “என்றான் கட்டளையாக
“ரிஷி சார் வேணாமே ப்ளீஸ் “
“பிச்சிடுவேன் போய் ரெடி ஆகு”என்று மிரட்ட
“சரி போறேன் “என்றாள் சலிப்பாக

“நேர்த்தி இன்னைக்கு வாங்கிட்டு வந்த டிரஸ்லா இருந்து ஏதாவது போட்டுட்டு வாயேன் “
“சார் எல்லாம் விலை அதிகமான டிரஸ்ஸா இருக்கே? “

“ஒழுங்கா அதை போட்டுடுவா “இவகிட்ட நல்லத்தனமா சொன்ன எதையும் செய்யமாட்டா போல

நேத்ராவை சாதாரண உடையில் தான் ரிஷி பார்த்திருக்கிறான் இன்று அவளுக்காக உடைகள் வாங்கும் போது அவனுக்கு ஆர்வமாக இருந்தது அவளை இந்த உடையில் பார்க்க வேண்டுமென்று சும்மா சொன்னாள் செய்யமாட்டாள் என்றுதான் ஹாஸ்பிடலுக்கு போகவேண்டும் என்று கூறினான் அதுமட்டும் இல்லாது அவள் கால் முவதுமாக சரியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்

அவன் வங்கி வந்த டிசைனர் சேலையை கட்டிக்கொண்டு வந்தவளை விழியாகலாது பார்க்க ‘இவளை மிரட்டித்தான் வழிக்கு கொண்டுவரனும் போல ரிஷி உன் பாடுதான் ரொம்ப கஷ்டம் ‘என்று தனக்குள்ளே புலம்பினான்
“டேய் பாத்துடா ரொம்ப வழியுது வாய்ல ஈ போறதுகூட தெரியாம வாயப்பொளந்துட்டு நிக்குறாயே மனதை வாங்காத டா “என்று தாரு கிண்டல் செய்ய
“ஈஈஈ “
“பல்லைக்கடினதெல்லாம் போதும் கிளம்பு “என்றவளை “வாயாடி வந்து கவனிச்சிக்குறேன் உன்னை “

“நேர்த்தி கிளம்பலாமா? “
“ரிஷி சார் கால்தான் சரி ஆயிடுச்சில்ல அப்புறம் ஏன் ஹாஸ்பிடல் வேணாமே ப்ளீஸ் “என்னவளை
“நேர்த்தி அடம் புடிக்காம ஒழுங்கா வா “
“சரி அடலீஸ்ட் இந்த சேலையை மட்டுமது மாத்திக்குறேன் ஹாஸ்பிடலுக்கு ஏன் இவ்ளோ கிராண்ட் சேலை... “
“நேத்ரா அழகா இருக்கு மாத்த வேணாம் இப்டியே போ என் கண்ணே பட்டுடும் போல அவ்ளோ அழகா இருக்க டி “என்றாள் தாரு
“ஆமா நேத்ரா என் கண்னே பட்டுடும் போல “என்ற பாட்டி அவளுக்கு திருஷ்டி சுத்தினர்
“சார் ப்ளீஸ் இந்த சேலையை மட்டுமது மதிக்குறேனே “என்று ரிஷிக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்க
“அதெல்லாம் முடியாது ஏற்கனவே டைம் ஆயிடுச்சி வா போலாம் “என்று அவளை விடாப்பிடியாய் அழைத்து சென்றான்

நேத்ராவை டாக்டரிடம் காட்டா “இனி பயப்பட எதுவும் இல்லை” என்று டாக்டர் சொன்ன பின் தான் ரிஷிக்கு கொஞ்சம் நிம்மதி ஆனாது மருத்துவமனையிலிருந்து வரும் போது நேத்ரா ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலே வர ‘அப்படி என்ன யோசிக்கிறாள்?‘என்று ரிஷி குழம்பினான்
“நேர்த்தி “என்று அவளை அழைக்க அவன் சிந்தனை கலையாது இருக்க
“நேர்த்தி.. “என்று அவளை மீண்டும் சத்தமாக அழைத்தான் அவன் அழைப்பில்நிகழ்விற்கு வந்தவள்
“என்ன சார்? “
“நான் கூப்பிட்டது கூட கவனிக்காம அப்படி என்ன யோசனை பண்ணிட்டு இருக்க ?”
“இப்போ என்னோட கால் சார் ஆயிடுச்சி இல்லையா இனிமேல் என்னால என்னை பாத்துக்க முடியும்ல.. என்ன ஒரு நல்லா ஹாஸ்டல செத்துவிடுறிங்களா? “என்று நேத்ரா கேட்க அவள் போவதை பற்றி அவன் துளியும் யோசிக்க வில்லை யோசிக்க விருப்பமும் இல்லை அவன் எப்போதும் தன்னுடன்தான் இருப்பாள் என நினைத்திருந்தான் ஆனால் இப்போது அவள் இப்படி கேட்டது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது அந்த கோபம் அவளிடம் நேராக காட்டமுடியாமல் காரின் வேகத்தில் கட்டினான் கார் அதீத வேகமாய் பறந்தது

“நாம தப்பா என்ன கேட்டோம் எப்டின்னாலும் போகத்தானே வேண்டும் அதை இப்போது கேட்டேன் அது தப்பா? “என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டாள்
தெரியாமல் கூட அவன் இவள் புறம் திரும்ப வில்லை அவனை கூப்பிட்டு கேட்கவும் பயமாக இருந்தது அவளுக்கு, இருந்தாலும் தையிரியத்தை வரவழைத்துக்கொண்டு “ சார் “என்று அழைத்தாள். அவள் அழைப்பதை தெரிந்தே வேண்டுமென்றே வேகத்தை கூட்டினான் அவன்
“சார் ப்ளீஸ் பொறுமையா போங்க பயமா இருக்கு “என்றாள் அவன் எதையும் காதில் வாங்கவில்லை காதில் வாங்கும் நிலையிலும் இப்போது அவன் இல்லை
“சார் ப்ளீஸ் “என்றவள் அவன் நிகழ்விற்கு கொண்டுவரும் பொருட்டு அவன் கையை பிடிக்க அவன் சட்டென பிரேக் போட்டு அவளை இழுத்து அணைத்துக்கொண்டு சிறுபிள்ளையாய் கெஞ்ச துடங்கினான்
“நேர்த்தி ப்ளீஸ் அண்ணனோட இந்த தற்காலிக பிரிவையே என்னால தாங்கிக்க முடில நீயும் என்ன விட்டு போயிடாத ப்ளீஸ் நேர்த்தி “என்று அவளிடம் மேலும் ஒன்றினன்...

ரிஷியின் இந்த எதிர்பாராத அணைப்பில் சர்வமும் அடிபோனது நேத்ராவிற்கு ரிஷியை எப்படி சமாதான படுத்துவது என்று தெரியாமல் முழித்தாள் நேத்ரா”எத்தனை நாளைக்கு நான் இங்கேயே இருந்திட முடியும் ரிஷி சார் ஏன் புரிஞ்சிக்காம சின்ன குழந்தை மாதிரி பண்றீங்க ?”
“எப்பவும் நீ இங்கதான் இருக்கணும் “என்றான் சிறுபிள்ளையாய்
“ப்ளீஸ் நேர்த்தி, என்னைவிட்டு எங்கயும் போகமாட்டா தானே!?”
“சொல்லு நேர்த்தி “
இப்போதைக்கு எதையாவது சொல்லி சமாளிப்போம் “நான் எங்கயும் போகல ரிஷி சார் “என்றாள்
“ப்ராமிஸ்ஸா? “என்றவனை பார்த்து புன்னகைத்தவள்
“ஹ்ம்ம் ப்ரோமிஸ் நான் எங்கயும் போகலை போதுமா. “என்றாள் உறுதியாய் அதன் பின்னே அவன் அவளைவிட்டு விலகினான். அவனின் இந்த தவிப்பிற்கு காரணம்தான் புரியவில்லை அவளுக்கு ஏன் அவனிடம் கூட இந்த கேள்விக்கு பதில் இல்லை.
‘தன் அண்ணனுக்காக சிங்கமாய் கர்ஜிக்கும் நாம் இவளிடத்தில் மட்டும் சிறுபிள்ளையாய் மாறி இவள் அருகாமையை வேண்டிநிற்கிறோமே!’ என்றிருந்தது அவனுக்கு

“எப்படியோ இப்போதைக்கு சம்மதிக்க வச்சாச்சு “என்று குதூகலமாய் வண்டியை ஓடினான் இருவரும் வீட்டிற்கு வந்தனர்

திலீபனிடமிருந்து போன் வர ரிஷி அவன் அறைக்கு சென்றான் “சொல்லுங்க அண்ணா நான் கேட்ட டீடெயில்ஸ்லாம் கிடைச்சிடுச்சா? “
“அது விஷயமாத்தான் கால் பண்ணேன் ரிஷி “
“நீ சொன்ன பொண்ணோட நம்பர் ட்ராக் பண்ணதுல அது மும்பைல இருக்கிறதா. காட்டுது ரிஷி “
“அண்ணா அவங்க இப்போ எங்க இருக்காங்களோ அந்த அட்ரஸ்ஸா ட்ராக் பண்ண முடியுமா “
“முடியும் “
“சரி அப்போ அவங்க இருக்க அட்ரஸ் அண்ட் அவங்க கூட யார் யாருலாம் இருக்காங்க..?, அவங்க அங்கதான் இருக்கங்குறதுக்கான ப்ரூப் வேணும்.“
“சரி ரிஷி “என்று போனை வைத்தான் அடுத்த ஐந்து நிமிடத்தில் திலீபன் மீண்டும் போன் செய்ய அதை அட்டென்ட் செய்தான்
“ரிஷி மும்பைல த்ரீ மந்த்ஸ்க்கு முன்னாடி ஒரு ஹோட்டல செக்இன் பண்ணி இருக்க அவளை பாக்க அவ பாய் பிரண்ட் அகிலேஷ்னு ஒருத்தன் அப்போ அப்போ வருவனாம் அவ அங்கதான் தங்கி இருக்குறதுக்கான எவிடென்ஸ் எல்லாம் உனக்கு மெயில் பண்ணி இருக்கேன் இன்னும் சில எவிடென்ஸும் உனக்கு மெயில் பண்ணி இருக்கேன் “என்று ரிஷி கேட்ட தகவல்களை அவனுக்கு தெரிவித்தான் திலீபன்
“தேங்க்ஸ் அண்ணா இனிமேல் நான் பாத்துக்கிறேன் “
“சரி ரிஷி பாய் “

ரிஷி பலத்த சிந்தனையில் இருக்க நேத்ரா காபி எடுத்துக்கொண்டு வந்தாள் “என்ன சார் எதுவும் பிரச்சனையா? “அவளின் குரலில் நிகழ்வுக்கு வந்தவன்
“நத்திங் நேர்த்தி “என்றான்
“ஏன் சார் என்கிட்ட ஷேர் பண்ண கூடாதா ப்ரோப்லேம? “
“அப்டிலாம் இல்லடா எனக்கு இருக்க டென்ஷனை நீ தேவை இல்லாம உன் மைண்ட்ல ஏத்திக்க வேண்டாம் நீ எந்த டென்ஷனும் இல்லாம ஜாலியா இரு அதுபோதும் “
“ஹ்ம்ம் சரி ரிஷி சார் “

************

பப்புவை குழந்தையாய் பாவித்து அவனை தாயை போல் அன்புகாட்டி பப்புவை அவள் அன்பில் திளைக்கவைத்துக்கொண்டிருத்தள் வர்ஷா முன்பு இருந்ததை விட இப்போது அவன் பேச்சிலும் நடவடிக்கையிலும் நல்ல மாற்றம் இருந்தது வர்ஷாவும் அதை நன்கு கவனித்தாள் பப்புக்கு முறையான சிகிச்சை அளித்தாள் அவன் முற்றிலும் குணமாகிவிட வாய்ப்புகள் அதிகம் என்று நினைத்த வர்ஷா அதற்கான வேலைகளை செய்ய துட்டாங்க நினைத்தாள் இப்போதெல்லாம் பப்புவும் வர்ஷாவுடன் நன்கு ஒட்டிக்கொண்டான்

“பப்பு உங்களுக்கு சாப்பாடு கொண்டுவந்துருக்கேன் இங்க வாங்க சாப்பிடலாம் “என்று அவள் கூப்பிட உடனே பப்பு அவள் அருகில் வந்து அமர்ந்தான் “இந்தக சமத்து பாப்பாவா சாப்பிடுங்க பாப்போம் “என்று அவள் சாப்பாட்டை அவனிடம் நீட்ட அவனோ வாங்கமாட்டேன் என்று முகத்தை திருப்பிக்கொண்டான்
“என்னாச்சி பப்பு குட்டிக்கு ஏன் சாப்பாடு வேணாமாம்? சரி நான் ஊட்டி விடட்டுமா? “என்றதும் அவன் ஆர்வமாய் திரும்பி சாப்பிட தயாராரான் புன்னகையோடு அவனுக்கு ஊட்டிவிட்டாள் வர்ஷா

“அம்மா நாளைக்கு நந்தாவை வர சொல்லி பப்புவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்னு ஈருக்கேன்மா நீங்க என்ன சொல்றிங்க? “
“தரலாமா போய்டுவா டா “
“சரிம்மா “என்றவள் நந்தனுக்கு கால் செய்து விஷயத்தை சொல்லி நாளை வருமாறு அழைத்தாள் பப்பு குணமாகி விடுவான் என்ற சிந்தனையே ஒருவித சந்தோசத்தை கொடுத்தது அவளுக்கு அவள் சிந்தனையை கலைக்கும் வகையில் ரோகித்திடமிருந்து அழைப்பு வர கண்கள் மிளிர அழைப்பை ஏற்றாள்

“ஹே ரோகி நானே உனக்கு கால் பண்ணனும்னு நினச்சேன் டா நீயே பண்ணிட்ட”அவன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க
“என்ன கோவமா பக்கி? “
“ஹ்ம்ம் இல்லையே !”என்று நக்கலாக சொன்ன ரோகித்தை பற்றி அவளுக்கு தெரியாத என்ன
“ம்ச், ரோகி கொச்சிக்காதடா “என்று நந்துவை சந்தித்தது, வீட்டிற்கு வந்து அம்மாவை பார்த்தது, பப்புவை அழைத்துவந்து என அனைத்தையும் சொன்னாள் வர்ஷா
“இப்போ பப்பு உங்ககூடத்தான் இருக்கானா? “
“ஆமா டா “
“நல்லா விஷயம் செஞ்சி இருக்க வர்ஷா ஆம் ரியலி ப்ரவுட் ஆஃப் யூ ”
“ரோகி அப்பா இப்போ எப்படி இருக்காரு? “
“நல்லா இருக்கார் வர்ஷா எந்த ப்ரோப்லேமும் இல்லை “
“ரோகித் நீ மட்டும் இங்க வந்த யூஸ் போகவே மாட்டடா உனக்கு ரொம்ப புடிக்கும்டா இங்க எல்லாத்தையும் கூடிய சீக்கிரம் சரிபண்ணனும்டா நாம எல்லாரும் ஒன்ன ஒரே வீட்டுல இருக்கணும் “என்றாள் ஆசையாய்
“கண்டிப்பா..,நானும் அதுக்காகத்தான் காத்துருக்கேன் வர்ஷா “
“வர்ஷா சகும்மா கிட்ட போன் கூடு நான் சகும்மா கிட்ட பேசனும் “என்றான் ரோகித்
“இரு தரேன் நீயே உன் சகும்மா கிட்ட பேசிக்கோ “என்றவள் சகுந்தலாவிடம் போனை கொடுத்தாள் நலம்விசாரிப்புகளுக்கு பின் தன் கணவனை பற்றி பேசி வருத்தியவரை தன் கலகலப்பான பேச்சில் சுலபமாய் மாற்றிவிட்டான் ரோகித்..


மறுநாள் வர்ஷா நந்துவின் உதவியுடன் பப்புவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று டாக்டரிடம் காட்டினாள் அவள் நினைத்தது போல் பப்புவிற்கு ஏதோ விபத்தில் தான் மனநலம் பாதிக்க பட்டிருந்தது.

“இவருக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு விபத்துல இவர் பின்மண்டைல பலமா அடிபட்டு இருக்கு அதன் விளைவாகத்தான் இவருக்கு இப்படி ஆகியிருக்கு முறையான டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டா கண்டிப்பா குணப்படுத்திடலாம் “என்று டாக்டர் சொல்ல பப்புவை குணப்படுத்திவிடலாம் என்று வர்ஷாவிற்கு நம்பிக்கை வந்தது

பப்புவை பரிசோதித்து சில மருந்து மாத்திரைகளை கொடுத்தார் டாக்டர் “இந்த மருந்துகளின் வீரியத்தால் பப்புவிடம் பல மாற்றங்கள் வரலாம் மாற்றங்கள் அனைத்தும் நன்மைக்கே என்பதால் பப்புவை அவன் போக்கிலே விட்டுவிடுங்கள்.. அவனுடைய மாற்றங்கள் கண்டு அவனுக்கு எந்த அழுத்தமும் தரவேண்டாம்” என்று டாக்டர் வர்ஷாவிடம் அறிவுறித்தினார்
“ஓகே டாக்டர் “என்றவள் அவரிடமிருந்து விடைபெற்றாள்

வீட்டிற்கு வந்தவள் தாயிடம் அனைத்தையும் சொல்லினாள் டாக்டர் அறிவுறித்திய படி தன் தாயையும் நடந்துகொள்ள சொன்னாள்

இப்போதெல்லாம் பப்பு வர்ஷாவை ஊட்டிவிட சொல்லியே சாப்பிடுகிறான் அவளும் அதை ஒரு பழக்கமாவே மாற்றிக்கொண்டாள் அவன் பசி எடுக்கிறது என்று சொல்கிறானோ இல்லையோ நேரத்திற்கு அவள் சாப்பாட்டை ஊட்டிவிட்டுவிடுவாள் அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளின் அனைத்தையும் கொடுத்துவிடுவாள் அவள் அறியாமலே அவனிடம் நெருங்கிக்கொண்டிருந்தாள் வர்ஷா

சகுந்தலாவிற்கு திடிரென்று லேசான மூச்சி திணறல் ஏற்பட தன் மாத்திரைகளை தேட மாத்திரைகள் நேற்றோடு தீர்ந்துபோனது அப்போதுதான் நியாபகம் வர மெடிக்கலுக்கு சென்று மாத்திரை வாங்கிவர கிளப்பிய சகுந்தலாவை இடைமறிதல் வர்ஷா “என்னமா ஏன் முகம்லா வேர்த்துபோய்ருக்கு ஏன் ஒருமாதிரி இருக்க அம்மா? “என்று வர்ஷா கேட்க
“ஒன்னும் இல்லைடா “என்று சமாளித்தவளை நம்பாது”அம்மா உண்மையை சொல்லு என்னாச்சி? “என்று கேட்க
“மாத்திரை கலியானதை மறந்துட்டேன் படபடன்னு வருது லேசா மூச்சி வாங்குது அதன் மெடிக்கல் போய் மாத்திரை வாங்கிட்டு வரலாம்னு கிளம்பினேன் “என்றார்

“உங்களுக்கு என்ன ஆச்சி ? நீங்க இருங்க நான் போய் வாங்கிட்டு வரேன் “என்றவள் அவள் அம்மாவிடம் இருந்து மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு மெடிக்கலுக்கு சென்றாள் மெடிக்கல் அருகில் இருந்ததால் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் விரைவில் வாங்கிவந்து சகுந்தலாவிடம் கொடுத்துதள்
 

Preetha ravichandran

New member
Wonderland writer

உயிரே 8


“அம்மா இப்போ சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை? “என்றாள்
“ஒன்னும் இல்லைம்மா. “
“அம்மா ப்ளீஸ் என்கிட்ட மறைக்காம உண்மையை சொல்லுங்க “
“அம்மாடி நீயே பலவருஷம் கழிச்சி அம்மாவை பாக்க வந்துருக்க உனக்கு எந்த கஷ்டமும் வேணாம் டா “
“அம்மா ப்ளீஸ் “என கண்கலங்கியவளை பார்த்து பதறி போனார் சகுந்தலா
“என் இதயத்துல ஏதோ பிரச்சனையாம் டா “
“அம்மா என்ன சொல்றிங்க? “
“ஆமாடா.., கவனிக்காம விட்டுட்டேன் லேட்டா தான் தெரிஞ்சது இப்படி ஒரு பிரச்சனை இருக்குறது அப்போ வாழ ஆசை இல்லை அதனால பெரிசா எடுத்துக்களை கவலை பாடலை ஆன இப்போ என் பொண்ணு என்ன பாக்கவந்துட்டாலே இனி இந்த அம்மாகூடவே இருக்க போற அதன் இப்போ என் பெண்ணுக்காக வாழ ஆசை வந்துச்சி
“என்றார்
“ஏன்ம்மா உங்களை கூட கவனிச்சிகம இருக்கீங்க... என்ன மன்னிச்சிடுங்க அம்மா இங்க வர முடிவை நான் அப்போவே எடுத்துருக்கணும் “என்று கதறியவளை அணைத்துக்கொண்டார் சகுந்தலா
“ம்ச், விடுடா அதெல்லாம் பழைய கதை “என்றவரை அணைத்துக்கொண்டாள் வர்ஷா ‘உங்களையும் அப்பவும் எப்படியாது செத்துவச்சி சொந்தபந்தகளோட சந்தோசமா வாழ்ந்து அப்பாவோட மனக்கவலையை முழுசா போக்கணும்னு நினச்சேன்.. ஆன இப்டிலாம் ஆகும்னு தெரிஞ்சி இருந்த முன்னாடியே வந்து உங்களை எங்களோட அழைச்சிட்டு போயிருப்பேன்மா என்ன மன்னிச்சிடுமா ‘என்று மனதினுள் அழ கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது
“அம்மா வாங்க நாம ஹாஸ்பிடல் போலாம் “
“ஏன் டா? “
“ப்ளீஸ் அம்மா வாங்க “என்றவள் பப்புவை வீட்டிலேயே விட்டுவிட்டு கதவை பூட்டிக்கொண்டு தன் தாயை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றாள் அங்கு டாக்டரிடம் சகுந்தலாவின் பழைய ரிப்போர்ட்களை கொடுக்க டாக்டரும் சகுந்தலா ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு “கரோனரி ஆர்டரி டிசீஸ்(இதயத் தமனி நோய் ) “இருப்பதாக சொன்னார்..
“சிலருக்கு இந்த நோய் வெளிப்படையாக தோன்றாது இன்நோயின் அறிகுறிகளை வாய்த்தே இன்நோய் கண்டறிய இயலும் கரோனரி ஆர்டரி டிசீஸ் ஆரம்ப கட்டத்திலே அதன் அறிகுறிகளை வெளிக்காட்டிவிடும்.
சமசீரான உணவு பழக்கம், உடல்நல பரிசோதனை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையோடு இதற்கான மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக கரோனரி ஆர்டரி டிசீஸ் அறிகுறிகளை சரிசெய்யலாம் இதுவே இந்நோய்க்கான சிகிச்சை முறையாகும்...
இன்நோயை கவனிக்காமல் விட்டால் உயிர்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும் “என்று டாக்டர் சொல்ல என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள் வர்ஷா
தந்தையிடம் சொல்லலாமா? வேணாமா? என்ற மனம் போராட்டம் நடத்தியது சொன்னாள் இருக்கும் வேதனைக்கு மேலும் வேதனை அல்லவா கூடும் அதுவே தந்தைக்கு ஆபத்தாக வாய்ப்பிருக்கிறதே என்று அஞ்சியவள் தந்தையிடம் சொல்லலாம் என்ற முடிவை கைவிட்டாள்
விட்டிருந்த பப்பு விளையாடிக்கொண்டே குளியலறை அருகே செல்ல விளையாட்டு புத்தியில் உள்ளே சென்றவன் கீழே விழுந்து கிடந்த சோப்பை கவனிக்காது அதன் மேல் கால் வைக்க வழுக்கி கீழே விழுந்தான். விழும் வேகத்தில் அங்கிருந்த செல்ப்பில் பின் மண்டை பலமாய் மோதிட வலிதாங்க முடியாது கத்த அப்படியே மயக்கமானான் பப்பு
டாக்டர் அறிவுரையின் படி சில டெஸ்ட்டுகள் எடுத்துவிட்டு அதன் ரிசல்ட்காக காத்துகொண்டு இருந்தனர்
வெகுநேரம் நேரமாக மயங்கிக்கிடந்த பப்புவுக்கு லேசாக மயக்கம் தெளிய பின்மண்டை வலிதாங்க முடியாமல் கத்தினான் எழுந்து கொள்ள முயற்சி செய்ய...
எழுந்துகொள்ள முடியாமல் வலியில் தலையை பிடிக்க பின்மண்டையில் சுருக்கென்று வலி
பப்பு மெதுவாக எழுந்து அங்கு இருந்த குளிர்ந்த நீரால் முகம்கழுவி ஹாலுக்கு வந்தவன் முதலில் இது என்ன இடம்?? என்று குழம்பினான்
‘கடைசியாக தான் காரில் டிரைவ் செய்துகொண்டிருக்கும் தலைசுற்ற தொடங்கியது அதே நேரம் தன்னை மோத வந்த லாரியை கண்டு அரைமயக்கத்தில் இருந்தவனுக்கு ஓரளவிற்கு அனைத்தும் புரிய எப்படியாவது தப்பிக்க வேண்டும்மென்று போராடியவனின் கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு போனான்....
லாரி கொஞ்சம் கொஞ்சமாக எதிரே வர தன்னை கட்டுப்படுத்தியவன் தன் பலம் முழுவதையும் கொண்டு கார் கதவை திறந்து தள்ளாடியபடியே வெளியே வர அதை கவனிக்காத அந்த லாரி அவனை கொள்ள காரை மோதியது... அந்த லாரி ஒட்டி வந்தவன் தன்னுடைய வேலை முடிந்தது என்று டிரைவர் லாரியை வந்த வந்த வழி தெரியாது லாரியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்...
காரிலிருந்து இறங்கியவன் அரைமயக்கத்தில் தள்ளாடிக்கொண்டு ஒரு முட்புதருக்கு பின் ஒளித்திருக்க அந்த லாரி சென்ற கொஞ்ச நேரத்தில் அங்கு தூரமாய் வந்து நின்ற ஒரு கார். அந்த காரிலிருந்து இருவர் இறங்கிவந்தனர்.... மயக்க நிலையில் இருந்தவனுக்கு கண்கள் சொருகியது அவர்கள் யார் என்று அவனுக்கு புரியவில்லை அவன் காரில் வந்த இருவர் எதையோ பேசியபடி சிரித்து விட்டு அங்கிருந்து அகன்றனர் அவர்கள் சென்ற சில வினாடிகளில் இவன் வந்த கார் வெடித்து சிதறியது..
இதையெல்லாம் அரைமகத்தில் இருந்தவனுக்கு ஓரளவிற்கு புரிய அருகில் யாராவது இருந்தால் உதவி கேட்கலாம் என்று அரைமயக்கத்தில் திரும்பி தள்ளாடிப்படி நடக்க யாரோ தான் பின்மண்டையில் பலமாய் அடித்தது “கொஞ்சம் கவனிக்காம போயிருந்த இவனை நாம விற்றுப்போம் நம்ம பிளான் மொத்தம் ஸ்பாயில் அகி இருக்கும் டார்லிங் “என்று ஒரு பெண் பேசினாள் அந்த குரல் மிகவும் பழக்க பட்ட குரலாகத்தான் அவனுக்கு தோன்றியது அதுவரை மட்டுமே அவன் நினைவில் இருந்தது அதன் பின் அவன் முழு மயக்கத்திற்கு சென்றுவிட்டான்..
‘அங்கு வந்த இருவர் யார்?? தன்னை தாக்கியது யார்?? ‘என்று யோசிக்க யோசிக்க பின்மண்டை பயங்கரமாக வலித்தது அவனுக்கு இதற்கு மேல் யோசிக்கவேண்டாமென்று தற்போதைக்கு யோசனையை கைவிட்டான்.
“தற்போது தான் எங்கிருக்கிறோம்? தன்னை யாரது கடத்தி வைத்துள்ளார்களா? “என்று பல கேள்விகள் அவனுள் எழ
முதலில் தான் இருக்கும் இடத்தை சுற்றிலும் நோட்டம்விட்டான் “எனிஒன் இஸ் தேர்? “என்று கத்த எந்த பதிலும் வரவில்லை அவன் தலை வலி வேறு ஒருபுறம் அவன் படுத்தியது...
வீட்டை முழுவதுமாக ஆராய்ந்தாவன் அதற்க்கு மேல் வலி தாங்க முடியாமல் அங்கிருந்த பெட்டில் சாய்த்து அமர்ந்தான் அவன் கடைசியாய் அவனுடைய காரில் பயணித்ததும் பின் யாரோ தன் பின்மண்டையில் அடித்ததால் ஏற்பட்ட வலியும் தான் அவனுக்கு நினைவில் இருக்கிறது மாற்ற எதுவும் அவன் நினைவில் இல்லை
தன்னை யாரோ பிளான் செய்து கொள்ள நினைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிந்தது அவனுக்கு... தன்னை நெருங்கும் தைரியம் யாருக்கு உண்டு? எவ்ளோ தைரியம் இருந்த என்னையே கொள்ள பிளான் பண்ணி இருப்பான் “என்று நினைத்தவனுக்கு கண்கள் ரத்தமாய் சிவந்தது அதே நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்க சகுந்தலாவும் வர்ஷாவும் டெஸ்டுகளின் ரிசல்ட்களை வாங்கிக்கொண்டு வீட்டை திறந்து உள்ளே வந்தனர்
“பப்பு எழுந்தாச்சா? ”என்று கேட்டபடியே அருகில் வந்த சகுந்தலாவை பார்த்து அதிர்ச்சி ஆச்சர்யம் மகிழ்ச்சி என அணைத்து உணர்வுகளும் ஒருசேர வந்தது அவனுக்கு ‘ஓஹோ மை காட் ஷி இஸ் தேர் !!, இவங்களை எங்கே எங்க எல்லாம் தேடினோம் அப்போதேல்லாம் கிடைக்காதவங்க இப்போ என் எதிர்ல நின்னுட்டு இருக்காங்க ‘என்று வியந்தான் அவன்
சகுந்தலாவின் பின்னால் உள்ளே வந்த வர்ஷா “ஆட பப்பு எழுந்தாச்சா?? “என்று அவள் lஅருகில் வந்தாள் “ரித்து பப்பு எழுந்துட்டான் பாரு “என்று தன் மகளிடம் சகுந்தலா சொல்ல
பின் வந்த வர்ஷினியை கண்கள் அகல ஆர்வமாய் அவன் பார்த்துக்கொண்டிருந்தான்
“என்னாச்சி பப்பு ஏன் டிரஸ்லாம் ஈரமா இருக்கு தண்ணில விளையாடினீங்களா? “அவனை கொஞ்சலாய் முறைத்தாள் ரித்து வர்ஷினி
“நான் சொல்லிட்டுதானே போனேன் சமத்தா இருக்கணும், தண்ணில விளையாட கூடாதுனு சொன்னேன்ல? வர வர பப்பு என் பேச்சை கேக்குறதே இல்லை வெரி பேட்.. பப்பு கெட்டபையான ஆயிட்டான் “என்று முகம் சுளித்துக்கொண்டாள்
தன் எதிரில் அமர்ந்து தன்னிடம் முகம்சுளித்து செல்ல சண்டையிடும் அவளை எதிர்த்து பேச மனமில்லாமல் அமைதியாய் அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு இது தாம் தானா என்று சந்தேகமே வந்துவிட்டது அவன் அவள் வருவதற்கு முன் இருந்த கோபங்கள் அணைத்து எங்கே போனதென்றே தெரியவில்லை அவனுக்கு..
அவள் முக சுழிப்பில் முழுவதுமாய் தன்னை வேண்டுமென்றே துளைந்தவன் அவள் முன் பேசாமடந்தையானான்..
பப்புவின் மேல் கோபமாய் முகத்தை திருப்பிக்கொண்டு இருந்தவள் அவன் பேசாது இருப்பதை பார்த்து அடுத்த நொடி “அச்சோ பப்புக்கு பசிக்குதா? “என்றாள் அவன் ஆம் என்பது போல் தலையாடினான்
“சரி முதல்ல பப்புக்கு டிரஸ் மாத்திடலாம் அப்புறம் சாப்பிடலாம் சரியா “என்றவள் அவன் ஷர்ட் பட்டனை கழட்டி அவனுக்கு வேறு சட்டையை போட்டு விட்டாள் பின் அவனுக்கு சாப்பாடு கொண்டுவந்து ஊட்டிவிட்டாள்
பொதுவாக மற்றவர்களை தன்னிடம் நெருங்க விடாதவன் இவள் தன்னை நெருங்கி தன்னை தொட்டு உடை மாற்றிவிட்டு உணவு ஊட்டும் போது அவளை தடுக்க முடியாமல் அவளை ரசித்துக்கொண்டிருந்த அவன் மனதை பார்க்க அவனுக்கே புதிதாய் இருந்தது..
தன் பார்வையிலே பயந்து நடுங்குவர் அனைவரும் அப்பேற்பட்ட தன்னை இவள் குழந்தையாய் மாற்றி அணைத்து அன்பை பொழிகிறாளே!!
அவனுக்கு சாப்பாடை ஊட்டிவிட்டு மாத்திரைகளை கொடுவிட்ட பின்னரே அவள் மாற்ற வேலைகளை செய்தள்
“அம்மா மனசு சரி இல்லை கோவிலுக்கு போய்டுவரலாமா? “என்று வர்ஷா கேட்க “சரிம்மா போய்டுவரலாம் பப்புவையும் கூட்டிட்டு போலாமா? “
“இல்லமா பப்பு இப்போதான் மாத்திரை போட்டான் தூங்கட்டும் இருக்கான் நாம மட்டும் போய்ட்டு வரலாம் “என்று இருவரும் கிளம்பினார்
முதலில் தான் நன்றாக இருப்பதை தெரியப்படுத்தவேண்டும் என்று போன் இருக்கிறதா என்று தேடினான் பப்பு வர்ஷா கிளம்பும் அவசரத்தில் போனை வீட்டிலே வைத்துவிட்டு போனதால் அதை எடுத்தவன் சுகிறீன் லாக் அகி இருப்பதை பார்த்து யோசித்தவன் பாஸ்வர்ட் p டைப் செய்ய போன் லாக் ஓபன் ஆனாது அதில் நம்பரை டயல் செய்து காதில் வைத்தான் “ஹலோ “என்றவனின் கணீர்குரலிலிருந்தே யார் என்பதை கண்டுகொண்டான் எதிர்திசையில் இருந்தவன்
“அண்ணா “என மகிழ்ச்சியில் தலைகால் புரியாது எதிர்திசையிலுருந்தவன் பேச
“எப்படி இருக்கீங்க எல்லாரும்? “
“உங்க குரலை கேட்ட பிறகுதான் உயிரே வந்துச்சி அண்ணா, எங்க அண்ணா இருக்க உனக்கு ஆபத்து எதுவும் இல்லைல? எங்க இருக்கானு சொல்லு அண்ணா உடனே வரேன் நான் “
“வேணாம் டா இப்போதைக்கு நீ இங்க வரவேண்டாம், எனக்கு எந்த ஆபத்து இல்லை நான் நல்லாத்தான் இருக்கேன், அங்க யாரும் என்ன நினைச்சி கவலைப்பட வேண்டாம்னு சொல்லு எனக்கு எதுவும் இல்லை மாத்த விஷயங்களை நேர்ல பாக்கும் போது சொல்றேன் “
“சரி அண்ணா “
“அண்ட் நான் வீட்டுக்கு வரும்போது உன் அண்ணியோடதான் வருவேன் “
“அண்ணா ரித்து அண்ணியையா சொல்ற !!? “
“எஸ் உன் ரித்து அண்ணியை தான் சொல்றேன் “என்றவனின் வார்த்தையை கேட்டு சந்தோஷத்தில் கத்தினான் எதிர் திசையில் இருந்தவன்
“இன்னோர் முக்கியமான விஷயம் இங்க நான் மனநலபாதிக்க பட்டவனாதன் இருக்கேன் சோ என்ன பாக்குறப்போ நீயும் அப்டியே மைண்டைன் பண்ணிக்கோ “
“ஏன் அப்படி அண்ணா? “
“அதெல்லாம் நேர்ல சொல்றேன் “
“சரி அண்ணா அப்டியே மைண்டைன் பண்ணிக்குறேன் “
“ஓகே பாய் டா எல்லாரையும் பத்திரமா பாத்துக்கோ “என்று போனை கட் செய்து டயல் லிஸ்டில் தான் டயல் செய்த நம்பர் அழித்து போனை இருந்த இடத்திலேயே வைத்தான் அவன்.. சிறிது நேரத்தில் கோவிலுக்கு சென்றவர்களும் வீட்டிற்கு வந்தனர்
“பாட்டி, தாரு, நேர்த்தி எல்லாரும் இங்க வாங்க அண்ணா போன் பண்ணாங்க அண்ணா பத்திரமா இருக்குறாராம் அண்ணாவே கூடிய சீக்கிரம் வந்துடுறாராம் “என்று சந்தோஷத்தில் கத்தினான் பாட்டி சந்தோஷத்தில் கடவுளுக்கு கோடிமுறையோ நன்றி கூறினார்
“என் பேரன் நல்லா இருக்கான் அது போதும் எனக்கு “என்று சந்தோஷத்தில் கண்கலங்கினார் பாட்டி
“ரிஷி உண்மையாவா சொல்ற?? “என்று தாரு கேட்க
“ஆமா தாரு “
“ஐ!!! அண்ணா கிடைச்சிட்டாங்க “என்று துள்ளினாள் தாரு
நேர்த்திக்கு இவர்கள் பேசிக்கொள்வது முழுதாக புரியாவிட்டாலும் ரிஷியின் அண்ணன் கிடைத்துவிட்டார் என்பது மட்டும் புரிந்தது அவர்களின் சந்தோசத்தை பார்த்து இவள் மனமும் நிறைந்தது
“ரிஷி சார் நான் ஸ்வீட் செஞ்சி கொண்டுவரேன் “என்று நேர்த்தி சொல்ல தாரு, பாட்டி கூட அவளுடன் சென்று ஸ்வீட் செய்தனர்
ரோகித்திடமிருந்து வர்ஷாவிற்கு அழைப்பு வர “சொல்லு எருமை “
“என்ன பண்ற வர்ஷா ஏன் போன் பண்ணலை நீ “
“எங்கடா அதுக்குள்ள என்ன என்னவோ பிரச்சனை “என்று சோர்ந்து போனாள் வர்ஷா
“என்னாச்சி டா எதாவது பிரச்சனையா?? நான் இந்தியா கிளம்பி வரவா? உடனே பிலைட் டிக்கெட் புக் பண்ணவா? “
“அதெல்லாம் வேணாம் டா நானே பாத்துக்குறேன் நீ அங்கேயே இருந்து அப்பாவா பத்துகோடா “
“என் வர்ஷா இவ்ளோ சீக்கிரம் சோர்ந்து போகமாட்டா “
“ஆமா உன் வர்ஷாவும் இங்கவந்து மாறிட்ட போல !!”
“இதுக்குத்தான் உன்ன தனியா அனுப்ப மாட்டேன்னு சொன்னேன்..
என்ன பிரச்சனை? “என்று அவன் கேட்க அவள் அனைத்தையும் சொன்னாள்
“இதன் விஷயமா ,இதுக்காக பயப்படாத டா சரியான டிரீட்மென்ட் எடுத்துக்கிட்ட எந்த ப்ரோப்லேமும் வராது “
“அதைத்தான் நானும் நம்புறேன் “என்றாள் வர்ஷா
“சரி டா அப்புறம் பேசுறேன் பாய் “போனை கட் செய்தல் இவர்களின் பேச்சில் பப்புவிற்குத்தான் கொஞ்சம் பொறாமமை எட்டிப்பார்த்தது

நாட்கள் இப்படியே ஓட ஒருநாள் வர்ஷா வெளியே போயிருந்த போது சகுந்தளவிற்கு திடிரென்று மார்வலி வந்துவிட மூச்சிவிடவே சிரம பட்டார் அந்த நேரம் வர்ஷா வீட்டில் இல்லாததால் பாபுவால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை அவர் அருகில் சென்று “என்ன ஆச்சி அத்தை என்ன பண்ணுது? “என்று அவனுக்கே உரித்தான கம்பிரக்குரலில் கேட்க அந்த நேரத்திலும் அவருக்கு மனதில் ‘ பப்பு தெளிவாக பேசறன் அப்படியானால் இவனுக்கு சரியாகி விட்டதா? தன்னை அத்தை என்று இவன் அழைப்பதற்கான காரணம் என்ன ‘என்று நினைக்க “நீ.... நீ !!?? “அவர் மனதில் உள்ள அணைத்து கேள்விகளையும் ஒற்றை வார்த்தையில் கேட்டார் இந்த நேரத்திலும் தாயாய் தான் மகளுக்காக மட்டுமே சிந்தித்தார் ஒருவேளை தனக்கு ஏதேனும் ஆகிவிட்டாள்!! இவனுடன் தன் மகளை விட்டு செல்வது அவளுக்கு பாதுகாப்பாக இருக்குமா? இருக்காதா? என்று தன்மைகளுக்காக யோசித்தது அந்த தாயுள்ளம்...
 

Preetha ravichandran

New member
Wonderland writer
உயிரே 9


பப்பு அருகில் இருந்த போனை எடுத்து ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உடனடியாக வரும்படி தகவல் கொடுத்தான்

அவர் கேள்விக்கு பதில் சொல்லலாமா? வேண்டாமாம்? என்று அவன் யோசிக்க ஆபத்தான சூழலில் இருப்பவரின் மனதினை அமைதிப்படுத்துவதுதான் இப்போது முக்கியமான வேலை என்றுணர்ந்தவன் “அத்தை நான் உங்க அண்ணா கேசவமூர்த்திக்கும் குணவதிக்கும் பொறந்த உங்களோட பப்பு தான் அத்தை “என்றவனை கன்னத்தை பிடித்துக்கொண்டு “ என் பப்பு வா நீ? “என்றார்
“ஆமா அத்தை “என்றவனை மனநிறைவோடு பார்த்தார்
‘ஆண்டவா என் மகளை அவளுக்கு சொந்தமானவங்க கைலதான் குடுத்துட்டு போறேன்’என்று நிம்மதியில் மயக்கமானார்

“அத்தை!!.. அத்தை !!”என்று அவர் கன்னத்தை தட்டி மயக்கத்தை தெளியவைக்க அவன் முயற்சிசெய்தன் ஆனால் பலன் இல்லை அதற்குள் வீட்டிற்கு வந்த வர்ஷா

“அம்மா !!அம்மா !!!என்னாச்சி உங்களுக்கு!!!? ஆமா கண்ணை திறந்து பாருமா “என்று கதறினாள்
வீட்டிற்கு வெளியே ஆம்புலன்ஸ் வந்து நின்றது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவசர பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்

திடீரென மருத்துவர் வந்து “உங்க ரெண்டுபேர்ரையும் பாக்கனும்னு சொல்ராங்க” என்று
உள்ளே அழைத்து சென்றார்

சகுந்தலா மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தன்மகளுக்காக சில வருடங்களுக்கு முன்பே வாங்கிய தாலி தான் மகளின் நினைவாய் எப்போதும் அந்த தாலியை தன்னிடம் வைத்திருக்கும் சகுந்தலா இன்று திடீரென வெளியே எடுத்து பப்புவிடம் நீட்டி வர்ஷாவுக்கு காட்டுமாறு கண்களில் கண்ணீருடன் சைகை காட்டினார்

தான் தாயின் செய்கையிலே அவர் மனதில் இருந்த பயத்தை புரிந்துகொண்ட வர்ஷா “அம்மா !!!! என்னமா?? உனக்கு ஒன்னும் ஆகாதுமா “என்றவளின் வார்த்தையை எதையும் கேட்காது மீண்டும் பப்புவிடம் தாலியை நீட்ட பப்பு என்ன செய்வதென்று முழித்தான்

தன் தாயின் எண்ணம் புரிந்தவளாய் ஏதும் பேசாமல் அவன் கட்டப்போகும் திருமங்கலத்தை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள கண்களை முடி தலை குனிந்து நின்றாள் ரித்து வர்ஷினி இந்த நிமிடம் அவள் மனதில் இருப்பதெல்லாம் தன்னுடைய தாயில் மனநிம்மதி மட்டுமே

இந்த நிமிடம் வரை உன்னை பொறுத்தவரை நான் மனநலம் சரியில்லாதவன் ஆனாலும் தன்னை திருமணம் செய்யத்துக்கொள்ள தயாராக தான் கட்டவிருக்கும் திருமாங்கல்யத்தை ஏற்றுக்கொள்ள தலைகுனிந்து நிற்க்கும் தன்னவளை பார்த்து மனமானது பிரம்மித்து போனது..... மனமார தன்னை கணவனாய் ஏற்ற தன்னவளை கண்களாலே அள்ளிப்பருகினான் பப்பு

காத்திருக்கும் ஒவ்வொரு துளிநிமிஷமும் மிக ஆபத்தானது என்றுணர்த்து பப்பு சகுந்தலா கையில் இருந்த திருமாங்கல்யத்தை வாங்கி ரித்து வர்ஷினி கழுத்தில் கட்டினான். அவன் மனமறிந்தும் மணந்த மாயவளை கண்டு மதிமயங்கி தான் போனான் அவன்... கண்குளிர தன் மகளின் திருமணத்தை பார்த்தவர் அப்டியே மீண்டும் மயகிபோனார்

சகுந்தலாவிற்கு உள்ளே டிரீட்மென்ட் நடக்க வெளியே வர்ஷா துடித்துக்கொண்டுருந்தாள்

புது நம்பரிலிருந்து ரிஷிக்கு அழைப்பு வர ரிஷி அட்டென்ட் செய்தான்
“ஹலோ ரிஷி!! “என்ற அவன் அண்ணனின் குரலில் இருந்த அவசரத்தை உணர்ந்தவன்
“அண்ணா எதாவது பிரச்சைய!!?? “
“ஆமா “
“உடனே நாம ஹாஸ்பிடல் இருக்க பெஸ்ட் மெடிக்கல் டீமை கூட்டிட்டு உடனே நான் சொல்ற ஹோட்பிடெல் வா “என்றவன் மருத்துவமனை விவரங்களை சொன்னான்

சகுந்தலாவிற்கு டிரீட்மென்ட் செய்த டாக்டர்ஸ் வெளியே வர வர்ஷா அவர்களிடம் தாயின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்றாள்
“சாரி மா!! உங்க அம்மாவோட ஹெல்த் ரொம்ப சீரியஸா இருக்கு காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்தான் இதுக்குமேல எதுவும் எங்க கைல இல்லை “என்று மாபெரும் இடியை அவள் தலையில் போட்டார் டாக்டர் அப்படியே இடிந்து போய் அமர்ந்தாள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க கதறி அழுதாள் அவள்...
ஆறுதலாய் அவள் தோல் தொட்டவனை நொடியும் தாமதிக்காது அனைத்து அவன் மார்பில் முகம் புதைத்து அழ தொடங்கினாள் ..அவள் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் போக அழுது தீர்க்கட்டும் என்று விட்டவன் அவள் முதுகை ஆதரவாய் வருடினான் பப்பு, இவைகளை எல்லாம் உணரும் நிலையில் அப்போது அவள் இல்லை...

மின்னல் வேகத்தில் ஐந்து கருப்பு நிற பி எம் டபிள்யூ கார்களும் ஒரு அம்புலன்ஸும் மருத்துவமனை நுழைவாயிலின் நின்றது. நடுவில் நின்ற காரிலிருந்து ரிஷி இறங்க அவன் பின் கருப்பு நிற கோட்சூட் அணிந்திருந்த பாதுகாவலர்கள் பின்தொடர்ந்து வந்தனர் இவர்கள் வருவதை அறிந்த அந்த மருத்துவமனையின் டீன் மருத்துவமனை நுழைவாயிலில் அவர்களுக்கு மரியாதையளிக்கும் வகையில் பணிவோடு “வணக்கம் ரிஷி சார் “என்றார் அந்த மருத்துவமனையின் டீன் மிஸ்ட்டர். கபிலேஸ் கிருஷ்ணன் அவருக்கு மரியாதையை கொடுக்கும் வகையில் ரிஷி புன்னகையோடு தன்னை வரவேற்றதற்கு நன்றியை தெரிவித்துவிட்டு அங்கிருந்து அகன்று வேகமாய் தன் மருத்துவ குழுவுடன் உள்ளே சென்றான்

மருத்துவர்கள் வர்ஷாவிடம் அவரின் தாயை தங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று கூறி அவர் இறந்துவிட்டதாக சொல்ல கதறி அழுத்தவளை கடைசியாக பார்த்துவிட்டு வரும்படி மருத்துவர் சொல்ல, அவள் நிலை தடுமாறி கிழே விழுந்துதாள் கால்கள் நிற்க வலுவின்றி போக கதறி அழுத்தவளை தேற்ற வழி இல்லாமல் தவித்தான் பப்பு கடைசியாக தாயை பார்த்துவிட்டு வெளியே வந்தவளிடம் மருத்துவமனையிலேயேஅனைத்தும் செய்துவிடுவதாக சொல்லியது .

ரிஷி நேரம் தாமதிக்காமல் தன் அண்ணனின் கட்டளை படி சகுந்தலாவை உடனடியாக அவர்களின் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்தனர் அதற்க்கு முன் சகுந்தலாவின் உடல்நிலை முற்றிலும் அறிந்து அதற்கான அவசர சிகிச்சையை செய்தனர் சகுந்தலாவிற்கு செய்யவிருக்கும் ஆபரேஷானினால் நூறு சதவிகிதம் உயிர்பிழைப்பர் என்று உத்திரவாதம் கிடையாது ஐம்பது சதவிகிதம் மட்டுமே உயிர்பிழைக்க வாய்ப்பு உண்டு என்பதால் வர்ஷினிக்கு நம்பிக்கையை தந்து மீண்டும் அவளை அணுஅணுவாய் கொள்ள விரும்பாத பப்பு சகுந்தலா இறந்துவிட்டதாகவே வர்ஷினியை டாக்டர் மூலமாக நம்பவைத்தான்...

அவனின் கட்டளை படி அனைத்தும் சரியாக நடந்தது.. ரிஷி தன் அண்ணனை வெகுநாட்களுக்கு பின் கண்டத்தில் அவனை அணைத்துக்கொண்டான் தன் தம்பியை அனைத்தவன் அவன் பாசத்தை கண்டு நெகிழ்ந்து போனான் “அண்ணா உங்கள பார்த்த பிறகுதான் போன உயிரே திரும்பி வந்திருக்கு “என்றான்
அவன் அணைப்பிலிருந்து விளங்கியவன் “அண்ணி எங்க?”என்று கேட்க ரித்து அமர்ந்திருக்கும் இடத்தை காட்ட ஆர்வமாய் தன் அண்ணியை பார்த்தான் தலையில் கைவைத்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கும் அண்ணியை கண்டு மனம் துடித்தது ரிஷிக்கு.. ரித்துவின் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறு கண்ணில் பாட தன் அண்ணனை நோக்கினான் ரிஷியின் பார்வையின் அர்த்தம் புரிந்து அவன் ஆம் என்று தலையசைத்தான்

தன் அண்ணனுக்கு அவர் விரும்பிய ரித்து அண்ணியுடன் திருமணம் நடந்ததை நினைத்து சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை அவனுக்கு... ஆனால் இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம் என்று அவனின் அண்ணன் சொல்ல ரிஷி அவனின் அண்ணியை தூரத்திலிருந்தே பார்த்து கொண்டிருந்தான்
‘கவலை படாதீங்க அண்ணி இந்த கவலைகள் எதுவுமே உங்களுக்கு நிரந்தரம் இல்லை... உங்களை கஷ்ட பாட என் அண்ணன் விட மாட்டான் அண்ணி ‘என்று மனதில் வருத்தம் கொண்டான்

“அண்ணா அண்ணியை பாக்கவே பாவமா இருக்கு பேசாம உண்மையை சொல்லிடலாமா ப்ளீஸ் “என்று அனைத்தும் தெரிந்து சிரிப்பிள்ளைபோல் அவன் கேட்க
“ரிஷி அவளை பாத்து எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா இப்போ அவ கிட்ட போய் உங்க அம்மா செத்துட்டாங்கனு சொன்னது பொய்னு சொன்ன அவ சந்தோச படுவ ஆன அவளை நம்ப வச்சி அவளுக்கு நம்பிக்கையை கொடுத்த அப்புறம் அந்த நம்பிக்கை இல்லனு ஆயிட்டா அவளால தாங்கிக்க முடியதுடா.... அவங்க அம்மாக்கு பண்ண போற ஆப்பரேஷன்ள அவங்க நூறு சதவீதம் உயிர் பொழைப்பாங்கனு உத்திரவாதம் இல்லை ரிஷி எல்லாம் நல்லா படியா நடந்த அப்போ ரிதுகிட்ட சொல்லலாம் “என்றான் அண்ணன் சொல்வதுதான் நியம் என்று பட்டது அவனுக்கும்

“ரிஷி நான் கேட்டதை கொண்டு வந்தாயா? “
“எடுத்துட்டு வந்துருக்கேன் அண்ணா “என்று அவனிடம் இருந்த சிறிய மண்பானையில் இருந்த அஸ்தியை அவன் அண்ணனிடம் கொடுத்தான் ரிஷி இருவரின் தாத்தாவின் அசையாவது நிறைவேறட்டும் என்று
“ரிஷி டாக்டர் கிட்ட இதை கொடுத்து நான் சொன்னமாதிரி சொல்ல சொல்லு “என்றான்
“சரி அண்ணா “என்றவன் தன் அண்ணன் கட்டளை படி அனைத்தையும் செய்துமுடித்தான்

டாக்டர் வர்ஷாவிடம் வந்து சகுந்தலாவின் அஸ்தி என அவள் கையில்.சிறிய மண்பாண்டத்தை கொடுத்துவிட்டு சென்றார் அதை கையில் வாங்கியவளின் கதறி அழுதாள் கண்ணீர் கூட அவள் நிலையை பார்க்க முடியாமல் வற்றிப்போனது. பப்புவை அழைத்துக்கொண்டுள் உணர்ச்சிகள் அற்ற நிலையில் விடு போய் சேர்ந்தாள் எதையும் செய்யும் மனநிலையில் அவள் இல்லை பப்புவிற்கு மட்டும் இருந்ததை சாப்பிட கொடுத்துவிட்டாள் அன்றய பொழுது அப்படியே போக இரவு அழுதுகொண்டிருந்தவள் அப்படியே உறங்கி போனாள்
மறுநாள் காலை கதவு தட்டும் ஒலிகேட்க கதவை திறந்தாள் கதவின் முன் யாரோ நின்றிருக்க
“நீங்க ரித்து வர்ஷினி தானே? “
“ஆமாம், நீங்க? “
“ஆம் ரிஷி மிஸ்டர்.துருவேந்திர பிரசாத்தோட தம்பி “
“அவர் யாரு? “என்றாள் ரித்து அவள் கேள்வியில் சிரித்தவன்
“உங்க கூட இருக்காரே அவர்தான் “என்றான்
“வாட் “என்று அவள் அதிர
“எஸ் ஹி இஸ் துருவேந்திர பிரதாப் . சென்னைல டாப் மோஸ்ட் சக்சஸ்ஃபுல் பிசினஸ்மேன். ஹி இஸ் சிஇஓ ஆப் கே ஆர் குரூப்ஸ் “என்றான்
“உள்ள வாங்க மிஸ்டர்.ரிஷி “என்று அவனை உள்ளே அழைத்தாள்
“நேத்தே உங்களை தேடி வந்தேன் என்னோட அண்ணனை கூட்டிட்டு போக நீங்க யாரும் வீட்ல இல்லை பக்கத்துல விசாரிச்சப்போ நீங்க ஹாஸ்பிடல் போய் இருக்கறத சொன்னாங்க ஹிஸ்ப்பிட்டல்க்கு உங்களை தேடிவந்தேன் அந்த சூழ்நிலைல உங்களை தொந்தரவு பண்ணி உங்களை நோகடிக்க வேணாம்னு கிளம்பிட்டேன் “என்று நிறுத்தினான்

“ஹ்ம்ம்ம், உங்க அண்ணா இங்கதான் இருக்காங்கனு உங்களுக்கு எப்படி தெரியும்? “
“நீங்க போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்திருந்திக்கல அதை வாசித்தான் கண்டுபுடிச்சேன் “
“ஓ, பப்பு உள்ளதான் இருக்காங்க நீங்க கூட்டிட்டு போங்க “என்றவளில் கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்தான் ரிஷி
“என் அண்ணனை மட்டும் கூட்டிட்டு போக நான் வரலை என் அண்ணனோட மனைவி மிஸஸ்.ரித்து வர்ஷினி துருவேந்திர பிரசாத்தையும் கூட்டிட்டு போகத்தான் வந்துருக்கேன் “என்று ரிஷி சொல்ல அந்த மிஸஸ். ரித்து வர்ஷினி துருவேந்திர பிரசாத் என்ற வார்த்தையில் அதிர்த்தவள் ரிஷியை பார்க்க
“நான் உங்களை பார்க்க வந்தபோது அண்ணன் உங்க கழுத்துல தாளிக்காட்டினத்தை பார்த்தேன் அண்ணி “என்றான்
“அது அந்த சூழ்நிலையில நடந்தது” என்று தடுமாறினாள் அவளே அவளை நினைத்து வெக்கிபோனாள் தன்னுடைய சுயநலத்துக்காக மனதளவில் தன்னையே யார் என்று உணராதவனை தன்னுடைய சுழுநிலைக்காக அவனை பயன்படுத்திக்கொண்டோமே என்று அவள் கூனிக்குறுகி போனாள்
“அண்ணி இந்த கல்யாணம் அண்ணனுக்கு தெரிஞ்சி நடந்ததோ தெரியாம நடந்ததோ ஆன அண்ணன் ஒரு விஷயத்தை முடிவு செய்தல் அதை யாராலயும் மாத்த முடியாது அப்படி மாத்தியமைக்குற தைரியம் யாருக்கும் இருந்தது இல்லை”என்றவனின் வார்த்தைகள் காதில் கேட்டாலும் அதை மூளைக்கு கொண்டுபோய் யோசிக்கும் நிலையில் அவள் இல்லை அவள் சிந்தனை எல்லாம் தான் செய்தது எத்ததை பெரிய பாவம் என்று மட்டுமே சிந்தித்து அவன் சொன்னதை தான் மண்டையில் ஏற்றி இருந்தாலாவது தன்னுடைய சிந்தனைகள் அனைத்தும் தேவையற்றது என்று புரிந்துருக்கும்...

“அண்ணி எந்த சூழல்ல உங்க கல்யாணம் நடந்திருந்தாலும் சரி அது கல்யாணம்தான் அவர் உங்க கணவர்தான் அதை மாத்த யாராலும் முடியாது இப்போ உங்க புருஷனை கூட்டிட்டு போறேன் உங்க அடுத்த முறை நீங்க உங்க புருஷனை பார்க்கும் போது அவர் முழுசா குணமாகி இருப்பார் “என்றான் ரிஷி
பப்புவை அழைத்து வர உள்ளே சென்றாள் “பப்பு “என்றவள் “சாரி பழக்க தோஷத்துல வந்துடுச்சி “என்று தன்னை திருத்திக்கொண்டு “துருவ் “என்று அழைத்தவளுக்கு கண்கள் கலக்கியது பப்பு இவ்வளவு நாள் தன்னுடன் இருந்தான் அவனை குழந்தை போல் பார்த்துக்கொண்டாள் ஏனோ அவனை பார்த்துக்கொள்வதில் அதீத மகிழ்ச்சி அவளுக்கு இனி அந்த சந்தோஷமும் இல்லை என்றாகிவிட்டது என்று நினைக்கையில் மனம் பாரமானது அவன் முகத்தை கையில் ஏந்தியவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்

பப்புவை ரிஷியிடம் ஒப்படைத்து “டைம்க்கு சாப்பாடு குடுங்க டைம்க்கு டேப்லெட்ஸ் குடுங்க “என்றாள் கண்கள் கலங்க அழுதுவிட கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றாள்

“நான் அண்ணாவை மட்டும் கூட்டிட்டு போக வரலை அண்ணி உங்களையும் கூட்டிட்டு போகத்தான் வந்தேன் “
“இப்போதைக்கு எங்கயும் வர அளவுக்கு என் மனசு இல்லை.. எனக்கு யோசிக்க டைம் வேணும் “என்றாள்
“நீங்க டைம் எடுத்துக்கோங்க நல்லா யோசிங்க ஆன முடிவு நல்லதா மட்டும்தான் இருக்கணும் அண்ணி திரும்ப நான் வருவேன் “என்று சொல்லிவிட்டு கிளம்பினார் இருவரும்

மனம் முழுவதும் வெறுமை நிரம்பிட இவ்வளவு நேரம் கட்டுப்பாட்டில் இருந்த கண்ணீர் கரைபுரண்டு வர தேற்ற யாருமில்லாமல் கண்ணீரில் கரைந்தாள் நாட்கள் அப்டியே போக தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிக்கொண்டாள் மீண்டும் யூ எஸ் போய்விடலாம் என்று அவள் யோசிக்க உடனே அவள் மனத்திரையில் பப்பு வந்து நின்றான் இப்போ அவன் வெறும் பப்பு மட்டும் அல்ல தன் கணவனும் ஆயிற்றே!! தாலியின் மகத்துவத்தையும் மதிப்பையும் அறியாதவள் அல்லவே!!

இப்படி ஒரு திருமணம் நடந்து அவர்களின் குடுப்பதிற்கு தெரிந்தால் தன்னை எத்தனை கேவலமா நினைப்பார்கள் என்று நினைத்தவளுக்கு கூடவே கூடவே கூடாது கடைசி வரை அவர்களுக்கு தெரியவே கூடாது இனி இந்தியாவில் இருக்கவே கூடாது என்று முடிவு செய்தாள் வர்ஷா

மனம் குழம்பி போய் இருக்க ரோகித்துக்கு கால் செய்தல் “ரோ...”என்றவளின் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவன் “என்னாச்சி வர்ஸு என் டல்லா பேசுற “என்றான் வர்ஷா எப்போது டல்லா இருக்கும் போதும் சரி அவள் குழப்பத்தில் இருக்கும்போதும் சரி ரோகித்தை ரோ என்று தான் அழைப்பாள் அதிலிருந்தே அவன் புரிந்து கொள்வான் ஏதோ சரி இல்லை என்பதை

“ரோ நான் யூ எஸ் வந்துட போறேன் இனிமேல் நான் இந்தியால இருக்கவே மாட்டேன் “என்று அழ ரோகித் பதறிப்போனான்
“வர்ஸுமா வாட் ஹேப்பெண்ட்? , ஒய் ஆர் யூ கிரையிங் டா? “என்றான்
“ரோ ஆம் நோட் ஓகே “
“வாட் ஹேப்பெண்ட் டா ? நீ சொன்னதான தெரியும் “
“ரோ எங்க நான் யாருக்காக வந்தானோ அவங்களே இப்போ இல்லை”என்று அழ
“என்ன சொல்ற வர்ஷா? “என்று அவன் அதிர்ந்து போனான் அவள் சொன்னதை கேட்டு
“என்ன நடந்துச்சு ஒழுங்கா சொல்லு வர்ஸு “என்று அவன் கேட்க அனைத்தையும் சொன்னாள் அந்த திருமணம் பின் ரிஷி வந்தது பேசியது என அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள்

“ப்ளீஸ் ரோ நான் உடனே யூ எஸ் வரேன் என்னால இனிமேல் இங்க இருக்கவே முடியாது “என்றவளை என்ன சொல்வது என்று புரியாமல் யோசித்தான்
சகுந்தலாமாவின் இந்த பிரிவை அவன் கனவிலும் நினைத்திருக்க வில்லை தானும் உடைத்துப்போனால் அது வர்ஷாவை மேலும் பாதிக்கும் என்று தான் தான் மனதை கட்டுப்படுத்தி கொண்டு,
“வர்ஸு ப்ளீஸ் எப்படி பயந்து ஓடிட எல்லாம் பிரச்சனையும் முடிஞ்சிடுமா?
உன் கழுத்துல ஒருத்தர் தாலி கட்டி இருக்கார் அது சந்தர்ப்ப சூழ்நிலையாலதான் நடந்தது ஆன அதுக்காக நடந்த கல்யாணம் இல்லனு ஆயிடுமா?
தமிழ் நாட்டு பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பதிக்குறவ யூ எஸ்ல இருந்தாலும் நம்ம குணப்பா அந்தே பண்பாட்டு கலாச்சாரத்தையும் சொல்லிகுடுத்துதானே நம்மளை வளத்தார் உன்னால எப்படி இப்படி பேச முடியுது வர்ஸு? அவசரத்துல எடுக்குற முடிவு எப்பவும் சரியா இருக்காது எதையும் பொறுமையா யோசி “

“இல்ல ரோ என்னால இங்க இருக்க முடியாது நான் யோசிச்சிதான் இந்த முடிவை எடுத்து இருக்கேன் “
“இப்போ நீ ஒருத்தரோட மனைவி அது முதல்ல நியாபகம் இருக்கட்டும் வர்ஸு “
“எப்படி என்னால இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியும்? என் சுயநலத்துக்காக நான் இவ்ளோ தனையே யாருனு தெரியாத ஒருத்தர் நிலையை எனக்கு சாதகமா மாத்தி கல்யாணம் பண்ணி, “என்று அவள் குரல் உடைய

“வர்ஸுமா இதுல உன் தப்பு என்ன இருக்கு சொல்லு இதுல உன்னோட தப்பு ஏதும் இல்லைடா நீ உன் சுயநலத்துக்காக எதையும் செய்யலை உன் அம்மாவோட கடைசி அசைக்காக தான் செஞ்ச அதும் நீயா செய்யலையே! சந்தர்ப்பகிமும் சூழ்நிலையும் சகும்மாவை அப்படி யோசிக்க வச்சிருக்கு இதுல உன்னோட சுயநலம் எங்க இருக்கு வர்ஸு? “
“தாலிக்கான மகத்துவத்தையும் மரியாதையக்கியும் நான் சொல்லித்தான் உன்க்கு தெரியணும்னு இல்லை அது உனக்கே நல்லா தெரியும் “என்று பீடிகை போட்டு பேச
“இப்போ நான் என்னதான் பண்ணறது? “
“உன் புருஷனோட சேந்து வாழு “

“வாட்l!!! அது எப்படி என்னால முடியும் ரோ “
 
Status
Not open for further replies.
Top