உறவே 4
ரிஷி காரை இயக்கி அவர்கள் கிளம்பும் போதே இருட்டிவிட்டிருந்தது கார் சாலையில் சர்ரென்று சீறி பாய்ந்து கொண்டிருந்தது ரிஷி சாலையில் கவனம் வைத்து காரை ஒட்டிக்கொண்டிருந்தான் அவளோ அசதியில் தூங்கிவிட்டிருந்தாள் அவள் உறக்கம் கலையாதவண்ணம் காரின் வேகத்தை குறைது ஓட்டினான்..
அவள் உறக்கம் கலைந்து விட்டதா என்று அவளை பார்க்க அவளோ குழந்தைபோல் உறங்கிக்கொண்டிருந்தாள்... ஏனோ அவளை பார்க்க முகமும் மனமும் தானாக புன்னகை பூசிக்கொண்டது.. அதே புன்னகையுடன் தங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்றடைந்தான் ரிஷி ..
அவளை எழுப்ப மனமே இல்லை அவனுக்கு, குட்டி தேவதை போல் அவள் உறங்க அதை கலைக்க மனம் இல்லாமல் அவளையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் தூங்கும் அழகை மெய்ம்மறந்து ரசித்த மனதை கட்டுப்படுத்தி “ச்சை என்ன வேலை பாக்குறடா ரிஷி, அதுவும் நம்பலை நம்பி பாதுகாப்புக்காக வந்தவளிடம் “என்று தன்னை தானே நொந்துகொண்டது...
அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது இதுவரை அவள் பெயரைக்கூட கேக்காதது “பெயர் கூட தெரியாதே எப்படி எழுப்புறது? “இதுவரை பெயர்கூட கேட்காத அவனின் அசட்டுத்தனத்தை என்னவென்று சொல்வது என நினைத்தான்
“ஹலோ ஹலோ “என்று அவன் அழைக்க அவனுக்கு அதிகம் சிரமம் கொடுக்காமல் முதல் குரலிலே எழுந்துவிட்டாள், எழுந்தவள் ஒருகணம் தன் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் மருண்டு விழிக்க அவளின் மருண்ட விழி கண்டு மயங்கித்தான் போனான் அவன் ‘அய்யோ இவள் வேற முட்ட கண்ணை உருட்டி உருட்டி கட்டுறாளே ‘
“டேய் ரிஷி வேணாம் டா அவளை பாக்காத “என்று மூளை கட்டளையிடலும்
மனம் அதை ஏற்கவேண்டுமல்லவா இந்த மானம்கெட்ட மனம்தான் அவளிடம் சொக்கி நிற்கிறதே
அவளின் சிந்தனையை கலைக்கும் வகையில் “இப்போ நீங்க என்கூடத்தான் இருக்கீங்க “என்றான்
“சாரி சார்!!.. இவ்ளோ தூரம் ட்ராவல் பண்றது இதுதான் முதல் தடவை பஸ்ல வரும்போது ரொம்ப பயமா இருந்துச்சி அதன் நைட் முழுக்க தூங்கவே இல்லை சார் இப்போ என்னையும் அறியாமல் தூங்கிட்டு இருக்கேன் “
“அதுக்கு என் இவ்ளோ பதட்டம்...
நாம உள்ள போலாமா? “என்றவன் அவளை பார்க்க அவள் சரி என்று சாலையசைத்தல் அவளை தூக்கி வீழ்ச்சரில் அமரவைத்தான்
“சார் என்ன சார் ஹாஸ்டல் இவ்ளோ பெரிசா இருக்கு பணக்காரங்க தங்குற ஹாஸ்டல் போல சார், என்கிட்ட அவ்ளோ பணம்லா இல்லை, எனக்கு ஏத்தமாதிரி எதாவது ஹாஸ்டல் காட்டுங்க சார் அங்கேயே தங்கிக்குறேன் “என்றாள்
“இது ஹாஸ்டல்னு யார் சொன்ன? “
“பின்ன இல்லையா? “
“இல்ல, இது என்னோட விடு இனிமேல் நீ இங்கதான் தாங்க போற “என்றான் முடிவாக
“வேணாம் சார் என்னால உங்களுக்கு வீண் சிரமம்,இதுக்கு என்னை எதாவது ஹாஸ்டல்லா விட்ருங்க சார் “
“இப்போ உன் கால இருக்க நிலைமைக்கு ஹாஸ்டல் பாதுகாப்பா இருக்காது நீ இங்க இருக்கறதுதான் பாதுகாப்பு “
“இல்லை சார்... “என்று அவள் தொடங்கும் முன்பே
“பச்... எதுவும் பேசவேணாம் நீ இங்கதான் தங்கணும் “என்றான் உறுதியாக
“சரிங்க சார் “
“ஆமா உன் பெயர் என்ன? “என்று அவன் கேட்க இவனின் கேள்வியில் அவள் சிரிக்க
“ஏன் சிரிக்குற? “
“இல்லை எனக்கு பெயர்னு ஒன்னு இருக்றதே இப்போதான் உங்களுக்கு நியாபகம் வந்துருக்கு அதை நினைச்சேன் சிரிச்சேன் “
“ஈஈஈ, கேக்க மறந்துட்டேன், சரி சொல்லு “என்றான்
“நேத்ரா “
“நைஸ் நேம்... உனக்கு இந்த பெயரவச்சது யாரு ?”
“யாருக்கு தெரியும் “என்றாள் வெகு இயல்பாய்
“சாரி டா “
“இதுக்கு ஏன் சார் சாரிலாம் சொல்றிங்க “
“இனி சொல்லலை நேர்த்தி “என்றவனை அவள் கண்கள் அகலாது பார்க்க
“ஏன் என்ன பாத்த எதாவது விசித்திர ஜந்து போல இருக்க என்ன? “
“என் பெயரை யாரும் இப்படி கூப்பிட்டது இல்லை சார் நீங்க கூப்பிடும் போது என் பெயரே எனக்கு புதுசா தெரியுது “என்றாள்
அவனுக்கு அப்போது தெரியவில்லை தன் மனம் அவளை தன்னவளாக ஏற்றுக்கொண்டதன் விளைவாய் தான் அவளிடம் உரிமை எடுத்துகொல்கிறோமென்பதை அவன் உணர வில்லை
அவளை உள்ளே அழைத்து செல்ல பாட்டி ஹோலில் அமர்த்திருந்தார் அவரிடம் நேராகச்சென்று நடந்ததை அனைத்தையும் சொன்னான் “இதுக்கு ஏன் என்கிட்ட இவ்ளோ விளக்கம் கொடுக்குற ரிஷி அந்த பொண்ணு இங்கயே இருக்கட்டும் என்றார்
“அம்மாடி உன் பெயரென்ன? “என பாட்டி கேட்க,
“நேத்ரா “என்றாள் பயந்த விழிகளோடு
“அழகான பெயர் “என்றவர் அவள் தலையை வருடிவிட
“பயப்பட கூடாது டா நேத்ரா,நீ மேல இருக்க அந்த ரூம்லா தங்கிக்கோட இதை உன்விடா நினைச்சுக்கோடா உனக்கு என்ன வேணும்னாலும் இந்த பாட்டிகிட்ட கேளுடா, சரியா?“என்றுவிட்டு அவளை அனைத்துக்கொண்டர்
“சரிங்க பாட்டி “
“ரிஷி நேத்ராக்கு மேல் ரூம் குடுத்துட்டு “என்றார்
“சரி பாட்டி “
“எங்கவிட்டு மூணு வாண்டுங்களும் வெளில போய்ருக்குங்க அவங்க வந்த உனக்கு நல்லா டைம் பாஸ் ஆகும் “என்றவர்
தான் யாரோ தன்னை இப்போதுதான் பார்க்கிறார்கள் ஆனால் இவர்கள் காட்டும் அன்பு எத்தகைய உன்னதமானது அவர்களின் அன்பில் நெகிழ்ந்து போனாள் நேத்ரா... இவங்களுக்கு எந்த விதத்திலும் தன்னால கஷ்டம் வந்துட கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டாள் நேத்ரா
**********************
“வர்ஷா “என்று கத்திக்கொண்டு குணசேகரன் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு சரிந்து விழ உள்ளே இருந்து வெளியேவந்த வர்ஷா அதிர்ச்சியில் செய்வதறியாது தந்தையிடம் ஓடினாள் “அப்பா என்னாச்சுப்பா, என்னப்பா பண்ணுது? “என்று அவள் பதற குணசேகரன் மயங்கமனார்
நேரத்தை வீணடிக்காது ரோகித்தின் உதவியுடன் குணசேகரனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள் வர்ஷினி குணசேகரனை அவசர பிரிவில் அனுமதித்து டாக்டர்ஸ் சிகிச்சையளித்தனர்
“வர்ஷா ப்ளஸ் அழாத குணப்பாக்கு ஒன்னும் ஆகாது “என்று வர்ஷாவை தோளோடு அணைத்து ஆறுதல் சொன்னான் ரோகித் ஆனால் அவைகளை காதில் வாங்கும் மனநிலையில் அவள் இல்லை அவளின் அழுகை மேலும் கூடியதே தவிர குறையவில்லை ரோகித்துக்கு அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்தான்
டாக்டர்ஸ் வெளியே வர ரோகித்தும் வர்ஷாவும் டாக்டரிடம் சென்று விசாரித்தனர் குணசேகரனுக்கு “மைல்டு அட்டாக் “என்றும் “இப்போது அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர் உடல் நிலை நன்றாக உள்ளது “என்பதையும் “அவர் மனதை காயப்படுத்தும் விஷயங்களையோ, அவரை அதிச்சியாக்கும் விஷயங்களையும் தவிர்த்து கொள்வது நல்லது “என்று டாக்டர்ஸ் சொல்லிவிட்டு சென்றனர்
ரோகித் சிந்தனையில் இருக்க “என்னடா யோசிக்குற? “என்றாள் வர்ஷா
“கொஞ்சநாளா குணப்பா சரியே இல்ல வர்ஷா இப்போல்லாம் குணப்பா அதிகமா உன்ன பத்தின கவலைதான் அதுவும் உன்னை சகுந்தலாமா கிட்ட இருந்து பிரிச்சி அவர் ரொம்ப பெரிய பாவம் பண்ணிடாத சொல்லிட்டே இருக்காரு “
“ஆமா ரோகித் என்கிட்டயும் இதை பத்தி பேசினார் நானும் எவ்ளோவோ சொல்லி பாத்துட்டேன் ஆன அப்பா அதையேதான் பேசிட்டு இருந்தார் “என்றவள் கண்கள் கலங்க “ரோகித் அப்பாக்கு என்னாலதான் இப்படி ஆயிடுச்சா “என்று கதறி அழ
“இல்ல வர்ஷா அப்படி எல்லாம் எதுவும் இல்லை, நீ ஏன் இப்டிலாம் நினைக்குற?”
“இல்ல ரோகி எல்லாத்துக்கும் காரணம் நான்தான் “
“பச்..., அப்டிலாம் இல்லை “என்ற ரோகித்தின் வார்த்தைகளை அவள் ஏற்காது அவன் மடியில் படுத்து அழுது தீர்த்தவள் ஒரு முடிவோடு நிமிர்ந்து ரோகியை பார்க்க,
“ரோகித் நான் இந்தியா போக போறேன் “என்றாள் தீர்மானமாய்
“வாட்!!? “
“ஆமா நான் இந்தியா போக போறேன். “
“வர்ஷா குணப்பாக்கு தெறிச்ச அவ்ளோதான்!., குணப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டார் “
“அப்பாக்கு தெரியக்கூடாது ரோகித் அம்மாவையும் அப்பாவையும் எப்படியாவது சேர்த்துவாச்சே ஆகணும் “
“அதெல்லாம் சரிதான் ஆன சரியவருமா? உனக்கு இந்தியா பழக்கம் இல்லாதது அங்க இருக்கவங்க பத்தி எதுவும் தெரியாது எப்படி வர்ஷா “
“அதெல்லாம் நான் பத்துறேன் டா “
“அப்போ நானும் வரேன் நாம ரெண்டுபேரும் போலாம் “
“நோ ரோகித் நீ இங்க இருக்க தைரியத்துலதான் நான் இந்தியா கிளம்புறேன் ப்ளீஸ் நீ அப்பா கூட இருடா “
“உன்ன தனியா அனுப்ப கண்டிப்பா நான் ஒதுக்க மாட்டேன் வர்ஷா “என்றான் முடிவாய்
“ரோகித் ப்ளீஸ் புரிஞ்சிக்க இப்போ நீ இங்க இருந்தே ஆகணும் டா நீ இருக்க தைரியத்துலதான் நான் அங்க போறேன், நீயும் என்கூட வந்துட்டா அப்பாவை யார் பாத்துக்குறது??,சோ நான் மட்டும் போறேன் “
“என்ன வர்ஷா நீ “
“பச்... நான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிக்குறேன் டா நீ கவலை படாத உனக்கு டெய்லி நான் கால் பண்றேன் எல்லாத்தையும் சொல்றேன் “
“ஹ்ம்ம்ம், எப்போ கிளம்ப போற? “
“டூ டேஸ் கழிச்சி “
“ஹ்ம்ம், குணப்பாகிட்ட என்ன சொல்லி சமாளிக்க போற? “
“லண்டன்க்கு ரிசர்ச்காக ஹையர் ஸ்டடீஸ் பண்ண போறேன்னு தான் சொல்லிட்டு போகணும்“
“ஹ்ம்ம்ம் “
“டாக்டர் இப்போ நாங்க அப்பாவை பாக்கலாமா? “
“பாக்கலாம் உள்ள போங்க “என்றார் டாக்டர்.. இருவரும் உள்ளே போக
“டாடி இப்போ வலி இருக்க “என்று கண்களின் கண்ணீருடன் கேட்கும் வர்ஷாவை அழைத்து அருகில் அமரவைத்து “இல்லடா இப்போ வலி இல்லை டாடி நல்லா இருக்கேன் “
“டாடி கொஞ்ச நேரத்துல எங்க உயிரே போயிடுச்சி “என வர்ஷா தந்தையை அணைத்துக்கொண்டு அழ
“வர்ஷா டாடிக்கு எதுவும் இல்லை “என்று அவளை சமாதானம் செய்தர்
வர்ஷா தன் உணர்வுகளை வெளியே காட்டிவிடுவாள் ஆனால் ரோகித் அப்படி இல்லை எந்த உணர்வுகளையும் எளிதில் வெளிக்காட்டாதவன்..ரோகித் முகம் வாடினாலே அது வர்ஷாவையும் பாதிக்கும்...எப்போதும் தன் உணர்வுகளை வெளிக்காட்டாதவன் இன்று வடிய முகத்தோடு நிற்க அவனை அழைத்து மறுபுறம் அமரவைத்து வர்ஷாவையும் ரோகித்தையும் தோளோடு அனைத்து இருவர் நெற்றியிலும் முத்தமிட்டார்...
நர்ஸ் டேப்லெட் எடுத்துவந்து குணசேகரனுக்கு கொடுத்துவிட்டு சென்றார் “என்ன குணப்பா அந்த நர்ஸ் அப்படி லுக் விட்டுட்டு போது “என்று புருவன் உயர்த்தி சூழ்நிலையை மாற்ற எண்ணி ரோகித் கலகலப்பில் இறங்கிட
“சரியில்லையே !!”என்றான் ரோகித்
“உனக்கு ஏன் மேன் வயித்தெரிச்சல் என் டாடி ஹன்சாம் சோ பிகர்ஸ்லாம் சைட் அடிக்குது உனக்கு ஏன்டா பொறாமை “
“எனக்கு பொறாமையா இந்த ரோகித் பின்னாடி இவ்ளோ பொண்ணுங்க சுத்துறாங்கனு தெரியாத கேர்ள்”
“அதைத்தான் நாங்க பாத்தோமே “என்று வர்ஷா சிரிக்க
“டாடி ‘ஹ்ம்ம்’ னு ஒரு வார்த்தை சொல்லுங்க போதும் அந்த பிகரை கரெக்ட் பண்ணிடலாம் “
“எனக்கு டபுள் ஓகேம்மா “என்றார் குணசேகரன்
“ஓகே டாடி சீக்கிரமா மேரேஜ் டேட் பிஸ் பண்ணிடலாம் “என்றாள் அங்கு கனத்த சூழல் அகன்று அனைவரும் சகஜமான மனநிலையில் இருந்தனர்
மாத்திரையின் விரியத்தில் குணசேகரன் தூங்கிவிட ரோகித்தும் வர்ஷாவும் வெளியே வந்தனர் “ரோகி எப்படியாவது அம்மாவையும் அப்பாவையும் சமாதானம் செஞ்சி செத்துவாச்சிடணும் டா, அப்பாவோட இந்த சந்தோசம் எப்பவும் நிலைச்சி இருக்கணும் அதுக்கு நான் அம்மாவை கண்டுபுடிக்கணும், அம்மா அப்பா தாத்தா பாட்டி மாமா அத்தைனு நாம எல்லாரும் ஒன்ன ஒரே குடும்பமா வாழனும் டா இதை எல்லாம் அப்பாக்கு தெரியாம செய்யணும் “
“சகும்மாவை கண்டுபுடிச்சிடலாம் வர்ஷா உன் ஆசைப்படியே எல்லாம் நடக்கும், ஏதும் ஐடியா வச்சி இருக்கியா?? “
“இனிதான் யோசிக்கணும் என்ன பண்றதுனு “
“டாடி நைட் நல்லா தூங்குனீங்களா பைன் ஏதும் இருந்துச்சா?? “
“நல்லாத்தான் தூங்கினேன் டா,பைன் எதுவும் இல்லை”
“டாடி “என்று வர்ஷா தயங்க
“என்னடா சொல்லு ஏன் தயங்குற? எதுவானாலும் சொல்லு “
“டாடி முன்னாடி ஹையர் ஸ்டடீஸ்காக லண்டன் யூனிவர்சிட்டிக்கு அப்ளிகேஷன் போட்டு இருதேன் அதுக்கு ஜாயின் பண்ண சொல்லி லெட்டர் வந்து இருக்கு “
“அதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம் எப்போ கிளம்பனும் டா “
“டூ டேஸ் கழிச்சி “
“சரி சந்தோசமா போய்டுவா “
“இல்ல டாடி உங்களை இந்த நிலமைல விட்டுட்டு எப்படி “
“ப்ச்... ரோகித் இருக்கான் டா அவனை விட வேற என்ன வேணும் சொல்லு நீ இதை பத்தியும் கவலை பாடமா போய்டுவா டா “
“சரிங்க டாடி “என்றவள் வீட்டிற்கு கிளம்பினாள் இந்தியா சம்மந்த பட்ட ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று விடு முழுவதும் தேட அவள் எதிர்பார்த்தது போல் தேவையான தகவல்கள் கிடைத்தது அவைகளை பத்திரப்படுத்தி இந்தியா போவதற்கான ஏற்பாடுகளை செய்தள், இந்தியாவில் உள்ள தந்தையின் நண்பன் ராமலிங்கத்தின் உதவியால் அனைத்தையும் தயார் செய்தாள் வர்ஷா..
இந்தியா கிளம்பும் நாளும் வந்தது “ரோகித் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இந்தியால அம்மா தாத்தா பாட்டி மாமா அத்தை இப்படி நிறைய சொந்தங்களை பாக்க போறேன் “என்று குதூகலித்தல் வர்ஷா
“கூடிய சீக்கிரம் டாடியா இந்தியா கூப்டுட்டு போயிடனும் “என்றாள் வர்ஷா
ரோகித் மனம் வாடியது தன்னை விட்டு இருவரும் பிரிந்து சென்றுவிடுவார்களோ என்று அதை கண்டவள் “ஓய் என்ன பீலிங்கா உன்னல இங்க விட்டுட்டு போக மாட்டேன் இந்தியால ஒரு பொண்ணை பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுறேன் டா நீயும் ஆன்ட்டியும் என்கூட இந்தியாலதான் இருப்பிங்க நீங்க இல்லாம என் பேமிலி எப்படிடா ஃபுல்ஃபில் ஆகும் “என்றாள் வர்ஷா
“எனக்கு டபுள் ஓகே வர்ஷா “என்றான் சந்தோஷம் பொங்கிட
“அலையதடா எருமை “
“அவன் அவன் கஷ்டம் அவனவனுக்கு “என்றவனை காதை பிடித்து திருகினாள்
***********
இரண்டு வாண்டுகளும் சுவற்றில் மறைந்து நின்றுகொண்டு தலையை மட்டும் எட்டி பார்க்க “இங்க வாங்க குட்டிஸ் “என நேத்ரா அவர்களை செய்கையால் சிறுபிள்ளை போல் அழைக்க ரெண்டு வாண்டுகளும் மெதுவாய் சின்னச்சிறு கால்களை பதித்து மெதுவாய் வந்து அவள் முன் நின்றனர் “நீந்த எந்த வித்துக்கு வந்த தேஸ்த்தா “என மழலை மொழியில் கேட்க
“ஹ்ம்ம் ஆமா “என இருவரையும் வரி அனைத்து முத்தமிட்டாள் நேத்ரா
“செல்லகுட்டிஸ் பேர் என்ன? “
“என் பெது ஆதிரா அவ பெது ஆதியா “என்று மழலை மொழியில் சொல்ல
“உத்த பெதென்ன? “
“என் பெயர் நேத்ரா “
“நேத்ஆ வா “என்றனர் இருவரும்
“ஹ்ம்ம் ஆமா “என்றாள் நேத்ரா
“திரா குட்டி தியா குட்டி எங்க இருக்கீங்க “என்று தாரு இருவரையும் தேடிக்கொண்டு மேலே வர
“ஆட பெரிய மனிஷிங்க ரெண்டு பேரும் இங்கதான் இருக்கீங்களா? “என்று உள்ளே வந்தாள்
“ரெண்டு பெரிய மனிஷிகளும் உங்கள விசாரிக்க வந்துட்டாங்க போல “என தோழமையுடன் பேசிய தாரிகாவை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தாள் நேத்ரா
“ஆம் தாரிகா “என்று நட்புடன் கைகுலுக்கினாள் தாரிகா “ஆம் நேத்ரா “என்றாள் புன்னகையுடன்
“குட்டிஸ்லாம் சம சேட்டை பண்ணுவாங்க போல”
“ஆமா வாலு பொண்ணுங்க போக போக நீங்களே இவளுங்க இம்சை தாங்கமுடிலனு சொல்விங்க பாருங்க “
“அப்டியா செல்ல குட்டிஸ் “என்று இருவரையும் பார்க்க இருவாண்டுகளும் சமத்து பிள்ளை போல் பாவமாய் பார்த்தனர்
“எல்லாம் கேடி நம்பாதீங்க நேத்ரா “
“சரி நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க “நாம அப்புறமா பாக்கலாம் என்று தாரு சொல்ல
“போங்க வாங்க வேணாம் நேத்ரானே கூப்பிடலாமே “
“ஹ்ம்ம்ம் சரி நேத்ரா நீயும் கூட தாரிகானே கூப்பிடலாமே,எல்லாரும் தாருனு கூப்பிடுவாங்க “என்றாள் தோழி கிடைத்த மகிழ்ச்சியில்
“சரி தாரு “என்றாள் குதூகலமாய்... தனக்கென்று கிடைத்த முதல் தோழியாயிற்றே தாரு.. இருவருக்குள்ளும் அழகிய நட்பு உருவானது .