ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆத்விகா பொம்முவின் நிறைவடைந்த நாவல்களுக்கான விமர்சனங்கள்

Subasini

New member
வேட்டையாடு விளையாடு....

தந்திரமாக தந்தரா விளையாட அங்கே வேட்டையாடியதோ இந்த கர்ணன் தான்...

காவலனாக களவாடிய பொன்னையும் பொருளையும் காப்பாற்ற வந்த காவலன், பணியின் காரணமாக பெண்ணின் கற்பை களவாடிய களவானியாக இந்த கர்ணன்.

காவலனாக நிமிர்வுடனே இருந்தவன் அவளிடம் எங்கையோ சருகி தான் போனான் அதை உணராமல் அவளை உயிரோடு உயிரற்ற மரமாகினான்...

ஐவரணியாக கப்பலில் வந்து குற்றவாளையை பிடித்தவன் கொன்றதோ பெண்ணின் நம்பிக்கையை...

ஒரு காவலனாக அவன் நினைத்தால் நிறித்தி இருக்க முடியும் தான்... அப்படியே இருந்தாலும் கதைக்கான களம் இருந்து இருக்காது நானும் படிச்சு இருக்க மாட்டேன்content konjam heavy தான் பேபிமா ??

என்ன பல காரணங்கள் சொன்னாலும் தவறு அவன் பக்கமும் தான்...

இந்த கதையில் வந்த அர்ஜூன் தான் கொஞ்சம் பாவம் இந்த சுபத்ரா எப்போ அவனை தேடி வருவா என்ற கேள்வி தொங்கி நிற்கிறது....

இந்த ஐவரில் பிடித்தது இந்தர்ஜித் தான்...

அவன் கதையை தனியாக படிக்கிறேன் சூப்பர் அவன்....

மத்த மூன்று ஹீரோக்கள் பாவம் தான் அவங்களுக்கு நியாயம் வேண்டும் பேபிமா...
அதனால் அவங்களுக்கு கதை எப்படி வரும் சொல்லுங்க ?... தீரன் தான் யோசனையாக இருக்கு ??

ஒரு கப்பல் அதில் இருக்கும் குற்றத்தை கண்டு பிடிக்கும் இந்த கதையில் ஒரு செயின் பின்னே பயணித்து அதில் வரும் கதாபாத்திரங்கள் இணைத்து மிகவும் சுவாரசியமாக தந்தது அருமை...

Jokerபொம்மை அதற்க்கான அர்ஜூன் போராட்டம் தான் ? அவன் ரொம்ப கஷ்ட பட்டுட்டான் ஒரு ஹீரோவாக.... அவனுக்கு தான் இந்த கதையில் அநியாயம் நடந்து இருக்கிறது பேபிமா மனசுல வச்சு அடுத்து அவனுக்கு எழுதுங்க...

இது பொங்கல்...

கர்ணன் அவளை ஏமாற்றியது அநியாயம் தான் முதல் முறை என்றால் பாவி பய அவன் பேசினது ரொம்ப ஓவர்...வலி என்றால் என்ன தெரியாமல் அவன் இருந்துட்டான் போல...வலிச்சாலும் காட்ட மாட்டான் டிசர் சொல்லுது ? அவள் மேல் வந்த அக்கறக்கான காரணம் உண்மையில் தவறு தானே பேபிமா.. அவன் கர்ணன் இல்லை கர்ணகொடூரன்??? அவ்வளவு தான் முடிஞ்சுது பொங்கல்....

உங்க எழுத்து உண்மையில் சூப்பர் டியர் வாழ்த்துக்கள் இதை போலவே மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்....

Site la first review ninikiren babyma
 
pommu

Administrator
Staff member

such a wonderful review baby ma.. thank u so much.. love u alote.. arjunai santhoshama vaala vachudalam
 
Rishi24

Well-known member
Wonderland writer
டாம் அண்ட் ஜெர்ரி

நாவலாசிரியர்: ஆத்விகா பொம்மு

ஹீரோ: அஷ்வின் (அஜித், ஆகாஷ்)

ஹீரோயின்: அஞ்சலி
(அனன்யா, அருக்காணி)

நகைச்சுவை கலந்த மிக ஆழமான கருத்துள்ள கதை.

என்ன தான் சண்டை போட்டாலும் காதல் பாசம்னு வரும் போது எந்த ஒரு மனிதனும் அடங்கிப் போவது இயல்பே... அது அஷ்வின் அஞ்சலி கேரக்டர் மூலம் தெளிவாக உணர்த்தப்பட்டது.

நம்பிக்கை... எந்த விடயத்திலும் நம்பிக்கை தான் மிக முக்கியம். நம்பிக்கை பொய்த்துப் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் அலாதியானது.

யார் என்ன சொன்னாலும் தன் வளர்ப்பு பொய்த்துப் போகாது என்ற நம்பிக்கையை தந்தை மகள் மீது வைக்காத அதேநேரம் மகளுக்கு இப்படி நடந்திருப்பது கண்டு தாயும் பேசாமல் இருந்தது மிகவும் வருத்தம்.

தந்தை நிலைமையில் பார்க்கும் போது அப்போதைய அவரின் மனநிலைக்கு அவர் நியாயவாதியே ஆனாலும் மகளின் நிலையிலிருந்து பார்க்கும் போது அது அவளுக்கு நியாயமானதே.

தந்தை மகளிடம் நம்பிக்கை எதிர்ப்பார்பது போல் தானே மகளும் தந்தையிடம் எதிர்ப்பார்த்திருப்பாள்.

மகளாக இருப்பதால் ஒதுக்கி வைத்து விட்டால் மகள் பார்வையில் நிச்சயமாக தந்தை நம்பிக்கையற்றவராகவே சித்தரிக்கப்படுவார்.

கதையில் மிக முக்கியமான பகுதி சந்தேகம் கொள்வதால் வரும் விளைவு.

அஜித் கேரக்டரின் குணநலன்களின் அடிப்படையில் அவன் செய்தது சரி அனன்யாவை பொருத்த வரை அவள் செய்தது சரி அல்ல இங்கு கருத்து.

இருவருக்கும் அவரவர் பார்வை சரி.

அஜித் கேரக்டரின் குணநலன் படி மனைவியை நோவித்தது சரி என்றாலும் அவன் வார்த்தைகள் பிழை.

பெண் மனம் எவ்வளவுக்கு எவ்வளவு மன்னிக்க கூடியதோ அவ்வளவுக்கு அவ்வளவு மன்னிக்க மறுப்பதும் உண்மை.

ஒரு விடயத்தை கணவனுக்கு சொல்லாமல் அனன்யா மறைத்திருந்தாலும் அவளுக்கு அவன் கொடுத்த தண்டனை அதிகம்.

மன்னிப்பு கேட்பவனை மன்னிக்க முடியாது அவனை அந்நிலையில் பார்க்கவும் முடியாத அவள் மனவேதனை கொடிது.

அஜித் பார்வையில் மனைவி மறைத்தது பிழை என்றால் அனன்யா பார்வையில் அவன் தண்டனை பிழை.

மனம் விட்டு வார்த்தைகள் பரிமாறப்படும் போது சந்தேகள் சிதறிப் போகின்றன என்பது கதையில் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.

பெண்கள் உயர்வாய் நினைக்கும் விடயம் கற்பு.

அளவு கடந்த காதல், எங்கே அவள் தன்னை விட்டு போய் விடுவாளோ என்கிற பயம் போன்ற காரணங்கள் அடிப்படையில் ஆகாஷ் என்கின்ற தனிமனிதன் செய்தது சரி.

ஒரு பொருளை தக்க வைத்துக் கொள்ள அவன் வழி அந்த நேரத்தில் அவனுக்கு சரியாக இருந்திருக்கிறது.

என்றாலும் பெண் பார்வையில் அது முழுக்க முழுக்க தவறான விடயம்.

நியாயம் கற்பிக்க கூட முடியாத ஓர் செயல்.

கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு என்பதை மறந்து என்ன பிழை செய்தாலும் பெண்ணையே குற்றம் சொல்வது தான் சமூகத்திலிருக்கும் மோசமான நீதி...

பெண் தவறு செய்தாலும் அவள் தான் குற்றவாளி ஆண் செய்தாலும் அவள் தான் குற்றவாளி.

ஆகாஷை மன்னிக்காமல் அருக்காணி செய்தது நூறு விகிதம் சரி... அதே நேரம் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டது அவள் குணத்தின் உயர்வு... அது அவள் வளர்க்கப்பட்ட முறை.

இங்கே அவரவர் பார்வையில் அவரவர் நியாயவாதியே தவிர யாரும் குற்றம் செய்தவர்கள் அல்ல...

அவர்கள் சித்தரிக்கப்படும் விதமே நம்மை புரிந்து கொள்ள தூண்டுகிறது.

நம்பிக்கை, காதல், சந்தேகம், கற்பு... நான்கும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கம் செலுத்துகிறது என்பதை நகைச்சுவை கலந்த உணர்வுடன் விளக்கிய ஆசியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

லவ் யூ கா ❤️

ரிஷி.

16-04-2021.
 
Top