அத்தியாயம் 13
வீட்டுக்கு வந்ததுமே, ரோஸியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவன் லிஸ்ட் போட்டான்...
அவளுக்கு மலைப்பாக இருந்தது...
இவ்வளவு அக்கறையாக ஊரில் நாயை பார்த்துக் கொள்ள மாட்டார்கள் அல்லவா? அதற்கு தனி அறை, தனி தட்டு, தனி குளியலறை என்று ராஜபோக வாழ்க்கை...
அனைத்தையும் பிரமிப்பாக பார்த்தவள், "நாயை இப்படி தானா பார்த்துக்கணும்?" என்று கேட்க, அவனோ, "இங்க மனுஷனுக்கு மதிப்பு கொடுக்கிறத விட நாய்க்கு அதிகமாகவே கொடுப்பாங்க" என்று சொல்லி விட்டு நகர, அவளோ, "ரோஸி" என்று அழைத்துக் கொண்டே நாய்குட்டியை கட்டிப் பிடித்தாள்.
அவளுக்கு அந்த நாயை பராமரிப்பது பிடித்து தான் இருந்தது...
நாள் முழுதும் அதனுடன் தான்...
அவனும் வேலைகளை முடித்து விட்டு வெளியே வந்து அடிக்கடி ரோஸியை முத்தமிட்டுச் செல்வான்...
அவளோ அவன் செயலை பார்த்து இதழ்களை பிதுக்கியவள், 'இவர் ரோஸி மேல தான் இவ்ளோ பாசம் வச்சு இருக்கார்' என்று நினைத்துக் கொண்டாள்.
இரவானதும் ரோஸியை தூக்கிக் கொண்டே அறைக்குள் தூங்கச் சென்று விடுவான்...
அடுத்த நாள் ஜிம்மில் ஆரம்பிக்கும்...
அவள் முதல் நாள் குங்குமம் வைத்தாள்...
அடுத்த நாள் இருந்து வைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டான்...
"பார்க்க பட்டிகாடுனு அப்படியே தெரியுது" என்று திட்டு வேறு...
ஜெர்க்கின் உள்ளே தாலியை மறைத்து போட்டு இருந்தாள்.
இப்படியே அவள் ஜிம்முக்கு வந்ததுமே, இன்று அவளை ஆழ்ந்து பார்த்தான் கபிலன்...
சர்வஜித் ஜிம் செய்துக் கொண்டு இருக்க, சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு இருந்த ஆதிரையாழுக்கு அருகே வந்த கபிலனோ, "ஹாய்" என்று சொல்ல, அவளும், "ஹாய்" என்றாள் புன்னகைத்தபடி...
அவனோ அவள் இருக்கைக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தபடி, "உங்க முகத்துல ஏதோ வித்தியாசம் தெரியுதே" என்றான்...
"என்ன?" என்றாள் பெண்ணவள்...
"பொட்டை காணோம்" என்றான்...
"ஹி ஹி வைக்கல" என்று சமாளிக்க, "ஓகே லீவ் தட், கல்யாணம் ஆயிடுச்சா? இங்க வேலைக்கு வர அம்மா, அப்பா விட்டுட்டாங்களா?" என்று கேட்டான்...
அவளுக்கோ அம்மா, அப்பா என்று சொன்னதுமே கண்கள் கலங்கி போக, "எனக்கு அம்மா, அப்பா இல்ல" என்றாள் தலையை குனிந்தபடி...
அவளை ஆழ்ந்து பார்த்த கபிலனோ, "சாரி" என்று சொன்னவனோ குரலை செருமிக் கொண்டே, "கல்யாணம்?" என்றான்...
என்ன சொல்வது என்று தடுமாற்றம் தான்...
சட்டென சுதாரித்தவள், "இல்ல" என்றாள்.
"ஓஹ் ஓகே" என்று அவன் குரல் மார்க்கமாக வர, ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், "லவ்?" என்றான் கேள்வியாக...
அவள் அழுத்தமாக தலையை இல்லை என்று ஆட்டினாள்...
அவனோ மென் புன்னகையுடன், "ஓகே, நாளைக்கு பேசலாம்" என்று சொல்லி விட்டு எழுந்தவன், "நீங்க வாங்கனு பேசாம, நீ வா ன்னு கூப்பிடவா?" என்று கேட்டான்...
அவளோ, "நீங்க என்ன விட பெரியவங்க தானே... கூப்பிடுங்க" என்றாள்.
அவனும் மென் புன்னகையுடன் கண் சிமிட்டி விட்டு அவளை கடந்துச் செல்ல, அவளும் சினேகமாக புன்னகைத்துக் கொண்டாள்.
அவர்கள் பேசுவது சர்வஜித் கண்ணில் இருந்து தப்பவில்லை என்றாலும் என்ன பேசினார்கள் என்று அவனுக்கும் தெரியவே இல்லை...
அன்றைய நாள் அவன் அலுவலக வேலைகளில் பிசியாகி விட, அவளோ ரோஸியுடன் இருந்து விட்டாள்.
ரோஸியை தவிர அவளுக்கு நேரம் கடத்த வேறு வழிகளும் இல்லை... வீட்டிற்கு வேலை செய்ய வரும் இரு பெண்களுக்கோ தமிழ் தெரியாது... அவர்களிடம் என்ன பேசுவது என்று இவளுக்கும் தெரியாது...
"ஹாய்", "ஹெலோ" என்று சொல்லி விட்டு வீட்டை சுத்தம் செய்வார்கள்...
இவளும் புன்னகைத்து விட்டு இருந்து விடுவாள்...
சமைக்கவும் கூடாது என்று அவன் சொல்லி விட்டான் அல்லவா? அவளுக்கோ அலுப்பாக இருந்தது...
இப்படியே நாட்கள் நகர, அவளது மாதவிடாய் நாட்களும் நெருங்கி இருந்தது...
அவளுக்கு உரிய உடைகள் எல்லாமே அவன் ஊரில் வைத்து வாங்கி கொடுத்தாலும் நேப்கின் வாங்கி கொடுக்கவில்லை...
அவனுக்கு அது பற்றிய சிந்தனை இருக்கவில்லை...
அவளுக்கோ நாட்கள் நெருங்க நெருங்க பயம்...
அவனிடம் கேட்டே ஆக வேண்டும்...
எப்படி கேட்பது என்று தெரியாது...
சங்கடமாக இருந்தது...
அன்று இரவு வெளியே போய்ட்டு அறைக்குள் புகுந்துக் கொண்டான்...
அவளோ கையை பிசைந்துக் கொண்டே, அவன் அறை வாசலில் நின்று இருக்க, குளித்து விட்டு வெளியே வந்தவனோ அவளை புருவம் சுருக்கி பார்த்து விட்டு, தனது உணவை தட்டில் எடுத்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தான்...
அவள் அவன் அருகே வந்து மீண்டும் அப்படியே நின்று இருந்தாள்...
"வேலைக்கு வந்தவங்க போய்ட்டாங்களா?" என்று கேட்டுக் கொண்டே சாப்பிட ஆரம்பிக்க, "ம்ம்" என்றாள்.
"ரோஸி என்ன பண்ணுறா?" என்று கேட்க, "தூங்குறா" என்றாள்.
"என்ன விஷயம்?" என்று கேட்டான்... இத்தனைக்கும் அவன் அவளை பார்க்காமலே பேசிக் கொண்டு இருந்தான்... அவளோ தலையை குனிந்து இருந்தவள் அவன் கேள்வி கேட்டதுமே ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "நான் தலைக்கு குளிக்கிற நாள் வந்திடுச்சு" என்றாள்.
அவளை விசித்திரமாக திரும்பி பார்த்தவன், "ஷாம்பு எல்லாம் இருக்கு தானே" என்றான்...
அவளுக்கு ஐயோடா என்று இருந்தது...
"நான் வீட்டுக்கு தூரமா போக போறேன்" என்றாள்...
அவனோ, "வேற வீடு எடுத்து போக போறியா? உன் இஷ்டம்" என்றான்...
அவளுக்கு மயக்கம் வராத குறை தான்...
எப்படி அவனிடம் சொல்வது என்று தெரியவே இல்லை...
"இன்னைக்கு பதினைந்தாம் தேதி" என்றாள்.
"ஐ க்னோ" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்...
"நாளைக்கு வந்திடும்" என்றாள்.
"என்ன வந்திடும்" என்றான் அவன்...
அவளுக்கு பேசி பேசியே களைப்பாக இருந்தது...
ஆழ்ந்த மூச்சை எடுத்தவளோ, "பொம்பிளைங்க சமாச்சாரம்" என்றாள்.
"புரியுற போல பேசு ஆதிரா, இப்போ என்ன சமாச்சாரம்?" என்று கேட்டான்...
"மாசம் மாசம் வருமே" என்றாள் இயலாமையுடன்...
அவனுக்கு புரிவது போல இருந்தது...
"மாசம் மாசம் என்ன வரும்?" என்று கேட்டான் வேண்டுமென்றே...
பொறுமை இழந்து விட்டாள்...
"மாதவிடாய்னு சொல்வாங்களே அது தான்" என்றாள் சத்தமாக...
அவளை திரும்பி அவன் பார்க்க, அவளோ தலையை குனிந்துக் கொண்டாள்.
"பீரியட்ஸ் ஆஹ்? அதுக்கு இப்போ என்ன?" என்றான்...
"என் கிட்ட, என் கிட்ட" என்று அவள் தடுமாற, அவனுக்கு புரிந்து விட்டது, "நேப்கின் வேணுமா?" என்று கேட்டுக் கொண்டே, தொலைப்பேசியில் ஆன்லைன் ஆர்டர் ஒன்றைப் போட்டு இருந்தவன், "இன்னும் கொஞ்ச நேரத்தில வாசலுக்கு வந்திடும் எடுத்துக்கோ" என்று சொல்லி விட்டு சாப்பிட, அவளோ, "யார் கொண்டு வந்து கொடுப்பாங்க?" என்று கேட்டாள்.
"அமேசான்" என்றான் அவன்...
"அது யாரு?" என்று கேட்க, "ஒரு கம்பெனி" என்று அவன் சொல்ல, "வீட்டுக்கு எல்லாம் வருமா?" என்று கேட்டாள்
"இங்க எல்லாமே வீட்டுக்கு வரும்... தொண தொணன்னு பேசாதே, என்னை சாப்பிட விடு" என்று சொல்லி விட்டு சாப்பிட, அவள் மௌனமாக சென்று ஓரமாக நின்றுக் கொண்டாள்.
சற்று நேரத்தில் அவன் சொன்ன போல நேப்கின் அடங்கிய பெட்டி வீட்டுக்கே வந்து சேர, ஆதிரையாழோ அதனை எடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்...
இப்படியே மீண்டும் நாட்கள் நகர ஆரம்பித்தன...
கபிலன் இப்போதெல்லாம் அடிக்கடி ஆதிரையாழிடம் பேச ஆரம்பித்து இருந்தான்...
குளிரும் மெதுவாக ஆரம்பித்து இருந்தது...
போர்வைக்குள் தூங்கிக் கொண்டே இருந்த ஆதிரையாழுக்கு சலிப்பாக இருந்தது...
ஜிம்முக்கு அவனுடன் குளிரில் எழுந்து நடந்து போக உடல் இடம் கொடுக்கவே இல்லை...
கதவை தட்டி பார்த்தான்... அவளுக்கு எழும்பவே அசதியாக இருந்தது...
அடுத்த கணமே கதவை திறந்து விட்டான்...
"ஐயோ உள்ளே வந்துட்டாரா? ஜுரம் போல நடிப்போம்" என்று அவள் போர்வைக்குள்ளேயே இருக்க, "ஏய் எந்திரி" என்று போர்வைக்குள் படுத்து இருந்தவளை அருகே இருந்த தடியை தூக்கி தட்டினான்.
அவளுக்கு இந்த குளிருக்குள் விழிப்பு வந்தால் தானே... இன்னும் கொஞ்சம் நேரம் படுத்தால் என்ன என்று தோன்றியது... ஆனால் விடமாட்டான்...
மெதுவாக போர்வையை விலக்கி பார்த்தாள்... ஆர்ம் கட் மற்றும் ட்ராக் சூட் அணிந்து இருந்தான்.
ஜிம் போக கிளம்பி விட்டான் என்று தெரிந்தது... இந்த குளிரில் அவளும் சேர்ந்து நடக்க வேண்டும்...
அவன் ஒரு ஜாக்கெட் மட்டும் போட்டுக் கொண்டே நடந்து விடுவான்...
ஆனால் அவளுக்கு அந்த மைனஸ் குளிரில் ஜாக்கெட் மட்டும் போதாது...
கைகள் விறைக்கும்...
மூக்கு குளிர்ந்து வரும்...வாயினால் புகை வரும்...
அவன் நினைத்தால் ஜிம் செய்யும் இடத்துக்கு காரில் செல்லலாம்... ஆனால் செல்ல மாட்டான்... நடந்து தான் செல்வான்... பத்து நிமிட நடை தான் செத்து பிழைப்பது என்னவோ அவள் தான்.
இப்போதெல்லாம் காலையில் குளிர் அதிகமாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது...
அவளோ, "ஜுரமா இருக்கு" என்று ஈனக்குரலில் பொய் ஒன்றை அடித்து விட்டாள்...
அவளை புருவம் சுருக்கி பார்த்தவனோ அடுத்த கணமே கையில் தேர்மா மீட்டரை எடுத்துக் கொண்டே வந்தான்.
"எந்திரி, டெம்பெரேச்சர் செக் பண்ணலாம்" என்று சொல்ல, அவளும் எழுந்து அமர்ந்தாள்...
அவள் நெற்றியில் வைத்து உடல் வெப்பநிலையை பார்த்தவன், "பொய் சொல்றியா??" என்று கேட்டான்.
பெண்ணவளோ அவனை மிரண்டு பார்த்தாள்...
"கண்டு பிடிச்சுட்டாரே" என்று அவள் புலம்ப, அவள் பொய் சொன்னதன் விளைவாக, நீர் பாட்டிலும் டவலும் வைக்கும் அவன் பையில் இரு டம்பில்ஸ்சும் சேர்த்து வைக்கப்பட்டு இருந்தது...
"அந்த இரும்பு கட்டியை எதுக்கு உள்ளே வச்சீங்க? இவ்ளோ பாரமா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னால் மூச்சிறைக்க நடக்க, "பொய் சொன்ன உனக்கு தண்டனை" என்றான் அவன்...
"என்னால முடியலையே" என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே பையினை தூக்கியபடி அவனை பின் தொடர்ந்தாள் பெண்ணவள்...
வழக்கம் போல ஜிம்மில் சென்று ஓரமாக அமர்ந்தவளுக்கு தோள் பட்டை எல்லாம் வலி...
கையை தூக்கி தனது தோள்களை அழுந்த வருடிக் கொள்ள, "என்ன யாழ்? என்னாச்சு?" என்று கேட்டுக் கொண்டே அவள் அருகே வந்து அமர்ந்தான் கபிலன்...
அவளோ பெருமூச்சுடன், "இன்னைக்கு காலைல எந்திரிக்க செம சோம்பலா இருந்திச்சு... அதனால ஜுரம்னு பொய் சொன்னேன் சார் கிட்ட... துப்பாக்கி போல ஒன்ன நெத்தியில வச்சு ஜுரம் இல்லனு கண்டு பிடிச்சுட்டார்... அப்புறம் பொய் சொன்னதுக்காக ரெண்டு இரும்பு கட்டியை வழக்கமா தூக்கி வர்ற பைல வச்சு தூக்கி வர வச்சுட்டார்... முதுகெல்லாம் ரொம்ப வலிக்குது" என்றாள்.
கிட்டத்தட்ட அழுது விடுவாள் போல இருந்தது...
அவளை பார்க்க கபிலனுக்கு பாவமாக இருந்தது... சர்வஜித் மீது கோபமாக வந்தது...
கோபப்பட்டு என்ன பயன்? அவனை ஒன்றும் செய்ய முடியாதே கபிலனால்...
ஆதிரையாழை பார்த்ததில் இருந்தே கபிலனுக்கு அவள் மீது ஒரு ஈர்ப்பு... இப்போது அது ஒரு தலைக் காதலாக வளர்ந்து இருக்க, "சார் கிட்ட வேலை பார்க்கிறது ரொம்ப கஷ்டம்ல" என்றான்.
அவளும், "ம்ம்...ரொம்ப கஷ்டம்" என்று சொல்ல, அவனோ, "இதுக்கு ஒரு வழி இருக்கு" என்றான்...
அவளும் புரியாமல் பார்க்க, "நீ கல்யாணம் பண்ணிக்கணும்" என்று அவள் தலையில் குண்டை போட, அவனை ஒரு கணம் விழி விரித்துப் பார்த்து விட்டு தன்னை சுதாரித்தவளோ, "என்னை யாரு கல்யாணம் பண்ணிக்குவாங்க?" என்றாள்.
அவனோ அவளை ஆழ்ந்து பார்த்து மெதுவாக புன்னகைத்தபடி எழுந்தவன் அங்கே ஜிம் செய்துக் கொண்டு இருப்பவர்களை பார்க்கச் சென்று விட்டான்...
அவன் என்ன நினைக்கின்றான் என்று ஆதிரையாழுக்கு புரியவே இல்லை...
இதே சமயம், தூக்கிய பளுவை வைத்து விட்டு கழுத்தில் அரும்பிய நீரை துடைத்துக் கொண்டே அங்கே அமர்ந்து இருந்த ஆதிரையாழைப் பார்த்து சொடக்கிட அவளும் நீரை எடுத்துக் கொண்டே சர்வஜித்தை நோக்கி குடு குடுவென ஓடிச் சென்றாள்...
அதனை வாங்கி வாயில் வைக்க போன கணம், "சார்" என்றபடி அவன் முன்னே வந்து நின்றான் கபிலன்...
சர்வஜித்தும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே நீரை அருந்த, "கொஞ்சம் பேசணும் சார்" என்றான்.
சர்வஜித் பதில் சொல்லாமல் அவனை பார்த்துக் கொண்டே நீரை அருந்த, "பர்சனலா" என்றான் கபிலன்...
"வாட்" என்று கேட்டுக் கொண்டே கையில் இருந்த நீர் பாட்டிலை மூடி அருகே நின்ற ஆதிரையாழிடம் நீட்ட அவளும் அதனை வாங்கிக் கொண்டே நகர போக, "யாழ் நில்லு நம்மள பத்தி தான்" என்றான் கபிலன்...
அவளோ, 'நம்மள பத்தியா?? இவருக்கும் எனக்கும் என்ன இருக்கு??' என்று யோசித்துக் கொண்டே நிற்க, சர்வஜித் இருவரையும் புருவம் சுருக்கிப் பார்த்தான்.
"எனக்கு வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க சார்" என்றான்.
"சோ ?" என்றான் ஒரு வகை சந்தேக குரலில் சர்வஜித்...
"யாழுக்கு கல்யாணம் ஆகல... எனக்கும் ஆகல... எனக்கும் அவளை பிடிச்சு இருக்கு, அவளுக்கும் என்னை பிடிச்சு இருக்கு" என்று சொல்லி முடிக்க முதல், "பொய் பொய் பொய் எனக்கு பிடிச்சு இருக்குனு நான் சொல்லவே இல்லை" என்றாள் ஆதிரையாழ் அவசரமாக...
"யாழ் பயப்படாதே... நம்ம சார் தானே... உங்கள பார்த்து அவ பயப்படுறா சார்" என்றான்.
சர்வஜித்திடம் இருந்து ஒரு உணர்வும் இல்லை... மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டே இருவரையும் பார்த்தான்.
ஆதிரையாழோ, 'சரி செத்தேன்' என்று நினைக்க, ஆழ்ந்த மூச்சை எடுத்த சர்வஜித்தோ, "கபிலன்... அவளை நான் அழைச்சு வந்தது என்னோட வேலைக்கு தான்... உனக்கு வீட்டுக்க்காரியா மாத்த இல்ல... சோ ட்ரை சம்வன் எல்ஸ்" என்றவனோ, ஆதிரையாழிடம், "என் பேக்கை எடுத்துட்டு வா, கிளம்பலாம்" என்று சொல்லிக் கொண்டே நடந்துச் சென்று ஜெர்க்கினை போட, "சாரி சார்..." என்று சொன்ன கபிலனோ மேலும், "இன்னும் வேர்க் அவுட் முடியலையே" என்றான்.
"நாளைக்கு பார்த்துக்கிறேன்" என்றவனோ வெளியேற போக அவனை தொடர்ந்து ஓடிச் சென்றாள் ஆதிரையாழ்...
ஜிம்மை விட்டு வெளியே வந்ததுமே அவன் அருகே நடந்தவள், "நான் பிடிச்சு இருக்குனு சொல்லவே இல்லை" என்றாள் அழுது விடும் குரலில்...
"ஐ டோன்ட் கெயார்" என்று சொல்லிக் கொண்டே அவளிடம் இருந்து பையை பறித்து தனது முதுகில் போட்டவனோ, "நாளைல இருந்து நீ ஜிம்முக்கு வர தேவல..." என்று சொல்லிக் கொண்டே வேகமாக நடக்க, "என்ன இவ்ளோ வேகமா போறீங்க" என்று சொல்லிக் கொண்டே அவனை பின் தொடர்ந்து ஓடிச் சென்றாள் பெண்ணவள்...