அத்தியாயம் 10
நாட்கள் நகர, தனஞ்சயனை கோர்ட்டில் ஒப்படைக்கும் நாளும் வந்து சேர்ந்தது. இடைப்பட்ட நாட்களில் மாதவியை தேடி தோற்றுப் போன மதுபாலாவும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, கரிகாலனோ கோர்ட்டுக்கு பிரத்தியேகமாக சென்று இருந்தான். அங்கே நால்வரும் குற்றவாளி கூண்டில் இருக்க முதல் வாக்கு மூலம் பெறப்பட்டது என்னவோ சாரதியிடம் தான்.
அவனும் பொலிஸாருக்கு பயந்து உண்மையை ஒன்று விடாமல் உளற ஆரம்பித்தான். அரச தரப்பு வக்கீலோ "சொல்லுங்க மதி, நீங்க எவ்ளோ நாளா மினிஸ்டர் சாரோட மகன் காரை ஓட்டுறீங்க?" என்று கேட்க அவனோ "கிட்டத்தட்ட ஆறு வருஷமாங்க ஐயா" என்றான்.
அவரும் "ம்ம், சம்பவ தினம் அன்னைக்கு என்னாச்சுன்னு சொல்ல முடியுமா?" என்று கேட்க அவனோ பயத்துடன் கூண்டில் நின்றவர்களை பார்க்க அந்த நான்கு மிருகங்களும் அவனை எரித்து விடுவது போல பார்த்தனர். அவனோ பயத்தில் எச்சிலை விழுங்கினாலும் உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உண்மையை சொல்ல ஆரம்பித்தான்.
"அன்னைக்கு பார்ல இருந்து நல்லா குடிச்சிட்டு கார்ல ஏறுனாங்க சார், அப்போ அந்த பொண்ணு பாலத்துக்கு பக்கத்தில இருக்கிற குறுக்கு சந்தால நடந்து போனா, இவங்க காரை நிறுத்த சொல்ல நானும் நிறுத்திட்டேன்.. அப்போ இறங்கி அங்க பொண்ண ரெண்டு பேர் வாயில கை வச்சு இழுத்துட்டு வந்து காருக்குள் திமிர திமிர ஏத்துனாங்க, அதுக்கு பிறகு என்னை வண்டியை நிற்காம ஓட்ட சொல்ல, நானும் பின்னால பார்க்காம ஒட்டிட்டே இருந்தேன். நாலு பேரும் அந்த பொண்ண மாறி மாறி நாசம் பண்ணிட்டு வாய்க்காலுக்கு பக்கத்துல காரை நிற்பாட்ட சொன்னாங்க. நானும் நிற்பாட்டினதும் அந்த பொண்ண அதுக்குள்ள தூக்கி போட்டுட்டு வந்தாங்க.. என் கிட்ட சொல்ல வேணாம்னு மிரட்டி என்னை ஊருக்கு வேற அனுப்பி வச்சாங்க... அப்புறம் அந்த பொண்ணு வாக்கு மூலம் கொடுக்கலன்னு தெரிஞ்சதும் ஒரு தைரியத்துல இங்க மறுபடி வேலைக்கு சேர வந்தேன்" என்று சொல்ல, அதைக் கேட்ட கரிகாலன் முகமோ மேலும் இறுகி போனது.
"என்னை ஜென்மங்கள் " என்று நினைத்தவன் கண்களோ சிவந்து அந்த நால்வரையும் கொல்லும் வெறியுடன் அவர்களை அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தது. உடனே அரச தரப்பு வக்கீல் "தட்ஸ் ஆல் யுவர் ஆனர் " என்று சொல்ல, நீதிபதியோ எதிர் தரப்பு வக்கீலைப் பார்த்து "ஏதும் விசாரிக்க விரும்புறீங்களா?" என்று கேட்க அவனோ "ம்ம்" என்றபடி எழுந்து மதியிடம் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தான்.
எதிர் தரப்பு வக்கீலோ " காசு தரலன்னா எவ்ளோ தரம் இறங்கியும் பொய் சொல்லுவீங்களா மதி?" என்று கேட்க "என்ன காசு?" என்று புரியாமல் பார்த்தான் மதி.. கரிகாலனுக்கோ அவன் கேஸை திசை மாற்ற முற்படுவது அப்பட்டமாக தெரிய, " உங்க மனைவியோட ஹாஸ்பிடல் ட்ரீட்மென்டுக்கு நீங்க தனஞ்சயன் கிட்ட காசு கேட்டு இருக்கீங்க, அவர் இல்லன்னு சொன்னதும் இப்படி பொய் வாக்கு மூலம் கொடுக்கிறீங்க,. நீங்க மட்டும் தான் அந்த பொண்ண ரேப் பண்ணி இருக்கீங்க .. அது தான் அந்த பொண்ணு உங்கள கை காட்டி இருக்கு." என்று சொல்ல அவனோ வாயில் கை வைத்து "பெருமாளே" என்று சத்தமாக சொன்னவன் "என் கண் முன்னாடி நடந்த அநியாயத்தை பார்த்தே தூக்கம் இல்லாம தவிச்சவன் நான்.. இப்படி வாயே கூசாம பழி போடுறீங்களே " என்று சொன்னவனுக்கு பயத்தில் கண்ணீர் வழிந்தது.
அதைக் கேட்ட வக்கீலோ " நீங்க காசு கேட்டத்துக்கான ப்ரூப்" என்று ஒரு ஆடியோவை நீதிபதியிடம் கொடுத்தான்.
அதில் அந்த சாரதியும் தனஞ்சயனும் பேசிய ஆடியோ இருக்க, தனஞ்சயனோ "டேய் இன்னைக்கு பப்புக்கு போகணும், எங்கடா போய் தொலைஞ்ச?" என்று சீற, அவனோ "ஐயா, ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கேன், மனைவிக்கு உடம்பு சரி இல்ல, " என்று சொல்ல அவனோ கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் " உனக்கு உன் பொண்டாட்டி தானா இப்போ முக்கியம், அட ச்ச " என்று சீறினான். உடனே அவன் "ஐயா எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது" என்று சொல்ல தனஞ்சயனோ "அதுக்கு?" என்று கேட்டான். உடனே மதி " கொஞ்சம் பணம் தர முடியுமா ஐயா?" என்று முடிக்கவில்லை "அடி செருப்பால," என்று நான்கைந்து கெட்ட வார்த்தைகள் சேர்த்து திட்டியவன் " செத்தா புதைச்சுட்டு வந்து வீட்ட சேரு " என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். அந்த ஆடியோவில் தனஞ்சயன் பேசியது அபத்தமாக இருந்த போதிலும் அது அவனை கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கும் என்ற காரணத்தினாலும் அவன் போனில் அனைத்தையும் ரெகார்ட் பண்ணும் செட்டிங் இருப்பதாலும் அந்த ஆடியோவை தேடி எடுத்து இருந்தான். அதைக் கேட்ட மதியோ "ஐயோ பணம் கேட்டது உண்மை தான். அதுக்காக பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். என்ன நம்புங்க ஐயா" என்று கெஞ்ச "ஆஹான் " என்ற அரசு தரப்பு வக்கீல் "யுவர் ஹானர் , இந்த மதியோட மனைவிக்கு உடம்பு சரி இல்ல, அவனுக்கு தன்னோட பெண் ஆசைய தீர்த்துக்க ஆள் இல்ல, உடனே ரோட்டில் போன மாதவியை கடத்தி கற்பழிச்சு வாய்க்காலில் போட்டு இருக்கிறார், மாதவி இவரை கை காட்டியதும், அப்ரூவர் ஆக மாறுகிறேன் என்ற போர்வையில் என்னுடைய கட்சி காரர்கள் மீது அவதூறாக குற்றம் சுமத்தி இருக்கிறார், இப்படியான குற்றத்தை புரிந்தவருக்கு தகுந்த தண்டனை வழங்கி தீர்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .. மேலும் எனது கட்சிக்காரரை விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன் " என்று முடிக்க, நீதிபதியோ அனைத்தையும் குறித்துக் கொண்டவர்.
அரசு தரப்பு வக்கீலை பார்த்து "இன்னைக்கு பாதிக்கப்பட்ட பொண்ணு வரலையா?" என்று கேட்க அவரோ இல்லை என்று தலை ஆடினார். உடனே அவர் " தீர விசாரிக்காம இந்த கேஸுக்கு தீர்ப்பு எழுத முடியாது.. அதனால பாதிக்கப்பட்ட பொண்ணை வாக்கு மூலம் வழங்க வரும் 25ஆம் திகதி கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவு இடுகிறேன்" என்று இரு கிழமைகள் அவகாசம் வழங்கி உத்தரவை சொன்னவர் மேலும் "அது வரை வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது..அதுவரை குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் போலீஸ் கஸ்டடியில் இருக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கிறேன்" என்றவர் எழுந்து கொள்ள அங்கிருந்த அனைவரும் எழுந்து அவருக்கு மரியாதையை செலுத்தினார்கள். இந்த விஷயம் விருதாச்சலத்தை அடைய, அவரோ "அந்த பொண்ணை கண்டு பிடிங்களேண்டா, ஒருத்திய பிடிக்க முடியலையா?" என்று சீற அதே திட்டை தனது அடியாட்களுக்கு திட்டிக் கொண்டு இருந்தாள் மதுபாலா.
கரிகாலனுக்கு அவர்கள் தரப்பு வக்கீல் மேல் கொலை வெறி ஆத்திரம் எழுந்தாலும் "கொடுத்த காசுக்கு மனசாட்சியை அடகு வச்சுட்டு பேசுறான்" என்று வாய்க்குள் முணு முணுத்தவனுக்கு வாக்கு மூலம் சொல்ல இருக்கும் நாளில் மாதவி மனதளவில் பட இருக்கும் வலியை நினைத்து மருகிப் போனான். அடுத்தடுத்த நாட்கள் அவன் மாதவியை வீட்டிலேயே வைத்து இருந்தவனுக்கு ஓரளவு சமாளிக்க கூடிய நிலை தான் இருந்தது. தனியே இருக்கும் வளவில் பல அடி உயர மதில் நடுவே அவர்கள் வீடு இருந்ததால் அக்கம் பக்கத்து வீட்டு காரர்களுக்கு கூட அங்கு மாதவி இருப்பது தெரியாமல் போனது அவள் அதிஷ்டமாகி போனது. அவனுக்கு விசுவாசமாக இருக்கும் வீட்டில் வேலை செய்பவர்களும் வாயை திறக்காமல் இருக்க, இரு கிழமைகள் பார்த்திருக்க ஓடி போயின. அதே சமயம், மாதவியை தேடி திரிந்த மதுபாலாவின் ஆட்கள், சந்தேகத்தின் பெயரில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை விசாரித்த போதிலும் அவள் கரிகாலன் சொல்லி கொடுத்த போலவே மாதவி வீட்டில் இல்லை என்றே கூறினாள். பணம் கொடுத்து மனிதனை வாங்க முடியும் மனம் கொடுத்தால் தான் விசுவாசத்தை பெற முடியும் என்ற வாக்கியம் கரிகாலன் விடயத்தில் மெய்யாகி போனது.
அடுத்த நாள் கோர்ட்டில் விசாரணை என்று இருக்க, முதல் நாள் குழந்தையை வளர்த்தி விட்டு அறைக்குள் செல்ல போன மாதவியை "மாதவி கொஞ்சம் பேசணும்" என்று அழைத்தான் கரிகாலன். அவளோ "சொல்லுங்க சார்" என்று அவள் முன்னே வந்து நிற்க, இருக்க சொல்லி முன்னே இருந்த இருக்கையை காட்டியவன் "நாளைக்கு" என்று ஆரம்பிக்க " சாட்சி சொல்லிடுவேன் சார்" என்று சொன்னாள். அவனோ "அது நல்லா தெரியும்... ஆனா உன் கிட்ட தரம் இறங்கி கேள்வி கேட்பாங்க, " என்று சொல்ல அவளோ "அன்னைக்கு போலீஸ் காரர் கேட்ட போலவா?"என்று கேட்டாள். அவனும் இல்லை என்று தலையாட்டியவன் "அத விட கேவலமா கேட்பாங்க, உன் கேரக்டர் பத்தி கூட தப்பா பேசுவாங்க" என்று சொல்ல அவனை ஏறிட்டு கலங்கிய கண்களால் பார்த்தவள் "அன்னைக்கு அந்த நாலு பேர் பேசுன போலவா " என்று கேட்டாள். அவனோ இறுகிய முகத்துடன் "ம்ம் " என்றவன் "நாளைக்கு மட்டும் தான் உனக்கு அப்படி பேச முடியும்.. அதுக்கப்புறம் எவனும் என்ன தாண்டி உன்னை பார்க்கவே பயப்படுவான். அதனால ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோ. அப்போ தான் இந்த கேசுல ஜெயிக்க முடியும்.. உன்னை எவ்வளவு டைவர்ட் பண்ணினாலும் அசிங்கமா பேசுனாலும் நீ அந்த வலி பொறுக்காம பொய்யா எதையும் அக்செப்ட் பண்ணிடாத, உன் மனதை தைரியமா வச்சுக்கோ.. முக்கியமா உறுதியா இரு,... தப்பு செய்யாத நீ ஏன் அழணும் ? உனக்கு எப்போவுமே நான் இருக்கேன்... " என்று சொல்ல அவள் கண்ணில் இருந்து விழ வந்த கண்ணீரை உள்ளே இழுத்தவள் "கண்டிப்பா சார், " என்று சொன்னாள். பெருமூச்சோடு எழுந்து வந்து அவள் அருகே இருந்தவன் அவள் கையை பிடித்து தனது கைக்குள் வைத்தபடி "நாளைக்கு அவனுங்களுக்கு கிடைக்க போற தண்டனை உன் வாக்கு மூலத்துல தான் இருக்கு.. பல பெண்களுக்கு நீ தான் நியாயம் வாங்கி கொடுக்க போற.. அத மட்டும் நினைவுல வச்சுக்கோ. அவனுங்க தப்பிக்கவே கூடாது.. பயப்படாம நடந்ததை சொல்லு, எவ்ளோ தரம் இறங்கி கேட்டாலும் நீ தைரியமா பேசு" என்றவனை அவள் ஏறிட்டு பார்க்க , அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் "என் முன்னாடி சொல்ல உனக்கு சங்கடமாக இருந்தா நான் வெளியே போய் நின்னுடுவேன்," என்று சொல்ல அவளோ சரியென்று தலை ஆட்டினாள்.
அடுத்த நாள் காலையில் கடவுளை வணங்கி விட்டு கரிகாலனுடன் அவள் கோர்ட்டுக்கு புறப்பட, அங்கே ஏற்கனவே மகனுக்காக விருதாச்சலமும் மதுபாலாவும் வருகை தந்து இருந்தார்கள். அவர்கள் தேடிக் களைத்து அவள் ஊரில் இல்லை என்று உறுதி படுத்தியபடி நிம்மதியாக அங்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது தான் எதிர்க்கட்சி சதியில் மகனை மாட்டி விட்டார்கள் என்று கோர்ட் வாசலில் வைத்து மீடியா கார்களிடம் நீட்டி முழக்க முடியும்.. ஆனால் அவர்கள் துரதிஷ்டம், கரிகாலன் ஜீப்பில் மாதவியுடன் வந்து இறங்கினான். அவர்கள் கோர்ட் வாசலில் இறங்கி படி ஏறி போன சமயமே அங்கு பரந்து இருந்த விருதாச்சலத்தின் அடியாட்கள் பயத்துடன் விழி விரித்து நிற்க, மீடியா காரர்களோ அவர்களை நோக்கி பேட்டி எடுக்க ஓடி வந்தார்கள். ஒருத்தன் கரிகாலனை இடித்து விட்டு, அவள் முன்னே மைக்கை நீட்டி "இவ்ளோ நாள் எங்க மேடம் இருந்தீங்க?" என்று கேட்க அவன் மைக்கின் வாயை பொத்திய கரிகாலன் அவனை அனல் தெறிக்க பார்த்து " இப்போ எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது.. கேஸ் முடியட்டும் " என்றவன் அவள் கையை பற்றிக் கொண்டு முன்னேற மீடியா காரர்கள் கொஞ்சம் ஸ்தம்பித்து தான் போனார்கள். அவர்கள் கையை பற்றிய போட்டோவை ஒருவன் எடுக்க, அவளோ குனிந்தபடி அவன் அருகே நெருங்கி வந்தாள். அவளுக்கு அவன் அருகாமை மனதுக்கு தெம்பையும் தைரியத்தையும் அளித்து இருந்தது. என்ன நடந்தாலும் கரிகாலன் பார்த்துக் கொள்வான் என்னும் நம்பிக்கை அது.
இருவரும் கோர்ட்டில் நுழைந்த சமயம், மதுபாலாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள அதே அதிர்ச்சி தான் விருதாச்சலத்துக்கும்.. உடனே அவர் "ஏய் இவ" என்று பதறிப் போக, மதுபாலாவோ யோசனையில் அமர்ந்து இருந்தாள் . வேறு கேசாக இருந்தால் அவர்கள் செல்வாக்குக்கும் அதிகாரத்துக்கும் இந்த கேஸ் எப்போவோ ஒன்றும் இல்லாமல் ஆகி இருக்கும்.. ஆனால் இது பலரால் பேசப்பட்டு விவாதிக்கப்பட்ட கேஸ் என்பதால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அமர்ந்து இருக்க, கரிகாலனோ மதுபாலாவை பார்த்து கண நேரத்தில் முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் இரு கண்களையும் சிமிட்டி விட்டு அங்கிருந்த இருகையில் மாதவியுடன் அமர, அவளுக்கோ வயிற்றில் இருந்து புகை வராத குறை தான்.