ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 1

Sugumari

New member

அத்தியாயம் 1

"வம்சி, ஐ லவ் யூ" என்ற பெண்களின் கூக்குரல்கள் மத்தியில் மேடையேறினான் வம்சி கிருஷ்ணா... அவன் குரலுக்கு ஆடாத கால்களும் இல்லை, அசையாத இதழ்களும் இல்லை, உணர்வுகளில் துள்ளாத உடலின் நரம்புகளும் இல்லை...

இறைவன் கொடுத்த உயிரை பிழியும் குரல், அவன் தாய் கொடுத்த இசை...

இரெண்டையும் சரியாக கலந்து, கேட்பவர்களின் உயிர் மூச்சையே உறிஞ்சி விடுவான்...

அவன் பாட போகின்றான் என்றால் கூட்டம் அலை மோதும்...

அவன் தரத்துக்கு ஏற்ற போல, அவன் ஊதியமும் கோடிகளை தொட்டு விடும்...

மேடையேறியதுமே கூச்சல் வானை பிளந்தது...

இரவு நேரம், மேடை முழுதும் வெளிச்சம்...

வெளிச்சத்தின் மத்தியில் அவனால் ரசிகர்களை தெளிவாக பார்க்க முடியவே இல்லை...

ஆனால் அவர்கள் குரல்களை கேட்க முடிந்தது...

மைக்கை கையில் வாங்கியவன், "ஹெலோ மை டியர் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ்" என்றான்...

மீண்டும் கரகோஷத்துடன் கூச்சல்...

அவன் குரலை கேட்டதுமே அனைவருக்கும் அப்படி ஒரு உற்சாகம்...

அவர்களின் கரகோஷத்தைக் கேட்டதுமே அவன் இதழில் மெல்லிய கீற்று போன்ற புன்னகை...

கருப்பு நிற கோர்ட் ஷூட்டிடன் வந்து இருந்தான்...

ஆறடிக்கு சற்று அதிகமான உயரம் உடையவன்...

தலையை நேர்த்தியாக சீவி, தாடி மீசையை முகத்துக்கு பொருத்தமாக வெட்டி இருந்தான்...

தனது நேர்த்தியான தோற்றத்தில் எப்போதுமே அவனுக்கு அக்கறை அதிகம்... அதனாலேயே அவன் குரலுடன் சேர்ந்து அவனுமே ரசிகர்களை கவர்ந்து விடுவான்...

கரகோஷத்தை கேட்டு சிரித்துக் கொண்டே, சற்று பக்கவாட்டாக திரும்பி அருகே நின்ற கிட்டாரிஸ்ட் ஆன கெளதம் கிருஷ்ணாவை பார்த்தான்...

கௌதம் கிருஷ்ணா, அவனுடைய தம்பி... கிட்டத்தட்ட அவனை போன்ற தோற்றம் தான்... ஓரிரெண்டு வித்தியாசங்கள் மட்டுமே... ஒரு வயது வித்தியாசத்தில் பிறந்தவர்கள் தான் அவர்கள்...

இவன் பாடகன் என்றால், அவன் கிட்டாரிஸ்ட்...

ஒன்றாகவே இசை பயணத்தை மேற்கொண்டவர்கள்...

ஆனாலும் கௌதம் கிருஷ்ணாவை விட, வம்சி கிருஷ்ணாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்...

அதற்கெல்லாம் கெளதம் கிருஷ்ணா பொறாமைப்படுவது இல்லை...

தன்னுடைய அண்ணன் என்று சந்தோஷப்படுபவன் தான் அவன்...

சுருங்க சொல்ல போனால் ராமனுக்கு ஏற்ற லக்ஷ்மணன் அவன்...

அவனுக்கு இன்னொரு தம்பி உண்டு... யாதவ் கிருஷ்ணா...

அவர்கள் தந்தை குருமூர்த்தி பட தயாரிப்பாளர்... தாய் வசந்தி பாடகி... அவரிடம் இருந்து தான் இந்த இசை ஞானம் அவனுக்கு வந்திருந்தது... மேலும் அவனுக்கு ஒரு பாட்டி உண்டு... குருமூர்த்தியின் தாய் வேதவல்லி... அனைத்திலும் கறாரனவர்... மனதில் படுவதை எல்லாம் பேசி விடுவார்... அடுத்தவர் மனம் பற்றி அவருக்கு கவலை இல்லை... இது தான் அவன் குடும்பம்...

வம்சி கிருஷ்ணா, சினிமாவுக்கு வந்த நான்கு வருடங்களிலேயே படங்களில் நூற்றுக் கணக்கான ஹிட் பாடல்கள் பாடி, இசை உலகில் முதன்மையாக திகள்பவன்... இன்று வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் இசை நிகழ்ச்சியில் ஒரு பாடலை மட்டும் பாடி விட்டு செல்ல வந்து இருந்தார்கள்... அதற்கே அவர்களுக்கான ஊதியம் பல லட்சங்களை தாண்டி இருந்தது...

வம்சி கிருஷ்ணா தன்னை பார்த்ததுமே, மென் சிரிப்புடன் தலையை கெளதம் கிருஷ்ணா அசைக்க, வம்சி கிருஷ்ணாவும் மைக்கை பிடித்து இசை வெள்ளத்தில் தனது ரசிகர்களை மூழ்க வைக்க ஆயத்தமானான்...

அதுவரை இருந்த கரகோஷம் அவன் பாட ஆரம்பித்ததும் அடங்கியது...

அவன் குரலை கேட்பதற்கான நிசப்தம் அது...

"மறுவார்த்தை பேசாதே

மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு"

அவன் பாடி மிக பெரிய வெற்றி பெற்ற பாடல் அது...

அவன் குரலில் தோன்றிய அசைவுகள் கன்னிப் பெண்களின் இதயத்தையும் சேர்த்து அசைத்து பார்த்தன...

அவன் பாடி முடித்ததும் மீண்டும் விசில்களின் நடுவே கரகோஷம்...

அவனோ, "தேங்க்ஸ் கைஸ், என்ஜாய் தெ ஷோ" என்று சொல்லி விட்டு மேடையில் இருந்து இறங்கிக் கொண்டான்...

அவனுடன் கெளதம் கிருஷ்ணாவும் இறங்கிக் கொண்டான்...

அவர்களுக்கு அறிவிப்பாளர் நன்றியை தெரிவிக்க, வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் மேடையின் அருகே நின்ற காரில் பாதுகாவலர்கள் உதவியுடன் ஏறிக் கொண்டார்கள்...

ஒரு பாடலுக்கு தான் அவன் ஊதியம் பெற்று இருந்தான்...

அந்த மைதானத்தில் கூடி இருந்த சனதிரள்கள் இவனுக்காக மட்டும் தான்...

அவர்கள் ஏறியதும், அவன் கார் புறப்பட, அந்த காரை சுற்றி காவலாளர்கள் யாரையும் விடாமல் ஓடி வந்தார்கள்...

அவனோ உள்ளே இருந்து கொண்டே, வெளியே தனக்காக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களை அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தான்...

அவன் அருகே அமர்ந்து இருந்த கெளதம் கிருஷ்ணாவோ, "இவ்வளவு பேரும் உனக்காக தான் வம்சி" என்றான்...

"ஐ க்னோ" என்று மட்டும் பதில் சொல்லி விட்டு, தனது அலைபேசியை பார்க்க ஆரம்பித்து விட்டான் வம்சி கிருஷ்ணா...

அவன் சுபாவமே இது தான்...

தேவைகள் தாண்டி பேச மாட்டான்...

அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்த கெளதம் கிருஷ்ணாவோ, "வம்சி" என்றான்...

அவனை திரும்பி பார்த்தவன், "சொல்லுடா" என்று சொல்ல, "அம்மா காலைல என் கிட்ட சில விஷயங்கள் சொல்லி கவலைப்பட்டாங்க, உன் கூட இப்போ பேசுனா தான் உண்டு... வீட்ல போனா பாட மட்டும் தானே வாய துறப்ப" என்று தனது மனதில் இருப்பதை உரைத்து விட்டான்...

வம்சி கிருஷ்ணாவோ பெருமூச்சுடன் அலைபேசியை பாக்கெட்டில் வைத்தவன், "ம்ம், வீட்டுக்கு போக இன்னும் அரை மணி நேரம் இருக்கு... அதுக்குள்ள பேசுறது எல்லாம் பேசிடு" என்றான்...

"கல்யாணிக்கும் உனக்கும் அம்மா கல்யாணம் நிச்சயம் பண்ண கேட்டா, வேணாம்னு சொல்லிட்டியாமே" என்றான்...

"ம்ம் வேணாம்னு தான் சொன்னேன்... எனக்கு அவ மேல எந்த ஈர்ப்பும் இல்லையே" என்றான்...

கெளதம் கிருஷ்ணாவோ, "ஆனா நீ தான் அவளை கல்யாணம் பண்ண போறதா, வேதவல்லி பாட்டி அவ மனசுல ஆசைய வளர்த்து இருக்காங்க, இப்போ நீ இப்படி சொன்னதுமே அவ ரொம்ப அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுறான்னு கேள்விப்பட்டேன்..." என்றான்...

"தட்ஸ் நன் ஒஃப் மை பிசினஸ், அவங்க சொல்றதுக்காக நான் அவளை கல்யாணம் பண்ணிக்க முடியுமா? திஸ் இஸ் மை லைஃப், மை டிசிஷன்" என்றான்...

கல்யாணி வேறு யாருமல்ல, அவன் முறைப்பெண் தான்...

குருமூர்த்தியின் தங்கையான ரதிதேவிக்கும் அவர் கணவர் கணேசனுக்கும் பிறந்த மூத்த பெண்... அவனை விட மூன்று வயது குறைந்தவள்... காலேஜ் முடித்து விட்டு வீட்டில் இருக்கின்றாள்... அவள் தந்தை கணேசன் பெரிய தொழிலதிபர் என்பதால் அவளுக்கு வேலைக்கு செல்லும் எண்ணம் இல்லை...

வம்சி கிருஷ்ணாவை திருமணம் செய்து கோடிகளில் புரள போகும் எண்ணத்தில் வேலைக்கு செல்ல அவள் முயற்சிக்கவும் இல்லை...

அவளுக்கும் ஒரு தங்கை உண்டு... அவள் பெயர் மிருதுளா...

காலேஜில் படித்துக் கொண்டு இருக்கின்றாள்...

வம்சி கிருஷ்ணாவின் குடும்பமும் கல்யாணியின் குடும்பமும் அடுத்ததடுத்த வீடு தான்...

கல்யாணி காலை முதல் மாலை வரை இருப்பது என்னவோ வம்சி கிருஷ்ணாவின் வீட்டில் தான்...

அவன் பார்வையை தன் மீது பட வைக்க, அவளும் படாத பாடு படுகின்றாள்...

ஆனால் வம்சி கிருஷ்ணாவோ அவளை கண்டு கொள்வதே இல்லை...

சலித்து போனவளோ, அவனை திருமணம் செய்து கொள்ளும் ஆசையினால் தாய் ரதிதேவியை நச்சரிக்க, ரதிதேவி தனது தாய் வேதவல்லியை நச்சரிக்க, அவரோ மருமகள் வசந்தியை நச்சரிக்க, அது இறுதியில் வம்சி கிருஷ்ணாவின் காதில் இந்த விஷயம் வந்து விழுந்தது...

அவனது 'வேண்டாம்' என்ற பதிலினால் இப்போது அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ வசந்தி தான்...

"புள்ளய என்ன சொல்லி வளர்த்து வச்சு இருக்க" என்று வேதவல்லி அவரை கரித்துக் கொட்ட ஆரம்பித்து விட்டார்...

வம்சி கிருஷ்ணாவிடம் நேரில் பேசும் தைரியம் இல்லை அவருக்கு...

அவருக்கு கோபத்தை வடிகாலாக மாற்ற கிடைத்தது என்னவோ மருமகள் வசந்தி தான்... அன்று முதல் இன்று வரை மாமியார் வாயினால் வசைவு வாங்கும் மருமகள் தான் அவர்...

ஆனால் மிகுந்த பொறுமைசாலி... குடும்பம் உடைய கூடாது என்று மௌனமாக இருப்பார்... குருமூர்த்திக்கோ இது பற்றி எல்லாம் அக்கறை இல்லை... முழுக்க முழுக்க பிசினஸ் தான் அவர் குறிக்கோள்... அதனால் வீட்டை கட்டி காக்க வேண்டிய பொறுப்பு வசந்தியுடையது...

வேதவல்லியின் வசைவு தாங்க முடியாமல் தான், கெளதம் கிருஷ்ணாவிடம் காலையில் சொல்லி கவலை பட்டு இருந்தார் வசந்தி... வம்சி கிருஷ்ணாவுடன் பேசினால், அதற்கு அவன் சரியான விளக்கம் கொடுக்க போவது இல்லை என்று அவருக்கு தெரியும்... அதனாலேயே கெளதம் கிருஷ்ணாவிடம் சொல்லி பேச சொல்லி இருந்தார்... கெளதம் கிருஷ்ணாவும் வம்சி கிருஷ்ணாவும் கொஞ்சம் மனம் விட்டு பேச கூடியவர்கள் என்று அவருக்கு தெரியும்...

அதன் விளைவாக தான் வம்சி கிருஷ்ணாவிடம் இன்று கெளதம் கிருஷ்ணா பேசி இருந்தான்... அவனோ வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பதில் சொல்லி விட்டான்...

கெளதம் கிருஷ்ணாவுக்கு அவனை விடும் எண்ணம் இல்லை...

"மனசுல யாரையும் நினைச்சிட்டு இருக்கியா?" என்று கேட்டான்...

வம்சி கிருஷ்ணாவிடம் ஒரு சிறிய மௌனம்...

"என் கிட்ட சொல்லுடா, ப்ளீஸ்" என்றான் கெளதம் கிருஷ்ணா கெஞ்சுதலாக...

வம்சி கிருஷ்ணாவோ, அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, கோர்ட்டினுள் கையை விட்டு அதனுள் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான்...

"இது?" என்றான் கெளதம் கிருஷ்ணா யோசனையுடன்...

"பிரிச்சு படி" என்றான் அவன்...

அன்புள்ள வம்சி கிருஷ்ணாவுக்கு,

நான் நலம், அது போல நீங்களும் நலமாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்...

இறுதியாக நீங்கள் பாடிய, "யார் அழைத்தது" பாடலில் நான் அப்படியே உருகி போய் விட்டேன்...

உங்கள் குரல் என்ன காந்தமோ? என்னை அப்படியே ஈர்த்து எடுத்து விடுகின்றதே... அடடா!!!

நேற்றும் கூட உங்களது டி வி இன்டெர்வியூ பார்த்தேன்...

சற்று சோர்வடைந்த போல இருந்தீர்கள்...

தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தால் உடல் நிலை மோசமடைந்து விடும்...

ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்...

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்...

உங்கள் குரல் இருந்தால் தான் என்னால் உயிர் வாழவே முடியும்...

நான் எப்போதெல்லாம் சோர்ந்து போகின்றேனோ அப்போதெல்லாம் உங்கள் குரல் என்னை உற்சாகமடைய செய்கின்றது...

உங்களை பார்க்கும் போதெல்லாம் இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும்... ஆனால் தொட்டு விடும் தூரத்தில் இல்லை நீங்கள்... நீங்கள் வானத்தில் நிலா, நானோ உங்களை வியந்து பார்க்கும் கோடிக்கணக்கான ரசிகைகளில் ஒருத்தி...

உங்கள் குரலை மட்டுமே ரசிக்கும் நான், இப்போதெல்லாம் உங்களையும் ரசிக்க தொடங்கி விட்டேன்... காதல் வந்து விட்டதோ என்னவோ?

உங்களது நடுவிரலில் இருந்த மோதிரத்தில் இருக்கும் கற்களில் ஒன்று விழுந்து விட்டது...

நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ, நான் கவனித்தேன்...

அந்தளவு உங்கள ஆழமாக ரசிக்கிறேன்...

ஆயிரக்கணக்கான கடிதங்களில் இந்த கடிதத்தை வாசிப்பீர்களா என்று எனக்கு தெரியவில்லை... வாசிக்க மாட்டீர்கள் என்கின்ற தைரியத்தில் காதலை சொல்லி விட்டேன்...

என் காதலை சொல்லி விட்டால் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது...

வாழ்க்கையில் நிறைய ஆசைகளை எனக்குள் விழுங்கிக் கொண்டு இருக்கின்றேன்...

இந்த காதலையும் விழுங்கி விட்டால் சுக்கு நூறாக நொறுங்கி விடுவேன்... என் காதல் உங்களுக்கு தெரியப் போவது இல்லை என்றாலும் சொல்லி விட்டேன் என்கின்ற நிம்மதி என்னுள்ளே உதித்து விடும்...

ஆஹ் மறந்தே விட்டேன்...

இன்னும் ஒன்று சொல்ல வேண்டும்...

அடுத்த முறை நிழ்ச்சிக்கு செல்லும் போது தாடி மீசையை சற்று குறைவாக வெட்டி விடுங்கள்... அதிகமாக வளர்ந்து விட்ட போல உணர்ந்தேன்...

வழக்கமாக உங்கள் தோற்றத்தில் நேர்த்தியாக இருப்பீர்களே... எதற்கு இந்த அளவுக்கதிகமாக தாடி மீசை தேவதாஸ் போல...

அது தான் பார்வதி இங்கே இருக்கிறேனே...

உங்களை விட்டு நான் எங்கும் போக மாட்டேன்... உங்கள் குரல் என்னை எப்போதும் தொடர்ந்து கொண்டு இருப்பதை போல என் எழுத்து உங்களை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்...

நான் காதலை சொல்லி விட்டேன் என்பதற்காக, திருமணம் செய்யாமல் என்னை தேட ஆரம்பித்து விடாதீர்கள்...

எப்போதுமே உங்கள் கையில் சிக்க முடியாத காற்று நான்...

உங்களை சுற்றி இருப்பேன், உங்களை ரசித்துக் கொண்டு இருப்பேன்,

ஆனால் உங்கள் கண்ணில் எப்போதும் படமாட்டேன்...

பைத்தியக்காரி நான்... கற்பனையில் பேசிக் கொண்டு இருக்கின்றேன்...

இந்த கடிதம் எப்படியும் ஆயிரம் கடிதத்தின் மத்தியில் மறைந்து தான் போய்விடும்...

ஆனாலும் ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி, என் கடிதம் உங்களை தேடி வரும்... உங்கள் முதல் பாடலில் இருந்தே நான் உங்கள் ரசிகை...

அன்று போல் இன்றும் என்றும் உங்கள் ரசிகை...

உங்கள் முகத்தில் என்றும் புன்னகை தவழ இறைவனை வேண்டிக் கொண்டே விடைபெறுகின்றேன்...

இப்படிக்கு உங்கள்

தென்றல் (என் பேர் தென்றல் எல்லாம் இல்லை... உங்களை சுற்றி உங்கள் கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால் எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயர்)

கடிதத்தை வாசித்து விட்டு வம்சி கிருஷ்ணாவை அதிர்ந்து பார்த்த கெளதம் கிருஷ்ணாவோ, அவன் கையை பற்றி மோதிரத்தை பார்த்தான், ஒரு கல் காணாமல் போய் இருந்தது...

அவன் தாடி மீசையை பார்த்தான்... ட்ரிம் செய்து இருந்தான்... "கடிதத்துல சொன்னதுக்காகவா ட்ரிம் பண்ணுன?" என்று கேட்டான் கெளதம் கிருஷ்ணா அதிர்ச்சியாக...

ஆம் என்ற ரீதியில் தலையை அசைத்தான் வம்சி கிருஷ்ணா...
Super 😍
 
Lalitha Ramki

Very interesting start
 
Top