ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 8- இரகசியத்தின் ராகம்

#இரகசியத்தின் ராகம்


இது ஒரு சஸ்பென்ஸ் காதல் எல்லாம் சேர்ந்த கதை‌..🫣

போதைப்பொருள் கடத்துறபோல காட்டப்படுற மெக்கானிக் தேவா..😉அவன காதலிக்கிற மாயாங்கிற டாக்டர்..🫣 அந்த போதைப்பொருள் கும்பலபிடிக்க ட்ரை பண்ற டாக்டர் சத்யன்..அவனுக்கு உதவி பண்ற பாலா இவங்க தான் கதையோட மெயின்ஸ்....👍


தேவா இவன் மெக்கானிக்கா இருக்க மாட்டான்னு எனக்கு starting laye தோணுச்சு..அவன் ஏதோ திட்டதோடதான் இந்த வேலை பார்க்கிறன்னு..அவன லவ் பண்ற intern doctor மாயா இவங்க ரெண்டு பேரோட சீன்ஸ் நல்லா இருந்துச்சு...மாயாவோட இசை மேலான காதல் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆனடைம் அவ நல்லா பார்த்துகிட்டு இருந்த விதம் அவங்க லவ்ஸ் எல்லாமே சூப்பர்...👍



சத்யன் டாக்டர் இதுவுமே கொஞ்சம் கெஸ்ஸிங்தான்..நான் ஃப்ரெண்ட்ஸ்ஸா இருப்பாங்கன்னு நினைச்சேன் பட் ப்ரதர்ஸ் ஆ இருப்பாங்கனு லாஸ்ட் ல தான் தெரிஞ்சது ..

மது அன்ட் மாயோவோட பாண்டிங் ரொம்ப நல்லா இருந்துச்சு.. மாயா மேலான மதுவோட பாசம் சூப்பர்...👍

அந்த vk hospital ஓனர் வருண்மேல சந்தேகப்பட வச்சு அவன்தான் கல்ப்ரிட்னு நினைக்க வச்சு லாஸ்ட்ல உண்மையான கல்ப்ரிட்ட கண்டுபிடிச்சாச்சு..பட் எனக்கு போகப்போக வருண்தான் குற்றவாளியா இருக்க மாட்டான்னு தோணுச்சு..மேபீ அது கிருபாவா இருக்கும்னு தோணுச்சு..லாஸ்ட்ல நான் நினச்சமாதிரியே தட் கல்ப்ரிட் இஸ் கிருபாகரன் 👊👊

சத்யன் தேவா சேர்ந்து லாஸ்ட் ல குற்றவாளிய கண்டுபிடிச்சு தண்டனை வாங்கி குடுத்துட்டாங்க...👍

யசோ அம்மா கேரக்டரும் சூப்பர்..ஒரு மனைவியா அவங்க ஏமாத்தப்பட்டாலும் தன் மகனுக்காக மீண்டு வந்துட்டாங்க..👍

சத்யன் மது லவ் நல்லா இருந்துச்சு..❤️❤️

கிருபாகரன் இவரெல்லாம் பணப்பிசாசு..👊👊👊👊பணத்துக்காக எந்த அளவு கேவலமா கீழ இறங்கி இருக்காரு..போதைப்பொருள மருந்துன்ற பேருல சப்ளை பண்ணி சே..லாஸ்ட் ல இவருக்கு தண்டனை கிடைச்சதும் தான் அப்பாடா னு இருந்துச்சு.



வருண் - கெட்டவன்னு நினைக்க வச்சு லாஸ்ட்ல நல்லவனா ஆகிட்டான்..

மாயாவின் இசையும் தேவாவின் மோகினியின் காதல் ❤️


இசை போதைப்பொருள் கடத்துனானா இல்ல களைந்தெடுத்தானா என்பதுதான் இரகசியத்தின் ராகம்!!!

#ஒரு சஸ்பென்ஸ் காதல் கதை..!!!
#ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
 
Last edited:
#இரகசியத்தின்_இராகம்_விமர்சனம்

சஸ்பன்ஸ் கதை. போதை பொருள் கடத்தல் நடக்கிறது. உண்மை குற்றவாளியை ஆதாரத்துடன் கண்டறிய போராடும் சத்யனும் பாலாவும். யாரு அந்த குற்றவாளிகள்? தேவாவிற்கும் அந்த கடத்தல் கும்பலுக்கும் என்ன தொடர்பு? என்பதே கதை.

மாயா கதாபாத்திரம் நல்லா இருக்கு❤ அவளின் காதல், அன்பிற்கான ஏக்கம், மது மாயா bonding நல்லா இருக்கு ❤

வினோதின் அப்பா மகன் அன்பு புரியுது. வினோத்தின் அம்மா அவனை சரியா வழி நடத்துவது நல்லா இருக்கு. நல்ல அம்மா ❤

இறுதியா அனைவரையும் குடும்பமா பார்க்க மன நிறைவா இருந்தது❤❤


நிறைய சஸ்பன்ஸ் அதை யுகிக்க கூடியதா இருந்தாலும் அதை break பண்ண point நல்லா இருந்தது❤

கதையின் முதல் பாதியைவிட இரண்டாம் பாதி நல்லா இருக்கு. முதல் பாதியில் காட்சியின் நீளத்தை குறைச்சிருக்கலாம் . நீளமான காட்சிகள் கதையின் சுவரஸ்யத்தை குறைக்கிற மாதிரி எனக்கு தோணுது.

யாரு என்ன பேசுறாங்கனு தெளிவா இல்ல அது பல இடங்களில் குழப்பத்தை உண்டுபண்ணுது. இதை தவிர்த்திருந்தால் இன்னும் கதை விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

இரகசியத்தின் இராகம் அனைவர் உள்ளத்திலும் இசையாய் நிறைத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
ரகசியத்தின் ராகம்

சத்யா ஒரு டாக்டர் போதை பொருள் கடுத்துறவங்கள கண்டு பிடிக்க ஹாஸ்பிடல் வேலைக்கு வரான்.
அவனோட அண்ணா பிரியன் போலீஸ் ஆபீஸர் அவனுக்கு ஹெல்ப் பண்ண சத்யா வரான்.
போதை பொருள் யாரு கடத்துறா அவங்கள எப்படி கண்டு பிடிக்குறாங்கனு கதையில் தெரிஞ்சுக்கலாம்.
ஸ்டார்ட்டிங் படிக்கும் போது ரொம்பவே குழப்பமா இருந்துச்சு. தேவா யாரு பாலு யாருனு அப்புறம் கடைசியில் தான் தெளிவு கிடைச்சுது.
மாயா மது நம் நாயகிகள்.
மாயா தேவா லவ் நல்லா இருந்துச்சு.
மாயா மெக்கானிக் ஷெட்ல தேவாக்காக அவனை போய் பார்க்குறது எல்லாம் ரசிக்கும் படியா இருந்துச்சு.
சத்யன் மது லவ் நல்லா இருந்துச்சு.
வருண் யசோ அம்மா ரெண்டு பேரும் பாவம்.
கடைசியில் செல்வம் கூட்டத்தோட தலைவன் எதிர் பார்க்கல.
நல்லா இருந்துச்சு. கடைசி வரைக்கும் வருண் தான் நினைச்சேன். ட்விஸ்ட் எல்லாம் எதிர் பார்க்கல.
வாழ்த்துக்கள் 💐💐💐
 
ரகசியத்தின் ராகம்: கதை விமர்சனங்கள் டாக்டர் மாயா நல்ல அமைதியான அழகான பெண் அவள் மெக்கானிக் தேவாவை லவ் பண்றா... டாக்டர் சத்யன் மாயவோட தோழி மதுவை லவ் பண்றான்...தேவா போதைப்பொருள் கடத்துவதாக காண்பிக்கிற மாதிரி கதை நகர்கிறது ஆனால் தேவாவும் சத்யாவும் பாலாவோட உதவியோடு ஹாஸ்பிடல்ல நடக்கும் போதைப்பொருள் கடத்தலை கண்டுபிடிக்கிறதுதான் கதை யசோதா அம்மா கேரக்டர் செம்ம நல்ல விறுவிறுப்பாக த்ரில்லர் சினிமா பார்த்த ஃபீல் மாமாவோட லவ்வு ரொமான்ஸ் 😍 😍 😍 🥰 💐 💐 💐 💐 வாழ்த்துக்கள் மா
 
Top