ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 3- இலையின் மேலாடும் பனித்துளி

pommu

Administrator
Staff member
APV 3- இலையின் மேலாடும் பனித்துளி
 
இலையின் மேலாடும் பனித்துளி

கதையின் நாயகன் பார்த்திபன் அவனுக்கு தெரியாமலேயே அவனோட அண்ணி தங்கச்சி கூட கல்யாணம் பேசிடுறாங்க அவங்க அம்மா கிருஷ்ணவேணி அது தெரியும் போது அவனுக்கு விருப்பம் இல்லைனு சொல்லிடுறான்.

அதுனால குடும்பத்துல கலவரம் ஒரு பக்கம்.

அவனுக்கு பொண்ணு கொடுக்க விருப்பப் பட்டு வரும் வரன் பவித்ரா அவ போட்டோ பார்த்து அவ மேல ஆசை பட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கிறான் இந்த கலாட்டால அவன் லைப் எப்படி போகுதுனு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

லலிதா அடாவடி பணக்கார அண்ணி அவளோட அலப்பறை தாங்க முடியல. பார்த்தி நல்லா வரது பிடிக்காமல் கிருஷ்ணாவேணியை ஏத்தி விடும் போது எல்லாம் அவ்வளவு கடுப்பாகுது அவ மேல 🤧🤧

கிருஷ்ணவேணி என்ன அம்மானே புரிஞ்சுக்க முடியல பணத்துக்காக பார்த்தியை அவனோட விருப்பம் கேட்காமல் ஷிபாக்கு பேசுறது.லலிதாக்கு அடிமையாய் இருக்குறதுனு அவங்கள சுத்தமா பிடிக்கவே இல்ல 😒😒😒

பவித்ரா பார்த்தியோட கியூட் பொம்மை 😍😍 அவங்களோட லவ் ரசிக்கும் படியா இருந்துச்சு.

ஜீவா பவித்ராக்கு அவ்வளவு சப்போர்ட்.

அபி பவித்ரா பாண்டிங் நல்லா இருந்துச்சு.

ஷிபா சரியான சைக்கோ 😤😤😤

ஸ்டோரி படிக்க நல்லா விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
இயல்பான குடும்பக் கதை ❤
கதையின் நாயகன் பார்த்திபனுக்கும் நாயகி பவித்ராவிக்கும் எப்படி காதல் மற்றும் திருமணம் ஆகுது ? இடையில் பார்த்திபனை ஒருதலையாக விருப்பும் ஷீபா அவர்கள் வாழ்வில் என்ன இடையூறு செய்கிறாள்? அதிலிருந்து எப்படி மீண்டு வந்து அழகான வாழ்வு வாழ்கிறார்கள் என்பதே கதை ❤❤❤

அபி மற்றும் ஜீவா இரண்டு பேரும் நல்ல தமக்கைகள் ❣️ எனக்கு இவங்க கதாப்பாத்திரம் மிகவும் பிடித்தது.

கிருஷ்ணவேணி பணத்திற்கு மதிப்பு கொடுத்து மற்றும் மூத்த மருமகளுக்கு பயந்து பார்த்தியை கண்டுக்கொள்ளாமல் இருப்பது எனக்கு சுத்தமா பிடிக்கல 😏😏😏 ஒரு அம்மாவா தோற்றுப் போய்ட்டாங்க.

பவி ரொம்பவும் க்யூட் 🥰🥰 பவி அப்பா, பவி ஜீவா, பவி அபி, பவி பார்த்தி இந்த கோம்போ எல்லாமே அருமை ❤ தன் தவறை உணர்ந்து மாத்திக்கிட்டதாகட்டும் தீபனுக்காக கடை நடத்துரதாகட்டும் எல்லாமே நல்லா இருக்கு ❤❤

பார்த்தி நல்ல மகன் ❤ அம்மா என்ன பண்ணாலும் ஒரு மகனா அவன் கிருஷ்ணவேணியை நடத்துன விதம் அருமை ❤ எல்லாரும் இருந்தும் அவன் திருமண வேலைகளை அவனே பார்த்தது கஷ்டமா இருந்தது 😞😞 தீபன் நல்ல கணவன் ❤ அவனின் காதலும் பவியை எப்பவும் நல்லா பார்த்துக்கனும்னு அவனின் நினைப்பும் ரொம்பவும் ரசிச்சு படிச்சேன்❤

இயல்பான உரையாடல்கள் , மற்றும் கதாபாத்திரப் படைப்பு இவை இரண்டும் கதையின் பலம்❤

பார்த்தியும் பவியும் பனித்துளியாய் வாசகர்கள் நெஞ்சை குளிர்வித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
Top