இயல்பான குடும்பக் கதை ❤
கதையின் நாயகன் பார்த்திபனுக்கும் நாயகி பவித்ராவிக்கும் எப்படி காதல் மற்றும் திருமணம் ஆகுது ? இடையில் பார்த்திபனை ஒருதலையாக விருப்பும் ஷீபா அவர்கள் வாழ்வில் என்ன இடையூறு செய்கிறாள்? அதிலிருந்து எப்படி மீண்டு வந்து அழகான வாழ்வு வாழ்கிறார்கள் என்பதே கதை ❤❤❤
அபி மற்றும் ஜீவா இரண்டு பேரும் நல்ல தமக்கைகள்

எனக்கு இவங்க கதாப்பாத்திரம் மிகவும் பிடித்தது.
கிருஷ்ணவேணி பணத்திற்கு மதிப்பு கொடுத்து மற்றும் மூத்த மருமகளுக்கு பயந்து பார்த்தியை கண்டுக்கொள்ளாமல் இருப்பது எனக்கு சுத்தமா பிடிக்கல



ஒரு அம்மாவா தோற்றுப் போய்ட்டாங்க.
பவி ரொம்பவும் க்யூட்


பவி அப்பா, பவி ஜீவா, பவி அபி, பவி பார்த்தி இந்த கோம்போ எல்லாமே அருமை ❤ தன் தவறை உணர்ந்து மாத்திக்கிட்டதாகட்டும் தீபனுக்காக கடை நடத்துரதாகட்டும் எல்லாமே நல்லா இருக்கு ❤❤
பார்த்தி நல்ல மகன் ❤ அம்மா என்ன பண்ணாலும் ஒரு மகனா அவன் கிருஷ்ணவேணியை நடத்துன விதம் அருமை ❤ எல்லாரும் இருந்தும் அவன் திருமண வேலைகளை அவனே பார்த்தது கஷ்டமா இருந்தது


தீபன் நல்ல கணவன் ❤ அவனின் காதலும் பவியை எப்பவும் நல்லா பார்த்துக்கனும்னு அவனின் நினைப்பும் ரொம்பவும் ரசிச்சு படிச்சேன்❤
இயல்பான உரையாடல்கள் , மற்றும் கதாபாத்திரப் படைப்பு இவை இரண்டும் கதையின் பலம்❤
பார்த்தியும் பவியும் பனித்துளியாய் வாசகர்கள் நெஞ்சை குளிர்வித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
