#கங்குல்_விமர்சனம்
மிஸ்ட்ரி கதை களம்
அமாவாசை அன்று நடைசாற்றப்படும் கோவில். அதற்கு அடுத்த நாள் கோவில் திறக்கும் வரையில் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. மீறினால் மரணம்


ஏன்? அப்படி என்ன இருக்கிறது கோவிலில்?
பல தலைமுறைகளாக விக்ரம் குடும்பத்தாரால் பாதுக்காக்கப்படும் வாள். அந்த வாளின் சிறப்பு என்ன? இன்னும் பல கேள்விகள்? குழப்பங்கள்? அதற்கான தீர்வு காண நினைத்திருக்கிறது இந்த கங்குல்.
வாசுகி, அகத்தியர் மற்றும் குமரி காண்டம் பற்றி சொன்னது நல்லா இருந்தது ❤
அனு ட்விஸ்ட் மற்றும் குமரிக்கண்டம் இந்த கதையில் வரும்னு எதிர்ப்பார்க்கல

நல்லா இருந்தது ❤
சக்தி தான் கதையின் நாயகன்னு நினைச்சேன் ஆனால் இப்படி பண்ணுவீங்கனு எதிர்ப்பார்க்கல
அகோரினால கதை சுவாரஸ்யமா நகருது.
கதையின் ஆரம்பத்தில் நல்ல விறுவிறுப்பாக நல்லா நகர்ந்தது. ஆனால் விக்ரம் போல எங்களையும் கொஞ்சம் குழப்பீட்டீங்க.
நிறைய எழுத்துபிழைகளினால் படிக்க கடினமா இருந்தது. சக்தி ஏன் ஆவியா வருகிறான்? அவன் என்ன சொல்ல நினைக்கிறான்? அந்த புத்தகத்தை அவ்வளவு பாதுகாப்பாக வெச்சிருக்காங்க ஆனால் இறுதியில் சுலபமா எப்படி எடுக்க முடிந்தது? அனு எப்படி வாள் இருப்பிடம் கண்டுப்பிடிச்சாள்? இன்னும் நிறைய கேள்விகளுக்கு பதில் சரியா கிடைக்கவில்லை.
எதோ ஒரு அவசரத்தில் கதையை முடிச்சது போல இருந்தது

நல்ல முயற்சி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
