ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 29- கங்குல்

The story had a good start,❤️ but it feels incomplete.
and sudden the flow becomes dull and poor.
The ending is weak, so reading the full novel doesn’t give satisfaction🙃
 
கங்குல்



கதையோட தலைப்பே வித்தியாசமா இருக்கு..

ஊரில் பெரிய குடும்பம் இவங்களோடது தான். அந்த ஊரில் அமாவாசை அன்னைக்கு கோவிலுக்கு போனா இறந்துருவாங்கனு சொல்ல.. நம்ம சக்தி பய துடுக்கத்தனமா அப்படி என்ன தான் ஆகுதுனு பார்க்க போறான்..

அடுத்த நாளே அவன் இறந்திட.. அடுத்து வைபவ் இறப்பும் நடக்குது..

மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து போகுது..

இந்த குடும்பம் தலைமுறை தலைமுறையா வாள் ஒன்றை பாதுகாத்து வெச்சுட்டு இருக்கு.. அந்த வாளை எடுக்கவும் ஒரு பக்கம் சதி நடக்குது..

சக்தி வைபவ் இறப்புக்கு பிறகு அகோரி ஒருவர் அந்த ஊரை விட்டு நம்மைய போக சொன்னாங்கனு விக்ரம் மனைவி சொல்றாங்க..

அந்த அகோரியை சந்திச்சா இந்த மர்மத்துக்கு விடை கிடைக்கும்னு விக்ரம் நினைக்க.. மறுபடியும் குழப்பத்துக்கே ஆளாகறான்..

அப்படி என்ன தான் நடக்குது அந்த ஊர்ல.?

இருவரின் இறப்பிற்கு காரணம் என்ன.?

பல மர்மமான கேள்விகளுக்கு பதில் கதையில்..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்
கள் சிஸ்டர்..
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP29

அர்பிதா அவர்கள் எழுத்தில்

"கங்குல்"

வித்தியாசமான கதை தலைப்பு.

ஊரில் செல்வாக்காக வாழும் குடும்பம் கோயிலின் முதல் மரியாதை இவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

சங்கரன்..சிவகாமி

முத்து.. தேவி

இவர்களின் பிள்ளைகள்

விக்ரம் வைபவ் சக்தி மற்றும் அனு.

இவர்கள் குடும்பத்திற்கே உரித்தான மன்னர் காலத்து தங்க வாள். அதை காலம் காலமாக பாதுகாத்து வருகிறார்கள். விலைமதிப்பற்ற பொக்கிஷமான பொருளை கொள்ளையடிக்க சிலர் முயல்கிறார்கள்.

ஊரில் ஒரு கட்டுப்பாடு உள்ளது அமாவாசை முன்பும் பின்பும் கோயிலுக்குள் யாரும் போகக்கூடாது அப்படி போனவர்கள் உயிரோடு திரும்புவதில்லை என்ற நம்பிக்கை மிகுந்திருக்க. அப்படி என்னதான் இருக்கிறது அமாவாசை அன்று கோயிலுக்குள் என்று தன் வயதிற்கே உரிய துடிப்புடன் கோயிலுக்குள் செல்கிறான் சக்தி. நம்பிக்கை பொய்யாகாமல் உயிரும் போகிறது அவனுக்கு. அவனைத் தொடர்ந்து வைபவிற்கும் மரணம் ஏற்படுகிறது. ஏன் யார் இதற்கு காரணம் என்பது கதையில்.

இதற்கிடையில் அகோரி ஒருவர் கௌசல்யாவிடம் அந்த குடும்பத்தை விட்டு சென்று விட கூறுகிறார் அது ஏன் என்பதும் கோயிலில் நடக்கும் மர்மம் என்ன என்பதும் கதையில் .

விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
#கங்குல்_விமர்சனம்

மிஸ்ட்ரி கதை களம்😍

அமாவாசை அன்று நடைசாற்றப்படும் கோவில். அதற்கு அடுத்த நாள் கோவில் திறக்கும் வரையில் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. மீறினால் மரணம் 😰😰
ஏன்? அப்படி என்ன இருக்கிறது கோவிலில்?

பல தலைமுறைகளாக விக்ரம் குடும்பத்தாரால் பாதுக்காக்கப்படும் வாள். அந்த வாளின் சிறப்பு என்ன? இன்னும் பல கேள்விகள்? குழப்பங்கள்? அதற்கான தீர்வு காண நினைத்திருக்கிறது இந்த கங்குல்.

வாசுகி, அகத்தியர் மற்றும் குமரி காண்டம் பற்றி சொன்னது நல்லா இருந்தது ❤

அனு ட்விஸ்ட் மற்றும் குமரிக்கண்டம் இந்த கதையில் வரும்னு எதிர்ப்பார்க்கல 😍 நல்லா இருந்தது ❤

சக்தி தான் கதையின் நாயகன்னு நினைச்சேன் ஆனால் இப்படி பண்ணுவீங்கனு எதிர்ப்பார்க்கல 😭

அகோரினால கதை சுவாரஸ்யமா நகருது.

கதையின் ஆரம்பத்தில் நல்ல விறுவிறுப்பாக நல்லா நகர்ந்தது. ஆனால் விக்ரம் போல எங்களையும் கொஞ்சம் குழப்பீட்டீங்க.

நிறைய எழுத்துபிழைகளினால் படிக்க கடினமா இருந்தது. சக்தி ஏன் ஆவியா வருகிறான்? அவன் என்ன சொல்ல நினைக்கிறான்? அந்த புத்தகத்தை அவ்வளவு பாதுகாப்பாக வெச்சிருக்காங்க ஆனால் இறுதியில் சுலபமா எப்படி எடுக்க முடிந்தது? அனு எப்படி வாள் இருப்பிடம் கண்டுப்பிடிச்சாள்? இன்னும் நிறைய கேள்விகளுக்கு பதில் சரியா கிடைக்கவில்லை.

எதோ ஒரு அவசரத்தில் கதையை முடிச்சது போல இருந்தது😞 நல்ல முயற்சி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
Top