விர்சாலியின் பூ மஞ்சள் தருவாயோ
நாயகன் - அர்ஜீன்
நாயகி- யாழினி
தனக்கு பிறகு தன் மகனுக்கோ மகளுக்கோ கடைசி வரை மனதாலும் உடலாலும் உறுதுணையாக உற்றதுணையாக இருக்க ,செய்து வைப்பது தான் திருமணம்.
ஆனால் திருமணங்கள் அவ்வாறா நடக்கிறது, கேள்விகுறிதான்…
சிலது மட்டுமே விதிவிலக்கு…
அப்படி ஒரு திருமணம் தான் நம் நாயகிக்கு, நயகனுக்காவது இன்று நமக்கு திருமணம் என்று தெரியும், ஆனால் நாயகி, வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் விழா நாயகியானாள்.
விருப்பாமில்லா இல்லா திருமணத்தில்,பெரியவர்களின்
வற்புறுத்தலுக்காகவும்,அண்ணன்களின் திருமணம் நிற்க கூடாது என திருமணத்திற்கு சம்மதிக்கிறான்.
போனால் போகிறது என வாழ்க்கையளிக்க, இவன் வர,
ம்கூம் இவனது விருப்பமின்மையை அறியாதவளானாலும்,அவள் விருப்பின்மை காரணமாக சொல்லாமல் கொள்ளாமல் ஆள் எஸ்கேப்…
இதனை அறிந்து இவனை விட்டால் இவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க இயலாது என அங்கே விழாவிற்கு வந்தவளை மேடையற்றுகின்றனர்.
தந்தையில்லா தாயின் கஷ்டங்களுக்கு நடுவில் வளர்க்கப்பட்டதால் ,அவரது சொல்லுக்கு கட்டுபட்டு திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.
அந்தோ ,ஏற்கனவே கிழக்கே என்றால் மேற்கே என்று நிற்கும்அவன்,திடிர் மணமகளான மனைவியை, எப்படி நடத்துவான்…
அவன் தான் அவனை தவிற வேறு யாருக்கும் அறிவில்லை என நினைக்கும் அறிவாளியாயிற்றே…
தள்ளி நிறபதோடு அல்லாமல் தூரமாய் விலகி செல்கிறான்…
விளைவு அவளை பற்றி அ…னா கூட அறிந்திருக்கவில்லை என்பதைவிட முற்படவில்லை.
திடிர் திருமணம்,அவளை கொஞ்சம் அச்சுறுத்த,அவனது செயல்கள் ஆரம்பத்தில் ஆசுவாசம் கொடுக்க,போக போக அதுவே ஏக்கத்தையும் ,கவலையும் கொடுக்கிறது.
ஆயிரம் உறவுகள் அரவணக்கலாம்,பெற்றோர்களோ அவளு(னு)க்கான முதல் முழு உறவாய் கைகாட்டுவது அவர்களுக்கானவர்களை தானே..
ஆனால் நடைமுறையில் இருக்கிறாதா????
அதே வீட்டில் மற்றைய தம்பதியர் மகிழ்வாய் வலம், மனகலக்கத்தோடு உலா வந்தாலும்,மனதின் ஏக்கத்தை மறைத்து நடமாட ,முடியுமா என்ன???
அறிவுரைகள் ஆயிரம் கூறலாம்,ஆனால் அவரவர் தோன்றி வாழ்ந்தால் வாழ்க்கையில் வசந்தம்,நடிக்க முற்பட்டு வெடித்து சிதறியது மட்டுமே மிச்சம்.
ஒருஜோடி புரிதலான காதல்
ஒரு ஜோடி இரகளையான காதல்
ஒரு ஜோடி சாத்வீக காதல்
இந்த அர்ஜீன எதில சேக்கறதுனு நீங்களே முடிவு பண்ணிக்கங்க..
அர்ஜீனின் மனம் மாறியதன் காரணம் என்ன???
மாறிய பின்பும் மாற்றத்தை மறைத்த காரணம் தான் என்ன???
அறிவாளி அர்ஜீன் அச்சோ பாவம் என பார்க்க,அவன் பாவமாக போன கதையை அறிய
வாசித்திடுங்கள்
பூ மஞ்சள் தருவாயோ…
இரசனையான கொட்டு,அழகான குடும்ப பிணைப்பு
வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
