முன்னோட்டம் - 2
"ஹனி"
"ம்ம்"
"ஹனினி"
"ம்ம்ம்"
"அடியேய்ய் ஹனிஇஇஇ..."
"அய்யோ ஆத்தா .....அடச்ச்ச.... இப்போ எதுக்கு மினி காதுக்குள்ள வந்து கத்துற??"
"கூப்பிட்டே இருக்கேன் அப்படி என்ன மும்முரமா யோசிச்சுட்டு இருக்க??"
"ப்ச்ச்.....அது ஒன்னுமில்ல மினி...நீ எதுக்கு கூப்ட??"
"அது வந்து ஹனினி......"
ஏற்கனவே இன்று லெமன் ரைஸ்கு தன் அத்தை ஷைட் டிஸ்ஸாக வைத்த உருளை வறுவல் நன்றாக இருந்ததா?? இல்லை எண்ணெய் கத்தரிக்காய் நன்றாக இருந்ததா??? என்ற தன் தீவிர சிந்தனையைக் கலைத்த தோழியின் மேல் காண்டாக இருந்த ஹனி,
"அடியேய்....ராகம் பாடாம ஒழுங்கா சொல்லலஅஅ ......இந்த ஹனி சனியா மாறிடுவா பாத்துக்கோ" என்றிருந்தாள்.
"சரி..சரி...சொல்லிடறேன், நேத்து மேன்லியா ஒரு மேன பாத்தோமே.."
"என்னாது......... பாத்தோமாஆஆ???? எங்கடி பாத்த?? எப்போ பாத்த?? என்ன விட்டு நீ மட்டும் எப்படி பாக்கலாம்.." என்று எகிறிக் கொண்டு வந்தாள் ஹனி.
"ஸ்ஸ்..ஷப்பா.. நீயும் தான்டி பாத்த லூசு"
"நானுமா??.....இருக்காதே.... கனவுல கூட அப்படி மேன்லியா யாரும் வரதில்லயே.....இவ யார சொல்றா??" எனத் தன் போக்கில் முனங்கிக் கொண்டிருந்த ஹனியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட மினி,
"கனவுல இல்லடி நெஜத்துல...நேத்து உங்க வீட்டு பக்கத்துல...பேரு கூட ஏதோ... ஸ்க..ஸ்கந்..." என்று மினி தடுமாற,
"ஸ்கந்தகுமரன்" என்று கூறி அதை முடித்து வைத்தாள் ஹனி.
"எஸ் எஸ்... அவரேதான்" என்ற மினியிடம், "அவங்களுக்கு என்ன இப்போ??" என்றிருந்தாள் ஹனி.
"அது வந்துடி...வந்துது..."
"ப்ச்ச்...மேலஅஅ..மேல சொல்லு" என்றவளை புரியாமல் பார்த்த மினி,
"இல்லடி இருக்கட்டும்... நான் கீழ பாத்தே சொல்றேன்" என்றிருந்தாள்.
இப்போது தலையிலடித்துக் கொள்வது ஹனியின் முறையானது.