ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Pen to publish ... Q& A

pommu

Administrator
Staff member
அமேசான் கிண்டில் pentopublish போட்டியில் பங்கேற்கும் சில புது எழுத்தாளர்கள் தனி தனியாக கேள்வி கேட்டாங்க.. அவங்களுக்கான த்ரெட் இது.. மொத்தமா நீங்க கேட்கலாம்.. நான் என்று இல்லை பதில் தெரிந்தவர்களும் பதிலளிக்கலாம்

Up to now கேட்ட கேள்விகள் சிலவற்றுக்கு நான் கொடுத்த பதில்..
 

pommu

Administrator
Staff member
போட்டியில் கதையை தனி தனி அத்தியாயமாக போடணுமா இல்லை மொத்தமா போடலாமா. ??

மொத்தமாக போட வேண்டும்
 

pommu

Administrator
Staff member
இதுல எத வச்சு பைனல் பைவ் செலக்ட் பண்ணுவாங்க?

அது தான் இப்போ வரைக்கும் தெரியாத கம்பசூத்திரம்.. போன வருஷம் ரிவியூ வச்சு தான் செலெக்ட் பண்ணுவாங்கன்னு சொல்லி மாறி மாறி ரிவியூ போட்டு 200 ரிவியூ கூட எடுத்தாங்க... அரசியல் இங்க இல்லன்னு சொல்ல முடியாது ,. கண்டிப்பா இருக்கு.. எனக்கெல்லாம் அந்த அளவுக்கு ரிவியூ போடவே யாரும் இல்ல.. வாசகர்கள் மட்டுமே கதை படிச்சுட்டு போட்டா தான் உண்டு என்கிற நிலைமை... அதனால சரி போனா போகட்டும்னு தான் இருந்தேன்... ஆனா எதிர்பாராத விதமா 6 ரிவ்யூ மட்டுமே எடுத்த நான் பைனலுக்கு போனேன்.. அதனால தான் இது கம்பசூத்திரம்னு சொன்னேன்..
 
Top