நாயகன் பேருக்கேத்த மாதிரி கார்முகிலோட நிறத்தையும், வெண்முகிலோட மனசையும் கொண்டவன். பணத்துக்கு குறைவில்லாத குடும்பம். பணத்துக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி அவனோட நிறத்தை பாத்து முடியாதுன்னு சொன்ன பொண்ணுங்களையே பாத்து பழக்கப்பட்டவனுக்கு பார்க்கிறவங்களை மறுபடியும் மறுபடியும் பாக்க தூண்டுற அழகியான நாயகி சுமித்ரா கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னதும் அதை முழு மனசா ஏத்துக்க முடியல. அதையும் அவளுக்காகத்தான் யோசிக்குறான் அவளோட வளர்ப்பு பெற்றோர் அவளை கட்டாயப்படுத்தினதால சம்மதம் சொன்னாளோன்னு அவன் யோசிக்க அவனோட நண்பர்கள் சிலர் அவங்க காதல்ல ஜெயிக்குறதுக்காக அவனை காட்சிப்பொருளா நிறுத்தியும் கொஞ்சமும் முகம் சுளிக்காம அவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவியைச் செய்வேன்னு சொன்ன அவனோட நல்ல மனசுக்காக அவனை கல்யாணம் பண்ண முடிவெடுக்குறா சுமி.
அவளுக்கு தன்னை பிடிக்காதுன்னு நினைக்குற முகி, அவனைத் தன் உயிரா நினைக்குற சுமி கல்யாணம் பண்ணியும் அவளோட விளையாட்டுத்தனம் விபரீதத்தில முடிஞ்சு அவங்களுக்கிடையில பிளவை கொண்டு வருது. ரெண்டு பேரும் அந்த பிளவை சரிகட்டி வாழ்க்கையில எப்படி இணையிறாங்கன்னு கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க ஃப்ரெண்ட்ஸ்.
அம்மாவோட புத்தர் கதை கேட்டு மத்தவங்க தன்கிட்ட கண்ட குறையையே நிறையாக்கி மாத்தின முகி, அவனோட மனசை மட்டுமே பாத்த சுமி, வளர்ப்பு மகளா இருந்தாலும் பெத்த மகளுக்கு மேலா பாசம் காட்டுற செல்வம்-அனிதா தம்பதி, மகனை எல்லா விதத்திலேயும் சிறந்தவனா வளர்த்த சுதா-மூர்த்தி தம்பதி, தன்னோட இடத்தை சுமிக்கு விட்டுக் குடுத்த அன்பான அக்கா சுபிதா, முகம் கோணாம முகியை அப்படியே தம்பியா தத்தெடுத்துக்கிட்ட திலக், தன்னோட அண்ணனுக்காக புருஷன் கிட்டேயே சண்டை போடுற குழலி, நண்பனுக்காக தோள் குடுக்கிற அதியன், ஆராதனா, மனசு முழுக்க முகி மேல பொறாமை வைச்சுக்கிட்டு அதை வார்த்தையிலேயும் காமிச்சு பொண்டாட்டிக்கிட்ட வாங்கி கட்டிக்கிற மச்சான் குமார், முகியை சித்தான்னு கூப்பிட்டு முதல்ல முறையை தொடங்கி வைச்ச ஆதவன் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நச்சுனு பதியிறாங்க மனசில.
கல்யாணத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்து தனக்கு ரொம்ப வேண்டியவங்களை சர்ப்பிரைஸ் மழையில் குளிப்பாட்டும் சுமியோட சர்ப்பிரைஸ் முகிக்கு மட்டும் அனல் மழையாகி அவன் எதிர்பார்ப்பை பொசுக்கிடுச்சு. அதுக்கு அவன் மலையேற அவனை இறக்குறதுக்கு அவ செய்ற முயற்சிகள் தோல்வில முடிய ஒரு கட்டத்தில அவனோட பேச்சு அவளை காயப்படுத்த அவ மலையேறுறா அவன் தழைஞ்சு போறான். அப்புறம் ஒரு வழியா சமாதானமாகி குடும்பம் நடத்தலாம்னா இயற்கையும் கூடவே நம்ம ரைட்டரம்மா வும் சதி பண்ண ஒரு கட்டத்தில இல்லறத்சில நுழையிறவங்க கடைசில ரெண்டு குழந்தைங்களோட மனசை நிறைக்குறாங்க.
நிறைவான மகிழ்வான வாழ்க்கைக்கு நிறம் முக்கியமில்லை நல்ல மனசுதான் முக்கியம். அதே மாதிரி கணவன் மனைவிக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும் அதை பொறுமையா பேசி தீர்த்துக்கணும். அப்புறம் எல்லா நேரமும் விளையாட்டு சந்தோஷத்தை குடுக்காது சில நேரம் அது வினையா மாறி நம்ம சந்தோஷத்தை அழிச்சிடும் இப்படி பல கருத்துக்களை ஆணித்தரமா சொல்லுது இந்த கதை. இனிமா இந்த கதைக்கு உங்களுக்கு நன்றியும், வெற்றி பெற வாழ்த்துக்களும். உங்களுடைய அன்பான, அழுத்தமான ஹீரோக்கள் லிஸ்ட்ல முகியும் சேர்ந்து எங்க மனசில இருப்பான் எப்பவுமே
நிற அடிப்படையில் இரு துருவங்களாக அமைந்த கருநிற கண்ணனுக்கும் பால் நிலாவிற்கும் இடைப்பட்ட திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையின் சுவாரஸ்யமே கதைக்களம்.
நிறத்தால் மற்றவர்களில் இருந்து மாறுபட்டு பல்வேறு சூழ்நிலைகளில் பலரால் காயப்பட்டாலும் தாயின் தன்னம்பிக்கையினால் வழிநடத்தப்பட்டு பக்குவமாய் வலம் வரும் நாயகன் கார்முகில்.
தன் தாய் இல்லாமல் தாயிற்கும் மேலாக பாசம் காட்டி தாய், தந்தை அக்கா என பாசத்திற்கு குறையில்லாமல் கருணையோடும் அடுத்தவர் மகிழ்விற்காக இன்ப அதிர்ச்சி கொடுத்தும் வலம் வரும் நாயகி சுமித்ரா.
காதலின் அடிப்படையில் தனக்கு திருமணமே நடக்காது என்ற நிலையில் பேரழகியாய் தனக்கு கிடைக்கும் தேவதை சுமித்ரா. சுமித்ராவிற்கு உண்மையிலே தன்னை பிடிக்குமா என்னால் அவளுக்கு கஷ்டம் நேரிடுமோ இந்த திருமணம் நிலைக்குமா என பல்வேறு குழப்பங்களில் இருந்தவனுக்கு நாயகியின் இன்ப அதிர்ச்சி தோல்வியில் முடிந்ததால் விளைந்த விபரீதம் என்ன? அதை இருவரும் கடந்து தனது காதல் பயணத்தை எவ்வாறு தொடர்ந்தார்கள் என அற்புதமாக வடிவமைத்துள்ளார் எழுத்தாளர்
* இந்த குறியீடு வைத்து வந்த வார்த்தைகளை மட்டும் தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
கதை முழுவதும் தொய்வில்லாமல் சுவாரசியமாகவும் ரசிக்கும்படியாக இருந்தது அருமை.
நிறம் அதனால் நாயகன் சந்திக்கும் ஒதுக்கங்கள், அவமானங்கள் மற்றும் வலிகள். அவனின் மனதின் நிறத்தை பார்த்து அவனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பேரழகி சுமித்ரா
சுமியின் உண்மையான அன்பை ஏற்று தனக்கிருக்கும் தாழ்வு மனப்பான்மையை கடந்து எப்படி அவர்களின் மன வாழ்க்கை அமைகிறது என்பதே கதை ❤❤❤
கார்முகில்வண்ணன் மிகவும் பொறுத்தமான பெயர் ❤ முகில் மற்றும் சுமி இரண்டு பேரையும் செதுக்கி இருக்கீங்க
சுமி தனக்கு பிடித்தவர்களுக்காக செய்யும் சர்ப்ரைஸ் எல்லாம் அருமை ஆனால் தன்னவனுக்காக அவளின் சர்ப்ரைஸ் சொதப்புனது பரிதாபம்
முகில் எனக்கு ரொம்ப பிடிச்சது ஆரம்பத்தில் அவங்க அம்மா சொன்ன புத்தர் கதையை ஏற்று தன்னை எந்தவிதத்திலும் மற்றவரின் ஒதுக்கங்கள் பாதிக்காம பார்த்துக்கிட்டது அருமை
முகிலின் சின்ன சின்ன உணர்வுகளை சொன்ன விதம் அழகு சுமி❤ முகி முதல் சந்திப்பில் ஆரம்பித்து அவர்கள் இருவரும் வரும் ஒவ்வொரு காட்சிகளும் அருமை ❤❤❤
சுமி முகில் இரு குடும்பமும் மனசுல நிக்கிறாங்க. எல்லாரும் நல்லவங்களா இருந்தா எப்படினு குமரன்னு ஒருவரை திருஷ்டிகாக வெச்சிட்டீங்க அதியன் அருமையான நண்பன் ❤❤ முகி இறுதியா பண்ணது எல்லாம் சற்றும் நான் எதிர்ப்பார்க்கவில்லை great muki
கதை முழுக்க நிறைய நேர்மறை எண்ணங்களால் நிறைந்து இருந்தது❤ நிறைய வெக்கப்பட வெச்சுட்டீங்க 🫣🫣 அன்பு அதுதானே எல்லாமே நிறம் என்னடா பெருசுனு அருமையா சொல்லிட்டீங்க❤
ரொம்ப ரொம்ப அழகான கதை எனக்கு ரொம்ப பிடிச்சுது ❤❤
போட்டியில் உங்களை வெற்றி அடைய வைக்க பிறந்தவர்கள் முகியும் சுமியும் ❤ வாழ்த்துக்கள்
கார்முகில் நம்ம ஹீரோ கருப்பு கட்டழகன். கருப்பா இருக்கறதுனால அவன் நிறைய அவமானங்களுக்கு ஆளாகிறான்.
கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறாங்க எல்லாம் பொண்ணுங்களும் அவனை அவமானப் படுத்தி நிறத்தை காரணம் காட்டி அவனை தவிர்க்குறாங்க.
அவனை பிடிச்சி விரும்பி கட்டிக்க வரா நம்ம ஹீரோயின் சுபத்ரா அழகு தேவதை முகிலுக்கே நம்ப முடியல கல்யாணம் வரைக்கும் நம்பிக்கை இல்லாமலேயே சுத்திட்டு இருக்கான்.
சுபி எல்லார்க்கும் சர்ப்ரைஸ் பண்ணி அதிர விடுறது அவளோட வழக்கம். பிரஸ்ட் நைட்ல அவனை சர்ப்ரைஸ் பண்ண ஏதோ பண்ணி அது தப்பா முடிஞ்சு முகில் கோபத்துக்கு ஆளாகி ரெண்டு பேரும் எப்படி ஒன்னு சேருறாங்க அவங்க லைப் எப்படி போகுதுனு ஸ்டோரில அழகா சொல்லி இருக்காங்க.
முகில் அவனை ரொம்பவே பிடிச்சுது அவனை அவன் பிரண்ட் எல்லாம் கீழ இறக்கி பேசும் போது பாவமா இருந்துச்சு.
அதிரன் அவனுக்கு ஒரு நல்ல பிரண்ட்டா இருந்தது ரசிக்கும் படி இருந்துச்சு.
சுபிக்கு முகில் மேல அவ்வளவு லவ் அவன் கூட போராடி அவனை கல்யாணம் பண்ணி ஒரு சின்ன சொதப்பல் பண்ணி பீல் பண்றதுனு மனசுல நின்னுட்டா.