முதல் திருமணத்தால் உண்டான காயங்களும் வலிகளையும் ஏமாற்றங்களையும் கடந்து அதை ஆற்றும் மருந்தா இருந்ததா நறுவியின் மறுமணம் என்பதே கதை ❤
நறுவியின் முதல் மணம் தோல்வி அடைந்ததால் இந்த உலகம் எப்படி எல்லாம் பேசும் மற்றும் பிரச்சினைனு வந்தா பெற்றோர்களின் ஆறுதல் எப்படி இருக்கும்னு ரொம்பவும் எதார்த்தமா சொல்லீருக்கீங்க ❤
அண்ணி கொளுந்தன் உறவு வித்தியாசமா நல்லா இருந்தது

அண்ணிகாக அண்ணாகிட்ட சண்டைக்கு போகுறது அழகு

அறிவு அவனின் காதல்,புசிக்கேட்னு கொஞ்சுறது, சொல்லப்படாத தோல்வியுற்ற காதலின் வலி, முக்கியமாக கவிதைகள் இவை எல்லாமே அருமை ❤ அறிவின் அப்பா அவனுக்கு கொடுத்த அறிவுரையில் அசந்துட்டேன்

ஒரு காட்சினாலும் அப்பா மகன் பிணைப்பு அவ்வளவு அழகு ❤
கார்த்தி நறுவிக்கு செய்தது அனைத்தும் வன்கொடுமைகள்


அவன் மனம் திருந்தி வந்தாலும் அவனை மன்னிக்க முடியாதுனு சொன்ன விளக்கம் நல்லா இருந்தது .
காமாட்சி ஒரு அம்மாவா அவங்க பண்ணது தப்பு சொல்ல முடியல. சுயநலமானாலும் அது என்னை பாதிக்காத வரை எனக்கு ஒன்று மில்லைனு நறுவியின் நிலைப்பாடு நல்லா இருக்கு. பாட்டியும் அவர்களின் பேச்சும் சுத்தமா சரியில்லை

தமிழிசை தமிழியல் பெயர் காரணம் அருமை

கார்த்தி நறுவியை திருமணம் செய்யறுதுக்கு இன்னும் கொஞ்சம் வலுவான காரணம் சொல்லி இருக்கலாம்னு எனக்கு தோணுச்சு. மிகவும் அழகான கதை ❤
அறிவின் அகமானவள் வாசகர்களின் அகத்தை நிறைத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
