ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 33- தேடவே தொலைத்தேனோ !

தேடவே தொலைந்தேனா
ஆசிரியர்: உஷா கண்ணன்
நாயகன்: மனோகர்
நாயகி: ஸ்ராவ்யா
நம் நாயகிக்கு நான்கு வயதில் மணிஷ், மதுஷா என்று யு கே ஜி போகும் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள்...எம்.எம் இன்வெண்ட்டரி மேனேஜ்மென்ட் பெண்களைக் கொண்டே நடத்தி வருகிறார்...அவரின் ஆஸ்தான உதவியாளராக நந்தினி இருக்கிறார்...💖💖💖
நாயகி படிக்கும் காலத்தில் கர்ப்பமாகி கர்ப்பத்திற்க்கு காரணம் யார் என பெற்றோர்கள் சியாமளா திவாகர் அவர்களிடம் கூறாமல் பெற்றோர்கள் தம்பி சித்தார்த் உடன் சிங்கிள் பேரண்டாக சுயதொழில் செய்து வாழ்ந்து வருகிறார்.🥰🥰🥰🥰🥰🥰
அவர்களுக்கு வெப் இன்ஜினியர் பதவிக்கு நந்தினி மூலமாக பணியானை பெற்று வேலைக்கு வருகிறார் மனோகர்...❤️❤️❤️❤️❤️
மனோகர் யார் ...ஸ்ராவ்யாவின் குழந்தைகளுக்கு தகப்பன் யார் அவளுக்கு திருமணம் ஆகியதா என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம்....😍😍😍😍
மனோவுக்கு கல்யாணம் நடந்ததாக நினைத்து விலகவும் முடியாது சேரவும் முடியாமல் ஸ்ராவ்யா தவிப்பது அவசர கல்யாணத்தின் புரிதல் இன்மையை காட்டுகிறது...படிக்கும் காலத்தில் காதல்❤️ அவசரகதியில் கல்யாணம் அவசர கதியில் பிரிவு❤️ குழந்தைகள் இருப்பதே நாயகனுக்கு தெரியாத நிலை என விறுவிறுப்பாக கதை நகர்கிறது
காயத்ரி 😡😡😡😡😡பெண்ணாக இருந்து பெண்ணுக்கு செய்த துரோகம் மிகவும் தவறு.... அவளுக்கு பிடிக்கவில்லை🤦🤦🤦🤦 எனில் மனோவுக்கு கல்யாணம் செய்ய கூடாது என நினைப்பது தவறு....
இன்னும் சில இடங்களில் பிள்ளைகளிடம் அவர்களின் இயல்புகளை வைத்து பெற்றவர்கள் வேறுபாடு காட்டத்தான் செய்கின்றனர்😥😥😥😥😥... இறுதியில் அண்ணனாக மனோஜ் நடந்த விதம் சிறப்பு👏👏👏...
நம் வாழ்வில் நடக்கும் சாதாரண விஷயம் நம்மளுக்கு புரிதல் இல்லாமல் தவறாக மாறும் போது ஏற்படும் பிரிவுகள் பிரச்சினைகளை எழுத்தாளர் அழகான முறையில் சொல்லி உள்ளார் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏👏👏 💐 💐 💐 💐 💐 💐
 
Last edited:
பருவவயதில் காதல் கொள்ளும் நாயகி ஸ்ராவ்யா ❤காதல் மலர்ந்த வேகத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் முடிந்து கருவுற்று பின் அதே வேகத்தில் பிரிவும் நிகழ்கிறது 💔


ஏன் இந்த பிரிவு? மீண்டும் இணைந்தார்களா? பிள்ளைகளின் நிலை? இப்படி பல கேள்விகளுக்கான பதிலை தொய்வின்றி அருமையாக கொடுத்திருக்கிறார் ❤


ஸ்ராவ்யா மனோவின் காதல் மற்றும் அந்த வயதிற்கான துடிப்பையும் வேகத்தையும் அழகா சொல்லிருக்கீங்க ❤


ஸ்ராவ்யாவின் குடும்பத்தை எனக்கு பிடித்தது. அதுவும் தம்பி சித்தார்த்தை மிகவும் பிடித்தது ❤ ஸ்ராவ்யாவிற்க்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தது சிறப்பு ❣️❣️


மனோ பெயரை வைத்து விளையாண்டது நல்லா இருந்தது ❤ மனோவின் பெற்றோர்களை பிடிக்கவில்லை 😏😏


நந்தினி கதாபாத்திரம் நல்லா இருக்கு. காவ்யா என்ன ஜென்மமோ 😡 காவ்யா பற்றி அனைத்தும் தெரிந்து ஏன் மனோஜ் இவளை மணமுடிக்க சம்மதித்தான்? 😰😰 எழுத்துபிழைகளை தவிர்த்து இருக்கலாம். மற்றபடி நல்ல கதை ❤

முதல் முயற்சி நல்ல முயற்சி ❣️


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
தேடவே தொலைத்தேனோ விமர்சனம்

இது ஒரு நெகிழ்வான காதல் கதை ❤️


நாயகன் மனோகரும் நாயகி ஸ்ராவ்யாவும் பருவ வயதிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டு அதே வேகத்திலேயை பிரிஞ்சி இருக்காங்க..நாயகி சிங்கிள் பேரண்ட்டா தன்னுடைய இரட்டை குழந்தைகளை வளர்க்குறாங்க.ஷ்ரவ்யாவை தேடி மீண்டும் வரும் மனோகர் ..இவர்களின் பிரிவு எதனால் ஏற்பட்டது ? இவர்கள் இருவரும் தங்கள் வாழ்வில் மீண்டும் எப்படி இணைந்தாங்கன்றதுதான் கதை..❤️


ஸ்ரவயா தனி பேரன்ட்டா தன் சொந்த உழைப்பால இருக்கறது ரொம்ப பிடிச்சது.. அவள் மனோகர் மீதான பிரமிப்பு அவனுக்காகவே எல்லாமே செஞ்சதுனு ஸ்ரவ்யா ரொம்ப நல்ல டைப்..இவங்க இரண்டு பேருடைய காதல் அந்த வயதுக்குரிய துடிப்பை காட்டியது ..


அதுவும் மனோகரின் ஓய் என்ற அழைப்பு 🤭எதோ நாமளே சாதாரணமா பேசிக்கிறமாதிரி தெரிஞ்சது..


ஸ்ரவ்யாவின் குடும்பம் தன் பெண்ணுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க..நல்ல குடும்பம் அதுவும் அவன் தம்பி சித்தார்த் அவ அக்காவுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தான்..இவன் கேரக்டர் அருமை..👫


மனோகரின் அம்மா அப்பா என்ன‌சொல்ல தன் பிள்ளைங்க எல்லோரையும் ஒரேமாதிரி பார்க்காமல் வேறுபாடு கொண்டு பார்த்தாங்க..மனோகரை புரிஞ்சிக்காம குற்றம் சொல்லிட்டே இருந்தாங்க..மனீஷ் சொல்லி புரியவைக்கலன்னா கடைசிவரை புரிஞ்சி இருக்காது..இறுதியில் மனோகரையும் ஸ்ரவ்யாவையும் புரிந்து கொண்டது நல்லது..


மனோஜ் தன் தம்பிக்கு ஆறுதலாக அரவணைக்கும் நேரத்தில் அரவணைத்தது அவனுக்காக தன் காதலியிடம் சண்டைபோட்டதுன்னு எல்லாமே மனோஜ் அண்ணணாக செய்தது சிறப்பு🧑‍🤝‍🧑


நந்தினியும் ஸ்ரவ்யாவிற்கு நல்ல நண்பி..சித்து நந்தினி ஜோடி சேர்த்தாச்சு..


காயத்ரி 😬😬😬 ரொம்ப ஆணவம் பிடிச்சவ..இவளுக்கு பிடிக்கலைன்னாலும் நல்லவங்களா இருந்தாலும் தப்பானவன்னு சொல்லுவாளாம்..சுத்த பைத்தியக்காரத்தனம்..சின்னவயசிலேயே இவளை 4 போடு போட்டு இருக்கனும்.அவளுடைய பிடிவாதத்துக்காக எல்லாத்தையும் சரி சரின்னு சொல்லி வளர்த்துட்டு கடைசில பாவம் இவளால மனோகர் கஷ்டம்தான் பட்டான் 😬😬😬 கடைசிவரை திருந்தாத ஜென்மம்..


மது மனீஷ் குட்டி இரண்டுபேரும் அழகு குட்டிங்க😍 மனோகரை அழகுபடுத்தினதுலாம் சிரிப்பா இருந்துச்சு..🤭🤭


இயல்பாக நடக்கும் சாதாரண விசயம் கூட புரிந்துணர்வு இல்லாமல் போனால் எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும்ன்றத இந்த கதை உணர்த்தியது...


மனோகரும் ஸ்ரவ்யாவின் குற்ற உணர்வு குறைந்து அவர்களை புரிந்து மீண்டும் வாழ்வில் இணைந்தது..அதற்கு பரிசாக கிடைத்தது அவங்க குட்டி தேவதை மதி 😍


சில இடங்களில் எழுத்து பிழைகளை தவிர்த்து இருந்தால் இன்னும் கதை நன்றாக வந்திருக்கும்...


ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
உஷாகண்ணின்

தேடவே தொலைந்தேனோ



ஸ்ராவ்யா

மனோகர்



மனம் சொல்லும் வழி‌ என்பார்களே அதேபோல் ,அதிக பழக்கமில்லாத ஒருவரை பற்றி ஒருவரை அதிகம் அறிந்திராத இருவர், ஆனால் அதித நம்பிக்கையால், வீட்டிற்கு தெரியாமல் திருமணம்‌ தங்களை ஒருவருக்குள் ஒருவரை தொலைத்தும் விடுகின்றனர்.



முதிரிச்சி இல்வா வயது,எப்படிபட்ட இழி சொல்லுக்கு ஆளாகி விட்டோமே என மனமுடையும் நாயகி, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலாக நாயகனின நிலை…அவன் வார்த்தை கொடுத்த வலி, அவன் விட்டு கொடுத்துவிட்ட வலி,அவனை விட்டு பிரிந்துவிடுகிறாள்.


அவசர திருமணம், தடலாடி பிரிவு…மனமுதிர்வதற்க்கு முன்னே மணபிரிவு…இத்தனைக்கு காரணம் புரிந்து கொள்வதகோ,ஆராய்வதற்கோவான பக்குவமின்மை..வர்ணஜாலங்கள் சில நேரநிமிடங்களில் கலச்கிய கோலங்களாக…


இதில் குழந்தை ,தந்தை யாரென தெரியாமலே வளரும் பிஞ்சுகள், தன் பெண்ணின் கணவனா,காதலனா யார் அவளுடைய இந்த நிவைக்கு காரணம் என தெரியாமல் தவிக்கும் பெற்றவர்கள்…நடந்தது எதுவாகினும் உனக்கு நான் இருக்கிறேன் என தாங்கி நிற்கும் தம்பி…என குடும்பம் அவளை தாங்கினாலும், நெறிஞ்சி முள்ளாய் சிறு வலி அந்த குடும்பத்தை தைத்து கொண்டு தான்‌ இருக்கிறது.



தன்னை இக்காட்டில் நிறுத்தி தன் மனைவியை பிரித்த காரணமும் ,அதற்கு காரணகர்த்தவாக இருப்பவரின் மீது அளவு கடந்த கோபம் ,ஏற்கனவே தன் குடும்பம் தன்னை வைத்திறக்கும் இடம், நடத்தும் விதம்…எல்லாம் சேர்ந்து அவனை தத்தளிக்க வைக்க,தேடியவள் கிடைக்காமல் போக,தன் கவனம் முழுவதையும் தன் வேலையில்‌ முழ்கடித்துகொள்கிறான்.





இதற்கிடையில் கணவனின் மீதான கோபம் குறைய,அவனுக்கு திருமணம் என்ற செய்தி அவளை மீண்டும் இருக செய்கிறது.




இதறக்கிடையில் அவள் நடத்தும்‌ சிறிய நிறுவனத்தில், வெப் டிசைனராக வந்து சேர்கிறான்‌ மனோகர்.



கட்டி வைத்து இதயம் கட்ணவிழ்க்க துடிக்க…அவன் அவன் கல்யாணம் கண்முன் நிற்க…இருதவை எரும்பாக பேதையின் நெஞ்சம்.




வேலைக்கு சேர்ந்த சில தினங்களிவே த் குழந்தைகளை பற்றி அறிய நேரிடுகையில்,,கோபமும் இயலாமையும் ஒன்றாய் சேர்ந்து தவிக்க செய்ய,அவர்களை எப்படி சமாதானம் செய்து தன்னுடன் சேர்க்க என திண்டாடுகின்றான்.




ஸ்ராவ்யா மனோகரை பிரிந்ததற்கு காரணம் என்ன…பிர்த்தவர் தான் யாரோ…???


மனோகரின் தன் குடும்பத்திற்கான ஒட்டா தன்மைக்கான காரணம் தான் என்ன???



மனோகரின் திருமணமானவானாக இருந்தால் ,ஸ்ராவ்யாவின் நிலை தான் என்ன???



மேலும் பலரை அறிய வாசித்து மகிழுங்கள்



தேடவே தொலைந்தேனோ…கைக்குள் அடக்கம்



வாழ்த்துக்ள் ரைட்டர் ஜி 💖 💖 💖
 
Top