அவளது நீங்கா நினைவுகள் விமர்சனம்
இருவேறு சூழ்நிலைகளில் நடக்கும் நிகழ்வுகள் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையதா இருக்கு அப்படின்றதுதான் கதை..
ஒரு நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகள்..அந்த கொலையாளியை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் அதிகாரிகளான துருவ் கார்த்திக் ருத்ரா , இவங்களுக்கு மருத்துவ ரீதியாக உதவி பண்ணுறாங்க டாக்டர் தியா , எதற்காக இந்த கொலைகள் நடக்குது? கொலையாளி யார் அப்படின்றத சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் கலந்து சொல்லிருக்காங்க ஆசிரியர்..
ஒரு பக்கம் கொலை நடக்க கொலையாளியை தேடன்னு போக இன்னொருபக்கம் அழகான பள்ளிக்கால நட்பு காதல்னு போறது நல்லா இருந்தது படிக்க

லக்ஷ்மி கயல் நட்பு செம்ம

லக்ஷ்மியின் மேல் ஈஸ்வர் கொண்ட காதலும் செல்வத்தின் சாப்பாட்டு ராமியான கயல் மீதான காதலும் சூப்பரா இருந்தது .. இறுதியில் லக்ஷ்மியின் முடிவு கேட்டு கயலின் கதறல் இருவரின் நட்பின் ஆழத்தை காட்டுது...
லக்ஷ்மியின் அவள் அம்மா மீதான ஆதங்கம் ,அவள் தந்தை மீதான கோபங்கள் எல்லாம் சரியே... எவ்வளவு காலங்கள் மாறினாலும் எவ்வளவு நாகரீகங்கள் வந்தாலும் இந்த ஜாதி என்ற விஷமுள் இன்னும் நிறைய பேருடைய வாழ்க்கையில் தைத்துக்கொண்டுதான் இருக்கு...

மாணிக்கம் வரதராஜன் போன்றவர்கள் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றனர்..
லஷ்மிக்கு நடந்தது ரொம்ப கொடூரம்தான்



ஒரு பாவமும் அறியா லக்ஷ்மியின் வாழ்க்கை திசைதிருப்பல் நம்மை கண்கலங்க செய்தது...அவள் விஷக்கிருமிகளை அழித்தது சரியே...
கொலையாளி யார் ? லஷ்மி யார் ? ஈஸ்வர் யார் ? அப்படின்றத ப்ரேக் பண்ண விதம் அருமையா இருந்தது..
துருவ் மீதான ருத்ரா வின் காதலும் அழகு

லஷ்மிக்கு இப்படி இறுதியில் நடந்து இருக்க வேண்டாம்னு தோணிச்சு ஆனால் அவளுக்கு அதுவும் ஒரு வகையான விடுதலை தான் ...

பணம் ஒருத்தவங்களை எப்படி மாற்றும்ன்றதுக்கு உதாரணம் கயலின் அப்பா ..தன் பெண் போல நினைக்கும் லக்ஷ்மிக்கு நடந்த கொடூரத்திற்கு சாட்சியாக நின்றதற்கு லக்ஷ்மி கொடுத்த முடிவும் நியாயமாகவே பட்டது...
லக்ஷ்மியின் இறுதி முடிவில் ஈஸ்வர் அழுத அழுகை நம்மையும் கண்கலங்கவே செய்தது...சில உறவுகள் சேரமுடியாமல் நீங்காது நினைவுகளாவே இருக்கும்ன்றதுக்கு உதாரணம் லஷ்மி ஈஸ்வரின் காதல்
மாய்ந்துபோன லஷ்மி மீண்டும் அவ்வீட்டின் இளவரசியாய் வந்தது திருப்தியாக இருந்தது
இரண்டு கதைகளையும் அழகா கோர்த்து சொல்லிருக்காங்க ரைட்டர்..நல்ல விறுவிறுப்பாக இருந்தது கதை...செல்வம் ஏன் தியாவ பார்த்துட்டு அதிர்ச்சி ஆகல அவனுக்கு முன்னரே தெரியுமான்றத ரைட்டர் சொல்லி இருக்கலாம்
ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!